அசுரன் 134

அசுரன் 134

 

குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்கு பிறகு அவளுடைய கம்பெனியை முழு கட்டிடமாக உருவாக்கம் செய்து அவள் கையில் ஒப்படைத்திருந்தான் ஆதி… லோன் போட்டு தான் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டது… அதற்கான தவணை மலர்தான் கட்ட வேண்டும் என்று கூறி இருந்தான்…

 

போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்ததால் கம்பெனி பெயர் சீக்கிரமே பிரபலமானது… முதலாம் இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது  புதியவர்கள் என்பதால் இவர்களிடம் கட்டணம் பாதியாக தான் இருந்தது..  அதனால் புதிதாய் தொழில் தொடங்குபவர்கள் தங்களுக்கான கட்டிடத்தை இங்கு வடிவமைக்க ஆர்வமாக முன் வந்தனர்… திறமையான இளைஞர்கள் மட்டுமே வேலையில் அமர்த்தபட்டார்கள்… பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது… அவள் கம்பெனி அவளுடைய பொறுப்பு என்று ஆதி எதிலும் தலையிடுவதில்லை… ஆனால் பின்னணியில் இருந்து அவளின் செயல் திறன்களை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தான்…

 

கிளைண்டுகளுடன் நேரடியாக பேச வேண்டும் என்ற நிலையில் மட்டுமே அவள் அலுவலகம் செல்வாள்.. அப்பொழுது குழந்தை ஆதியின் பொறுப்பில் இருக்கும்…  கட்டிட வடிவமைப்பு வேலைகள் எல்லாம் வீட்டிலேயே நடைபெறும்… 

தன்னுடன் படித்த, ஏழ்மை நிலையிலும் முன்னேற துடிக்கும்  இரண்டு நண்பர்களையும் தொழிலில் சேர்த்துக் கொண்டாள்.. 

 

வாழ்வில் எந்த குறையும் இல்லை.. ஒரே ஒரு குறை தான்… தன் கணவனின் ஆசைப்படி ஒரு பெண் குழந்தை… அவன் இதுவரை வாய்விட்டு அதை சொல்லியதில்லை… ஆனால் அது அவளுக்கு தெரியுமே…

ஆதி முன்னை விட இப்பொழுது அதிகம் ஓட வேண்டி இருந்தது… 

 

தன் மணாளனை ஏமாற்ற முடிவு எடுத்தவள்… இரண்டு மாதம் அவனை தன்னிடம் நெருங்க விடவில்லை… மூன்றாம் மாதம் மாதவிடாய் நாட்களை மாற்றி கூறினாள்… 

 

தன் அன்னை முன்னொரு நாள் கொடுத்த நாட்டு மருந்தின் சில துளிகளை பாதாம் பாலில் கலந்து மோகம் ஊற்றெடுக்க வைத்து, முத்தங்களால் அவனை வேகம் எடுக்க வைத்து, கட்டுப்படுத்த முடியாத அந்த மயக்கத்திலும் தெளிவாக அவன் தன்னை விட்டு பிரிய போகும் கண நேரத்தில்… கழுத்து செயினை பிடித்து இழுத்து மேலே போட்டுக் கொண்டவள்… தன்னை விட்டு விலகாதபடி கால்களால் லாக் செய்தாள்….

 

என்னடி பண்ற… ஐயோ விடுடி… போச்சு… போச்சு… அதற்கு மேல்  நடப்பதை அவனால் தடுக்க முடியவில்லை… அவள் தோள்களில் புதைந்து உறுமி… உயிர் நீரை வெற்றிகரமாக அவள் கருப்பைனுள் நிரப்ப வைத்தாள்…

 

இப்ப என்ன பண்றது டாக்டர் கிட்ட போலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தவனிடம்… 

 

கவலைப்படாதீங்க இது ஓவலேசன் பீரியட் இல்ல என்று பொய்கூறி சமாதானம் படுத்தினாள்… இதேபோல் பையனை இரண்டு மூன்று முறை ஏமாற்ற…

 

அதன் விளைவு…

 

பொண்டாட்டிக்கு வலிக்குதுன்னு எங்க எல்லாரையும் திட்டி ஒரு பிரயோஜனமும் இல்லை… நீ தான் கண்ட்ரோலா இருக்கணும்… மொத குழந்தைக்கு இப்பதான் ஒரு வயசு ஆகுது அதுக்குள்ள அவ ரெண்டு மாசம்… பத்தாவது மாசமே உன் வேலையை காட்டிட்ட… என்று மருத்துவர் சைலஜா ஆதியை பார்த்து கண்டபடி திட்ட… 

 

பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளை தீயாய் முறைத்தான் ஆதி… அப்பாவி போல் முழித்தாள் பெண் அவள்…

 

அவளை என்ன பாக்குற… என்ன பாரு… என்று தனது பேனாவால் ஆதியின் முகத்தை தன் பக்கம் திருப்பியவர்…. அரட்டி உருட்டினா.. அந்த பொண்ணு என்ன பண்ணும்… புருஷனோட ஆசைக்கு சரினு தான் சொல்லும்… ஒரு அப்பாவி பொண்ணு கிடைச்சா ஏமாத்தி நீ நெனச்சத அடையலாம்னு நினைக்காத… அதுவும் ட்வின்ஸ்க்கு ட்ரை பண்ணி இருக்க… என்று அவர் திட்டிக்கொண்டே போக…

 

அவரை திட்டாதிங்க டாக்டர்… ஏதோ எங்களுக்கே தெரியாம நடந்துடுச்சு… நாங்க எங்க பாப்பாவ நல்லா பாத்துக்கிறோம்… என்று அவள் அப்பாவியாய் நடிப்பை போட…

 

கேடி எப்படி எல்லாம் நடிக்கிறா பாரு… நான் தான் ஏமாந்து போய் நிக்கிறேன் இதை நான் யார் கிட்ட போய் பொலம்ப… வீட்டுக்கு வாடி உன்ன வச்சிக்கிறேன்… என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டான்..

 

இரட்டைக் கரு என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியே… 

 

இரண்டு கருவை சுமந்து கொண்டு இருப்பவளை என்ன செய்து விட முடியும்… முத்தத்தால் தண்டிப்பதை தவிர… இவருக்கும் உதடுகள் வீங்கியது தான் மிச்சம்…

 

கர்ப்ப விஷயத்தை கேட்டவர்கள் எல்லாம் ஆதியைத்தான் கழுவி ஊற்றினர்… 

 

மச்சான் ஸ்கூல் ஆரம்பிக்கிற பிராசஸ் ஆரம்பிச்சிட்ட போல… என்று கூறி ஒற்றை கண் அடித்து வயிற்றில் குத்தினான் விக்ரம்…

 

இப்பதான் வளைகாப்பு வச்ச மாதிரி இருந்தது என்ன அதுக்குள்ள அடுத்ததை ரிலீஸ் பண்றான்… நான் இன்னும் ஒண்ணுமே பண்ணாம இருக்கேனே… Its not good… நாமலும் நம்ம வேலைய இன்னைக்கே தொடங்கணும்… என்று நினைத்துக் கொண்டான் அருண்…

 

ஒரு வருஷம் கழிச்சு சொன்னது தான் அதிசயம்… நான் அஞ்சு மாசத்துல சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்… என்றார் வாசுகி. தன் மகள்-மருமகனின் அருமை பெருமை தெரிந்தவர்…

 

இந்த முறை மலரை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆதி ஒரு தெளிவு பெற்று இருந்தான்…

 

என்ன மூணு மாசம் ஆயிடுச்சு இன்னும் வாந்தி எடுக்காம இருக்கா என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க “வாஹா” என்று குளியல் அறையில் சத்தம் கேட்டது…

 

அஞ்சு மாசத்துல குழந்தை உதைக்கணுமே…

ஏழு மாசத்துல குழந்தை சுத்தி வரணுமே…

சாப்பிட்டு கொஞ்ச நேரம் நடமா இல்லனா நெஞ்சிலேயே நிக்கும்… 

 

புடவை வசதியா இருக்காது… இந்த மாதிரி மேக்சி டிரஸ் போடு என்று பருத்தி துணியில் வாங்கி கொடுத்திருந்தான்…

 

எல்லாம் தெரிந்த இந்த கணவனை விட தான் என்ன சொன்னாலும் நம்பிய அறியாமையில் இருந்த கணவனை தான் அதிகம் பிடித்தது மலருக்கு…

 

வாந்தி குமட்டல் மயக்கம் அதிகமாக இருந்தது….

 

“குறுக்கு வழில போறேன்னு சொல்லி இப்டி குறுக்கு வலியை வாங்கிகிட்டேனே” என்று புலம்பி தீர்த்தாள்….

 

பாவம் அவளால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை கையில் கைப்பிள்ளை வயிற்றில் இரு பிள்ளை.. அதிகமாய் சோர்ந்து போனாள்…

 

தன்னை ஏமாற்றிய கோபம் இருந்தாலும்… அவள் படும் அவஸ்தையை அவனால் காண முடியவில்லை… அதற்காக வலியை கைமாற்றிக் கொள்ள முடியாதே… நேத்ரனை தன் முழு பொறுப்பில் எடுத்துக் கொண்டான்…

 

உள்ளூற இருந்த பிரசவ அறை பயத்தை மறைத்துக் கொண்டு தன் மனைவியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான் முடிந்த அளவு உடலை தேற்றி விட்டான்…

 

பிரசவ அறைக்குள் ஸ்ட்ரக்சரில் கொண்டு செல்ல… இதயத்துடிப்பு எகிறிது அவனுக்கு… தன் பயத்தை அவளிடம் திணிக்க வேண்டாம் என்று எண்ணி வெளியவே நின்று கொண்டான்… சிறிது நேரத்திலேயே வீல் என்ற சத்தம் வெளியே வர… இதற்கு மேல் பொறுக்க முடியாமல்… புயல் வேகத்தில் கதவை திறந்து கொண்டு பிரசவஅறைக்குள் சென்று விட்டான்…  

 

நேத்ரனை வைத்துக்கொண்டு அனைவரும் வெளியில் காத்திருந்தனர்…

 

ஒன்னும் ஆகாது பயப்படாத… பயப்படாத…  என்று ஒரு வார்த்தையில் இருவருக்கும் சமாதானம் சொல்லி கொண்டான்….

அழகாய் பிறந்து வெளியே வந்தான் தேவ இனியன்…

 

அடுத்த குழந்தைக்காக மருத்துவர்கள் காத்திருக்க குழந்தை வெளியே வரவே இல்லை… மலர் மயங்கும் நிலைக்கு செல்லவே…

புஷ் பண்ணுங்க… ஆதி!… மேல்வயிற புஷ்பண்ணி விடு என்று சைலஜா சைகை காமிக்க… சொன்னது போல் நடுங்கிய கைகளுடன் செய்தான்… ஒன்னும் ஆகாதுடி… பயந்திராத… என்று சொல்லிக்கொண்டே அவன் அழுத்த… தன் தந்தையின் உந்துதலில்… தன் அன்னையின் கருப்பையை விட்டு வெளியே வர மனமில்லாமல் வந்து சேர்ந்தான் தேவ மித்ரன்… 

 

ஒரே மாதிரியான இரட்டையர்கள்… ஆனால் தேவ மித்ரனின் கண்கள், அன்னையை  போல தேன் நிறத்தில் இருந்தன…

 

பசிக்கு அழுத குழந்தைகளை… மலரிடம் கொடுத்து பசியாற்றக் கூறியவன்… இரு பக்க மார்பை இரு குழந்தைகளும் பற்றிக்கொள்ள… நேத்ரன் ஓடிப்போய் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டான்… “இந்த உரிமையும் என்கிட்ட இருந்து பறிச்சிட்டானுங்களா ” என்று புலம்பிய படி அமர்ந்திருந்தவனை வெறுப்பேற்றும் விதமாக …

 

மித்ரன் உதட்டை “த்தோச்” “த்தோச்” என்று.. சொட்டானிடும் சத்தம் கேட்டது…  உன் பக்கத்தை நான் பிடித்துக் கொண்டேன் பார் என்பது போல்… 

 

கடைகுட்டி பிறந்த அன்னைக்கே அவனுடன் போட்டி போட ஆரம்பித்து விட்டான் என்பது பாவம் தேவாவிற்கு தெரியவில்லை…

 

இந்த முறை ஆதி ஏமாற தயாராக இல்லை… ஃபேமிலி ப்ளான் செய்த பிறகு தான் மருத்துவமனையை விட்டு வெளியே வருவதாக முடிவு எடுத்திருந்தான்… 

 

மலரை சோதித்துக் கொண்டு இருந்த சைலஜாவிடம் இதை கூற…

 

அவளுக்கு ஏற்கனவே உடம்புல ரத்தம் இல்லை இப்பல்லாம் பண்ண முடியாது…  நீ தான் கண்ட்ரோலா இருக்கணும்… என்றார்…

 

அவளுக்கு பண்ண வேணாம் எனக்கு பண்ணனும்… இல்ல நான் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போக மாட்டேன்..  என்று அடம் பிடித்து கையை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டான்…

 

இதைக் கேட்டு அதிர்ந்து வாயில் கை வைத்தாள் மலர்…

 

எதுக்கு இப்படி மானத்தை வாங்குறீங்க தேவா என்று அவன் காதில் முணுமுணுக்க…

 

உன்ன நம்பி நான் வீட்டுக்கு வரமாட்டேன் டி… அடுத்த எட்டு மாசத்துல திரும்ப இங்க வந்து உட்கார்ந்து இருப்ப… என்றான் பல்லை கடித்த படி…

 

நான் காப்பர்-T ( தற்காலிக கருத்தடை சாதனம்), போட்டுகிறேன் தேவா… ஒரு மூணு வருஷம் கழிச்சு ஒரு பாப்பா பெத்துக்கலாம்… என்றாள்… இதைக் கேட்டவனுக்கு எங்கிருந்து வந்ததோ கோபம்… உச்சாணி கொம்பில் ஏறி அமர்ந்து.. எனக்கு ஆபரேஷன் பண்ணலன்னா இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் உன்னை ஒரு வேலையும் பார்க்க விட மாட்டேன் என்று போராட்டம் பண்ண ஆரம்பித்து விட்டான் சைலஜாவிடம்…

 

வேறு வழி இல்லாமல், ஆதிக்கு மயக்க மருந்து கொடுத்து… ஆபரேஷன் செய்யப்பட்டது…

 

கண்விழிக்கும் பொழுது மலரின் அருகில் தனி படுக்கையில் தான் இருந்தான்…

 

ஆபரேஷன் பண்ண மாதிரி தெரியலையே என்று தனது உடம்பை ஆராய… எந்த சந்தேகம் ஆனாலும்… இங்கே இருக்கிறத படிச்சு பார்த்து தெரிஞ்சுக்க சொன்னாங்க… என்று அங்கு சுவரில் ஒட்டி இருந்த குடும்ப கட்டுப்பாட்டிற்கான  நோட்டீசை காண்பித்தாள்…

 

வலி இருக்காது.. ஆபரேஷன் செய்தது போல் தெரியாது… ஒரு மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் செய்யலாம் என்று பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது…

 

ஓ… அப்போ.. ஓகே.. இட்ஸ்.. நார்மல்.. என்று தோள்களை குலுக்கி தனது வேலையை தொடர ஆரம்பித்து விட்டான்…இப்படி அவனை ஏமாற்றுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top