அத்தியாயம் 04

அத்தியாயம் 04

 

அவளோ அப்பாவியாக இருவரையும் பார்த்தாள்.

கணவன் முறைத்துப் பார்ப்பவனைப் பார்த்து பேச ஒரு மாதிரியாக இருந்தது.

முன்னால் இருந்தவனோ அக்ஷரனை முறைத்து விட்டு இவளைப் பார்த்து மென்னகை பூத்தான்.

“நீ உள்ள போய் லாக் பன்னிக்கோ”

கூறியவன் வீட்டை விட்டு வெளி வர இவள் முன்னால் இருந்தவனைப் பார்க்காமல் கதவை மூடிக் கொண்டாள்.

அக்ஷரனுக்கு முன்னால் இருந்தவன் இன்னும் அக்ஷரனை முறைத்துப் பார்த்தான்.

“என்ன புது பொண்டாட்டி கிட்ட உன்னோட வண்டவாளத்தயெல்லாம் போட்டுக் கொடுத்துடுவேனோன்னு பயமா இருக்கா”

முன்னால் இருந்தவன் கேலியாக கேட்க இவனது முகம் கோவத்தில் செந்தணலாக சிவந்து போனது.

“எப்பிடியும் அந்த பொண்ணுக்கு உன்ன பத்தி தெரிஞ்சதும் உன்ன விட்டு போய்டுவா நா சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது வரட்டா”

கேலியாகக் கூறியவன் அங்கிருந்து சென்றான்.

அக்ஷரனோ கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கைகளை இறுகப் பொத்தி அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.

பின் தலை முடியைக் கோதிக் கொண்டவன்.

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து சென்றான்.

******

வீட்டுக்குள் கதவை சாற்றிய நேத்ரா குழப்பமாக இருந்தாள்.

“யாரு அவங்க எதுக்கு இவர பார்த்து முறைக்கனும் இவரும் அவர பார்த்து முறைச்சாரே ரெண்டு பேருக்கிடையிலையும் ஏதாச்சும் தகராறோ”

எண்ணிக் கொண்டிருந்தவள் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்தாள்.

வீட்டை சுற்றி பார்க்க வெறுமையாக இருந்தது.

அவன் இருக்கும் போது உணராத தனிமையும் வெறுமையும் இப்பொழுது அதிகமாகவே தாக்கியது.

“என்ன பன்ன அலுப்பா இருக்கே”

எண்ணிக் கொண்டவள் எழுந்தாள் வரவேற்பறையை ஒட்டிக் காணப்பட்ட பால்கனியை நோக்கிச் சென்றாள்.

அங்கிருந்த திரைச்சீலையை விலக்கி விட்டவள் வெளியே வந்து பார்த்தாள்.

அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது பூந்தொட்டிகள்.

அதில் அதிகமாக இருந்தது ஓர்கிட் மலர்களே.

சற்று உன்னிப்பாக கவனித்துப் பார்த்தாள் அனைத்தும் ஓர்கிட் மலர்கள் தான்.

அதைப் பார்த்ததும் இவளது இதழ் தானாக விரிந்தது.

“ஐய் சூப்பர்”

அதை நோக்கி ஓடியவள் குனிந்து ஒவ்வொரு பூக்களையும் தொட்டுப் பார்த்தாள்.

அனைத்து பூக்களையும் தடவிப் பார்த்தாள்.

காலையில் நீர் ஊற்றி இருப்பான் போல் இதழ்களில் நீர்த்துளிகள் இருக்க அதை மெதுவாக விரலினால் தட்டி விட்டாள்.

அது அவளது முகத்தில் பட முகம் முழுவதும் புன்னகை தான்.

“ரொம்ப அழகா இருக்கு எனக்கு புடிச்ச ஓர்கிட் பூ”

எனக் கூறியவள் குனிந்து அந்த மலரிதழ்களில் தன்னிதழைப் பதித்தாள்.

“இவங்களுக்கும் புடிக்குமா இல்லையே”

யோசித்துப் பார்த்தாள் சிறு வயதில் அவனுக்கு அம்மலர்களின் மீது நாட்டம் இருந்ததா?? எனக் கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவ்வளவு இயற்கையை ரசிக்கும் பழக்கம் அவனிடமில்லை.

ஆனால் இவளுக்கு இயற்கை தான் தோழி.

அவற்றுடன் ஒன்றிப் போவாள்.

ஓர்கிட் மலர்கள் என்றால் உயிர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

கொஞ்ச நேரம் குனிந்து ஒவ்வொரு மலரையும் ரசித்துப் பார்த்தாள்.

பின் எழுந்தவள் பால்கனி கம்பியை பிடித்துக் கொண்டு மேலே வானத்தைப் பார்த்தாள்.

வானம் கறுத்து இருந்தது.

கொஞ்ச நேரம் மேலே பார்த்துக் கொண்டிருக்க முகத்தில் விழுந்தது மழைத் துளிகள்.

மழைத்துளிகள் முகத்தில் விழுந்ததும் கண்களை மூடிக்கொண்டாள்.

மூடியிருந்த அவளது விழிகளைத் தாண்டி கன்னத்தில் உருண்டோடியது கண்ணீர் துளிகள்.

மழையும் வேகமெடுக்க அங்கையே மடங்கி அமர்ந்தவள் குலுங்கி அழுதாள்.

மழை நீரில் அவளது கண்ணீரும் கரைந்து போனது.

*****

இங்கு அந்த பாட்டுக்கு ஏற்றவாறு ஷூட்டிங்க் ஸ்பட் ஆயத்தமாகிக் காணப்பட்டது.

பார் ஒன்றில் தான் அந்த பாட்டை எடுக்க தீர்மானித்திருந்தார் இயக்குநர்.

“எங்க அந்த ஹீரோயின்”

இயக்குநர் கேட்க அவரது உதவியாளர் கை காட்டினார் ஓர் இடத்தை.

அங்கு ஆடை அணிந்து இருக்கிறாளா என்று ஆராய்ச்சி செய்யுமளவு அரைகுறையாக இல்லை குறையாக ஆடை அணிந்து இருந்தாள்.

மார்புப் பகுதியை மாத்திரம் மறைக்கக் கூடிய அளவில் கை இல்லாத ஒரு துண்டை அணிந்து.

தொடை நன்றாக தெரியுமளவுக்கு சிறிய ஸ்கர்ட் ஒன்றை அணிந்து இருந்தாள்.

கண்கள் கூசுமளவுக்கு ஒப்பனைகளை அள்ளி விட்டு.

அங்கிருந்தவர்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளைப் பார்த்த இயக்குநர்க்கு திருப்தியாக இருந்தது அவளது ஆடை அலங்காரம்.

“ஓகே கெட் ரெடி”

எனக் கூறும் போதே.

“ஸர் ப்ரடீயூஸர் ஸர் வாராரு”

ஒருவன் வந்து சொல்ல இவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவன் வருவதற்கு முன்னர் இந்த பாட்டின் ஷூட்டிங்கை முடித்து விட்டால் பின்னர் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என எண்ணியிருக்க வந்து விட்டானே.

என்ன சொல்ல அவனிடம் 

அவனுக்குத் தான் இப்பிடி பாட்டு என்றால் வெறுப்பு.

அதுவும் பெண்களின் கண்ணியம் அவனது படங்களில் குறையாமல் இருக்க வேண்டும் என்று முதலில் சொல்லி விட்டானே.

“ஹாய் ஸர் வாங்க”

உள்ளே வந்தவனை இளித்துக் கொண்டு வரவேற்க அவனோ அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழல விட்டான்.

அவனது முகம் இறுகுவதை வைத்தே இயக்குநர் கணித்து விட்டார் அவனுக்கு இந்த இடம் பிடிக்கவில்லை என்று.

“என்ன இது உங்ககிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேனே ஓவர் கிளாமர் வேணாம்ன்னு அந்த ஹீரோயின்க்கு ட்ரஸ் பற்றாக்குறையா”

அவன் முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு கூற.

அவனை எதிர்த்து பேச முடியாமல் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் இயக்குனர்.

ஏனென்றால் இயக்குனரது முதல் படம் தான் இது.

இவனை நம்பி இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் சம்மதித்தே பெரிது.

“இல்ல ஸர் அது”

இவன் இழுத்துக் கொண்டு கூற இவன் அவனை பஸ்பமாக்கிக் கொண்டிருந்தான்.

 

அங்கு தூரத்தில் இருந்த அந்த கவர்ச்சி நடிகை இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாவ் ஹன்ட்ஸம் இப்பிடி ஸ்மார்ட்டா இருக்காரே ஹீரோவ விட இவர் சூப்பரா இருக்காரே இவரே இந்த படத்துல நடிக்கலாமே”

என ஜொல்லு விட்டுக் கொண்டிருந்தாள்.

உண்மை தான் ஆறடியில் ஆளை அசரடிக்கும் அழகில் இருக்கும் அவனை பார்த்ததும் கூறி விட முடியும் பொலிவுட் ஹீரோ என்று.

தலை முடிக் கோதும் அவனது நீண்ட விரல் முதல் சிவந்து போய் இருக்கும் அவனது இதழ் வரை ரசித்தவள்.

எழுந்தாள்.

“எங்க மெடம் போறிங்க”

அவளுக்கு மேக்கப் போட்டு விடும் பெண்மனி கேட்க.

“ஜஸ்ட் வைட்”

கூறியபடி வளைந்து நெளிந்து இடுப்பை அசைத்து அவனை நோக்கிச் செல்ல.

“கிழிஞ்சிது”

தலையில் கை வைத்துக் கொண்டாள் அந்த ஒப்பனை செய்யும் பெண்.

அவளுக்குத் தான் தயாரிப்பாளரை பற்றி தெரியுமே இது வரை எந்த பெண்ணையும் தன்னை நெருங்க விட்டதில்லையே.

நான்கடி தூரத்திலிருந்து தான் பேசுவான் அதுவும் கண்களை கடந்து அவனது பார்வை எங்கேயும் அலைபாயாது.

“ஹாய் ஹன்ட்ஸம்”

கத்திக் கொண்டு அவனை நெருங்கி அணைத்தாள்.

பல இயக்குனர், தயாரிப்பாளர் நடிகர்களை தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளதால் தயக்கமும் பயமும் இன்றி அவனை நெருங்கி அணைத்திருக்க.

அவனோ கோவமாக அவளை விலக்கி விட்டவன்.

ருத்ரமூர்த்தியாக மாறியிருந்தான் 

“யூ ப்ளடி இடியட் ****** ”

அகராதியில இல்லாத கெட்ட வார்த்தையையும் கூறி அந்த நடிகையை திட்டியவன் கையை அறைய நீட்ட அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

“ச்ச்ச உன்ன தொடவே அருவெருப்பா இருக்கு”

அவளிடம் கூறியவன் இயக்குனரிடம் திரும்பி.

“இனிமே இங்க இவள பார்க்கக் கூடாது அன்டர்ஸ்டான்ட்”

கர்ஜித்தவன் அவளையும் முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

“யேன்மா நீ வேற”

இயக்குனர் தலையில் அடித்துக் கொள்ள.

“என்ன தொட அருவெறுப்பா இருக்கா என்ன தொட வைக்குறேன் உன்ன”

மனதுக்குள் அவனுடன் சபதம் எடுத்தாள் அவள்.

****

ஆள் அரவமற்ற அந்த இடத்தில் காணப்பட்ட அந்த அரைவாசி கட்டப்பட்டு விடப்பட்ட நிலையில் இருந்த பங்களாவில் இருந்து அந்த அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“ம்ம்மா வலிக்குது”

“ம்ம்ம்மாஆஆ”

“ஐயோஓஓஓ”

மூன்று வெவ்வேறு குரல்கள் அந்த பங்களாவிலிருந்து வந்தன.

உள்ளே மூன்று நபர்கள் வலியில் துடித்துக் கொண்டிருந்தனர்.

மூன்றும் இருபத்தைந்து முப்பது வயதுக்கு இடைப்பட்ட வாலிபர்கள் தான்.

அங்கிருந்த அந்த அகன்ற பெரிய இருக்கையில் கொஞ்சமும் சலனமின்றி உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் காலுக்கு மேல் கால் போட்டு தொடையில் இடது கையால் தாலமிட்டுக் கொண்டே  அமர்ந்து அவர்களையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு முன்னால் இருந்த அம்மூவரும் வலியில் துடித்துக் கொண்டிருந்தனர்.

மூவரது முகமும் ஆள் அடையாளம் தெரியாத அளவு சிதைந்து போய் காணப்பட்டது.

கன்னம் ஒட்டிப் போய் சாப்பிட்டு பலநாள் ஆனது போல் இருந்தது.

அவர்களது கை கால்களில் ஆறிய வடுக்கள் ஆறாத வடுக்கள் என பல  காயங்கள் காணப்பட்டன.

கையில் சூடாக்கிய இரும்புக் கம்பியை இழுத்ததற்கான வடு காணப்பட்டது.

அது ஆறாமல் இருக்கவே இன்று ஏற்பட்ட காயமாக இருக்கலாம்.

“என்ன இன்னைக்கு சத்தம் வரல்ல”

காதை குடைந்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் எழ.

“ஐயோ விட்டுடுங்க ஸர்”

“இல்ல கொன்னுடுங்க”

எனக் கதற அவர்களைப் பார்த்து இடது பக்கமாக இதழஎ வளைத்து  சிரித்தவன்

“உங்கள கொல்லவா இவ்ளோ நாள் வெச்சிக்கிட்டிருக்கேன் ப்ச்ச்”

சலித்துக் கொள்ள.

“எங்கள எதுக்கு இவ்ளோ கொடும படுத்துறிங்க”

இன்னுமொருவன் பேச முடியாமல் வாய் அசைத்து கேட்டான்.

அதைக் கேட்டவனது முகம் இறுகிப் போனது.

முகத்தில் இவ்வளவு நேரமும் இருந்த கொஞ்சநஞ்ச கேலியும் காணாமல் போனது.

அங்கிருந்த பீர் போத்தலை எடுத்தவன் வாய்க்குள் சரித்துக் கொண்டே அவர்களை நோக்கி வர அவர்களோ எழுந்து ஓட முடியாமல் அங்கையே படுத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

அவர்களிடம் வந்தவன் குனிந்து அவர்களை பார்த்தவன் நாடியை தேய்த்துக் கொண்டு.

“எதுக்கு உங்கள இவ்ளோ கொடும படுத்துறேன்”

யோசிப்பது போல் நடித்தவன்.

“மறந்துடிச்சே யாபகம் வந்தா சொல்றேன்”

எனக் கூறியவன் அவர்களது அந்த காயத்திற்கு மேல் தனது கையிலிருந்த 

பீரினை ஊற்ற.

“ஆஆஆஆஹ் ஐயோஓஓஓ”

என மூவரும் கதற அவர்களது கதறலைப் பார்த்தவன் திருப்திகரமாகப் புன்னகைத்தான்.

 

******

இங்கு அழுது கொண்டிருந்தவளது அழுகை சற்று குறைந்திருந்தது.

ஆனால் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.

எழுந்து உள்ளே வந்தவள் ஸோபாவில் சோர்வாக அமர்ந்தாள்.

பசிக்கவில்லை என்பதை விட சாப்பிட தோன்றவில்லை.

அமைதியாக விழி மூடி அமர்ந்திருந்த போதிலும் கருமணி அசைந்தது.

என்ன செய்வதென்று தெரியவில்லை.

வேலைகள் ஏதாவது செய்தால் மனம் தேவையற்ற சிந்தனைகளில் மூழ்காது என எண்ணியவளது கண்களில் பட்டது.

மேசையில் இருந்த பேப்பரும் பேனாவும்.

அதை எடுத்துக் கொண்டு வந்தவள் ஒரு நொடி தயங்கினாள்.

அவனுக்கு தேவையானதாக இருக்குமோ என்று யோசித்தவள்.

என்ன நினைத்தாளோ அந்த பேப்பரில் ஏதோ எழுதினாள்.

இடைக்கிடையே கண்ணீர் வேறு அந்த தாளை நனைக்க எழுதுவதை மாத்திரம் நிறுத்தவில்லை.

முழுதாக எழுதி முடித்தவள் அதை வாசித்தாள்.

வாசிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர்கள் கன்னத்தை தொட்டது.

அதைத் துடைத்தவள் விரக்தியாக சிரித்தாள்.

 

*******

தொடரும்..❤

 

 

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top