காலை 9:15.
Office வழக்கம்போல busy-ஆ இருந்தது.
யாரோ meeting-க்கு ஓடிக்கிட்டு இருந்தாங்க…
யாரோ coffee cup-ஐ எடுத்துக்கிட்டு system முன்னாடி உட்கார்ந்திருந்தாங்க…
Keyboard சத்தம்…
Phone calls…
Printer சத்தம்…
அந்த usual office chaos-க்குள்ள…
ஒரு மாற்றம் மட்டும் இருந்தது.
ஆதித்யா. புதிய Team Lead.
அவன் conference room-லிருந்து வெளியே வந்தவுடன், தெரியாம அவனோட பார்வை office முழுக்க ஒரு round போனது.
அந்த பார்வை…
ஒரு இடத்துல வந்து நின்றது.
நிலா.
அவள் தன்னோட system முன்னாடி உட்கார்ந்து ஏதோ type பண்ணிக்கிட்டு இருந்தாள்.
Curly hair-ஐ ஒரு side-க்கு ஒதுக்கி வச்சிருந்தாள்.
அவள் concentrate பண்ணும்போது கீழ் உதட்டை லேசா கடிச்சுக்கிட்டு வேலை பார்க்குற பழக்கம் இருந்தது.
ஆதித்யா அதை கவனித்தான்.
அவனுக்கே தெரியாமல் அவன் முகத்தில் ஒரு சின்ன smile வந்தது.
அதே நேரம்…
நிலா திடீர்னு தலையை தூக்கினாள்.
அவளோட பார்வை நேராக ஆதித்யா மேல விழுந்தது.
இரண்டு பேரும் சில seconds ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருந்தாங்க.
ஆதித்யா சின்னதா smile பண்ணினான்.
நிலாவும் smile பண்ணினாள்.
ஆனா அடுத்த second…
இருவருமே ஒரே நேரத்தில் வேற பக்கம் திரும்பிட்டாங்க.
நிலா screen-ஐ பார்த்துக்கிட்டு இருந்தாலும்…
அவளோட முகத்தில் இருந்த smile போகவில்லை.
அவள் மனசுக்குள்,
“எதுக்கு இப்படி சிரிக்கிறாரு…”
என்று நினைத்துக்கொண்டே மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த entire scene-ஐ…
ஒருத்தி மட்டும் கவனிச்சிருந்தாள்.
கீர்த்தி.
அவள் ஆதித்யாவை முதல் நாளிலிருந்தே விரும்ப ஆரம்பித்திருந்தாள்.
அவன் பேசுற விதம்…
அவன் calmness…
அவன் எல்லாரிடமும் respectful-ஆ நடந்துக்குறது…
அவனோட voice…
அவன் சிரிப்பு…
எல்லாமே அவளுக்கு பிடிக்கும்.
அதுவும்…
அவன் formal shirt போட்டு sleeves-ஐ கொஞ்சம் fold பண்ணிக்கிட்டு வேலை பார்க்கும்போது…
கீர்த்திக்கு அவனைப் பார்க்காம இருக்கவே முடியாது.
ஒரு நாள் அவன் அவளிடம்,
“Good work, Keerthi.”
என்று சொன்னதையே…
அவள் அந்த நாள் முழுக்க நினைச்சுக்கிட்டு இருந்தாள்.
ஆனா இப்போ…
அவனோட அந்த பார்வை…
அவளுக்கு கிடைக்கவே இல்லை.
அது நிலாவுக்கு போய்க்கிட்டிருந்தது.
கீர்த்தியின் முகம் கொஞ்சம் இறுகியது.
கீர்த்தி மனசுக்குள்:
“இவ வந்ததுல இருந்து… எல்லாமே இவளைச் சுற்றிதான்.”
அவள் நிலாவை பார்த்தாள்.
நிலா எதுவும் தெரியாத மாதிரி வேலை பார்த்துக்கிட்டு இருந்தாள்.
10:30 AM
“நிலா…”
ஆதித்யாவின் குரல்.
நிலா உடனே திரும்பிப் பார்த்தாள்.
“Yeah?”
“இந்த client report-ஐ once check பண்ணிட்டு எனக்கு அனுப்ப முடியுமா?”
“Sure.”
அவள் எழுந்து file எடுத்தாள்.
அவள் நடந்து வரும்போது ஆதித்யா அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் அவன் desk அருகே வந்ததும்…
“இது.”
அவன் file வாங்கும்போது இருவரோட விரல்கள் லேசா touch ஆனது.
ஒரு second.
அவ்வளவுதான்.
ஆனா…
இருவரும் உடனே ஒருத்தரை ஒருத்தர் பார்த்தாங்க.
நிலா உடனே கையைப் பின்னாடி எடுத்துக்கிட்டாள்.
“Sorry…”
ஆதித்யா சிரித்தான்.
“It’s okay.”
நிலா திரும்பிப் போனாள்.
அவள் இரண்டு steps நடந்ததும்…
தெரியாம திரும்பிப் பார்த்தாள்.
ஆதித்யாவும் அதே நேரத்தில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
மீண்டும் eye contact.
இந்த முறை…
இருவரும் சிரிச்சுட்டாங்க.
கீர்த்தி அந்த scene-ஐ பார்த்ததும்…
அவளோட முகம் மாறியது.
மதியம் Lunch time.
Office cafeteria-ல சில பேர் table-ல உட்கார்ந்திருந்தாங்க.
நிலாவும் அவளோட lunch box-ஐ எடுத்துக்கிட்டு வந்தாள்.
அதே நேரம் ஆதித்யாவும் coffee cup-ஐ எடுத்துக்கிட்டு வந்தான்.
அவளுக்கு எதிரே ஒரு chair காலியா இருந்தது.
அவன் அங்கே உட்கார்ந்தான்.
“Lunch?
“Hmm.”
“Daily வீட்டுல இருந்து கொண்டு வருவீங்களா?”
“Mostly. நீங்க?”
“Office food.”
நிலா சிரித்தாள்.
“அதனாலதான் இவ்வளவு serious face-ஆ இருக்கீங்களா?”
ஆதித்யா சிரித்தான்.
“நான் serious-ஆ இருக்கேனா?”
“Konjam.”
“அப்படியா?”
அவன் intentionally serious face வைத்தான்.
நிலா அவனை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்.
அந்த சிரிப்பைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதித்யாவின் முகத்திலும் சிரிப்பு வந்தது.
சில seconds…
அவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
நிலா அதை கவனித்ததும்,
“என்ன?”
என்று கேட்டாள்.
ஆதித்யா உடனே பார்வையை மாற்றிக்கொண்டான்.
“Nothing.”
நிலா சின்னதா சிரித்தாள்.
அவள் மனசுக்குள்:
“என்னதான் பார்க்குறாரோ…”
அதே நேரம்…
அந்த cafeteria-வின் இன்னொரு பக்கத்தில் இருந்த கீர்த்தி…
இந்த scene-ஐ பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு lunch-மே இறங்கவில்லை.
மாலை 3:00
ஒரு முக்கியமான client report தயாராகி கொண்டிருந்தது.
அந்த report-ஐ prepare பண்ணுற responsibility நிலாவுக்கு கொடுக்கப்பட்டது.
அவள் முழு concentration-ல வேலை பார்த்தாள்.
Data check பண்ணினாள்.
Numbers verify பண்ணினாள்.
ஒவ்வொரு page-யும் review பண்ணினாள்.
Finally…
Report complete.
அதை team folder-ல upload பண்ணினாள்.
அவள் நிம்மதியா chair-ல சாய்ந்தாள்.
அதே நேரம்…
கீர்த்தி அந்த folder-ஐ open பண்ணினாள்.
அவள் report-ஐ பார்த்தாள்.
சில seconds அமைதியா இருந்தாள்.
அவள் முகத்தில் பொறாமை.
அவள் மெதுவாக அந்த file-ஐ open பண்ணி…
சில data-வை மாற்றினாள்.
அதுக்கப்புறம் system-ஐ lock பண்ணிவிட்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து…
Client mail வந்தது.
DATA MISMATCH.
Office முழுக்க tension.
ஆதித்யா report-ஐ open பண்ணினான்.
அவன் முகம் serious ஆனது.
ஆதித்யா: “இந்த report யார் prepare பண்ணது?”
ஒருத்தர் உடனே சொன்னார்.
“நிலா.”
அந்த வார்த்தை office-ல இருந்த சில பேரோட பார்வையை நிலா பக்கம் திருப்பியது.
நிலா அதிர்ச்சியா பார்த்தாள்.
“நான் தான்… but…”
ஒரு colleague உடனே சொன்னான்.
“நீங்க upload பண்ணதுலேயே problem இருந்திருக்கலாம்.”
இன்னொருத்தர்,
“நிலா, client reportன்னா double check பண்ணணுமே.”
நிலாவுக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.
“நான் double check பண்ணிதான் upload பண்ணேன்.”
கீர்த்தி அமைதியா நின்றிருந்தாள்.
ஆனா அவள் முகத்தில் ஒரு சின்ன satisfaction.
ஆதித்யா நிலாவை பார்த்தான்.
“Okay. Relax.”
அவன் system-ஐ open பண்ணினான்.
“First upload history பார்ப்போம்.”
அவன் timestamp check பண்ணினான்.
10:42 AM — Uploaded by Nila.
அவன் file version-ஐ open பண்ணினான்.
அதில்…
நிலா upload பண்ணிய original file சரியாக இருந்தது.
அதுக்குப் பிறகு…
ஒரு modification.
ஆதித்யா screen-ஐ பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனுடைய முகம் மெதுவாக மாறியது.
“Interesting…”
அவன் இன்னொரு detail open பண்ணினான்.
Modification செய்யப்பட்ட system details.
அவன் சுற்றி பார்த்தான்.
“இந்த file-ஐ யாரெல்லாம் access பண்ணீங்க?”
யாரும் பேசவில்லை.
கீர்த்தி மட்டும் அமைதியாக இருந்தாள்.
ஆதித்யாவின் பார்வை அவள் மேல நின்றது.
“Keerthi?”
அவள் தடுமாறினாள்.
“நான்… just open பண்ணேன்.”
“Open மட்டும் பண்ணீங்களா?”
அவன் screen-ஐ அவள் பக்கம் திருப்பினான்.
“அப்போ இந்த modification எப்படி உங்க system-லிருந்து வந்தது?”
கீர்த்தி அமைதியாகிவிட்டாள்.
Office முழுக்க silence.
நிலா மட்டும் ஆதித்யாவை பார்த்துக்கொண்டிருந்தாள்.
கீர்த்தி மெதுவாக சொன்னாள்.
“Sorry…”
ஆதித்யாவின் முகம் serious.
“Sorry சொன்னா issue முடிஞ்சிடாது, Keerthi.”
அவள் தலை குனிந்தாள்.
ஆதித்யா:
“Workplace-ல ஒருத்தரை பிடிக்கலன்னா… அவங்க மேல blame போடுறது solution கிடையாது.”
கீர்த்தி அவனை பார்த்தாள்.
அவள் கண்களில் hurt.
கீர்த்தி:
“நான்… அவளை…”
அவள் நிலாவை பார்த்தாள்.
“…எனக்கு பிடிக்கல.”
ஆதித்யா அமைதியா பார்த்தான்.
ஆதித்யா:
“அது உங்க personal feeling.”
ஒரு pause.
ஆதித்யா:
“ஆனா அதுக்காக அவளோட career-ஐ பாதிக்கிற மாதிரி நடக்கக்கூடாது.”
கீர்த்தி அமைதியாக இருந்தாள்.
ஆதித்யா இன்னும் strict ஆனான்.
ஆதித்யா:
“இன்னொரு தடவை இப்படியொரு விஷயம் நடந்தா… நான் Team Lead-ஆ இருக்குற அளவுல action எடுக்க வேண்டியிருக்கும்.”
கீர்த்தி மெதுவா தலையசைத்தாள்.
“Okay.”
அவள் அங்கிருந்து சென்றாள்.
நிலா மட்டும் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.
அவள் ஆதித்யாவை பார்த்தாள்.
நிலா:
“Thanks…”
ஆதித்யா அவளை பார்த்து சிரித்தான்.
ஆதித்யா:
“எதுக்கு?”
நிலா:
“என்னை defend பண்ணதுக்கு.”
அவன் சின்னதா சிரித்தான்.
ஆதித்யா:
“நான் உன்னை மட்டும் defend பண்ணல.”
அவள் பார்த்தாள்.
ஆதித்யா:
“Correct-ஆ இருந்தவங்களை correct-ஆ சொல்லணும். That’s it.”
நிலா சிரித்தாள்.
நிலா:
“Still… thank you.”
ஆதித்யா அவளை சில seconds பார்த்தான்.
அவள் முகத்தில் இருந்த அந்த genuine smile…
அவனுக்கு பிடித்திருந்தது.
ஆதித்யா:
“Welcome.”
நிலா திரும்பிப் போனாள்.
இரண்டு steps நடந்ததும்…
அவள் தெரியாம மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
ஆதித்யா இன்னும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் சின்னதா smile பண்ணினாள்.
அவன் அதைவிட சின்னதா smile பண்ணினான்.
மாலை 6:30
Office கொஞ்சம் காலியாக ஆரம்பித்தது.
நிலா system shutdown பண்ணிக்கிட்டு இருந்தாள்.
அவள் எழுந்ததும்…
அவளோட chair பின்னாடி இருந்த file கீழே விழுந்தது.
அவள் அதை எடுக்க குனிய…
அதே நேரம் ஆதித்யாவும் அங்கே வந்தான்.
இருவரும் ஒரே நேரத்தில் அந்த file-ஐ எடுக்க முயற்சி பண்ணினார்கள்.
மீண்டும்…
கைகள் touch.
இருவரும் freeze.
நிலா உடனே கையை எடுத்துக்கொண்டாள்.
நிலா:
“Sorry…”
ஆதித்யா சிரித்தான்.
ஆதித்யா:
“நீங்க எதுக்கெல்லாம் sorry சொல்றீங்க?”
நிலா சிரித்தாள்.
“Habit.”
ஆதித்யா:
“அதை கொஞ்சம் குறைச்சுக்கலாம்.”
நிலா:
“Okay… try பண்ணுறேன்.”
அவன் file-ஐ அவளிடம் கொடுத்தான்.
ஆதித்யா:
“Bye, Nila.”
அவள் அவனை பார்த்தாள்.
“Bye, Adithya.”
அவள் இரண்டு steps நடந்தாள்.
ஆதித்யா அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளும் office door அருகில் சென்று திரும்பிப் பார்த்தாள்.
மீண்டும் eye contact.
இந்த முறை…
யாரும் பார்வையை உடனே மாற்றவில்லை.
சில seconds…
அதுக்கப்புறம் நிலா சின்னதா சிரிச்சுட்டு வெளியே போனாள்.
ஆதித்யாவும் சிரித்துக்கொண்டே தன்னோட cabin-க்குள் சென்றான்.
Office-ல இன்னும் ஒருத்தி மட்டும் இருந்தாள்.
கீர்த்தி.
அவள் தூரத்திலிருந்து அந்த entire scene-ஐ பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆதித்யாவை அவளுக்கு பிடித்திருந்தது.
அது இப்போ வெறும் crush இல்லை.
அவனை தன்னோட பக்கம் கொண்டு வரணும் என்ற ஒரு பிடிவாதமாக மாற ஆரம்பித்திருந்தது.
நிலாவை பார்த்தாள்.
அவள் கண்களில் இருந்த பொறாமை இன்னும் ஆழமானது.
கீர்த்தி மனசுக்குள்:
“ஆதித்யா உன்னைப் பார்க்கிறாருன்னு மட்டும்… நீ அவருக்கு special ஆகிட முடியாது, நிலா.”
அவள் system-ஐ shutdown செய்தாள்.
ஆனா அவளோட மனசுக்குள்ள…
ஒரு முடிவு மட்டும் உருவாக ஆரம்பித்திருந்தது.
“அவனோட பார்வை… ஒருநாள் என்னைத் தேடணும்.”
அதே இரவு…
தன்னோட room-ல இருந்த நிலா laptop-ஐ மூடினாள்.
அவள் மனசுல இன்று நடந்த விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
Office-ல எல்லாரும் தன்னை blame பண்ணிய நேரம்…
ஆதித்யா மட்டும் facts பார்த்து தன்னை நம்பியது…
அவன் பேசுற விதம்…
அவன் சிரிப்பு…
அந்த இரண்டு மூன்று eye contacts…
அந்த accidental hand touch…
எல்லாமே நினைவுக்கு வந்தது.
அவள் தலையணையை எடுத்துக்கிட்டு முகத்துல வைத்துக்கிட்டாள்.
சின்னதா சிரித்தாள்.
நிலா மனசுக்குள்:
“என்னடா இது…”
ஒரு pause.
“அவரைப் பார்த்தாலே ஏன் இப்படி சிரிப்பு வருது?”
அவளுக்கே பதில் தெரியவில்லை.
அதே நேரம்…
ஆதித்யாவும் தன்னோட laptop-ஐ close பண்ணினான்.
அவன் phone-ஐ எடுத்தான்.
Office group messages பார்த்தான்.
பிறகு…
எதற்காகவோ…
நிலா இன்று அனுப்பியிருந்த report-ஐ மீண்டும் open பண்ணினான்.
அவன் screen-ஐ பார்த்துக்கொண்டே சின்னதா சிரித்தான்.
ஆதித்யா மனசுக்குள்:
“இவ பேசும்போது மட்டும் ஏன் நான் இவ்வளவு கவனமா கேட்கிறேன்?”
அவனுக்கும் பதில் இல்லை.
சில crush-கள் வார்த்தைகளால் ஆரம்பிக்காது…
ஒருத்தர் பேசும்போது இன்னொருத்தர் கவனமாக கேட்பதில் ஆரம்பிக்கும்.
ஒருத்தர் பார்க்கும்போது இன்னொருத்தர் தெரியாமல் சிரிப்பதில் ஆரம்பிக்கும்.
ஆனா…
அந்த சின்ன உணர்வைச் சுற்றி பொறாமை வளர ஆரம்பிச்சா…
அது ஒரு சாதாரண office crush-ஆ இருக்காது.