அத்தியாயம் 08

அத்தியாயம் 08

அவன் கூறிய வார்த்தைகளில் கண்கள் கலங்கியது நேத்ராவிற்கு.

“ம்ம் சைன் பன்னு”

அவன் உறுதியாக இருந்தான்.

நேற்று அத்தையிடம் நன்றாக உள்ளேன் எனக் கூறியது அக்கடவுளுக்கே பொறுக்கவில்லை போல் அது தான் இன்று இப்பிடி ஒரு இடியை தலையில் இறக்கி வைத்துள்ளார் போலும்.

அவளது மனநிலை இவ்வாறு தான் இருந்தது.

அந்த பத்திரத்தை கையில் வாங்காமல் அவனையேப் பார்த்தாள்.

அவனும் எந்தவித சலனமுமின்றி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நீ கேட்டதை நா கொடுத்து விட்டேன்’

என்ற ரீதியில் அவன் பார்த்துக் கொண்டிருக்க இவளுக்கும் பேச முடியாத நிலை.

ஏனெனில் விவாகரத்து வேண்டும் என கேட்டது அவன் இல்லையே அவள் அல்லவா??

“இப்போ சைன் பன்னி கொடுத்தா தான் இன்னும் ஒரு வருஷத்துல டிவோர்ஸ் கிடைக்கும்”

அவன் கூற மறுப்பாக தலையாட்டினாள்.

அவளது தலையசைப்பில் இவன் புருவம் இடுங்க அவளையே அழுத்தமாகப் பார்த்தான்.

“யேன் நீ தானே கேட்ட விவாகரத்து வேணும்ன்னு இப்போ என்னாச்சு”

நிதானமாக அவன் கேட்க அவனுக்கு பதில் கூற முடியாமல் எச்சில் விழுங்கினாள்.

“நா கேள்வி கேட்டா பதில் வரனும்”

வார்த்தைகள் சற்று கடுமையாக மாற அவனைப் பார்த்துக் கொண்டே.

“அது.. இல்ல அத்த நாங்க சந்தோஷமா இருக்கோம்ன்னு நெனச்சிக்கிட்டு நிம்மதியா இருக்காங்க அவங்களோட நிம்மதிய கெடுக்க வேணாமே”

இறைஞ்சும் பார்வையுடன் அவனிடம் கெஞ்சினாள்.

“ஓஹ் அம்மாவுக்காக நாம சந்தோஷமா இருக்குற போல நடிக்கனும் ரைட்”

அவன் கேட்க என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ஆனால் அவளால் அவனுடன் வாழமுடியாது அது உறுதி.

அத்தைக்காக அவனுடைய வாழ்க்கையை நாசமாக்க வேண்டுமா எனக் கேட்ட மனசாட்சியின் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்றும் தெரியவில்லை?

அவனது கேள்விக்கும் என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை…??

“சொல்லு என் மேல தான் தப்பு உன்ன அவசரப்பட்டு கல்யாணம் பன்னிக்கிட்டேன் அந்த சொத்த என் பேர்ல மாத்திக்க நா வேற ஏதாச்சும் வழிய யோசிச்சிருக்கனும் அவசரப்பட்டுட்டேன் அதான் நானே உனக்கு இந்த ஜெயில்ல இருந்து விடுதல தரலாம்ன்னு இருக்கேன் நீ சைன் பன்னிக் கொடு”

அழுத்தமாக அவன் கூற இவளது மனதிலோ ஏதோ நொருங்கிய உணர்வு..!!

“இல்ல நா சைன் பன்ன மாட்டேன் நா உங்களுக்கு என் பேர்ல இருக்குற சொத்த எழுதிக் கொடுக்குறேன் ஆனா விவாகரத்து வேணாம்”

அவளும் உறுதியாகக் கூற அவனது புருவங்கள் வியப்பில் உயர்ந்தது.

“நீ தானே கேட்ட”

அவன் விடுவதாக இல்லை.

“நானே தான் சொல்றேன் விவாகரத்து வேணாம் ஆனா எனக்கு உங்களோட வாழ முடியாது அத்த மாமாவுக்காக நா உங்களோட வாழுறேன் ஆனா பொண்டாட்டியா இல்ல”

அவள் கூற இவனது முகம் சிவந்தது கோவத்தினால்.

“நீ அத்த மாமாவுக்காக என்கூட வாழு ஆனா  யாருக்காக வேண்டியும் உன்கூட வாழ வேண்டிய அவசியம் எனக்கில்ல”

அழுத்தமாகவும் அதே சமயம் நிதானமாகவும் அவன் கூற வலி நிறைந்த பார்வையை அவனை நோக்கி வீசினாள்.

“சரி நீங்க என்கூட வாழ வேணாம் உங்களுக்கு விருப்பமான யாரையாச்சும் கல்யாணம் பன்னிக்கோங்க”

அவள் கண்ணீருடன் கூற அவளை பார்த்தவன்.

“யேன் என்னைய உள்ள தள்ள ஐடியா பன்றியா முதல் பொண்டாட்டி இருக்குறப்போ ரெண்டாந்தரம் கல்யாணம் பன்னுறது சட்டப்படி குற்றம்”

“ஐயோ நா என்ன செய்வேன் அத்த நா சந்தோஷமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டிருக்காங்க அவங்களோட சந்தோஷத்துல மண்ணள்ளி போட என்னால முடியாது”

தலையில் அடித்துக் கொண்டு அழ அவன் எதுவும் பேசவில்லை.

“லாஸ்ட்டா என்ன சொல்ல வர்ர” 

தீர்க்கமான விழிகளுடன் அவளிடம் நிதானமாகக் கேட்டான்.

அவளும் கண்ணீரை புறங்கையால் துடைத்து விட்டவள் அவனை போலவே தீர்க்கமாகப் பார்த்தாள்.

“நீங்க உங்களுக்கு விருப்பமான பொண்ண கல்யாணம் பன்னிக்கோங்க நா எதுவும் சொல்ல மாட்டேன் ஆனா என்னால உங்களுக்கு விவாகரத்து தரமுடியாது”

“இது தான் உன்னோட முடிவா”

“ஆமா”

“ஓகே ஆனா உனக்கு எப்போ இந்த பத்திரத்துல சைன் பன்னனும்ன்னு தோணுதோ அப்போ சைன் பன்னு எனக்கு நோ ப்ரொப்ளம்”

அவன் கூறி விட்டு உள்ளே செல்ல இவள் தொப்பென அமர்ந்தாள் ஸோபாவில்.

அவனிடம் அவள் தானே  கேட்டாள் விவாகரத்து 

ஆனால் அதை அவன் செயற்படுத்த எண்ணிய போது இவளது மனம் எதற்கு இவ்வளவு துடிதுடித்துப் போனது 

மஞ்சள் கயிறு மாயமா??

மனம் பாரமாகிப் போனது என்னவோ உண்மை தான்.

கண்கள் கலங்கவில்லை இப்பொழுது கண்ணீர்க்கோடுகள் வற்றிப் போய் இருந்தது கன்னத்தில்..!!

பதினைந்து நிமிடங்கள் போல் கழிய தன் முன்னால் நிழலாடுவது போல் உணர்ந்தவள் 

தலையை நிமிர்த்தி பார்த்தாள் அவன் தான் நின்று கொண்டிருந்தான்.

“சாப்ட வா”

கூறி விட்டு முன்னால் நடக்க  

இவனது இந்த அக்கறை கூட வலித்தது.

“எனக்கு பசிக்கல்ல”

தயங்கினாலும் கூறினாள்.

“எனக்கு சாப்பாட்ட வேஸ்ட் பன்ன புடிக்காது அதோட நான் டைவோர்ஸ் தான்னு கேக்கல்ல நீ தான் கேட்ட அதான் குடுத்தேன் அதோட நீயே சொல்லிட்டியே எனக்கு விருப்பமான பொண்ண கல்யாணம் பன்னிக்க சொல்லி ஸோ இதுக்கப்புறம் உனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல நீ உன்னோட வீடு போலவே இரு எனக்கு தான் நீ சொத்த எழுதி தந்துடுவியே”

அவனது குரலில் கேலி இருந்ததோ..!?

அவன் கூறிய அனைத்தும் அவள் சொன்னவை தான் ஆனாலும் வலிக்கின்றதே..!!

அவன் கூறி விட்டு சென்றமர்ந்தான்.

இவள் அதற்குப் பின்னர் எதுவும் பேசவில்லை அமைதியாக சென்றமர்ந்தாள் டைனிங் டேபளில்.

அவனும் எதுவும் பேசவில்லை.

இவள் வழமை போல் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றாள் இவனோ போகும் அவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான்.

பின் இவனும் சாப்பிட்டு விட்டு எழ அவள் அவனது தட்டையும் எடுத்துச் சென்று கழுவினாள்.

அவன் அறைக்குள் நுழைய இவள் பல்கனிக்குச் சென்றாள்.

இவளது வருகையை வரவேற்றதோ என்னவோ ஓர்கிட் மலர்கள் தலைசாய்த்து ஆடியது காற்றில்.

அதைப் பார்த்ததும் இறுகியிருந்த இதழ்கள் மெதுவாக விரிந்தது.

“என்னோட வாழ்க்கைல நடக்குற எல்லாமே என்ன மீறி தான் நடக்குது எதுவும் என் இஷ்டப்படி நடக்காது போல”

வாய்விட்டே புலம்பினாள்.

அவளது புலம்பலை கேட்டது அந்த மலர்கள் மாத்திரமல்ல மங்கையவளது மன்னவனும் தான்.

வெளியே செல்வதாகக் கூற வந்தவன் அவள் பேசியவற்றைக் கேட்டு கோவம் வர எதுவும் பேசாமல் வெளியேறினான் வீட்டிலிருந்து.

இவளோ அவன் வந்தது தான் பேசியவற்றை கேட்டது எதையும் அறியாமல் அங்கிருந்த பூக்களைப் பார்த்து தனது துக்கத்தை தூரத்தள்ள நினைத்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்க யோசனையாக சென்று கதவைத் திறந்தாள்.

தேவிப்பிரியா தான் நின்றுக் கொண்டிருந்தாள் இன்றும் கையில் லன்ச் பொக்ஸுடன்.

“உள்ள வரலாம்ல”

கிண்டலாகக் கேட்க.

“தாராளமா”

இவளும் புன்னகைத்துக் கொண்டு அவளை வரவேற்றாள்.

“நா உன்கிட்ட சொன்னேன்ல எங்க வீட்டுக்கு வரனும்ன்னு நீ வரவே இல்ல அதான் நானே வந்தேன்”

தேவிப்பிரியா உரிமையாக சண்டையிட்டுக் கொண்டே வந்தமர்ந்தாள் ஸேபாவில்.

நேத்ராவோ புன்னகைத்தாள்.

“கண்டிப்பா நா வாரேன்”

 

“ம்ம் எப்பன்னு தான் தெரில சரி இந்தா இன்னைக்கு கேசரி”

தனது கையில் இருந்ததை நீட்ட புன்னகை முகமாகப் பெற்றுக் கொண்டாள்.

“நா தான் உங்களுக்கு செஞ்சித் தரனும் நீங்க தாரிங்க”

தயக்கமாகக் கூற தேவிப்பிரியா முறைத்தாள்.

“இன்னும் நீ என்ன ங்க போட்ற உரிமையா ப்ரன்ட்லியா பேசு அதோட நா செய்றது எங்க ரெண்டு பேருக்கும் அதிகம் அதான் உனக்கும் கொண்டு வந்து கொடுக்குறேன் நீ எனக்கு செஞ்சித் தரனும்ன்னு ஆசையா இருந்தா கண்டிப்பா செஞ்சித் தா ஆனா புள்ள பொறந்ததுக்கப்புறம் அப்போ தான் எனக்கு கஷ்டமா இருக்கும்”

கூறி அவள் கண்ணடிக்க இவள் சிரித்தாள்.

“சரி இரு நா போய் காஃபி போட்டுட்டு வாரேன்”

நேத்ரா அங்கிருந்த செல்லப் பார்க்க.

“நா ப்ரக்னட்டாகினதுக்கப்புறம் காஃபி குடிக்குறத நிறுத்திட்டேன் கண்டிப்பா குழந்த கெடச்சதுக்கப்புறம் உன்னோட கையால காஃபி குடிக்குறேன் இப்போ வேணாம்”

அவள் கூற நேத்ரா தலையசைத்தாள்.

“சரி உட்காரு”

நேத்ராவைத் தனது பக்கத்தில் அமர வைத்துக் கொண்டாள்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

*****

அந்த பாழடைந்த பங்களாவில் மூவரும் வலியில் முனகிக் கொண்டு கண் மூடி உறங்கியிருக்க அவர்கள் மேல் ஏதோ ஊற்றப்பட்டது.

“ஆஆஆ ஐயோஓஓஓ அம்மாஆஆ”

என்ற அலறலுடன் மூவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தார்கள்.

அவர்கள் மேல் ஊற்றப்பட்டதோ கொதிக்கும் தார்.

மூவரது உடலிலும் தார் வடிந்துக் கொண்டிருக்க முகத்திலோ உச்சக்கட்ட வலியின் சாயல்.

தன் முன்னே ருத்ர மூர்த்தி அவதாரம் எடுத்து முகம் கோவத்தினால் சிவந்து போய் நின்று கொண்டிருப்பவனைப் பார்க்க வலியிலும் இன்னும் அதிகரித்தது என்னவோ பயம் தான்.

“ஸர் விட்டுடுங்க”

அவனது காலை ஒருவன் பிடிக்கப் போகப் பார்க்க  தனது ஷூ போட்ட காலால் அவனது கையை மிதித்தான்.

சுடாகிய தார் இன்னும் உடலை எரித்துக் கொண்டிருக்க அவனது ஷூவினால் கீழே  மிதிக்கப்பட்ட கையும் உச்சக்கட்ட வலியைக் கொடுக்க உயிர் போகும் அளவிற்குக் கத்தினான்.

“ஐயோஓஓஓஓ அம்மாஆஆஆ”

கத்தினான்.

ஆனால் கத்துபவனது கையை விடும் எண்ணம் அவனுக்கு இல்லை போல் இன்னும் ஊன்றி மிதித்தான்.

கதறுபவனது முகத்தைப் பார்த்ததும் திருப்தியாக புன்னகைத்து அவனை விட்டான்.

மற்றைய இருவரையும் பார்க்க அவர்களும் கதிகலங்கிப் போய் அவனைப் பார்த்தார்கள்.

அவனோ மற்றைய இருவருக்கு அருகில் வந்து குனிந்தான்.

“பயமா இருக்கா”

புருவம் உயர்த்தி அவன் கேட்க தலையை நாலா பக்கமும் ஆட்டினார்கள் இருவரும்.

அவர்களது பயந்த முகத்தைப் பார்த்தவன் தலையை இடவலமாக ஆட்டிச் சிரித்து விட்டு

பக்கத்தில் இருந்த இரும்பிக் கம்பியை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றான்.

இருவரும் அவனை பீதியாகப் பார்த்துக் கொண்டிருக்க இரும்புக் கம்பியை எடுத்தவன்.

அவர்கள் இருவரினது ஆணுறுப்புக்கு ஓங்கி அடிக்க வலியில் துடித்தனர்.

“ஆஆஆஆ அம்மாஆஆ”

இருவரும் கத்த குரூரப் புன்னகை ஒன்று அவனது கண்களில்.

பின் அங்கிருந்த கதிரையில் சென்றமர்ந்து பீர் போத்தலை வாய்க்குள் சரித்தான்.

அவர்களது கதறல் சத்தம் காதில் தேனாக விழ குடிக்கும் போதையுடன் அந்த போதையும் சேர தலையாட்டிச் சிரித்தான்.

*****

தொடரும்…❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top