Episode 3 — நல்லவனா… கெட்டவனா?

“ஒருத்தன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் தொழிலை வைத்து முடிவு பண்ண முடியாது…
அவன் எதற்காக அதை செய்கிறான் என்பதைப் பார்த்தால்தான் புரியும்.”

இரவு.

மருதுவின் ஆபீஸ்.

அறைக்குள் இருந்த பெரிய மேசையின் மீது சில முக்கியமான documents பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

அறையின் கதவு திறந்தது.

உள்ளே வந்தான்—

இமயவரம்பன்.

கையில் இருந்த ஒரு file-ஐ எடுத்துக்கொண்டு நேராக மருதுவின் முன்னால் வந்து நின்றான்.

“அண்ணா…”

மருது நிமிர்ந்து பார்த்தார்.

“கிடைச்சுதா?”

இமயவரம்பன் அந்த file-ஐ அவர் முன்னால் வைத்தான்.

“கிடைச்சுது.”

மருது file-ஐ திறந்து பார்த்தார்.

ஒவ்வொரு document-ஐயும் கவனமாகப் பார்த்தார்.

பிறகு மெதுவாக நாற்காலியில் சாய்ந்தார்.

“சரியா இருக்கு.”

இமயவரம்பன் அமைதியாக நின்றான்.

“என்னாச்சு?”

“ஒன்னுமில்லை அண்ணா.”

“அப்புறம் ஏன் இவ்வளவு அமைதியா இருக்க?”

இமயவரம்பன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“அந்த ஆள் நல்லவன் இல்ல அண்ணா.”

மருது அவனைப் பார்த்தார்.

“என்ன பண்ணான்?”

“இந்த documents-ஐ அவனே ஏமாத்தி வாங்கியிருக்கான்.”

மருதுவின் முகம் சற்று மாறியது.

“அப்படியா?”

“ஆமா.”

“அதனால?”

“அவன்கிட்ட இருந்ததை எடுத்துட்டு வந்துட்டேன்.”

மருது சில நொடிகள் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பிறகு அந்த documents-ஐ மீண்டும் பார்த்தார்.

“அவன்கிட்ட இருந்து எதையும் எடுத்துக்கிட்டா அது நம்மதாயிடாது.”

இமயவரம்பன் அமைதியாக இருந்தான்.

“யாருக்குச் சொந்தமோ… அவர்கிட்ட போய் இதை சேர்த்துடு.”

“சரி அண்ணா.”

அதுதான் மருது.

அவருடைய வாழ்க்கையில் ஒரு விதி இருந்தது.

தவறான வழியில் வந்ததை தன்னுடையதாக்கிக்கொள்ளக்கூடாது.

அந்த documents யாருடையதோ…

அவர்களிடம் சென்று சேர வேண்டும்.

அதற்காகத்தான் அவர் இமயவரம்பனை அனுப்பினார்.

மருது…

மருது ஒரு சாதாரண மனிதர் கிடையாது.

அவர் ஒரு rowdy.

அவருடைய பெயரைக் கேட்டாலே சில இடங்களில் கதவுகள் மூடப்படும்.

சிலர் அவரைப் பார்த்தாலே வழி விட்டு நிற்பார்கள்.

ஆனால்…

அவரைப் பற்றி முழுசாகத் தெரிந்தவர்கள் அவரை ஒரே வார்த்தையில் நல்லவன் என்றும் சொல்ல மாட்டார்கள்.

கெட்டவன் என்றும் சொல்ல மாட்டார்கள்.

ஏனென்றால்…

மருது எப்போதும் இரண்டுக்கும் நடுவில் நின்ற மனிதர்.

அவர் சட்டத்தை முழுசாக நம்புபவர் இல்லை.

ஆனால் சட்டத்துக்கு எதிராக அநியாயம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் வாழவில்லை.

சில நேரங்களில்…

ஒரு மனிதனுக்கு உதவி தேவைப்படும்.

அவன் போலீஸிடம் போனால் வழக்கு.

Government office-க்கு போனால் வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை.

ஆனால்…

அவன் மருதுவிடம் வந்தால்?

“என்ன பிரச்சனை?”

என்று கேட்பார்.

அவ்வளவுதான்.

அதுக்கப்புறம்…

அந்த பிரச்சனையை எப்படி தீர்க்க வேண்டும் என்று அவர் பார்த்துக்கொள்வார்.

அவருடைய வழி…

சட்டப்படி இருக்காது.

ஆனால்…

பல நேரங்களில் அந்த வழியால் ஒரு ஏழையின் பிரச்சனை தீர்ந்திருக்கும்.

ஒரு குடும்பம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒரு பெண்ணுக்கு நீதி கிடைத்திருக்கும்.

ஒருவனுடைய நிலம் அவனுக்கே திரும்பியிருக்கும்.

அதனால்தான்…

மருதுவைச் சுற்றி நல்லவர்களும் இருந்தார்கள்.

கெட்டவர்களும் இருந்தார்கள்.

மருதுவுக்கு இன்னொரு தொழிலும் இருந்தது.

வட்டிக்கு பணம் கொடுப்பது.

அவர் பணம் கொடுப்பார்.

“எப்போ திருப்பித் தரணும்?”

என்று கேட்டால் ஒரே பதில்.

“எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ.”

அவர் சற்று இடைவெளி விடுவார்.

“ஆனா…”

அவருடைய பார்வை கூர்மையாக மாறும்.

“நான் சொன்ன நாள்ல பணம் என் கைக்கு வந்திருக்கணும்.”

அதுதான் மருதுவின் வார்த்தை.

அதை அவர் ஒருபோதும் மாற்ற மாட்டார்.

பணம் கொடுக்கும்போது கூட…

“முடியாதுன்னா இப்பவே சொல்லு.”

என்று கேட்பார்.

“முடியும்” என்று சொல்லி வாங்கியவன்…

சொன்ன நேரத்தில் கொடுக்க வேண்டும்.

அது முடியவில்லை என்றால்?

அவனுடைய நிலைமைக்கு ஏற்ப மருது முடிவு செய்வார்.

அவரிடம் பணம் வாங்கியவர்களில் சிலர்…

பணம் திருப்பிக் கொடுக்க முடியாமல் போயிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிடம் இருந்து சொத்துக்கள் வந்திருக்கின்றன.

வீடுகள் வந்திருக்கின்றன.

நிலங்கள் வந்திருக்கின்றன.

Business shares வந்திருக்கின்றன.

அப்படி கொஞ்சம் கொஞ்சமாக…

மருது பெயரில் பல சொத்துக்கள் சேர்ந்தன.

இன்று…

அவருடைய பெயரில் பல constructions.

பல technologies.

சில five-star hotels.

பல business நிறுவனங்கள்.

ஆனால்…

அவற்றில் எல்லாமே அவர் தன்னுடைய காசில் வாங்கியவை இல்லை.

சிலவற்றை வாங்குவதற்காக பணம் கொடுத்திருந்தார்.

சிலர் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் போனார்கள்.

அதற்குப் பதிலாக அவர்களுடைய business-களில் பங்கு கொடுத்தார்கள்.

சிலர் சொத்துக்களை எழுதிக்கொடுத்தார்கள்.

அப்படி உருவானது…

மருதுவின் empire.

அந்த empire-ஐ பார்த்துக்கொள்வது யார்?

இமயவரம்பன்.

மருது ஒருமுறை இமயவரம்பனிடம் சொன்னது இன்னும் அவனுக்கு நினைவில் இருந்தது.

“என்னோட காசு எங்க இருக்கு, என்னோட business எங்க இருக்கு, என்னோட ஆட்கள் எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியாம இருக்கலாம்.”

மருது அவனைப் பார்த்தார்.

“ஆனா…”

“நீ இருக்குற வரைக்கும் அது எனக்கு பிரச்சனை இல்ல.”

அந்த வார்த்தை…

இமயவரம்பனுக்கு வேற எந்த வார்த்தையையும் விட முக்கியம்.

ஏனென்றால் மருது அவனுக்கு ஒரு boss மட்டும் கிடையாது.

அப்பா மாதிரி.

இமயவரம்பன் மருதுவின் வாழ்க்கைக்குள் வந்தது சாதாரண விஷயம் இல்லை.

அவன் வாழ்க்கை இரத்தத்திலிருந்து தொடங்கியது.

அந்த இரத்தத்தின் நடுவே மருது அவனை கண்டெடுத்தார்.

அவனுடைய கோபத்தைப் பார்த்தார்.

அவனுடைய வலியைப் பார்த்தார்.

அவனுக்குள் இருந்த இருளையும் பார்த்தார்.

ஆனால்…

அந்த இருளை அழிக்க முயற்சி செய்யவில்லை.

அதற்கு ஒரு வழி காட்டினார்.

“உன்னால எதுவும் ஆகாதுன்னு நினைக்காத.”

“உன்னால நிறைய ஆகும்.”

“ஆனா…”

“நீ யாருக்காக அதை செய்றேன்னு மட்டும் மறந்துடாத.”

அந்த வார்த்தைகள் இமயவரம்பனின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

மருதுவின் office-ல் இருந்து இமயவரம்பன் கிளம்பினான்.

கையில் இருந்த documents-ஐ பார்த்தான்.

அடுத்த நாள் காலை…

அந்த documents யாருடையதோ அவர்களிடம் அது சென்று சேர்ந்தது.

அவர்களுக்கு நடந்த அநியாயத்தை சரி செய்ய மருது எடுத்த முடிவு அது.

அவர்களுடைய கண்களில் நன்றி.

இமயவரம்பனின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.

அவனுக்கு இது சாதாரண வேலை.

ஆனால்…

அந்த குடும்பம் காப்பாற்றப்பட்டது.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த மருது மட்டும் தொலைவில் நின்று அமைதியாக சிரித்தார்.

அன்று இரவு…

மருது தனியாக தன் அறையில் உட்கார்ந்திருந்தார்.

மேசையின் மீது ஒரு பழைய photo.

அதில்…

சிறிய வயதில் இருந்த இமயவரம்பன்.

அவன் அருகில் நின்று கொண்டிருந்த மருது.

அந்த photo-வை பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருடைய கண்களில் ஒரு விதமான பாசம்.

“நீ என்னோட ஆளு இல்லடா…”

சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“நீ என்னோட பையன்.”

ஆனால்…

மருதுவுக்கு ஒரு உண்மை தெரியும்.

இமயவரம்பனுடைய வாழ்க்கை நிலையானது இல்லை.

அவன் எப்போதும் ஆபத்தில் வாழ்கிறான்.

எந்த நேரத்திலும் எதிரிகள் வரலாம்.

எந்த நேரத்திலும் துப்பாக்கி சத்தம் கேட்கலாம்.

எந்த நேரத்திலும்…

அவனுடைய வாழ்க்கை முடிந்துவிடலாம்.

அதனால்தான்…

மருது தன் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்றையே வைத்துக்கொள்ளவில்லை.

பெண்கள் அவரைச் சுற்றி இருந்தார்கள்.

அவருடைய பணம், அதிகாரம், செல்வாக்கு…

அவரைச் சுற்றி ஆயிரம் பேரை கொண்டு வந்தது.

ஆனால்…

அவருடைய மனதில் ஒரே ஒரு இடம் மட்டும் நிரம்பியிருந்தது.

இமயவரம்பன்.

அடுத்த நாள் காலை.

மருது ஒரு பெரிய meeting-ல் இருந்தார்.

அப்போது ஒரு ஆள் அவசரமாக உள்ளே வந்தான்.

“அண்ணா…”

“என்ன?”

“ஒரு problem.”

மருது நிமிர்ந்து பார்த்தார்.

“சொல்லு.”

“நம்மளோட பெயரை use பண்ணி யாரோ ஒரு பெரிய மோசடி பண்ணிருக்காங்க.”

அறைக்குள் இருந்த அனைவரும் அமைதியாகிவிட்டார்கள்.

மருது மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்தார்.

“யாரு?”

அவன் ஒரு பெயரை சொன்னான்.

மாருதுவின் முகம் மாறியது.

“இமயவரம்பனை கூப்பிடு.”

சில நிமிடங்களில்…

இமயவரம்பன் உள்ளே வந்தான்.

“அண்ணா?”

மாருது அவனை நேராகப் பார்த்தார்.

“ஒரு வேலை இருக்கு.”

இமயவரம்பன் அமைதியாக நின்றான்.

“இந்த தடவை…”

மருது சிறிது நேரம் இடைவெளி விட்டார்.

“நம்மளோட பெயரை use பண்ணி யாரோ ஒரு குடும்பத்தை ஏமாத்தியிருக்காங்க.”

இமயவரம்பனின் கண்கள் சுருங்கின.

“யார்?”

மாருது ஒரு file-ஐ அவன் கையில் கொடுத்தார்.

“போய் தெரிஞ்சுக்கிட்டு வா.”

இமயவரம்பன் file-ஐ எடுத்துக்கொண்டான்.

“சரி.”

அவன் வெளியே நடந்தான்.

மருது அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்குத் தெரியாது…

இந்த ஒரு வேலைக்குப் பிறகு…

இமயவரம்பனின் வாழ்க்கைக்குள் ஒரு பெண் வரப்போகிறாள் என்று.

அந்த பெண்…

அவன் உலகத்துக்கு முற்றிலும் எதிரானவள்.

அவன் வாழ்ந்தது இரத்தத்தில்.

அவள் வாழ்ந்தது கண்ணீரில்.

அவன் மனிதர்களை பயமுறுத்தி வாழ்ந்தவன்.

அவள் மனிதர்களை நம்பி வாழ்ந்தவள்.

ஆனால்…

விதி இருவரையும் ஒரே பாதையில் கொண்டு வரப்போகிறது.

அந்த சந்திப்பு…

ஒரு சாதாரண சந்திப்பு கிடையாது.

ஒரு Mafia உலகத்துக்கும்…
ஒரு சாதாரண பெண்ணின் உலகத்துக்கும் நடக்கப்போகும் முதல் மோதல்.

அந்த நாளை நோக்கி…

கதை நகர்கிறது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top