அத்தியாயம் 28
தன்னுள் ஒன்றிப் போனவளை நெற்றி சுருக்கி குனிந்துப் பார்த்தான்.
உடல் வெடவெட என அவளது உடல் நடுங்கியது.
அத்துடன் உடல் குழுங்கி அவள் அழுவதைப் பறைசாற்ற அவளை அணைப்பதற்காக உயர்ந்த கையை கடினப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான் அக்ஷரன்.
பேன்ட் போக்கெட்டினுள் இரண்டு கையையும் விட்டுக் கொண்டவன் ஆடாமல் அசையாமல் அவ்வாறே நின்றுக் கொண்டிருந்தான்.
அவளை அணைக்கவும் இல்லை அதற்காக அவளை தன்னில் இருந்து விலக்கவும் இல்லை.
இரண்டு நிமிடங்கள் அவனுள் ஒன்றியவள் அடுத்த நொடி அவனில் இருந்து விலகியவள் அவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் தலையை குனித்துக் கொண்டாள்.
“சாப்டியா”
அவன் கேட்க தலையை மறுப்பாக ஆட்டினாள்.
“நீங்க குடிச்சிருக்கிங்களா”
அவள் தலையை உயர்த்தி அவனது கண்களைப் பார்த்துக் கேட்டான்.
ஒரு நொடி அவளது விழிகளைப் பார்ப்பதைத் தவிர்த்தவன் எதுவும் பேசாமல் டைனிங் டேபள் அருகில் போய் நின்று கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
நேத்ராவும் அவனுக்கு அருகில் போய் நின்றுக் கொண்டவள்.
“இவ்ளோ நேரம் எங்க போனிங்க”
இப்பொழுது தான் நியாபகம் வந்தவளாக அவளது கணவனிடம் வினவ அவனோ தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன்,
“வேல விஷயமா வெளில போனேன்”
அதற்கு மாத்திரம் பதில் கூறியவன் அவளை அமருமாறு கண்களால் கூற அவளும் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள்.
“அப்போ உங்ககிட்ட இருந்து ஏதோ வித்தியாசமான”
அவள் மூக்கை சுருக்கிக் கொண்டு கூற அவனோ எதுவும் பேசாமல் நிதானமாக உண்டான்.
இவளும் அதற்குப் பின்னர் எதுவும் பேசவில்லை.
மனதில் இவ்வளவு நேரமும் இருந்த தனிமையும்,பதட்டமும், பயமும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் பறந்து போனது என்ன மாயமோ??
“இவங்க பக்கத்துல இருந்தா இந்த தனிம பயம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரில”
மனதால் நினைத்துக் கொண்டவள் அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்தாள் அவன் தான் என்றும் போல் நிதானமாக சாப்பிட்டான்.
அவனும் சிறிது நேரத்தில் சாப்பிட்டு முடிய இவள் சமயலறையை சுத்தம் செய்தாள்.
இவன் எழுந்து அறைக்குள் நுழைந்தவன் குளியலறைக்குள் சென்றான் தன்னை சுத்தப்படுத்துவதற்காக,
சிறிது நேரத்தில் அவள் அறைக்குள் வரவும் அவன் குளியலறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.
துண்டினால் தலையைத் துடைத்துக் கொண்டு அவன் வெளியே வர அவள் அவனையே குறுகுறுவெனப் பார்த்தாள்.
அவன் போகும் இடங்களில் எல்லாம் இவளது பார்வைத் தொடர.
“என்ன பாக்குற”
அவன் அவளது பார்வையை உணர்ந்து வினவினான்.
“ம்ஹும் ஒன்னுமில்ல”
அவசரமாகக் கூறினாள்.
அவன் கட்டிலில் வந்து அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்தான் இவள் அமைதியாக போர்வையை எடுத்து தரையில் போட்டவள் படுத்தாள்.
ஆனால் விழிகளை மூடாமல் அவளது கணவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தாலும் எதுவும் கேட்கவில்லை..
சிறிது நேரத்தில் அவள் அவ்வாறே உறங்கிப் போயிருந்தாள்.
அவன் மடிக்கணியை மூடி வைத்து விட்டு விழியகலாமல் அவளையேப் பார்த்தான்.
அவனது விழிகளில் புலப்படும் வலியின் சாயல் யாருக்கானதோ..??
சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு அவனும் உறங்கிப் போனான்.
******
அக்ஷரன் வாக்கிங் சென்றிருக்க காலையில் தேவகி அழைத்திருந்தார் நேத்ராவிற்கு.
“சொல்லுங்க அத்த எப்பிடி இருக்கிங்க”
அவள் நலம் விசாரிக்க அவரும் அதற்கு பதில் கூறி விட்டு,.
“நீ எப்பிடிமா இருக்க அக்ஷரன் எங்க”
“இருக்கேன் அத்த அவரு வெளில போய் இருக்காரு..”
“சரிமா..நா அவனுக்கு ஃபோன் பன்னினேன் எடுக்கல்ல அவன் வந்ததும் எனக்கு ஃபோன் பன்ன சொல்லுடா”
“சரி அத்த”
எனக் கூறி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
பின் சமயலறைக்குள் நுழைந்து காஃபி ஊற்றவும் அவளது கணவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவனுக்கு காஃபியை கொண்டு போய் நீட்ட அதைப் பெற்றுக் கொண்டவன் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்தான்.
“அத்த ஃபோன் பன்னினாங்க உங்களுக்கு ஃபோன் பன்னினாங்களாம் நீங்க எடுக்கல்லயாம் நீங்க வந்ததும் எடுக்க சொன்னாங்க”
நேத்ரா கூற அதற்குத் தலையசைத்தவன் அங்கு இருந்த தனது மொபைலில் தாய்க்கு அழைத்தான்.
“சொல்லுங்கம்மா”
அவன் கூற மறுபக்கத்தில் என்ன கூறப்பட்டதோ இதழில் ஒரு நொடி மின்னி மறைந்த புன்னகையுடன்.
“தேங்க்ஸ்ம்மா ம்ம் சரி ஓகே”
கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவன் அமைதியாக எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டான்.
“எதுக்கு தேங்க்ஸ் சொல்லியிருப்பாரு அத்த என்ன சொன்னாங்க”
மனதால் நினைத்துக் கொண்டவள்.
“அம்மாக்கும் பையனுக்கும் இடைல ஆயிரத்தெட்டு இருக்கும் நீ வீணா போய் தல போடாம இரு”
மனசாட்சி அவளை எச்சரிக்க மனசாட்சியின் எச்சரிக்கைக்குக் கட்டுப்பட்டு அமைதியாகி விட்டாள் நேத்ரா.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன்
“கோயிலுக்குப் போகனும் ரெடியாகு”
அவன் கூற இவள் தான் விழித்தாள்.
“கோயிலுக்கு எதுக்கு இப்போ”
அவள் கேட்டாள்.
அதற்கு தோளை குலுக்கியவன்,
“அம்மா போக சொன்னாங்க”
அவன் கூற யோசனையுடனே தலையசைத்தவள் அறைக்குள் சென்றாள் தயாராவதற்கு.
சிறிது நேரத்தில் தயாராகி வந்தாள்.
வெள்ளை நிறத்திலானான சேலையில் பச்சை நிறத்தில் ஆங்காங்கே பூக்கள் பதிக்கப்பட்டிருந்தது.
தலை முடியை பின்னல் இட்டு முன்னால் எடுத்து விட்டு இருந்தாள்.
அவள் வரவும் என்றும் போல் அவளை தலைமுதல் கால் வரையில் தனது லேசர் விழிப் பார்வையால் ஊடுறுவியவன் எழுந்து முன்னே செல்ல இவள் தான் அவனது பார்வையை தாங்க முடியாதவளாய் தலையைக் குனித்துக் கொண்டு அவனைப் பின்த் தொடர்ந்தாள்.
சிறிது நேரத்தில் கோயிலுக்கு வந்தனர் இருவரும்.
“அர்ச்சதத் தட்டு வாங்கனும்”
நேத்ரா கூற அங்கு இருந்த கடையில் வாங்கியவன் அவளிடம் நீட்டினான்.
அவளும் அதைப் பெற்றுக் கொண்டு உள்ளே வந்தாள்.
பின்னால் திரும்பிப் பார்த்தாள் அவன் உள்ளே வரவில்லை.
அவனுக்கு அருகில் சென்றவள்.
“உள்ள வரல்லயா”
வினவ தலையை மறுப்பாக ஆட்டினான்.
“ஏன்”
“தோணல்ல”
“இது என்ன பேச்சு சாமியப் பார்க்க தோணனுமா”
அவள் ஆதங்கப்பட அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“எனக்கு தோணனும் நீ போய்ட்டு வா சீக்கிரம்”
அவன்க் கூற வாய்க்குள்ளால் முனகியவன் கோயிலுக்குள் சென்றாள்.
இவனோ காரில் சாய்ந்து நின்றுக் கொண்டு மொபைல் பார்த்துக் கொண்டிருக்க கோயிலுக்கு வரும் அனைத்து கன்னிகளது கண்களும் காளை இவனது மேல் தான்.
சிறிது நேரத்தில் அவளும் வெளியே வந்தாள்.
வந்து வெளியேப் பார்த்தவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.
அங்கு நின்றிருந்த இரண்டு பெண்களும் இவனையேப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் பேசிக் கொள்ள வேகமாக தன்னவனுக்கு அருகில் வந்தவள்.
அவன் அருகில் வரவேண்டாம் என முந்தைய நாள்க் கூறியதை நினைவில் இருந்துத் தூக்கிப் போட்டு விட்டு அவனுக்கு மிக அருகில் நெருங்கி வந்து எம்பி அவனது நெற்றியில் விபூதியை வைத்து விட்டாள்.
‘இவன் எனது கணவன்’
என்ற உரிமை அவளது செயலில் வெளிப்பட்டது.
இவனோ தனக்கு மிக அருகில் இருக்கும் அவளை தலை நிமிர்த்தி பார்த்தாள்.
அவனது பார்வை முதலில் ஏக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கவும் அடுத்த நொடி அப்பார்வையை மாற்றியவன் அவளை முறைத்துப் பார்த்தான்..
அவளோ அவனது பார்வையில் பயந்தவள் அவனை விட்டு சற்று விலகியிருக்க,
விலகி நின்றவளை ஒன்றும் சொல்ல முடியாமல் தலையை உலுக்கி விட்டு சென்று காரை எடுக்க இவளும் அமைதியாக சென்று அமர்ந்தாள் காரினுள்.
காரிற்குள் அமைதியாக அவன் காரை செலுத்த இவளுக்கு முகம் சற்று பிரகாசமாக இருந்தது.
இவள் அவனை நெருங்கி நின்றதும் அப்பெண்களது முகத்தை நினைத்துப் பார்த்தவளுக்கு இப்பொழுதும் சிரிப்பு வந்தது.
“அதுங்களோட மூஞ்ச பாக்கனுமே.. அப்பிடியே ஃபியூஸ் போன பல்பு போல ஆகிருச்சு ஐயோ..”
நினைத்துப் பார்த்தவளுக்கு எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே சிறிது சத்தம் வர புன்னகைத்தாள்.
அவளது சிரிப்பு சத்தத்தில் அக்ஷரன் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் திரும்பிப் பார்க்கவும் இதழ்க்கடித்து புன்னகையை தனக்குள் புதைத்துக் கொண்டவள் அமைதியாக முன்னால் திரும்பிக் கொண்டாள்.
இவனும் பெருவிரலால் புருவத்தை நீவி விட்டுக் கொண்டவனது இதழும் சிறிதாக வளைந்தது.
அவனும் அதை அவதானித்துக் கொண்டு தானே இருந்தான்.
அப்பெண்கள் தன்னைப் பார்த்ததையும்,அதற்காகவே தனது மனைவி தன்னை நெருங்கி நின்றதையும் அவதானித்துக் கொண்டு தானே இருந்தான்.
சிறிது நேரத்தில் அவனது மொபைல் அலற அதை ப்ளூடூத்தில் பொருத்தியவன் பேசினான்.
“ஹெலோ.. ம்ம் தேங்க்ஸ்.. ஓகே.. வரோம்”
அவன் பேச இவள் அமைதியாகி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் இன்னுமொரு அழைப்பு வந்தது.
அதற்கும்,
“தேங்க்ஸ்.. ஓகே”
அவ்வளவு தான் பதில்.
இப்படி இடைக்கிடையில் அவனுக்கு அழைப்பு வந்தது அவனும் ‘தேங்க்ஸ்’ என்றே சொன்னான்.
பிறகு வீட்டிற்கு வந்தனர் இருவரும்.
அவன் அறைக்குள் நுழைந்தான்.
இவளோ பல்கணியிற்குச் சென்று ஓர்கிட் மலர்களைப் பார்த்து விட்டு சிறிது நேரம் அங்கையே நின்றுக் கொண்டிருந்தாள்.
“ஈவ்னிங் வெளில போகனும் ரெடியா இரு”
இவள் திரும்ப அக்ஷரன் கூறி விட்டு வெளியேறியிருந்தான் அங்கிருந்து.
“எங்க போகனும்ன்னு எப்பவாச்சும் சொல்றாரா இவரு”
இவள் நினைத்துக் கொண்டு பெருமூச்சொன்றை விட்டாள் அவனது மனையாள்.
மாலை நேரத்தில் வெய்யோன் தனது வெப்பத்தை மட்டுப்படுத்தி அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான்.
அக்ஷரன் தயாராகியிருந்தான்.
நேத்ரா வந்தவள் அங்கு நின்றிருந்த தன்னவனையே விழி விரித்துப் பார்த்தாள்.
வெள்ளை நிற ஷேர்ட் அணிந்து கையை முட்டி வரை மடித்து விட்டு கறுப்பு நிற பேன்ட் அணிந்து.
தலை முடியை ஜெல் பயன்படுத்தி சீர்மையாக்கியிருந்தான்.
இடது கையில் வாட்ச் அணிந்து வலது கையில் ப்ராஸ்லட் அணிந்து என்றும் போல் ஆணழகனாகத் தான் இருந்தான் அவன்.
ஆனால் இன்று சற்று வித்தியாசமாக அவள் கண்களுக்கு பேரழகனாகத் தெரிந்தான் அவள் கணவன்.
அவளது வருகையை அவளது பிரத்யேக மஞ்சள் வாசமே உணரத்தியிருக்க தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
அங்கு தன்னையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்தவன் இரண்டு புருவங்களையும் உயர்த்தி அவளைப் பார்க்க அவனது பார்வையில் தன்னிலை அடைந்தவள் தலையை உலுக்கிக் கொண்டு வர அவனும் எழுந்து சென்றான் அவளுடன்.
காரில் போகும் போதும் அவனை பார்த்தாள் அடிக்கடி.
“என்ன இன்னைக்கு ரொம்ப அழகா இருக்காரு”
மனதால் நினைத்துக் கொண்டு விழியகற்றாமல் பார்த்தவள்.
“ரொம்ப அழகா இருக்கிங்க”
தானாக உளறிக் கொட்ட திரும்பி அவளைப் பார்த்தவன் வியப்பில் இடதுப் புருவத்தை உயர்த்தி,
“ஆஹாஆஆன்”
கண்களில் ஒரு நொடி குறும்பு மின்னி மறைய தலை சாய்த்து அவன் கேட்ட விதம் கொள்ளயழகாய் அவள் மனதில் பதிந்து போனதென்னவோ உண்மை தான்..!!!
தான் உளறிக் கொட்டியதே அவனது குரலில் தான் புரிந்தது அவளுக்கு.!!
விழிகள் இரண்டையும் இறுக மூடியவள் நாக்கைக் கடித்து லேசாக நெற்றியில் அடித்துக் கொண்டு அவசரமாக முன்னால் திரும்பிக் கொண்டாள்.
அவளது செய்கையில் அவனது இடது புறத்தில் இருக்கும் அடுக்குப்பல் தெரிய மின்னி மறைந்தது ஓர் இன்ஸ்டான்ட் புன்னகை அவனது இதழில்.
கார் சிறிது நேரத்தில் ஓர் ஹோட்டலின் முன்னால் வந்து நின்றது.
“இறங்கு”
எனக் கூறி விட்டு அவன் இறங்க அவளும் இறங்கினான்.
ஹோட்டல்க்குள்ளே அவன் செல்ல அவனுக்கு அருகில் அவனோடு சென்றாள் இவள்.
மனம் அதுவோ இதமாக மாறியது போல் இருந்தது..
அவ்விதம் அப்படியே தொலைந்து துடைப்பட்டுப் போனது.
ஶ்ரீஜாவின்,
“ஹெப்பி பேர்த் டே அக்ஷரன்”
என்ற ஆர்ப்பாட்டமான குரலிலும் அவள் துள்ளிக் குதித்து ஓடி வந்து அக்ஷரனை அணைத்துக் கொண்ட செயலிலும்.
*******
தொடரும்..❤
💜அஷு💜