அசுரன் 130

அசுரன் 130

 

வீட்டிற்கு வந்தும் கையும் ஓடுட இல்லை காலும் ஓடவில்லை… குழந்தையின் நினைப்புதான்… அவன் பிரிந்து வரும் பொழுது  ரித்துவாவது சிரித்துக்கொண்டே டாடா காண்பிக்க.. தந்தை பாசத்திற்கு ஏங்கி தன் காலை கட்டிக்கொண்டு அழுத குழந்தையை நினைத்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது… ஏதோ நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி விட்டது விட்டது போல் குற்ற உணர்வில் தவித்துப் போனான்… நந்தினிக்கு திரும்பத் திரும்ப அழைத்து பார்த்தான்… போனை எடுக்கவில்லை.. இரவில் ஆழ்ந்த யோசனைக்கு பின் முடிவெடுத்தவன்…

மறுநாள் காலை எப்பொழுது புலரும் என்று காத்துக் கொண்டிருந்தவன்…

 

தாமதமாய் தூங்கி தாமதமாய் கிளம்பி தாமதமாய் ஆபீஸ் வந்தவன்… நேரே நந்தினியின் அறையில் நுழைய… உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தாள்… கண்கள் சிவந்து  முகம் வீங்கி இருந்தது இரவெல்லாம் அழுது இருப்பாள் போலும்… அருண் உள்ளே நுழைந்தது தெரிந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்… வேலையில்தான் கவனமாய் இருந்தாள்.

 

அறையை சுற்றும் மற்றும் பார்த்தபடி…

பையன எங்கடி… என்றான்..

 

ஒரு பெருமூச்சு எடுத்தவள்… தன்னை நிதானித்துக் கொண்டு… கீரீச்ல (குழந்தைகளுக்கான தங்குமிடம்) விட்டுட்டு வந்து இருக்கேன்…

 

எதுக்குடி அங்க விட்டுட்டு வந்த கூட கூட்டிட்டு வந்து இருக்கலாமே… குழந்தை பாக்கணும்னு ஆசையா வந்தேன்… என்றான்.

 

அவன் ஆபீஸ் வந்தால் தொந்தரவு பண்ணுவான்…  அவன் அங்க இருக்கிறது தான் நாம் எல்லாருக்குமே நல்லது… தென் சாரி… நேத்து அவன் அப்படி நடந்துக்கிட்டதுக்கு… ஏன்னு தெரியல நேத்து அவன் ரொம்ப எமோஷனல் ஆகிட்டான்… உனக்கு தேவையில்லாத தொந்தரவு… இனிமேல் இங்க வர மாட்டான்… போய் உன் வேலையை பாரு என்றாள் அவனின் முகம் பாராமல்…

 

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லடி… நேத்து அவன் நடந்து கொண்டதுக்கு நானும் ஒரு ரீசன்…

மாலில் தியாவின் தந்தையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதைக் கூற…

 

ஒரு நிமிடம் எழுதிக் கொண்டு இருந்ததை நிறுத்தியவள்… நீ ஏன் அப்படி சொன்ன?..

 

உங்க அப்பாவா?னு தியா கேட்கும் போது அவன் என்னோட மூஞ்சிய உத்து உத்து பார்க்கிறான் டி… பாவமா போயிடுச்சு… அதனாலதான் நான் அர்ஜுனோட அப்பான்னு சொன்னேன்… 

 

ஓஹோ… என்ற வார்த்தையில் சுருதி இல்லை… அவள் மனம் என்ன எதிர் பார்த்ததோ… 

 

அர்ஜுனோட எதிர்காலத்துக்காக… நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கேன்… என்னன்னு கேக்க மாட்டியா? என்றான் அவள் முகத்தின் அருகே குனிந்து…

 

சொல்லு…

 

அர்ஜுனோட அப்பா கிட்ட பேசி… அட்வைஸ் பண்ணி,  திருத்தி, உன் கூட சேர்த்து வைக்க போறேன்… அப்ப அர்ஜுன் ஹாப்பியா இருப்பான்… என்றான்.

 

வெளியே போ அருண்… எனக்கு வேலை இருக்கு… என்றால் கடுப்பின் உச்சியில்…

 

போறேன்… அதுக்கு முன்னாடி உன்னோட exஹஸ்பண்ட் நேம் அட்ரஸ் சொல்லு நான் போய் பேசுறேன் என்றான்…

 

பல்லை நர நர என கடித்தவள்… வெளிய போடா… னு சொன்னேன்…

 

ஒருவேளை அவரும் குழந்தையை விட்டுட்டு என்னை மாதிரி ரொம்ப கஷ்டப்படுறாரோ என்னமோ… பேசி பார்த்தால் தானே தெரியும்…ஒரு ஆம்பள மனசு ஆம்பளைக்கு தானே புரியும்…

 

ஓ… அப்படி… 

அப்ப நீயும் ரதி கூட சேர்ந்து வாழு..  

 

ஏய்… ச்சீ… வாயால கூட அப்படி சொல்லாதடி… நினைச்சு பாக்க கூட முடியல… அப்புறம் எங்க வாழ்றது… நான் நிம்மதியா இருக்கறது உனக்கு பிடிக்கலையா என்றான் முகத்தை சுருக்கி…

 

அப்ப மூடிட்டு இந்த இடத்தை விட்டு கிளம்புடா வெண்ண..  உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா…

 

என்ன இந்த கிழி கிழிக்கிறா.. என்று மனதில் யோசித்தவன்…  சேர்ந்து வாழ முடியாதுன்னு சொல்ற.. சரி விடு… பேசாம நானே உன்னை கல்யாணம் பண்ணிக்க வா… என்றான் அவள் அருகில் வந்து கிசுகிசுப்பாக…

 

தீயாய் அவனை முறைத்தவள்… வெளிய போடா பொறுக்கி… என்றாள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பல்லை கடித்தபடி…

 

ஏய்… அர்ஜுனுக்கு நான் நல்ல அப்பாவா இருப்பேன் டி.. நம்பு… நான் என் பையன் மாதிரி பாத்துக்குறேன்… நம்ம வேற குழந்தை கூட பெத்துக்க வேணாம்… இவன் மட்டும் போதும்… என்று… தனது ஐடியாவை புட்டு புட்டு வைக்க…

 

ஆஹான்… அவ்வளவு நல்லவனடா நீ என்பது போல் புருவத்தை உயர்த்தி பார்த்து வைத்தாள் நந்தினி…

 

நா விளையாட்டுக்கு சொல்லலடி… அர்ஜெண்டா அர்ஜுன்க்கு ஒரு அப்பா வேணும்… அதுக்கு இது ஒரு நல்ல ஐடியா… என்று… சொல்ல… 

 

பைல் ஒன்று அவன் மேல் வந்து விழுந்தது… என்ன என்று நிமிர்ந்து பார்க்க… அவனை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தவள் கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் அவன் மேல் விட்டு எறிய ஆரம்பித்தாள்… 

 

ஏய்… எதுக்கு டி அடிக்குற..  வெளிய போறேன் டி… 

அவள் கையில் பேப்பர் வெயிட்டை எடுத்ததும்… வேணாம் டி ராட்சசி… என்று அறையை விட்டு ஓடிவிட்டான்…

 

அடுத்த நாள் மீண்டும் அவளின் அறையின் கதவை திறந்தவன்… 

 

திருந்தினவளுக்கு வாழ்க்கை கொடுக்கலாம்னு பார்த்தேன்… என்றான்…

 

தூ என்று துப்பும்படி சைகை செய்தாள்.. 

 

வேணாம்னா போ லாஸ் உனக்கு தான்… தோலை குலுக்கி  கூறி விட்டு சென்று விட்டான்…

 

அடுத்து நான் வேணா அர்ஜுன தத்து எடுத்துக்கவா… என்று கேட்டு வந்தான்…

 

காலை குனிந்து செருப்பை பார்த்தாள்… நிமிரும் போது எதிரில் அருண் இல்லை..

 

இதோ இன்று.. உன் புருஷன் யாருன்னு தேட சொல்லி இருக்கேன்… அவன் கிட்ட அர்ஜுனுக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லைன்னு கையெழுத்து வாங்கிட்டு… எனக்கு டிவோர்ஸ் கிடைச்ச உடனே… நான் லீகலா அர்ஜுனுக்கு அப்பா  ஆகப் போறேன் என்று செய்தி வாசிப்பாளன் போல் கூறிவிட்டு சென்று விட்டான்.

 

பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி இடம் நந்தினியின் விவரத்தை கூறி… அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து தருமாறு கூறியிருந்தான்.

 

ஆதியின் அறைக்குள் சில பைல்களை வைத்துவிட்டு…  ஆதியின் கையெழுத்திற்காக அவள் வைத்த  பைல்களை தேடிக் கொண்டிருக்க…

 

ஓரக்கண்ணில் நந்தினியை பார்த்தபடி  விக்ரமிடம் ஜாடை பேசிக் கொண்டிருந்தான் அருண்…

 

வயித்துக்குள்ள இருக்கும்போது… நான் கை வெச்சா உதைப்பாண்டா ரித்து… அப்படியே என் உடம்பெல்லாம் புல்லரிக்கும்… ஒரு தந்தைக்கு மகனுக்குமான உறவை யாராலும் பிரிக்க முடியாது… ஒரு அம்மா பத்து மாசம் தான் சுமக்குறாங்க..  ஒரு அப்பா அவனுக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா…

 

என்னடா  மச்சான் ஆச்சு.. ஏதாவது நல்ல மனநல மருத்துவர பாக்கலாமா?… உன்ன நான் சரியா கவனிக்காம விட்டுட்டேனடா.. இப்படி புத்தி பேதலிச்சு போய் நிக்கிறியே…  என்று அருணை கட்டிப்பிடித்து விக்ரம் ஒப்பாரி வைக்க போக… 

 

இங்கு நடக்கும் கூத்தை மௌனமாக,  பார்த்துக் கொண்டு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி….

 

புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கொள்வதனால குழந்தையோட வாழ்க்கை தான் கெட்டுப் போகுது… கொஞ்சம் கூட குழந்தையோட வாழ்க்கையில அக்கறை இல்லாம இருக்காங்க… என்று உத்தமன் போல் அருண் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க…

 

அவன் எதிரே வந்து அமைதியாக கைகட்டி நின்று இருந்தவள்…

 

குழந்தை காலை கட்டிக்கிட்டு அழுகிறான் அப்போ உணராத பாசத்தை… வயித்துல கைய வெச்ச உடனே உணர்ந்தாராம மயிறு… என்று அவன் முகத்தில் சில பேப்பர்களை விட்டெறிந்தவள்… 

கதவின் அருகே சென்று விட்டு பின் அருண் பக்கம் திரும்பி,உன் பேர சொல்லிக்கிட்டு, கையெழுத்து கேட்டு என் முன்னாள் புருஷன் முன்னாடி போய் நின்றாத… காரி துப்பி அனுப்புவான்… என்று கூறிவிட்டு கதவை அடைத்து விட்டு சென்றுவிட…

 

என்னடா சேட்டை பண்ண நந்தினி கிட்ட… நீ அந்த பொண்ணு கேபின்ல போய் உட்காரும்போதே தெரியும், ஏதாவது பிரச்சனை இழுத்துட்டு வருவேன்னு..  திருந்தவே மாட்டியாடா… என்னடா பண்ணி தொலச்ச… உன்னை இப்படி கழுவி ஊத்திட்டு போகுது… என்று விக்ரம்  அதிர்ச்சியாகி கேட்க…

 

மச்… மச்சான்… அவ என்னோட எக்ஸ் டா… என்று கூறிவிட்டு கீழே விழுந்த பேப்பர்களை எடுத்து பார்க்க….

அர்ஜூனின் பர்த் சர்டிபிகேட்.. 

குழந்தையின் பெயர் அர்ஜுன் தேவ்…

தந்தையின் பெயர் அருண் தேவ் என்று இருந்தது…

இதை படித்துப் பார்த்தவனுக்கு தூக்கி வாரி போட்டது…

 

என்னது என் குழந்தையா… என்ற அதிர்ச்சியில் மற்றொரு பேப்பரை விரித்து பார்க்க… DNA ரிப்போர்ட் எடுத்து வைத்திருந்தாள்… 

 

டேய் என்னடா பண்ணி வச்சிருக்க… நந்தினி என்ற பெயரை உன் வாழ்க்கையில் நீ சொல்லி நாங்க கேட்டதே இல்லையே… குழந்தை வரைக்கும் கொண்டு வந்து விட்டு இருக்க… என்று விக்ரம் ஆதங்கமாய் கேட்க…

 

டேய் அவ என் திவி டா மச்சான்..  ஐ மீன் திவ்யநந்தினி… அவளோட ஃபுல் நேம்டா… நந்தினி அவனோட சர்டிபிகேட் நேம்… என்றான்.

 

சரியாய்  ஏஜென்சி இடமிருந்து கால் வந்தது… அவர்கள் சொன்ன தகவலை முழுதும் பொறுமையாய் கேட்டுக் கொண்டான்.. பின் போனை வைத்தவன்…

 

குழந்தை பிறந்து ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் தான், எங்க லவ் பத்தின உண்மையை சொல்லி, வீட்ல பார்த்த மாப்பிள்ளையை  கல்யாணம் பண்ணி இருக்கா… 

சரி சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணவன் சைக்கோ தனத்த காமிச்சிருக்கான்.. டிவோர்ஸ் வாங்கிட்டா…  எனக்கு தெரியும்டா அவ அந்த ரெண்டு வருஷமும் எனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருப்பா.. என்றான் விக்ரமிடம்.

 

இப்போ என்னடா பண்ண போற… நந்தினி வேற உன் மேல செம கடுப்புல இருக்கு… என்றான் விக்ரம்.

 

அவனுடைய பிறப்பு சான்றிதழை மெதுவாக தடவி பார்த்தவன்.. என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியல… ஆனா இனிமேல் அவளையும் பிள்ளையும் விட்டு நான் பிரிஞ்சி இருக்க போவதில்லை… 

 

அனேகமா குழந்தைக்கு நான் தான் அப்பானு தெரியும்… அதனால தான் அவன் ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்ன நேர்ல பார்க்கும்போது… என் முகத்தை அடிக்கடி உத்து உத்து பார்த்தான்… கைய கெட்டியா பிடிச்சுகிட்டான் அவங்க அம்மா கிட்ட கூட போலயே… அவன்னுடைய பிரண்டு கிட்ட அப்பான்னு சொன்ன உடனே அவ்வளவு எமோஷனல் ஆகிட்டான்… கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணான்… நான் இல்லாம என் பையன் ஏங்கிட்டு இருக்கான்டா…  கால கட்டிக்கிட்டு போகாதீங்கப்பான்னு கத்தும் போது உயிரே போன மாதிரி இருந்துச்சுடா… குழந்தைக்கு பொய்யான ஹோப் கொடுத்து ஏமாத்திட்டோமோனு கில்டியா ஃபீல் பண்ணேன்… அவன் கதறும் போது அன்னைக்கு அவன் கூட இருக்கலாம் என்று தான் நினைச்சேன்… வெளியில் போனு இவ சொல்லும்போது எந்த உரிமையும் இல்லாம அங்க எப்படி இருக்கிறது என்று தான் வெளியே வந்துட்டேன்… ஆனா இப்ப முடிவு பண்ணிட்டேன்… இனி வாழ்க்கை முழுக்க அவன் கூட தான் இருக்க போறேன்… யார் தடுக்குறாங்கன்னு பாப்போம்… என்று அழுத்தமாய்  கூறியவன்… 

 

அடுத்த நாள் அதிகாலையில்… அவன் குடியேறிய இடம், நந்தினியின் பிளாட்…

 

நிலைப்படியில் கைகட்டி சாய்ந்து அவனைப் பார்த்தவள்… இப்ப எதுக்கு  ட்ராலியோட இங்க வந்து நிக்கிற…

 

பையன பிரிஞ்சு என்னால இருக்க முடியல….

 

இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல… ஒரு நாள்ல அப்பா சென்டிமென்ட் ஒட்டிக்கிச்சா… என்று அவள் இளக்காரமாய் கேட்க…

 

அவன் வாழ்நாள் முழுக்க நான் தாண்டி அப்பா வேற யாராவது மாற முடியுமா.. என்று கேட்டபடி அவளை தள்ளிவிட்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தான்…

 

கதவை அடைத்து விட்டு வந்தவள் அவன் எதிரே வந்து அமர்ந்து… Wats your plan என்றாள்.

 

ஒரு மண்ணும் இல்லை… நீ.. நான்.. அர்ஜுன்.. அவ்ளோதான்… 

 

இதுக்கு நான் ஒத்துக்கலைன்னா…

 

நீ மட்டும் தனி குடித்தனம் போய்ட்டு என்றான்.

 

நீ இங்க இருக்கிறதை பார்த்தா  சுத்தி இருக்கிறவங்க அசிங்கமா பேசுவாங்க… 

 

அர்ஜுனோட அப்பான்னு சொல்லு ஒன்னும் சொல்ல மாட்டாங்க… குழந்தை எங்க?…

 

தூங்குகிறான்… என்று படுக்கை அறையை கண் காண்பிக்க…

 

சரி அது இப்போ இனிமேல் எங்க ரூம்… என்று கூறிவிட்டு தனது ட்ராலி உடன் அந்த அறைக்கு சென்று விட்டான்… பின் கதவை திறந்து எட்டிப் பார்த்து… நீ வேணா எங்க ரூம்ல தங்கிக்கலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்று அருண் கூற.. பக்கத்தில் இருந்த பிளவர் வாஸ் ஓங்கி வந்து  அவன் முகத்தில் விழப் பார்க்க அவன் சரியாய் கதவை அடைக்க கதவில் பட்டு விழுந்தது…

 

ரொம்ப கோபமா இருப்பா போலயே.. இப்போதைக்கு சமாதானப்படுத்த முடியாது… கொஞ்ச நாள் போகட்டும்… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு குழந்தையின் அருகில் படுத்து அவனது தலையை தடவ… உடல் காய்ச்சலால் சுட்டது.

 

சரியாய் கண்விழித்தான் அர்ஜூன்… அருணின் முகத்தை பார்த்துவிட்டு… “அப்பா” என்று அழைத்துவிட்டு கழுத்தை காட்டிக் கொண்டான்… நீங்க நெஜமா வந்து இருக்கீங்களா.. கனவு இல்லையே… என்று அருணை தொட்டு தொட்டு பார்க்க… ஏனோ அருணுக்கு தொண்டை அடைத்தது.. இந்த உலகில் 

தன்னை நினைத்து ஏங்கும் ஒரு ஜீவனா… 

 

குழந்தையின் முகத்தை தாங்கி முகம் எங்கும் முத்தமிட்டவன்… அப்பா தான்… உன்னோட அப்பா தான்… உனக்காக வந்துட்டேன்… உன்ன விட்டு எங்கும் போக மாட்டேன்… என்று இறுக்கி கட்டி பிடித்துக் கொள்ள…

 

இங்கு நடப்பது அனைத்தையும் கதவின் அருகே நின்று நந்தினி பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்… இரண்டு நாள் அருணை நினைத்து  அடம்பிடித்ததில் அர்ஜுனுக்கு காய்ச்சல் வந்துவிட… இன்று என்ன காரணம் சொல்லி அருணை அழைப்பது என்ற தயங்கியபடியே அவள் யோசித்துக் கொண்டு இருக்க..  அவனே வந்து விட்டான்.

 

ஒன்று பேசாமல் தனது பொருட்களை அடுத்த அறைக்கு மாற்றிக் கொண்டாள்.

 

அவள் செய்கையில் புரிந்து கொண்டான் அருண் இங்கு இருப்பதற்கு அவள் சம்மதித்து விட்டாள் என்று.

 

நாட்கள் நகர அவர்கள் வாழ்க்கை இயல்பாக தான் சென்றது… பெரும் குஷியாய் வாழ்ந்தது என்னமோ அர்ஜுன் தான்…   

 

24 மணி நேரமும் “அப்பா அப்பா” என்ற குரல் தான்… குழந்தையின் நடத்தையிலேயே தெரிந்தது அவனின் இவ்வளவு நாள் ஏக்கம்…

அப்பா பார்க்குக்கு போலாமா…?

அப்பா என் ஃபிரண்ட்ஸ பாக்கலாமா…?

டாடி… என் பிரண்ட்ஸ் பர்த்டே பார்ட்டிக்கு போலாமா…?

Dad.. நம்ம ரெண்டு பேரும் ரீல்ஸ் பண்ணலாமா…?

டைரி சைன் பண்றீங்களா?…

வித விதமாய் வித்தியாசமாய் அழைத்து ஆனந்தப்பட்டுக் கொண்டான் குழந்தை.

 

அருணின் டிவோர்ஸ்ம் வந்து சேர்ந்தது… நேரே அவன் வந்தது நந்தினி இடம்தான்…

 

கல்யாணம் பண்ணிக்கலாமாடி… என்றான்.

 

உன் பையனுக்காக தானே… கண்டிப்பா பண்ணிக்கலாம்… ஆனா கடைசி வரைக்கும் என் கூட நீ இப்படித்தான் வாழனும் உனக்கு ஓகேவா என்றாள்…

 

எனக்கு ok… எனக்கு அர்ஜுன் மட்டும் போதும்… என்றான்.

 

பதிலைக் கேட்டு அவனை தீயாய் முறைத்தாள்… பாவம் அந்த கிறுக்கனுக்கு ஒன்றும் புரியவில்லை… நீ சொன்னதுக்கு தானடி ஓகே சொன்னேன் அதுக்கு எதுக்கு முறைக்கிற… என்று புலம்பி விட்டு சென்றான்.

 

இதற்கிடையில் ஆதி- மலர் வளகாப்பு நாளும் வந்து சேர்ந்தது…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top