அத்தியாயம் 06
அவன் அறைக்குள் இருக்க இவளுக்கு அறைக்குள் செல்வதற்கு ஒரு மாதிரியாக இருந்தது.
இவள் அமைதியாக ஸோபாவில் அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு நேரம் தான் அமர்ந்திருக்க முடியும்.
சலிப்பாக இருக்க எழுந்து பால்கனிக்குச் சென்றாள்.
அங்கிருந்த ஓர்கிட் பூக்களைப் பார்த்ததும் சோர்வு அனைத்தும் மாயமாக மறைந்து போனது.
குனிந்து ஒவ்வொரு பூக்களையும் தடவிப் பார்த்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு”
முத்துப் பற்கள் தெரிய அழகாக புன்னகைத்தாள்.
எவ்வளவு நேரம் அங்கையே நின்றுக் கொண்டு அவற்றை ரசித்தாள் என்பது தெரியவில்லை அவளது கணவனின் இறுமலில் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவனும் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லையே.
தவறு செய்த பிள்ளை போல் கைகளைப் பிசைந்துக் கொண்டு தலையைக் குனித்தாள்.
“கெளம்பு வெளில போகனும்”
கூறி விட்டு அவன் செல்ல இவள் எங்கு செல்லப் போகிறோம் என்ற யோசனையுடன் தயாராவதற்குச் சென்றாள்.
அவன் கொண்டு வந்திருந்த இன்னுமொரு சுடிதாரை அணிந்தாள்.
அது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலாலான அழகிய டொப் ஆகும்.
அணிந்து கொண்டு நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டு வெளியே வர அவன் அழைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
அவனும் அடர் சிவப்பு நிறத்தில் முழு நீளக்கை ஷேர்ட் அணிந்து அதனை முட்டி வரை மடித்து விட்டு முதல் இரண்டு பட்டன்களையும் திறந்து விட்டிருக்க வெள்ளை நிறத்தில் பேன்ட் அணிந்து அழகாக தான் இருந்தான்.
விரல்களால் தலை முடியை கோதிக் கொண்டு அழைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
“ஆமா எங்க ஓகே நாளைக்கு பாக்கலாம்”
பேசி முடித்து விட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ தலையைக் குனித்துக் கொண்டிருந்தாள் அவன் பார்வை உணர்ந்து.
அவளை தலை முதல் கால் வரை நிதானமாகப் பார்த்தவன் முன்னால் நடந்தான்.
அவனது பார்வையில் உடல் கூசினாலும் அவனுக்குப் பின்னால் நடந்தாள் இவள்.
கதவை மூடி விட்டு வெளியே வர அவனது நீண்ட கால்களால் நடக்க இவளால் அவனது அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
அந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் ஏதோ இவர்களையேப் பார்ப்பது போல் உணர்ந்தாள் மேலும் அவர்களது பார்வை இவளைக் கேலியாகப் பார்ப்பது போல் இருந்தது.
“நாம அவர்கூட போறத தான் எல்லாரும் இப்பிடி பாக்குறாங்களா சரி தானே அவரோட வீட்டுல வேலைப்பார்க்குறவ போல இருக்கேன்”
நினைத்துக் கொண்டவள் நடையின் வேகத்தை இன்னும் குறைத்தாள்.
அவனோ ஃபோனை நோண்டிக் கொண்டு நடையை குறைத்து இவளுடன் நடந்தான்.
அவளுக்கு அதற்கு மேல் நடையை குறைக்க முடியவில்லை.
அவன் நிதானமாக இவளுடன் நடக்க இவளுக்குத் தான் சங்கடமாகிப் போனது.
“ஐயோ இவங்க வேற என்கூடவே நடக்குறாங்காளே”
மனதால் நினைக்க மாத்திரமே முடிந்தது இவளால்.
நிதானமாக நடந்து சென்றவன் அவளுக்கு முன்னிருக்கையில் கார் கதவைத் திறந்து கொடுக்க மறுக்காமல் ஏறி அமர அவன் கதை மூடி விட்டு மறுபக்கத்தில் வந்து ஏறி அமர்ந்து காரை எடுத்தான்.
இவளுக்குத் தான் ஒரு மாதிரியாகி விட்டது.
அவன் ஏதோ இவளுக்கு சேவை செய்வது போல் தோன்ற தயக்கமாக அவன் முகம் பார்த்தாள்.
அவனது முகத்தில் எந்த உணர்வும் பிரதிபலிக்தவில்லை.
பின் அமைதியாக முன்னால் திரும்பி அமர அப்பயணமும் மௌனமாக சென்றது.
கார் ஓரிடத்தில் நிற்க விழி உயர்த்தி வெளியே பார்த்தாள்.
அது ஒரு பெரிய ஆடைக்கடை ஒன்று போல் இருந்தது.
இவன் காரைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.
“இப்போ நா போகனுமா”
இவள் யோசித்துக் கொண்டிருக்க அவன் இவளது பக்கத்தில் வந்து கார்க்கதவை திறந்து விட்டான்.
அதற்கு மேல் யோசிக்க முடியாமல் காரை விட்டு கீழிறங்கினாள்.
“உள்ள வா”
அவன் கூறி முன்னே நடக்க மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் அவனுக்கு பின்னால் சென்றாள்.
மிகப் பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த ஆடை கடையை மிரட்சியாகப் பார்த்தாள்.
இவன் அங்கு நுழைய அங்கு காவலுக்கு இருந்த காவலாளி.
“குட் ஈவினிங் ஸர்”
கூறி மரியாதையாக இவனுக்கு கதவைத் திறந்து விட தலையசைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவளுடன்.
கடையினர உள்ளே கண்ணாடி தடுப்புடன் கூடிய சுவர்.
நவீன ரகத்தில் காணப்பட்ட அந்த கடைக்குள் நுழைந்ததும் உடல் ஜிவ்வென்றிருந்தது.
அந்த கடையோ ஆறு தளங்களைக் கொண்டுக் காணப்பட்டிருந்தது.
இவன் பேன்ட் பொக்கெட்டில் கைகளை விட்டபடி அங்கு நிற்க இவளும் அவனுடன் நின்றாள்.
“உனக்குத் தேவையான ட்ரஸ் எடு”
அவன் கூற மலங்க விழித்தாள்.
அவளது காதுக்கு அருகில் குனிந்து மெதுவாக நிதானமாக
“உனக்குத் தேவையான ட்ரஸ்ஸஸ் எடு”
அவனது ட்ரிம் செய்யப்பட்டிருந்த தாடி அவளது கன்னத்தில் உரச அது பெரும் அவஸ்தையாகிப் போனது காரிகையவளுக்கு.
“எனக்கு எதுவும் தேவல்ல”
அவள் தலையைக் குனித்துக் கொண்டு கூறினாள்.
அவளை நிதானமாகப் பார்த்தவன்.
“உன்கிட்ட எடுக்குறியா இல்லையான்னு கேக்கல்ல எடுன்னு சொன்னேன்”
அழுத்தம் திருத்தமாக அவன் கூற அவனது கூற்றில் இருக்கும் செய்ய வேண்டும் என்ற கட்டளை இவளை மௌனமாக்கியது.
“ஹெலோ ஸர் நீங்களே வந்துடிங்க சொல்லியிருந்தா நாங்களே”
அந்த கடையின் மேனேஜர் அவசரமாக வந்து பணிவாகக் கூறிக் கொண்டு சொல்ல அவரை கை நீட்டி தடுத்தவன்.
“லேடீஸ் செக்ஷன் தேர்ட் ஃப்ளோலயா”
அவரைப் பார்க்காமல் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ஆமா ஸர் உங்க ஷோப்பிங் மோல் நீங்களே இப்பிடி கேக்குறிங்க”
மேனேஜர் சிரிக்க அவன் எதுவும் கூறவில்லை.
இவளுக்குத் தான் அதிர்ச்சியாகி இருந்தது.
“இவரோட கடையா அப்போ இவ்ளோ பெரிய ஜவுளி கடையா போட்டிருக்காரு”
அவளது எண்ணம் இது தான்.
“மாலா”
மேனேஜர் அங்கிருந்த பணிப்பெண்ணை அழைக்க பணிவாக அவர் முன் வந்து நின்றாள் அப்பெண்.
“ஸர்க்கு ஹெல்ப் பன்னுங்க”
அவர் கூற சம்மதமாக புன்னகையாக தலையசைத்தாள் அந்த இளம்பெண்.
அவனை போல் ஆணழகனைப் பார்க்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் இதில் அவனுக்கு உதவி செய்து பக்கத்திலிருந்தே அந்த அழகனை ரசிக்கலாமே.
கரும்பு தின்ன கூலியா??
“வாங்க ஸர்”
இளித்துக் கொண்டு அவன் மட்டும் தான் அங்கிருப்பதாக நினைத்துக் கொண்டு அவனை பார்த்து வழிய.
மேனேஜர் அப்பொழுதே விடைபெற்று சென்று விட்டார்.
அக்ஷரனோ அந்த பெண்ணை கண்டுக்காமல் தனது மனைவியின் பக்கத்திற்கு திரும்பி.
“நீ என்ன எடுக்குற சுடி ஓ சாரி”
“அது எதுவும் சரி”
அவள் தயக்கமாகக் கூறினாள்.
அவளை அழுத்தமாகப் பார்த்தவன் அந்த பணிப்பெண்ணை பார்த்து.
“ஷோர்ட் ஸ்கர்ட்ஸ் என்ட் டொப்ஸ் எடுத்துக் காட்டுங்க”
அவன் கூற அப்பெண் அழகான டொப்ஸ் மற்றும் ஷோர்ட் ஸ்கர்ட்ஸை எடுத்துக் காட்ட அதை கையில் எடுத்தவன் தனது மனைவியிடம் நீட்ட அதைப் பெற்றுக் கொள்ளாமல் அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவன் புருவம் உயர்த்தி என்னவென கேட்க.
“இல்ல இது குட்டியா இருக்கு இத எப்பிடி போட்றது”
முகத்தை அஷ்டகோணலாக மாற்றிக் கொண்டு அவள் சொல்ல.
“நீ தானே சொன்ன எதுவா இருந்தாலும் ஓகேன்னு”
அவன் கூற இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“அப்போ நீயே எடு”
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவன் கூற தலையை சம்மதமாக அசைத்து தயக்கமாக அந்த பணிப்பெண்ணைப் பார்த்து.
“வெள்ள கலர்ல சேல இருக்கா”
வெகுளியாகக் கேட்டாள் நேத்ரா.
“உங்களுக்கு வைட் கலர் சூட்டாகாது ஏன்னா உங்க கலருக்கு”
அந்த பணிப்பெண் ஏதோ சொல்ல வர.
“அவ எத கேக்குறாளோ அத குடுங்க”
பற்களைக் கடித்துக் கொண்டு அவன் கூற அந்த பணிப்பெண் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.
இவளுக்குத் தான் ஒரு மாதிரியாக போய் விட்டது.
“இல்ல பரவல்ல நீங்க சொன்னது போல என்னோட கலருக்கு வெள்ள கலர் பொருத்தமாகாது”
நேத்ரா கூற அக்ஷரன் அவளை முறைத்தான்.
அவனது பார்வையில் தலையை குனித்துக் கொண்டாள்.
“இல்ல மேடம் உங்க பாஸ் சொன்னது போல நீங்க உங்களுக்கு விருப்பமானத எடுங்க”
பணிப்பெண் பணிவாகக் கூற.
அவளது பணிப்பெண் கூறிய பாஸ் என்ற சொல்லில் இவளது முகம் வாடியது.
“சரி தானே இவங்களோட மனைவியா இருக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்ல”
இவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அக்ஷரன் அவளது கழுத்தைப் பார்த்தாள்.
தாலியை சுடிதாருக்கு உள்ளே மறைத்து வைத்திருந்தாள்.
அதைப் பார்த்தவன் எதுவும் யோசிக்காமல் அவளது கழுத்தில் மறைத்து வைத்திருக்கும் தாலியை வெளியே எடுத்து விட்டான்.
இவள் அதிர்ந்து விழிக்க.
“இவ என் பொண்டாட்டி நா அவ புருஷன் பாஸ் இல்ல அன்டர்ஸ்டான்ட்”
நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக் கூற பணிப்பெண் அவனது கோவத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டே.
“ஓகே ஸர் ஸோரி மேம் இந்தாங்க மேம் நீங்க கேட்ட வைட் கலர் ஸாரி”
அவள் நேத்ராவிற்கு எடுத்துக் காட்ட இவளுக்கு அவளது வார்த்தை எதுவும் காதில் விழவில்லை.
அவனது ஸ்பரிஸம் மேனியில் இன்னும் இருப்பது போல் தோன்ற உடல் சிலிர்த்தடங்கியது.
“இவங்க தெரிஞ்சா பன்றாங்க”
அவனது முகமோ எந்தவித உணர்வையும் காட்டவில்லை பெண்ணவளுக்குத் தான் உணர்வுகள் ஊஞ்சலாடியன.
அவளுக்குத் தேவையான அவளது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆடைகளை வாங்கினான்.
“எதுக்கு இவ்ளோ”
அவள் கேட்க அவன் பதில் எதுவும் கூறவில்லை.
இவள் ஆசையாக பார்க்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான்.
அவள் அங்கிருந்த பொம்மையை பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு மிக அருகில் நெருங்கி நின்றவன் காதிற்கு அருகில் குனிந்து.
“எல்லாம் எடுத்தியா”
அவனது குரலிலும் அவனது நெருக்கத்திலும் பெண்ணவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“ஆ..மா ஆமா”
வார்த்தைகள் வேறு சண்டித்தனம் செய்தது.
“எல்லாம் எடுத்தியா”
எல்லாம் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து மீண்டும் கேட்க எதை கேட்கிறான் எனப் புரியாமல் விழித்தவள் அவனது பார்வையில் கன்னம் செந்தாமரையாக சிவந்தது
தலையைக் குனித்துக் கொண்டு ஆம் என தலையசைத்தாள்.
“சரி ஓகே வா”
கூறி விட்டு அவன் நடக்க அவனுடன் சேர்ந்து நடந்தாள் இவள்.
இரவு ஏழு மணிக்குப் போல் அந்த கடையை விட்டு வெளியே வந்தனர்.
“ஏதாச்சும் குடிக்கிறியா”
அவளது சோர்வான முகத்தைப் பார்த்து அவன் கேட்டான்.
“இல்ல வீட்டுக்குப் போலாம்”
அவனுக்கு வெளியே சாப்பிடுவது பிடிக்காது என்று அத்தை கூறியது யாபகம் வர மறுத்தாள்.
அக்ஷரன் முன்னிருக்கையில் கதவைத் திறந்து கொடுக்க ஏறி அமர்ந்தாள் அவள்.
பின்னிருக்கையில் வாங்கிய ஆடைப்பையை வைத்தவன் ட்ரைவர் சீட்டில் வந்து அமர்ந்தான்.
“இந்தா”
பழரசப் போத்தல் ஒன்றை நீட்டினான் அவளிடம்.
“இல்ல வேணாம்”
“எடுக்க சொன்னேன்”
கூறியவன் அதை அவளுடைய கையில் திணித்தான்.
அவள் அமைதியாக அதைக் குடிக்க இன்னுமொரு பொட்டியை அவளிடம் நீட்ட இவள் கேள்வியாகப் பார்த்தாள் அவனை.
“பிரிச்சிப் பாரு”
கூறி அவளது கையில் வைக்க யோசனையாக அதைப் பிரித்துப் பார்த்தவளது விழிகள் விரிந்தது.
அங்கு இருந்தது என்னவோ ஸ்மார்ட் ஃபோன் தான்.
“யாருக்கு”
“பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிக்கு”
அவன் கூற யோசனையாக அவனது முகத்தைப் பார்த்தாள் கேலி செய்கிறானா என்று. முகத்திலோ கேலிக்கான எந்த அறிகுறிகளும் இல்லையே.
“எனக்கா”
ஆர்வம் பொங்க அவனிடம் மீண்டும் கேட்டாள் அவனோ காரை ஸ்டார்ட் செய்து கொண்டே ஆம் என தலையசைத்தான்.
“ரொம்ப நல்லா இருக்கு ஆனா இத எனக்கு பாவிக்க தெரியாதே”
அவள் உதட்டைப் பிதுக்க காரை ஒரு கையால் ஓட்டிக் கொண்டு மற்றைய கையால் அந்த ஃபோனை வாங்கி அதை பயன்படுத்தும் முறையை விளக்கினான்.
அதை ஆர்வமாக தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள்.
“இது தான் என்னோட நம்பர் இது அம்மாவோட நம்பர்”
இருவரது நம்பரையும் அவளது அழைப்பேசியில் சேமிக்க இவள் கவனமாகக் பார்த்துக் கொண்டாள்.
“இனிமே ஏதாச்சும் தேவைன்னா இதுல இருந்து என்ன கூப்டு”
அவன் கூற
“சரி”
எனத் தலையசைத்தாள்.
மனம் இலகுவானது போல் இருந்தது.
காதலாக கணவன் பேசா விட்டாலும் கடித்துக் குதறும் வார்த்தைகளையும் அவன் பேசவில்லையே அது வரை ஆறுதல் தான்.
மங்கையவள் அறியவில்லையே மன்னவன் நாளையே இவளது மனதை கத்திக் கொண்டு கிழிக்கப் போகிறான் என்று..!!!
******
தொடரும்..❤
💜அஷு💜