அசுரன் 126

 

அசுரன் 126

 

தேவா கொண்டு வந்த அந்த ரெட் வெல்வெட் கேக்கை மலர் ஒரு குழந்தையைப் போல ஆவலுடன் பார்த்தாள். “தேவா… கேக் சாப்பிடுறதுங்கிறது ஒரு கலை. அதை நீங்க இன்னும் கத்துக்கல, இப்ப பாருங்க நான் எப்படி சாப்பிடுறேன்னு” என்று மெலிதாகச் சிரித்தபடி, அவனுக்குச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள்.

 

“முதல்ல, இதோ மேல இருக்கிற இந்தச் செர்ரி பழத்தை எடுக்கணும்,” என்று அந்தச் செர்ரியைத் தன் விரல் நுனியில் பற்றினாள். “இதை எடுத்த உடனே முழுசா விழுங்கிடக் கூடாது. இதோட நுனியை மட்டும் முதல்ல மெல்லக் கடிக்கணும். அந்த தோல் லேசா விடுபட்டு, உள்ளே இருக்கிற அந்த ஸ்வீட் சிரப் நம்ம நாக்குல  இறங்கும் போது… ம்ம்ம்… வாவ்… சூப்பரா இருக்கு என்று கண்களை விரித்து காண்பித்தாள்.”

மலர் அதைச் செய்து காட்ட, தேவாவின் பார்வை அவளது இதழ் அசைவிலேயே நிலைத்தது. 

கன்னத்தில் கை வைத்து அவளை ரசித்தப்படியே… ம்ம்.. அடுத்து என்றான்…

 

அடுத்து, அந்த கேக்கின் மேல் படர்ந்திருந்த வெண்மையான கிரீமைத் தன் விரலால் லேசாகத் தொட்டு எடுத்தாள். “இந்த கிரீம் இருக்கே… இது அப்படியே நாவில கரைஞ்சு போகணும்… ஆக்சுவலா இது நார்மல் கிரீம் போல இருக்காது தேவா.. இது ஸ்பெஷல் கிரீம் சீஸ் ஃப்ராஸ்டிங்… இதுல இருக்க ‘கிரீம் சீஸ்’ கொஞ்சம் புளிப்பும், அதிக இனிப்பும் கலந்த மாறி இருக்கும்… அத நீங்க டேஸ்ட் பண்ணும் போது  பீல் பண்ணனும்… என்று விளக்கம் கூறி கண்ணை மூடி, அதைத் தன் நாவால் சுவைக்க, தேவாவின் சுவாசக் காற்று அனலாக மாறியது.  நாவின் அடியில் சுரந்த நீரை சூட்டை தணிக்க முழுங்கி கொண்டான்… தொண்டை குழி ஏறி இறங்கியது…

 

இப்போது அவள் அந்த அடர்ந்த சிவப்பு நிற கேக் துண்டில் ஒரு பகுதியை எடுத்தாள். “இப்போதான் முக்கியமான இடத்துக்கு வர்றோம். இந்தச் சிவப்பான பகுதிதான் கேக்கோட மெயின் part. இதை நம்ம, அவசரப்படாம மெதுவா, ஆனா ரசிச்சு ருசிச்சு…. நம்ம எவ்வளவு பொறுமையா வயிதுக்குள்ள கொண்டு போறமோ… அவ்வளவு அதிகமா அந்த டேஸ்ட் நம்ம மூளை உணரும்”.

மலர் கண்களை மூடி அந்த ருசியை அனுபவித்தாள். 

மலர் மிகவும் நிதானமாக, ரசித்துச் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தட்டை வைத்தாள். “தேவா… நான் சொன்னது புரிஞ்சுதா?..  நீங்களும் இதே மாதிரி சாப்பிடுங்க… கேக் செம டேஸ்டா இருக்கு… எந்த கடையில வாங்குனாருன்னு தெரியல” என்று அப்பாவியாகக் சொல்ல.

 

தேவாவின் சிவந்த கண்கள் அவளை தான் மோகமாக பார்த்தன. “ரொம்ம்ம்ம்பத் தெளிவாப் புரிஞ்சதுடி . நீ சொன்ன மாதிரி என்னோட கேக்கை நான் எப்படிச் சுவைக்கப் போறேன்னு மட்டும் பாரு,” என்றான்.

 

அடுத்த நொடியில் இருந்து கிராதகன் என்ன செய்தானோ… மொத்த கேக்கும் அவளது மேனியில் தான் கரைந்து உருகி இருந்தது… மேனி எங்கும் பிசுபிசுப்பு.. ரெட் வெல்வெட்  கேக் தேன் அவளின் மேனியின் மீது விழுந்து ஹனி கேக் ஆனது.

 

முதல் படியாய்…. 50 கிலோ கேக்கில்… முன் பல்லினால் அவளின் செரியை கடித்து ருசித்து தேன் உறிஞ்ச  ஆரம்பித்ததும்… மயக்கத்தில் கண் சொக்கி போனவள் தான்… 

எங்கே கண்விழிக்கவிட்டான் கிறக்கத்திலேயே வைத்திருந்தான்… 

விப்பிங் கிரீம் போல் அவளது மேனி தான் அவனுக்கு தெரிந்தது போலும்…  சுவைக்க சுவைக்க… அதன் சுவையில் அவனும் தான் உருகிப் போனான்…  சிவந்த மெயின் பார்ட் என்று எதை நினைத்தானோ… அவள் கூறியது போலவே ஆற அமர பொறுமையாய் உள்ளே தள்ள அதன் ருசியை மூளை உணரும் தருணம்… முனங்களுடன் கூடிய உறுமல் வெளிப்பட்டது தலைவனிடம்… மாறன் அம்பை தாங்கி மனையாளின் மார்பில் இவ்வளவு நேரம் மூழ்கி இருந்தவன்… தூங்கும்போது மட்டும் மங்கை அவளின் கூந்தலிலே ஒளிந்து கொண்டான் தேவன்…

தலைவி நிலைமை என்னவோ?…

சொர்க்கத்தில் கண் திறவா நிலைமையில் அல்லவா கிடந்தாள்… அவள் விழிக்கும் பொழுது விடிந்திருந்தது…

 

********

இடைப்பட்ட நாட்களில்..  ஆர்கிடெக்ரால் டிசைனிங் போட்டிக்கான நாளும் நெருங்க… வேலைகள் மிக துரிதமாக நடந்தன…

 

எந்த வகையான டிசைன் வடிவமைத்து எடுத்துட்டு வந்தாலும்.. 

வேற மாதிரி ட்ரை பண்ண மலர்..  இட்ஸ் வெரி காமன்…என்று சொல்லி அனுப்பி வைத்து விடுவான்..

 

ஒரு கட்டத்தில் அவளுக்கே சலிப்பாய் போனது… எதை கொண்டு வந்தாலும் புடிக்கலைன்னு சொன்னா எப்படி…

 

அந்த போட்டிக்கு வரவங்க எல்லாரும் ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்க இவ்ளோ சிம்பிளான டிசைன்ஸ் யாரும் யோசிக்கக்கூட மாட்டாங்க… ரொம்ப யூனிக்கா இருக்கணும்… அதே மாதிரி நம்ம தமிழ்நாட்டுக்கு பொருத்தமானதா இருக்கணும்… பொறுமையை யோசி சீக்கிரம் முடிக்க பாரு நமக்கு அவ்வளவு டைம் இல்ல… என்று ஆதி வலியுறுத்த…

 

இரவும் பகலும் அதற்காகவே பல கட்டிட அமைப்பு புத்தகங்களை ஆராய்ந்து, தீவிரமாக தனது வடிவமைப்பை ரசித்து உருவாக்க ஆரம்பித்தாள்…

 

இந்த நாட்களில் அவளை வீட்டில் எந்த வேலையும் செய்ய விடுவதில்லை… youtube ஐ பார்த்து தலைவன் தான் அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்தான்… மலர் வந்த பின் சமையலில் முன்னே விட தேறி இருந்தான்.

ஒரு தட்டில் உணவை போட்டு வந்து அவளுக்கும் ஊட்டி தானும் உண்டு… கழுவி வைத்துவிட்டு அருகில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருப்பான்… எங்கிருந்து ரெபரன்ஸ் எடுக்க வேண்டும் என்று பல குறிப்புகள் கொடுப்பான் ஆனால் வடிவமைப்பில் தலையிட மாட்டான் அது முழுக்க முழுக்க அவளது கற்பனையாக இருக்க வேண்டும் என்பது அவனின் எண்ணம்.

 

கை வரைவில் முழுமை பெற்று அது டிஜிட்டல் ஆக மாறி அவன் கைகளுக்கு கிடைக்கும் பொழுது…. உண்மையில் பிரமித்து போனான்… தன் மனையாளின் கற்பனையை கண்டு… போட்டிக்கு தகுந்தது போல் தனது அனுபவத்தை பயன்படுத்தி அதில் சில மாற்றங்களை தெரிவிக்க அதுவும் செயல்படுத்தப்பட்டது…

 

இந்த வடிவமைப்பு போட்டிக்கு அனுப்பப்பட… ஆயிரக்கணக்கான வடிவமைப்பிற்கு மத்தியில்… மலரது வடிவமைப்பு… மூன்றாவது இடத்தை தட்டி சென்றது… முதல் இரு இடங்களும் பல வருட அனுபவம் உள்ள கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டது… இணையதளத்தில் ஊட்டி காண முடிவு வெளிவந்ததும் முதலாளாய்  பார்த்து துள்ளி குதித்தவன்… இதை தன் மனைவியிடம் தெரிவிக்க… அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்… 

காலையில் உடம்பு சரியில்லை என்று கூறி வீட்டில் தான் இருந்தாள் மலர்…

 

அவளுக்கு சர்ப்ரைஸ் ஆக ரிசல்ட் வந்த இணையதளத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து,  கங்கிராஜுலேசன்..  என்று டைப் செய்து அனுப்ப…

 

தேங்க்ஸ்… 

உங்களுக்கும் வாழ்த்துக்கள்…. ❤️❤️

யுவர் ஹார்ட் வொர்க் நெவர் ஃபெயில்ஸ்.. 👏 என்று அவள் அனுப்ப…

 

எஸ்… யூ மேட் இட்.. 

 

யூ ஆல் சோ மேட் இட் தேவா… ❤️

 

உன்னோட முழு முயற்சியில தான் நமக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சிருக்கு….

 

உங்களோட முழு முயற்சியில தான், குறைந்த கால இடைவெளியில், நமக்கு இந்த அங்கீகாரம் கிடைச்சிருக்கு..  என்று அவள் பதில் மொழிய…

 

தலைகால் புரியாத மகிழ்ச்சியில் இருந்ததால் அவளது வார்த்தைகளை அவன் ஆழ்ந்து யோசிக்கவும் இல்லை… 

 

உனக்கு என்ன கிப்ட் வேணும்னு சொல்லு வாங்கி தரேன்….

 

எனக்கு கிப்ட் கொடுத்ததற்கு நன்றி🥰❤️.. ஐ லவ்டு திஸ் ஒன் …

 

என்னடி சொல்ற ஒன்னும் புரியல… நான் எப்ப கிப்ட் கொடுத்தேன்…

 

எனக்கும் ஒன்னும் புரியல….

☕+🥘+🍰=👶… How this possible? உங்களுக்கு புரிந்தால், நேரில் வந்து விளக்கவும்..

என்று அனுப்பி இருந்தாள்.. 

 

ஒன்றும் புரியாமல் மெசேஜை படித்தவன்…. குழந்தை எமோஜி பார்த்ததும்… புரிந்து கொண்டான்….

அதுவும் அவள் அனுப்பிய விதம்… அவன் விரும்பி, ரசித்து ருசித்து உண்ட… காபி, தோசை, ரெட் வெல்வெட்… நாட்களை உடனே ஞாபகப்படுத்த…

“யுவர் ஹார்ட் வொர்க் நெவர் ஃபெயில்ஸ்..” என்ற மெசேஜ் இன் அர்த்தம் இப்பொழுது அவனுக்கு நன்றாய் புரிந்தது… இதழ்களில் வெட்க புன்னகை… 

 

போட்டியில் வென்ற சந்தோஷத்தை மிஞ்சிய… பெரிய செய்தி… கண்கள் மெல்ல கலங்கியது… இருக்கையை விட்டு எழுந்து அங்கும் இங்கும் நடந்து தன்னை சமன்படுத்திக் கொண்டான்…

 

என்னடா… தங்கச்சிக்கு மெசேஜ் அனுப்பிட்டு நீ கண்ணு கலங்குற… என்று விக்ரம் கேட்க…

 

இருவிரலால் கண்ணில் இருந்த துளியை சரி செய்தவன்… தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு… மெல்லிய புன்னகையுடன்… நான் அவளுக்கு ஒரு குட் நியூஸ் சொன்னா… அவ எனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றா டா…

 

ஙே… என எதுவும் புரியாமல் முழிக்க.. 

 

நம்ம வீட்டுக்கு குட்டியா ஒரு புது மெம்பர் வரப்போறாங்க… என்று ஆதி விக்ரமிடம் கூற…

 

டேய் மச்சான்… இதுதாண்டா ஹேப்பியாஸ்ட் நியூஸ்… இந்த வருஷத்துல… என்று கூறியபடியே ஓடி வந்து கட்டிக் கொண்டான் ஆதியை…

 

வாழ்த்துக்கள் ஆதி என்றான் அருண்… 

 

தேங்க்ஸ் டா…

 

சரிடா மச்சான், நான் வீட்டுக்கு போறேன் மீதி ஒர்க்க நீங்க பாத்துக்கங்க என்று கூறியபடி கிளம்பி விட்டான்…

 

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அருணுக்கும் சந்தோஷம்தான்… ஆனால் விக்ரம் போல் ரியாக்ட் செய்ய தெரியவில்லை…

 

சிறிது நேரத்தில், விக்ரமின் அலுவலகத்தில் இருந்து அகல்யா அழைத்திருக்க… அங்கு சென்று விட்டான் விக்ரம்.

 

அருண் தனியே தான் இருந்தான்… சத்தம் இல்லாமல் எதிரில் வந்து அமர்ந்தாள் நந்தினி.

 

வேலையுடனே கண்ணை மட்டும் நிமிர்த்தி எதிரே இருப்பவளை பார்த்தவன்…

 

என்ன இங்க வந்து உட்கார்ந்து இருக்க உனக்கு வேலை இல்லையா என்றான்…

 

ஏன் நான் இங்க வந்து உட்கார்ந்ததுல உனக்கு என்ன பிரச்சனை என்றாள் போட்டியாக… நீ உன் வேலையை பாரு நா என் வேலையை பார்க்கிறேன்…

 

வா, போன்னு பேசினா வாய கிழிச்சுடுவேண்டி நான் இந்த கம்பெனி புராஜெக்ட்ல பார்ட்னர் மனசுல வச்சுக்க…

 

ஸ்டாஃப் கிட்ட எப்படி மரியாதையா பேசணும்னு நீ முதல்ல தெரிஞ்சுக்கடா… அப்புறம் என் வாய கிழிக்கலாம்…

 

இவ கிட்ட பேசுறதுக்கு சும்மா இருக்கலாம் என்று எண்ணி அவன் வேலையில் மும்பரமாக இருக்க…

 

தலையை அவன் பக்கமாக குனிந்து.. 

சரக்கு அடிக்கலாமா? என்றாள் மெதுவாக…

 

செருப்பு பிஞ்சுரும்… என்றான்.

 

சரி விடு… சிறிது நேரத்திற்கு பின் டிஸ்கோ போலாமா… என்றாள்.

 

லேப்டாப்பை மூடியவன்… இப்போ உனக்கு என்னடி வேணும் ஏண்டி என் உயிரை வாங்கிட்டு இருக்க….

 

எங்கேயாவது போகலாம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு… வெளியில் போய் ரொம்ப நாள் ஆகிட்டு… என்றாள்…

 

கெஸ்ட் ஹவுஸ் போலாமா? என்றான்.. முகத்தில் கிலோ கணக்கில் ஏளனத்தை தாங்கி  அவளை  வெறுப்பேத்தும் நோக்கத்துடன்…

 

தன் காலை குனிந்து பார்த்தவள்… செருப்பு போடல இன்னைக்கு ஷூ தான் இருக்கு உனக்கு ஓகேவா என்றாள்…

 

அவளை தீயாய் முறைத்தவன்… ஆனாலும் கோபப்படாமல் அவள் பதில் சொல்லிய விதம், அவளைப் புதியதாய் அவனுக்கு உணர்த்தியது… அவன் கண்ட நந்தினிக்கும் இப்பொழுது இருப்பவர்களுக்கும் 100 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.. 

என்ன வம்பு இழுக்கிறதுக்குனே வந்து உட்கார்ந்து இருக்கியா… என்றான் எரிச்சலாய்…

 

பீச்சுக்கு போலாமா… என்றாள்… 

 

பெருமூச்சு விட்டவன்… எப்படியும் தன்னை அழைத்து செல்லாமல் இங்கிருந்து நகர மாட்டாள் என்று உணர்ந்தவன்..  “போய் தொலையலாம் வா” என்றான்…

அவனுக்கும் வெளியில் சென்றால் தேவலாம் என்று இருக்க… அவள் வாழ்வில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம்… இன்று கேட்க முடிவு செய்திருந்தான்… அன்று மருத்துவமனையில் விக்ரம் வந்தவுடன் விட்டு சென்றவள் தான் எதுவும் பேசிக்கொள்ளவில்லை அதன் பின்… இதோ இன்று சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டார்கள் இருவரும்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top