அத்தியாயம் 09

அத்தியாயம் 09

தேவிப்பிரியா அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டாள்.

அவள் வந்தது நேத்ராவினது மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

சில நேரங்களில் அப்படித் தானே..!!

சில உறவுகளிடம் மனம்விட்டு பேசவில்லை என்றாலும் சில மணித்துளிகள் பேசினாலே போதும்..!!

மனதில் உள்ளவை மாயமாக மறைந்து விடுமே..!!

அது போல் தான் தேவிப்பிரியா நேத்ராவிற்கு.

அவளிடம் மனம் விட்டு தனது பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை.

ஆனால் அவளுடன் பேசினால் மனதில் உள்ள பிரச்சினைகள் தற்காலிகமாக தன்னை விட்டு நீங்குவது போல் உணர்ந்தாள்..!!

நேரத்தை பார்க்க பகல் இரண்டு மணியைக் காட்டியது.

“அவர் எங்க சத்தமே இல்ல”

அப்பொழுது தான் அவனது யாபகம் வந்தவளாக தயங்கிக் கொண்டே அறைக்கதவைத் தட்டினாள்.

எந்த எதிர்வினையும் இல்லாததால் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைய வெற்று அறையே அவளை வரவேற்றது.

“இவங்க எங்க போனாங்க எப்போ போனாங்க”

என நினைத்துக் கொண்டு வெளியே வர காலிங் பெல் சத்தம் கேட்டது மறுபடியும்.

கதவுத் துளையினூடாக அவன் தான் வந்துள்ளான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு கதவைத் திறந்தாள்.

அவனே தான் அவளது கணவன் தான் நின்றுக் கொண்டிருந்தான்.

 

கையில் ஏதோ பார்சல் இருக்க அதை அவளிடம் நீட்டினான் ஏதோ உணவுப் பொட்டலம் போல் இருந்தது.

அதை அவள் பெற்றுக் கொண்டு அவனது முகத்தை உற்று கவனித்தாள்.

ஏதஓ ஒரு மாற்றம் அவனது முகத்தில்.

கண்கள் சிவந்து போய் முகமும் சற்று வீங்கினது போல் இருந்தது.

“என்னாச்சு”

தயக்கமின்றி அவனிடம் கேட்டாள்.

அவனோ அவளை நிதானமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான்.

இவளோ அவனைப் பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

அவனும் அவளை நெருங்கினான் மெதுவாக ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாக வைத்து.

இவள் எச்சில் விழுங்கிக் கொண்டே பின்னால் நகர்ந்தாள்.

அவனது இப்பரிமாணம் அவளுக்கு புதிது.

 

“எ..ன்ன”

விழியை உருட்டி அவனைப் பார்த்து சற்று முறைப்பாகக் கேட்டாள்.

அது அவளுக்குத் தான் முறைப்பு போல் அவனோ எந்த சலனமுமின்றி அவளது விழிகளைப் பார்த்துக் கொண்டே முன்னேற அவள் பின்னால் உள்ள சுவற்றில் மோதி நின்றாள்.

 

‘ஓடி விடலாமா’

மனதுடன் பேச அவனோ அவளுக்கு இருபக்கமும் அணைக்கட்டுப் போல் தனது கைகள் இரண்டையும் வைத்து அவளுக்கு ஒரு இன்ச் இடைவெளியில் மிக மிக நெருக்கமாக நின்றிருக்க அவளுக்குத் தான் ஆடவனின் அருகாமை அவஸ்தையாகிப் போனது.

அவனோ அமைதியாக கண்களை மூடி அவ்வாறே நின்றுக் கொண்டிருந்தான்

இவளுக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவனைக் கடந்து போகவும் முடியவில்லை 

அவனது ஆண்மைகஎகே உரிய வாசம் வேறு இவளைக் கிறங்கடிக்க முதல் முறையாக உள்ளுக்குள் ஏதோ செய்தது.

அவன் இரண்டு நொடிகள் தான் அப்படி நின்றிருப்பான் போல் பின் விலகி அங்கிருந்து நகர அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

“குடிச்சிருக்கிங்களா”

மெதுவாக அவள் கேட்க ஒரு நொடி அவனது நடை தடைப் பெற்றாலும் அறைக்குள் நுழைந்தான்.

“எதுக்கு இப்பிடி குடிக்கிறாரு அத்த மாமாக்கு தெரிஞ்சா என்ன பாடுபடுவாங்க கடவுளே”

நினைத்துக் கொண்டு அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்தாள்.

அவன் அதற்குப் பின்னர் அறையில் இருந்து வெளிவரவில்லை.

இவளுக்கும் பசிக்க அவன் கொடுத்துச் சென்ற உணவுப் பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாள்.

ஏனெனில் அவளால் தான் பசி தாங்க முடியாதே..!!

அதை அவன் அறிந்து உள்ளானா என்பது அவனுக்கே வெளிச்சம்.

சாப்பிட்ட களைப்பில் ஸோபாவிலே அமர்ந்தவாறே சாய்ந்து தூங்கினாள்.

கொஞ்ச நேரத்தில் விழிப்பு வர மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள்.

இன்னும் அவன் எழவில்லை போல்.

மெதுவாக அறைக்குள் சென்று பார்க்க அவன் டீஷேர்ட்டை கலற்றி விட்டு ஷோர்ட்ஸுடன் கட்டிலின் நடுவே இருகைகளையும் தலைக்கு கொடுத்து அமர்ந்திருந்தான்.

அவனது முகத்திலோ வலியின் சாயல்.

முகத்தை வைத்து கண்டுபிடித்து விட்டாள் அவனுக்குத் தலைவலி என்று.

மெதுவாக அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் வந்தது தன்னைப் பார்த்தது எல்லாம் தெரிந்தாலும் ஒன்றும் பேசவில்லை.

தலைவலித்தது கண்கள் வேறு சிவந்திருக்க குளித்தால் தேறும் என எண்ணியவன் குளியலறைக்குள் நுழைந்தான்.

ஒரு பத்து நிமிடங்களில் குளித்து விட்டு டவலை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.அவனது மனைவி ஒரு க்ளாஸை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

உடற்பயிற்சியின் உதவியால் உரமேறியிருக்கும் அவனது திண்ணிய மார்பும், முறுக்கேறிய கைத் தசையும் அவனது ஆணழகனாகவேக் காட்டியது.

அவன் வெள்ளை நிறம் தான் அவனது நிறத்திற்கு முன்னால் இவளது நிறம் சற்று அல்ல நன்றாகவே குறைவு தான்.

அவனைப் பார்த்துக் கொண்டு தன்னைப் பற்றி தாழ்வாகவும் அவள் எண்ணிக் கொண்டிருக்க அவளது பார்வையை உணர்ந்தாலும் எதுவும் கேட்காமல் கையில் இருக்கும் க்ளாசையும் அவளையும் கேள்வியாகப் பார்க்க.

அவனது பார்வையை உணர்ந்தவள்

“அது லெமன் ஜூஸ் தலவலிக்கு குடிச்சா கொஞ்சம் சரியாகும்”

கூறிக் கொண்டு அவனிடம் நீட்ட அவனோ அதை வாங்காமல் அவளை தான் பார்த்தான்.

“எதுக்கு இப்போ தேவையில்லாம சீன் க்ரியேட் பன்ற நீ தான் உன்னோட அத்த மாமாக்கா என்கூட வாழுற ஆனா இப்போ அவங்க இங்க இல்ல நீ நீயா இரு தேவையில்லாம என்கிட்ட அக்கறையா இருக்குற போல நடிக்க வேண்டிய அவசியம் இல்ல அவங்க வந்தாங்கன்னா அப்போ உன்னோட டெல்ன்ட்ட காட்டு ஓகே”

நிதானமாக அவன் கூற அவனது கூற்றில் உள்ள உண்மை இவளை சுட்டது.

அவள் கூறிய அதே வார்த்தைகள் ஆனால் திரும்ப திரும்ப அவன் கூறும் போது வலித்தது.

“இல்ல இது நடிப்பு இல்ல உங்களுக்காக தான்”

மனம் கூக்குரலிட்டாலும் வெளியே எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிய போது மீண்டும் அவன் பேசினான்.

“அத அங்க வெச்சிட்டு போ”

அவன் கூற அவளது அகமும் புறமும் சேர்ந்து மகிழ்ந்தது.

சந்தோஷமாக தலையாட்டி விட்டு அங்கிருந்த மேசையில் அப்பழரசத்தை வைத்து விட்டு வெளியே செல்ல போகும் அவளைப் பார்த்துக் கொண்டே அவள் வைத்து விட்டுச் சென்ற பழரசத்தை அருந்தினான்.

பின் தயாராகிக் கொண்டு வெளியே வர அவள் அங்கு இல்லை பல்கணியில் இருந்தாள்.

பசி வயிற்றைக் கிள்ள  சமயலறைக்குள் சென்று காலை செய்து மீதமிருந்த தோசை மாவால் தோசை சுட்டு சாப்பிட்டான்.

பின் வெளியே வர அவனது மனைவி இன்னும் உள்ளே வந்திருக்கவில்லை.

அவன் ஸோபாவில் அமர்ந்து ஃபோனை நோண்டிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

சலிப்பாக தலையைத் தூக்கி வெளியே பார்க்க அவனது செவியை தீண்டியது அழுகுரல் ஒன்று.

உன்னிப்பாக கவனிக்க அது அவனது மனைவியினது அழுகுரல் தான் அவசரமாக குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.

பல்கணியில் கால்களை மடக்கிக் கொண்டு முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் நேத்ரா.

அவன் மெதுவாக அவளை நெருங்கி குனிந்து அவளது தோளைத் தொட தலை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.

அவளது முகத்தைப் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான்.

ஏனெனில் அழுது கொண்டிருந்தவளது மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது.

“ஹேய் என்னாச்சு”

பதட்டமாக அவளது தோளைத் தொட அவனது கையிலையே மயங்கி விழுந்தாள் அவள்.

 

என்ன செய்வதென்று தெரியாமல் முதலிள் விழித்தவன் தனது கையில் வாடிய கொடியாக் கிடந்தவளைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியே வந்தான்.

மழைக் காரணமாப வெளியே ஆட்கள் அவ்வளவாக இருக்கவில்லை.

காரில் முன்னிருக்கையில் சாய்வாக அவளைக் கிடத்தியவன் மறுபக்கம் சென்று அவசரமாக காரை ஸ்டார்ட் செய்தான்.

காரை ஓட்டிக் கொண்டே அங்கிருந்த டிஷூப் பேப்பரால் அவளது மூக்கிலிருந்து வெளியேறும் இரத்தத்தைத் துடைத்து விட அதுவோ நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.

மழையால் சாலைகளில் வேறு ட்ரபிக் அதிகரித்திருக்க உச்சக்கட்ட கடுப்புடனே காரை செலுத்தினான்.

சிறிது நேரத்தில் அவனது தோளில் அப்படியே அவள் சாய அவளை தனது தோளில் சாய்த்துக் கொண்டே காரை ஓட்டியவன் வைத்தியசாலையை அடைந்து விட்டான்.

அவசரமாக அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓட அவனது பதட்டத்தில் அங்கிருந்த தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் அவசரமாக அவளை அவசரசிகிச்சைப் பிரிவுக்குள் எடுத்தனர்.

இவனோ அவ்வறைக்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.

அவனது முகத்தில் என்ன தெரிந்தது எனக் கேட்டால் கேள்விக் குறி தான் ஏனெனில் அவன் தான் உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் அல்லவா நின்று கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடங்கள் கழிய வைத்தியர் வெளியே வர அவசரமாக அவரை நெருங்கினான்.

“நீங்க பேஷன்ட்டோட”

வைத்தியர் கேள்வியாக இழுக்க.

“ஹஸ்பன்ட்”

எந்தவித தயக்கமுமின்றி வெளிவந்தது வார்த்தை.

“ஆஹ் ஓகே கொஞ்சம் என்கூட வாங்க”

கூறி விட்டு வைத்தியர் முன்னே நடக்க திரும்பி ஒரு முறை அவனது மனைவி இருக்கும் அறையைப் பார்த்து விட்டு வைத்தியரை பின் தொடர்ந்தான்.

வைத்தியரின் அறையில் வைத்தியர் தனது கண்ணாடியை கலற்றி வைத்துக் கொண்டு அவனைப் பார்க்க அவனும் அவரைத் தான் பார்த்தான் கேள்வியாக.

 

“உங்க வைஃப்க்கு என்ன ப்ரப்ளம்ன்னு தெரியுமா”

வைத்தியர் கேட்க உதட்டை பிதுக்கினான்.

“தெரில என்ன ப்ரப்ளம்”

“அவங்க மனசளவுல ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காங்க இன்னைக்கு நேத்து அல்ல ரொம்ப காலமா எதையோ மனசுக்குள்ள போட்டு அடச்சிக்கிட்டு இருக்காங்க மன அழுத்தம் அதிகரிச்சதால தான் இப்பிடி ப்ளட் மூக்குல இருந்த ப்ளீடிங் ஆகியிருக்கு அவங்க பிரச்சின என்னன்னு கேட்டுத் தெரிஞ்சி அத ஸோல்வ் பன்னுங்க அதோட மனசு விட்டு அவங்ககூட பேசுங்க அப்போ தான் என்ன பிரச்சினைன்னு தெரிய வரும் நெறைய பேருக்கு அது தானே பிரச்சின வெளில சொல்லாம மனசுக்குள்ளையோ போட்டு எல்லாத்தையும் அடச்சிக்கிட்டு நோய்கள அவங்களாவே தேடிக்குறது மனசு விட்டு பேசினாலே பிரச்சினையெல்லாம் தீர்ந்துடும்”

வைத்தியர் மேலதிக அறிவுறுத்தலையும் வழங்க அனைத்தையும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டான் அவன்.

“ரொம்ப நன்றி டாக்டர்”

கூறி விட்டு எழுந்து சென்றான்.

மறு நாள் காலை ஏதோ உள்ளுணர்வு தோன்ற விழிகளை அங்கும் இங்கும் அலைய விட்டு கடினப்பட்டு விழிகளைத் திறந்தாள் நேத்ரா.

முதலில் எங்கு இருக்கிறோம் எனப் புரியாமல் விழித்தவள்.

கணவனது அறையில் அவனது கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள்.

“ஐயோ நா இங்க எப்பிடி”

எவ்வளவு யோசித்தும் நேற்று மழை பெய்த போது அழுததும் அதன் பிறகு மயங்கியதும் தான் நினைவில் இருந்தது.

அவன் கையில் காஃபியுடன் உள்ளே நுழைய அவனைப் பார்த்தாள்.

அவளது பார்வை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் அவளது கையில் காஃபி கப்பை திணித்தான்.

அவளும் எதுவும் பேசாமல் காஃபியை குடித்தாள் ஏனெனில் அவளுக்கு இப்பொழுது அது அவசியம் தேவைப்பட்டது போல்.

“நீ வேணா ஊருக்கு கெளம்புறியா”

அவன் கேட்க அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“எதுக்கு”

“இல்ல இங்க இருந்தா எப்பிடியும் நீ தனியா தான் இருக்கனும் அதான்”

“அத கூட்டிட்டு வரும் போது தோணல்லையா”

அவளுடைய மனசாட்சி அவனிடம் கேட்டாலும் அவள் அமைதியாக அப்பாவியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

********

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top