தாரா, கண்கலங்க அமர்ந்து இருந்தாள், இதுவரை வர்மன் மட்டுமே அவளை கொடுமை செய்தான் ஆனால், இப்பொழுது ஆர்யனும் கொடுமை செய்ய ஆரம்பித்து விட்டான் …….
இவர்கள் யார்? என்ன எதுவும் தெரியல? “அந்த பொண்ணு யாருனு first கண்டு புடிக்கணும் அப்போதா எல்லா தெரியும்” “ஆன எனக்கு ஏதுவும் ஞாபகம் வர மாட்டோங்குது” என்று நினைத்தவள் கண்களை துடைத்து விட்டு மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்தாள்…….
ஆர்யன், கிளம்பி எங்கோ வெளியே சென்றான் தாராவை, அவன் கண்டு கொள்ள கூட இல்லை …….
நேராக காரை, எடுத்துக்கொண்டு வர்மனது அலுவலகம் நோக்கி பயணத்தை தொடங்கினான்……
இங்கு மதிய சாப்பாடு நேரம் ஆகியும் இன்னும் வர்மன் வெளியே வராமல் இருக்க அவளும் சாப்பிட செல்ல வில்லை. விழியோ, அவளுக்கு அழைத்து சாப்பிட வர சொல்ல “எனக்கு வேலை இருக்கு”, “நீ மத்தவங்களோட சேர்ந்து சாப்டு” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் …..
விழியும் அங்கு இருந்த பெண்களுடன் சேர்த்து சாப்பிட சென்றாள். அனைவரும் அவளுடன் அமர்ந்து அவளை பற்றி கேட்க ஆரம்பித்தனர்……
அவளும் தன் பெயர் மட்டும் கூறி விட்டு தனக்கு யாரும் இல்லை என்று கூறி சாப்பிட தொடங்கினாள் …..
மற்றவர்களும் வேற ஏதுவும் அவளிடம் கேட்காமல் சாப்பிட தொடங்கினார்கள். அனைவரும் சகஜமாக பேச அவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்……
விழி, அருகில் அமர்ந்து இருந்த பெண்ணோ, சாப்பிடாமல் எங்கோ பார்த்து கொண்டு இருக்க விழி, அவள் பார்வை எங்கே செல்கிறது என்று பார்க்க பார்த்தவளது கண்கள் அகல விரிந்தது……
அங்கு வந்து கொண்டு இருந்த ஆர்யனை பார்த்து கொண்டு இருக்க அவனோ, அவளை பார்த்து கண்ணடிக்க விழி, அவனை முறைத்தாள்…..
அவனோ, கண்டுகொள்ளாதது போல் வர்மன் அறைக்குள் சென்றான். விழி, அருகில் அமர்ந்து இருந்தவள் “ஐயோ! என்னடி இப்படி அழகா இருக்காரு என்ன பார்த்து கண்ணு வேற அடிச்சாரு” என்று சொல்ல விழிக்கோ, புறை ஏறியது…….
வேகமாக தண்ணீர் குடித்தவள் “இல்லயே! அவரு அப்படி எல்லா ஒன்னு பண்ணல ஒனக்குதா அப்படி தோணுது” என்று விழி, சொல்ல இல்ல என்று அவள் ஏதோ சொல்ல வரவும் மொதல்ல எல்லாரும் சாப்டு முடிப்போ,! அப்றோ அவரு யாருனு கண்டு பிடிக்கலாம் என்றான் ராம்……
அப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது வேகமாக உணவை உண்ண ஆரம்பித்தாள. இங்கு வர்மன் அறைக்குள் ஆர்யன், சென்று பார்க்க அங்கு வர்மன் இல்லை விவி, அவள் இடத்தில் அமர்ந்து வர்மன் இருந்த அறையை பார்த்து கொண்டு இருக்க ஆர்யன், குரலை செரும விவி யார் என்று தெரியாமல் அவனை பார்க்க “நா வர்மன் பிரென்ட் அவன எங்க” என்று கேட்க அவள் அந்த அறை நோக்கி கையை காட்டினால்……
அவன் அந்த அறை முன்பு சென்று கதவை தட்ட திறக்கவில்லை, “வர்மா, நா ஆர்யன், கதவ திற” என்று சொல்ல கதவு திறந்தது வர்மன் வெளியே வர வில்லை ஆர்யன் உள்ளே சென்றான்……
உள்ளே சென்ற ஆரியான் வர்மனை பார்க்க கையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டு இருக்க அனைத்து பொருட்களும் உடைந்து கிடந்தது வர்மன் அருகில் சென்ற ஆர்யன், அவனை முறைத்து விட்டு முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவன் கையை சுத்தம் செய்து மருந்து தடவி கட்டு போட்டு விட்டான் …..
“என்னாச்சு என்று ஆர்யன் கேட்க எல்லா அந்த தாரா, அவளால வந்தது. எனக்கு எப்பவும் நிம்மதியே இல்ல எனக்கு வர கோபத்துக்கு அவள ….. என்று கத்தியவன் தலை கோதி தன் கோபத்தை குறைக்க ஆரம்பித்தான், ”இனி நா பொறுமையா இருக்க போறது இல்ல”, இனி யாருக்கு எந்த உண்மை தெரிஞ்சாலும் பரவா இல்ல” “இனிமேதா எல்லாருக்கும் இந்த வர்மன் யாருன்னு காட்ட பேறே…..
“அவளுக்கு தான் மொதல்ல நான் யாருனு காட்டனு இனி பாவம் பாக்குறதுக்கு வேலையே இல்ல ” என்று அவன் கத்தி கொண்டு இருக்க ஆர்யன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்…..
மீண்டும் வருவான் ………..