அசுரன் 129

 

அசுரன் 129

 

அந்தக் கடற்கரை சென்ற நாளுக்குப் பின்… 

நந்தினி அருணை சந்திக்க முயற்சிக்கவில்லை… 

ஆனால் அருண் தனிமையை உணரும் பொழுதெல்லாம்… நந்தினியின் கேபினுக்கு வந்து வளவளத்து கொண்டு இருந்தான்…

இதோ இன்றும் அவளைத் தேடி வர, உள்ளே ஒரு குட்டி உருவம் உட்கார்ந்து மும்பரமாய்  ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி கொண்டு இருந்தது…

அருண் அந்த அறைக்குள் நுழைவதை கண்டு, பின்னாலேயே நந்தினியும் உள்ளே வந்தாள். 

 

உன்னோட குழந்தையாடி…

 

ம்ம்ம்..

 

தன்னைக் கண்டு மிரண்டு முழித்த குழந்தையை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு,

ஹாய்… அம்… அருண் தேவ்.. என்று 

தன் கைகளை குழந்தையின் முன் நீட்ட…

 

குழந்தை,  நந்தினியை கேள்வியாக பார்த்தது…

Say hai சார்… என்றாள் கண்களை உருட்டி…

 

குழந்தையும் மென் புன்னகையுடன் கை கொடுத்தான்… Hai சார்… அம் அர்ஜுன்… UKG ஏ செக்சன்… என்றான் அழுத்தி…

 

கிரேட்… பெரிய படிப்பு தான்… என்று மெச்சிக் கொண்டவன்…

 

எந்த ஸ்கூல்…

 

குழந்தை பள்ளியின் பெயரை சொன்னதும்… 

 

ஹே… நாங்களும் அந்த ஸ்கூல் தான்…

 

ஆனா நந்தினி… அந்த ஸ்கூல் பீஸ் ரொம்ப அதிகமாச்சே… என்றான் யோசனையாய்… ஆம் பெரிய செல்வந்தர்களின் குழந்தைகள் படிக்கும் இன்டர்நேஷனல் ஸ்கூல் அது…

 

தனது அலமாரியில் இருந்த பைல்களை சரி பார்த்துக் கொண்டே..   எஸ்..  என்னோட சேலரில அத அஃபோர்ட் பண்ண முடியாது… ஆதிசார் தான் அவனோட எஜுகேஷன் ஸ்பான்சர்.. என்றாள்..  

 

ஓ..  இந்த சேவை எல்லாம் பண்றானா ஆதி.. 

 

ம்ம்ம்… இங்க நிறைய குழந்தைகளை அவர்தான் படிக்க வைக்கிறார்…

 

இன்னைக்கு என்ன ஆபீஸ் வந்திருக்க… என்று குழந்தையிடம்  கேட்க…

 

சம் டைம்ஸ்… லீவ் டேஸ்ல ஆபீஸ் கூட்டு வந்துடுவேன்… வீட்ல வேற யாரும் இல்லையே…

 

நான் இதுவரைக்கும் இவனை ஆபீஸ்ல பார்த்ததே இல்லையே…

 

என்னோட கேபின் விட்டு வெளியே போக மாட்டான்…

 

மாம்.. ஆதி அங்கிள் இன்னைக்கு வருவாங்களா?…

 

நோ… டுடே ஃபுல்லா நீ இங்கதான் இருக்கணும் என்றாள் மிரட்டும் தோணியில்…

 

இட்ஸ் வெரி போரிங்… என்றது குழந்தை சலிப்பாய்…

 

ஓஓ… ஆதி அங்கிள் இருந்தா என்ன பண்ணுவ?…

 

ம்ம்ம்… நாடியில் ஒரு விரலைத் தட்டி யோசித்த குட்டி… 

“We share our man thoughts and some business ideas, its all top secret!” என்று அருணின் காதில் குழந்தைதனத்துடன்  சத்தமாக கிசுகிசுத்தது… 

 

அதைக் கேட்டு சிரித்த அருண்… ம்ம்ம்… Man thoughts… ரொம்ப பெரிய மனுஷன் கிட்ட தான் ஆதி ஷேர் பண்ணி இருக்கான்…

 

நீ என்கிட்டயும் அது மாதிரி ஷேர் பண்ணிக்கலாம் என்றான் அருண். அது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்…

 

பட் தெரியாதவங்க கிட்ட என்னோட பிசினஸ் ஐடியாஸ் நான் ஷேர் பண்ண முடியாதே இட்ஸ் வெரி கான்ஃபிடன்சியல்… என்றான் அர்ஜூன்  தோள்களை குலுக்கி…

 

அவன் பதிலை கேட்டு வியந்த அருண்…

உதட்டின் மேல் விரல் வைத்து யோசித்தபடி..  அதுவும் சரிதான்… உன்னோட லைஃப் கோல் என்ன?…

 

Became a பிக் பிசினஸ்மேன்… லைக் my dad… என்றான் கண்களை உருட்டி கைகளை விரித்து காட்டி.. பெருமிதமாக…

ஏனோ இதை கேட்டதும் ரித்து ஞாபகம் வந்து போனது அருணுக்கு… இதயம் கொஞ்சம் பாரமானது…

 

அர்…ஜுன்… என்று அதட்டினாள் நந்தினி ..

 

பேசட்டும் விடு டி… He is very smart… என்றான்..  மெச்சுதலாய்…

 

ஓகே… இப்போ போர் அடிக்குதா… அப்போ ஒன்னு பண்ணலாம் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கலர் பண்ணலாமா என்றான் அருண்…

 

ஓ… எஸ்… என்று வேகமாய் தலையை ஆடியது குழந்தை…

 

அச்சு, நோ… அவங்க வேலையை கெடுக்காத.. 

 

நீங்களும் வர மாட்டீங்க வர்றவங்களையும் வேணான்னு சொல்றீங்க… ஒய்… என்னும் விதமாக இரண்டு கையை உயர்த்தி விரித்து… தன் இரு புருவத்தை உயர்த்தி…  கேட்டான் அர்ஜுன்…

 

அவன் சைகையை பார்த்து சிரித்தவள்… அலமாரி புறம் திரும்பி… அப்படியே அவங்க அப்பன மாதிரி… என்று குழந்தைக்கு தெரியாமல் முணுமுணுத்தாள்…

ஆனால் இது அங்கு உட்கார்ந்து இருந்த அருணுக்கு கேட்டு விட்டது.. 

 

என்னடி குழந்தைய போய் உன் சைக்கோ புருஷனோட கம்பேர் பண்ணிக்கிட்டு இருக்க… என்றான்..

 

உனக்கு வேற வேலை இல்லையா… என்ன இங்க வந்து உட்கார்ந்து இருக்க… என்றாள் நந்தினி…

 

ஆதி ஒர்க் from ஹோம் ஆகிட்டான்…  விக்ரம் இந்த பக்கமும் அந்த பக்கமும் போயிட்டு இருக்கான்… எனக்கு தான் தனியா இருக்க ஒரு மாதிரி இருந்தது அதனால தான் உன்னை பார்க்க வந்தேன்… 

 

நான் அர்ஜூனை கூட்டிட்டு என்னோட ரூம் போறேன்… என்றான்..

 

வேணாம் அருண்… அவன் இங்கே இருக்கட்டும்… உன்ன தொந்தரவு பண்ணுவான்… என்றாள்..

 

நானா… என்பது போல் அதிர்ந்து தனது அன்னையின் முகத்தை பார்த்த அர்ஜுன்… 

 

மாம்… Always i am a good பாய்,

 

எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல கூட்டிட்டு போறேன்… என்றான்.

 

இல்ல… வேணாம் அருண்.

 

மாம்… ப்ளீஸ் ப்ளீஸ்… என்று அருணுடன் செல்வதற்கு கெஞ்ச…

 

Stricly நோ… என்றாள்..

 

இப்போ அவன அனுப்ப முடியுமா? முடியாதா?.. என்று அருண் கோவ பட… அவனை பார்த்து கண் அடித்த சாமிங்கை செய்த அர்ஜுன்… 

சத்தம் இல்லாமல் எழுந்து அவள் அருகில் வந்து… தன் கால்களால் எக்கி… அவள் கழுத்தைப் பிடித்து இழுத்து… அழுத்தி கன்னத்தில் முத்தமிட்டான்… அன்னையின் மனதை கவர அவன் எப்பொழுதும் கையில் எடுக்கும் ஆயுதம் இந்த கன்னத்து முத்தம்…

 

இதை கண்டதும் ஏக்கம் வந்து போனது அருணின் கண்களில்…

 

மகனின் முத்தத்தில் உள்ளம் நெகிழ்ந்தவளிடம்… முகத்தை சுருக்கி 

மாம்… ப்ளீஸ்.. ஐ நீட் some ரிலாக்ஸாஷன்… என்றான் பாவமாய்…

 

அவன் வார்த்தைகளில் சிரித்துக் கொண்டே… போ… But.. டோன்ட் talk too much…

 

டிராயிங் புத்தகத்தையும் கலர் பென்சிலையும் எடுத்துக்கொண்டு விரு விரு என்று எட்டு வைத்து நடந்த அர்ஜுனை முன்னே அனுப்பிவிட்டு,  நந்தினியின் அறைக்குள் நுழைந்த அருண்… 

 

ஏண்டி உன் பையன என்ன நம்பி அனுப்ப மாட்டியா.. என்ன பாத்தா புள்ளைய கடத்திட்டு போறவன் மாதிரி தெரியுதா… ரொம்ப ஓவரா பண்ற… 

 

புள்ள புடிக்கறவனை நம்பி கூட கொடுத்துடுவேண் என் புள்ளைய… உன்ன நம்பி தான் என்னால கொடுக்க முடியாது என்றாள்… அவன் காலை வாரும் நோக்குடன் 

 

அவள் வார்த்தைகளில் எரிச்சலானவன் போடி எரும…

 

அவன் அவங்க அப்பன மாதிரி திமிரு புடிச்சவன்… உன்ன கஷ்டப்படுத்தற மாதிரி ஏதாவது பேசிடுவான்… அப்புறம் என்கிட்ட மூஞ்சிய தூக்கிட்டு வந்து நிக்க கூடாது… என்று… எச்சரிக்கை விட…

 

நீ இப்படி பேசுறத நிறுத்து நந்தினி கேட்கவே எரிச்சலா இருக்கு…

நாங்க ரெண்டு பேரும் என்ன சண்டை போட்டாலும் உன் கிட்ட வந்து நிக்க மாட்டோம் போதுமா… என்றான் அருண்…

 

என்னமோ பண்ணுங்க என்னும் விதத்தில் அவள் தலையை ஆட்ட…

 

சில மணி நேரங்கள் கழித்து இருவரும் ஒரு பேப்பருடன் நந்தினி அறையை வந்து அடைந்தனர்…

 

நாங்க வரைஞ்சதுல யார் வரஞ்ச  படம் அழகா இருக்குன்னு சொல்லு… என்று காகிதத்தை அவள் முன் நீட்ட… 

 

இரண்டு மலை, சூரியன், ஒரு அருவி ஒரு குடிசை வீடு… ஒன்றாம் வகுப்பு மாணவன் வரைந்த படத்தை கூட கண்ணால் பார்க்க முடிகிறது… ஆனால் கை தேர்ந்த தொழிலதிபன் வரஞ்ச படத்தை கண்ணால் பார்க்க கூட முடியவில்லை… இதில் இருவருக்கும் போட்டி வேறு…

 

இதில் இருவரும் தான் வரைந்த படம் அழகாய் இருக்கிறது என்று சொல்லும்படி கண்களாலேயே ஜாடை செய்ய…

 

போத் ஆர் வொர்ஸ்ட் என்று இரண்டையும் நகர்த்தி அனுப்பி விட்டாள்…

 

பின் அருண் இருவர் வரைந்த படத்தையும் உற்றுப் பார்த்துவிட்டு…

ஓகே… என்னோட படத்த விட உன்னோட படம் கொஞ்சம் நல்லா இருக்கு… அதனால நீ தான் ஜெயிச்சேன்னு அநௌன்ஸ்மெண்ட் பண்ணிடலாம்… என்று தன் தோல்வியை ஒத்துக் கொள்ள..

 

அந்த குட்டியோ ஹேய்… என்று இடுப்பை வளைத்து நெளித்து குதுகளித்தது… 

அப்போ இன்னைக்கு நம்ம கார்ல போறோம்… ஜாலி ஜாலி என்று குதிக்க… 

 

அர்.. ஜுன்… என்று குழந்தையை அதட்டியவள்.. அவனைப் பார்த்து கண்களை உருட்ட…

 

அருணின் காலுக்கு பின்னால் போய் ஒளிந்து கொண்டான் குழந்தை…

 

ஏய்.. அவனை ஏண்டி மிரட்டுற… நான்தான் வெளியில கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருந்தேன்…

நாங்க போறோம்..  நீயும் வர… ஆபீஸ் முடிஞ்சதும் ரெடியாயிரு… என்று அழுத்தி கூறிவிட்டு குழந்தையையும் கையுடன் கூட்டி சென்று விட்டான் அவனது அறைக்கு…

 

அவன் சென்ற பிறகு… செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்தியவள்… மண்டை சூட்டில், முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டு… “உன்கிட்ட பேசினதே தப்புன்னு என்ன நினைக்க வைக்க போற அருண்…” என்று புலம்பி தள்ளினாள்…

 

மாலுக்கு அழைத்து வந்திருந்தான்..  மூவரும் மால் முழுவதும் சுத்தினர்… நந்தினியின் முறைப்பை எதிர்கொள்ள முடியாமல் அருணின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான் அர்ஜுன்… 

 

அருணும், அர்ஜுனும் தான் செமையாய் என்ஜாய் பண்ணினார்கள்… இருவரும் கோந்து போல் ஒட்டி கொண்டார்கள்.. ஒரே நாளில் அருணின் மனதுக்கு நெருக்கமானவனாகி விட்டான் அர்ஜுன்.  நந்தினி வெறும் பார்வையாளர் மட்டுமே… 

 

அவளின் உணர்ச்சி துடைத்த முகத்தை பார்த்தவன்… திடீர் திடீர்னு கிறுக்கு புடிச்சிரும் போல இவளுக்கு… என்று மனதில் நினைத்துக் கொண்டான்…

 

வீட்டுக்கு கிளம்பும் வேளையில்… 

நம்ம ஒரு செல்பி எடுத்துக்கலாமா என்று கேட்டான் அர்ஜுன்…

ஓ… சுயர்..  என்று கூறிவிட்டு தனது மொபைல் போனை எடுத்து செல்ஃபி எடுக்கப் போக… வேகமாய் அதை பிடுங்கினாள் நந்தினி…

 

என்ன?… என்பது போல் இருவரும் திரும்பி பார்க்க…

 

செல்பி வேணாம்… உங்க ரெண்டு பேரையும் நானே போட்டோ எடுக்கிறேன் என்று தனது மொபைலில் இருவரையும் புகைப்படம் எடுத்தாள்… எங்க காட்டு.. என்று அருண் அருகில் வர… போட்டோஸ் எல்லாம் நான் வாட்ஸ் அப்ல அனுப்புறேன்… இப்ப கிளம்பலாம் என்று கிளம்ப பார்க்க…

 

தன் காலை சுற்றி இருந்த குழந்தையை கையில் தூக்கி கொண்டான் அருண்…  

நந்தினியின் முறைப்பை பார்த்தபடியே… அருணின் கழுத்தில் புதைந்து கொண்டான் அர்ஜுன்.. 

 

அச்சுவின் கள்ளப் பார்வையை பார்த்த நந்தினி… இந்த பிராடு தனத்தை எங்கிருந்துதான் கத்துக்குறானோ என்று சலித்தாள்… என்ன எல்லாம் பண்றான் வீட்டுக்கு வா… உன்ன வச்சிக்கிறேன்… என்று உதட்டுக்குள்ளே முணுமுணுத்தாள்.

 

வேகவேகமாய்.. நந்தினி முன்னே நடக்க… பின்னே குழந்தையுடன் நடந்தான் அருண்…

 

எதிரில் பெண் குழந்தையுடன் ஒருவர் வர… அந்த குழந்தை அர்ஜுனை பார்த்து ஹாய் என்று கூறியது…

 

அர்ஜுனும் பதிலுக்கு புன்னகைத்து ஹாய் என்றான்…

 

யார்டா இது என்று அருண் மெதுவாய் கேட்க… She is my girl friend name தியா… என்றான்..  கிசுகிசுப்பாக…

 

மொத்தம் எத்தனை கேர்ள் ஃபிரண்ட்.. என்று அவனும் கேட்க…

 

ஒரு நாள் எங்க ஸ்கூலுக்கு வாங்க நான் எல்லாரையும் இண்ட்ரோ பண்ணி வைக்கிறேன்… என்று பதில் அளித்தான் அச்சு…

 

தனது தந்தையை தியா பெருமையாக அறிமுகம் செய்து வைக்க..  அர்ஜுனின் முகத்தில் பெரும் அமைதி… அருணை பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் இருக்க.. 

 

அவன் அமைதியை பார்த்து, இளகியவன்… ஹாய் ஐ அம் அருண் அர்ஜுனோட அப்பா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்…. தியாவின் தந்தையும் சிறிது நேரம் பேசிவிட்டு..  நகர்ந்து சென்றுவிட…

 

பின்னால் திரும்பிய அர்ஜுன் டாடா காண்பித்து பிளைன் கிஸ் கொடுத்து அனுப்பி வைத்தான் தியாவிற்கு… 

 

நம்மள விட பெரிய ஆளா இருப்பான் போல என் மனதிற்குள் நினைத்த அருண்… பயங்கரமா பர்பாமென்ஸ் பண்றியாடா… என்று கலாய்க்க… அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்ட அர்ஜுன்  அருணின் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்… அருணின் உடல் சிலிர்த்து அடங்கியது… 

 

மெதுவாய் திரும்பி குழந்தையின் முகத்தை பார்க்க… தேங்க்ஸ்… உங்களுக்கு கிஸ் பண்ண விஷயத்தை அம்மா கிட்ட சொல்லிடாதீங்க… என்றான்.

 

குழந்தை தானாய் வந்து அள்ளித் தந்த முத்தத்தில் உள்ளமெல்லாம் பூரித்தது என்பது உண்மை… ஏனோ எதையோ சாதித்து விட்டது போல் பெரிய பெருமை வந்து சேர்ந்தது…

 

அவனும் குழந்தையின் இரு கன்னத்திலும் முத்தமிட்டான்… குழந்தையின் ஸ்பரிசம் வாசம் எல்லாம் அவனுக்குள்ளும் புதிதாய் ஒரு உணர்வை கொடுக்க… அத்துடன் ரித்துவின் நினைவும் இலவசமாய் வந்து ஒட்டிக்கொண்டது…

 

நந்தினியையும் குழந்தையையும் பிளாட்டில் இறக்கிவிட்டு… அவனும் இறங்கி.. புதிதாய் வாங்கிய பொருட்களின் பைகளை எடுத்து நந்தினி கையில் கொடுத்தான்..  இங்கதான் இருக்கியா டி…

 

ம்ம்ம்… கிளம்பு நீ…

 

உள்ள வான்னு கூப்பிட மாட்டியா?…

 

இல்ல வேணாம் நீ வீட்டுக்கு கிளம்பு.. என்றாள்..

 

அர்ஜுனை தூக்கி முத்தம் கொடுத்துவிட்டு.. இறக்கி விட போக… கழுத்தை கட்டிக் கொண்டான் குழந்தை… அப்பா ப்ளீஸ் நீங்க எங்களோட வந்துடுங்க… என்று அழுகையுடன் கூற…

 

டோன்ட் டாக் ரப்பீஷ் அர்ஜூன்… என்று அழுத்தமாய் கூறினாள் நந்தினி…

 

ஏண்டி குழந்தை மிரட்டுற… அவனுக்கு அவங்க அப்பா ஞாபகம் வந்துவிட்டது போல… என்று கூறியபடி அவனின் தலையை மெல்லமாய் தடவி கொடுத்தவன்… அப்பா..  இன்னொரு நாள் வரேன்… என்று கூறி அர்ஜுனை சமாதானப்படுத்தினான்…

 

அருண் கூறியதை கேட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று இருந்தாள் நந்தினி.

 

அர்…ஜுன்… என்றாள் பல்லை கடித்த படி…

 

ஏய்.. நீ கண்ண உருட்டி மிரட்டுதனால தாண்டி அவன் பயந்துகிட்டு வர மாட்டேங்குறான்…

 

குழந்தை கீழே இறங்காமல் அருணின் கழுத்தை கட்டிக்கொண்டு அடம் பிடிக்க… அப்பா… ப்ளீஸ் பா எங்க கூட இருங்கப்பா… என்று அழுக ஆரம்பிக்க… அருணுக்கு மனம் பாரமாய் ஆனது…

 

அர்ஜுன்  நீ வரலனா அம்மா உன்ன விட்டுட்டு போயிடுவேன் என்று கூறி விட்டு பிளாட்டை நோக்கி நடந்தாள்…

 

பின்னாலையே அர்ஜுனனை தூக்கிக்கொண்டு அருண் நடந்து வந்து..  சோபாவில் அமர வைத்து தானும் அமர்ந்து… சிறிது நேரம் பேசி விட்டு கிளம்ப பார்க்க… காலை இறுக்க கட்டிக் கொண்டான்…

 

அருணை நகர விடாமல் அப்பா… ப்ளீஸ்… அப்பா என்று கத்தி கொண்டு இருக்க… அர்ஜுனனின் கையைப் பிடித்து முதுகில் இரண்டு அறை வைத்தாள் நந்தினி… 

 

இப்போ எதுக்கு டி குழந்தையை அடிக்கிற… நான் வேணா இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்க வா…

 

அவனை தீயாய் முறைத்தவள்… புரிஞ்சுதான் பேசுறியா.. ப்ளீஸ் அருண்… நீ கெளம்பு நா அவன பாத்துக்குறேன்… 

 

முகம் முழுதும் சிவந்து… கண்ணீர் மழை வடிய.. பாவமாய் கெஞ்சிய படி… என்ன விட்டு போகாதீங்க அப்பா என்று அர்ஜுன் கதற…  அவனை தர தர வென இழுத்து கொண்டு போய் படுக்கை அறையினுள் விட்டு கதவை அடைத்தவள்… அருண் நடந்த எதையும் மனசுல வைச்சுக்காத… நீ மொதல்ல இங்க இருந்து கிளம்பு… என்று அவனை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்க…

 

பிள்ளையை அடிக்காதடி… என்ற படி.. அப்பா… அப்பா..  என்று 

அர்ஜுனின் கதறலை கேட்க முடியாமல் கண்களில் நீர் உடன் வெளியேறினான்… அருண்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top