அத்தியாயம் 14

நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தவளை பிடித்து உலுக்கி இருந்தான்  அதிரூபன்…

சட்டென சுயத்திற்கு வந்த அவந்திகா தனக்கு எதிரே இருந்தவனை மிரட்சியுடன் பார்த்ததும் அதிரூபனோ அவளை அழுத்தமாய் பார்த்தவாறு,

 

” ரிங் எக்சேஞ்ச் பண்ணிக்கணும்..”  என அடிக்குரலில் கூறியதும் திணறியவாறு தலையை ஆட்டி வைத்தாள் அவந்திகா…

 

அதியமான் இருவருக்குமான மோதிரத்தை எடுத்து தந்திட.. அவரிடமிருந்து புன்னகையுடன் அதிரூபன் வாங்கிக் கொண்டான் என்றால் அவந்திகாவோ தனது தவிப்பை மறைத்தவாறு வாங்கிக் கொண்டாள்…

 

அவளது கரத்தை மென்மையாக பற்றி தூக்கி  அவள் விரலுக்கு அருகே மோதிரத்தை கொண்டு செல்லும் போது அவனையும் மீறி    உடல் நடுக்கம் கொண்டது…

 

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் அவளது விரலில் மோதிரத்தை அணிவித்த நொடி

ஆணவனின் உடலும் மனமும் ஒரு சேர அதிர்ந்தது …

 

மீண்டும் எழ முடியாத சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல கண்களை தொய்ந்து போய் மூடிக்கொண்டாள் அவந்திகா …

 

சுற்றிலும் கரகோஷம் எழுப்பிட அச்சத்தத்தில் மெல்ல கண் திறந்தவள் தன் கரத்திலிருந்த மோதிரத்தை அதிரூபனின் விரலில் அணிவித்ததும் கச்சிதமாய் அவனது விரலுக்குள் பொருந்திக் கொண்டது ..

 

சுற்றிலும் அனைவரும் எழுந்து நின்று கரகோஷங்களை எழுப்பிட.. மேடையில் உள்ளவர்களையே வலியுடன் வெறித்தவாறு கைகளை தட்டிக் கொண்டிருந்தான் ரேவந்த்…

அவந்திகாவின் கரத்தோடு கரம் கோர்த்தவாரு ஏதோ ஆதர்ஷ தம்பதிகள் போல நின்று கொண்டிருந்தனர்  இருவரும்…

 

விழா கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது… அதியமானுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை…

 

மகனையும் தங்கள் வீட்டு மகாலட்சுமியையும் பார்த்து மகிழ்ந்தவர் வேகமாக அவர்களை நெருங்கி இருவரது தோள்களையும் பிடித்து இருகணைத்துக் கொண்டவர்,

 

” ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ரெண்டு பேரையும் இப்படி பார்க்கும்போது.. நாளைக்கே உங்க கல்யாணம் நடத்திடனும்னு அவ்வளவு ஆசையா இருக்கு..”  என்றதும் திக்கென்று ஆனது அவந்திகாவிற்கு …

அதை கண்டு கொண்ட அதியமான்,

 

” பயப்படாத அதிம்மா …என் ஒத்த பையனோட கல்யாணம் சிம்பிளா முடிச்சிடுவேனா என்ன??  பிரம்மாண்டமா கொண்டாடணும்.. ரெண்டு பேரும் எப்பவும் இதே மாதிரி ஒண்ணா ஒத்துமையா இருக்கணும் …அது தவிர எனக்கு வேற எதுவுமே வேண்டாம் அதிம்மா ..” என அதிரூபனை அதி என அழைப்பவர் தனது வருங்கால மருமகளான அவந்திகாவை சுருக்கி அதிம்மா என அழைத்து இருந்தார்..

 

விழா முடிந்ததும் அவந்திகாவை தானே அழைத்துச் சென்று விடுவதாக தந்தையிடம் கூறியிருந்தான் அதிரூபன்..

 

கேட்ட அதியமானிற்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது…

 

” நானே உன்னிடம் சொல்லலாம்னு இருந்தேன்.. பத்திரமா விட்டுட்டு வா..”  என இருவரையும் அனுப்பி வைத்தார்..

மாற்று உடை அணிந்து கொண்டு அவளுக்காக  வந்திருந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் வண்டியில் ஏற்றி நிறைவாக அனுப்பி வைத்தார் அதியமான்..

 

அவரை கலங்கும் விழிகளுடன் பார்த்த அவந்திகா வேகமாக காரில் ஏறிக்கொள்ள.. பெருமூச்சுடன் காரினை எடுத்தான் அதிரூபன்…

இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை… அமைதியாகவே வந்தனர்..

 

அதிரூபன் தான்  அவளை அடிக்கடி தலை திருப்பி

பார்த்தவாறு வந்தவன் அவளது அமைதியை கண்டு விட்டு,

 

” எதுக்கு உம்முனு வர..?? உன்னை எந்த விதத்திலயாவது நான் கஷ்டப்படுத்துனேனா.???”  என கொஞ்சமும் மனசாட்சி இன்றி கேட்டவனை முகம் சுருக்கி பார்த்தவள்,

 

” மனசாட்சி இல்ல மனசுல கொஞ்சம் கூட ஈரமே இல்லாத ஒருத்தரால மட்டும் தான் இப்படி கேள்வி கேட்க முடியும்..!” என நறுக்கென்று கூறியதும் முகம் இறுகி விட்டது அதிரூபனுக்கு…

 

” இப்ப நான் என்னடி பண்ணேன்…?? உன்னை எல்லார் முன்னாடியும் மரியாதையோடு தானே நடத்தினேன்..!  நிச்சயம் ஆயிடுச்சுன்னு உன்னை கட்டிப்புடிச்சு கிஸ் தான் பண்ணேனா..?? சொல்லு பார்க்கலாம்…” என்றதும் இதழ் வளைத்து அவனைப் பார்த்த அவந்திகா,

 

“ம்ஹூம்…கிஸ்ஸா…??? அதுக்கு முதல்ல உங்களுக்கு வக்குயிருக்கா..?”  என செருப்பால் அடித்தது  போல கேட்டதும் சட்டென வண்டியை நிற்பாட்டி இருந்த அதிரூபன் ஒற்றை கரத்தை நீட்டி அவளது கழுத்தை பிடித்து விட்டிருந்தான்…

 

“தேவை இல்லாம பேசாத சொல்லிட்டேன்…உன்னை ஹர்ட் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்.. அப்புறம் என்னுடைய இன்னொரு முகத்தை தான் நீ பார்க்க வேண்டி வரும் …” என அடிக்குரலில் சீறியவனை கொஞ்சம் கூட அசராது அவனைப் பார்த்த அவந்திகா,

 

” நீ இஷ்டத்துக்கு பேசுவ நான் எல்லாம் கேட்டுட்டு இருக்கணும்னு எனக்கு என்ன தலை எழுத்தா..???  இப்ப எப்படி நான் உங்ககிட்ட மாட்டிகிட்டு தவிக்கிறேனோ அதே மாதிரி ஒரு நாள் நீ என்கிட்ட மாட்டிக்கிட்டு தவிப்ப..! தவிக்க வைப்பேன்… அந்த நாள் ரொம்ப தூரம் இல்லை அதிரூபன்..” . என திட்டமாய் கூறியவளை ஆழ்ந்து பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளை உதறி விட்டு கையை எடுத்துக் கொண்டவன், 

“ம்ம்ம்…அதையும் பார்க்கலாம்.. உன்கிட்ட நான் மாட்டி இருக்கேனா இல்ல நீ என்கிட்ட மாட்டியி இருக்கியானு… போனா போகட்டும்னு உன்னை சும்மா விட்டு வச்சிருக்கேன்.. இல்லன்னு வை இந்த வேலையை விட்டு உன்னை மொத்தமாக தூக்கி நடு ரோட்டில் நிக்க வைச்சிடுவேன்…!”  என மிரட்டியவனை எள்ளலாக பார்த்தவாறு ,

 

“அதையும் செஞ்சு‌ தான் பாரேன்…”  என சவால் விடவும் கடுப்பாகி போன அதிரூபன் மேற்கொண்டு ஏதும் பேசாதது காரை கிளப்பி விட்டிருந்தான்…

அவளது பிளாட்டிற்குள் காரினை நிற்பாட்டியவன் தலை திருப்பி அவளை பார்த்திட.. அவளோ அவன் புறம் திரும்பக் கூட செய்யாது கார் கதவை திறந்து கொண்டு இறங்கிக் கொண்டாள்…

 

காரில் இருந்து இறங்கிய அதிரூபன்  கார் கதவருகே நின்று கொண்டு அவந்திகாவிடம்,

 

” எல்லாத்துக்கும் தேங்க்ஸ்..”  என்றதும் நின்று அவனை தலை திருப்பி புரியாது பார்த்தவளை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அதிரூபன்,

 

” உனக்கு என் மேல கோவம் இருந்தாலும் எல்லார் முன்னாடியும் நீ நார்மலா இருந்தல அதுக்கு தான்..”  என கூறியதும் அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் …

 

அவள் சென்றதும்  அவளுக்காக நியமிக்கப்பட்டிருந்த இரு பெண் செக்யூரிட்டியிடம் அவளுடைய உடமைகளை அவளது வீட்டிற்கு கொண்டு செல்லும் படி கட்டளை பிறப்பித்தவன் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டிருந்தான்..

 

தன் வீட்டிற்கு வந்த அவந்திகாவிற்கு சிறைக்கு வந்த உணர்வு தான்…அவள் பின்னாடியே பரிசு பொருட்களை தூக்கி கொண்டு வந்த அந்த இரு பெண்களும் அவள் மீது மட்டுமே கண் வைத்துக் கொண்டு இருந்தனர்…

 

ஏனோ சிறையில் இருந்தால் கூட இத்தனை கண்காணிப்பு இருக்காது போல… ஆனால் இங்கு அம்மணமாய்   நிற்பது போன்ற உணர்வு தான் ஒவ்வொரு நொடியும் எழுகிறது அவளுக்கு…

 

அதை தாங்க முடியாது வேகமாக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கதவை சாற்றிவிட்டு அதன் மீது சாய்ந்து கண்ணீர் வடித்தாள் ஊமையாக …

மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு கூட அவளுக்கு மனம் வரவில்லை… ஆனால் தவிர்க்க முடியாது  அல்லவா!..

 

கண்ணாடி முன்பு நின்று தனக்குத் தானே தைரியம் அளித்து கொண்டவள் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு தன் அறையில் இருந்து வெளியேறியவள் கண்டது விரைப்புடன் இருந்த அந்த இரு பெண்களை தான் …

 

சலிப்பாக அவர்களைப் பார்த்தவள் சமையலறைக்கு சென்றவள் சட்டென நின்று   அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்காக  காபியை போட்டு அருந்தியவள் பின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டிருந்தாள்…

 

அவள் வெளியேறவும் அந்த இரு பெண் பாதுகாவலர்களும் அவளுடனே வெளியேறி வந்தனர் …கடுப்பாக வந்தது அவந்திகாவிற்கு…

 

எதும் செய்ய முடியாதே..!

 

அவள் அலுவலகத்திற்குள் நுழைந்த  பின்னர் அவர்களும் ஓய்வாக அங்கு அமர்ந்து கொண்டனர்…

 

  அந்நேரம் அவளை கண்டதும் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.. புன்னகையுடன் வேண்டா வெறுப்பாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டவள் லிஃப்டில் ஏறியதும் தான் தாமதம் வேகமாக உள் நுழைந்து இருந்தான் ரேவந்த்… 

 

ஏற்கனவே கடுப்பில் இருந்தவளுக்கு ரேவந்த்தை கண்டதும் கடுப்பின் உச்சத்திற்கே சென்று விட்டு இருந்தாள்… 

அவள் நிலை புரியாத ரேவந்த்தோ நக்கலாக அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

 

” என்ன பாஸ் மேடம்….ஓசியிலேயே பெரிய இடமா பார்த்து வளைச்சு போட்டுட்ட.”என எடுத்ததும் அவளை தான் நக்கல் அடித்தவன் ,

 

” யாருக்குமே இது மாதிரி சான்ஸ் எல்லாம் கிடைக்காதுடி… புடிச்சாலும் நல்லா புளிய கொம்பா பிடிச்சிருக்க பாரு…ம்ம்ம் ஆனா என்ன பண்றது ஊருக்கே  ராணியா இருந்தாலும் வீட்டுக்கு துடைப்பக்கட்டைன்ற மாதிரி வெளியே   நீ எப்படி இருந்தாலும் உன்னை பார்த்தா ரூபனுக்கு  ஃபீலிங்ஸ் வர போறது இல்ல…

 

 அவனுக்கு எப்பவும் நான் மட்டும் தான் ராணி … நீ சும்மா பொம்மை பொண்டாட்டியா..” என எதை கூறினால் அவள் உடைவாள் என தெரிந்துக் கொண்டு வேண்டும் என்றே வார்த்தைகளால் அவளை குதறினான் ரேவந்த்…

 

 பல்லை கடித்துக் கொண்டு அவனை பார்த்த அவந்திகா சரியாக லிஃப்ட் கதவு திறக்கும் நேரம் ரேவந்த்தின் பின் சட்டையை எட்டிப் பிடித்திருந்தவள்,

 

”  நீ தான் அவனுக்கு ராணி…உன்னை பார்த்தா மட்டும் ஃபீலிங்ஸ் வருதுனு சொல்றியே அப்போ நீ ஒரு பொட்டன்னு நீயே ஒத்துக்கிறியா ….” .என முகத்துக்கு நேரே கூறியவள் அவனை கதவில் தள்ளி விட்டு சட்டை செய்யாது கடந்து சென்று விட்டாள்…

 அவளது அந்த ஒற்றை வார்த்தையில் விக்கித்து போய் விட்டிருந்தான் ரேவந்த்…

 

தனது முகத்திற்கு நேரே அவ்வார்த்தையை அவள் இவ்வளவு தைரியமாக கூறிடுவாள் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரேவந்த்… அவமானமாக உணர்ந்தவனுக்கு இப்போதே அவளை கொல்லும் வெறி உண்டானது ..

 

ஆனால் அவளை இப்போது ஏதும் செய்யக்கூடாது ..கொஞ்சம் கொஞ்சமாக அவளை துடிதுடிக்க வைக்க வேண்டும்…

 

 தன்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்துகிறாளோ அதற்கு இரண்டு மடங்காய் பதிலடி தந்திட வேண்டும்… அதுவும் அவள் கணவனாய் வரப் போகும் அதிரூபனை வைத்தே என வன்மத்தை உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டான் ரேவந்த்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top