அத்தியாயம் 18
நேத்ராவினது கையை அலங்கரித்திருந்தது தேவகி கொண்டு வந்திருந்த மருதாணி.
அதைப் பார்த்ததும் அவளது கண்களிலும் சரி முகத்திலும் சரி அளவற்ற மகிழ்ச்சி மாத்திரம் தான்.
அக்ஷரன் வாங்கிக் கொடுத்திருந்த வளையல் வேறு அக்கரத்தில் குடிக் கொண்டிருந்தது.
“ரொம்ப அழகா இருக்கு கண்ணு”
தேவகி வேறு சுற்றி போட்டார்.
அழகாகப் புன்னகைத்தாள் நேத்ரா.
அக்ஷரன் எதுவும் பேசவில்லை ஆனால் பார்வை அவளை சுற்றியே தான் இருந்தது.
அது உடையவளுக்குப் புரியவில்லை என்றாலும் அவனது பெற்றோருக்கு நன்றாகவே புரிந்தது.
மனதிலோ மட்டற்ற மகிழ்ச்சி மகனதும்,மருமகளதும் வாழ்க்கை சீரானதை எண்ணி.
“சரிப்பா நா சமைக்குறேன்.. உனக்கு என்ன வேணும் கண்ணு”
கையை நுகர்ந்துக் கொண்டிருந்த நேத்ராவினது தலையை வருடி விட்டப்படி கேட்டார் தேவகி.
“எனக்கு உங்க கையால மசால தோச சுட்டு தாங்க அதோட காரசட்னி”
உரிமையாகவேக் கேட்டாள் மருமகள்.
“ம்ம் சரிடா… உனக்கு என்னப்பா வேணும்..”
அங்கு ஒரு கண்ணை நேத்ரா மீதும் மறறு கண்ணை தனது மொபைலிலும் பதித்திருந்தவனிடம் வினவ.
“எனக்கும் மசால் தோச செய்ங்கம்மா”
அவனும் கூற அனைவருக்கும் சமைக்க சமையல்க்கட்டிற்குச் சென்றார் தேவகி.
“மாமா வந்த களைப்பா இருக்கும் நீங்க அந்த ரூம்ல ஓய்வெடுங்க”
ஞானவேலிடம் கூற அவரும் தலையசைத்துக் கொண்டே எழுந்து சென்றார் மற்றைய அறைக்கு.
பின் நேத்ரா சமையலறைக்குள் நுழைந்தாள்.
அங்கு தேவகி தோசைக்கு மா கரைத்துக் கொண்டிருக்க அவருக்குப் பக்கத்தில் போய் நின்றவள்.
“அத்த ரொம்ப நன்றி எனக்காக மருதாணி கொண்டு வந்து கொடுத்ததுக்கு”
அவள் கையை ஆட்டிக் கொண்டுக் கூற அவரை புன்னகை முகமாகப் பார்த்தவர்.
“அந்த நன்றிய நீ உன்னோட புருஷனுக்குத் தான் சொல்லனும்”
அவர் கூற நேத்ரா விழித்தாள்.
“என்ன கண்ணு அப்பிடி பாக்குற உனக்கு மருதாணி கொண்டு வர சொன்னது உன்னோட புருஷன் தான்”
அவளது அத்தை அவ்வாறு கூற இவள் திகைத்தாள்.
“அவ.. அவங்களா”
திகைப்பு மாறாமல் கேட்டாள்
“ஆமாடா எனக்கு ஃபோன் போட்டு சொன்னான் இங்க எங்கயும் அப்பிடி இல்லையாம்.. அதான் கொண்டு வர சொன்னான்”
அவர் மாவைக் கரைத்துக் கொண்டுக் கூற இவளது இதயத்திலோ சொல்லில் அடங்கா உணர்வொன்று மோதியது.
“எனக்காகவா”
அவளது மனம் அதையே கேட்டது.
நம்ப முடியவில்லை அதற்கென நம்பாமலும் இருக்க முடியவில்லை.
எப்பொழுது அறைக்குள் வந்தாள் எனத் தெரியவில்லை.
அவன் அறையில் வீற்றிருக்கும் ஸோபாவில் அமர்ந்து ஏதோ கோப்பு ஒன்றைப் பிரட்டிக் கொண்டிருக்க அவனுக்கு முன்னால் வந்து நின்றாள் நேத்ரா.
தனது முன்னால் வந்து நின்றிருப்பவளை விழி உயர்த்தி பார்த்து விட்டு மீண்டும் கோப்புக்குள் தன்னை புகுத்திக் கொண்டாள்.
“உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்”
துப்பட்டாவின் நுனியை திருகிக் கொண்டு மெதுவான குரலில் அவள் கூற.
“ என்ன”
பதில் மட்டும் தான் வந்தது தலை நிமிர்த்தி அவளைப் பார்க்கவில்லை அக்ஷரன்.
“நீங்களா அத்தைக்கிட்ட சொன்னது மருதாணி கொண்டு வர சொல்லி”
எப்படியோ கேட்டு விட்டு பதிலுக்காக அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவனோ நிதானமாக தலை நிமிர்த்தி அவளைப் பார்த்து விட்டு.
“ஆமா நான் தான் கொண்டு வர சொன்னேன்”
கூறினான்.
அவளறியாமல் மனதோரம் ஏதோ ஒரு குறுகுறுப்பு,சந்தோஷம்.
“எனக்காகவா”
அவனிடம் கேட்க.
அவளைப் பார்த்துக் கொண்டே மறுப்பாகத் தலையசைத்தான் அவன்.
முகம் சுருங்கிப் போனது.
“என்னோட ஃப்ரன்ட் ஒருத்தன்ட வைஃப்க்காக அவன் சொன்னான் அதுக்காகத் தான் அம்மாகிட்ட கொண்டு வர சொன்னேன்”
அவன் கூறுவதில் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.
“ஓஹ்.. அப்போ நா அவசரப்பட்டு வெச்சிட்டேனே இப்போ உங்க ஃப்ரன்ட் கேட்டாங்கன்னா என்ன சொல்விங்க”
அப்பாவியாக அவள் கேட்க கீழுதட்டை பற்களால் கடித்துக் கொண்டு யோசனையாக அவளைப் பார்த்தவன்.
“நா சமாளிச்சுக்குறேன்”
அவன் கூற தலையை ஆட்டி விட்டு வரும் போது இருந்த உற்சாகம் மொத்தமாக தீர்ந்திருக்க சோகமாக அறையை விட்டு சென்றாள் நேத்ரா.
போகும் அவளது முதுகையை வெறித்துப் பார்த்தன அவனது விழிகள் ஆனால் இதழோ வலது பக்கமாக வளைந்திருந்தது.
புன்னகைத்தானா??
பதில் அவனிடம் தான் ..!!
***
சாப்பாட்டு மேசையில் மகனும் மருமகளும் ஆசையாகக் கேட்ட மசால தோசையை தனது கணவருக்கும் சேர்த்து பரிமாறினார் தேவகி.
“ஐயோ அத்த நீங்களும் சாப்டுங்க”
நேத்ரா எவ்வளவு கூறியும் மறுத்து விட்டார்.
“உங்க ரெண்டு பேருக்கு என் கையால விருந்து வைக்கனும்ன்னு ஆச ஆனா அது தான் நடக்கல்ல ஆனா இப்போ என் கையால பரிமாறேன்”
அவன் கூறி விட்டு இன்னும் ஒரு தோசையை அக்ஷரனதும் நேத்ராவினதும் தட்டில் போட்டார்.
“அதுக்கென்ன மதியானத்துக்கு விருந்து வெச்சிடலாம்”
கூறியது ஞானவேல் தான்.
“ஆமாங்க கறி சோறு சமைச்சு இன்னும் கோழி குருமா மீன் வறுவல் வேற”
தேவகி அடுக்கிக் கொண்டேப் போக நேத்ரா புன்னகைத்தாள்.
அக்ஷரனோ அதுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்ற ரீதியில் தாயின் கைப்பக்குவத்தில் தட்டில் வீற்றிருக்கும் தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“ம்ம்மா இன்னுமொன்னு”
உரிமையாக தாயிடம் கேட்டு வேறு சாப்பிட்டான்.
நேத்ராவோ சாப்பிடும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இவங்களுக்கும் மசாலா தோச ரொம்ப புடிக்குமோ.. நல்லா சாப்ட்றாங்க.. இவங்களுக்கு வேற என்ன புடிக்கும்.. ம்ம் அத்த கிட்ட கேட்டுக்கலாம்”
மனதோடு அவள் பேச.
“அவங்களுக்கு என்ன புடிச்சா உனக்கு என்ன”
மனசாட்சி கேள்வி கேட்க அதற்கு பதில் தெரியாததால் அமைதியாக சாப்பிட்டாள் நேத்ரா.
பதில் தெரியாப் பல கேள்விகளுக்கு மௌனம் அல்லவா பதில்..!!
“ம்ம்மா எனக்கு ஒரு வேல இருக்கு நா போய்ட்டு வாரேன்”
சாப்பிட்டு விட்டு கழுவிய கையை துண்டில் துடைத்துக் கொண்டு தனது தாயிடம் கூற.
“இன்னும் என்னடா என்கிட்ட சொல்லிக்கிட்டிருக்க அதான் உன் பொண்டாட்டி இருக்காள்ல அவகிட்ட சொல்லிட்டு போ”
மருமகளுக்கான உரிமையை அங்கும் நிலை நாட்டினார் அத்தை எனும் முறையில்.
அக்ஷரனோ அங்கு நின்று அவனையும் தேவகியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கும் நேத்ராவைப் பார்க்க அவளுக்கும் என்ன செய்வதென்றுத் தெரியவில்லை.
அவளிடம் விழிகளாலே கூறிக் கொண்டு விடைபெற இவளும் விழிகளாலே பதில் அளித்தாள் அவனுக்கு..!!
தேவகி அதைப் பார்த்து மௌனமாக புன்னகைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அத்தையுடன் வளவளத்துக் கொண்டே இருந்தாள் நேத்ரா.
அத்தனையிலும் அவளறியாமல் அக்ஷரனது பெயர் அடிபட்டது.
‘அவர் மொபைல் கொண்டு வந்து கொடுத்தாரு’
‘அவர் வளையல் வாங்கி கொடுத்தாரு’
‘அதோட நெறைய துணிமணி வாங்கிக் கொடுத்தாரு’
‘எனக்கு விருப்பமான கலருல சாரி வாங்கி கொடுத்தாரு’
அனைத்திலும் அவர் அவர் என அக்ஷரன் தான்.
அவள் கதைப்பதை புன்னகை முகமாகக் கேட்டுக் கொண்டிருந்த தேவகியோ நேத்ராவினது கன்னத்தை வருடி விட்டுக் கொண்டே.
“அவன் உன்ன ரொம்ப நல்லா பார்த்துக்குறான்ல அதுவே போதும்”
நேத்ரா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கும் தாயில்லாத புள்ளைய நல்லா பார்த்துக்குறேனா இல்லையான்னு உன்ன அந்த மருதுக்கு கட்டிக் கொடுக்கோம்ன்னு அவரு சொன்னப்போ கூட முழுமனசா சம்மதிக்க முடியல ஆனாலும் உன்னோட வாழ்க்க நல்லா இருக்கனும் நீ எங்க பக்கத்துலயே இருப்பங்குற ஆசைல ஒத்துக்கிட்டேன்.. ஆனா என்னோட மகன் உன் கழுத்துல தாலி கட்டவும் மனசுக்குள்ள அப்பிடி ஒரு நிறைவு அத நிம்மதின்னு கூட சொல்லலாம்.. உன்ன சரியான இடத்துல தான் ஒப்படச்சிருக்கோம்ன்னு இப்போ அவன் உன்ன பார்த்துக்குறத வெச்சி இன்னும் நம்பிக்க அதிகமாச்சு நீ நல்லா இருப்ப அவன் உன்ன நல்லா பார்த்துப்பான்னு”
தேவகி கண்கலங்க நேத்ராவிடம் கூற நேத்ராவோ இதழ் கடித்து அழுகையை கட்டுப்படுத்தினாள்.
“இல்ல இல்ல இது நிரந்தரமில்ல நாங்க அடுத்த வருஷம் பிரிஞ்சிடுவோம்”
மனம் ஓலமிட அதை வெளியே சொல்லாமல் இல்லை சொல்ல முடியாமல் தேவகியின் மடியில் படுத்துக் கொள்ள அவரோ தனது மருமகள் உணர்ச்சி வசப்பட்டுள்ளாள் என எண்ணி தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்தார்.
சிறிது நேரம் அவ்வாறு தேவகியின் மடியில் தலை சாய்த்திருந்தாள் நேத்ரா.
“அத்த நீங்க என்னைய பார்த்துக்குற போல சத்தியமா என்னோட அம்மா உயிரோட இருந்திருந்தா பார்த்துக்கிட்டு இருப்பாங்களோ என்னவோ தெரியல உங்களுக்கு பொண்ணு ஒருத்தி இருந்தா எப்பிடி பார்த்திப்பிங்களோ அத விட ஆயிரம் மடங்கு பாசமா என்னைய பார்த்துக்குறிங்க.. நா ஒரு நாள் கூட என்னோட அம்மா உயிரோட இல்லையேன்னு வருத்தப்பட்டதே இல்ல உண்மைய சொல்லனும்ன்னா நீங்க அப்பிடி நினைக்கக்கூட விட்டதில்ல.. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்.. நா உங்கள வெறும் வாய் வார்த்தையா மட்டும் தான் அத்தன்னு கூப்ட்றேன் அதுவும் அவங்க சின்ன வயசுல சொன்னதுல இருந்து தானே அப்பிடி கூப்ட்றேன் ஆனா நீங்க அப்போல இருந்து இப்போ வரைக்கும் ம்ஹூம் இல்ல எப்பவும் என்னோட மனசுல அம்மா தான்”
அவள் கூற தேவகியோ புன்னகைத்தார்.
“அவன் அந்த நேரத்துல அப்பிடி கூப்ட சொன்னதும் ஒரு வகைல நல்லது தான்ல இன்னைக்கு நா உனக்கு அத்த நீ எனக்கு மருமக..”
“ஆமா அத்த”
அவளது வாய் கூறினாலும்.
“அவங்களோட அம்மாவ யாருகூடவும் பங்கு போட்டுக்க முடியாதுங்குறதால தானே என்ன அப்பிடி கூப்ட சொன்னாங்க”
மனதால் நினைத்துக் கொண்டாள்.
கதவு தட்டப்படும் சத்தத்தில் நேத்ரா எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே தேவிப்பிரியா தான் நின்று கொண்டிருந்தாள் கையில் கிண்ணத்துடன்.
“இன்னைக்கு ஸ்பெஷலா பால்கோவா செஞ்சிருக்கேன் எப்பிடியிருக்குன்னு சாப்ட்டு பார்த்து சொல்லு”
கையில் இருந்த கிண்ணத்தை நேத்ராவின் கையில் திணித்து விட்டு உரிமையாகவே உள்ளே வந்தாள்.
தேவகி தேவிப்பிரியாவைக் கேள்வியாகப் பார்க்க தேவிப்பிரியாவும் தேவகியை அதே பார்வைப் பார்த்தாள்.
“இவங்க என்னோட அத்த அவரோட அம்மா இவ தேவிப்பிரியா என்னோட புது ஃப்ரன்ட்”
இருவரையும் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள் நேத்ரா.
“ஓஹ்.. வணக்கம் ஆன்ட்டி”
அவள் வணக்கம் வைக்க தேவகியும் புன்னகைத்தார்
“வணக்கம்மா மாசமா இருக்கியா”
அவளது மேடிற்ற வயிறைப் பார்த்துக் கேட்க.
“ஆமா ஆன்ட்டி அஞ்சு மாசம்”
புன்னகைத்துக் கொண்டுக் கூற தேவகியும் புன்னகைத்தார்.
“பால்கோவா செஞ்சிருக்கேன் எப்பிடி இருக்குன்னு சாப்ட்டு பார்த்து சொல்லுங்க”
நேத்ராவின் கையில் இருந்ததை வாங்கி தேவகியிடம் நீட்ட அவரும் அதை சுவைத்தார்.
“ம்ம் ரொம்ப நல்லா இருக்குடா”
தேவிப்பிரியா புன்னகைத்தாள்.
ஞானவேல் அறையிலிருந்து வெளியே வந்தார்.
“இவரு மாமா அவரோட அப்பா”
ஞானவேலிடம் திரும்பியவள்.
“மாமா இவங்க முன்வீட்ல தங்கியிருக்குறவங்க பேரு தேவிப்பிரியா”
ஞானவேலிடம் அறிமுகப்படுத்த சிறு புன்னகை மாத்திரமே அவரிடம்.
தேவிப்பிரியாவும் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
சிறிது நேரம் தேவிப்பிரியா அங்கிருந்து விட்டுச் சென்றாள்.
*********
“ப்ளீஸ் நா உன்ன ரொம்ப லவ் பன்றேன் புரிஞ்சிக்க ப்ளீஸ்”
சாலை என்றும் பாராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள் ஶ்ரீஜா.
அக்ஷரனது முகத்திலோ அப்பட்டமான எரிச்சல் வழிய
“வழி விட்றியா”
பற்களைக் கடித்துக் கொண்டு அவன் கூற கண்ணீர் மல்க அவனைப் பார்த்தாள் ஶ்ரீஜா.
“உன்னோட குழந்த என் வயித்துல வளருது அதுக்கு என்ன பதில் சொல்லப் போற”
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் கேட்க அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“அப்பிடியா அப்போ வா ஹாஸ்பிட்டல் போலாம் பேபியோட கன்டிஷன் எப்பிடி இருக்குன்னு பாக்கலாம்”
சட்டென அவனது முகத்திலும் குரலிலும் இருந்த கனிவு ஶ்ரீஜாவினது அழுகையை அப்படியே நிறுத்தியது.
“உண்மையாவா”
அவள் கேட்க.
“உன்கிட்ட பொய் சொல்வேனா நீ தான் என் லவ்வராச்சே”
அவன் இதழை இடது பக்கமாக வளைத்துக் கொண்டுக் கூற ஶ்ரீஜாவினது இதழோ விரிந்தது புன்னகையால்..!!!!
******
தொடரும்..❤
ஸ்டோரி எப்பிடி போகுதுன்னு சொல்லுங்க தங்கம்ஸ்.. போரிங்கா…🙄
💜அஷு💜