நெஞ்சினில் நெசவாணவள்
கார்ப்பரேட் உலகின் மௌன சிங்கம் ஆர்யன் தேவ். பிசினஸ், குடும்பம், பொறுப்பு என எப்போதும் ஒரு இறுக்கமான முகமூடியுடனேயே வலம் வரும் அவனது மௌன உலகத்திற்குள், புயலாக நுழைகிறாள் அனன்யா. நல்ல வசதியான பின்னணி இருந்தும், பணத் திமிர் துளிக்கூட இல்லாமல், படுகேஷுவலாகக் குறும்பு செய்யும் அனன்யா, தன் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவள். முதல் நாளே ஆபீஸ் ரூட் தெரியாமல் தவறுதலாக எம்.டி ஆர்யனின் அறைக்குள் நுழைந்து, அவனது மிரட்டலான ஆங்கிலக் கோபத்தில் மிரண்டு விழும் அனன்யா, இருவருக்கும் இடையில் மோதல் மற்றும் காதல் கதை
