ராவணா 47

“உனக்கு உன் புருஷன் வேணும்ன்னா இப்போ இந்த நிமிஷம் என் முன்னாடி நீ வரணும், நீ மட்டும் வரணும். உனக்கு அவன் வேணுமா வேண்டாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ. நீ வரல நாளைக்கு அவன் செத்தது தான் ஹெட் லைனே” என்று வன்மத்தோடு கூறிவிட்டுத் தன் அழைப்பைத் துண்டித்திருந்தான் ஆத்மன்.

தன் காதில் அமிலமாய் பாய்ந்த ஆத்மனின் வார்த்தைகளை கரகிக்க முடியாது அலைபேசியை அப்படியே கையில் பிடித்துக்கொண்டு முகம் இறுக வெறித்தபடி அமர்ந்திருந்த அஜூதியாவுக்குள் என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

அவனது அநாகரீகப் பேச்சைக் கேட்டு பயமா அல்லது கோபமா என்று தெரியவில்லை ஆனால் அவளது உடலின் ஒவ்வொரு அணுவும் நடுங்கியது.

கழுத்தில் இருக்கும் தாலி இன்னும் ஈரப்பதம் காயாமல் அப்படியே இருக்க, அதை கைகள் நடுங்க இறுக்கமாக பிடித்து கொண்ட அஜூதியாவின் விழிகளில் இப்பொழுது கண்ணீர் மறைந்து, அங்கே ஒரு ரௌத்திரம் குடிகொண்டது.

மெல்ல தரையில் இருந்து எழுந்தவள், கண்ணாடியின் முன் வந்து நின்றாள். 

முகத்தில் இருந்த சாந்தம் போய் தன்னவனுக்காக எதையும் செய்யும் துணிச்சல் அப்பட்டமாய் தெரிய, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

அஜூதியாவை கண்டதும் கூடத்தில் கவலையோடு அமர்ந்திருந்த இந்திரா, 

“அஜூ என்னாச்சுடி? ஏதும் வேணுமா?” என்று கேட்டபடி எழுந்து கொள்ள, சத்தம் கேட்டு அனைவரும் அங்கே வந்தனர்.

எல்லாரையும் பார்த்தாள், அனைவரின் முகத்தில் இருந்த தீவிரமும், பதற்றமும் இவளுக்குள் அதுவரை இருந்த தைரியத்தை பிடுங்கி எறிந்து விட்டு பயத்தை விதைத்திருக்க, ஒரு விதமாய் நிலையில்லாது துடிக்கும் மனதோடு,

“என்னாச்சு பிரச்சனை ஏதும் இல்லையே, அவர் அவர் நல்லா இருக்கார்ல?” ‘நீ வரல நாளைக்கு அவன் செத்தது தான் ஹெட் லைனே’ என்ற ஆத்மன் சொன்னது வேறு நினைவில் வந்து தொலைக்க, பயத்துடன் வினவினாள்.

@@@@@@@@@

நள்ளிரவு அந்த 

சிறைச்சாலையின் இருண்ட அறையில், மின்விசிறியின் சத்தம் மட்டும் அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைத்து கொண்டிருக்க, ராவணன் தன் கண்களின் மேல் கை வைத்து உறங்கிகொண்டிருந்தான்.

அதேநேரம் மற்றொரு அறையில் காளியின் தலைமையில் இரண்டு குற்றவாளிகள் ராவணனுக்கு முடிவுகெட்ட நாலா புறமும் பார்த்தபடி  விழித்திருந்தனர்.

கிட்டத்தட்ட  மணி ஒன்றை நெருங்கிய சமயம் ஆத்மனின் கட்டளைப்படி, சிசிடிவி கேமராக்களை அணைத்த ஜெயிலர் சதாசிவம், சத்தமில்லாமல் ராவணனின் அறையையும், அந்தக் குற்றவாளிகளின் அறையையும் திறந்து விட்டு காளிக்கு கண்ணைக்காட்ட, அவர்கள் மூவரும் கையில் கூர்மையான இரும்பு கம்பிகள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகளுடன் ராவணனின் அறைக்குள் நுழைந்தனர்.

அவர்களின் காலடி சத்தம் மிக நெருக்கமாக தன் காதில் விழவும் லேசாக இதழை வளைத்த ராவணன் தன் கண்ணில் இருந்து கையை எடுத்து விட்டு தான் படுத்திருந்த நிலையிலே எந்தப் பதற்றமும் இல்லாமல் தலையை மட்டும் உயர்த்தி அவர்களை பார்க்க, அதிர்ந்து விட்டனர்.

அவன் உறங்கிவிட்டான் என்றும் இவர்கள் எண்ணியிருக்க ஆனால் அவனோ தங்களை பார்த்த பார்வையில் இருந்த கூர்மையிலே ராவணன் எதற்கும் தயாராயிருப்பது காளிக்கு புரிந்து விட, 

மாட்டிக்கொண்டதை உணர்ந்தவர்கள் காளி சொல்லவும் ஒரே நேரத்தில் ராவணனை நோக்கிப் பாய்ந்தனர். 

முதலாவது ஒருவன் ராவணனின் கழுத்தை இறுக்கமாக பிடித்துக்கொள்ள, காளி வன்மத்தோடு ராவணனை கத்தியால் குத்த வந்தான்.

சுதாரித்து கொண்ட ராவணனோ வேகமாக தன் பின்னந்தலையை தனது கழுத்தை பிடித்திருந்தவனின் நெற்றியோடு மோத கண பொழுது தாக்குதலில் அவன் தடுமாற, அதை பயன்படுத்தி கொண்ட ராவணன் அவனது வயிற்றில் தன் முழங்கையால் குத்தி விட்டு, தன்னை குத்தவந்த காளியிடம் இருந்து விலகி அவனது கையை சுவற்றோடு சேர்த்து அடித்து உடைத்தான்.

எலும்பு முறியும் சத்தத்தோடு தன் கையில் இருந்த கத்தி கீழே விழ, தானும் தன் கையை பிடித்தபடி கீழே விழுந்தான் காளி.

அவன் விழுந்ததும் உடனே நொடி தாமதிக்காது மற்றொருவன் ராவணனின் முதுகில் கம்பியால் தாக்க, வலியால் துடித்தாலும் பின்வாங்காத ராவணன் அப்படியே தன்னை அடிக்க வந்தவனின் தலையை சுவற்றில் மோத விட, அவனது ரத்தம் ராவணனின் முகத்தில் தெறித்தது.

சிறிய குறுகிய அறை என்பதால் மூச்சிரைக்க  அடிகளும், வெட்டுகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விழ,  தன் பலம் முழுவதையும் திரட்டி அந்த மூவரையும் மரண அடி அடித்த ராவணனை,

“ஏய்” என்று தன் பலம் கொண்டு கத்தியபடி கீழே தள்ளிய காளி, அவன் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து அவனது கழுத்தை அறுக்க பார்க்க, அவன் நெற்றியில் வேகமாக முட்டிய ராவணன் அவனை கீழே சரித்து, தன் கை முஷ்டி இறுக முகத்திலே ஓங்கி குத்த குருதி வழிய மயங்கி சரிந்தான் காளி.

காளி சரியவும் வேகமாக ஜெயிலர் சதாசிவம் அங்கே வர, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்த மூவரையும் வீழ்த்திவிட்டு, கைகளில் இருந்து ரத்தம் சொட்ட, மூச்சிரைக்க அப்படியே தரையில் அமர்ந்த ராவணனோ வியர்வை வழிய தன் முன் நின்ற சதாசிவத்தை அழுத்தமாக பார்த்தான்.

@@@@

“உன் புருஷனுக்கு எதுவும் ஆகாம உன் முன்னாடி கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு, கவலை படாம போமா, அந்த ஆத்மனால ஒன்னும் பண்ண முடியாது” என்று தீர்க்கமாக கூறினார் வேலாயுதம்.

அதை கேட்ட அஜூதியாவோ,

“சரி தான் மாமா ஆனா அவர் மேல போட்ட பழி, அதுக்கு என்ன பண்ணறது” என்று ஆற்றமையோடு கேட்க,

வேலாயுதத்திற்கே அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஆத்மனே முன் வந்து தன் தவறை ஒத்து கொண்டால் மட்டுமே ராவணன் குற்றமற்றவன் என்று நிரூபிக்க முடியும் என்கின்ற நிலையில் அவரால் என்ன சொல்லிவிட முடியும் மௌனமாக அவளை பார்த்தவர்,

“எல்லாம் புரியுது மா அதுக்காக உன்னை பணயம் வைக்க முடியாது, அதுக்கு உன் புருஷன் ஒத்துக்கவும் மாட்டான், அவனுக்கு பதில் சொல்ல முடியாது மா” 

“தெரியும் மாமா ஆனா நான் தனியா எதுவும் பண்ண போறதில்லையே நீங்க எல்லாரும் என்னை பார்த்துக்க மாட்டிங்களா? முதல்ல அவருக்கு இது எதையும் சொல்ல வேண்டாம். முயற்சி பண்ணி பார்ப்போமே இது மூலமா நல்லது நடந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தானே” என்று அவள் தீர்க்கமாக சொல்லவும், அதன் பிறகு சில நிமிடங்கள் யோசித்த வேலாயுதம் அவளிடம் மறுப்பேதும் சொல்லாது மற்றவர்களோடு சேர்ந்து ஆத்மனை வீழ்த்துவதற்கான திட்டத்தை தீட்டினார்.

@@@@

கார் அந்த ஆள் அரவமற்ற சாலையில் சீறிப் பாய, 

காரின் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த இருளைப் பார்த்தபடி வந்த அஜூதியா, தனது கழுத்தில் இருந்த தன் தாலியைத் குனிந்து ஒரு நொடி பார்த்தவள் அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

பின் சில நிமிட பயணத்திற்கு பிறகு, கார் ஆத்மனின் ஆடம்பர பங்களா முன்பு வந்து நின்றது.

காரில் இருந்து இப்பொழுது இறங்க வேண்டும், ஆனால் ஒருவித பயம் ஆட்க்கொள்ளவும் பயத்தில் இன்னும் தாலியை இறுக்கமாக அவள் பிடித்துக்கொள்ள, தன் தோழியின் நிலையை உணர்ந்த இந்திராவோ அவளை அணைத்து விடுவித்து, 

“நாங்க எல்லாரும் இருக்கோம்டி, நாம இதை கடந்து வந்திடலாம்” என்று சொல்லவும் கண்கள் கலங்க மீண்டும் இந்திராவை அணைத்து கொண்டாள்.

பின் அனைவரும் அவளுக்கு தைரியம் சொல்ல, காரில் இருக்கும் அனைவரையும் ஒருகணம் பார்த்த அஜூதியா , சிறு தலையசைப்போடு கீழே இறங்கினாள்.

தன்னவனுக்கு இது தெரிய வரும்போது, அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை எண்ணி இப்பொழுதே மனதிற்குள் கலக்கமாக இருந்தாலும், இப்போதைக்கு வேறு வழியில்லை என்பதால், மனதைத் திடப்படுத்திக் கொண்டு தன் ராவணனுக்காக இந்த கயவனின் வீட்டிற்குள் நுழைந்தாள் அஜூதியா.

அதே நேரம் தன் வீட்டில், கையில் மது கோப்பையுடன் தீவிரமான முகத்துடன், விழிகள் மிதக்க CCTV-யை பார்த்து கொண்டே அமர்ந்திருந்த ஆத்மனின் இதழ் நொடி பொழுதில் வன்மமாய் வளைய, காலிங் பெல்லை அஜூதியா அழுத்தும் முன்பே வந்து கதவை திறந்திருந்தான் ஆத்மன்.

அவன் பார்வையில் வக்கிரம் வழிந்தோட அவள் பார்வையோ உணர்வற்று இருந்தது.

அவன் எதுவும் சொல்லவில்லை நேரே தன் படுக்கையறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டு கையில் இருக்கும் சிவப்பு திரவத்தை மிடரு விழுங்கியபடி,  தன் முன்னால் உணர்வுகளற்ற முகத்துடன் வந்து நிற்கும் பெண்ணவளை விழுங்குவதை போல பார்த்துகொண்டே நக்கலாக சிரிக்க, அவன் பார்வையிலே அருவருத்து போனவள்,

“எங்கள இப்படி பண்றதுல உனக்கு என்ன கிடைக்கும்” ஆத்திரத்துடன் வினவினாள்.

“என்ன கிடைக்குமா? நிம்மதி நிம்மதிடி நிம்மதி” எக்காளமாய் சிரித்தான்.

“ஏன் இப்படி பண்ற? உனக்கு என்ன தான் வேணும் ஏன் எங்கள நிம்மதியா விட மாட்டிக்கிற, அதான் அவர் மேல பழி போட்டு உள்ள தள்ளிட்டியே இனியும் என்ன வேணும். எங்கள விட்டுடேன் ப்ளீஸ்” கண்ணீருடன் கெஞ்சினாள்.

“விடணுமா” என்றபடி தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்தவன், முன்னேறியபடி அவளை நெருங்க பதற்றதுடன் பின்னால் சென்றவளுக்கு அவன் தன்னை நோக்கி நெருங்க நெருங்க நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது.

அப்பொழுது அவள் முன்னால் வந்து நின்ற ஆத்மன் அனல் பார்வையோடு,

“சான்ஸே இல்லை உன் புருஷனையும் உன்னையும் இனிமே நிம்மதியா, இல்லை இல்லை இனி வாழவே விடமாட்டேன். மனசு முழுக்க வன்மம் தான் இருக்கு, விடவே மாட்டேன் ஓட ஓட அடிப்பேன். ரெண்டு பேரும் எவ்ளோ ஆடுனீங்க அடக்குனேனா இல்லையா, என் மேல கைவச்சா நிம்மத்தியா விட்ருவேனா என்ன? ஸ்கெட்ச் போட்டனா, இன்னைக்கு நேத்து இல்லை பல வருஷமா அவனை பழிவாங்குறதுக்காகவே என்னை கொஞ்சம் கொஞ்சமா செதுக்கிருக்கேன் அவ்ளோ சீக்கிரம் தப்பிக்க முடியாது. என்ன தான் யாருக்கும் தெரியாம டிரக்ஸ் எல்லாம் உங்க வீட்ல வச்சி ராவணனை சிக்க வச்சிருந்தாலும், அப்போ வராத சந்தோஷம் ராவணனோட பொண்டாட்டிய என் பெட்ரூம்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் வந்திருக்கு, இப்போ தான் மனசு இதமா இருக்கு” என்று கூறி விஷமாய் சிரிக்க, 

“சீ ஒரு போலீசா இருந்துட்டு இப்படியெல்லாம் பண்ண உனக்கு வெக்கமா இல்லை” சீறினாள் அஜூதியா.

“இல்லைடி என்ன இப்போ, இது மட்டும் இல்ல இன்னும் செய்வேன், ஒருத்தரையும் விட மாட்டேன், அந்த கிழவன் தொடங்கி அத்தனை பேரையும் பழிவாங்குவேன்”

“இப்படி பண்ணாத ப்ளீஸ் எங்களை விட்டுடு” என்று கெஞ்சவும்,

அதற்கு அவனோ, 

“அட வெயிட் பண்ணுமா, பொறுமையா கெஞ்சிக்கலாம்” என்றபடி தன் அலைபேசியில் எடுத்து வீடியோ ஆன் செய்தவதன் அவளை ரேகார்ட் செய்து கொண்டே நிதானமாய் எழுந்து வந்து அவள் அருகே நின்றபடி,

“எப்படி இருக்க ராவணா? நல்லா பாரு உன் பொண்டாட்டி என் கிட்ட பத்திரமா இருக்கா, நீ நிம்மதியா இரு” என்று நக்கலாக கூறி ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோவை அப்படியே காளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவனுக்கு அழைப்பு விடுத்தவன் நேரம் கடந்து அழைப்பு ஏற்க படவும், 

“நான் ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன் காளி அதை அவன் கிட்ட காட்டிட்டு, போட்டு தள்ளிடு சாகுறதுக்கு முன்னாடி அவன் தன் பொண்டாட்டிய ஒரு முறை பார்த்துட்டு சாகட்டும்” என்ற ஆத்மன் எதிர் தரப்பில் இருந்து,

“ம்ம்” என்று ஆமோதிப்பதாய் அழுத்தமான குரல் வரவும் அலைபேசியை தூக்கி வீசிவிட்டு அஜூதியாவிடம் திரும்பினான்.

“இதைப் பார்த்தா உன் புருஷன் ரொம்ப சந்தோஷப்படுவான்ல. இந்நேரம் என் ஆளு கையால கொஞ்சம் கொஞ்சமா உன் ராவணன் செத்துட்டு இருப்பான். அதுவும் இந்த வீடியோவை என் ஆளு காளி இப்போ அவன்கிட்ட காட்டினதும், உன் புருஷன் துடிதுடிச்சே செத்துப் போவான்!” என்று கூறி, சிவப்பு நிற திரவத்தைப் பருகிவிட்டு அவளைப் பார்த்து ராட்சசன் போல சிரித்தான்.

அவன் அப்படிச் சொல்லவும் அவளுக்குள் நடுக்கம் பரவியது.

‘இவனெல்லாம் ஒரு ஆள், இவன் சொன்னால் உன்னவனை வீழ்த்திவிட முடியுமா என்ன? ஏன் தேவையில்லாமல் கலங்குகிறாய்?’ என்று அவள் மனம் அவளுக்கு தைரியம் கொடுத்தாலும்,

மேலும் வேலாயுதம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டவளுக்கு ராவணனுக்கு எதுவும் ஆகாது என்கிற நம்பிக்கை உள்ளுக்குள் வலுவாகவே இருந்தாலும்,

வார்த்தைக்கு வார்த்தை ஆத்மன், ‘தன்னவன் செத்துப்போவான்’ என்று சொல்லவும் அவளது மெல்லிய மனமோ தாங்க முடியாது பரிதவிக்க,

“ப்ளீஸ் அவரை ஏதும் பண்ணிடாத! உனக்கு என்ன வேணுமோ அதைச் சொல்லித் தொலை, எங்க எல்லாரையும்  விட்டுடு!” என்றாள் நெஞ்சுக்குமுறலோடு.

அதற்கு அவளை நிதானமாக பார்த்தவனோ, 

“சரி உன் புருஷனை விட்டுடுறேன், உங்க எல்லாருடைய வாழ்க்கையையும் விட்டுட்டு போயிடுறேன், ஆனா” என்று அவளை அழுத்தமாக பார்த்து,

“இன்னைக்கு நைட் நீ எனக்கு வேணும்” என்றான் அவளை மேலிருந்து கீழ் வரை வக்கிரமான பார்வையால் அளந்தபடி.

அதை கேட்டு அவனை கொன்று போடும் ஆத்திரத்தில் அவள் நிற்க, அவனோ தன் தொடையை தட்டி, 

“வா வந்து உக்காரு ஸ்டேஷன்ல வச்சு அவனுக்கு ஒன்னு கொடுத்தியே சும்மா நச்சுனு, அதை எனக்கு நீ  இப்போ தரணும், அதுவும் மொத்தமா, நீயே உன்னை தரணும் தரியா” என்று கூறி வஞ்சகமாக சிரிக்க, அதுவரை முகம் சிவக்க இறுக்கமாக இருந்தவள் தன் காதில் உள்ள புளுடூத் வழியாக, 

“நாங்க உள்ள வர போறோம்” என்ற சந்துருவின் இறுகிய குரலில், ஆத்மனை பார்த்து கேலியாய் இதழ் வளைத்தவள், 

“என்கிட்ட கேட்டத ஜெயில்ல இருக்கிற என் புருஷன் கிட்ட போய் கேளு அவன் பதில் சொல்லுவான் !” என்று தீர்க்கமாக  கூறினாள்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top