Episode 11 — எதிர்பாராத பொருத்தம்

அந்த இரவு…

Office-ல நடந்த விஷயம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு போயிருந்தார்கள்.

நிலாவும் தன்னோட routine வேலைகளை முடிச்சுட்டு தூங்கப் போயிருந்தாள்.

ஆனா…

கீர்த்திக்கு மட்டும் தூக்கம் வரவில்லை.

அவள் படுக்கையில் படுத்துக்கிட்டு phone-ஐ பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளோட மனசுக்குள் ஒரே ஒரு விஷயம்தான் ஓடிக்கொண்டிருந்தது ஆதித்யா.

அவனைப் பிடிக்கும்.

அது அவளுக்கே தெரியும்.

ஆனா இன்று நடந்த விஷயத்துக்குப் பிறகு…

அவனுக்கு முன்னாடி தன்னோட image எப்படி இருக்குமோ என்ற கவலையும் இருந்தது.

சில நேரம் phone-ஐ பார்த்தாள்.

பிறகு…

திடீரென்று ஒரு முடிவு எடுத்தாள்.

ஆதித்யாவுக்கு call பண்ணினாள்.

இரவு 10:47 Phone ring ஆனது.

ஆதித்யா call எடுத்தான்.

“Hello?”

கீர்த்தி சில seconds பேசவே இல்லை.

“Hello… Keerthi?”

“Adithya…”

அவளோட குரலில் தயக்கம்.

“நான்… ஒரு விஷயம் சொல்லணும்.”

“சொல்லுங்க.”

கீர்த்தி ஆழமா மூச்சை விட்டாள்.

“இன்னைக்கு நடந்ததுக்கு… I’m really sorry.”

ஆதித்யா அமைதியா இருந்தான்.

“நான் அந்த file-ஐ மாற்றியிருக்கக் கூடாது. என்ன கோபமோ… என்ன feeling-ோ… நான் அதை work-ல கொண்டு வந்துட்டேன்.”

ஆதித்யா மெதுவா சொன்னான்.

“சரி விடுங்க, Keerthi.”

அவளுக்கு அந்த வார்த்தை கொஞ்சம் நிம்மதி கொடுத்தது.

“Really?”

“Hmm. Mistake எல்லாரும் பண்ணலாம். But repeat ஆகக்கூடாது.”

“Repeat ஆகாது.”

சில seconds silence.

அவள் phone-ஐ காதுக்கு இன்னும் நெருக்கமாக வைத்துக்கொண்டாள்.

“நீங்க என்னை… தப்பா நினைக்க மாட்டீங்களா?”

ஆதித்யா சிரித்தான்.

“அவ்வளவு serious-ஆ எடுத்துக்காதீங்க. நாளைக்கு office-க்கு வந்ததும் normal-ஆ இருங்க.”

கீர்த்தி சின்னதா சிரித்தாள்.

“Okay…”

Call cut ஆனது.

Phone-ஐ பார்த்துக்கொண்டே கீர்த்தி சிரித்தாள்.

அவளுக்கு ஒரு நம்பிக்கை வந்தது.

“அவர் இன்னும் என்னை வெறுக்கல…”

அவளோட மனசுக்குள்…

ஆதித்யா மேல இருந்த crush இன்னும் கொஞ்சம் அதிகமானது.

மறுநாள் காலை

Office-ல ஒரு different energy.

அன்று ஒரு special function.

Company-ல annual traditional celebration.

அதனால்…

அன்று எல்லாரும் western/formal dress இல்லாமல்…

Traditional dress-ல வரணும்.

Office முழுக்க அந்த function-ஐப் பற்றி தான் பேச்சு.

யாரோ saree பற்றி பேசினாங்க…

யாரோ veshti-shirt பற்றி…

யாரோ photos எடுக்க plan பண்ணினாங்க.

கீர்த்தி மட்டும்…

வேற ஒரு விஷயத்துக்காக excited-ஆ இருந்தாள்.

நேற்று இரவு call முடிப்பதற்கு முன்னாடி அவள் casually கேட்டிருந்தாள்.

“நாளைக்கு என்ன colour dress போடப் போறீங்க?”

ஆதித்யா பெருசா யோசிக்காம,

“Blue.”

என்று சொல்லியிருந்தான்.

அவ்வளவுதான்கீர்த்திக்கு அது போதுமான தகவல்.

அந்த இரவே அவள் ஒரு அழகான blue traditional outfit-ஐ எடுத்துவைத்தாள்.

காலை…

கீர்த்தி கண்ணாடி முன்னாடி நின்றாள்.

Blue dress. Matching accessories.Hair neatly styled.

அவள் தன்னையே பார்த்து சின்னதா சிரித்தாள்.

கீர்த்தி மனசுக்குள்:

“இன்னைக்கு அவர் என்னைப் பார்த்து ஒரு தடவைனாலும்…”

அவள் அந்த thought-ஐ complete பண்ணாம சிரித்தாள்.

அதே நேரம்…

ஆதித்யா வீட்டில்…

அவனும் ready ஆகிக்கொண்டிருந்தான்.

Cupboard-ஐ திறந்தான்.

Blue shirt-ஐ பார்த்தான்.

சில seconds அதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு…

அதை எடுத்துவைக்காமல்…

வேறொரு shirt எடுத்தான்.

Simple Marron shirt.

அதுக்கு matching…

வெள்ளை வேஷ்டி.

அவன் கண்ணாடி முன்னாடி நின்றான்.

அவனுக்கே தெரியவில்லை…

ஏன் அந்த colour-ஐ எடுத்தான் என்று.

Blue-ஐ சொன்னவன்…

Marron-ஐ போட்டுக்கிட்டு கிளம்பினான்.

முதல்ல வந்தவர்களில் ஒருத்தி கீர்த்தி.

அவள் office door-ல நுழைந்ததும்…

சில colleagues அவளைப் பார்த்து,

“Wow!”

என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

Blue dress அவளுக்கு நல்லா suit ஆகியிருந்தது.

ஆனா…அவளோட பார்வை ஒரே ஒருத்தரைத் தேடியது.

ஆதித்யா.

அவன் இன்னும் வரவில்லை.

அவள் phone-ஐ பார்த்தாள்.

9:40.

9:45.

9:50.

பிறகு…

Office entrance-ல் ஒரு movement.

ஆதித்யா உள்ளே வந்தான்.

கீர்த்தியின் முகம் உடனே மலர்ந்தது.

ஆனா…

அடுத்த second…

அவளோட smile நின்றுபோனது.

ஆதித்யா…

Blue இல்ல. Maroon shirt.

அவன் சாதாரணமா உள்ளே நடந்து வந்தான்.

கீர்த்தி அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவள் போட்டிருந்த blue dress…

அவளுக்கு திடீரென்று அவ்வளவு special-ஆ தெரியவில்லை.

ஆனா ஆதித்யா அவளைப் பார்த்து,

“Good morning, Keerthi.”

என்று சிரித்தான்.

அவளும் forced smile கொடுத்தாள்.

“Good morning…”

அவளோட மனசுக்குள் மட்டும்…

“நேத்து blueன்னு சொன்னாரே…”

ஒரு சின்ன disappointment.

ஆதித்யா தன்னோட desk-க்கு போனான்.

அவன் அங்கிருந்த சில colleagues-கிட்ட பேசிக்கொண்டிருந்தான்.

அப்போதுதான்…

Office entrance மீண்டும் திறந்தது.

யாரோ உள்ளே வந்தார்கள்.

ஒரு second…

Office-ல இருந்த சில பேரோட பேச்சு நின்றது.

அவள்…பிறை நிலா.

Traditional look.

அழகான…

Maroon colour saree.

Simple jewellery.

Hair neatly styled.

அவள் உள்ளே நடந்து வந்தாள்.

அவளுக்கு தெரியாது…

அதே colour-ல…

சில அடி தூரத்தில்…

ஆதித்யா நின்றுகொண்டிருக்கிறான் என்று.

ஆதித்யாவின் பார்வை…

நிலா மேல விழுந்தது.

அவன் அப்படியே நின்றுவிட்டான்.

அதே shade-க்கு match ஆகுற Marron shirt.

ஒரு நொடிக்கு…

அவனுக்கு சுற்றி இருந்த office முழுக்க மறைந்த மாதிரி இருந்தது.

நிலாவும் அவனை பார்த்தாள்.

அவளோட பார்வை…

அவன் shirt-ல நின்றது.

பிறகு…

அவளோட saree-ஐ பார்த்தாள்.

மீண்டும் அவனைப் பார்த்தாள்.

அவளோட கண்களில் ஆச்சரியம்.

“நீங்க…”

ஆதித்யா சிரித்தான்.

“நானும் அதையே கேட்கப் போறேன்.”

நிலா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.

“நான் Marron போடணும்னு நினைச்சு போட்டேன்…”

அவள் சொல்லிக்கொண்டே நின்றுவிட்டாள்.

ஆதித்யா அவளைப் பார்த்தான்.

“நானும்…”

அவன் ஒரு second pause எடுத்தான்.

“நான் ஏன் Maroon எடுத்தேன்னு எனக்கே தெரியல.”

நிலா சிரித்தாள்.

“Same.”

அந்த ஒரு வார்த்தை…

அவர்களுக்குள்ள இருந்த அந்த awkwardness-ஐ இன்னும் இனிமையாக்கியது.

அவர்களை சுற்றி இருந்த colleagues-க்கு…

இது தவற விடக்கூடிய scene இல்லை.

ஒருத்தர் உடனே சிரித்துக்கொண்டு,

“டேய்… என்ன இது?”

இன்னொருத்தி,

“Perfect matching!”

மற்றொருவர்,

“இவங்க ரெண்டு பேரும் முன்னாடியே plan பண்ணி வந்திருக்காங்களா?”

நிலா உடனே,

“இல்ல இல்ல!”

என்று சொல்லி முகம் சிவந்தாள்.

ஆதித்யாவும் சிரித்தான்.

“No plan.”

ஒருத்தர் உடனே,

“Plan இல்லாம இவ்வளவு perfect match வருதா?”

என்று tease பண்ணினார்.

Office முழுக்க சிரிப்பு.

நிலா தலையை குனிந்துக்கொண்டாள்.

ஆதித்யா அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளோட அந்த shy smile…

அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் பார்வை அவளிடமிருந்து நகரவே இல்லை.

ஆனா…

அந்த crowd-க்கு நடுவில்…

ஒருத்தி மட்டும் சிரிக்கவில்லை.

கீர்த்தி.

அவள் முதலில் தன்னோட blue dress-ஐ பார்த்தாள்.

பிறகு…

ஆதித்யாவின் Brown shirt-ஐ பார்த்தாள்.

அதற்குப் பிறகு…

நிலாவின் Brown saree-ஐ பார்த்தாள்.

அவளோட மனசுக்குள் ஏதோ உடைந்த மாதிரி இருந்தது.

நேற்று இரவு அவன் சொன்ன colour-ஐ நம்பி…

அவள் ஆசையா blue dress தேர்ந்தெடுத்திருந்தாள்.

ஆனா…

அவன் Brown போட்டிருந்தான்.

அதுவும்…

நிலாவோட outfit-க்கு match.

அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Function ஆரம்பமானது.

Office முழுக்க traditional decorations.

Music.Photos.Games..

எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆதித்யாவும் ஒரு group photo-க்கு நிற்கும்போது…

அவனுக்கு அருகில் நிற்க வேண்டிய இடம் நிலாவுக்கு கிடைத்தது.

அவர்கள் இருவரும் அருகருகே நின்றார்கள்.

Photo எடுக்கும்போது…

நிலா சின்னதா அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளைப் பார்த்தான்.

Photographer சொன்னார்:“Smile!”

இருவரும் ஒரே நேரத்தில் சிரித்தார்கள்.

Camera click ஆனது.

அந்த photo…

அவர்களுக்குள் இன்னும் சொல்லப்படாத ஒரு உணர்வை capture பண்ணியது.

Function முடிவதற்குள்…

பல colleagues மீண்டும் அவர்களை tease பண்ண ஆரம்பித்தார்கள்.

“இந்த function-க்கு best matching couple யாருன்னு கேக்கவே வேண்டாம்!”

எல்லாரும் சிரித்தார்கள்.

நிலா உடனே,

“Couple-ஆ?”

என்று கேட்டதும்…

அவளோட முகம் முழுக்க வெட்கம்.

ஆதித்யா அவளை பார்த்தான்.

அவனுக்கும் அந்த வார்த்தை கேட்டதும் ஒரு சின்ன hesitation.

ஆனா…

அவன் அதை மறைக்க சிரித்தான்.

“Guys… enough.”

ஆனா அவனோட முகத்துல இருந்த smile…

அவனை betray பண்ணியது.

சில நிமிடங்கள் கழித்து…

நிலா தனியா ஒரு corner-ல் நின்றுகொண்டிருந்தாள்.

ஆதித்யா அவள் அருகே வந்தான்.

“நிலா…”

அவள் திரும்பினாள்.

“Hmm?”

அவன் அவளோட saree-ஐ பார்த்து சிரித்தான்.

“Actually… நல்லா இருக்கு.”

நிலா சின்னதா சிரித்தாள்.

“Thanks.”

அவள் அவனோட shirt-ஐ பார்த்தாள்.

“உங்கதும்…”

அவள் சொல்லி நிறுத்தினாள்.

ஆதித்யா புருவத்தை உயர்த்தினான்.

“என்ன?”

“நல்லா இருக்கு.”

“அப்படியா?”

“Hmm.”

ஒரு சின்ன silence.

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த பார்வையில்…

நேற்று இருந்ததைவிட…

இன்று கொஞ்சம் அதிகமான நெருக்கம் இருந்தது.

தூரத்தில்…

கீர்த்தி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் முகம் அமைதியாக இருந்தது.

ஆனா மனசுக்குள்…

ஒரே ஒரு கேள்வி.

“நான் நேத்து கேட்டப்போ Blueன்னு சொன்னவர்…

இன்னைக்கு ஏன் Maroon?”

அவளுக்கு தெரியவில்லை.

அது வெறும் coincidence.

அல்லது…

அவளுக்குத் தெரியாத ஒரு காரணமா?

ஆனால் அவள் கவனித்த இன்னொரு விஷயம் மட்டும் தெளிவாக இருந்தது.

ஆதித்யாவின் பார்வை…

இன்று முழுக்க நிலாவைத் தேடிக்கொண்டிருந்தது.

அந்த உண்மை…

கீர்த்திக்கு மிகவும் பிடிக்கவில்லை.

அதே நேரம்…

நிலாவும் தன்னோட மனசுக்குள் ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இது வெறும் coincidence தானா…?”

அவள் மீண்டும் ஆதித்யாவை பார்த்தாள்.

ஆதித்யாவும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரும் சிரித்தார்கள்.

யாருக்கும் பதில் தெரியவில்லை.

ஆனா…

அந்த நாளிலிருந்து…

அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த “just colleagues” என்ற distance…

மிகவும் மெதுவாக…

வேறொரு உணர்வாக மாற ஆரம்பித்திருந்தது.

சில பொருத்தங்கள் நாம தேடி கண்டுபிடிப்பவை…

சில பொருத்தங்கள்…

நம்மைத் தேடி வந்து நிற்பவை.

அந்த நாள்…

அப்படிப்பட்ட ஒரு பொருத்தம் அவர்களுக்காக காத்திருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top