அத்தியாயம் 41

அத்தியாயம் 41

 

கணவனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என அழைப்பு வந்ததும் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வைத்தியசாலையை அடைந்திருந்தாள்.

எப்படி வந்தாள் எனக் கேட்டால் சத்தியகமாகத் தெரியாது.

வைத்தியர் வரும் வரை கலங்கிய கண்களைக் கூடத் துடைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதிலோ இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தாள் அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது என,

ஐந்து நிமிடங்களில் பக்கத்தில் ஒரு உருவம் வந்து நிற்பது போல் தோன்ற திரும்பிப் பார்த்தாள் ஶ்ரீஜா தான் இருந்தாள் இவள் அவளைக் கேள்வியாகப் பார்க்க,

“அது நா தான் ஹாஸ்பிட்டல்ல கொண்டு வந்து சேர்த்தேன்”

அவள் கூற இவள் எதுவும் பேசவில்லை.

“அப்போ அவங்ககூட தான் இருந்திருக்காங்க”

நினைக்கும் போதே இன்னும் முட்டிக் கொண்டு வந்தது அழுகை.

ஒரு சில நொடிகளில் அறையில் இருந்து வெளியே வந்தார் வைத்தியர்.

அவரை இரண்டெட்டில் அணுகியவள்.

“அவருக்கு.. ஒன்னுமில்லையே”

அவள் கேட்க அவளையும் ஶ்ரீஜாவையும் ஒரு மாதிரியாகப் பார்த்தார் வைத்தியர்

“நீங்க”

அவரது மூக்குக் கண்ணாடியிற்குள் இருந்த கண்கள் யோசனையாக சுருங்கியது.

“நா அவரோட மனைவி”

அழுத்தமாக வந்தது வார்த்தை.

“ஓஹ்.. ஹீ ஈஸ் ஃபைன் நத்திங் டு வொர்ரி.. கால்ல சின்னதொரு கீறல் அவ்ளோ தான்..ஒரு வீக் போல பெட் ரெஸ்ட் எடுத்தா ஓகே ஆகிடும்”

வைத்தியர் கூற அப்பொழுது தான் மூச்சே சீரானது இவளது.

ஶ்ரீஜா எதுவும் பேசவில்லை.

“அவர போய் பாக்கலாமா”

நேத்ரா கேட்க,

“ஓகே பாருங்க”

வைத்தியர் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தார். இவள் உள்ளேப் போகப் பார்க்க ஶ்ரீஜா அவளது கையைப் பற்றினாள் இவள் திரும்பி அவளைப் பார்த்தாள் யோசனையாக,

“உங்களோட போக்கப் பார்த்தா நீங்க அவர விட்டு பிரிய மாட்டிங்களோன்னு தோணுது”

கண்கள் கலங்க அவள் கூற இவள் என்ன சொல்லுவாள்.

“அது..”

நேத்ரா ஏதோ கூற வர.

“எனக்கு சத்தியம் பன்னிக் கொடுங்க”

அவள் வலது கரத்தை நீட்ட இவள் திகைத்தாள்.

“என்ன”

வார்த்தை வரவில்லை.

“நீங்க அவர விட்டுப் போவிங்களான்னு எனக்கு தெரியல  பயமா இருக்கு என்னோட குழந்தைக்கு அப்பாங்குற உறவு இல்லாம போய்டுமோன்னு”

ஶ்ரீஜா கலங்க இவளுக்கு உள்ளுக்குள்ளே பூகம்பம் தான்.

“ப்ளீஸ் சத்தியம் பன்னிக் கொடுங்க என்னோட குழந்தைக்காக”

தாயாக அவள் கெஞ்ச இவள் தாரமாக தன்னவனை  தாரைவார்ப்பாளா??

“அது இப்போ அவர பார்த்துட்டு”

திக்கித் திணறி அவள் கூறினாள்.

“போய் பாருங்க ஆனா இன்னுமொரு வருஷத்துல அவர விட்டு போவிங்களான்னு சொல்லுங்க”

அவள் விடுவதாக இல்லை.

விழிகளை அழுந்த துடைத்தவள்.

ஶ்ரீஜாவைப் பார்த்து அவள் நீட்டிய கரத்தின் மேல் தனது கரத்தை வைத்தாள்.

“நா அவருக்கு தகுதியானவ இல்ல கண்டிப்பா நா அவர விட்டுப் போய்டுவேன்”

கூறும் போது இதயத்தில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலித்தது.

இதயத்தையே பாறாங்கல்லாக மாற்றிக் கொண்டுக் கூறினாள் பாவை.

“உண்மையாவா”

கண்கள் மின்ன ஶ்ரீஜா கேட்டாள்.

விழிகளை அழுந்த மூடியவள் தலையை ஆம் என ஆட்டினாள்.

“தேங்க்யூ ஸோ மச்”

ஶ்ரீஜா கூற இவள் எதுவும் பேசவில்லை.

“இப்போ உள்ளே போறேன்”

அவள் கூறி விட்டு உள்ளே ஓடினாள்.

மனம் கனத்தது.

அவனை விட்டு விலக முடியுமா?

அதற்காக அவனுடன் சேர்ந்து வாழ இந்த ஜென்மத்தில் முடியாது.

இவள் உள்ளேப் போக அவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

வலது காலில் முழங்காலுக்குக் கீழே கட்டு போடப்பட்டிருந்தது.

என்றும் போல் கம்பீரமாகத் தான் அவன் இருந்தான் இவளுக்குத் தான் கண்ணில் தண்ணீர் வந்தது.

அவன் தனக்கானவன் இல்லை என்ற உண்மை உணரப்பட்டதால் வந்த கண்ணீராகத் தான் இருக்கும் இது.

“எதுக்கு அழுற நா ஒன்னும் செத்துப் போய்டல்லயே”

அவன் நிதானமாகக் கூற இவளுக்குத் தான் பக்கென்றாகியது.

“என்ன பேசுறிங்க”

அவனிடம் நெருங்கி கோவமாகக் கேட்டாள்.

“நீ அழுறத பார்த்தா அப்பிடி தான் தோணுது இரிடைட்டிங்”

அவன் வார்த்தையை பற்களுக்கிடையில் கடித்துத் துப்ப கண்ணீரை துடைத்தாள் முறைத்துக் கொண்டே அவனை,

“எப்பிடி ஆச்சு”

அவள் கேட்க.

“ப்ச்ச் எக்ஸிடன்ட்”

அவன் சலித்துக் கொள்ள.

“பார்த்து பத்தரமா போகலாமே..”

அவள் கடிந்துக் கொண்டாள்.

அவள் கூற உள்ளே வந்தார் வைத்தியர்

“இப்போ எப்பிடி இருக்கு மிஸ்டர் அக்ஷரன்”

“இப்போ ஓகே டாக்டர்.. வீட்டுக்கு போகலாம்ல”

அவன் கேட்க,

“ஆமா போகலாம் பட் ரெஸ்ட்ல இருங்க”

வைத்தியர் கூற தலையசைத்தான்.

பின் டிஸ்ஜார்ஜ் ஆகி விட்டு அவன் காலை தரையில் வைக்க முடியாமல் தடுமாற அங்கிருந்த தாதியோ ஊன்றுகோலை எடுத்துக் கொடுக்க.

“இல்ல தேவல்ல என்னால நடக்க முடியும்”

அவன் உறுதியாக மறுத்து விட்டான்.

பின் ஒரு மாதிரியாக ஒரு காலை ஊன்றி தரையில் வைத்து வலது காலைத் தூக்கி வைத்து நடக்கப் பார்க்க முடியவில்லை.

அவனது தடுமாற்றத்தைப் பார்த்த நேத்ரா அவனது வலது பக்கம் சென்று அவனது வலது கையை தனது தோளில் போட்டவள் அவனது முதுகை அணைத்துப் பிடித்துக் கொள்ள அவளைப் பார்த்துக் கொண்டே இடது காலை தரையில் ஊன்றி நடந்தான் இப்பொழுது தடுமாற்றம் இன்றி நடக்க முடிந்தது.

அதற்காக வேண்டி முழு உடல் பாரத்தையும் அவள் மேல் போட்டு விடாமல் அவன் சமாளித்துக் கொண்டு மெதுவாக நடக்க அவனுடன் அவளும் மெதுவாக நடந்தாள்.

வைத்தியசாலையில் இருந்து வெளியே வரும் போது அங்கிருந்த வயதான தம்பதி ஒன்று இவர்களைக் கடந்து சென்றனர். அவர்கள் பேசியது இருவரது காதிலும் நன்றாக விழுந்தது.

“அங்க பாரு அந்த பொண்ணு எவ்ளோ அக்கறையா கூட்டிட்டு போறா நீயும் இருக்கியே”

அந்த வயதான தாத்தா தனது மனைவியை குறைப்பட்டுக்கொள்ள.

“யோவ் குடிச்சிட்டு வந்து என்னைய தூக்கி போட்டு மிதிக்கும் போது உனக்கு என்மேல இருந்த அக்கறை எல்லாம் எங்க போச்சு” 

அந்த வயதான பாட்டி அவரைப் பார்த்து கடுப்பாகக் கூறினாலும் கணவனது கையை அப்பாட்டி விட்டிருக்கவில்லை.

அவர்கள் இருவரும் கடந்து செல்ல இங்கு மெதுவாக சென்றுக் கொண்டிருந்த இருவரில் நேத்ராவினது இதழோ விரிந்தது.

அந்த வயதான தம்பதியினரின் க்யூட்டான சண்டையில்.

அக்ஷரனைக் கடைக்கண்ணால் பார்க்க அவன் என்றும் போல் தான் இருந்தான் இறுகிப் போய்.

இருவரும் வெளியே வர அக்ஷரனது காரை எடுத்துக் கொண்டு அன்று அவளை அழைத்து வர வந்திருந்தவர் வந்திருந்தார்.

அக்ஷரன் பின்னிருக்கையில் ஏறி அமர அவனுடன் நேத்ராவும் ஏறி அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அப்பார்ட்மமென்ட்டை கார் வந்தடைய முன்னர் போலவே அவனைத் தாங்கிக் கொண்டு அழைத்துச் சென்றாள் நேத்ரா.

அறையிலே கொண்டு போய் விட்டாள்.

“இருங்க ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாரேன்”

கூறியவள் அடுத்த நொடி அங்கிருந்து சென்று பத்து நிமிடங்களில் கையில் ஜூஸுடன் வர இவன் காலை நீட்டி கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தான்.

“இப்போ என்ன சமைக்கனும் உங்களுக்கு என்ன வேணும்”

அவள் கேட்க ஜூஸைக் குடித்துக் கொண்டு அவளைப் பார்த்தவன்.

“எனக்கு இன்னொரு வாட்டி ஹாஸ்பிட்டல் போக முடியாது”

அவன் கூற புரியாமல் விழித்தாள்.

“எதுக்கு.. நா”

ஏதே கூற வந்தவள் அவன் கூறியதற்கான அர்த்தம் புரியவும்.

“நா சமைக்குறதால ஒன்னும் ஹாஸ்பிட்டல் போக வேண்டிய அவசியம் இல்ல”

அவள் மூக்கை சுருக்கிக் கூற.

“ஆமா அப்படியே டிரக்டா எமதர்மராஜாவ தான் மீட் பன்ன போகலாம்”

அவன் சிரியாமல் கூற இவள் முறைத்தாள்.

“மணிமேகலைன்னு ஒருத்தங்க வருவாங்க வீட்டு வேலைக்கு நீ இத சாக்குல வீட்ல இருக்கலாம்ன்னு நினைக்காதே”

அவன் கூற முகத்தை சுருக்கிக் கொண்டே தலையசைத்தாள்.

“இப்போ நா தூங்கனும்”

அவன் கூறி விட்டு நன்றாகப் படுத்து விழிகளை மூட விழியகலாமல் அவனையேப் பார்த்தாள் அவன் மனையாள்.

இன்னொருத்திக்கு சொந்தமானவர் என மனம் அடித்துக் கூற கடினப்பட்டு அவனிடமிருந்து பார்வையை அகற்றியவள் அறையை விட்டு வெளியேறினாள்.

சிறிது நேரம் செல்ல அறையில் ஏதோ விழும் சத்தம் கேட்டது.

இவள் ஓடிச் சென்று பார்க்க அவளது கணவன் தான் தரையில் காலை வைக்க முடியாமல் அங்கு அழகுக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடியிலாலான அலங்கார பொருளைத் தட்டி விட்டிருக்க அது சில்லு சில்லாக உடைந்து போயிருந்தது.

“அச்சே என்னங்க ஒரு வார்த்த என்னைய கூப்ட்டு இருக்கலாமே.. பார்த்து கால்ல குத்திப்படாம”

அவனிடம் நெருங்கியவள் அவனைத் தாங்க.

“வாஷ்ரூம் போகனும்”

அவன் கூற.

“என்னைய கூப்ட்டா கொறைஞ்சா போய்டுவிங்க”

அவள் கடிந்துக் கொண்டாள்.

“நிரந்தரமில்லாத உறவ நம்பியிருக்கக் கூடாது”

அவன் அழுத்தமாகக் கூற நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவன் கூறியதும் உண்மை தானே.??

ஆனால் வலிக்கின்றதே..

அவள் எதுவும் கூறாமல் அவனை அழைத்துக் கொண்டுச் சென்று குளியலறையில் விட்டவள் வெளியே வந்து உடைந்திருந்த கண்ணாடித் தூள்களை குனிந்து எடுத்தாள்.

அதை எடுக்கும் போது விரலில் ஓரிடத்தை அது பதம் பார்க்க கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த் துளி அவ்விடத்தில் உருவாகியிருந்த இரத்தத் துளியுடன் கலந்தது.

அவன் கூறிச் சென்ற அந்த வார்த்தை உயிர் வரை சென்று வலித்தது.

“நா நிரந்தரமில்லாத உறவா அப்போ”

அவள் தனக்குள் கேள்விக் கேட்க

“நிரந்தரமா இருக்க நீ என்ன அவரோட ஆயுசு முழுக்க இருக்கப் போறியா”

மனசாட்சியிடமிருந்து என்றும் போல் எதிர்வாதம்.

“ம்ஹும் கண்டிப்பா அவர விட்டு பிரியனும்”

உறுதியாகியது அக்கொள்கை.

ஆனால் மனதோரம் ஏதோ சறுக்கலாக இருந்தது.

சென்று கண்ணாடி துண்டுகளை வீசியவள் கைகளைக் கழுவிக் கொண்டு வர அவனும் குளியலறையில் இருந்து வந்தான்

அவனை சென்று பிடித்து வந்து கட்டிலில் விட்டவள் அறையை விட்டு வெளியேறவும் வீட்டு காலிங் பெல் சத்தம் கேட்டது.

சென்று கதவைத் திறந்தாள் ஒரு முப்பது முப்பத்தைந்து வயதுற்குள்ளான ஒரு பெண்மனி நின்றிருக்க.

“நீங்க”

இவள் யோசனையாக கேட்டாள்.

“நா மணிமேகல இங்க வேலைக்கு வந்திருக்கேன்”

மணிமேகலை புன்னகைத்துக் கொண்டுக் கூறினாள்.

“ஆஹ் உள்ள வாங்க”

அவள் வழி விட்டாள்.

“என் பேரு நேத்ரா”

இவள் கூற அவள் புன்னகைத்தாள்.

“கிச்சன் எங்க இருக்கு”

அவள் கேட்க இவள்  சமயலறைக்கு அழைத்துச் சென்று காட்டினாள்

“ராத்திரிக்கு என்ன சமைக்கனும்”

மணிமேகலை கேட்க இவள் கூறினாள்.

பின்னர் சமையல் செய்து கொண்டு போய் அவனுக்குக் கொடுத்து விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்து அவனுக்கு பறிமாறிக் கொண்டே சாப்பிட்டாள்.

பின் மணிமேகலை காலை வருவதாகக் கூறிச் சென்றார்.

“ஏதாச்சும் தேவைன்னா கண்டிப்பா கூப்டுங்க”

அவள் பத்து தடவை கூற அமைதியாக தலையசைத்தான்.

பின் அவள் தரையில் படுத்தாள்.

காலையில் ஏனைய நாட்களை விட நேரத்திற்கு முன்னரே விழிப்பு வர விழியைத் திறந்து முதலில் அவனைத் தான் பார்த்தாள்.

“இன்னும் எழும்பல்லயா”

நினைத்துக் கொண்டு எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர அவன் விழித்திருந்தான்.

“வாங்க”

அவன் எழ தோளில் கையைப் போட்டு அவனைக் கொண்டு போய் குளியலறையில் விட அவன் உள்ளே சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்.

“இருங்க காஃபி எடுத்துட்டு வாரேன்”

அவள் சென்று காஃபியுடன் வர அவனது கையில் ஏதோ காகிதம் இருந்தது அவன் அதை வாசித்துக் கொண்டிருக்க இவள் அவனுக்கு அருகில் சென்றாள்.

“இது உன்னோட ஹேன்ட்ரைட்டிங்கா”

அவன் அந்த காகிதத்தை இவளிடம் நீட்டிக் கேட்க இவள் திகைத்தாள்.

இங்க வந்து ஒரு தடவை இவள் எழுதியது தான் அக்காகிதத்தில் இருந்தது.

இவள் திகைப்புக் குறையாமலே ஆம் எனத் தலையசைக்க,

“ஓஹ்.. இது யாரோட ஸ்டோரி இமேஜினேஷனா”.

அவன் கேட்க எச்சில் விழுங்கிக் கொண்டே அதற்கும் ஆம் என தலையசைத்தாள்.

“ ஓஹோ…”

அவன் அதைக் கையில் வைத்துக் கொண்டு வாசிக்க இவளுக்குத் தான் என்னவோ போல் ஆகியது.

அதை எழுதியதும் கிழித்துப் போடாத தனது மடத்தனத்தை எண்ணி இப்பொழுது என்ன பயன்..??

*****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

தல  விண் விண்ன்னு வலிக்குது..😒மூக்கு மூச்சு கூட விட முடியாம இறுகிப்போய் இருக்கு..

கதைய வேகமா கொண்டு போனா சில விஷயங்கள மிஸ் பன்னிடுவேன்.. அதுக்காக வேண்டி லெங்க்த்தாவும் போட முடியாத நிலை..😒😒

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top