ரேவந்த் தனது சட்டையை கழட்டி விட்டு அதிரூபனை நெருங்குவதை பார்த்து ஒரு மனைவியாய் அவந்திகாவின் உடலும் உள்ளமும் நெருப்பில் போட்டது போல எரிந்து போனது…
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாத ரேவந்த் மோகமாய் அதிரூபனை இன்னும் நெருங்கிட.. அவ்வளவு தான் அவந்திகா தன்னையும் மீறி,
” அதிரூபன்ன்ன்ன்ன்…..” என அந்த அறையை அதிரும் வண்ணம் கத்தி இருந்தாள்.…
ஏற்கனவே ஒரு வித தடுமாற்றத்தில் இராந்த ரூபன் அவந்திகாவின் குரல் கேட்டதும் தூக்கி வாரி போட்டபடி தலையை உலுக்கி கொண்டு விழிகளை சிமிட்டியபடி தன் மனையாளை தலை திருப்பி பார்த்தான்…
அங்கு தன் மனைவியை கண்டதும் உண்மையில் அதிர்ந்து தான் போனான் அதிரூபன்..
ரேவந்தோ அவளையே வன்மமாக பார்த்துக் கொண்டு,
” இன்னைக்கு நாங்க பெட் ஷேர் பண்றதை உன் கண்ணால பார்த்து ரசி …” என்று பச்சையாக கேவலமாக பேசியதும் அவந்திகாவோ ரேவந்த்தை கனல் கக்கும் விழிகளால் சுட்டெரித்தவள் அதிரூபனின் கரத்தை பிடித்து அங்கிருந்து அழைத்துப் போக பார்த்தாள்…
ஆனால் அவளது எண்ணம் புரிந்து ரேவந்த் அதிரூபனின் மற்றொரு கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்பது போல அவளை தெனாவட்டாக பார்த்து வைத்தான்…
அந்நேரம் அதிரூபன் ரேவந்திடம் பேசுவதற்கு முயற்சி செய்தான் …ஆனால் ரேவந்த் அவன் என்ன பேச வருகிறான் என்பதை கேட்காது தொடர்ந்து அவந்திகாவிடம் அதிரூபனை விடுமாறு கூறிக் கொண்டே இருந்தான். ..
அவந்திகாவும் ரேவந்தும் மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க இறுதியில் அவந்திகா தனது ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அதிரூபனை இங்கிருந்து அழைத்துச் செல்வதிலேயே முனைப்பாக இருந்தவள் சட்டென்று ரூபனை பிடித்திருந்த ரேவந்தின் கரத்தை இழுத்து விட்டு நகர முயன்றாள் அங்கிருந்து…
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ரேவந்த் அவந்திகாவை சற்றும் யோசிக்காது பளார் என அறைந்து விட்டான்…
அவ்வளவுதான் எங்கிருந்து தான் ரூபனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ ரேவந்த்தின் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்து அப்படியே தூக்கி விட்டான்…
ரூபனின் இந்த அவதாரத்தைக் கண்டு அவந்திகாவும் சரி ரேவந்த்தும் சரி உச்சபட்ச அதிர்ச்சியுடன் உறைந்து போய் விட்டார்கள்…
அதிர்ச்சியில் அதிரூபனை பிடித்திருந்த கரத்தை அவந்திகா விட்டிருந்தாள்…
ரேவந்தின் முழி இரண்டும் வெளியே வந்துவிடும் அளவு திணறிப் போனான்.. ஆனால் ரூபனோ தனது சிவந்த வழிகளால் ஆத்திரம் பொங்க ரேவந்தை பார்த்தான்…
அவன் கண்களில் காதலும் இல்லை மோகமும் இல்லை…கோபம் கோபம் கோபம் மட்டுமே நிறைந்து இருந்தது…
ரேவந்தை பார்த்து பல்லை கடித்தவன்,
” எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டி மேலேயே கையை வைப்ப..??? இன்னொரு முறை அவள் மேல உன் கை பட்டுச்சு…??” என பேசியவாரு மற்றொரு கரத்தால் சட்டென ரேவந்தின் கரத்தைப் பிடித்து முறுக்கி உடைத்தே விட்டிருந்தான் அதிரூபன்…
வலியில் வாய் திறந்து கத்தவும் முடியாது அந்தரத்தில் நின்று கொண்டு துடித்துடித்துப் போனான் ரேவந்த் …கால்கள் இரண்டும் வலியில் வேகமாக உதறிக் கொண்டன…
நன்றாக உடைத்து விட்டவன் சட்டென ரேவந்தை கீழே தள்ளிவிட்டு அவன் முன்பு ஒற்றை விரல் நீட்டி ,
“இன்னொரு முறை என் முன்னாடி நீ வந்த…??? தொலைச்சிடுவேன் உன்னை..!” என சற்று தடுமாறிக் கொண்டே இமைகளை சிமிட்டியவாறு கூறியவன் நொடியும் தாமதிக்காது அவந்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு இங்கிருந்து போனால் போதும் என இழுத்துக் கொண்டு சென்று விட்டான்…
அவந்திகாவோ அதிர்ச்சியில் இருந்து மீள முடியாது ரூபன் இழுத்த இழுப்பிற்கு அவன் பின்னாடியே சென்றாள் ..சொல்லப்போனால் ஓடினாள்…
வெளியே கார் அருகே வந்ததும் அது வரை இருந்த தெம்பு எல்லாம் எங்கோ சென்று விட்டது போல முற்றிலும் தளர்ந்து விட்டான் அதிரூபன்..
அச்சமயம் தான் தன் சுயத்திற்கு வந்த அவந்திகா ரூபனை சற்று மிரண்டு போய் பார்த்ததும் ரூபன் தன் கார் சாவியை அவளிடம் தந்து,
” நீ ட்ரைவ் பண்ணு அவந்தி… என்னால முடியல ..” என்றவன் சட்டென்று ஓட்டுநருக்கு பக்கத்து இருக்கையின் கதவை திறந்து அமர்ந்து கொண்டு இருக்கை நன்றாக சாய்த்து படுத்துக் கொண்டான்…
அவந்திகாவோ வேக வேகமாக மூச்சுகளை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள் மறுபுறத்தில் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள் …
காரினை எடுக்கும் முன்பு ஒரு கணம் அதிரூபனை பார்த்தவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு காரினை இயக்கி இருந்தாள்…
வரும் வழி முழுக்க ரூபன் உடல் வியர்த்து கொட்டிக் கொண்டே இருந்தது.. ஏற்கனவே நடந்த அதிர்ச்சியில் இருந்த அவந்திகா ரூபனை கவனிக்க தவறிவிட்டு இருந்தாள்…
இரண்டு பேரும் ஒரு வழியாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் …அதியமான் இன்னும் வீட்டிற்கு வராமல் இருந்ததால் அவர்களுக்காக அவர் ஹாலில் வழக்கம் போல காத்திருக்கவில்லை …
ரூபன் மெல்ல கண்களைத் திறந்து காரில் இருந்து தடுமாறி வெளி வந்தான்…
ஆனால் அவந்திகாவோ எதிலிருந்தோ தப்பிப்பது போல அவனை திரும்பியும் காணாது வேகவேகமாக வீட்டிற்குள் ஓடி சென்று விட்டாள்…
அத்தனை அவசரமாக படி ஏறி தங்களது அறைக்குச் சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் அவந்திகா ..
அவளால் நடந்த விஷயத்தை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை …
என்னதான் அதிரூபனையும் ரேவந்த்தையும் பழி வாங்குவதற்காக அதிரூபனை திருமணம் செய்து இருந்தாலும் தன் கண் முன்னே அவர்கள் இருவருக்கும் நடக்க இருந்த சம்பவத்தை நினைக்கையில் உள்ளங்கால் முதல் உச்சந் தலைவரை பற்றி கொண்டு எரிந்தது அவந்திகாவிற்கு…
இப்படி ஒரு நிலையில் தான் இருக்க வேண்டும் என்பது என்ன தலையெழுத்தா..??..
அவள் ஆசைப்பட்டது அமைதியான நிம்மதியான ஒரு வாழ்க்கையை தானே ..!
ஆனால் தினம் தினம் இப்படி நெருப்பில் தன்னை தள்ளி வேடிக்கை பார்க்கும் இந்த விதியை எண்ணி ஆத்திரம் தான் எழுந்தது அவளுக்கு …
அதிரூபன் முடிந்த அளவு தடுமாறி வீட்டுக்குள் சென்றவன் கீழே இருந்த விருந்தினர் அறைக்கு சென்று அங்கு இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டான் ..
எவ்வளவு நேரம் தண்ணீரிலேயே நின்று இருப்பானோ பாத்ரோபை கட்டிக்கொண்டு வெளியில் வந்தவன் வேகமாக தன்னுடைய அலுவலக அறைக்குச் சென்று அங்கிருந்த முக்கியமான டிராயர் ஒன்றை திறந்து மருத்துவர் தந்த மாத்திரையை அவசர அவசரமாக விழுங்கி தண்ணீரை குடித்தான்…
அதை முழுங்கியதும் அங்கிருந்து இருக்கையில் கண்கள் மூடி மூச்சு வாங்க அமர்ந்திருந்தவன் சிறிது நேரம் கழித்து மெல்ல தன்னுடைய அறைக்கு விரைந்து சென்றான்..
அங்கு அவந்திகா இல்லாமல் இருக்கவும் வேகமாக டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று இரவு ஆடையை அணிந்தவன் இதற்கு மேல் முடியாது என்பது போல் மெத்தையில் படுத்து உறங்கி விட்டான்…
எப்படித்தான் படுத்ததும் தூக்கம் அவனுக்கு வந்ததோ அனைத்தையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான் அதிரூபன்…
சிறிது நேரம் கழித்து குளியலறையில் இருந்து வெளி வந்தாள் அவந்திகா.. ஈரம் சொட்டு சொட்ட வெளி வந்தவள் அங்கு மெத்தையில் நிம்மதியான உறக்கத்தில் இருக்கும் அதிரூபனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவள் விரத்தியாய் சிரிப்பு ஒன்றை சிந்தி விட்டு பால்கனி நோக்கி சென்றாள்..
தரையில் அப்படியே கால் மடக்கி அமர்ந்தவள் தலை சாய்த்து கண்களை மூடிய கணம் அவள் விழிகளில் இருந்து சூடான கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது ..
உடல் குலுங்க அழவில்லை… ஆனால் விசும்பியவாறு இருந்தவள் அப்படியே உறங்கி விட்டிருந்தாள்…