அசுரன் 132
க்ஆ … மெதுவா…. வலிக்குது… ஆ…
என முனங்கல் சத்தம் அறையை தாண்டி வெளியில் கேட்க…
ஊரிலிருந்து காரில் வந்ததால், மலரின் கால்கள் வீங்கி போயிருக்க அதற்கு சுடுதண்ணி ஒத்தடம் வைத்து கால்களுக்கு தைலம் தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தான் ஆதி.
கர்ப்பிணிகளின் கஷ்ட நஷ்டங்களை முதல் முறை பார்க்கிறான்… என்ன செய்வது என்று தெரியாமல் திக்கி முக்கி நிற்பவனுக்கு… வழிகாட்டுகிறாள் மலர்…
இருவரும் இணைந்து அலுவலகம் செல்கிறார்கள்…
நீ கண்டிப்பா வரணுமா… என்று முகம் சுருக்கி கேட்பவனிடம்…
இனிமேல் தான் குனிந்து நிமிர்ந்து அதிகமா வேலை பார்க்கணும்… மாடிப்படி ஏறி இறங்கணும்… ஆபீஸ்லயும் உங்க கண்ணு முன்னாடி தானே இருக்க போறேன்…
ஆபீஸ் விசிட்… போகும்போது… அவனுடன் தான் செல்வான்…
அவள் பொறுமையாக படிகளில் ஏறி அலுவலகத்தில் வலம் வர கூடவே கைபிடித்து அவனும் மெதுவாய் வருகிறான்…
உடல் அயிற்சியில் கண்முன் இருக்கும் சோபாவில் அவள் கண் அயர்ந்து தூங்கும் பொழுது… இடுப்பு சேலை விலக… பழைய ஞாபகம் வந்து போகிறது…
முன்பு குழிந்து இருந்த தொப்புள் குழி… இப்பொழுது பலூன் முடிச்சு போல் துருத்திக் கொண்டு நிற்கிறது… அன்றும் முத்தமிட தான் தோன்றியது… இன்றும் முத்தமிட தான் தோன்றுகிறது ஆனால் உணர்வுகள் வேறு…. வேறு….
மொத்த வயிற்றையும் ஒரு கையால் வட்ட வடிவில் சுற்றி வளைத்த விரல்களில் முத்தம் ஒன்றை கொடுத்தவன்… தனது கோட்டை எடுத்து போர்த்தி விடுவான்…
நிர்வாக திறனுக்கான பயிற்சி தான் அளிக்கப்படுகிறது மலருக்கு… அவளும் முனைப்பாய் கற்றுக் கொள்கிறாள்… பெரிய உடல் பாதைகள் இல்லை… கர்ப்ப காலத்தை இருவருமே ரசிக்கிறார்கள்…
எதுனாலும் என்கிட்ட சொல்லுடி சொல்லாம எனக்கு தெரியாது… நான் இதுக்கு முன்னாடி இப்படி யாரையும் பார்த்ததில்லை… ஒருவேளை அம்மா அக்கா அப்படி யாராவது இருந்திருந்தால் தெரிஞ்சிருக்குமோ என்னமோ… என்று சொல்லிவிட்டு… இரவு நேரத்தில் இடுப்பு வழியால் அவதிப்படுபவளுக்கு சுடுதண்ணி வைத்து இடுப்பில் அழுத்த தேய்த்து ஊற்றிக் கொண்டு இருந்தான்…
ஏனோ ஆடை இல்லாமல் நிற்கும் மேனி காமத்தை தூண்டவில்லை…
கீழே குனிந்து தொடைகளையும் கால்களையும் அழுத்த நீவி சுடுதண்ணியை ஊற்றிய இரவு இதமாய் உறக்கம் வருகிறது அவளுக்கு…
அவனின் youtube வரலாறு முழுதும்… கர்ப்பவதியை எப்படி பார்த்துக் கொள்வது, என்ன உணவு கொடுப்பது, போன்றவை தான் வலம் வருகின்றன….
அவளையும் அடுப்பு திட்டில் சாய்ந்து நிக்க வைத்த படியே அவன் சமைக்க… அவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, அவன் வெட்டி கொடுத்த ஏதாவது ஒரு பழத்தை கொரித்துக் கொண்டிருப்பாள்… சில துண்டுகள் அவன் வாய்க்குள்ளும் செல்லும்… சில நேரம் விரலால்… சில நேரம் இதழால்…
இரவு நேரம் தோட்டத்தில்… நடை பயிற்சி மேற்கொள்ள… சிங்கக் குரலுக்கும் தேன் குரலுக்கும் பாட்டு போட்டி வேறு நடைபெறும்…
வயிற்றில் இருக்கும் குட்டி தான் நடுவர்… யாருடைய பாடலுக்கு உதை வருகிறது என்று…
பெரும்பாலும் அன்னையின் பாடலுக்கே வரும்… வயித்துக்குள்ள பையன் தான் இருப்பான் போல டி… உன்னோட குரலுக்கு தான் அதிக ஓட்டு வருது…
அவர்கள் நினைத்தால் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளலாம்… ஆனால் அவர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு பிடித்திருந்தது… சில நேரம் பையன் சில நேரம் பாப்பா… சில நேரம் குட்டி என்று அழைத்து கொள்வார்கள்…
வயிற்றில் உருளும் குழந்தையை இரண்டு கன்னத்திலும் கை வைத்து ஆவென பார்த்துக் கொண்டிருந்தான் மிரட்சியுடன்…
என்னடி வயிறு இப்படி நெளியிது…
நான் கூட சின்னதா உதைக்க மட்டும் தான் செய்யும் நினைச்சேன்… இப்படி வயிறு ஏறி இறங்கும்னு நினைச்சு கூட பாக்கல… புதுதாய் கண்டுபிடித்தது போல் பிரமிப்பு..
நாட்கள் நெருங்க நெருங்க… தலபிரசவ பயம் பெண்ணை தொற்றிக் கொண்டது… ஆனால் ஒரு வழியாய் மனதை தேற்றிக்கொண்டு…
ஒன்னும் ஆகாது பயப்படாதீங்க…
என்னடி படத்துல என்னென்னமோ காமிக்கிறாங்க என்று மிரண்டு முழிக்கும் கணவனை… சமாதானம் சொல்லி தேற்றுவதுதான் பெரும் வேலையாக இருக்கிறது…
அன்று துப்பாக்கி குண்டை தோளில் வாங்கும் போது அவன் கண்ணில் தெரியாத பயம்… மெர்சல் படத்தில் நித்யா மேனன் பிரசவ வலியில் துடிப்பதை கண்டு வருகிறது…
நீங்க எதையாவது பார்த்துட்டு என்னையும் பயமுறுத்தாதீங்க…
நானா தேடிப்போய் பார்க்கிறேன் என்னோட timeline முழுக்க அது தானே காட்டுது…
இரவில் இறுக்கி கட்டிக் கொண்டு படுகிறான்…
எழுந்து ஓடவா தேவா போறேன்… எதுக்கு இறுக்கி பிடிக்கிறீங்க… மூச்சு முட்டுது… சாப்பிட்டது வேற நெஞ்சுலையே நிக்குது… என்று எரிந்து விழுவாள்…
அவன் பயம் அவளுக்கு புரியவில்லை.. அவள் உபாதைகள் அவனுக்கு புரிவதில்லை…
இரண்டும் தட்டு தடுமாறி கற்றுக் கொண்டிருக்கிறது…
பிரசவ நாளுக்கான, மருத்துவர் சொன்ன பொருட்களை எல்லாம் கணவனுக்கு தொந்தரவு தராமல் அனைத்தையும் தானே எடுத்து வைத்திருந்தாள்…
சூட்டு வலியில் சுருண்டு படுத்திருந்தவளை கண்டு… இது சாதாரண வலி தான் தம்பி… இந்த கசாயம் குடிச்சா சரியா போயிடும் என்று சாரதாம்மா சொல்லி, குடுத்து விட்டு செல்ல…
என்ன இதுவே சாதாரண வலியா… மயக்கம் வராத குறை தான் அவனுக்கு…
இந்த வலியை தாங்க முடியாமல் உதடு கடித்து… அவன் கையை இறுக பிடித்து… முகம் சிவந்து, சுணங்கிப் போகும் அவளை காண முடியவில்லை…
பிரசவ நாளுக்கு 5 நாட்களுக்கு முன்னே இரவு நேரத்தில் வலி வர சூட்டு வலி என்று கசாயம் குடித்து காத்திருக்க.. வலி நின்ற பாடு இல்லை… மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டான்… தேவாவின் அலப்பறையில் கலை கட்டியது மருத்துவமனை…
நீங்க போய் பாருங்களேன்…
நான் ரெண்டு தடவை போய் வாங்கி கட்டிட்டு வந்துட்டேன் சிஸ்டர்… நீங்க தான் என்னை விட சீனியர்… நீங்களே போங்களேன்…
நீதானே ஆள் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கார்ன்னு சைட் அடிக்கப்போன… அதனால இப்பயும் நீ தான் போய் ஆகணும்… என்று விவரம் தெரிந்த சீனியர் நர்ஸ்… மாட்டி விட்டு நழுவி கொண்டார்…
பயந்து, தயங்கி, சோம்பலாய் முழித்துக் கொண்டு மலரின் அறைக்குள் நர்ஸ் நுழையும் முன்னே…
நீங்க எல்லாம் படிச்சிட்டு தான் வந்தீங்களா இல்ல படிக்காம வந்தீங்களா… அவ எவ்வளவு நேரம் வலியில் அழுதுட்டு இருக்கா… ம்ம்ம்… சீக்கிரம் குழந்தையை வெளிய வர வைங்க… என்று மிரட்ட…
அது என்ன நெஞ்சுக்குள்ள அடக்கி வச்ச வாந்தியா… நினைச்ச உடனே கையை விட்டு வர வைக்க… என்று மனதிற்குள் நினைத்த அந்த ட்ரெய்னிங் நர்ஸ்… மலரின் அடி வயிற்றில் கை வைத்து பார்த்துவிட்டு… இப்பதான் 30% வலி வந்து இருக்கு சார்… இன்னும் வலி வரணும்… என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்…
Dr.சைலஜாவின் போன் சைலன்டில் இருந்தது… செவிலியர் போனை தவிர யார் போனையும் எடுப்பதாய் இல்லை அவர்… முன் எச்சரிக்கை நடவடிக்கை…
100% வலி வந்தது… தலைவலி… அங்கிருந்த செவிலியர்களுக்கு…
பரிதாபப்பட்டு கொண்டார்கள் மலரின் மீது… இந்த மனுஷனை ஒரு நாள் வச்சு சமாளிக்க முடியலையே… இந்த பொண்ணு எப்படித்தான் கூட வாழுதோ…
உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா… வலியோடு இருக்கிற அவள போய் நடக்க சொல்றீங்க… நான் வேணா அவளை தூக்கிட்டு நடக்கிறேன்…
கண்மூடித்தனமான காதலுடன் சேர்ந்த பதட்டம்… அவன் சிந்தனையை மதியிழக்க செய்கிறது… என்ன சொல்கிறோம் என்று புரியாமல் பேச வைக்கிறது…
ஆனால் அவனின் நிலை செவிலியர்களுக்கு தெரியாதே… இவரெல்லாம் எப்படி பெரிய பிசினஸ்மேன் ஆனாரு.. என்று நினைக்க வைக்கிறது அவர்களை..
வலி அதிகமாக அதிகமாக கணவனின் கையை அழுத்தி பிடித்ததில் அவனது இரும்பு கையே மரத்து போய்விட்டது… ஆனாலும் அவளிடம் கொடுத்த கையை உருவி கொள்ளவில்லை… அவள் வலியில் சிறு துளியை பகிர்ந்து கொண்டதாய் நிம்மதி…
ஒரு வழியாக விடியும் வேளையிலே பனி குடம் உடைந்து பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல…
நீங்க வெளியவே இருங்க சார் என்று தடுக்க வந்த செவிலியரை… சிவந்த கண்ணால் முறைத்து தான் பார்த்தான்… ஆறடியில் பெரிய உருவமாய் எழுந்து நிற்கும் ஆடவனை தன்னால் தடுத்து நிறுத்திட தான் முடியுமா… நமக்கு எதுக்கு வம்பு என்று கண்டுக்காமல் விட்டுவிட்டார்…
அவள் ஒவ்வொரு முறையும் வலியில் அலறும் போது… உள்ளூர் மெடிக்கல் ஷாப் ஓனரில் இருந்து அமெரிக்க அதிபர் வரையும் திட்டி தீர்த்தான்…
இவ்வளவு வலிய பொறுத்துக்கிட்டு தான் குழந்தை பெத்துக்கணுமா ஏன் இதுக்கெல்லாம் ஒரு மருந்து கண்டு பிடிக்க மாட்டாங்களா… அறிவியல் வளர்ந்திருச்சின்னு பெருமை பீத்திக்கிறாங்க… என்ன உலகம் இது…
தன் கண்முன்னே துடிப்பவளை கண்டும், தன்னால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தில்.. அவளிடம் மன்னிப்பு வேறு கேட்டு கொண்டு இருந்தான்… கை கால் உதறல் வேறு எடுத்தது… இறுதி கட்டத்தில் சர்ஜிக்கல் நைப்பை பிறப்பிறுப்பின் அருகே கொண்டு செல்ல கண்ணை இருக்க முடி அவள் தோளில் புதைந்து கொண்டான்…
அடுத்த கணத்தில் குழந்தையின் வீல் என்ற அழுகுரல் கேட்டதும் தான்… இருவரின் பிடியும் இலகியது…
பிறந்த ஆண் குழந்தையை மலரின் மார்பின் மேல் படுக்க வைத்தனர்… அன்னையின் இதய துடிப்பை உணர்ந்ததும் குழந்தை தன் அழுகையை நிறுத்தி கொண்டது…
இவ்வளவு நேரமும் வலியில் வெளி உலகத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஒருவித மயக்கத்தில் இருந்த மலர்… மெல்ல பார்வை தெளிந்து ஆதியின் முகத்தை பார்க்க… உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த வேலையையும் அவன் தலையில் கட்டியது போல் துவண்டு போய் இருந்தான்…
நீங்க ஏன் இப்படி இருக்கீங்க… ரொம்ப பயந்துட்டீங்களா? என்று தோய்ந்து போன குரலில் மெதுவாக அவள் கேட்க…
உயிர் போயிட்டு வந்த மாதிரி இருக்குடி… என்று ஆடை விலகிய அவள் தோள் பகுதியில் முத்தமிட்டான்…
( சுற்றி இருந்த ஆட்களும் அதையே தான் நினைத்தனர்…)
மென் புன்முறுவலுடன் தோளில் இருந்த அவனின் தலையை தடவி கொடுத்தவள்… ஒரு குழந்தைக்கு இப்படி பயந்தா அப்புறம் எப்படி அஞ்சு பெத்துக்கிறது… என்று மலர் கேட்க…
(என்னது அஞ்சா… அடுத்த பிரசவத்துக்கு இவங்க வர்றதுக்குள்ள நம்ம வேற ஹாஸ்பிடல் மாறிடனும்… என்று செவிலியர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர் ..)
போடி… விளையாடாத.. எனக்கு இவன் மட்டும் போதும்… என்று கூறி அவள் தோளில் சாய்ந்தவரே குழந்தையின் காது மடலை ஒற்றை விரலால் மெல்லமாய் வருடினான்…
(அப்பாடா… என்ற பெருமூச்சு அனைவரிடத்திலும் வெளிப்பட்டது…)
குழந்தையை சுத்தப்படுத்தி, பூந்துண்டில் வைத்து, ஒரு செவிலியர் வந்து நீட்ட… முழங்காலை செவிலியர் உயரத்திற்கு மடக்கி பவ்யமாக கைகள் நடுங்க பெற்றுக் கொண்டான்… இரண்டு கைகளையும் இறுக மூடி காதுகளுக்கு அருகில் வைத்துக் கொண்டு… இளம் ரோஸ் நிறத்தில்… மூடிய கண்களுடன்… குட்டி இதழ்களுடனும்… அடர்ந்த கேசத்துடன் அவனின் நகல் போல் இருந்தான் அவனின் மகன்… பல உயிர்களை ஒரே நேரத்தில் இழந்தவனுக்கு முதல் ரத்த சொந்தம் அவன் கையை வந்து அடைந்தது… உணர்ச்சி பெருக்கில் இருந்தான்… தனது முதல் முத்தத்தை மகனின் நெற்றியில் கொடுத்துவிட்டு… குழந்தையின் வாசத்தை சுவாசத்தில் நிரப்பி கொள்ள… வாசத்தை நுகர்ந்ததும் உடல் சிலிர்த்தது… என்ன உணர்வு என்று சொல்ல முடியவில்லை…
மற்றவர்களுக்கு போனில் விஷயத்தை கூறினான்…
குழந்தை சிறிது நேரத்தில் பசிக்கு அழுக ஆரம்பித்தது…
மலரை சுத்தப்படுத்தி உடைமாற்றி தனி வார்டுக்கு மாற்றி இருந்தார்கள்… குழந்தையை மலரிடம் ஒப்படைக்க.. முறையாக குழந்தைக்கு பால் ஊட்டுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதற்காக செவிலியர் ஒருவர் உள்ளே வந்தார்…
அவர் ஏதோ சொல்ல வர மிக ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தான் ஆதி… சார் நீங்க.. என்று சொல்ல வந்தவர்… அவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று தெரியும்… மலரிடம் மேடம் ப்ளீஸ் சாரை கொஞ்சம் வெளியில இருக்க சொல்லுங்க என்று கோரிக்கை வைத்தார்… மலரின் வேண்டுகோளை ஏற்று வெளியே வந்தவன் செவிலியர் வெளியே வருவதை பார்த்ததும் அவரை முறைத்துக் கொண்டே உள்ளே சென்றான்… அப்படி என்ன ரகசியம் சொன்னாங்க…
அது எதுக்கு உங்களுக்கு…
குழந்தைக்கு என்ன செய்யணும்னு நான் தெரிஞ்சுக்க வேணாமா… நானும் இப்ப அப்பா ஆயிட்டேன்… என்றான்.
ஏதோ முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் போல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு…
சின்ன சிரிப்புடன், பால் குடிக்கும் போது தலையை எப்படி புடிக்கணும் … உடம்பு எப்படி இருக்கனும்… எந்தப் பகுதி வரை குழந்தையின் வாய்க்குள் போகணும்… எல்லாம் சொன்னாங்க…
அப்படியா…இதுல இவ்வளவு விஷயம் இருக்கா… எனக்கு இத்தனை நாள் தெரியாம போயிடுச்சு பாரு என்றான்… மலர் அவனை மேல் கண்ணால் முறைத்துப் பார்க்க…
நிஜமா எனக்கு தெரியாதுடி… என்று சொல்லும் அவன் முகத்தில் அறியாமையை தவிர வேறொன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை… அவன் கவனமெல்லாம் குழந்தை சரியாய் பால் குடிக்கிறானா என்ற சோதனையில் இருந்தது…
சிறிது நேரத்தில் அனைவரும் வந்து சேர்ந்தனர்… மாறி மாறி குழந்தையை கொஞ்சி தீர்த்தனர்.
*******