அந்தக் காடு…
இரவு நேரத்தில் இன்னும் கொடூரமாகத் தெரிந்தது.
எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள்.
காற்றில் இலைகள் உரசும் சத்தம்.
தூரத்தில் கேட்கும் மிருகங்களின் சத்தம்.
அந்த அமைதியை கிழித்துக்கொண்டு—
“காப்பாத்துங்க…!”
ஒரு ஆள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.
அவனுடைய சட்டை முழுவதும் மண்.
முகத்தில் வியர்வை.
கால்களில் காயம்.
ஆனால் அவன் பின்னால் வந்தவர்கள்…
அவனை விட வேகமாக இருந்தார்கள்.
“எவ்வளவு தூரம் ஓடுவ?”
பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல் கேட்ட நொடியே அவனுடைய கால்கள் நடுங்கின.
அவன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.
இருட்டுக்குள் இருந்து சில ஆட்கள் வெளியே வந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில்—
இமயவரம்பன்.
ஆறு அடி உயரம்.
Gym-ல் கட்டியெழுப்பப்பட்ட வலிமையான உடல்.
முழு six-pack இல்லை… ஆனால் அவனுடைய உடல் கட்டுக்கோப்பே அவன் எவ்வளவு ஆபத்தானவன் என்பதை சொல்லியது.
மாநிறத்தைவிட சற்றுக் குறைவான நிறம்.
கழுத்தில் தடிமனான செயின்.
கையில் பெரிய கடா.
முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
அவன் நடந்து வந்த விதமே—
ஒரு சிங்கம் தன் இரையை நோக்கி வருவது போல இருந்தது.
அந்த ஆள் பின்னால் நகர்ந்தான்.
“இமயா… என்னை விட்டுடுங்க…”
இமயா நின்றான்.
“எதுக்கு?”
“நான் பெரிய ஆள் கிடையாது. என்கிட்ட இருக்குறது அந்த கொஞ்சம் நிலம் மட்டும் தான். அதையும் எடுத்துக்கிட்டா… நான் என்ன பண்ணுவேன்?”
இமயாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
“அந்த நிலம்…”
சிறிது இடைவெளிக்குப் பிறகு அவன் சொன்னான்.
“எங்களுக்கு வேணும்.”
“ஆனா—”
“எங்க Boss-க்கு வேணும்.”
அந்த வார்த்தை கேட்டதும் அந்த ஆளின் முகம் வெளுத்துப்போனது.
மருது.
அந்தப் பெயர் இந்தப் பகுதியில் சாதாரணமான பெயர் கிடையாது.
Mafia உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன்.
அவனுடைய கட்டளைக்கு எதிராகப் போவது…
மரணத்தைத் தேடிப் போவது போல.
“நான் சைன் போட மாட்டேன்…”
அவன் நடுங்கிக்கொண்டே சொன்னான்.
இமயா அவனை சில நொடிகள் பார்த்தான்.
“சரி.”
அவன் திரும்பிப் போக ஆரம்பித்தான்.
அந்த ஆள் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவிட்டான்.
ஆனால் அடுத்த நொடியே—
இமயா திரும்பிப் பார்த்தான்.
“சைன் போட மாட்டேன்னு சொன்னியா?”
அவன் அமைதியாகக் கேட்டான்.
“ஆமா…”
அந்த ஆள் தைரியமாகச் சொல்ல முயன்றான்.
“என்னவோ பண்ணிக்கோங்க.”
அந்த வார்த்தை…
இமயாவின் முகத்தில் இருந்த அமைதியை உடைத்தது.
அவன் மெதுவாக அவனிடம் நடந்துவந்தான்.
“சைன் போடத் தெரியாத நாயே…” “நீ பேசுறியா?”
இமயாவின் குரல் குளிர்ந்திருந்தது.
அந்த ஆள் பின்னால் நகர்ந்தான்.
“உன்கிட்ட யாரு பேச permission கேட்டா?”
அடுத்த நொடி—
சட்!
இமயாவின் கையில் இருந்த கத்தி மின்னியது.
“ஆஆஆஆ!”
அவனுடைய அலறல் அந்தக் காட்டையே அதிர வைத்தது.
வெட்டப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு தெறித்தது.
அவன் தரையில் விழுந்தான்.
அவனுடைய கை…
தனியாக தரையில் கிடந்தது.
அருகில் இருந்த ஆட்கள் கூட ஒரு நொடி அமைதியாக நின்றார்கள்.
ஆனால் இமயாவின் முகத்தில்?
எந்த அதிர்ச்சியும் இல்லை.
எந்த இரக்கமும் இல்லை.
அவன் கீழே குனிந்து அந்தக் கையை எடுத்தான்.
அருகில் இருந்த மேசையின் மேல் வைத்தான்.
பிறகு ஒரு பேனாவை எடுத்தான்.
அந்த ஆளின் முகத்துக்கு முன்னால் அதை வைத்தான்.
“சைன் போடத் தெரியாதுன்னியே?”
அவன் மெதுவாகச் சிரித்தான்.
“இப்போ தெரிஞ்சிருக்கும்.”
அந்த ஆளின் நடுங்கும் விரல்களால் அல்ல…
அவனுடைய வெட்டப்பட்ட கையிலேயே இமயா அந்த கையெழுத்தை வாங்கினான்.
பிறகு அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.
“முடிஞ்சுது.”
அவ்வளவுதான்.
அவனுக்கு அந்த உயிர்…
ஒரு காகிதத்தைவிடவும் குறைவானது.
15 வருடங்களுக்கு முன்பு…
அப்போது இமயாவுக்கு வயது 14.
அவனுடைய உலகம் அப்போது வேறாக இருந்தது.
அவனுடைய அம்மா—
வளர்மதி.
அவள் தன் மகனை நல்லவனாக வளர்க்கத்தான் நினைத்தாள்.
ஆனால் அவனுடைய அப்பா—
சக்ரவர்த்தி.
ஒரு நாள்…
வளர்மதியையும் அந்தச் சிறுவனையும் விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டான்.
அந்த நாள் முதல் இமயாவின் மனதில் ஒரு கேள்வி மட்டும் இருந்தது.
“அப்பா ஏன் எங்களை விட்டுப் போனார்?”
வளர்மதி அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் மகனை மட்டும் காப்பாற்ற முயன்றாள்.
“அப்பாவைப் பற்றி நினைக்காதே இமயா…”
ஆனால் ஒரு குழந்தையின் மனதில் விழுந்த காயத்தை…
வார்த்தைகளால் அழிக்க முடியுமா?
ஒரு நாள்…
14 வயதான இமயா தன் அப்பாவை வேறொரு பெண்ணுடன் பார்த்தான்.
அந்த நொடி—
அவனுக்குள் இருந்த கோபம் வெடித்தது.
அவன் கையில் ஒரு கத்தி இருந்தது.
அடுத்த சில நொடிகளில்…
சக்ரவர்த்தியின் உடலில் அந்தக் கத்தி பாய்ந்தது.
அவன் தரையில் விழுந்தான்.
அவனுடைய கண்களில் பயம்.
அவனுடைய முகத்தில் மரணத்தின் அதிர்ச்சி.
இமயா அவனை பார்த்துக்கொண்டே நின்றான்.
அவன் பயந்திருக்க வேண்டும்.
அழுதிருக்க வேண்டும்.
ஆனால்…
அவனுடைய உதட்டில் ஒரு சிறிய புன்னகை தோன்றியது.
தன் அப்பாவின் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்தபோது… அவனுக்குள் ஒரு விசித்திரமான சந்தோஷம் பிறந்தது.
அந்த நாள்தான்…
இமயாவுக்குள் இருந்த குழந்தை இறந்தது.
அதற்குப் பதிலாக…
ஒரு இருள் பிறந்தது.
அந்த சம்பவத்தைப் பார்த்த சில Mafia ஆட்கள் அங்கே இருந்தார்கள்.
அவர்கள் இமயாவை பார்த்தார்கள்.
ஒரு 14 வயது சிறுவன்…
ஒரு மனிதனை கத்தியால் குத்திவிட்டு…
அழாமல் நின்றுகொண்டிருந்தான்.
அவர்களுக்கு அவனிடம் பயம் வரவில்லை.
ஆச்சரியம் வந்தது.
அவர்கள் அவனைத் தங்களோடு அழைத்துச் சென்றார்கள்.
அந்த Mafia உலகத்துக்குள் அவனை அழைத்துச் சென்ற மனிதன்—
மருது.
மருது அவனை ஒரு சாதாரண சிறுவனாகப் பார்க்கவில்லை.
அவனுக்குள் இருந்த கோபத்தையும், பயமின்மையையும் பார்த்தான்.
அவனை வளர்த்தான்.
சண்டை கற்றுக்கொடுத்தான்.
ஆயுதம் கற்றுக்கொடுத்தான்.
இந்த உலகத்தில் யாரையும் நம்பக்கூடாது என்று கற்றுக்கொடுத்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக…
இமயாவின் வாழ்க்கையே அந்த Mafia உலகமாக மாறியது.
அவனுக்கு குடும்பம் என்றால்— வளர்மதி.
அவனுக்கு அப்பா போன்றவர் என்றால்— மருது
அவர்களைத் தவிர…
யாரையும் அவன் மனதுக்குள் அனுமதிக்கவில்லை.
தற்போது…
தற்போது…
இமயா வீட்டுக்குள் நுழைந்தான்.
அவனுடைய சட்டையில் இன்னும் சில ரத்தத் துளிகள் இருந்தன.
வளர்மதி அவனைப் பார்த்தாள்.
அவளுடைய பார்வை முதலில் அவன் முகத்தில் இருந்தது.
பிறகு—
அவனுடைய கையில் இருந்த ரத்தத்தில் நின்றது.
சில நொடிகள் அமைதி.
“கையில் என்ன அது?”
இமயா அவளைப் பார்த்தான்.
“ஒன்னுமில்லை.”
“ஒன்னுமில்லையா?”
வளர்மதியின் குரலில் கோபம்.
“ரத்தம் ஒன்னுமில்லையா?”
இமயா அமைதியாக இருந்தான்.
“யாருடைய ரத்தம்?”
அவன் பதில் சொல்லவில்லை.
வளர்மதி அவனருகில் வந்து நின்றாள்.
“எத்தனை பேரோட ரத்தம் இன்னும் உன் கையில இருக்கு, இமயா?”
இமயாவின் முகம் இறுகியது.
“அம்மா…”
“என்ன அம்மா?”
அவளுடைய கண்களில் கோபத்தோடு கண்ணீரும் இருந்தது.
“நான் உன்னை எப்படி வளர்க்கணும்னு நினைச்சேன் தெரியுமா?”
இமயா அமைதியாக அவளைப் பார்த்தான்.
“நீ நல்லவனா இருக்கணும்னு நினைச்சேன்.”
அவள் குரல் உடைந்தது.
“ஆனா நீ…”
சில நொடிகள் அவளால் பேச முடியவில்லை.
பிறகு கோபமாகச் சொன்னாள்—
“நீ இப்போ யாரோட உயிரை எடுக்குற அளவுக்கு போயிட்டே!”
இமயாவின் தாடை இறுகியது.
“நான் இப்படித்தான் இருக்கேன்.”
“அதை நான் ஏத்துக்க மாட்டேன்!”
வளர்மதி கத்தினாள்.
“நீ என் பையன். நீ எவ்வளவு பெரிய Mafia ஆளா இருந்தாலும்… எனக்கு நீ இன்னும் அந்த சின்ன பையன்தான்.”
இமயா கண்களைத் தாழ்த்தினான்.
“அம்மா… இந்த வாழ்க்கையை விட்டுட சொல்றீங்களா?”
“ஆமா.”
“எனக்கு அது முடியாது.”
“ஏன் முடியாது?”
“ஏன்னா…”
அவன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“எனக்கு தெரிஞ்ச வாழ்க்கை இதுதான்.”
வளர்மதி அவனைப் பார்த்தாள்.
“அப்படின்னா…”
அவள் மெதுவாகக் கேட்டாள்.
“ஒருநாள் இந்த வாழ்க்கை உன்னை என்னிடமிருந்து எடுத்துக்கிட்டா?”
இமயா பதில் சொல்லவில்லை.
அவள் கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்ததும் அவனுடைய கோபம் கொஞ்சம் தணிந்தது.
அவன் அவளருகில் சென்று நின்றான்.
“என்ன ஆனாலும்…”
அவன் மெதுவாகச் சொன்னான்.
“நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.”
வளர்மதி அவனைப் பார்த்தாள்.
“அதை நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்ல.”
அவள் அவன் முகத்தைத் தொட்டு—
“நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்.”
சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு வளர்மதி மீண்டும் சொன்னாள்.
“ஆனா உன்னை மாற்ற முயற்சி செய்வதை மட்டும் நான் நிறுத்த மாட்டேன்.”
இமயாவின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை வந்தது.
“நீங்க மாற மாட்டீங்க.”
“நீயும் மாற மாட்டேன்னு நினைக்காதே.”
அவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நடந்துசென்றான்.
ஆனால் அவன் மனதில் அவளுடைய வார்த்தைகள் மட்டும் ஓடிக்கொண்டிருந்தன.
அந்த இரவு…
இமயா தனியாக மொட்டைமாடியில் நின்றுகொண்டிருந்தான்.
கீழே அவனுடைய ஆட்கள்.
சுற்றிலும் பாதுகாப்பு.
அவனுடைய உலகம் முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்.
ஆனால் அவனுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருந்தது.
அவனுடைய வாழ்க்கைக்குள்…
விரைவில் ஒரு பெண் வரப்போகிறாள்.
அவள் பெயர்—
“பிறை நிலா” 🌙
அவள் இமயாவின் உலகத்தைச் சேர்ந்தவள் இல்லை.
அவனுடைய இரத்தத்தையும்…
அவனுடைய அதிகாரத்தையும்…
அவனுடைய பயத்தையும்…
அவள் விரும்பப்போவதில்லை.
ஆனால்…
இமயவரம்பன் காதலை நம்பாதவன்.
நிலா…
அவனுக்குள் மறைந்திருந்த மனிதனை நம்ப வைக்கப் போகிறாள்.
அந்த சந்திப்பு…
இருவருடைய வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றப்போகிறது.
இது ஒரு Mafia தலைவனின் கதை அல்ல.
இது காதலை வெறுத்த ஒரு மனிதனுக்குள்…
ஒரு நிலா எப்படி பிறந்தது என்பதன் கதை.
தொடரும்…