அத்தியாயம் 18 (USAP)

அத்தியாயம் 18 (USAP)

 

அடுத்தநாள் விசாரணை அறையில் கைகள் விலங்கிடப்பட்டிருந்தாலும் ராஜ தோரணையும் தெனாவெட்டும் கொஞ்சம் கூட குறையாது அகமியையே வைத்தக் கண் வாங்காது காதல் கலந்த நக்கல் பார்வை பார்த்திருந்தான் அரசு,

 

அவனது பார்வையின் வீரியத்தை உணர்ந்த அகமியோ அவனை முறைத்தபடி,

 

“விசாரணைய ஆரம்பிக்கலாமா?” என்று கேட்க அரசுவோ,

 

“ம்ம் ஆரம்பிக்கலாமே அதுக்கு முன்ன ஒரு கேள்வி நான் கேட்கலாமா?”

 

என்றான் விஷமமாக அதற்கு அவளோ, “ம்ம் கோ அஹெட்”

 

அரசுவோ தன் தாடியை வருடியபடி, “நேத்து நைட் நிம்மதியா தூங்குனியா கண்ணூ?”

 

என்று கேட்க அவளோ, “ஆமா ரொம்ப ரொம்ப நிம்மதியா தூங்கினேன் என் வாழ்க்கையில ஏதோ பெருசா சாதிச்ச உணர்வு”

 

என்று கூற அவனோ உதட்டை வளைத்து நக்கலாக, “பாரேன் கண்ணூ நீ நிம்மதியா தூங்குனதால எனக்கும் நல்ல தூக்கம் போச்சு” என்றவன் இடைவெளி விட்டு,

 

“ஆனா அந்த நிம்மதியெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் நான் வெளிய வந்ததும் உனக்கு தூக்கமே கனவாகிரும் பாரேன்”

 

என்று மிரட்டலாக முடிக்க அகமியோ, “சார் நீங்க இப்போ எக்ஸ் எம்.எல்.ஏ நான் ட்யூட்டில இருக்க ஆபிஸர் உங்க மேல ஆக்ஷன் எடுக்க முடியும் புரிஞ்சு பேசுங்க”

 

என்று மேசையில் ஓங்கி ஒரு தட்டு தட்ட அவனோ, “வாவ்! பயரா இருக்க இதே பயரோட நான் சி.எம் ஆனதும் எனக்கு சல்யூட் அடிக்கணும் புரிஞ்சுதா மேடம்?”

 

என்று மீண்டும் கூலாக காலாட்டியபடி கூற அகமிக்கு கோபம் எல்லை மீறியது. இருந்தும் இரண்டு வார தடுப்புக் காவல் கால அவகாசத்துக்குள் அவனிடம் வாக்கு மூலம் பெற்றாக வேண்டிய சூழ்நிலை அதனால் கோபத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்தவள்,

 

“சார், ஐ டோன்ட் ஹேவ் மச் டைம் லெஃப்ட் சோ ஷெல் வி” என்று அவனை கேள்வியாக பார்க்க அவனோ,

 

“ஓகே ஆஃபீசர் யூர் விஷ்” என்று விட்டு அவளை பார்க்க,

 

அவளோ, “லெட்ஸ் கெட் இன்டூ த பாய்ண்ட், இந்த மெடிக்கல் கிரைம் பத்தி உங்களுக்கு ரெண்டு வருஷம் முன்னாடியே தெரியுமா?”

 

என்றதும் அவனோ, “இல்ல, இந்த பாஸ்ட் வன் இயரா தான் தெரியும் அதுவும் டிஸ்ட்ரிபியூஷன் முடிஞ்ச பிறகு தான் தெரியும் “

 

என்றதும் அகமியோ புருவத்தை சுருக்கியபடி, “ஆனா, டூ த்ரீ இயர்ஸா சயந்தன் மெடிக்கல் சப்லை பண்றதா ரெகார்டஸ் இருக்கே”

 

என்று அகமி கேள்வியாக பார்க்க அரசுவோ, “நான் இல்லன்னு சொல்லவே இல்லையே, ஆனா அப்போ மருந்தோட குவாலிட்டில எந்த இஸ்ஸும் இருக்கலன்னு ரெக்கோர்ட்ஸ்ல இருக்கே ஆபிஸர் பைல கோ த்ரூ பண்ணலயா?”

 

என்றதும் அகமியோ, “பைல்ல என்ன இருக்கு என்ன இல்லன்னு எனக்கு தெரியும் அதைப்பத்தின கவலை உனக்கு தேவையில்ல”

 

என்று உறுதியாக கூற அரசுவோ உதட்டை பிதுக்கி, “ஓகே, ஆனா என்னையும் விசாரணை கைதியா ரிமாண்ட் பண்ணி இருக்கதா ஞாபகம், அதான் கேஸ் பத்தின அக்கறை”

 

அகமியோ தனது முஷ்டியை இறுக்கியபடி, “அந்த அக்கறை சக்கரை எல்லாம் உன்ன விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிச்சா பறந்து போயிரும்”

 

என்று அங்கிருந்த தடிப்பான லத்தியை பார்க்க

 

அசட்டு சிரிப்பு சிரித்தவன், “எப்படி குப்புற படுக்கப்போட்டு அடிக்கலாமா? இல்ல ஐஸ்ல படுக்கப்போட்டு அடிக்கலாமானு? யோசிக்கிறியா, எனக்கு ஓகே தான் ஆனா நான் சொல்லுற ஆர்டருக்கு பண்ணனும்”

 

என்றதும் அகமியோ அவனை புருவம் சுருக்கி பார்க்க அரசுவோ, “கொல்லுறீயே ராட்சசி அந்த பார்வை அது தான் என்னென்னமோ பண்ண சொல்லுது சரி நான் விஷயத்துக்கு வாரேன் மிதமான சூட்டுல நல்லெண்ணைய சூடு பண்ணி வாசத்துக்கு கொஞ்சம் பச்சை கற்பூரம் போட்டுக்கோ முதுகு வலிக்கும் சுறுசுறுன்னு நல்லா இருக்கும் அப்டியே முதுகுல ஸ்டார்ட் பண்ணி”

 

என்றது தான் தாமதம் அகமியோ, “ஸ்டாப் இட் இடியட்” என்று கத்த அரசுவோ கண்டுக்கொண்டானில்லை,

 

“அப்டியே இளம் சூட்டுல உன் கையால கழுத்துல பத்துவிரல் கோர்த்து கொஞ்சம் அழுத்தமா அதோட வலிச்சிருமோ சின்ன பயத்தோட மெதுவா தேய்க்குற கண்ணூ அப்பறோம் முதுகு,”

 

என்றவன் அவளை ஒரு முறை கீழிருந்து மேலாக ஒரு வித ஒவ்வாமையுடன் பார்த்தவன்

 

“ஆனா இந்த பேண்ட்டு சட்டை போட்டு வந்துறாத காட்டன் சாரி கட்டி வா அப்போ தான் கண்ணுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சில்மிஷம் பண்ணவும் வசதியா இருக்கும்”

 

என்று கூறியது தான் தாமதம் அகமியின் பொறுமை காற்றில் பறக்க அங்கிருந்த லத்தியை எடுத்தவள், “ஏய்!” என்றபடி அவன் விலங்கிட்ட கையை அடிக்க போக ஒரு

 

நிமிஷத்தில் அதை லாவகமாக பிடித்து நகர்த்தி தூர எறிந்தவன் மேசையில் துள்ளியேறியபடி அவளது பெல்ட்டை பிடித்து தன் பக்கம் இழுக்க

 

ஏற்கனவே அவன் காட்டிய வித்தையில் கதிகலங்கி நின்றவள் அவன் மீது சரியப் போக அவளை விலங்கிட்ட கையால் சிறை செய்தபடி முத்தமிட அவளோ

 

அவனிடமிருந்து விடுபட துள்ள அவனுக்கோ அதெல்லாம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை.

 

ஒரு வருடம் காவல் துறையில் பயிற்சி பெற்றிருந்தாலும் சிறுவயது முதலே அடி உதை ஓட்டம் என உரமேறி போயிருந்தவனின் உடலை அவளால் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை. இருந்தும் முயற்சி செய்துக் கொண்டே இருக்க அதில் எரிச்சலுற்றவன்,

 

“என்னடி? எதுக்கு இப்போ ரொம்ப துள்ளுற? நீ துள்ளினாலும் துடிச்சாலும் இங்கே எவனும் உன்ன காப்பாத்த வரமாட்டான் ஏன்னா இது என் கோட்ட என்ன மீறி ஒரு பய விரலசைக்க முடியாது விரலசைக்கவும் மாட்டான் இது ஒன்னும் உன் ஸ்டேஷன்

 

கிடையாது இது ஜெயில் வேற உலகம் சும்மா துள்ளாம எனக்கு ஒத்துழைச்சா கொஞ்ச நேரத்துல விட்ருவேன் இல்ல இப்டியே நிற்க வேண்டியது தான்”

 

என்று மீண்டும் வளைத்து முத்தமிட இம்முறை அகமியின் எதிர்ப்பும் குறைந்திருந்தது கண்களில் கனலுடன் அவனிடமிருந்து பிரிய அவனோ உதட்டை வருடியபடி,

 

“நாட் பேட் ஆபிஸர் நான் வெளிய வந்து சி.எம் ஆனதும் நீங்க தான் என்னோட பர்சனல் பாடி கார்ட் அப்பப்போ நல்லா என்டேர்டைன் பண்ணனும் ஓகே”

 

என்று விலங்கை கழட்டும்படி சைகை செய்ய அவளோ அவனது நெஞ்சில் ஓங்கி உதைத்திருந்தாள்.

 

எதிர்ப்பாராத தாக்குதலில் அரசு பின்னால் இரண்டடி நகர அவனது வெண்ணிற சட்டையில் அவளது ஷூ தடம் அதை ஒரு வித வன்மத்துடன் அரசு பார்த்திருக்க

 

“சி.எம் நல்ல கனவு தான் மிஸ்டர் ஆற்றலரசு ஆனா அது ஒருநாளும் நனவாகாது நனவாக விடவும் மாட்டேன் இந்த கேஸ் இல்லாட்டி என்ன இன்னும் எத்தனையோ கேஸ் இருக்கு அதுல தூக்கி உன்ன உள்ள வைப்பேன்”

 

என்றதும் அவனோ, “சூப்பர் மேடம் நல்ல ஸ்டண்ட் நல்ல டயலாக் பட் சொன்ன பெர்சன் தான் சரியில்ல கேமரா ஆப் பண்ணிருக்க தைரியத்துல கை வச்சிருக்க”

 

என்று பல்லை கடிக்க அவளோ தனது ஷூ காலை அவன் முன் நீட்டி,

 

“கையில்ல சார் கால் கால் வச்சிருக்கேன், ஆளுங்கட்சி எதிர்கட்சின்னு எல்லா இடத்துலயும் உனக்கான எதிரிகள சம்பாரிச்சு வச்சிருக்க அவங்க உதவியோட உன்ன பரலோகம் அனுப்புறது ஒன்னும் பெரிய விஷயமில்ல அரசு”

 

என்றதும் இதழை கோணி சிரித்தபடி அவள் நீட்டி இருந்த காலை இறுக பற்றியவன்

 

“ஒன்னு என்னடி நூறு கிரைம் பண்ணி இருக்கேன் இன்னும் ரெண்டு நாள்ல இந்த ஜெயிலே கலவர பூமியா மாறும் அன்னைக்கு முடிஞ்சா உன்னோட முக்கிய சாட்சிகள காப்பாத்தி எனக்கும் உன் நொண்ணனுக்கும் தண்டனை வாங்கிக் கொடு முடிஞ்சா

 

கொடுடி அப்படியில்லன்னா நான் வெளிய வருவேன் சி.எம்மும் ஆவேன் உன் வாழ்க்கையில ஏன்டா இவன தொட்டோம்னு நினைச்சு நினைச்சு அழ வைப்பேன்”

 

என்று அவள் காலை உடைக்கும் அளவுக்கு இறுக பற்ற அகமிக்கோ கால் வலி உயிர்ப் போனது இருந்தும் அதை முகத்தில் காட்டாதிருக்க அரும்பாடு பட அதே சமயம் அடைக்கப்பட்டிருந்த கதவு வெளி பக்கமிருந்து வேகமாக தட்டப்பட,

 

அப்பக்கம் நின்றிருந்த ராஜதுரையோ,”சார்! சார்! அகச் செழியன் சார் வாராரு”

 

என்று பதட்டமாக கூற அரசுவோ அவளது காலை விட்டபடி, “பார்த்தல்ல சுத்தியே என் ஆளுங்க அந்த செழியனால தப்பிச்ச இல்ல கரண்டைக் கால் உடைஞ்சிருக்கும் பார்த்து நடந்துக்க”

 

என்று காலை உதறி விட்டவன், “போ போய் கதவை திற” என்று கட்டளையிட்டு விட்டு ஜாம்பமாக கதிரையில் அமர அகமேந்திக்கு ஒழுங்காக நிற்கவே ஒரு பத்து நிமிடங்கள் தேவைப்பட்டது.

 

மனதுக்குள் அத்தனை வன்மம் தான் அணிந்திருக்கும் காவல் சீருடைக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன் என்கின்றானே, இவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் துளிர் விட அவள் மனதுக்குள் ஒரு குரூர சிந்தனை

 

புத்தியோடு செயல்பட்டு அரசு கூறியது போல் இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் சிறைக் கலவரத்தில் இவனை சுட்டு வீழ்த்தினால் என்ன?

 

என்ற எண்ணம் அவளுக்கு ஆம் அரசு மரித்தால் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என பல பேருக்கு சந்தோஷம் தானே மிஞ்சி மிஞ்சி போனால் என்ன வேலை இடைநிறுத்தம் கிடைக்க போகிறது அவ்வளவு தானே

 

என்ற எண்ணம் முளைவிட அதையே செயற்படுத்தவும் எண்ணினாள். அவள் முகமாற்றத்தை கூர்ந்து கவனித்த அரசுவோ மர்மமாக புன்னகைத்தானே தவிர பதில் பேசவில்லை.

 

அதே சமயம் அகச் செழியனும், “அகமேந்தி இன்வெஸ்டிகேஷன் எப்படி போய்கிட்டு இருக்கு?”

 

என்று உள்ளே நுழைந்தவனை பார்த்து, “வாங்க சின்ன மச்சான் உங்களுக்காக தான் வெயிட்டிங் என்ன தங்கச்சி வளர்த்து வச்சிருக்க புருஷன் முத்தம் கொடுத்தா உதைக்குறா என்ன வளர்ப்பு? ஒழுங்கீனமான வளர்ப்பு”

 

என்று குற்றப்பத்திரிகை வாசிக்க செழியனுக்கு உடல் விறைத்தது. அதே விறைப்புடன், “டேய்!” என்று அவன் சட்டையை பற்ற போக அரசுவோ அவன் கையை லாவகமாக பற்றியபடி,

 

“ம்க்கும், மாப்பிள்ளைய மரியாதையோட நடத்த உனக்கு தெரியல தங்கச்சி வாழ போற இடம்ங்குற அக்கறையில்ல அப்பறோம் அவளுக்கு எப்படி புத்தி வரும் சொல்லு?”

 

என்று நக்கலாக அங்கிருந்த காமெராக்களை காட்ட அகச் செழியனோ அவனது சட்டையை விட்டபடி, “என்னடா உனக்கு வேணும்?”

 

என்று எரிச்சலாக கேட்க அரசுவோ, “குவாட்டரும் கோழி பிரியாணியும் கூடவே ஊத்தி கொடுக்க உன் தொங்கச்சி கிடைக்குமா?”

 

என்று கண்ணடித்து கேட்க செழியனோ, “ச்சைக்” என்றான் கையாறு நிலையுடன்

 

மூளைக்குள் கட்டெறும்பாய் குடையும் அரசுவை என்ன செய்ய வேண்டுமென்று தெரியாத நிலை கோபம் எரிச்சல் என்று எல்லாம் ஒன்று கூடி மூளை சூடாகியது அவனுக்கு ஆனால் என்ன செய்ய முடியும் ஒன்றும் செய்ய முடியாது

 

காரணம் அவனது காக்கிச் சட்டையில் கரைப்பட்டு போகுமே இப்படி மூளைக் குழம்பி போய் நின்றவனுக்கு இன்னுமின்னும் எரிச்சலூட்டும் விதமாக,

 

“என்ன சின்ன மச்சான்? துப்பு துலக்குனியா இல்ல முழுமதி அவளது முகமாகும் பிறைமதி அவளது பெயராகும்னு டூயட் பாடிட்டு இப்போ தான் எழுந்து வர்றியா?”

 

என்று கேட்க அகச் செழியனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. எப்படி இவனுக்கு தெரியும்?

 

என்ற யோசனை வேறு மண்டையை குடைய, “ஆல் டீடைல்ஸ் ஐ நோ மச்சி”

 

என்று கூறியவன் “அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று துள்ளி இறங்க அகமி புருவச் சுளிப்புடன் அவனது கைவிலங்கை அகற்றி விட அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தபடி,

 

‘அப்டி தான் அகமி என்ன அழிக்கனும்னு யோசி எப்படி கொல்லலாம்னு யோசி அது தான் எனக்கும் வேணும்’

 

என்று நக்கலாக பார்த்துக் கொண்டே சிறைக்குள் நுழைய இங்கு அகமியும் செழியனும் தான் மண்டை காய்ந்து போய் நின்றனர்.

                                             தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top