அத்தியாயம் 15 (USAP)

அத்தியாயம் 15 (USAP)

 

சகுந்தலா தேவியின் மரணம் கிட்டத்தட்ட முழு தமிழ்நாட்டையுமே உலுக்கி இருந்தது என்று தான் கூற வேண்டும். சகுந்தலா தேவி என்ன தான் சத்யசீலனை பிரிந்திருந்தாலும் ஊரையும் ஊடகங்களையும் பொறுத்தவரையில் சகுந்தலா தேவி முன்னாள் அமைச்சரின் மனைவி ஆயிற்றே,

 

“அமைச்சர் சத்யசீலனின் கைதை தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தில் காலமாகியுள்ளார்., இது எதிர்கட்சியினரின் சதியா? இல்லை வேறேதும் உள்நோக்கம் உண்டா?”

 

என அனைத்து ஊடகங்களும் தத்தமது ஊகங்களை மானாவாரியாக அடுக்கிக் கொண்டிருக்க

அதே சமயம் உயரதிகாரியிடமிருந்து அகச் செழியனுக்கு அழைப்பு வர அதையேற்றவனின் முகம் ஒரு முறை இறுகி விறைத்து போனது.

 

அவனது முகம் போன போக்கை பார்த்து நக்கலாக சிரித்த ஆற்றலரசோ,

 

தாடியடர்ந்த கன்னத்தை நீவியபடி அங்கிருந்த சீமெந்து கட்டில் காலுக்கு மேல் போட்டு ராஜ தோரணையுடன் அமர்ந்திருக்க, பணத்தில் பிறந்து பணத்தில் வளர்ந்து அழுக்கு என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது வளர்ந்த சயந்தனுக்கோ சிறை ஏதோ புது உலகம் போல் தோன்றியது. மூடை நாற்றமும் கொசு தொல்லையும் அவன்

 

வெண்ணிற மேனியை மேலும் மேலும் சிவக்க வைக்க அதே கடுப்புடன்,

“திஸ் பிளேஸ் இஸ் பிள்த்தி”

 

என்றபடி தனது விலையுயர்ந்த ஷர்ட்டை அப்படியும் இப்படியுமாக தட்டிக் கொள்ள அரசுவோ, “என்ன மச்சான்? புது அனுபவம் எப்படி இருக்கு”

 

என்றபடி சீமெந்து கட்டில் அமர்ந்து ஒற்றை காலை ஒய்யாரமாய் ஆட்ட சயனோ,

“டிஸ்கஸ்டிங், உனக்கு இதெல்லாம் கஷ்டமாயில்ல”

 

என்று முகத்தை ஒவ்வாமையுடன் சுளிக்க அரசுவோ, “முத தடவ வரும் போது எனக்கும் அப்டி தான் இருந்துச்சு போக போக பழகிருச்சு” என்றபடியே ஒரு கையை தலைக்கடியில் கொடுத்து மறுகையை தலைக்கு மேல் வைத்து திண்டில் வசதியாய் பெரிய உடலை வளைத்து நெளித்து படுத்துக் கொள்ள,

 

சயந்தனோ, “என்னது! நீ அடிக்கடி ஜெயிலுக்கு போயிருக்கீயா? இதெல்லாம் பொண்ணு கேட்கும் போது சொல்லவேயில்ல”

 

என்றதும் அரசுவோ வாய்விட்டு சிரித்துக் கொண்டே, “இதெல்லாம் சொன்னா வெண்ணைக்கட்டியாட்டம் இருக்க உன் தங்கச்சிய கட்டி கொடுத்திருப்பியா மச்சான்”

 

என்றவன் மீண்டும் ஒருகளித்து படுத்தபடி, “தெரிஞ்சாலும் கட்டி கொடுத்திருப்ப ஏன்னா உன் குடுமி என் கையில ஆச்சே”

 

என்றதும் சயனுக்கோ ஏக கடுப்பு அன்று அவன் அந்த ஒரு பிழையை மாத்திரம் செய்யாதிருந்திருந்தால் இன்று இப்படி இவனிடம் உதவி கேட்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்க வேண்டிய அவசியமில்லையே என்ற எண்ணம் வேறு கொலையாய் கொன்றெடுக்க,

 

ஏதும் பேசாது அமைதியாக இருக்க அரசுவோ, “சில் மச்சான் இங்கே மட்டும் தான் கொசுக்கடி மூட்டை பூச்சு கடி, என்னோட ரிமாண்ட்டுக்கு வா சொர்க்கத்தையே காட்டுறேன் ஜெயிலர் நமக்கு தெரிஞ்ச பையன் தான் ராஜ மரியாதை கொடுப்பாப்புல”

 

என்று விசிலடிக்க சயந்தனோ, “என்னடா சொல்லுற?”

 

என்றதும் அரசுவோ, “மச்சான் நமக்கு இப்போ இருக்க ஒரேயொரு பாதுகாப்பான இடம் அது மட்டும் தான்”

 

என்று கூற சயனோ புரியாது, “வாட் நீ என்ன சொல்லுற? ஜெயில் எப்படி?” என்று ஏதோ கூற வரும் போதே

 

போலீஸ் நிலையத்திற்குள் புயல் வேகத்தில் நுழைந்த செழியனை கண்ட அரசுவுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை. இருந்தும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு நக்கலாக,

 

“குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?” என்று பாட

 

அதை கேட்ட அடுத்த நொடியே செழியனுடைய வெண்ணிற முகம் கோபத்தில் சிவந்து கன்ற அதே கோபத்துடன் அரசு இருந்த செல்லை ஒரே உதையாக உதைத்து தள்ள, அவனது பலத்தினாலும் கோபத்தாலும் சிறை கதவு ஆட்டம் கண்டு திறந்திருக்க

 

அதே ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தவன் அரசுவின் வெண்ணிற சட்டையை பற்றி,

 

“என்னடா கேம் ஆடுறீயா? உன்ன கொன்னு புதைக்க எனக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது”
 

என்று முஷ்டியை மடக்க அரசுவோ, “ஆஹான்” என்று அசராது திமிர் பார்வை பார்க்க செழியனுக்கோ மென்மேலும் கோபம் ஏகத்துக்கும் எகிறியது. அதே ஆவேசத்துடன் அரசுவின் முகத்தை அடித்து நொறுக்க முனைய

 

அவனது ஆவேசத்தை கண்டு ஒரு நிமிடம் விதிர்விதிர்த்து போன அகமேந்தியும் அச்சுதனும் செழியனை பின்னால் இழுக்க செழியனின் பலத்திற்கு முன்னால் இவர்களின் பலம் எம்மாத்திரம் திமிறிக் கொண்டு வெறியுடன் பாய்ந்த

 

செழியனோ மீண்டும் அரசுவை அடிக்க போக, அரசுவோ அவனது வேகத்தை கணக்கிட்டு தன் முகத்தை நகர்த்தியிருக்க அரசுவின் முகத்தில் விழ வேண்டிய அடி விழுந்தது என்னவோ சயந்தனின் இடக் கன்னத்தில் தான்,

 

“ஆஆவ்வ் அம்ம்மா” என்று இடக் கன்னத்தை பற்றியபடி எதிர்பாரா நேரத்தில் கிடைத்த அடியிலும் செழியனின் வேகத்திலும் சயந்தன் கீழே விழுந்து துடிக்க அரசுவுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

“ஹாஹா… ஹா ஹா ஐயோ ஐயோ! ஸாரி மச்சான்ஸ் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்லுறது சின்ன மச்சான் விஷயத்துல சரியா பொருந்துது” என்று திண்டில் அமர்ந்து மீண்டும் சிரிக்க,

 

செழியனோ இருவரையும் முறைத்து பார்த்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

அச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அகமியோ,

 

“அண்ணா வா போகலாம்” என்று செழியனின் கையை பற்றிக் கொள்ள தங்கையின் குரலில் சற்றே ஆசுவாசமடைந்தவன் பெருமூச்சொன்றை கோபக் கனலுடன் வெளியேற்றியபடி அங்கிருந்து விறுவிறுவென நகர

அவர்களை தொடர்ந்து அச்சுதனும் வெளியேறியவன் அங்கு நின்ற கான்ஸ்டபிளிடம்,

 

“ஏட்டையா! இந்த கதவ சரி பண்ண ஆள் கூட்டிட்டு வாங்க அப்படியே” என்றவன் யாருக்கும் கேட்காது காதுக்குள் எதையோ முணுமுணுத்து விட்டு செழியனின் அறைக்கு தான் விரைந்தான்.

 

இங்கு அரசுவோ, “என்ன மச்சான் அடி ரொம்ப பலம் போல உன் தம்பி ஹார்லிக்ஸ் பாயா? இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கான்” என்று தலை சுற்றலுடன் அமர்ந்திருந்த சயந்தனின் முகத்தை அங்குமிங்கும் திருப்பி கன்றி இருந்த கன்னத்தை பார்க்க

 

சயந்தனுக்கோ எரிச்சலும் வலியும் உயிர்ப்போக, “டேய்! நக்கல் பண்ற நேரமா இது? வலி உயிர் போகுதுடா” என்று கத்த அரசுவோ, “கூல் கூல் மச்சான் இது என்ன உன் பார்மா கம்பெனியா? உனக்கு வலிச்சதும் பத்து பேர் வந்து தொண்டூழியம் பண்ண! போலீஸ் ஸ்டேஷன் நான் பத்த வச்ச தீக்கு உன் தம்பி நம்மள உயிரோட விட்டான்னு சந்தோஷப்படு மேன்”

 

என்று அரசு கூற சயந்தனோ வலியில் முகத்தை சுருக்கியபடி, “டேய்! அப்டி என்னத்தடா பண்ண?” என்று சற்று ஆச்சரியம் கலந்த பயக்குரலில் கேட்க

 

அரசுவோ, “உங்க அத்தை அதான் என்னோட மம்மி போலீஸ் காவல்ல இருக்கும் போது தானே பரலோகம் போனாங்க அதுவும் செழியன் கஸ்டடில இருக்கும் போது அத ஐ.ஜி காதுல போட்டேன் அவங்க செத்தது மேல சந்தேகம் இருக்குன்னும் உன் தம்பி என் அரசியல் வாழ்க்கையை கவிழ்க்குறதுக்கு சதி செய்றதாவும் சின்ன ஸ்பார்க் தட்டிவிட்டேன் அவ்ளோ தான்”

 

என்று சாவகாசமாக அமர சயந்தனோ, “யோவ் மாப்பிள்ளை பலே ஆள்யா நீ அது எப்படி பிள்ளையவும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுற”

 

அதற்கு இதழை கோணி சிரித்த அரசுவோ, “அதனால தான் மச்சான் நான் அரசியல்வாதியா இருக்கேன் நீ பிஸ்னஸ் மேனா இருக்க”

என்று நக்கலாக கூற சயனோ, “அது சரி, ஆனா ஒன்னு உங்க அம்மா செத்ததுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கலையே நீ அவ்ளோ கல்நெஞ்சக்காரனா நீ?”

 

என்றதும் அரசுவோ, “அதெல்லாம் பார்த்தா அரசியல் பண்ண முடியுமா என்ன?” என்று நக்கலாக மொழிந்தவன் பிறகு நிதானமாக, “ஆனா அழுவேன் நாளைக்கு காலையில நம்மள கோர்ட்டுல ப்ரொசீட் பண்ண போற நேரம் மீடியா முன்னாடி அழுதுட்டே கண் கலங்கிட்டே ஜீப்ல ஏறுவேன் அப்போ தானே தாய்க்குலம் நம்ம மேல பரிதாபப்படும் அந்த பரிதாபம் ஓட்டா மாறும்”

 

என்று கூறியபடி மீண்டும் ஒய்யாரமாக படுத்து கண்மூடி தூங்க சயனுக்கோ, ‘இவன் என்ன நம்மள விட மோசமான போர் டூவென்ட்டியா இருக்கான்’ என்று தோன்றாமலில்லை.

 

இதே சமயம் செழியனின் அறையில் கூண்டுக்குள் அடைப்பட்ட புலியாய் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்த செழியனோ,

 

“ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டான் ஏதோ ரொம்ப பெருசா யோசிக்கிறான் ஆனா என்ன? என்ன?”

 

என்று அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருக்க அச்சுதனுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவனும் அழுத்தக்காரன் தான் ஏன் கந்துவட்டி வசூலித்தவன் தான் ஆனால் தாயை உயிரோடு எரித்து கொல்லுமளவுக்கு மோசமானவனில்லை.

 

தாயின் மீது அதிகம் பாசம் கொண்டவனுக்கு தாயின் இழப்பு பேரிடி தானே அன்னை வீட்டில் வசித்த வரை அவர் கையில் ஒரு வாய் உணவாவது உண்டு விடுவானே அப்படிப்பட்ட தாய் இனி இல்லை என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலை விண்விண்ணென்று தெறித்தது.

 

அவ் வலியுடனேயே கம்மிய குரலில்,

 

“எனக்கும் புரியல செழியா என்ன பிரச்சனை வந்தாலும் அம்மா மேல கை வைப்பான்னு நான் யோசிக்கல ஆனா வச்சிருக்கான் அவனோட அடுத்த மூவ் என்னான்னு என்னாலயே கால்குலேட் பண்ண முடியல”

 

என்று சோர்ந்து அமர்ந்தவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிய

 

அகமியோ,

 

“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கு தெரிஞ்சு சகுந்தலா தேவியோட டெத்ல ஏதோ லூப் ஹோல் இருக்கு அவன் அவங்கள ஏதும் பண்ணிருக்க மாட்டேனோன்னு தோணுது நம்மள தெளிய விடாம அடிச்சு

 

வேற எதுக்கோ அடி போடுறான் அந்த அரசு அத கொஞ்சம் நிதானமா இருந்தாலே கண்டுப்பிடிச்சிரலாம் அதனால ரெண்டு பேரும் கொஞ்சம் நிதானமாகுங்க முதல்ல அவன ரிமாண்ட் பண்ணி கஸ்டடில எடுப்போம் அதுக்கு பிறகு என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்”

 

என்று கூற செழியனுக்கும் அச்சுதனுக்கும் அது தான் சரியெனப்பட்டது.

 

அத்துடன் அங்கிருந்த முதலுதவி பெட்டியை எடுத்த அகமியோ, “நான் நண்ணா ப்ச் சயந்தனுக்கு மருந்து போட்டு விட்டு வாரேன் இல்லாட்டி நாளைக்கு மீடியால தேவையில்லாத புரளி கிளம்பும்”

 

என்று சயந்தனும் அரசுவும் இருக்கும் சிறைக்குள் நுழைந்துக் கொள்ள,

 

இங்கு இருட்டில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி தன் முகத்தில் கோடாய் விழுந்த தழும்பை தடவிக் கொடுத்தப்படி ஒற்றை கண்ணால் சயந்தனின் புகைப்படத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவன் இருளில் கசிந்த மெல்லிய வெளிச்சத்தில் அவனது உருவம் கோட்டு உருவமாய் தெரிய

 

அங்கு வந்த அவனது பிரத்யேக உதவியாளன் ஷங்கரோ, “சார் எல்லாம் உங்க பிளான்படி கரெக்ட்டா போகுது இப்டியே போனா சயந்தன் சார் கம்பெனி உங்க கைக்கு ஈஸியா வந்துரும்”
 

என்று கூற அதைக் கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்த அந்த உருவமோ, “ம்ம் அப்டியா? இப்போ நான் நினைச்சது மட்டும் நடக்கல நான் நினைக்காததும் நடக்குது”

 

என்று கூறியபடி தன் முன் இருந்த சதுரங்க காயை மெதுவாக நகர்த்த, ஷங்கரோ, “சார் உங்க பிளான்படி தான் சயந்தன் ஸார் ஜெய்யிலுக்குள்ள போய்ட்டாரே அதுக்கு பிறகு என்ன எவிடன்சும் ஸ்ட்ராங்கா இருக்கு”

 

என்று தலையை சொரிய அதை கேட்டு சிரித்த அவ் உருவமோ, “நம்மக்கிட்ட உள்ள எவிடன்ச தூள் தூளாக்க கூடிய ஒருத்தன் அந்த சயந்தன் கூட இருக்கான் அவனும் சயந்தனும் ஒன்னா நின்னா”

 

என்று தனது முடியை பிடித்து இழுத்துக் காட்டியவன், “ஒரு ***யிர கூட பிடுங்க முடியாது அவன் தான் அரசு ஆற்றலரசு அகமேந்தி புருஷன்”

 

என்று கூற ஷங்கரோ, “ஸார் அவன் லோக்கல் எம்.எல்.ஏ இன்னைக்கு நாளைக்கு அவன் பதவியும் பறி போயிரும் அவன பார்த்து ஆஆ… ஆஆ..” என்று கன்னத்தை பொத்தியபடி இரண்டடி பின்னால் நகர்ந்து விழுந்தான்.

 

அதற்கு அந்த தழும்புக்காரனோ, “முட்டாள் முட்டாள் இப்படி அவன குறைச்சு எடை போட்டு தான் இப்போ இந்த மாதிரி சிக்கல்ல மாட்டி இருக்கோம், என்னபத்தி தெரிஞ்ச ஒரே ஒரு ஆள் அந்த அரிச்சந்திரன் தான் அந்த ஆள”

 

என்று சதுரங்க மேடையில் இருந்த ஒரு காயை வெட்டி கீழே வைத்தவன், “இனி அந்த ஆள் இந்த ஆட்டத்துக்கு தேவை இல்ல முடிச்சிரு”

 

என்று எழுந்துக் கொண்டவன் கன்னத்தில் மிகப் பெரிய தளும்பு, நீல நிறக் கண்கள் கிட்டத்தட்ட சயந்தனை உரித்து வைத்தாற் போல தோற்றம் அவனையும் இவனையும் பிரிக்கும் ஒரே வேறுபாடு அந்த தளும்பு மாத்திரமே அவன் யமகன் எமனை வென்று பிறந்தவன் எமனுக்கே நாள் குறிப்பவன் அவன்

                                                                 தொடரும்….

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top