Episode 18 — மறைந்திருந்த உண்மை

அடுத்த நாள் காலை…

இமயவரம்பன் மருதுவின் அறைக்குள் நுழைந்தான்.

அவன் கையில் நேற்று இருந்த அதே கோப்பு.

மருது அவனைப் பார்த்ததும்,

“என்ன கண்டுபிடிச்ச?”

இமயவரம்பன் கோப்பை மேசையின் மீது வைத்தான்.

“இந்தப் பிரச்சினை பாஸ்கரன் காலத்துல ஆரம்பிச்சது.”

மருது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“அந்த நேரத்துல அவருக்கு நிறைய கடன் இருந்திருக்கு. அந்தக் கடனை சமாளிக்க சில ஆவணங்களில் கையெழுத்து போட்டிருக்கார்.”

“அப்புறம்?”

“அந்த ஆவணங்கள்ல சிலது உண்மையானது. சிலது போலியானது.”

மருதுவின் முகம் மாறியது.

“யாரு பண்ணிருக்கா?”

இமயவரம்பன் நேராக அவரைப் பார்த்தான்.

“விக்ரம் ராயன்.”

அறைக்குள் சில நொடிகள் அமைதி.

மருது நாற்காலியில் சாய்ந்தார்.

“அவன் இன்னும் அந்தப் பழைய விளையாட்டை விடலையா…”

“இல்ல.”

“அப்படின்னா அவனுக்கு இப்போ என்ன வேணும்?”

இமயவரம்பன் பதில் சொல்லாமல் கோப்பிலிருந்த ஒரு பக்கத்தை எடுத்தான்.

“இந்த சொத்து மட்டும் இல்ல.”

அவன் அந்த ஆவணத்தை மேசையில் வைத்தான்.

“இந்தக் குடும்பத்தோட இன்னும் இரண்டு சொத்துகள் அவன் நிறுவனத்தோட பழைய ஒப்பந்தத்துக்குள் இருக்கு.”

மருது சில நொடிகள் ஆவணத்தைப் பார்த்தார்.

“அப்படின்னா…”

“அவன் அந்தக் குடும்பத்தை மெதுவா முழுசா காலி பண்ணியிருக்கான்.”

மருது எழுந்தார்.

“அந்தப் பெண்ணுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“இல்ல.”

“அவளுக்குத் தெரியக்கூடாது.”

இமயவரம்பன் அவரைப் பார்த்தான்.

“ஏன்?”

“அவளுக்கு ஏற்கனவே வாழ்க்கை போதுமான அளவுக்கு கஷ்டம் கொடுத்திருக்கு. இன்னொரு சுமையை அவள் மேல போட வேண்டாம்.”

இமயவரம்பன் அமைதியாக இருந்தான்.

மருது அவனைப் பார்த்து,

“இந்த விஷயத்தை நீயே முடிச்சுடு.”

“சரி.”

 

அதே நேரத்தில்…

நிலாவின் வாழ்க்கையில் வேறு ஒரு மாற்றம் நடந்துகொண்டிருந்தது.

அலுவலகத்தில் வேலை முடிந்ததும் ஆதித்யா அவளிடம் வந்தான்.

“இன்னைக்கு free-ஆ இருக்கீங்களா?”

“ஏன்?”

“சின்ன surprise.”

“என்ன surprise?”

“சொன்னா surprise இல்ல.”

அவள் சிரித்தாள்.

“சரி. எங்கே?”

“வாங்க.”

அவன் அவளை அழைத்துச் சென்றது ஒரு அமைதியான சிறிய உணவகம்.

அதிக ஆடம்பரம் இல்லாமல் இருந்தது.

இருவரும் எதிரெதிரே உட்கார்ந்தார்கள்.

“இது எதுக்கு?”

“ஒன்னுமில்லை. நீங்க ரொம்ப நாளா tension-ல இருக்கீங்க. கொஞ்சம் relax பண்ணணும்னு.”

அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க.”

“அது இப்போதான் தெரியுதா?”

“கொஞ்சம் முன்னாடியே தெரியும்.”

“அப்போ?”

“சொல்ல மாட்டேன்.”

இருவரும் சிரித்தார்கள்.

அந்தச் சிறிய நேரத்தில் நிலா தனது பிரச்சினைகளை மறந்திருந்தாள்.

 

அதே இரவு…

விக்ரம் ராயன் தனது அலுவலகத்தில் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“இமயவரம்பன் அந்த file-ஐ எடுத்துட்டான்.”

விக்ரம் அமைதியாக இருந்தான்.

“அவன் என்ன பண்ணப்போறான்?”

விக்ரம் சிரித்தான்.

“அவன் எப்பவும் நேராகத்தான் வருவான்.”

“அப்போ?”

“அதுதான் அவனோட பலவீனம்.”

அவன் மேசையில் இருந்த ஒரு பழைய புகைப்படத்தை எடுத்தான்.

“அவன் உண்மையைத் தேடட்டும்.”

“அதுக்கப்புறம்?”

விக்ரமின் சிரிப்பு சற்றே ஆழமானது.

“உண்மை கிடைக்கும்போது… அதைத் தாங்க முடியாத நிலைல அவன் இருக்கணும்.”

 

அடுத்த நாள்.

இமயவரம்பன் பாஸ்கரனின் பழைய கணக்கு விவரங்களைத் தேடிக்கொண்டிருந்தான்.

பல மணி நேர தேடலுக்குப் பிறகு—

ஒரு பழைய வங்கி பதிவில் அவனுடைய பார்வை நின்றது.

ஒரு பெரிய தொகை.

பாஸ்கரனின் கணக்கிலிருந்து வெளியேறியிருந்தது.

அந்தப் பணம் சென்ற கணக்கு—

விக்ரம் ராயனின் நிறுவனத்துடையது இல்லை.

வேறொரு பெயர்.

இமயவரம்பன் அந்தப் பெயரைப் பார்த்ததும் முகம் இறுகியது.

“இது எப்படி சாத்தியம்?”

அவன் உடனே அந்தக் கணக்கைத் trace செய்யச் சொன்னான்.

சில நிமிடங்களில் பதில் வந்தது.

“சார்… அந்த account மூணு வருஷத்துக்கு முன்னாடியே close பண்ணிட்டாங்க.”

“யார் பெயர்ல இருந்தது?”

அங்கிருந்தவன் தயங்கினான்.

“சார்…”

“சொல்.”

“அது… மருது சார் பெயர்ல இருந்த ஒரு பழைய account.”

இமயவரம்பன் அப்படியே நின்றுவிட்டான்.

அவன் கண்கள் மெதுவாக சுருங்கின.

மருதுவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு?

அவனுடைய கையில் இருந்த கோப்பு மெதுவாக மூடப்பட்டது.

இப்போது…

விக்ரம் ராயனை விட பெரிய ஒரு கேள்வி அவன் முன்னால் நின்றது.

இந்தப் பிரச்சினையின் ஆரம்பத்திலேயே மருது இருந்தாரா?

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top