அசுரன் 125

அசுரன் 125

 

அகல்யா உடன் மலர் பேசி சென்ற பின்பு குழப்பத்துடனே வீட்டை அடைந்தான் விக்ரம்… 

 

அவன் கண்ணை அவனாலே நம்ப முடியவில்லை… இலகுவாக பேசினாள் அகல்யா… கட்டியணைத்தாள், முத்தமிட்டால், ஏண்டா விக்கி இப்படி இருக்க… உடம்பு சரியில்லையா? என்று அவன் நெத்தியை தொட்டுப் பார்த்தாள் முகத்தை ஆராய்ந்தாள் … என்னவென்று புரியாமல் அவன் குழப்பத்தோடையே அகல்யாவின் முகத்தை உற்று உற்றுப் பார்க்க…

 

ஏன் விக்கி புதுசா பாக்குற மாதிரி பாக்குற… உன்னோட அகல்யா தான்… ஏதோ கொஞ்சம் குழப்பம் அதனால உன்கிட்ட கொஞ்சம் ஹார்ஷா நடந்துக்கிட்டேன்..  இனிமேல் நான் அப்படி நடந்துக்க மாட்டேன்… சாரி என்று அவளின் நாடியைப் பிடித்து மன்னிப்பு கேட்டவள்..  சரி சீக்கிரம் சாப்பிடு நம்ம மனசு விட்டு பேசி எவ்வளவு நாளாச்சு என்று அன்பாக சாப்பாடு பரிமாறி ஒருவர் ஒருவர் ஊட்டி கொண்டு..  கண்கள் கலங்கி இத்தனை நாள் பிரிவை சமன் செய்து கொண்டனர்… 

 

என் சைடு இருந்து யோசிச்சேன் தவிர உன் சைடு இருந்து நான் யோசிக்கவே இல்ல விக்ரம் சாரி… நீ எப்பயும் சொல்லுவ இல்ல… இப்ப நான் சொல்றேன் டா… எனக்கு குழந்தையே வேணாம்… நீ மட்டும் போதும்… என் விக்கி மட்டும் போதும்… இனிமேல் இந்த உலகத்துல யாரு என்ன சொன்னாலும் நான் பாத்துக்குறேன்… என்று உறுதியாக அவன் கண்ணை பார்த்து கூற…

 

வேகமாய் அவளை அணைத்துக் கொண்டான்… இறுகி அணைப்பு..  அவனை இத்தனை நாள் தவிக்க வைத்த அணைப்பு… மூச்சு முட்டும் படி முகம் எங்கும் முத்தமிட்டான்…  

 

விக்ரமின் இதயம் இத்தனை நாட்களாகக் கட்டப்பட்டிருந்த அணை உடைந்து பிரவாகமெடுத்தது. அவள் மார்பில் முகம் புதைத்தவன், அவளின் கதகதப்பில் தன்னைத் தொலைத்தான். 

 

எதுவும் சொல்லி விடுவாளோ என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அகல்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க…

 

என்ன விக்கி அப்படி பாக்குற… உனக்கு என்ன பண்ணனுமா பண்ணிக்கோ எதுவும் சொல்ல மாட்டேன் என்று அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்தால்…

 

சொன்ன வேகத்தில் அவளை அழகாக தூக்கிக்கொண்டு… படுக்கை அறைக்கு சென்றவன்

பூ போல மெத்தையில் கிடத்தினான்.

 

ஏற்கனவே பல நாள் ஊடலுக்குப் பின்வரும் கூடல் வேகம் அதிகம்… இப்பொழுது அகல்யாவின் கண்களில் தெரிந்த அந்தத் தெளிவும், காதலும் அவனை இன்னும் பலமாக்கியது.

 

அவன் அவளின் இதழ்களில் மென்மையாகத் தன் இதழ்களைப் பதித்தான். அது வெறும் முத்தமல்ல; இத்தனை நாள் பிரிவின் வலி, ஏக்கம்,    மனக்குமுறல் என அனைத்தையும் கரைக்கும் ஒரு மருந்து. 

 

அகல்யா அவனது சட்டையின் பொத்தான்களை ஒவ்வொன்றாக நீக்கும்போது, அவளின் விரல்கள் நடுங்கின. அந்த நடுக்கம் விக்ரமுக்கு ஆயிரம் கவிதைகளைச் சொன்னது.

அவளின் கூந்தலில் முகம் புதைத்து, அவளது கழுத்துச் சரிவுகளில் அவன் தன் முத்திரைகளைப் பதித்தான்.

 

தாம்பத்தியம் என்பது உடல்களின் சேர்க்கை மட்டுமல்ல, மனங்களின் சமரசம் என்பதை அவர்கள் அன்று உணர்ந்தனர். அவர்களின் அசைவுகளில் அவசரம் இல்லை, மாறாக ஒருவரையொருவர் ஆழமாக உணரும் நிதானம் இருந்தது.

வலிகளும், ஏக்கங்களும் அந்த நெருக்கத்தில் சாம்பலாயின.

 

விக்ரமின் ஒவ்வொரு ஸ்பரிசமும் அகல்யாவின் காயங்களுக்கு மருந்தானது. “விக்கி…” என்று அவள் முனகியபோது, அந்த அழைப்பில் காதலின் உச்சம் தெரிந்தது. 

 

காலத்தின் ஓட்டம் அங்கே ஸ்தம்பித்திருந்தது.

வெகு நேரம் கழித்து, அவனது தோளில் தலைசாய்த்துப் படுத்திருந்தாள் அகல்யா. விக்ரம் அவளது விரல்களைக் கோர்த்துக்கொண்டு, அவளது நெற்றியில் முத்தமிட்டான். அறை முழுவதும் ஒரு அமைதி நிலவியது—ஆனால் அது பாரமான அமைதியல்ல, நிம்மதியான அமைதி.

 

“என்னால நம்பவே முடியல அடாவடி… இது கனவா இருந்தா நான் இப்படியே செத்துடலாம்னு தோணுது, பெரிய டிப்ரஷன்ல இருந்து வெளியே வந்த மாதிரி இருக்கு” என்று விக்ரமின் குரல் கம்மியது.

 

அகல்யா அவன் முகத்தை ஏந்திப் பார்த்தாள். ” மன்னிச்சிடு விக்கி நீ இவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பன்னு எனக்கு தெரியாம போச்சு… நிஜம்தான் விக்கி. இத்தனை நாளா நான் ஒரு பிம்பத்துக்காக ஓடிட்டு இருந்தேன். சமூகம் என்ன சொல்லும், குழந்தை இல்லாம வாழ்க்கை எப்படி இருக்கும்னு பயந்தேன். ஆனா, அந்தப் போராட்டத்துல எனக்குள்ள இருந்த உன்னை நான் கவனிக்க மறந்துட்டேன். நீதான் என் உலகம்… குழந்தைங்கிறது ஒரு வரம்னா, நீ எனக்குக் கிடைச்ச அதிசயம் டா, உன்ன விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்” அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்…

 

விக்ரம் அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான். “எனக்கு வேற எதுவும் வேணாம் அகல்யா. நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்தாலே போதும். நீ சொன்ன மாதிரி, இனி யாரு என்ன சொன்னாலும் அது நம்ம காதல் வாழ்க்கையை பாதிக்க கூடாது.”

 

அறையின் ஜன்னல் வழியாக நிலவொளி மென்மையாக உள்ளே விழுந்தது. அந்த நிலவின் வெளிச்சத்தில், ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரண்டு இதயங்கள் ஒரே தாளத்தில் துடிக்கத் தொடங்கின. அங்கு காமம் கரைந்து, காதல் மட்டுமே எஞ்சி நின்றது.

 

மீண்டும் மீண்டும் காதலில் கரைந்தார்கள்…

 

அந்த சந்தோஷத்தில் தான் விக்ரம் அலுவலகத்தில் வந்து ஆடிக்கொண்டு இருந்தான்.

 

ஆதியின் அறை உள்ளே நுழைந்தாள் மலர்…

 

என் குலவிளக்கே குத்துவிளக்கே வருக வருக… என்று வாய்க்கு வந்ததை பாடி… ஆரத்தி காண்பிப்பது போல் செய்கை செய்தான் விக்ரம்.

 

அவன் சேட்டையை பார்த்து கிளுக்கி சிரித்தவள்…

 

என்ன அண்ணா ஆச்சு… வரவேற்பு எல்லாம் பயங்கரமா இருக்கு… என்றாள் மலர்.

 

என்ன மேஜிக் பண்ண மலர்… அகல்யா எப்படி ஒரே நாள்ல அப்படி மாறுனா… எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சே ஆகணும் இல்லனா தலையை வெடிச்சிடும்… என்றான் விக்ரம்.

 

அண்ணி ஓகேவா அண்ணா, நீங்க இப்போ ஹேப்பியா என்றாள் மலர். 

 

ஹேப்பியாவா… சொல்ல வார்த்தை இல்லை என் தங்கமே… என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் குதித்துக் கொண்டு இருந்தான் விக்ரம்.

 

என்ன பண்ணேன் மட்டும் கேட்காதீங்க அது தொழில் ரகசியம் என்றாள் மலர்.

 

ஐயோ மலர் அதை தயவு செஞ்சு சொல்லிடு இல்லன்னா உங்க அண்ணனோட மண்டையே

வெடிச்சிடும்… ப்ளீஸ்…

 

சொல்றேன் பட் கேட்டு ஷாக் ஆகாதீங்க…

( என்ன சொல்றதுக்கு முன்னாடி டிஸ்க்ளைமர் போடுறா என்று நினைத்தான் ஆதி )

 

அண்ணா உங்களோட பெரிய பிரச்சனை என்ன…

 

குழந்தை இல்லாதது…

 

இல்லை என்று தலையசைத்தவள்…

எந்தப் பிரச்சனையும் இல்லாம குழந்தை பிறக்காம இருக்கிறது… சரியா? என்றாள்… 

 

ம்ம்ம்… அப்படியும் சொல்லலாம்…

 

அதனாலதான் அண்ணி ரொம்ப குழப்பமா ஆகிட்டாங்க… என்ன காரணம்… ஏன் இன்னும் குழந்தை வரல அப்படின்னு நம்பிக்கை இழந்துட்டாங்க…

 

ஆர்வமாய் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தனர் மூவரும்.

 

நான் என்ன பண்ணேன்… அண்ணியோட குழப்பத்தை நீக்குவதற்கு… டாக்டர்கிட்ட ஒரு பேக் சர்டிபிகேட் ஒன்னு வாங்கி… உங்களுக்கு தான் உடம்புல சின்ன பிரச்சனை அப்படின்னு சொன்னேன்… என்று கூறிவிட்டு அவள் பக்கத்தில் இருந்த டாக்டர் ரிப்போர்ட்டை எடுத்து விக்ரமின் பக்கம் நகர்த்தி வைத்தாள்… 

 

திடுக்கிட்டு முழித்தான் விக்ரம்.

 

அடிப்பாவி… என்ன பண்ணிட்டு வந்திருக்கா பாரு என்று மனதிற்குள் நினைத்தான் ஆதி.

 

ஏம்மா இப்படி பண்ண… என்றான் விக்ரம்.

 

நான் சொல்றத பொறுமையா கேளுங்க அண்ணா… அண்ணியோட உங்கள் காதல் ரொம்ப ஸ்ட்ராங் அண்ணா… அண்ணி கிட்ட இந்த ரிப்போர்ட் எடுத்துட்டு போயி… அண்ணா உடம்புல தான் சின்னதா பிரச்சன அதனாலதான் இன்னும் குழந்தை பிறக்காம இருக்கு ஒரு ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்தா ஈஸியா குழந்தை பிறந்துடும் டாக்டர் கிட்ட சொல்லிட்டாங்க… 

 

ஆனா நீங்க குழந்தை இல்லன்னு  ரொம்ப அப்செட் இருக்கறதுனால உங்ககிட்ட சொல்றதுக்கு பயப்படறாரு… சொல்லப்போனா நீங்க குழந்தை மேல ரொம்ப ஆசை வச்சிருக்கீங்க… தன்னால குழந்தை பிறப்பு தள்ளி போறத நீங்க தாங்கிக்க மாட்டீங்க அப்படின்னு அண்ணா ரொம்ப கஷ்டப்படுறாரு…

 

அவரால் தான் உங்களோட வாழ்க்கையே கெட்டுப் போச்சோ அப்படின்னு நினைச்சு அண்ணா ஒரு பெரிய டிப்ரஷன்ல மாட்டிக்கிட்டாரு… விக்ரம் அண்ணாவை டிப்ரஷன்ல இருந்து வெளியே கொண்டு வரதுக்கு அவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுறாங்க…

 

உங்களுக்கு ரொம்ப அவசரமா குழந்தை தான் முக்கியமா இருந்தா நீங்க வேணா விக்ரம் அண்ணாவை டைவர்ஸ் பண்ணிட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க… அண்ணின்னு சொன்னேன்… என்று மூச்சு விடாமல் நடந்ததை சொல்லி முடித்தாள் மலர்…

 

அவளின் கடைசி வார்த்தையை கேட்டதும் விக்ரம் அதிர்ந்து எழுந்தான்… டைவர்ஸ் பண்ண சொன்னியா…

 

ஆமாம் என்னும் படி இரண்டு கண்ணையும் டிமி டிமி என்று சிமிட்டினாள்…

 

என்னமா பண்ணி வச்சிருக்க நீ என்றான் விக்ரம்…

 

(விக்ரமின் அதிர்ந்த முகத்தை பார்த்த நண்பர்கள் இருவருக்கும் சிரிப்புதான் வந்தது )

 

அண்ணா அண்ணியோட வீக்னசே நீங்கதான்… உங்களுக்கு ஒன்னுனா அண்ணியால தாங்கிக்க முடியாது… அதனாலதான் உங்க மேல பழிய தூக்கி போட வேண்டியதா போயிடுச்சு… ரெண்டு வருஷம் ட்ரீட்மென்ட் எடுத்த எல்லாம் சரியாயிடும் என்ற நம்பிக்கையில் அண்ணி நிம்மதியா இருப்பாங்க… சொந்தக்காரங்க குழந்தையை பத்தி கேட்டா கூட அய்யய்யோ நம்ம விக்ரம் மனசு கஷ்டப்படுமே அப்படின்னு நினைச்சு ஆளுக்கு முந்தி போயி அவங்க கூட சண்டை போடுவாங்க… நீங்களே பாருங்க…

 

டைவர்ஸ்னு நீ சொன்னதைக் கேட்டு அவ என்ன ரியாக்ட் பண்ணா? …

 

என்ன அடிக்க மட்டும் தான் செய்யல… இந்த விஷயத்துல தேவையில்லாம மூக்க நுழைக்காத அப்படின்னு கண்டபடி திட்டினாங்க… என்றாள் முகத்தை சுருக்கி…

 

ஐயோ… சாரி மா.. அதுக்கு நீ என்ன சொன்ன…

 

எங்க அண்ணா கஷ்டப்படுவதை என்னால பாக்க முடியல அண்ணி அதனால தான் உங்ககிட்ட இப்படி கேட்க வந்தேன்..  எப்படியாவது எங்க அண்ணனை டிப்ரஷன்ல இருந்து நீங்க தான் மீட்டு கொண்டு வரணும் அப்படின்னு… கண்ணீரோட ஒரு ஆக்டிங் போட்டேன் என்றாள் ஒற்றை கண்ணை சிமிட்டி…

 

( நடிப்புக்காரி.. என்ன என்ன பண்ற பாரு.. என்று அவள் கணவன் நினைத்து கொண்டு இருந்தான் )

 

( அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே… என்று நினைத்தான் அருண்…)

 

பாவமா முகத்தை வச்சுக்கிட்டு இன்னும் ரெண்டு மூணு பிட்டு சேர்த்து போட்டதுல… அண்ணியை கண்கலங்கி  என்னோட விக்கி இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கானா… இனிமேல் அவனை நான் சந்தோஷமா பாத்துக்குறேன்… அப்டினு எமோஷனலா பேசிட்டு கிளம்பிட்டாங்க… என்றாள் தோளை குலுக்கியபடி…

 

ரெண்டு வருஷத்துக்கு பின்னாடி என்ன பண்றது என்றான் விக்ரம்…

 

அதுக்குள்ள குழந்தை பொறந்துடும்னா… நம்பிக்கை வைங்க… என்றாள் மலர் உறுதியாய்…

 

யோசனையிலேயே உட்கார்ந்து இருந்தான் விக்ரம்… அண்ணா இப்ப ப்ராப்ளம் சால்வ் ஆயிடுச்சா? கெடச்ச வரைக்கும் நிம்மதியா வாழுங்க அடுத்து வர பிரச்சனையை பின்னாடி பாத்துக்கலாம்..  என்றாள் மலர் உறுதியாய்…

 

அதுவும் சரிதான் என்று தோன்றியது விக்ரமிற்கு…

 

ஆதியும், அருணும் மனதிற்குள் மெச்சி தான் கொண்டனர் அவளின் சமயோசித  நடவடிக்கையை…

 

சரி வாங்க நம்ம ஐஸ்கிரீம் ஷாப் போலாம்… என்று அழைத்துக் கொண்டு செல்ல…

 

கேக் வாங்கிட்டு வந்துட்டான் முதல்ல  இத சாப்பிடு… என்று ஆதி கூற… 

 

அது நான் வீட்டில் போய் சாப்பிடுவேன் நீங்க யாரும் எடுக்காதீங்க… நான் இப்ப போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு வந்துடறேன் என்று கூறிவிட்டு விக்ரமனை இழுத்துக் கொண்டு செல்ல…

 

அதிகமா ஐஸ்கிரீம் சாப்பிடாதடி சேராது.. என்று தலையை ஒரு பக்கமாய் இழுத்து கதவைப் பார்த்து கத்தியது காற்றுடன் கரைந்தது…

 

வீட்டில், கையில் இரண்டு தட்டுகளில் ரெட் வெல்வெட் கேக் துண்டுகளை எடுத்துக் கொண்டு… 

 

உன் கூந்தல் தேவன் தூங்கும்

பள்ளி அறையா அறையா

மலர் சூடும் வயதில் என்னை

மறந்து போவது தான் முறையா….

 

என்று பாடியபடியே… தங்களது படுக்கையறைக்குள் நுழைந்தவன்… நல்ல பிள்ளை போல் சிரித்துக் கொண்டே… ஒரு தட்டில் இருந்த கேக் அவளிடம் கொடுத்து… 

 

ம்ம்… சாப்பிடு என்றான்…

 

கேக்கை எடுத்து வாயில் வைக்கப் போனவளை… தடுத்து… இப்படி இல்ல… நீ எப்பயும் ஸ்டெப் பை ஸ்டெப்பா ரசிச்சு சாப்பிடுவியே அப்படி சாப்பிடணும் என்றான் விஷமமாய்…

 

அவன் திட்டம் அறியாத முயல் குட்டி.. சரி சரி என்று வேகமாய் தலையாட்டி அவனின் கூண்டுக்குள் வந்து மாட்டியது..  

 

🫣😉☺️ சிங்கத்திடம் மாட்டிய முயல் குட்டி என்ன ஆனது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top