அத்தியாயம் 36
மறுநாள் காலை நேரத்துடன் கிளம்பி விட்டாள் ஷூட்டிங் ஸ்பாட்க்கு.
ஆனால் ஷூட்டிங் தான் நடைபெறவில்லை.
“என்ன தர்ஷன் என்னாச்சு”
நேத்ரா தர்ஷனிடம் கேட்டாள்.
“வேற என்ன ஹீரோயின் தான் இறந்துட்டாங்களே.. அதான்”
அவன் கூற
“அப்போ கதையும் மாறுமே”
நேத்ரா யோசனையாகக் கூறினாள்.
“ம்ம் ஆமா.. அதான் அப்பா யோசிச்சிக்கிட்டிருக்காரு”
அவன் கூறினான்.
“ம்ம்..”
அவள் அமைதியாகி விட்டாள்.
“இன்னைக்கு அப்போ ஷூட்டிங் இல்லையா”
“தெரில”
“நா வீட்டுக்குப் போகவா”
அவனிடம் கேட்க.
“ம்ம் ஓகே அப்போ நீ கெளம்பு.. அக்ஷரன் ஸேர்க்கு ஃபோன் பண்ணி இன்ஃபோம் பன்னு”
அவன் கூற தலையசைத்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.
அக்ஷரனுக்கு அழைப்பை ஏற்படுத்த அழைப்பு ஏற்கப்படவில்லை.
“இவங்க ஏதாச்சும் வேல விஷயமா வெளில போய் இருப்பாங்களோ”
நினைத்துக் கொண்டு வெளியே வந்தவள்.
மீண்டும் ஒரு முறை அழைப்பை எடுக்க அப்பொழுதும் அழைப்பு ஏற்கப்படவில்லை.
“சரி ஆட்டோல போகலாம்”
நினைத்துக் கொண்டாள்.
ஏனெனில் அக்ஷரனது கட்டளையும் அதுவே..!!
ஒரு வேளை தன்னால் வரமுடியாமல் போனால் ஆட்டோவில் வரவேண்டும்,அத்துடன் சந்தேகப்படும்படியானவரகளுடன் வரக்கூடாது.. என்ற அறிவுறுத்தலுக்கமைய அவள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவையும் ஆட்டோ ட்ரைவரையும் பார்த்துக் கொண்டிருக்க அவளது பார்வையில் வந்து விழுந்தாள் ஶ்ரீஜா.
யாரோ ஒரு ஆடவனுடன் கைக் கோர்த்து அங்கு உள்ள ஹோட்டலுக்குள் நுழைய அவர்களது நெருக்கத்தைப் பார்த்த நேத்ராவினது புருவங்களோ முடிச்சிட்டது
“அவங்களோட ஃப்ரன்ட்டா இருக்கலாம்”
நினைத்தாலும் இன்னுமொரு மனமோ,
“ஆமா ஃப்ரன்ட்டா இருந்தாலும் இப்பிடியா போவாங்க அவன் இவ இடுப்புல கை போட்டுக்கிட்டு அவளும் அவன் மேல அப்பிடியே சரிஞ்சிக்கிட்டு பார்க்க சகிக்கல்ல”
இப்படி எடுத்துக் கூற.
அவளறியாமல் அவர்களுக்குப் பின்னால் அவளும் நுழைந்தாள் அந்த ஹோட்டலுக்குள்.
அந்த ஹோட்டலோ நவீனமயமான அலங்கரிப்புக்களுடன் ஜொலித்தது.
அங்கிருந்த மேசைகளும் கதிரைகளும் அலங்காரப் பொருட்களும் கோடிக்கணக்கில் இருப்பதை பறைசாற்றும்.
அந்த மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த உணவுகளோ இது வரைக் கண்டு கேட்டிராத உணவு வகைகள் தான்.
இவள் அந்த இடத்தையே பிரம்மிப்புடன் மிரட்சியாகப் பார்த்தாள்.
“அவங்க ரெண்டு பேரும் எங்க போய் இருப்பாங்க”
அங்கு அமர்ந்திருந்த மேல்நாட்டு வர்க்கத்தினரைப் பார்த்துக் கொண்டே பார்வையை சுழலவிட்டவளது பார்வையில் தட்டுப்பட்டனர் அவ்விருவரும்.
ஶ்ரீஜாவோ அவ்வாடவனின் மடியில் மாத்திரம் தான் ஏறி அமரவில்லை.
அந்தளவு நெருக்கமாக அமர்ந்திருக்க அந்த ஆடவனது பார்வை ஶ்ரீஜாவின் உடல் முழுவதையும் ஸ்கேன் செய்வதைத் தூரத்தில் இருந்து பார்த்த நேத்ராவின் பார்வையில் இருந்தும் தப்பவில்லை.
அவ்வாடவனின் பார்வையில் நேத்ராவிற்கே உடல் கூசி அறுவெறுப்பாகியது.
ஆனால் ஶ்ரீஜாவோ புன்னகைத்துக் கொண்டு அவ்வாடவனின் கையோடு தன்கையைக் கோர்த்துக் கொண்டிருக்கும் விதம் ஏதோ காதலர்களை ஒத்திருந்தது.
அத்துடன் ஶ்ரீஜாவின் கண்களில் இதற்கு முன் நேத்ராவைப் பார்க்கும் போது காணப்படும் அப்பாவித்தனம் ஒரு வீதம் கூட இல்லை.
கண்களில் அதற்கு நேரெதிராக அல்லவா ஏதோ ஒன்று இருந்தது.
அவளுக்கு ஏதோ ஒன்று உறுத்த அவர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும் அவளது அழைப்பேசி அதிரவும் சரியாக இருந்தது.
அதில் அக்ஷரனது எண் ஒளிர எடுக்காவிட்டால் பூகம்பமே உண்டாகும் என அறிந்தவளாக அழைப்பேசியை ஏற்றுக் காதில் வைத்தாள்.
“என்னாச்சு ஏதாச்சும் ப்ரொப்ளமா”
எடுத்ததும் மறுபக்கத்தில் அவனது குரல் ஏதோ பதட்டமாக இருந்தது போல் காணப்பட்டது.
“இல்ல.. ஷூட்டிங் இன்னைக்கு இல்லையாம் அதான்”
அவள் கூற மறுபக்கம் இழுத்து மூச்சு விடுவது நன்றாகக் கேட்டது இப்பக்கத்திற்கு.
“ஓகே இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வாரேன்”
அவன் கூறி விட்டு அழைப்பைத் துண்டிக்க.
“ஶ்ரீஜாகூட போய் பேசுவோமா”
என எண்ணத்தைக் கை விட்டாள் அடுத்து ஐந்து நிமிடங்களில் அக்ஷரன் வருவதாகக் கூறியதால்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே ஹோட்டலை விட்டு வெளியே வந்தவள் ஷூட்டிங் முடிந்ததும் வழமையாக நிற்கும் இடத்தில் நின்றுக் கொள்ள சொன்னது போலவே அடுத்து ஐந்து நிமிடங்களில் அக்ஷரன் வந்திருந்தான்.
காரில் போகும் போது கூட,
“இவங்ககிட்ட சொல்வோமா.. ம்ஹூம் வேணாம்.. என்ன ஏதுன்னு உறுதிப்படுத்துக்கிட்டு சொல்வோம் இல்லன்னா என்னால சும்மா அவங்க ரெண்டு பேருக்குமிடைல பிரச்சின வரும்”
அவளாக நினைத்துக் கொண்டாள்.
அவளது முகம் யோசனையில் இருப்பதை அக்ஷரனும் உணர்ந்தாலும் எதுவும் கேட்கவில்லை.
வீட்டிற்குச் சென்றதும் அவன் நீட்டியதைப் பார்த்து இவள் புருவம் சுருக்கினாள்.
“என்ன இது..”
“பார்த்தா புரியல இன்விடேஷன் கார்ட்”
அவனது கையில் இருந்தது என்னவோ வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலாலான அழகிய அழைப்பிதழ் ஒன்று.
அதில் அக்ஷரன்&நேத்ரா எனப் பெரிய எழுத்தில் அழகாக எழுதப்பட்டிருக்க அதைப் பார்த்ததுமே இவளது நெஞ்சில் இனம் புரியா உணர்வு ஒன்று.
“ரிசப்ஷனுக்கு உனக்கு யாரெல்லாம் இன்வைட் பன்னனுமோ பன்னு எத்தன இன்விடேஷன் வேணும்”
அவன் கேட்க இவள் விழித்தாள்.
“என்ன பாக்குற சொல்லு”
அவன் கேட்க.
“அது.. எனக்கு தேவிப்பிரியா அபிலேஷ் அண்ணா தர்ஷன் இவங்க மூனு பேரையும் தான் தெரியும்”
அவள் கூற.
“ம்ம் ஓகே இந்தா ரெண்டு இன்விடேஷன்ஸ் கார்ட்”
என இரண்டை நீட்ட.
“நீயே போய் இன்வைட் பன்னு”
அவன் கூற.
“இல்ல நீங்களும் வாங்க எனக்கு மட்டும் போய் சொல்ல ஒரு மாதிரியா இருக்கு”
அவள் கூறினாள்.
“எனக்கு டைம் இல்ல நீ போய் சொல்லு”
அவன் மறுத்தான்.
“இல்ல இப்போ போய் சொல்லிட்டு வரலாம் நீங்களும் வாங்க”
அவள் மூக்கை சுருக்கி கெஞ்ச அவளது முகத்தை ஒரு நொடி உற்று நோக்கி விட்டு மறுபக்கம் திரும்பியவன்
“சரி போகலாம்”
அவன் கூற இவளது முகம் பளிச்சிட்டது.
இருவரும் அபிலேஷினது வீட்டிற்குச் சென்றனர்.
அவள் தான் காலிங் பெல்லை அழுத்தினாள்.
அவன் விறைப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.
தேவிப்பிரியா வந்து கதவைத் திறந்தவள்.
“அடடா ஜோடியா வந்திருக்கிங்க வாங்க வாங்க உள்ள”
அவள் புன்னகைத்துக் கொண்டுக் கூற நேத்ராவும் புன்னகைத்துக் கொண்டு உள்ளே நுழைய அக்ஷரனும் உள்ளே நுழைந்தான்.
“உட்காருங்க என்ன சாப்ட்றிங்க”
அவள் சமயலறைக்குள் நுழையப் பார்க்க.
“எதுவும் வேணாம் இப்போ தான் சாப்ட்டோம் அண்ணா இல்லயா”
நேத்ரா தான் பேசினாள் அக்ஷரன் அமைதியாக இருந்தான்.
“குளிக்குறாரு”
தேவிப்பிரியா கூறும் போதே அறையில் இருந்து வந்தான் அபிலேஷ்.
அக்ஷரன் அபிலேஷை அழுத்தமாகப் பார்த்தான்.
அவனும் அவனைப் பார்த்து விட்டு நேத்ராவைப் பார்த்து புன்னகைத்தான்.
“வாம்மா …”
நேத்ராவிடம் கூறியவன்
“அண்ணா நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரனும்”
எனக் கூறி கையில் இருந்த அழைப்பிதழை நீட்டினாள்.
அக்ஷரன் எதுவும் பேசவில்லை ‘நீ அழைத்தததற்காக மாத்திரம் தான் வந்தேன்’
என்ற ரீதியில் விறைப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.
“ஓஹ்.. ரிசப்ஷனா சூப்பர்”
தேவிப்பிரியா கூறி புன்னகைக்க நேத்ராவும் புன்னகைத்து விட்டு அக்ஷரனைப் பார்த்து விழியசைத்து ஏதோ கூற அவனும் புருவம் உயர்த்தி பார்த்தான் அவளை.
“நீங்களும் கூப்டுங்க”
அவனது காதுக்குள் பேசுவதாக எண்ணி மார்பின் அருகே சொல்ல அவளைப் பார்த்து முறைத்தவன் வேறு வழியில்லாமல்,
“வந்துடுங்க”
அவன் தேவிப்பிரியாவைப் பார்த்து சற்று இதழ் விரித்துக் கூறியவன் அபிலேஷை என்றும் போல் அழுத்தமாகத் தான் பார்த்தான்.
அபிலேஷ் தலையசைக்க தேவிப்பிரியாவும் புன்னகையுடன் தலையசைத்தாள்.
***
இருவரும் அபிலேஷினது வீட்டிற்குச் சென்று விட்டு வந்தனர்.
“தர்ஷனுக்கு நாளைக்கு இன்வைட் பண்ணலாம்”
அவன் கூற இவள் சரியென தலையசைத்தாள்.
“வெளில போகனும் வா”
“எங்க”
அவள் கேட்டாள்.
“அதான் வெளிலன்னு சொன்னேன்”
அவன் கூற அதற்கு மேல் கேட்கமுடியாமல் அவனுடன் சென்றாள்.
அவன் அழைத்து வந்ததோ ஒரு நகைக் கடைக்குத் தான்.
“இங்க எதுக்கு”
அவனுக்கு அருகில் சென்றுக் கேட்டாள்.
“சாப்ட்றதுக்கு”
அவன் என்றும் போல் கூற.
“எப்பவுமே ஒழுங்கா பதில் சொல்ல மாட்டிங்களா”
அவள் கடுப்பாகக் கேட்க அவளை மெச்சுதலாகப் பார்த்தவன்,
“பரவல்லயே பேசக் கத்துக்கிட்ட சரி வா”
அவன் கூறி விட்டு உள்ளே.
“இப்போ இவரு திட்டினாரா இல்ல பாராட்டினாரா”
குழம்பிப் போனாள் பேதை.
அவனுடன் உள்ளே நுழைந்தாள்.
அங்கு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நகைகளைப் பார்த்ததும் ரசிக்கத் தான் தோன்றியது.
“யாருக்கு வாங்கனும்”
அவனிடம் மெதுவாகக் கேட்க.
“ம்ம் என்னோட லவ்வர்க்கு”
அவன் கடுப்பாகக் கூறினான்.
அதில் அவளது முகம் சுருங்கியது.
“அப்போ எதுக்கு என்ன கூட்டிட்டு வந்திங்க”
அவனிடம் சண்டைக் கோழியாக சிலிர்த்தாள்.
ஏனோ அவன் அவ்வாறு கூறியது சிறிதும் விருப்பம் இல்லை.
“ம்ம் லவ்வர்க்கு வரமுடியாத நிலம அதான் உன்ன கூட்டிட்டு வந்தேன்”
அவன் கூறி விட்டு அவனை நோக்கி வந்த அந்த கடையின் மேனேஜரைப் பார்த்து சற்று இதழ் விரித்தான்.
“வாங்க ஸர்.. என்ன மாதிரியான டிசைன் பாக்கனும்”
அவன் பணிவாகக் கேட்டிட,
“லேட்டஸ்ட் டிசைன்ஸ காட்டுங்க”
அக்ஷரன் கூறினான்.
மேனேஜரே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகான டிசைன்களிலான நகைகளை எடுத்துக் காண்பித்தார்.
அக்ஷரன் திரும்பி நேத்ராவைப் பார்க்க அவளோ உதட்டை சுழித்தாள்.
அதைப் பார்த்து பெருவிரலால் புருவத்தை நீவி விட்டவன்,
“டிசைனப் பாரு”
“நா எதுக்கு பாக்கனும்”
“லவ்வர்க்கு கிஃப்ட் பண்ண வைஃப்கிட்ட தானே கேக்கனும்”
அவனது குரலில் ஏகத்துக்கும் நக்கல் தான்,
அவனைப் பார்த்து முறைத்தாள் மனைவி.
“முட்டக்கண்ண விரிக்காம டிசைனப் பாரு”
அவன் அவளிடம் கூற இன்னும் விழிகளை விரித்து அவனை முறைத்தாள்.
“இவ ஒருத்தி”.
வாய்க்குள்ளால் முனகியவன் மேனேஜர் நீட்டியிருந்த நகையை எடுத்து அவளை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆளுயரக் கண்ணாடி முன் நிறுத்தியவன்
அவனது கையில் இருந்த நெக்லசை அவளது கழுத்தில் வைத்தான்.
இவள் அவனை விழி விரித்துப் பார்த்தாள்.
அவன் அவளுக்கு மிக மிக அருகில் நெருக்கமாக நெருங்கி நின்றிருந்தான்.
அவன் விடும் மூச்சுக் காற்று அவளது பின் கழுத்தில் மோத இவளது உடல் சிலிர்த்தது.
“என்ன பண்ணுறிங்க”
அவள் கூச்சமாக நெளிந்துக் கொண்டுக் கூற.
“நீ பார்த்திருந்தா நா எதுக்கு பார்க்க போறேன்”
நிலைக் கண்ணாடியில் அவளைப் பார்த்துக் கொண்டே கூற இவளுக்குத் தான் அவனது பார்வையை எதிர் நோக்க முடியாமல் திணறியது.
அவனது மார்பின் உயரத்தை விட இன்னும் சற்று குறைவான உயரம் தான் அவள்.
அவனோ ஆறடியில் ஆளை அசரடிக்கும் அழகிலும் உயரத்திலும் நிமிர்ந்து நின்றிருந்தான்.
விழியை அகற்றாமல் ரசிக்கக் கூடிய ஆணழகன் தான்.
“ரொம்ப அழகா இருக்காங்கள்ல”
அவள் அவனையேப் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் இருவருக்கும் பின்னால் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவனையே ரசித்துக் கொண்டிருக்க இவளுக்கு மூக்கு விடைத்தது.
“நீங்க போய் அங்க இருங்க நா பார்த்துக்குறேன்”
அவனிடம் கூற அவன் புரியாமல் விழித்தான்..
“இல்ல இரு அடுத்தத”
அவன் ஏதோ கூற வர அவனது பக்கத்திற்குத் திரும்பியவள்.
“ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு”
என்றும் இல்லாத வகையில் சற்று குரலை உயர்த்தி முறைத்துக் கொண்டு அவள் கூற இவன் தான் புதிதாக விழித்தான்.
******
தொடரும்..❤
💜அஷு💜