அஜூதியாவின் கண்களோ மூடியிருக்க, மெலிதாக விரிந்திருந்த தன் இதழ்கள் வழியாக வேகமாகச் சுவாசித்துக்கொண்டிருந்தாள்.
கணவன் மனைவியாக முழு உரிமை கொண்டு தீண்டிய முதல் தீண்டல் அல்லவா? இருவருக்குள்ளும் உணர்வுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.
அவளிடம் தெரிந்த மயக்கமும், அவள் முகத்தில் இருந்த ‘மீண்டும் முத்தமிட மாட்டானா’ என்ற ஏக்கமும் ராவணனுக்குப் பேரின்பப் போதையைக் கொடுத்துவிட, மெல்லக் குனிந்து தன்னவளின் காதுமடலை முத்தமிட்டுக் கவ்விக்கொண்டான்.
பின்பு அவளுக்கு வலிக்காமல் மென்மையாகக் கடித்துவிட்டு, அவளது காதில் தன் இதழ்கள் உரச,
“நல்லா மூச்சை இழுத்து விட்டுக்கோடி” என்றான் கிசுகிசுப்பாக.
அதன் அர்த்தம் புரிந்து விழி விரித்தவளோ,
“நான் இன்னும் கோபமாதான்…” என்று ஆரம்பிக்க, சிரித்துக்கொண்டே முன்னேறிய அவனது இதழ்களோ இப்பொழுது அவள் கழுத்தில் ஆழமாகப் புதைந்துகொண்டன.
அதில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது போல மெய்சிலிர்த்தவளோ மேலும் கீழும் மூச்சுவாங்க, “…இருக்கேன்!” என்று சில நொடிகளுக்கு முன்பு, தான் கோபமாக ஆரம்பித்த வாக்கியத்தை, இப்பொழுது மோகத்தோடு சொல்லி முடித்திருந்தாள்.
அவனோ, “நானும்தான்!” என்றபடி, ஏறி இறங்கிய அவளின் தொண்டைக்குழியில் தன் ஈர இதழை அழுத்தமாகப் பதித்தவன்,
“என்னைப்போலவே நீயும் கோபப்படுடி என் பொண்டாட்டி,” என்று கூறி அவளது மூக்கின் நுனியைத் தன் இதழால் உரசிவிட்டு, மீண்டும் அவளின் இதழ்களில் போர்தொடுக்க, இனி எங்கிருந்து கோபப்பட? தன்னவன் பொழிந்த முத்தமழையில் அஜூதியா சுகமாக நனைந்துகொண்டிருந்தாள்.
அப்பொழுது முத்தத்தின் தித்திப்புக்கு இடையே லேசாக உப்பு கரிக்கவும், மெதுவாகத் தன் இதழைத் தன்னவனின் அதரத்தில் இருந்து விடுவித்தவள், அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
விழிகளின் ஓரம் கண்ணீர் வழிய, அதை மறைக்கக் கூடச் செய்யாமல் அவளையே உள்ளம் உருகப் பார்த்துக் கொண்டிருந்தான் ராவணன்.
“என்னாச்சுப்பா… ஏன் அழறீங்க?” என்றவள் அவனது கண்ணீரைத் துடைக்க,
“என்மேல ஏண்டி உனக்கு இவ்வளவு காதல்?” என்று உணர்வு பொங்க வினவினான் ராவணன்.
அவளோ பதில் சொல்லாமல் அவனையே பார்க்க, “உனக்கு பயமே இல்லையா? அன்னைக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ணிருப்ப?” அவனே தொடர்ந்தான்.
அதற்கு லேசாகப் புன்னகைத்த அஜூதியா, சற்று எம்பி வந்து அவன் கன்னத்தில் இதழ் பதித்து,
“ஆக விட்டுடுவீங்களா என்ன?” என்று தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
அந்த வார்த்தையில் தன் மேல் அவள் கொண்டிருந்த காதலையும் அசைக்க முடியா நம்பிக்கையையும் கண்டவனின் உள்ளம் மீண்டும் உருகிப் போக,
இப்பொழுது மீண்டும் இதழ்களின் சங்கமம்.
இம்முறை அவள் ஆரம்பிக்க, அவன் தொடர்ந்தான்!
உணர்வுகளின் ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில், முத்தமிட்டபடியே தன்னவளைத் தன் கரங்களுக்குள் ஏந்திக்கொண்டு மெத்தையில் கிடத்தியவன், தன் மேல்சட்டையின் பொத்தான்களை அவள் பார்க்கக் கழற்றிவிட்டு, அடுத்த நொடி வெற்று மார்போடு அவள் அருகே சரிந்தான்.
அதன் பிறகு, நெற்றியில் இருந்து ஊர்வலம் வந்த அவனது இதழ்கள் அவளது கழுத்தில் இளைப்பாறி, சற்றுக்கீழ் இறங்கி நெஞ்சாங்கூட்டில் அழுத்தமாகப் பதிய, துடித்துப் போனாள் அஜூதியா.
புடவை ஒரு பக்கம் சரிந்திருக்க, அவன் பற்ற வைத்த மோகத்தீ அவளது ரத்த நாளங்கள் எங்கும் பரவ, அவளின் நெஞ்சாங்கூடு சீரற்று ஏறி இறங்கியது.
அவளுக்கு அவனை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
வெட்கம், தயக்கம், ஏக்கம் என்று உணர்வுக் குவியலுக்குள் பெண்ணவள் சிக்கித் தவித்தாள்.
அதிலும் மீண்டும் மீண்டும் அவனது இதழ்கள் அங்கேயே புதையப் புதைய, ஒரு கட்டத்தில் உணர்வின் தாக்கத்தில் அவனது வெற்று முதுகை இறுக்கிப் பிடித்தாள் பெண்ணவள்.
அப்பொழுது அங்கே பதிந்திருந்த தடித்த காயங்களை அவளது மெல்லிய விரல்கள் உணர்ந்த பொழுது, அப்படியே கலங்கிப் போன பெண்ணவளோ,
“ராவணா…” என்றபடி அவனது முதுகை வருட, அவளது கவலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டவனோ மென்புன்னகையோடு அவளை ஏறிட்டவன்,
“என் வலிக்கெல்லாம் மருந்து நீதான்டி. உனக்கு ஓகேவா? வேண்டாம்ன்னா ஸ்டாப் பண்ணிடலாம்,” என்று அவள் சம்மதம் வேண்டி, கண்களில் காதல் மின்ன அவள் முகத்தைப் பார்த்தான்.
கொள்ளை கொள்ளையாய் ஆசையை மனதிற்குள் வைத்துக்கொண்டு, தன் அனுமதி கேட்டு நிற்கும் தன்னவன் கேட்டுக் கொடுக்க மறுப்பாளா என்ன? அதுவும், ‘என் மொத்த வலிக்கும் நீதான் ஒரே மருந்து’ என்று அவனே சொன்ன பின் அவளிடம் மறுப்பு ஏது?
அப்படியே எம்பி அவனது காதில் தன் ஈர இதழைப் பதித்துத் தன் சம்மதத்தை அவள் கூறிவிட, தன்னவளின் மென் இதழ் தீண்டலில் உணர்வுகள் கிளர்ந்தெழத் துச்சாதனனாகிப் போனான் ராவணன்.
அவன் விழிகளும் கரங்களும் தீண்டியதை இப்பொழுது அவனது இதழ்கள் செய்ய, அவளுக்கோ ஓர் இன்ப அவஸ்தை!
தயக்கங்கள் யாவும் உடைத்தெறியப்பட, மயங்கிக் கிறங்கிய நொடிகள் அவை.
ஆணவன் கொட்டிய மோக மழையில் பெண்ணவள் திளைத்துக் கொண்டிருந்த நேரம், மெதுமெதுவாக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் உயிர் போகும் வலி வரவும், அவளது விழிகள் கசிந்தன.
அது அவன் கண்ணில் இருந்து தப்புமா என்ன?
கலங்கிய விழிகளில் முத்தமிட்டு அவளது கண்ணீரைத் தன் இதழ்கள் கொண்டு துடைத்தவன், சூறாவளியாய்த் தன்னைச் சுழற்றியடிக்கும் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு, மிக மிக மென்மையாக தன்னவளை ஆள ஆரம்பித்தான்.
கத்தியையும் துப்பாக்கியையும் பிடித்த அவனது முரட்டுக் கரங்கள், மென்மையான பெண்ணவளை இன்னும் மென்மையாகத் தீண்டின.
அவனின் முரட்டுத்தனமும் ஆக்ரோஷமும் அவளின் முன்பு மட்டும் எங்கோ மறைந்துவிட, எங்கே அவளுக்கு வலித்துவிடுமோ எனப் பார்த்துப் பார்த்து அவளைக் கையாண்டான்.
இப்பொழுது வலி மறைந்து, அவள் கண்களில் வந்து போன பரவசம் அவளது நிலையை அவனுக்குக் கூறிவிட, அவனின் உணர்ச்சிகளோ கரையுடைத்துக் கொண்டு சீறின.
தான் இதுவரை தேக்கி வைத்திருந்த மொத்த உணர்வுகளையும் அவளுக்குள் கொட்டியவன், அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
பின் அப்படியே அவளின் மார்பில் தவழும் தாலியில் குனிந்து, தன் மீசை முடி உரச முத்தமிட்டு விலகிப் படுக்க முனைந்த நேரம், அவனை அப்படியே தன் மார்போடு அணைத்துக்கொண்டு அவனது சிகை வருடியவளுக்கு கண்கள் மீண்டும் கசிந்தன.
பின் வாராது போகுமோ? எத்தனை அழுகை, எவ்வளவு வலி! அத்தனை தடைகளையும் தாண்டி அல்லவா இணைந்திருக்கிறார்கள்.
இருவருக்குமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க, அவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்தபடியே படுத்திருந்தனர்.
அப்பொழுதுதான் திடீரென்று நினைவு வந்தவளாய், ராவணனைத் தன்னிடம் இருந்து விலக்கிப் படுக்க வைத்த அஜூதியா, சற்று எம்பி அவன் கழற்றிப் போட்டிருந்த அவனது கருப்புச் சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள்.
பின்னர் எழுந்து சென்று கபோர்டைத் திறந்து, அங்கிருந்த மருந்துப் பெட்டியை எடுத்து வந்தவள், அதில் இருந்த கழிம்பை எடுத்துக்கொண்டு குப்புறப் படுத்தவாறே தன்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த தன்னவனின் அருகே வந்து அமர்ந்தாள்.
அவனோ இன்னும் நகர்ந்து வந்து அவளின் இடையை வளைத்தபடி, அவளது வயிற்றில் முகம் புதைத்துக்கொள்ள, தன் கணவனின் செய்கையில் விரிந்த அவளது இதழ்கள், அவனது முதுகுக் காயங்களைக் கண்டு மிகவும் வருந்தின.
அதன் பிறகு கலங்கிய தனது விழிகளைத் துடைத்தவள், தன் கணவனின் முதுகில் உள்ள அத்தனை காயங்களிலும் முதலில் தனது இதழ்கள் கொண்டு மெல்ல ஒற்றி எடுத்து மருந்திட்டவள், பிறகு கழிம்பால் மருந்து போட, அவனோ இன்னும் நகர்ந்து வந்து அவளது நாபியில் இதழ் பதித்து அடுத்த போருக்கு அடிப்போட்டான்.
கணவனின் செய்கையில் தன் கீழ் இதழை அழுந்தக் கடித்துக் கண்களை மூடித்திறந்தவள்,
“சக்கர விளையாடாம சும்மா இரு இப்போதான் நான் மருந்து போட்டிருக்கேன்” என்றாள் கெஞ்சலாக.
ஆனால், ராவணனின் இதழ்களோ சற்று மேலேறி அஜூதியாவின் உணர்ச்சியின் முடிச்சுகளில் பதிந்ததில் முதலில் கிறங்கியவள், அதன் பிறகு அவன் தன் பற்கள் கொண்டு அவளது சட்டையின் பொத்தான்களை ஒவ்வொன்றாக விடுவிக்கவும், சுயம் பெற்று அவனது தலைமுடியைப் பற்றி நிமிர்த்தி அவனின் கண்களைப் பார்த்தாள்.
அவனோ கிறங்கிய விழிகளுடன், “வேண்டாமா?” என்று கேட்க, அந்த கேள்வியில் ‘எனக்கு வேணுமே’ என்கின்ற அவனது ஆசையும் ஏக்கமும் புதைந்திருக்க, புரிந்து கொண்டவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
அதன் பின், தன்னவனை அப்படியே தன்னோடு அழுத்தி அணைத்துக்கொண்டு அவனது சிகைக்குள் கைகோர்த்து அவள் நெருக்கிக்கொள்ள, இப்பொழுது அவளின் மறுப்புகளையெல்லாம் செல்லச் சிணுங்கல்களாக மாற்றினான் அவளின் காதல் கணவன்.
‘இன்னும் என்னவெல்லாம் என்னைச் செய்யப் போறடா…’ என்கிற அளவுக்கு அவளைத் திணற வைத்து, சிலிர்க்க வைத்து, உருக வைத்து, அவளுள் தானும் உருகிக் கலந்து, அவள் அறியாத வித்தைகளைக் கற்றுக்கொடுக்க, அவனிடம் இருந்து அனைத்தையும் கற்றுக்கொண்டவளோ, அவனை முழுதாக உள்வாங்கிக்கொண்டு அவனுடன் சேர்ந்தே தானும் கரை சேர்ந்தாள்.
அதன் பிறகு, தன்னவளை இழுத்துத் தன் மார்பில் போட்டுக்கொண்ட ராவணன், அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்துத் தன் இரு கரங்களுக்குள் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, மென்மையாக அவளின் சிகையை வருடிக்கொடுக்க, அந்தச் சுகத்திலேயே அவனின் திரண்ட மார்புக்குள் புதைந்தபடி மெல்லத் தன் விழிகளை அஜூதியா மூடிக்கொள்ள, ராவணனின் விழிகளும் மெதுவாய் மூடிக்கொண்டன!