அத்தியாயம் 13

இருக்கும் தலைவலி போதாது என்று புதிய தலை வலியால் அன்று சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள் அவந்திகா …

 இப்படி ஒரு பிரச்சனையில் அவள் மாட்டிடுவாள் என எதிர்பார்க்கவே இல்லை.. என்ன செய்து இதிலிருந்து தப்பிப்பது என யோசித்தவள் வேறு வழி இல்லாது அதியமானை சந்தித்து அவர் தவறாக நினைத்து விட்டதாக எடுத்துரைத்து விடலாம் என முடிவு செய்த நேரம் அவளது வீட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது…

 

 ஏற்கனவே தலைவலியில் இருந்தவள் சலிப்பாக கதவை திறந்து விட.. அடுத்த கணம் புயல் வேகத்தில் உள்ளே நுழைந்திருந்தான் அதிரூபன் …

 

இம்முறை அவனுடன் ரேவந்த்தும் வந்திருந்தான்… இருவரையும் அதிர்ந்து போய் பார்த்த அவந்திகாவிற்கு புரிந்து விட்டது…

 

அதியமான் தவறாக எடுத்துக் கொண்ட விடயத்தை பற்றி தான் பேச வந்து இருக்கிறார்கள் என்று புரிந்துக் கொண்டவளுக்கு தன் வீட்டிற்கு இவ்வாறு அத்துமீறி நுழைவதை கண்டு கோபம் வந்து விட,

 “எதுக்கு இங்க வந்திருக்கீங்க..??’  என தைரியமாக  அவள் கேட்டாலும் அவளையும் மீறி  அவளது குரல் நடுங்கியது…

 

 அதிரூபன் பாக்கெட்டில் கரம் நுழைத்து பால்கனி புறம் சென்று வெளியே பார்த்தவாறு நின்று கொண்டான் …

 

 அவனை தலை திருப்பி பார்த்த ரேவந்த் பிறகு தலை சாய்த்து நக்கலாக அவந்திகாவை பார்த்து சிரித்து வைத்து,

 

” உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் அதுக்காக தான் நாங்க ரெண்டு பேருமே வந்தோம்..”  என்றதும் அவனது பேச்சும் நடந்து கொள்ளும் விதமும் அவந்திகாவிற்கு அபாய மணியை அடித்தது…

இருந்தும் வெறி கொண்டு அவனை பார்த்த அவந்திகா,

 

” எதுவா இருந்தாலும் ஆபீஸ்ல வச்சு பேசிக்கலாம்.. ரெண்டு பேரும் இப்போ ஒழுங்கு மரியாதையா வெளியே போறீங்களா இல்ல போலீசை கூப்பிடவா..??”  என மிரட்டியவளை பார்த்து ரேவந்த் வாய் விட்டே நகைத்தவன்,

 

” போலீஸ் தானே கூப்பிடு.. காவலுக்கு இந்த வீட்டுக்கு வெளியே வேணா நிக்க வைக்கிறோம்..”  என்றதும் அவனைக் கண்டு பல்லை கடித்தவள்,

 

” உனக்கு என்ன தான் வேணும்..???”  என்றதும் கொஞ்சம் கூட யோசிக்காது,

 

” நீ தான் வேணும்..!”  என்ற ரேவந்த்தை அதிர்ந்து போய் பார்த்து வைத்தாள் அவந்திகா …

“செருப்ப கழட்டி அடிப்பேன் பொறுக்கி ராஸ்கல்..”  என எகிறியவளை அலட்சியமாக பார்த்தவன்,

 

” இங்க பாரு உன்னால எங்களுக்கு ஒரு காரியம் ஆகனும்… அதுக்கு நீ சம்மதம் சொல்லி தான் ஆகணும்னு சொல்றதுக்கு தான் நாங்க இங்க வந்து இருக்கோம்…

 

முடியும் முடியாதுனு நீ சேன்ஸ்லாம் எடுத்துக்க முடியாது…ஏன்னா உனக்கு  நாங்க சேன்ஸே தரப்போறது இல்லை…”  என விளக்கம் அளித்தவன் அவளது அதிர்ந்த  முகத்தை குரூரமாக பார்த்து விட்டு தனது கைபேசியை எடுத்து எது எதையோ தட்டியவன் விழிகளை மட்டும் உயர்த்தி அவந்திகாவை  பார்த்து  இதழ் வளைத்து சிரித்தவன் அவளுக்கு முன்னே கைப்பேசியை உயர்த்தி காட்டினான்…

 

முதலில் அது என்னவென்று புரியாது பார்த்தவளுக்கு பின் அதில் வரும் காட்சிகளை கண்டதும் அவ்வளவு தான் உடைந்து போய்விட்டாள்…

 

 அவளால் அதில் இருப்பதை நம்பிடவே முடியவில்லை… அவளது அதிர்ந்த முகத்தை கண்டு சிரித்த ரேவந்த்,

 

” என்ன பார்க்க ரொம்ப குளிர்ச்சியா இருக்கா..???” என கிறக்கமாக கூறியவனை கொலை வெறியோடு  பார்த்த அவந்திகா அவனது போனை தள்ளிவிட்டு சட்டையை பாய்ந்து பிடித்தவள் ,

 

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி எல்லாம் பண்ணி இருப்பே..???”  என்றதும் அவளையும் தன் சட்டையில் இருந்த கையையும் மாறி மாறி பார்த்த ரேவந்த் எள்ளலாக சிரித்து,

 

” நீ மட்டும் நாங்க சொல்ல போற விஷயத்துக்கு சரின்னு சொல்லல இது எல்லாருக்குமே பரவிடும்..”  என்றதும் அதிர்ச்சியின் உச்சபட்சத்தில் அவனைப் பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது… 

 

“தப்பு பண்ற ரேவந்த்…தேவை இல்லாம என்னை நீ சீண்டுறே!”. என அவனிடமா போராடினாள் அவந்திகா…

 

அவளை இன்னும் இளப்பமாக பார்த்தவன்,

 

” இங்க பாரு என்னோட ரூபன் ஓட அப்பா நீயும் அவனும் லவ் பண்றதா நினைச்சுட்டாரு.. எங்கேஜ்மென்ட் வேற அரேஞ்ச் பண்றத வர சொல்லி இருக்காரு …நீ என்ன பண்ற அவர் என்னலாம் சொல்றாரோ அதுக்கெல்லாம் ஒரு வார்த்தை பேசாம சரி சரின்னு தலையாட்டுற.. புரிஞ்சுதா..??”  என கட்டளை இடவும்  அதில் எரிச்சலானவள்,

 

“என்னை பார்த்த கேனச்சி மாதிரி தெரியுதாடா உங்களுக்கு..???  நீங்க திமிர் எடுத்து போய் எல்லாம் பண்ணுவீங்க உங்களுக்கு நான் விளக்கு பிடிக்கனுமா..??”  

 

“ஹே…கரெக்டா சொல்லிட்ட…! அதே தான்…அதை சொல்லத்தான் நான் வந்திருக்கேன்… இங்க பாரு ஊருக்கு தான் நீ ரூபனுக்கு பொண்டாட்டி… மத்தபடி அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

 

 ராணி மாதிரி நீ வாழலாம்… ரூபன் பொண்டாட்டின்னு உனக்கு எல்லா மரியாதையும் கிடைக்கும் … ஆனா அவனுடைய பெட்லையும் மனசுலையும் நான் ஒருத்தன் மட்டும் தான் இருப்பேன்…”என கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி அவளிடம் பேசியவனை கண்டு இப்போதே துண்டு துண்டாய் வெட்டி போட்டு விடலாமா என்கிற ஆத்திரம் எழுந்தது அவந்திகாவிற்கு …

“ம்ஹூம்…ஊரா முட்டு நெய்யே என் பொண்டாட்டி கையைனானா… எப்படி எப்படி நீங்க ரெண்டு பேரும் மேயரத்துக்கு நான் உங்க போதைக்கு ஊறுகாவா இருக்கணுமா..????

 

 ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்டா… இப்பவே உங்களைப் பத்தி அதியமான் சார் கிட்ட சொல்றேன்..”  என கத்தியவளை நிதானமாக பார்த்த ரேவந்த் தனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கரம் நுழைத்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்று அவளை பார்த்தவன்,

 

” என்ன அவந்திகா உன்கிட்ட நான் இவ்ளோ பெரிய டீலிங் பேச வந்திருக்கேன்… அவ்வளவு அசால்டா நினைச்சுட்டியா எவங்களை..??” என  பொடிப்பு வைத்து பேசியவனையும் உள்ளுக்குள் எழுந்து திகிலுடன் பார்த்தவளது கண்கள் எல்லாம் சிவப்பேறி போய் கிடந்தது கோபத்திலும் அழுகையிலும் ..

 

அவளது முகத்தை திருப்தியாக பார்த்தவன்,

 

” உனக்கு வேற வழியே கிடையாது அவந்திகா… நாங்க நினைச்சோம்னா  உன்னை ஒன்னும் இல்லாம பண்ண முடியும் ..பயப்படாத உன்னை கொலைலாம் பண்ண மாட்டோம்..

 

 ஆனா அதுக்கும் மேல உயிரோடு இருக்கும் போதே ஏன்டா நம்ம உயிரோடு இருக்கிறோம்னு தினம் தினம் செத்து செத்துப் பிழைக்கிற மாதிரி எல்லாமே பண்ணுவோம்…

 

 இங்க பாரு ஒழுங்கா நாங்க சொல்றதை கேட்டு நடந்தேனா வசதியான வாழ்க்கை உன் காலடியில் இருக்கும்..

 இல்லன்னு முரண்டு பிடிச்சேனு நினைச்சுக்கோ ஊர் முழுக்க உன்னை நார அடிச்சிடுவேன் பார்த்துக்க …

 

ரெடியா இரு …வேற ஏதாவது தப்பு தண்டா பண்ணலாம்னு நினைச்சேனு வை அவ்வளவு தான் உன்னை..!” என அடிக்குரலில் எச்சரித்தவன் போனை எடுத்து யாருக்கோ அழைத்திட.. அடுத்த கணம் வெளியே  இருந்து வாட்டசாட்டமான பெண்கள் முதுகுக்கு பின்னே கை கட்டியவாறு வந்து நின்றனர்..

 

 அவந்திக்காவை பார்த்தவாறு,

 

” இனி இவங்க ரெண்டு பேரும் உன் கூட தான் எப்பவும் இருப்பாங்க..

 

 எங்கேஜ்மென்ட் முடிகிற வரைக்கும் உன் கூடவே தான் இருப்பாங்க… இவங்களை மீறி ஏதாவது நீ பண்ணனும்னு நினைச்ச அம்மண கட்டையா இங்க இருந்து உன்னை ஓட விடுவாங்க பார்த்துக்க …” என அவளை நோக்கி அமில வார்த்தைகளை பேசிய ரேவந்த் பால்கனியில் நின்று கொண்டு இருந்த  அதிரூபனின் கையை இழுத்துக்கொண்டு சென்று விட்டான்…

 

 அதிரூபன் அவந்திகாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை… ஆண்கள் இருவரும் வெளியேறியதும் தொய்ந்து போய் இருக்கையில் தொப்பென விழுந்தவளது மனம் ஆறவே இல்லை …

 

அவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கை என கண்டறிந்த பின்னர் அவளை மிரட்ட வந்த அதிரூபன் அவனது கைபேசியில் அவந்திகா ஏதோ ஒரு முக்கியமான டாக்குமெண்ட்டை எடுத்து எதிராளி  கம்பெனிக்கு கொடுப்பது போலவும் அதிரூபனின் அறையிலிருந்து பணத்தை எடுப்பது போலவும் காணொளிகள் ஓடியது..

 

 தங்களை மீறி ஏதேனும் அதியமானிடம் விடயத்தை கூறினால் இதை வைத்தே அவள் மீது கேஸ் போட்டு வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியாதபடி பண்ணி விடுவேன் என அதிரூபன் அன்று மிரட்டி இருந்தான்…

 

 அவள் புறம் உண்மையும் நேர்மையும் இருந்தும்  நீதிமன்றத்திற்கு சென்றால் அவள் புறம் தீர்ப்பு கிடைக்காது… பணம் இருக்கும் இடத்தில் தானே தராசு சாய்ந்து நிற்கும்.. 

 

இருவரும் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என எண்ணித்தான் பல்லே கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்…

 

 ஆனால் இப்போது ரேவந்த் செய்ததை  அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை …

 

அதிரூபனும் அவளும் நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்களை வீடியோக்களையும் காட்டி இருந்தான் ரேவந்த்…

 

 எப்படி அவனால் இது போல் செய்வதற்கு மனம் வந்தது ..??அது சரி மனிதனாக இருந்தால் தானே அவனிடம் கொஞ்சமேனும் மனிதத்தை எதிர்பார்க்க முடியும்.. அவன்தான் மனிதனே கிடையாதே..!

 

தன் வாழ்வு இவ்வளவு பெரிய படுகுழியில் விழுந்து விடும் என அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை…

 

 பாவம் ஆற்றுவார் தேற்றுவார் இன்றி தன்னந்தனியாய் கதறி அழுதவளை அங்கிருந்த இரு பெண் பாடிகாட்களும் ஏதோ பொம்மையை பார்ப்பது போல அமைதியாக வெறித்தவாறு நின்றிருந்தனர்…

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top