30 -விதி விளையாடிய விநாடி!

அத்தியாயம் : 30

கோவிலிருந்து அலுவலகத்தை வந்தவடைந்த ராஜகுமாரன், முதல்வேளையாக தேவயானிக்கு அழைத்தான். 

அவள் அழைப்பை ஏற்றதும், “ஏன் ஒழுங்கா சாப்பிட மாட்டின்கிற?” என்று சற்று கோபமான குரலில் கேட்டான்.

“அது… கல்யாணம் முடிவானதுல இருந்தே எனக்கு சாப்பாடு தூக்கம் சரியா இல்லைங்க. அதுமட்டுமில்லாம நீங்க தனியா எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்றதை நினைச்சி என்னால எதுவும் உங்களுக்கு உதவி பண்ண முடியலையேனு எனக்கு கவலையா இருக்குங்க” என்று சற்று கரகரத்த குரலில் கூறியவள், “கல்யாண பத்திரிக்கை சூப்பரா இருக்குங்க” என்று இறுதியில் சட்டென்று பேச்சை மாற்றினாள்.

“பொதுவா கடைக்கு பிட்நோட்டீஸ் நாமதான் டிசைன் பண்ணுவோம். அதுக்கு நம்மகிட்ட டீம் இருக்காங்க. அவங்களை வச்சு… நானே நம்ம கல்யாண பத்திரிக்கையை டிசைன் பண்ணி, வழக்கமா பிரிண்ட் பண்ற பிரிண்டிங் பிரஸ்ல கொடுத்து பிரிண்ட் பண்ணிட்டேன். அதான் உன்கிட்ட பத்திரிக்கை டிசைன் பத்தி கேட்க முடியலை. உனக்கு ஒன்னும் என்மேல வருத்தமில்லையே” என்று கேட்கவும்,

“அய்யோ அப்படிலாம் இல்லைங்க. எனக்கு பத்திரிக்கை ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படிலாம் என்னோட கல்யாண பத்திரிக்கை கிராண்ட்டா இருக்கும்னு, நான் கனவுல கூட நினைச்சி பார்க்கலைங்க” என்றாள் சந்தோஷமாக…

“ஓக்கே… நாளைக்கு அத்தையை அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போ. நல்லா சாப்பிடுறதுக்கும், தூங்கிறதுக்கும் டேப்லெட் கேட்டு வாங்கிக்கங்க. அப்பத்தான் நீ கல்யாணத்தப்ப பார்க்க அழகா இருப்ப. மெலிஞ்சிருந்தா பார்க்க நல்லாயிருக்காது. நானும் என் உன்னை என் பொண்டாட்டினு பெருமையா… என் ஃப்ரெண்ட்ஸ்கெல்லாம் இன்டிடியூஸ் பண்ணி வைக்க முடியும்” என்று சற்று மகிழ்ச்சியான குரலில் கூறினான்.

“சரிங்க போறேன். நீங்க வேலா வேளைக்கு சாப்பிடுறிங்களா?”

“மூணு வேலையும் சாப்பிடறேன். ஆனா, புதுசா வேலைக்கு வந்திருக்க அம்மா உன்னை மாதிரி டேஸ்ட்டா சமைக்கிறதில்லை. அதுனால  டயர்ட்டுல தட்டுல வச்சதை சாப்பிட்டு எழுந்திடுறேன். நைட்டும் டயர்ட்டுல தூங்கிடுறேன். அதனால என் வெயிட் கொஞ்சம் கூடியிருக்கும்னுதான் நினைக்கிறேன்” என்றான் தன்னை பார்த்து கொண்டே…

இப்படியாக சில நொடி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். மறுநொடி அவள் வங்கி கணக்கிற்கு ஒரு லட்சம் பணம் அனுப்பி, “கல்யாண தேவைக்கு யூஸ் பண்ணிக்க” என்று வாட்ச்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பிருந்தான்.

அவனின் அக்கறையில் மகிழ்ந்தவள் வீட்டில் விஷயத்தை கூறினாள். 

அவனின் ஒவ்வொரு செயலையும் நினைத்து மூவரும் மகிழ்ந்தனர். “கோவில்ல வச்சு கெளரவம் பார்க்காமல், என்னை மாமானு  கூப்பிட்டாரு. அப்படியே எனக்கு கண்ணுல கண்ணீரு வந்திருச்சிம்மா. அவங்க முன்னாடி காட்டிக்க கூடாதுனு அழுகையை அடக்கிகிட்டேன்” என்றார் பாஸ்கர்.

“ஆமா… எனக்கும் மாப்பிள்ளை உங்க வாய் நிறைய மாமானு…  கூப்பிட்டதும் சந்தோஷமா இருந்தது” என்று கற்பகம் சொல்லவும்,

“உங்களையும் இப்ப அத்தைனுதான் கூப்பிட்டாங்க” என்றாள் தேவயானி.

“உண்மையிலே நீ கொடுத்து வச்சவம்மா. பணம் காசை விட, அவங்க குணம் அதுக்கும் மேல. சரிம்மா… சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு போவோம்” என்றாள் கற்பகம். 

இருவரும் மாலையில் அருகில் இருந்த பெண்கள் மருத்துமனைக்கு சென்று விபரத்தை கூறி, மாத்திரைகள் வாங்கிட்டு வந்தனர். 

தான் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததை சொல்ல, ராஜகுமாரனுக்கு அழைத்து பார்த்து, அவன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், வாட்ச்ஆப் பக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

மறுநாளிலிருந்து இரண்டு பக்க வீட்டார்களும் பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்தனர். 

ராஜகுமாரனோ, செங்கல்பட்டு இருக்கும் தங்கள் பூர்வீக வீட்டிற்கு வந்து, தன் தாத்தா, அப்பா அம்மா, அண்ணன் சமாதிக்கு மாலை போட்டுவிட்டு, விளக்கேற்றிவிட்டு, அனைவருக்கும் நடுவில் ஒரு பத்திரிக்கை வைத்து, அவர்கள் சமாதி முன்பு விழுந்து கும்பிட்டு எழுந்தான். 

மறுநாள் வெங்கடேசனை அழைத்து முதலில் சொந்த பந்தங்களுக்கு பத்திரிக்கை வைத்து முடித்தான். பின்னர் தொழில் வட்டார நண்பர்களுக்கு அவர்கள் வீட்டிற்கே, சங்கர் அல்லது குமாருடன் சென்று பத்திரிக்கை வைத்து முடித்தான். அதன் பிறகு கூட படித்த, முன்னாடி வேலை பார்த்த நண்பர்களுக்கு அவனே நேரில் போய் பத்திரிக்கை கொடுத்தான். 

இறுதியாக தன் ஒவ்வொரு கடையிலும் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களின் வீட்டிற்கும் செல்ல முடியாது. நாட்கள் வேறு குறைவாக இருக்கிறது என்று யோசித்தவன், அனைவரிடமும் கடையில் இருந்த தொலைக்காட்சி மூலம்  வீடியோ காணொளியில் பேசினான். 

“உங்க எல்லாருக்கும் மேனேஜர்கிட்ட பத்திரிக்கை கொடுக்கிறேன் வாங்கிக்கங்க. மறக்காம அனைவரும் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வந்திடணும். அன்னைக்கு கடை லீவு” என்றான்.

மேலாளர் மூலம் பத்திரக்கையோடு சேர்த்து அனைவருக்கும் இனிப்புகள் நிறைந்த ஒரு பெட்டியையும் சேர்த்து வழங்கினான்.

திருமண நாள் நெருங்கி கொண்டே வந்தது. கல்யாணத்திற்கு ஜவுளி எடுப்பதற்காக பாஸ்கர் தம்பதியை அலைபேசியில் அழைத்தார் வெங்கடேசன். “நீங்க வரும்போது பாப்பாவையும் கூட்டிட்டு வாங்க இது உங்க மாப்பிள்ளையோட ஆடர்” என்றார் சற்று சிரித்தபடி.

அதனால் குமார் வாகனத்தில் வந்து அழைக்கவும், தேவயானியையும் தங்களோட அழைத்து சென்றனர் பாஸ்கர் தம்பதியினர்.

சென்னையின் பிரதான ‘ராஜா டெக்ஸ்டைல்ஸ்’ கடையின் முன்பு  வாகனம் வந்து நிற்கவும், மூவரும் கடையை பார்த்து பிரமித்து போனார்கள். “உள்ள போங்க நான் காரை நிறுத்திட்டு வாறேன்” என்றான் குமார்.

மூவரும் கடைக்குள் நுழைந்ததும், அவர்கள் வந்த விபரம் கேள்விப்பட்டு, தன் அலுவலக அறையில் இருந்து வெங்கடேசன் தம்பதியுடன் வெளியே வந்து அவர்களை அழைத்தான் ராஜகுமாரன்.  

“வாங்க சம்பந்தி வாங்கம்மா வாம்மா… தேவயானி” என்று வெங்கடேசன் அழைக்க, அவர்களை பார்த்து கையெழுத்து கும்பிட்டார் பாஸ்கர்.

அனைவரையும் அலுவலக அறைக்குள் அழைத்து சென்றான் ராஜகுமாரன்.

அங்கிருந்த ஊழியர்கள் ‘இவங்கத்தான் பொண்ணு போல. நம்ம சாரு அழகுக்கு ஏத்த ஜோடித்தான்’ என்று தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர்.

வந்தவர்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வரும்படி பணித்துவிட்டு, “நம்ம கடையில இருக்கிறதுலையே நல்ல காஸ்ட்லியான புடவைகளை எடுத்துட்டு வாங்க” என்றும் உத்தரவிட்டான்.

அவர்களுக்கு குடிக்க ரோஸ் மில்க் கொண்டு வந்து குமார் கொடுக்க, கடை ஊழியன் ஒருவன் புடவைகளை எடுத்து கொண்டு வந்தான்.

அனைத்து புடவைகளின் நிறமும் வடிவமைப்பும் கற்பகத்திற்கும், தேவயானிக்கு பிடித்துவிட, ஏனெனில் ஐந்நூறு ரூபாய்க்கே புடவை வாங்குவது அதிகம் என்று நினைப்பவர்கள் பத்து லட்சம் மதிப்புள்ள தங்க ஜரிகையால் நெய்யப்பட்ட சேலையை பார்த்ததும் பிரம்மிப்புடன் அமர்ந்திருந்தனர்.

“தேவயானி என்ன அமைதியா இருக்க எந்த சேலை பிடிச்சிருக்கு?” எனக் கேட்டான் ராஜகுமாரன்.

அவளோ, “நீங்களே எனக்கு ஒரு சேலை செலக்ட் பண்ணுங்க” என்றாள்.

“சேலை கட்ட போறவ நீ… அதான் உனக்கு பிடிச்சதை எடுத்துக்கட்டும்னு உன்னை கூட்டிட்டு வர சொன்னேன். நீ என்னென்னா..  என்னை செலக்ட் பண்ண சொல்ற?” என்று முகவாயில் கைவைத்து ராஜகுமாரன் கூற,

“நான் சேலை கட்டினாலும் பார்க்க போறவங்க நீங்கத்தான… உங்களுக்கு பிடிச்சதையே எடுத்து கொடுங்க” என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள் தேவயானி.

அவள் கூறியதை கேட்டு வெங்கடேசன் சற்று சத்தமாய் சிரித்துவிட, ராஜகுமாரனும் சிரித்து கொண்டே, ஊழியர் கொண்டு வந்த பத்து சேலையில் மூன்று சேலையை எடுத்து, மாலா, கற்பகம், மற்றும் தேவயானிக்கும் கொடுத்தான்.

சேலையின் விலையை பார்த்துவிட்டு, “குமாரு அத்தைக்கு இவ்வளவு விலையில சேலை வேணாம்ப்பா…” என்றாள் மாலா

“ஆமாங்க மாப்பிள்ளை பொண்ணுக்கு மட்டும் இந்த சேலை இருக்கட்டும். எங்களுக்கு கொஞ்சம் கம்மி விலையில சேலை எடுத்து கொடுங்க. இதை வியாபாரத்துக்கு வச்சிக்கங்க” என்றாள் சற்று தயங்கிய வண்ணம் கற்பகம்.

வெங்கடேசனோ, “அஞ்சாயிரம் ரூபா பட்டு சேலை எடுத்துட்டு வாப்பா” என்று ஊழியனிடம் உத்தரவிட்டார்.

ஐந்தாயிரம் மதிப்புள்ள பத்து சேலையில் இருந்து இரு பெண்களும் ஆளுக்கொரு இரண்டு சேலை எடுத்து கொடுத்தவன், “அத்தை ஷீலாவுக்கு ஒரு சேலை கொடுத்திருங்க. அப்படியே அவள் மாப்பிள்ளைக்கும், பசங்களுக்கு நம்ம கடையிலே போகும்போது ட்ரெஸ் எடுத்துட்டு போயிருங்க” என்றவன், “தேவயானி வா உனக்கு சுடிதார் கலெக்ஷன் பார்க்கலாம்” என்று அவளை மட்டும் அழைத்தான்.

இருவரும் மின்தூக்கியில் பெண்களுக்கான சுடிதார் பக்கத்திற்குள் நுழைந்தார்கள். 

“மேடம் சைஸ்க்கு த்ரீ பீஸ் சுடிதார் கலெக்ஷன், குவார்ட்ஸ் செட் கலெக்ஷன், லாங் அம்பர்லா கலெக்ஷன், எத்தினிங் எலெக்ஷன் எல்லாம் அபோ தவுசண்ட் மேல காட்டுங்க” என்று விற்பனை பிரதிநிதிக்கு உத்தரவிட்டான்.

அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து காட்ட ஒவ்வொரு பிரிவிலும் தனக்கு தோன்றிய உடைகளை எடுத்து தனியாக வைத்தான். அதுவே ஒரு ஐம்பது உடைகள் மேல் வந்துவிட்டது. “எதுக்குங்க இவ்வளவு ட்ரெஸ்” என்று தேவயானி கேட்க,

“நாம எங்கையாவது போகும்போது உனக்கு போடுறதுக்கு தேவைப்படும்” என்றான். 

அதே போல இதர உள்ளாடை பிரிவிலும் விலை கூடுனதில் பார்த்து எடுத்து கொடுத்தான். அதே போல டிசைனர் சேலை பிரிவிலும் ஒரு இருபது சேலையும், நார்மலாக வீட்டிற்கு அணிவதில் ஒரு ஐம்பது சேலையும் எடுத்துவிட்டு, “இதுல ஒரு இருபது சேரீயை அத்தைகிட்ட கொடுத்திரு” என்றவன், “உன் அளவு ப்ளவுஸ் கொண்டு வந்திருக்கில்ல” என்று தேவயானியிடம் கேட்டவன், அவள் ‘ஆமாம்’ என்பது போல தலையாட்டவும்,

அங்குள்ள விற்பனை பிரதிநிதியிடம், அவளுக்கு எடுத்த முப்பது சேலைகளை தனியாக எடுத்து கொடுத்துவிட்டு, “இந்த சேலைகளை தவிர்த்து மற்றதெல்லாம் கீழ கொண்டு வந்திருங்க. சேலையை ஓரம் அடிச்சி ப்ளவுஸ் தைக்க கொடுத்திருங்க. அளவு ப்ளவுஸ் கீழ வந்து என் கேபின்ல வாங்கிங்க. ப்ளவுஸ் எல்லாம் ந்யூ மாடல்ல தைக்க சொல்லுங்க. பட் நெக்கும், பேக் டிசைனும், ரொம்ப லோவா தைக்க வேண்டாம்” என்றான் இறுதியில் கண்டிப்புடன்…

அதன் பின்னர் பாஸ்கருக்கும், வெங்கடேசனுக்கும் அவர்கள் அளவு சட்டையை போனில் கேட்டு, பட்டிலே… சட்டை வேட்டி எடுத்துவிட்டு, அவளுடன் மின்தூக்கிக்குள் நுழைந்தான். 

கதவு பூட்டி கொண்டதும்… “லிஃப்ட்டுல கேமரா இருக்கு. இல்லன்னா உனக்கு ஒரு கிஸ் கொடுக்கலாம்னு போல தோணுது” என்று மெல்லிய குரலில் அவளை பார்த்து லஜ்ஜையோடு முணுமுணுத்தான் ராஜகுமாரன்.

அவனது வார்த்தை கேட்டதும் அடுத்த நொடி, அவளது அடிவயிறு வரை ஏதோ மின்சாரம் பாய்வதை போலிருக்க, இதயம் மட்டும் எக்குதப்பாய் துடிக்க, வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

கதவு திறக்க போகும் சத்தம் கேட்டு முன்னே சென்றவனின்,  நடையிலும், உடையிலும் மயங்கியவளாக பின் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவர்களது பின்னால் ஐந்து பையில் சுடிதார் உடைகளை அடுக்கி கொண்டு விற்பனை பிரதிநிதி வரவும், கற்பகத்தின் சேலையில், அவளது அளவு ஜாக்கெட்டையும், தேவயானி பட்டு சேலையில், அவளது அளவு ஜாக்கெட்டையும் வைத்துவிட்டு, “இதுதான் மேடத்தோட அளவு ப்ளவுஸ். இந்த அளவு வச்சி, கல்யாண சேலையிள்ள உள்ள ப்ளவுஸ் தைக்க சொல்லுங்க.  ஆரிவொர்க் பண்ணி கிராண்ட்டா இருக்கணும். டிசைனர் சேலைக்கும், ஒரு முப்பது சேலையும் தனியா கொடுத்தேன்ல அதற்கும் மேடம் அளவு ப்ளவுஸ் வச்சு தைக்க சொல்லுங்க. 

இது மேடத்தோட அம்மா ப்ளவுஸ். இந்த அளவுக்கு இந்த கல்யாண சேலையும், ஒரு இருபது சேலை தனியா கொடுத்தேன்ல அதற்கும் இந்த அளவு வைச்சு ப்ளவுஸ் தைக்க சொல்லுங்க.

நாளைக்குள்ள எல்லா சேலையையும் ஓரம் அடிச்சி, ப்ளவுஸ் தைச்சி வாங்கி, என் கேபின்ல கொண்டு வந்து வச்சிருக்கங்க” என்று கூறி அந்த விற்பனைப்பிரதிநிதியை அனுப்பி வைத்தான்.

“அடுத்து தாலி எடுக்க போவோமா?” என்று வெங்கடேசன் கேட்கவும், அனைவரும் எழுந்தார்கள்.

குமாரும், ராஜகுமாரனும் வாகனத்தை வாகன நிறுத்துமிடத்தில் இருந்து எடுத்து வெளியில் வந்தார்கள். “வா தேவயானி இங்க வந்து உட்காரு” என்று அவளை அழைத்தான் ராஜகுமாரன். 

அதனால் அவனுக்கு எதிரா இருந்த இருக்கையில் அவள் அமர்ந்து கொள்ள, வெங்கடேசன் தம்பதி பின்னால் அமர்ந்து கொண்டார்கள். குமாருடன் பாஸ்கர் தம்பதி அமர்ந்து கொண்டனர்.

இரண்டு வாகனமும் நேராக ஜிஆர்டி நகை மாளிகையின் முன்னால் வந்து நின்றது. குமாரும், ராஜகுமாரனும் வாகனத்தை நிறுத்துவிட்டு வரவும், அனைவரும் உள்ளே சென்றார்கள்.

“முதலில் நல்ல நேரம் முடியுதுக்குள்ள தாலி வாங்கிடலாம்ப்பா” என்று நினைவு வந்தவராக வெங்கடேசன் கூறவும், 

தாலி விற்பனை பகுதிக்கு சென்றனர். ஒரு பவுனில் சொக்கர் மீனாட்சி தாலியை வாங்கினார்கள். அதனோடு தலையில் மாட்டும் பட்டம் அங்கையே இருவருக்கும் வாங்கினார்கள்.

பின்னர் வைர பகுதிக்கு அவர்களை அழைத்து சென்றவன், நெற்றிசுட்டில் இருந்து இடுப்பில் அணியும் ஒட்டியாணம் வரை, தேவயானிக்கு பார்த்து… பார்த்து எடுத்தான் ராஜகுமாரன். 

அதை பார்த்து கொண்டிருந்த தேவயானியின் பெற்றோருக்கு சொல்லாலென மகிழ்ச்சி மனதிற்குள் பொங்கி வழிந்தது. 

“இந்த கலெக்ஷனை தாலி கட்டுறப்ப போட்டுக்க” என்று தேவயானியிடம் கூறியவன்,

அவனுக்கான வைர நகைகளை தேர்ந்தெடுத்து கொண்டான்.

பின்னர், தங்க நகை பிரிவுக்கு அவர்களை அழைத்து சென்றவன், வைரத்தில் வாங்கியது போல நெற்றிசுட்டில் இருந்து இடுப்பில் அணியும் ஒட்டியாணம் வரை நேர்ந்தெடுத்துவிட்டு, “இந்த கலெக்ஷனை கல்யாணத்துக்கு முந்திய நாள் நைட்டு போட்டுக்க” என்றான்.

பின்னர் வீட்டில் இருக்கும்போது அணியுற, சில தங்க நகைகளை அவளுக்கு வாங்கியவன், கற்பகத்தின் கழுத்தில் நகை இல்லாது இருப்பதை பார்த்துவிட்டு, அவளுக்கும் நகைகள் எடுத்தான்.

“அய்யோ எனக்கு நகை வேண்டாம் மாப்பிள்ளை” என்று தயங்கி கொண்டே கற்பகம் கூற,

“கல்யாணத்தப்ப போட்டுக்க நகை இல்லாம என்ன பண்ணுவிங்க? என் அப்பா அம்மாவுக்கு வாங்கி கொடுக்கிறதா தான் நான் நினைக்கிறேன் அதனால நீங்க இரண்டு பேரும் அவங்ககிட்ட உங்க கையை நீட்டுங்க” என்று மோதிரம் பகுதியில் அமர்ந்திருக்கும் போது கூறினான். 

எல்லா நகைக்கும் பணத்தை கொடுத்துவிட்டு, கல்யாண கலெக்ஷன் தவிர, மற்ற நகைகளை தேவயானியிடம் கொடுத்தான்.  “இதுல இருக்கிற உன் நகையை வீட்டுக்கு போனதும் போட்டுக்க.” என்று கூறினான்.

“சரிங்க” என்றவள் அதனை ஆசையாக பெற்று கொண்டாள் தேவயானி.  தங்க நகையை அணியும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவன் காட்டும் அன்பில் மனம் நிறைந்து போனாள் தேவயானி.

இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன் 

சாய்லஷ்மி.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top