நாட்களில் வாரங்களாகியது… அன்று குளித்து முடித்து மார்பில் டவளை கட்டிக்கொண்டு வெளி வந்தாள் அவந்திகா…
அவள் குளிக்க செல்லும் போது அதிரூபன் அலுவலகத்திற்கு அப்போது தான் கிளம்பி அறையில் இருந்து வெளியேறி இருந்தான்…
இன்று இவளுக்கு வேலை அவ்வளவாக இல்லாததால் மதியம் போல கிளம்பி அலுவலகத்திற்கு வர சொல்லி இருந்தான் அதிரூபன் …
அதனால் மெதுவாக எழுந்து குளித்து முடித்து வெளியே வந்தாள்…
அச்சமயம் அதிரூபனும் அவர்களது அறையில் எதையோ தேடிக் கொண்டு இருந்தவன் அவந்திகாவை அந்நிலையில் நிச்சயம் எதிர்பார்க்கவே இல்லை…
அவரை அவ்வாறு கண்டதும் சட்டென திரும்பி நின்று,
” சாரி.. நான் ….”என எதையோ கூற வந்திட அந்த இடைவெளியில் அவந்திகாவும் முதலில் அவனைக் கண்டு அதிர்ந்து தான் போனாள்..
ஆனால் அடுத்த நொடியில் தான் எவ்வளவு சீண்டினாலும் பொறுத்துக் கொண்டு போகும் அதிரூபனை ஏளனமாக பார்த்தவள் வேண்டுமென்றே அவனை நெருங்கி,
” என்ன அதிக்குட்டி என்னை பார்த்ததும் உங்களுக்கு மூட் மாறிடுச்சா..??” என வழக்கம் போல அவனை அவமதித்து பேசினாள்…
அவனோ அவளது பேச்சில் கண்களை இறுக மூடி தனது கோபத்தை கட்டுப்படுத்த முயன்றான்…
மேலும் தொடர்ந்த அவந்திகா,
“சாரி சாரி… உங்களுக்கு தான் நான் நிர்வாணமாகவே நின்னாலும் என் மேல மூடே வராதே, ஏன்னா நீங்க தான் ஒரு ஜடமாச்சோ.. நான் அரைகுறையா நிக்கிறது உங்களுக்கு கவலையே இல்லைனு நினைக்கிறேன்..” என அவனது ஆண்மையை இன்னும் அசிங்கப்படுத்தி பேசிட..
இத்தனை நாட்களாய் இழுத்துப் பிடித்த பொறுமையுடன் தன்னை அவள் எவ்வளவு சீண்டினாலும் பொறுத்துப்போன அதிரூபன் இந்த கணம் தனது ஒட்டுமொத்த பொறுமையையும் தூக்கி எறிந்து விட்டு சட்டென திரும்பி அவளது ஒற்றை கரத்தை பற்றி இழுத்து தன் மறுக்கரத்தால் அவள் மார்பில் முடிச்சிடப்பட்ட பூந்துவாளையை கழட்டி தூர எறிந்து இருந்தான்..
அவளை நொடியில் என்ன ஏதென சிதாரிப்பதற்குள் மெத்தையில் சாய்த்து கழுத்தில் முகம் புதைத்து ஒரு கரத்தால் அவளது அழகினை பற்றிக் கொண்டான் அழுத்தமாக…
நடக்கும் செயலை மூளை கிரகிப்பதற்குள் அவளது கழுத்து வளைவில் தன் உதடுகளால் அழுத்தமாய் உராய்ந்தவன் தனது கரங்களில் அழுத்தம் கூட்டி அவளது காது மடலை கடித்து இழுத்து,
” நானும் ஆம்பள தான்டி ..!” எனக் கூறிய அடுத்த கணம் தனது ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளியவள் பளார் என ஒரு அறையை விட்டு இருந்தாள் அவனது கன்னத்தில்…
மெத்தையில் அவளது இருபுறமும் காலை ஊன்றியவாறு தலையை திருப்பிக் கொண்டு மூச்சு வாங்க அமர்ந்து இருந்தான் அதிரூபன்..
அவந்திகாவும் இரு கரங்களால் தன்னை மறைத்துக் கொண்டு கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் ,
“எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட… இப்படி….நடந்துப்ப…ச்சீ… அசிங்கமா இல்ல உனக்கு..??”.. என அவனை அருவருப்பாய் பொங்க பேசிட.. அடுத்த கணம் அவளது இரு கரங்களையும் பிடித்து மெத்தையில் சாய்த்து அவளையே சிவந்த வழிகளால் கோபம் கொப்பளிக்க பார்த்த அதிரூபன்,
” நானா உன்னை தேடி தேடி வந்து சீண்டினேன்..???. நீதானடி என்னை சீண்டிட்டே இருக்க..!
இங்க வந்ததுல இருந்து நான் உன்னை தொட கூட இல்லை.. நீதான்டி என்னை உரசிட்டு வந்து நிக்கிற…” என எரிச்சலாக பேசிடவும் அவனது வார்த்தையில் மிகவும் அசிங்கப்பட்டு போனாள் அவந்திகா…
“நானும் தேவை இல்லாம ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோமேனு குற்ற உணர்ச்சில போனா போகட்டும்னு நீ என்ன பண்ணாலும் என்ன பேசினாலும் பொறுத்துட்டு போனேன்…
ஆனா இன்னைக்கு நடந்தது….ப்ச்….என் ஆண்மையவே நீ சீண்டிட்டடீ…
ஒரு உண்மைய சொல்லட்டா உன்னை பார்த்தாலே எனக்கு ஃபீலிங்ஸ் பொத்துகிட்டு வருது… பண்ணவா இப்ப…?” என தலையை சாய்த்து கேட்ட கணம் அவனை மிரட்சியுடன் பார்த்தவளுக்கு மேனி நடுநடுங்கியது …
இத்தனைக்கும் அவள் மீது ஒட்டுத்துணி இல்லை .. அவனும் அவள் மேனி மீது தன் மேனி படாதவாறு தான் அவளைப் பார்த்தவாறு மெத்தையில் குனிந்து இருந்தான்…
ஏன் அவன் பார்வை அவளது விழிகளை தாண்டி கூட செல்லவில்லை..
அவளது விழிகளை மட்டும் கோபமாக மாறி மாறி பார்த்தவன்,
” நானும் ஆம்பள.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்..!இனி என்னை சீண்டி பார்க்க நினைச்ச மொத்தமா முழுங்கிடுவேன் உன்னை…சும்மா சொல்றேன்னு நினைக்காத..தாங்க மாட்ட நீ..” என பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் அடுத்த கனம் அவளை உதறி தள்ளி விட்டு போர்வையை அவள் மீது போட்டுவிட்டு எடுக்க வந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டிருந்தான். …
அவன் வெளியேறிய அடுத்த நொடி மெத்தையில் முகத்தை அழுந்த புதைத்து கதறி அழலானாள் அவந்திகா ..
அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம் தானே..!
திருமணமான பிறகு அன்று பார்ட்டியில் அனைவர் முன்பும் அவளுக்கு முத்தம் கொடுத்தான் தான் …
ஆனால் அதன் பின்னர் அவளை அவன் தொடக் கூட இல்லையே… ஏன் எதுவும் வம்பு இழுக்க கூட இல்லையே ..
அவள் மனம் நோகும்படி ஒரு சொல் கூட அவளை கூறியது கிடையாது..
ஆனால் இவள் தானே அவனை மேலும் மேலும் சீண்டி கொண்டே இருந்தாள்…
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்பது போல தன் மனதில் இருக்கும் அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் யாரிடமும் கூறிட முடியாது பெண்ணவளிடம் கோபமாய் வெளிப்படுத்திவிட்டு வெளியேறி விட்டிருந்தான் அதிரூபன்…
அதன் பின்னர் அவந்திகா மிகவும் அமைதியாகிவிட்டாள்.. அவனை பழையபடி சீண்டுவதில்லை..
ஏன் அவன் ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அவள் அனாவசியமாய் செல்வது கூட கிடையாது…
அலுவலகத்திற்கு கூட அதியமானுக்காக இருவரும் ஒன்றாக காரில் பயணித்தாலும் அவள் அவன் புறம் திரும்புவது கூட கிடையாது ..
அதிரூபன் அதை பெரிதாக எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை ..அவளை எண்ணி அலட்டிக் கொள்ளவும் இல்லை அவன்…
அலுவலகத்தில் வேலை விடயமாக மட்டும் பேசுபவள் வீட்டில் வார்த்தைகளுக்கே பஞ்சம் ஆகிவிட்டது போல மிகவும் அமைதியாக வளம் வந்தாள்…
இந்நிலையில் தான் அதிரூபன் மற்றும் அவந்திகா இருவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு நடந்தது ..
என்னதான் ரேவந்த் அதிரூபனை விட்டு விலகி இருந்தாலும் அவந்திக்காவையும் சரி அதிரூபனையும் சரி கவனித்துக் கொண்டு தான் வருகிறான்..
முன்பு போல அவந்திகா அவனை சீண்டுவதில்லை என்பதை புரிந்து கொண்டதோடு அதிரூபனிடமும் கூட தேவையில்லாமல் பேச்சு அவள் வைத்துக் கொள்ளாததை கவனித்து வந்த ரேவந்த் இது தான் தக்க சமயம் என்று முடிவெடுத்து அதிரூபனை
கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க முயன்றான்…
எப்போதும் அதிரூபனுக்கு ரேவந்த் தான் காபியை கலந்து தருவான் இடைவெளி நேரங்களில்…
அவந்திகாவை திருமணம் செய்த பின்னர் அவளே அதிரூபனுக்கும் தனக்குமான காபியை அவனது அறையிலேயே அவனை சீண்டிக் கொண்டே அருந்திடுவாள்..
இப்போது அவந்திகா அதிரூபன் இருக்கும் பக்கம் கூட வராது இருக்கவும் இந்த வாய்ப்பினை தவற விட்டு விடக்கூடாது என எண்ணிய ரேவந்த் பழையபடி அதிரூபனுக்கான காபியை கலந்து அவனுக்கு தந்தான் …
எப்போதும் ரேவந்த் தந்தால் யோசிக்காது புன்னகை முகத்துடன் வாங்கி குடிக்கும் அதிரூபன் இன்று ரேவந்த் நீட்டிய காபி கப்பை விழிகள் சுருக்கி பார்த்தவன் தனக்கு முன்னே நின்று இருந்த ரேவந்தை நிமிர்ந்து பார்த்தான் ..
அழகாய் புன்னகைத்து வைத்த ரேவந்த்,
” உனக்கான காபி எவ்ளோ நாளாச்சு உனக்காக நான் காபி கலந்து..!” என்ற நொடி அதிரூபனின் மூளையில் ஏதோ ஒரு எண்ணம் வந்து போனது …
முயன்று அதை ஓரம் தள்ளியவன் பெருமூச்சுடன்,
” வேண்டாம் ரேவந்த் இப்ப நான் காபி குடிக்கிறது இல்ல..” என்றதும் சப் என்று ஆனது ரேவந்திற்கு..
இருந்தும் விடாது,
” என்ன ரூப் உனக்காக ஆசையா போட்டேன் ..எப்போதும் அந்த அவந்திகா தான் உனக்கு காபி போடுவா.. எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா நம்ம லவ் மூமெண்ட் எல்லாம்..!..
இப்போ திரும்பவும் எனக்கு சான்ஸ் கிடைச்சிருக்கு ப்ளீஸ் எனக்காக குடியேன்..!” என மிகவும் வற்புறுத்திட வேறு வழியின்றி அவன் தந்த காபியை முழுதாய் குடித்து முடித்தான் அதிரூபன்…