அத்தியாயம் 26

வீட்டிற்கு சற்று தாமதமாகத்தான் வந்து இருந்தான் அதிரூபன்… அவந்திகா சற்று முன்னமே வந்து விட்டிருந்தாள்…

 

வீட்டுக்குள் நுழையும் போதே அதியமான் மற்றும் அவந்திகாவின் சிரிப்பு சத்தம் தான் நன்றாக கேட்டது ..

 

தன் தந்தையின் சிரிப்பு சத்தத்தில் விழிகள் சுருக்கி சட்டென உள்ளே வேகமாக வந்து எட்டிப் பார்க்க அங்கு உணவு மேசையில் அவர் சாப்பிட்டு கொண்டு இருக்க அருகே அமர்ந்து அவருக்கு பரிமாறியப்படி அவந்திகாவும் ஏதேதோ பேசியவாறு இருந்தாள்…

 

இருவரையும் பார்த்த

அதிரூபன் மூச்சு இழுத்து விட்டவாறு படிகளில் ஏறப்போன சமயம் அவனை தலை திருப்பி பார்த்த அதியமான் ,

 

” வா அதி… என்ன இன்னிக்கு இவ்வளவு லேட்..??”  என கேட்டவாறு தட்டில் இருந்த உணவை வாயில் அதக்கிட.. அதிரூபனும் நின்று தன் தந்தையை பார்த்தவன்,

 

“ கொஞ்சம் ஒர்க் ஜாஸ்திப்பா… அதான் லேட் ஆயிடுச்சு..”

 

“ம்ம்.. சரி சீக்கிரம் குளிச்சிட்டு வா..சாப்பிடுவ..” 

என்றதும் சரியென மண்டையை ஆட்டியவன் குளித்து முடித்து ஆடை மாற்றிக் கொண்டு கீழ இறங்கி வந்தான்…

 

அதற்குள் அதியமான் உண்டு முடித்து டிவியில் ஆங்கில செய்தியை பார்த்துக் கொண்டு இருந்தார் …

அவந்திகாவும் அவருக்கு அருகே அமர்ந்து செய்தியை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தவள் அதிரூபன் வருவதை கண்டதும் வேகமாக எழுந்து உணவு மேசைக்கு வந்தாள்…

 

அவன் அமரவும் தட்டை எடுத்து வைத்தவள் தனக்கும் வைத்து கொண்டு அவனுக்கான இரவு உணவை எடுத்து வைக்கலானாள்…

 

அவளைத் தாண்டி தந்தையே ஒரு பார்வை பார்த்த அதிரூபன் பின்பு தட்டில் பார்வை பார்த்தவாறு அவந்திகாவிடம்,

 

” இப்ப எதுக்கு நீ இவ்வளவு சீன் போடுற..??  எனக்கு கை இல்லையா..??  எனக்கு நானே எடுத்து வச்சு சாப்பிட தெரியாதா..??  எங்க அப்பா முன்னாடி வேணும்னே தானே இப்படி எல்லாம் ட்ராமா போடுறா..??”  என பல் இடுக்கில்   வார்த்தைகளை கடித்து துப்பிட..

 

அவந்திகா மெல்ல இதழ் வளைத்து சிரித்தபடி அவனுக்கான உணவையும் பரிமாறி முடித்தவள் இப்போது அவனது முகத்தை நன்றாக பார்த்து ,

 

“பரவால்ல நான் கூட நீ மக்கு மட சாம்பிராணி நினைச்சேன்… கண்டுபிடிச்சிட்ட..!”  என அசால்ட்டாக கூறியதும் விழிகள் விரிய அவளை நிமிர்ந்து பார்த்த அதிரூபனுக்கு ஆத்திரமாக வந்தது…

 

எவ்வளவு தைரியம் இருந்தால் தன்னிடமே இப்படி பேசுவாள் என பல்லை கடித்துக் கொண்டு அவளைப் பார்க்க.. ஆனால் அவந்திகாவோ அவனை கொஞ்சமும் சட்டை செய்யாது இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் தட்டில் உணவை எடுத்து வைத்தவாறு ,

 

“உன்னையே அடக்க தெரிஞ்ச எனக்கு உங்க அப்பாக்கு விபூதி அடிக்க தெரியாதா ..ம்ம்??” 

 

எனக்கேட்டு விட்டு அவன் முகத்தை பார்த்து விழிகள் உயர்த்தி கண்ணடித்து கேட்டிடவும் திணறிய அதிருபவன் சட்டென தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு ,

 

“இப்ப என்னடி ..?? என்னை பழி வாங்கணும்..என்னை  நிம்மதியாக இருக்க விடக்கூடாது.. நான் சந்தோஷமாவே ரேவந்த் கூட இருக்கக் கூடாது… இதானே உன் திட்டம் ..??” என சத்தம் வராது அவளிடம் முணுமுணுத்து கேட்டதும் தட்டில் இருந்த உணவை வாயில் வைத்து உண்டவாரு அவனை பார்த்தவள்,

 

“ப்ச்… ஆமா அதான் என் திட்டம்.. அதுக்கு இப்ப நீ என்ன பண்ண போற..???  ஒன்னும் பண்ண போறது இல்லைல…! அப்புறம் என்ன மூடிட்டு சாப்பிடு..”  என நக்கலாக  மெல்லிய குரலில் அவனை மிரட்டியவள் பிறகு வேண்டுமென்றே சத்தமாக,

 

” இன்னும் கொஞ்சம் சட்னி ஊத்துறேன்ங்க ..!” என கேட்கவும் சோஃபாவில் அமர்ந்து இருந்த அதியமான் சிரித்தவாறு அவர்கள் புறம் திரும்பி தன் மகனிடம் ,

 

“பாரு அதி உனக்கு எப்படி பார்த்து பார்த்து பரிமாறுரானு… இதுக்கு தான் நம்மளையும் கவனிச்சுக்க ஒரு வைஃப் தேவைனு நான் சொன்னதே..

 

ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்  விட்டுக் கொடுத்து புரிஞ்சுகிட்டு வாழுற வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவுமே கிடையாதுடா..”  என்றதும் சட்டென புறையேறிவிட்டது அதிரூபனுக்கு …

அவன் இரும்ப ஆரம்பிக்கவும் அதியமான் பதறியவராய்,

 

” என்னாச்சும்மா அவனுக்கு..?”  என கேட்டதும் அவனது தலையை தட்டியவாறு ,

 

“உண்மை கசக்குதாம் மாமா..”  என்றதும் இன்னும் இருமல் அதிகமானது அதிரூபனுக்கு…

 

விழிகள் விரிய அவளை பார்த்தவாறு இரும்பியவனை கண்டு  உதடு  மடக்கி சிரித்திட…அதியமான்,

 

” என்ன சொன்னமா..??  புரியலை..” என கேட்டதும் சுதாரித்துக் கொண்ட அவந்திகா அவர் புறம் தடை திரும்பி ,

 

“அது ..நீங்க சொன்னது கேட்டதும் மனசு எல்லாம் ரொம்ப சந்தோஷமாகி இருக்கு போல ..அதை தாங்க முடியாம இருமல் வந்துருச்சு மாமா..”  என்றதும் அவளது கேலி பேச்சில் சிரித்துக் கொண்டார் அதியமான் …

 

ஒருவாறு அவன் உண்டு முடிக்கவும் பிறகு அதியமானுடன் சேர்ந்து மூவரும் அலுவல்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்..

 

உறங்கும் நேரம் வரவும் அவந்திகா பாலை காய்ச்சி கொண்டு வந்து அதியமானின் கரத்தில் திணித்து,

 

“இதை குடிச்சிட்டு நீங்க போய் படுங்க மாமா …போதும்..”  என்றதும் சிறு புன்னகையுடன் அவள் தந்த பாலினையை முழுவதுமாய் அருந்தி முடித்தவர் மகனுக்கும் மருமகளுக்கும் இரவு வணக்கத்தை வைத்து விட்டு உறங்க சென்று விட்டார் …

 

அவர் சென்றதும் இடுப்பில் கை வைத்து அதிரூபனை தான் பார்த்தவாறு நின்று இருந்தாள் அவந்திகா …

 

அவனும் அவளைக் கடுப்பாக பார்த்தவாறு இருக்கையில் இருந்து எழுந்தவன்,

 

” இப்ப என்ன நானும்  இந்த பாலை குடிச்சிட்டு தூங்க வரணுமா வந்து தொலைக்கிறேன்..!” என கூறியவாறு மற்றொரு பால் அடங்கிய டம்ளரை எடுக்க கை நீட்டியவனை குறுக்கே கரம் நீட்டி தடுத்தவள் ,

 

“உனக்கு பால் கொண்டு வரலை…இது எனக்கு..” என கூறியவள் வேகமாக டம்ளரை எடுத்து கப்பென்று முழு பாலையும் அருந்தி முடித்து விட்டு,

 

“உன்னை யாரும் தூங்க சொல்லி கூப்பிடல.. உங்க வேலைய பார்த்துட்டு இங்கேயே என்னவோ பண்ணுங்க… நான் போய் தூங்குறேன்..”  என்று விட்டு சென்றவளை வெறிக்கொண்டு பார்க்க முடியும் மட்டுமே முடிந்தது அவனால் …

 

சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்திட.. அவளோ நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்… உறங்குபவளை சில கணம் நின்று பார்த்தவாறு இருந்தான் அதிரூபன்..

 

பிறகு பெருமூச்சுடன் அவளுக்கு அருகே படுத்துக் கொள்ள ஏதேதோ யோசனைகள் அதிரூபனின் மண்டைக்குள் சுழன்றது …

 

எப்போதும் அவனுக்கு ஒரு தலைவலி வந்து வந்து போகும்..பெரியதாய் கண்டுக்கொண்டதில்லை… 

ஆனால் இப்போது தலைவலி அடிக்கடி வருகிறது.. ஏனோ மருத்துவரை சென்று நாளை பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டவன் வெகு நேரத்திற்கு பிறகு உறக்கத்தை தழுவி இருந்தான்… 

 

மறுநாள் வழக்கம் போல இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பினர்‌‌..

 

இன்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றி பார்க்கும் எண்ணத்தில் அவனுக்கு சட்டை அணிவிப்பது.. தலைக்கு ஜெல் தடவி விடுவது…  தலை முடியை சீவி விடுவது …அவன் கோட் அணிய உதவி செய்வது என ஒவ்வொன்றையும் அவந்திகா செய்திட… அவளது செயல் ஒவ்வொன்றும்  அவனுக்கு தான் மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது..‌ 

 

“ப்ச்…நான் என்ன சின்ன குழந்தையா..??  இல்ல உன்கிட்ட இதுக்கெல்லாம் ஹெல்ப் கேட்டனா ??..

 

எதுக்குடி என்னை சாவடிக்கிற..?”  என வாய் விட்டு புலம்பியவனை நமட்டு சிரிப்போடு பார்த்தவள்,

 

” நான் உங்க பொண்டாட்டிங்க.. உங்க மேல எனக்கு ரொம்ப ரொம்ப அக்கறை இருக்கு… அதான் இதெல்லாம் பார்த்து பார்த்து பண்றேன்…. ஏங்க  இதெல்லாம் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க..?”  என பக்கா பொண்டாட்டி போல அவள் பேசிடவும் அவளை முறைத்துப் பார்த்தவன் வாய் திறந்து வேறு வார்த்தைகளை உதிர்க்காது அமைதியாக அறையில் இருந்து வெளியேறி விட்டான்..

 

அவன் சென்றதும் வாய் பொத்தி சிரித்த அவந்திகா,

 

” புலம்புடா புலம்பு.. வாழ்நாள் முழுக்க உன்னை புலம்ப விடுறேன்..”  என சபதம் ஏற்றவளாய் தானும் தயாரானாள்… 

 

இருவரும் அலுவலகத்திற்கு ஒன்றாக தான் வந்து இருந்தனர்… வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் வீட்டிலேயே வைத்து விட்டு அலுவலகத்தில் உள்ள வேலைகளை கவனமாக பார்க்க தொடங்கினர்…

 

அச்சமயம் அதிரூபன் ரேவந்தை  வேலை விஷயமாக வெளியே அனுப்பி இருக்க.. அவந்திகாவும் வேலையில் பிஸியாக இருப்பதால் இவனது அறை பக்கமே எட்டி பார்க்கவில்லை…

இது தான் சமயம் என தனது கைபேசி எடுத்த அதிரூபன்  தனது பிரத்தியேக மருத்துவருக்கு அழைப்பு விடுத்து இருந்தான்..‌

 

“டாக்டர் நான் இப்ப வரேன்..” என்று மட்டும் கூறியவன் யாரின் கவனமும் படாது தன் காரினை எடுத்துக்கொண்டு மருத்துவரை பார்க்க சென்று விட்டிருந்தான்… 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top