அத்தியாயம் : 14
தேவயானி தேமி தேமி கண்ணீர் வடிப்பதை பார்த்த ராஜகுமாரனின் மனதிற்குள் வருத்தம் ஏற்பட்டது.
அவன் தன்னுடைய பதிலுக்காக கைகட்டி கொண்டு தன்னையே ஆழ்ந்து பார்ப்பதை அழுகையின் இடையே உணர்ந்து தன்னை சிறிது அசுவாசப்படுத்தி கொண்டவள், “அதுக்கு அப்புறம்தான் அவங்க சுயரூபம் எனக்கு தெரிய வந்தது. அவங்க எப்படி வசதியானாங்கனு புரிஞ்சது. என்னையும் அவங்களை போல இருக்க சொல்லி என்கிட்ட நல்லவங்க போல ஸ்வேதா அம்மா பேசினாங்க. நான் மாட்டேனு சொன்னதும் என்னை அடிச்சாங்க. சாப்பாடு தண்ணீ கொடுக்காமல் ரூமில் அடச்சுவச்சாங்க” அதை கேட்கும்போது, தானும் இதே போல அவளை துன்புறத்தியதை நினைத்து பார்த்து ராஜகுமாரனுக்கு மனதிற்குள் உறுத்தல் ஏற்பட்டது.
“தீடிர்னு யார் யாரோ ரூம்க்குள்ள வந்து, என்கிட்ட தவறா நடந்துக்க பார்த்தாங்க. என்னால அவங்களை சமாளிக்க முடியலை. ஒருத்தர் வந்தால் ஃபிளவர்வாஷை எடுத்து மண்டையை உடைக்கலாம். ஆனால், நாலைந்து பேர் வந்ததால், பயத்தில் பாத்ரூம்க்குள்ள போய் ஒழிஞ்சிக்கிட்டேன். பாத்ரூம்க்குள்ளையே இரண்டுநாளா… பைப்பு தண்ணீயை குடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன். ஏன்னா… அவள் அவங்களோட த…வறா இருந்தாள்.
நான் அவங்க விருப்பத்துக்கு சம்மதிக்கலைனு, என் பேரன்ட்ஸை கொன்னுருவோம்னு அடுத்து மிரட்டினாங்க. அப்பத்தான் பாத்ரூம்ல இருந்த ஜன்னல் வழியாக அங்கிருந்து தப்பிச்சி என் பேரன்ட்ஸை பார்த்து விஷயத்தை சொல்லி, அவங்களை வெளிய கூட்டிட்டு வந்து, ஸ்வேதா வர்றதுக்குள்ள அவசர அவசரமாக ட்ரெயின் ஏறி மெரீனா பீச்க்கு வந்து இறங்கினோம்.
பேசிகிட்டே கொஞ்ச தூரம் நடந்து வந்தோம். அங்க சாரதாம்பாள்னு ஒரு ஆசிரமம் பார்த்தோம். அங்க அன்னதானம் கொடுத்துட்டு இருந்தாங்க. நானும் சாப்பிடாமல் இருந்து போல என் பேரன்ட்ஸும் சாப்பிடாமல் இருந்திருக்காங்க. மூனு பேரும் சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தோம்.
அப்ப… அந்த ஆசிரமத்து நிர்வாகி ஆன்டாள் மேடம் சாப்பாடு எப்படி இருந்தது. இன்னும் கொஞ்சம் சாப்பாடு வேணுமானு கேட்டாங்க. நாங்க எங்க நிலைமையை சொல்லி, தாங்கிக்க அனுமதி கேட்டோம். அவங்க அனுமதி கொடுத்ததும், அங்கத்தான் தங்கினோம்.
ஆன்டாள் மேடம், அப்பாவை கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விட்டாங்க. அங்கத்தான், அவங்க பையன் டாக்டரா இருக்காங்க. இலவசமாவும் நல்லாவும் என் பையன் ட்ரீட்மென்ட் பார்ப்பானு சொன்னாங்க.
எனக்கும் ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல ரிஷப்ஷனிஸ்ட் வேலைக்கு ரெக்கமண்ட் பண்ணாங்க. வேலைக்கு போனேன். அங்க வந்தவங்கள்ல சில பேர் என்னை ஸ்வேதானு நினைச்சி, பணம் கொடுக்கிறேன் அங்க வர்றீயா? இங்க வர்றீயானு கேட்டாங்க.
ஒரு தடவை என்னை ஸ்வேதானு நினைச்சி வலுக்கட்டாயமாக காரில் ஏத்தினாங்க. பெட்ரோல் பங்க்ல கார் நிறுத்தினப்ப… அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி, ஆசிரமம் போனேன். நடந்ததை சொல்லி அவங்ககிட்ட அழுதேன்.
நீ சென்னையில இருந்தால் உனக்கு பிரச்சனை வரும். அதனால என் தூரத்து உறவுக்காரவங்க வீட்டுக்கு உன்னை அனுப்பிவைக்கிறேன். அவங்ககிட்ட உன்னை பத்தி சொன்னேன். அவங்க ஒரு ஸ்கூல்ல ஹெட்மிஸ்டர்ஸ்ஸா இருக்காங்க. நீ படிச்ச படிப்புக்கு, உனக்கு ஸ்கூல்லையே டீச்சர் வேலை வாங்கி தர்றேனு சொல்லிருக்காங்க. அவங்களை போய் பாருன்னு என்னை அனுப்பி வச்சாங்க.
அந்த ஸ்கூல்லையே தங்கி வேலை பார்க்கிற மாதிரி ஏற்பாடு பண்ணாங்க. வேலையில ஜாயின் பண்ணத்தான் கன்னியாகுமரிக்கு வந்தேன். அப்பத்தான் நீங்க என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டிங்க…” என்று கரகரத்த குரலில் கூறி முடித்தாள்.
இறுதியில் அவனை குற்றம் சாட்டுவது போல தோன்றவும், அமைதியாக இருந்தான் ராஜகுமாரன்.
“அவ…ள் செய்த தவறுக்கு அவளை போல நான் இருக்கிறேன்ற ஒரே ஒரு காரணத்தால, எந்த தவறும் செய்யாமல் நான் தண்டனையை அனுபவிக்கிறேன். அவளை பற்றி தெரிந்தவங்க என்னை… தவறா பார்க்கிறாங்க. தவறா பேசுறாங்க. சில பேர் தவறா நடக்க பார்த்தாங்க. அவங்ககிட்ட இருந்து உயிரையும் மானத்தையும் காப்பாத்திக்க தப்பித்து ஓடி ஒளிந்து வாழ்ந்துட்டு இருந்தேன். இந்த பிரச்சனை மேற்கொண்டு என்னை தொடர கூடாதுன்னுதான் சென்னையை விட்டு போகலாம்னு கன்னியாகுமரிக்கு என்னை அந்த மேடம்தான் அனுப்பி வச்சாங்க”
“….”
“சார்… எனக்கு ஸ்வேதாவை பத்தி தெரிஞ்ச எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டேன். ப்ளீஸ் சார் என்னை விட்டிருங்க, என் பேரன்ட்ஸ் எனக்கு என்ன ஆச்சோனு பயத்துல இருப்பாங்க. நான் அவங்களை பார்க்கணும்” என்று இறுதியில் கையெடுத்துக் கும்பிட்டு அழுதவாறு கேட்டாள்.
“சாரதாம்பாள் ஆசிரமம் அட்ரஸ் உன் பேரன்ட்ஸ் எந்த கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. எல்லா டிடைல்ஸ் கொடு. அப்படியே ஸ்வேதா இருந்த வீட்டு அட்ரஸும் கொடு” என்றான் விரைப்பாக.
இவ்வளவு தூரம் நடந்த உண்மையை சொல்லிருக்கிறேன் இவருக்கு இன்னும் என்ன உண்மை தெரிய வேண்டும்? இவர் என்ன இரக்கமே இல்லாத மனிதரா? என்று அவனின் பேச்சில் எண்ணியவள், மடமடவென விபரத்தை கூறினாள். அடுத்த நொடி அறையிலிருந்து பட்டென்று வெளியேறி, கதவை சத்தமாக பூட்டி கொண்டான் ராஜகுமாரன்.
அவளிடமிருந்து நகர்ந்து வந்தாலும், அவளது குரல் அவனது செவிகளில் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்று பதட்டத்துடன் தனது அறையை நோக்கி நடந்தான். அவள் கூறிய உண்மை ராஜகுமாரனின் மனதிற்குள் ஒரு புயலை கிளப்பின. ‘அவள் செய்த தவறுக்கு எந்த தவறும் செய்யாமல் நான் தண்டனையை அனுபவிக்கிறேன்’ என்று, கண்ணீர் வழிய அவள் கூறிய வார்த்தைகள், அவள்புறம் இரக்கம் கொள்ள வைத்தது. அவள் பொய் சொல்லவில்லை என்று மனதிற்குள் தோன்றியது.
ஆனால், மறுநொடி தன்னை பிள்ளை போல வளர்த்தவன், ஸ்வேதா போன்ற கேவலமான ஒரு பெண்ணின் வலையில் சிக்கி, அவளால் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தன்னிடம் எதுவுமே சொல்லாது, தற்கொலை செய்துகொண்டான் என்று விரக்தியாக மறுகணம் எண்ணியவன், அண்ணன் தன்னிடம் உண்மையை கூறவில்லை என்ற கோபமும், அண்ணனை இழந்த வலியும் அவனது இதயத்தில் ஒரு நெருப்பு போல எறிய ஆரம்பித்தது. அதே போலத்தானே தேவயானியும் பாதிக்கப்பட்டுகிறாள் என்பதை நினைக்க மறந்தான்.
அவனுக்குள் கொழுந்துவிட்டு எரிகிற நெருப்பை அணைக்க ஒரே வழி, ஸ்வேதாவை கண்டுபிடித்து, அவளை தண்டிப்பதுதான். அதுவரை மனதை இரும்பு போல வைத்து கொள்ள வேண்டும். உண்மை அறியாது யாருக்கும் தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது என்று, தேவயானி புறம் மனம் சாய்வதை தடுக்க, தனக்கு தானே விதிகள் விதித்து கொண்டவன், உடனடியாக தனது நம்பிக்கைக்குரிய துப்பறியும் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தான்.
தேவயானி கூறிய தகவல்களை கூறிவிட்டு, “அத்தனை விபரமும் உண்மையானு நல்லா விசாரிச்சி ரிப்போர்ட் கொடுங்க” என்று, கடுமையான குரலில் கூறினான்.
அவனது குரலில் இருந்த அவசரமும் கோபமும், மறுமுனையில் இருந்தவர்களை திடுக்கிட செய்தது.
“இந்த விபரங்களை வச்சி ஸ்வேதாவை சீக்கிரம் கண்டுபிடிங்க. அவள் எங்க இருந்தாலும் என்ன பண்ணிட்டு இருந்தாலும் அவளை என்கிட்ட கூட்டிட்டு வாங்க” என்று உத்திரவிட்டான்.
அவனின் குரலில் அவளை பழிவாங்க வேண்டும் என்ற அப்பட்டமான வெறி இருந்தது. அதனை மறுபக்கத்தில் இருந்தவர்கள் புரிந்து கொண்டு, சில நொடி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்கள்.
அலைபேசியை மஞ்சத்தில் வைத்தவன், ‘ஒருவேளை ஸ்வேதா போன்ற கேவலமான பெண்ணை விரும்பியதை என்னிடம் சொல்ல வெட்கப்பட்டாயா? அதனால்தான் என்கிட்ட உனக்கு நடந்த அநியாயத்தை சொல்லவில்லையா? ஆனால், எனக்காக வெட்கப்படாமல், ஹோட்டல்ல எச்சி பாத்திரம் கழுவி என்னை ஆளாக்கி, நம்ம ராஜா டெக்ஸ்டைல்ஸ்க்கு அடுத்த ராஜாவாக்கியவனே நீதானே?’ என்று வருத்தத்துடன் எண்ணியவன், ஸ்வேதா பற்றிய தகவல்களுக்காக வெறியுடன் காத்திருந்தான்.
இரண்டு நாட்களாகிவிட்டது. ஸ்வேதாவை பற்றி ஒரு விபரமும் தெரியவில்லையே என்ற பதற்றம் அவனுள் அதிகரித்து கொண்டே சென்றது. அவளை பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும், ஒரு யுகம்போல நீண்டு செல்வதை போல உணர்ந்தவன், அலைபேசிக்கு வரும் அழைப்பு, துப்பறியும் நிறுவனத்திடமிருந்து வந்திருக்குமோ? என்ற எதிர்பார்ப்பில் அவசரமாக அலைபேசியை எடுத்து பார்த்தான். வந்த அழைப்புகள் அவனது இதயத்துடிப்பை எகிற செய்வது போல அவளை தவிர்த்து மற்ற விஷயங்களாகவே இருந்தன.
மூன்றாவது நாள் இரவு அவனது அலைபேசி ஒலித்தது. எதிர்பார்ப்புடன் அலைபேசியை எடுத்து பார்த்தான். துப்பறியும் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. உடனே மகிழ்ச்சியாக அழைப்பை ஏற்று, “ஸ்வேதாவை பற்றி தகவல் கிடைத்ததா?” என்று அவசரகுரலில் கேட்டான்.
“சார்… தேவயானி கொடுத்த தகவல்கள் அனைத்தும் உண்மைதான். அவங்க ஸ்வேதாவால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க” என்றவுடன், தேவயானியின் கண்ணீர் முகம் அவனது நினைவில் வந்தது.
“அப்புறம் தேவயானியை காணோம்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்திக்காங்க ஆண்டாள் மேடம்” என்றவுடன்,
‘போலீஸ் தேவயானியை தேடி வீட்டுக்கு வந்திருவாங்களே’ என்று அவசரமாக நினைத்தவன், “அவங்க நம்பரை எனக்கு சென்ட் பண்ணுங்க. நான் அவங்ககிட்ட பேசறேன். சரி… ஸ்வேதா பத்தி சொல்லுங்க? அவள் எங்க இருக்கானு கண்டுபிடிச்சிட்டிங்களா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.
“ஸ்வேதா அந்த வீட்டுக்கு இப்ப வர்றதே இல்லையாம் சார். அவள் உங்களுக்கு பயந்து எங்கையோ ஒழிஞ்சிட்டு இருக்கா. நிச்சியம் நீங்க அவளை தேடிட்டு இருக்கிறது அவளுக்கு தெரிஞ்சிருக்கும். உங்க அண்ணன் இறந்த அன்னையிலிருந்து அந்த வீட்டுக்கு அவள் வரவே இல்லையாம்” என்றனர் சோகமாக…
“தென்…. எப்படிதான் அவளை கண்டுபிடிக்கிறது?” என்று பல்லை கடித்தவாறு கோபமாக கேட்டான்.
“சார் இன்னும் ஒரு மாசம் எனக்கு டைம் கொடுங்க. நாங்க நிச்சியமா அந்த பெண்ணை கண்டுபிடிச்சிருவோம் இல்லைன்னா நீங்க கொடுத்த அத்தனை பணத்தையும் நான் உங்களுக்கு திரும்ப கொடுத்திடுறேன்” என்று குற்றவுணர்வுடன் மறுபக்கம் பதிலளித்ததும்,
“சீக்கிரம் கண்டுபிடிங்க. பணம் எனக்கு பிரச்சனையே இல்லை. எனக்கு அவள் உயிரோட வேணும்” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் ராஜகுமாரன்.
அவன் தன்னுடைய அறையிலிருந்து வெளியேறியதும், அவனது திடீர் வருகையும், பேச்சும் தேவயானியை மறுபடியும் சோர்வடைய வைத்தது. வழக்கம்போல பட்டென்று அவன் கதவை மூடியதும் மனதிற்குள் அதிர்ந்துவிட்டாள் தேவயானி.
‘இவ்வளவு உண்மைகளை வெளிப்படையாக கூறிய பின்பும், ஏன் இவர்… என்னை வீட்டை விட்டு அனுப்பவில்லை?’ என்ற கேள்வி, அவளுக்குள் ஒரு பயத்தை கொடுத்தது.
சற்று நேரத்திற்கு முன்பு நிதானமாக பேசிய அவன் தோரணையும், கண்களில் தெரிந்த வருத்தமும், இறுதியில் ‘நான் உன்னை நம்ப மாட்டேன்’ என்பது போல, அவன் நடந்துகொண்ட விதம், அவளை பெரும் குழப்பத்திற்கு ஆளாக்கியது.
‘இவர் அண்ணன் இறந்ததுக்கு நான் காரணமில்லைனு தெரிந்த பின்னாடி என்னை அனுப்ப வேண்டியதுதான? என்னை பிடித்து வைத்து இவர் என்ன செய்ய போகிறார்? என் எதிர்காலம் இந்த வீட்டிற்குள்ளேயே பாழாகிவிடுமா?’ என்று பயத்துடனும், கவலையுடனும் யோசித்தாள்.
எதிர்காலம் பற்றிய பயத்தைவிட, அச்சமயம் நினைவிற்கு வந்த பெற்றோரின் முகம், பெரும் எடை உடைய கல்லை தூக்கி இதயத்தின் மீது வைத்தது போன்று வலியில், மனதிற்குள் வருந்த ஆரம்பித்தாள். ‘நான் ஸ்வேதாகிட்டையோ இல்லை அவளோட பழகியவங்ககிட்டையோ, மாட்டிக்கிட்டேனு நினைச்சி பயந்துட்டு இருப்பாங்க. என்னை காணோம்னு கவலைபட்டுட்டு இருப்பாங்க. சாப்பிட்டாங்களோ என்னவோ? கண்டிப்பா தூங்கிருக்கவே மாட்டாங்க.
அப்பாவுக்கு இப்பத்தான் உடம்பு சரியாகிட்டு வருது. இந்த நிலைமையில் என்னை காணோம்னு நினைச்சி அவர் வருத்தப்பட்டால், அவர் உடம்பு தாங்குமா? அம்மா அப்பாவை பார்த்துப்பாங்களா? இல்லை என்னை தேடிட்டு அலைஞ்சிட்டு இருக்காங்களானு தெரியலையே?’ என்று நினைக்கும்போது, அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தேமி தேமி அழுக ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் அழுது வடிந்து முடித்தவள், கவலை மெதுவாக கோபமாக மாறியது. ‘இந்த நிலைமைக்கு நாங்க வர காரணம் ஸ்வேதாவும் பெரியம்மாவும்தான். அவங்க மட்டும் கிடைக்கட்டும் இரண்டு பேருக்கும் இருக்கு. அவள் கெட்டதுமில்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் சேர்த்து கெடுக்க நினைக்கிறாங்க மானம்கெட்ட ஜென்மங்கள்’ என்று அவர்களை மனதிற்குள் வசைபாடியவள், ஸ்வேதாவின் ஏமாற்று வேலைகளையும், பொய்களையும் அடுக்கடுக்காக மனதிற்குள் எண்ணி, அவளை நேரில் தாக்க முடியாத பேச்சையும், செயலையும் மனதிற்குள் நிகழ்த்தினாள்.
அடுத்த நொடி, ‘அவள்னு நினைச்சி என்னையே இந்த சித்திரவதை செய்கிறார்ன்னா, உண்மையில் ஸ்வேதா இவருக்கு கிடைத்துவிட்டால் இவர் கையாலத்தான் கண்டிப்பா அவளுக்கு முடிவு கிடைக்கும்’ என்று மறுகணம் மகிழ்ச்சியாக மனதிற்குள் எண்ணி கொண்டாள்.
ஸ்வேதா இறந்துவிட்டால், இனி ஓடி ஒளிய தேவையில்லை. செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்க தேவையில்லை நிச்சியமாக ராஜகுமாரனின் மூலமாக அவள் தண்டிக்கப்படுவாள் என்று நம்பிக்கையாக எண்ணி, இவ்வாறாக தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.
‘ஸ்வேதா இவர்கிட்ட மாட்டிக்கிட்டதும், என்னை விட்டிருவாங்க. இங்கிருந்து கன்னியாகுமரிக்கு போய் ஒரு புது வாழ்க்கை வாழணும். அப்பா அம்மாவை சந்தோஷமாக பார்த்துக்கணும். அதனால இவர் ஸ்வேதாவை பிடிக்கிற வரை, நாம கொஞ்சம் பொறுமையாக காத்திருக்கத்தான் வேணும். சோர்ந்துபோயிட கூடாது’ என்று நம்பிக்கை உணர்வுடன், தன் கைகளை இறுக்கிக் கோர்த்துக்கொண்டாள்.
அவளது உள்ளத்தில் ஒரு புதிய உறுதியும் மகிழ்ச்சியும் பிறந்தது. ஸ்வேதா அழியும் வரை இந்த சிறைவாசத்தின் வெறுமையை, பொறுமையாலும், நம்பிக்கையாலும் கடந்துவிட வேண்டும் என்று வைராக்கியமாக முடிவெடுத்தாள்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
ஒரு லைக் அண்ட் கமெண்ட்ஸ் மூலம் உங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சாய்லஷ்மி.