அத்தியாயம் 24

 

மறுநாள் அவந்திகா மிக மிக நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வளம் வந்தாள்…

 

அவளுக்கு மாறாக அதிரூபன் பதற்றத்துடனே இருந்தான்.. போதாத குறைக்கு அன்று ரேவந்த் வேறு அவனைப் பார்க்க அறைக்கே வந்து இருந்தான்…

 

கதவு தட்டும் ஓசையில் யாரென்று கதவை திறந்து பார்த்திட அங்கு ரேவந்த் நிற்பதை கண்டதும் அதிரூபனின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன..

 

சாய்வு  சோபாவில் அமர்ந்து பழச்சாறினை ரசித்து குடித்து கொண்டிருந்தாள் அவந்திகா… ரேவந்த் ஏதோ பல நாள் காதலியை பிரிந்து இருப்பது போல அதிரூபனை கண்டதும் வேகமாக அவனை நெருங்கி,

 

” காலையிலேயே என்னை பார்க்க நீ வருவேன்னு நினைச்சேன் வரவே இல்ல… என் ஃபோனையும் எடுக்கல.. அதான் நானே உன்னை பார்க்க வந்துட்டேன் …” என பேசியவாறே உள்ளே வந்தான்…

 

 அதில் அதிரூபனின் நெற்றி எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது…

 

 ஏதோ சொல்ல முற்பட்டவனது பேச்சை காதில் வாங்காது தான் பாட்டிற்கு ரூபனின் கரத்தை பிடித்து பேசி கொண்டு இருந்த ரேவந்த் அங்கு சாவகாசமாக உட்கார்ந்து இருந்த அவந்திகாவை கண்டு விட்டு பல்லை கடித்த படி  நின்றவன்,

 

” உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம இங்க இருப்பே..?? இந்த வாழ்க்கை நாங்க போட்ட பிச்சை… ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போ… நான் என் ரூப் கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும் ..!” என அவன் ஏதோ எஜமான் போல நடந்து கொள்ளவும் அவந்திகா அந்த சாய்வு நாற்காலியில் இன்னும் நன்றாக சாய்ந்து அதை ஆட்டியவாறு ரேவந்த்தை அலட்சியமாக பார்த்தவள் மெல்ல தலை சாய்த்து அதிரூபனை பார்த்தாள்…

 

அவளது செயலை முகம் சுருக்கி பார்த்த ரேவந்த் சட்டென தலை திருப்பி அதிரூபனைக் கண்டிட… அவனும் திகைப்புடன் ரேவந்த்தை தான் பார்த்து கொண்டு இருந்தான் …

 

அவந்திகா ,

 

“என்ன அதிக்குட்டி என்னை உங்க ரேவந்த் போக சொல்றாரு… நான் இங்க இருந்து போட்டுமா..??”  என‌ ஒற்றை புருவத்தை  தூக்கி கேட்டதும்   அதிரூபன்,

 

” இல்ல.. நீ இரு.. நான் அவன் கிட்ட பேசுறேன் ..” என ரேவந்த்தின் கையைப் பிடித்து சற்று தள்ளி அழைத்துச் சென்றான் ..

 அவனது நடவடிக்கையை கண்டு வியந்து போன ரேவந்த்,

 

” என்ன ரூப் அவளைப் பார்த்து நீ பயப்படுறியா..??”  என நமப் மேடியாது கேட்டதும் தலையை பிடித்தபடி அவனை பார்த்து

 அதிரூபன்,

 

” எல்லாமே நம் கை மீறி போயிடுச்சு ரே…” என்றதும் அவனை புரியாது பார்த்தவனிடம் நேத்து அவந்திகா கூறியதை அப்படியே கூற முடியாது தவித்துப் போனான் அதிரூபன்…

 

 ஏனெனில் இந்த விடயம் ரேவந்திற்கு தெரியவே கூடாது என்றும் அவனை எச்சரிக்கை விடுத்து இருந்தாள் அவந்திகா …

 

“ரூப் நீ அவளை பார்த்து பயப்படுறியானு கேட்டேன்…??” என அழுத்தமாய் கேட்டதும்,

“அது.. அப்படி இல்ல ரேவந்த்… அப்பா இங்க அனுப்பி இருக்காங்க.. கண்டிப்பா காட்ஸ் இருப்பாங்க..அவருக்கு ஏதாவது டவுட் வர மாதிரி தெரிஞ்சுதுனா தேவையில்லாத பிரச்சனை ஆயிடும்.. அதுக்காகத்தான் உன்னை போக சொல்றேன்..”  என சட்டமாக பொய்யுரைத்தவனை தலை சாய்த்து பார்த்த ரேவந்த்,

 

” நிஜமாவே அதான் காரணமா.??” என நம்ப முடியாது  மீண்டும் கேட்டதும் அதிரூபன் அசரவில்லை ,

 

“ஆமா ரேவந்த்…

என்னையும் அவந்திகாவையும் தனியா அனுப்பி இருக்காருனா கண்டிப்பா சேஃப்டிக்காக காட்ஸூம் இங்க இருப்பாங்க..நீ இங்க இருக்கிறது  தெரிஞ்சா பிரச்சனை வந்துடும் ரேவந்த்.”  என்றதும் அவன் கூற்றில் உண்மை இருப்பதால் இதழ் கடித்து யோசித்த ரேவந்த்,

 

” ஆனா.. அதுக்காக நம்ம மீட் பண்ணவே கூடாதா ..??” என ஆற்றாமையுடன் கேட்டதும் தனது பின்னந்தலையை

அழுந்த கோதிக்கொண்ட அதிரூபன்,

 

” மீட் பண்ணி அதை யாராவது பார்த்தா நீ ஏன் இங்க வந்த..??  எப்படி வந்தேன்னு கண்டிப்பா அப்பா என்னை கொவெஸ்ட்டீன் பண்ணுவாரு… நான் என்ன பதில் சொல்லணும்..??”  என அவனிடமே  திருப்பி விட அதில் சற்று யோசித்த ரேவந்த்,

 

” நீ சொல்றதும் கரெக்ட் தான்.. பெரிய பாஸ்க்கு ஏதாவது தெரிஞ்சா கண்டிப்பா பிரச்சனை ஆயிடும் ..

அதுக்காக நீ இவளை சகிச்சுக்கிட்டு இருக்கணுமா…??

ப்ச்…இங்க பாரு ..இவ எக்கேடோ கெட்டுப் போகட்டும் ..நீ எப்பவும் போல என்கிட்ட பேசு ரூப்…நீ இல்லாம என்னால இருக்க முடியல.. முடியாதுன்னு உனக்கு தெரியும் தானே ..??” என காதல் சொட்ட சொட்ட பேசியவனின் பேச்சில் சற்று திணறித்தான் போனான் அதிரூபன்…

 

உண்மையை அவனிடம் கூறவும் முடியாது மறைக்கவும் முடியாது தவித்துக் கொண்டு இருந்தவன் அருகே தனது அழுத்தமான காலடிகளுடன் அவனை நெருங்கி வந்த அவந்திகா ரேவந்த்தை தவிப்பாய் பார்ப்பது போல் பார்த்து ,

 

“என்ன ரேவந்த்  இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க ..??” என ஒன்றும் தெரியாதது போல் கேட்டதும் ரேவந்த் பல்லை கடித்துப் பார்த்தவன் விரல் நீட்டி,

 

” உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு ..இது எங்க பர்சனல் நாங்க பார்த்துக்கிறோம்..!”  என முகத்தில் அடித்தாற் போல கூறியதும் உச்சு கொட்டியவாறு அதிரூபனை நெருங்கி அவனது தோளில் கை போட்டவள்,

 

” பரவால்ல நானும் என்னோட அதி குட்டியும் வேற வேற இல்ல.. அதனால நீ எதுவா இருந்தாலும் மறைக்காம எங்க கிட்ட சொல்லலாமே ..”  என வேண்டும் என்றே அவனை வெறுப்பேற்றி பேசியதும் அவளது பேச்சும் நடவடிக்கையும் ரேவந்த்தை சற்று அதிரத்தான் செய்தது..

 

 வாயை பிளந்தவாறு அதிரூபனை பார்த்திட.. அவனும் தரையை வெறித்தவாறு இறுகிப்போய் நின்று இருந்தான்.. 

அவந்திகா ரேவந்த்தை எள்ளலாக பார்த்து,

 

” இப்ப எதுக்கு நீ அதி குட்டியை இப்படி கேள்வி கேட்கிற..??  எங்களை டிஸ்டர்ப் பண்ணாத.. ஒழுங்கா இங்க இருந்து போ..”  என்றதும் அவளை உஷ்ண மூச்சு விட்டவாறு நெருங்கிய வந்து ,

 

“உன்னை என்ன பண்றேன்னு பாருடி ..உன்னால தான் இவன் இப்படி இருக்கான் ..” என மேற்கொண்டு ஏதோ பேசி வந்து  இன்னும் அவந்திகாவை நெருங்கும் முன் அதிரூபனின் கரம் ரேவந்த்தின் மார்பில் தடுப்பனையாய் பாய்ந்து வந்தது …

 

அதில் இன்னும் திகைத்துப் போன ரேவந்த் ,

 

“ரூப் உனக்கு என்னதான்டா ஆச்சு ..??” என பல் இடுக்கில் சீறியவன்  அவந்திகாவை பார்த்து,

 

” அவனை என்னடி பண்ணி தொலைச்ச ..??? என்ன ஏதாவது சொல்லி அவனை மிரட்டுனியா..??”  என கோபமாக கேட்டதும் தலை சாய்த்து அவனை புருவங்கள் உயர்த்தி பார்த்த அவந்திகா,

 

” நான் என்ன சொல்லி மிரட்ட போறேன் ..உண்மையை தான் பேசினேன்… நீங்க மிரட்டுனீங்கன்னு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க ..எனக்கு அதெல்லாம் வராதுப்பா ..” என்றவளது பேச்சும் நடவடிக்கையும் ரேவந்த்தை மேலும் மேலும் கோபத்தை ரொம்பவும் கிளறியது…

 

“உன்னை என்ன….”  எதோ பேச வந்தவனை விழிகள் உயர்த்தி பார்த்த அதிரூபன் ,

 

“போதும் ரேவந்த்.. எதுவா இருந்தாலும் நம்ம ஆபீஸ்ல பார்த்துக்கலாம் ..” என்றதும் அவனை விழிகள் சிவக்க பார்த்த ரேவந்த்,

 

” என்னவோ நடந்திருக்கு அது மட்டும் எனக்கு தெரியுது. நான் வரேன்..”  என அவந்திக்காவை சீற்றமாய் பார்த்தவாறு அங்கே இருந்து சென்றுவிட்டான் ரேவந்த்…. 

 

அவன் சென்றதும் அதிரூபன் இப்போது அவந்திகாவை தான் சீற்றமாக பார்த்து வைத்தான்..

 

 ஆனால் அவளும் ஒன்றும் புரியாதவள் போல ,

 

“என்ன அதி குட்டி இப்ப எதுக்கு என்னை இப்படி பார்க்குறீங்க…எனக்கு‌பயமா இருக்கு..”  என அவன் தோளில் இருந்த கையை எடுக்காது கேட்டிடவும் அவளை உதறியவன் ,

 

“போதும் …” என அடிக்குரலில் கத்தி விட்டு விருட்டென அங்கிருந்து நகர்ந்து அறைக்குள் புகுந்து கதவை அடைத்து விட்டான் ..

 

ஆண்கள் இருவரது முகத்தில் இருந்த கோபத்தைக் கண்டு பரம திருப்தியானது அவந்திகாவிற்கு..

 

 எத்தனை முறை தன்னை அழ வைத்திருப்பார்கள்.. அதுவும் அவர்களது சுயநலத்திற்காக..!

 தன்னுடைய வாழ்வை கொஞ்சம் கூட இரக்கமே இன்றி சீரழித்து விட்டார்களே சும்மா விடுவேனா என்ன..! என மனதிற்குள் கணக்கிட்டு கொண்டவள் ஆசுவாசமாக நாற்காலியில் அமர்ந்து கடல் அழகை ரசிக்கலானாள்..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top