அத்தியாயம் 19
இங்கு பிறைமதியின் வீட்டில் அவளது பெற்றோர் சோகமே உருவாய் அமர்ந்திருக்க
பிறைமதியோ ஒருவரையும் கண்டுக்கொண்டாளில்லை ஏற்கனவே தெரிந்தது தானே என்பது போல் ஒரு அலட்சிய பாவனை அவளிடம், வேலைக்கு தயாராகி கொண்டிருந்தவளுக்கருகில் வந்த ஐந்து வயது சிறுமியோ,
“அத்தை பேக், போன் நேத்து கரெக்ட் பண்ண பேப்பர்ஸ்” என்று ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்து தானும் தயாராகிக் கொண்டிருக்க
பிறைமதியின் பெற்றோர்கள் இருவரும், “என்ன மீனுக்குட்டி ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டிங்களா?”
என்று சிறியவளை பார்க்க அவளோ, “ஆமா தாத்தா” என்று பிறைமதியின் தந்தையான சிவாஸ்கரனின் தோளில் தொற்றிக் கொள்ள அவரோ அவளுக்கு உணவை ஊட்டியபடி அங்கிருந்து வெளியே சென்று விட பிறைமதியின் தாய் நிலா மதியோ,
“என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்க?” அதற்கு அவளோ,
“இன்னைக்கு சிக்கன் வாங்கிட்டு வரலாமா? இல்ல மீன் கிரேவியே ஓகேயானு நினைச்சுட்டு இருக்கேன்”
என்று கூற நிலாமதியோ, “பிறை, நான் கல்யாணத்த பத்தி கேட்குறேன் என்ன முடிவு பண்ணி இருக்க அந்த போலீஸ் தம்பி தான் உன்னையும் மீனுவையும் ஏத்துக்குறேன்னு சொல்றாரே அதுக்கப்பறமும்”
என்றதும் பிறை மதிக்கு கோபம் தாறுமாறாக எகிறியது. “அம்மா! கொஞ்சம் நிறுத்துறீங்களா? நான் இப்போ நான் உங்ககிட்ட கேட்டேனா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு அடுத்து எனக்கும் மீனுவுக்கும் வாழ்க்கை கொடுக்க அவன் யாரு?”
என்று பிறை கேட்க நிலாமதியோ, “என்னடி மரியாதை இல்லாம அவன் இவன்னு பேசுற? அவர் எவ்ளோ பெரிய ஆள்?”
என்றதும் பிறைமதியோ, “ஆமா ஆறடி உயரத்துல ஹல்க்கு மாதிரி இருக்கான், ரொம்ப பெரிய ஆள் தான்”
என்று மீண்டும் திட்ட நிலா மதியோ, “சரி, இப்போ முடிவா என்ன தான் சொல்ல வர?”
அதற்கு பிறைமதியோ, “முடிவு தானே முடியாதும்மா எனக்கு கல்யாணம் வேணாம் அவ்வளவு தான்”
என்று கிளம்பப் போக நிலாமதியோ, “நாங்க இல்லாத காலத்துக்கு என்னடி பண்ணுவ?”
என்றதும் பிறைமதியோ, “மீனுவுக்கு நான் துணை மீனு எனக்கு துணை எங்களுக்கு நடுவுல யாரும் தேவையில்ல”
மீனு என்று செல்லமாக அழைக்கப்படும் மீனாக்ஷி பிறைமதியின் அண்ணனான பிரணவனின் செல்ல மகள், பிரணவனும் அவன் மனைவி யாழினியும் தீ விபத்தில் உயிரிழந்திருக்க, அவர்களது மகளான மீனாவை பிறைமதி தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வருகிறாள்.
வாழ்க்கையில் மீனாவிற்காக எதையும் இழக்க தயாராக இருப்பவள் எக்காரணத்துக்காகவும் மீனாவையோ அவளது பொறுப்புகளையோ துறக்க தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,
அதற்கு ஒரு விதத்தில் அகச்செழியனும் முக்கிய காரணம் என்று அவன் மூலம் காதல் வலியையும் ஏமாற்றத்தையும் அனுபவித்தாளோ அன்று முதல் ஆண்கள் மீதான நம்பிக்கை மொத்தமாக வடிந்து போயிருக்க திருமணத்தின் மீதான விருப்பு வெறுப்புகளும் அடியோடு அழிந்து போயிருந்தது.
பிறைமதியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்திருந்த நிலாமதியோ நெற்றியில் சிறிய கோடாய் சந்தனத்தை வைத்துக் கொண்டிருந்த பிறையிடம்,
“அப்போ அவளுக்கு ஒரு வயசு வந்து அவளும் கல்யாணம் பண்ணி போய்ட்டா”
அதற்கு பிறைமதியோ, “இருக்கவே இருக்கு மனதுக்கு இனிமையா தனிமை அதோட வாழ்ந்துட்டு போறேன்”
என்றவள் வெளியே செல்ல எத்தனிக்க அவளது தாயோ, “எத்தனை வருஷத்துக்கு? ஒரு நோய்நொடி வந்தா தோள் சாய்க்க தண்ணி கொடுக்க ஒரு உறவு தேவையில்லையா?”
என்றதும் கண்ணாடியை சரி செய்தவள், “முதியோர் இல்லத்துல ஓரளவு சேவிங்ஸ கொடுத்து பார்த்துக்க சொன்னா ஒரு கேர் கிவர் வச்சி பார்த்துக்க போறாங்க”
என்று தோளை அலட்சியமாக குலுக்க, நிலாமதியோ, “கேர் கிவரும் வாழ்க்கை துணையும் ஒன்னாடி?”
என்று அழுத்தமாக கேட்க, “என்ன பொறுத்தவரை ஒண்ணு இல்ல வாழ்க்கை துணைய விட ஒரு படி மேல, வாழ்க்கை துணையா வர்றவங்க துரோகம் பண்ணலாம் பிடிக்காம ஒரு வெறுப்போட நம்ம கூட வாழலாம் அந்த வெறுப்பு நம்ம பழக்கவழக்கம் மேலயா இருக்கலாம் நம்ம உடல் மீதா இருக்கலாம்”
என்று கூறிக் கொண்டிருந்தவள் கண்கள் குளம் கட்டியிருக்க அதை சரி செய்துக் கொண்டவள் புன்னகை முகமாக,
“ஆனா கேர் கிவர்ஸ் நேர்மையா காசுக்காக தானே வாராங்க அப்போ அவங்க ஒரு படி மேல தானே மா”
என்று கூற கூற, நிலாமதியின் முகம் சோகத்தை தத்தெடுத்தது ஒரு தாயாக மகளின் வலியை கண்டுக்கொண்டார். தான் ஆனால் எந்த தாய் தனது மகள் வாழ்க்கை முழுவதும் தனியாக கழிக்க வேண்டுமென நினைக்க மாட்டார் அல்லவா
மீண்டும் ஏதோ பேச வர பிறைமதியோ, “அம்மா ப்ளீஸ், என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க”
என்றவள் மீனுவை அழைத்துக் கொண்டே ஆட்டோவில் ஏற மீனுவோ,
“அத்தைமா எனக்கு நாளைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு”
என்றதும் பிறைமதியோ, “நான் டைமுக்கு வந்துருவேன் செல்லம்”
என்று இறக்கி விட்டவள் தன் கையிலிருந்த நியமன கடிதத்தை வெறித்து பார்த்திருந்தாள். ஆம் என்று அகச்செழியனை பார்த்தாளோ அப்போதே முடிவு செய்திருந்தாள்.,
மாற்றல் வாங்கிக் கொண்டு கண் காணாமல் போக வேண்டுமென அவள் நினைத்தபடியே மாற்றலும் கிடைத்திருக்க வேறு என்ன இன்னும் மூன்று வாரத்தில் டெல்லி நோக்கி தனது குடும்பத்துடன் இடம்பெயர திட்டமிட்டு விட்டாள்.,
இங்கு அகச் செழியனுக்கோ அவன் கண்டுப்பிடித்த விடயங்கள் ஒவ்வொன்றும் தலை சுற்ற தனது தந்தையின் இரட்டை வேடம் ஒரு வித அருவெறுப்பை ஏற்படுத்தியது.
அகச் செழியனுக்கு ஒரு அண்ணன் கிடையாது இரு அண்ணன்கள் அதில் மூத்தவன் யமகன் இரண்டாமவன் சயந்தன் அவனது தந்தையான அரிச்சந்திரனின் முன்னாள் காதலி சரோஜினிக்கு பிறந்த குழந்தை தான் யமகன்,
தந்தையின் பதவி மோகத்தாலும் பண ஆசையினாலும் பொது வெளியில் தந்தை பெயர் கூற முடியாது வளர்ந்தவன் தான் யமகன், ஆனால் தனக்கான தனியான சாம்ராஜ்ஜியத்தையும் அடையாளத்தையும் கட்டியெழுப்பிக் கொண்டவன் திடீரென இவர்களை சீண்டுவதற்கான காரணம் தான் செழியனுக்கும் புரியவில்லை.
ஏன் என்றுமில்லாத வன்மம், இதில் வேறு ஏதோவொன்று ஆழமாக புதைந்துள்ளது. என அவனுக்கு தெளிவாக புரிந்தது.
இங்கு சிறைச்சாலையில் சத்யசீலனோ, “எல்லாம் கைமீறி போய்கிட்டு இருக்கு ஏதாவது பண்ணு உன்ன நம்பி ஒரு வேலைய கொடுத்தேன் பாரு என்ன சொல்லணும்”
என்று அவருக்கு விசுவாசமான சிறை அதிகாரியின் கைப்பேசியிலிருந்து யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருக்க அப் பக்கமிருந்த நபரோ,
“தலைவரே! என்னால என்ன பண்ண முடியுமோ அதை கண்டிப்பா பண்ணுறேன் நீங்க பயப்படாதீங்க”
என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க சத்யசீலனோ, “இன்னும் ரெண்டு நாள்ல ஜெயிலுக்குள்ள மிகப் பெரிய கலவரம் வெடிக்கும் அந்த சமயத்துல அரசுவ போட்டு தள்ளிரு அப்டியே அந்த சயந்தனையும் போட்டு தள்ளிரு யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வரக் கூடாது”
என்று இறுகிய குரலில் கூற அப்பக்கமிருந்த நபரோ, “ஐயா! சின்னய்யாவ போய்..”
என்று இழுக்க அதற்கு சத்யசீலனோ, “மகனாவது அப்பனாவது பதவின்னு வந்தா எல்லாத்தையும் முடிச்சு விட வேண்டியது தான் இப்போ மட்டும் யமகன் மாட்டினா நான் இத்தனை நாள் கட்டின கனவு கோட்டை இடிஞ்சு தரைமட்டமாகி போகும்”
என்று விட்டு அழைப்பேசியை துண்டிக்க, இங்கு சிறை அதிகாரியின் அலுவலகத்தில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அரசுவோ,
“எத்தனை பேர் நம்மள போட்டு தள்ள போட்டி போடுறானுக நம்மளும் மகாத்மா ரேஞ்சுக்கு வளர்ந்துட்டோமில்ல”
என்று கூறிக் கொண்டே கடலையை உரித்து வாயில் போட்டபடி சயந்தனை பார்க்க அவனோ, “டேய்! நம்மள போட்டு தள்ள பிளான் பண்ணுறானுக நீ என்னடா சுண்டல் சாப்பிடுற? இப்போ என்னடா பண்றது போதாக்குறைக்கு அகமிக்கு வேற கொம்பு சீவி விட்ருக்க என்னடா யோசிக்கிற என்னடா பண்ண போற”
என்று தலையை சொரிய அரசுவோ அவன் பக்கத்தில் பவ்யமாக கைக்கட்டி நின்றிருந்த சத்யசீலனின் விசுவாசியிடம் இல்லையில்லை சத்யசீலனின் விசுவாசியாக நடிக்கும் அரசுவின் கையாளிடம்,
“அந்த ஆள் சொல்லுறத பண்ணிரலாம் பதவின்னு வந்தா எதுக்கு அப்பன் மகன்னு பார்த்துகிட்டு அந்த ஆள் தான் இவ்வளவு நாள் ஜெகஜோதியா இவ்வளவு நாள் ஆட்சில இருந்துட்டாரே ஓய்வு வேணுமில்ல நிரந்தரமா ஓய்வு கொடுத்திரலாம் அதுக்கு முன்ன ஆகவேண்டிய காரியமிருக்கே”
என்று கழுத்தை நெட்டி முறித்துக் கொண்டு எழுந்தவனை சயந்தன் தான் ‘எந்த உலக ஜந்தடா நீ?’ என்று பார்த்து வைத்தான்.
தொடரும்…