அத்தியாயம் 15

 

 

காலையிலேயே ரேவந்த் கடுப்படித்ததால் வேலையில் கவனம் செலுத்த சற்று நேரம் எடுத்துக் கொண்டது அவந்திகாவிற்கு…

 

 இருந்தும் தன் கவனத்தை செலுத்தி வேலையை தொடர்ந்தவளது கைபேசி அலறியது…

 

 எடுத்து பார்த்தாள் அதிரூபன் தான் அழைத்து இருந்தான்.. கடுப்பாக கைபேசியை ஓரம் வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்திட.. மீண்டும் கைபேசி அலவியது இம்முறை சட்டை கூட செய்யவில்லை அவந்திகா..

 

  அழைப்பு நின்ற அடுத்த நொடி கதவை திறந்து கொண்டு அதிரடியாக உள்ளே வந்திருந்தான் அதிரூபன்…

 

“ஏய்… என்னடி திமிரா ..???போன் பண்ண எடுக்கக்கூட மாட்ற..???”

 

“ப்ச்.. எனக்கு வேலை இருக்கு.. வேலை நேரத்துல கண்டவங்களுக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது ..” என வெளிப்படையாகவே அவனை கண்டவன் என்றதும் முகம் கருத்து விட்டது அதிரூபனுக்கு …

மூக்கு விடைக்க,

 

“திரும்பத் திரும்ப என்னை நீ ரொம்ப அசிங்க படுத்துற..??  அவ்வளவு தான் உனக்கு சொல்லிட்டேன்…”  என்றதும் இப்போது அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள்,

 

”  நான் வந்து உங்களை வாண்டடா வந்து அசிங்கப்படுத்துறேனா..?? … ம்ஹூம்…நீங்க தான் வாலன்டியரா வந்து என்கிட்ட அசிங்கப்பட்டுகிறீங்க..”  என நறுக்கென்று  பதில் அளிக்கவும் அவள் புறம் வந்து அவளை இழுத்து நிற்க வைத்தவன்,

 

” உன்கிட்ட பொறுமையாவே பேச முடியாது போல…”என அவன் பேசிக்கொண்டு இருந்த நேரம் அவனது கைபேசியும் அலறியது…

 

ஒற்றை கரத்தால் அவளது முழுங்கையை பற்றி கொண்டு மறுகரத்தால் கைப்பேசியை  

 எடுத்து பார்த்தவன் அவசரமாய் காதில் வைத்தான்…

 

மறுபுறம்  என்ன கூறப்பட்டதோ அவந்திகா என்ன ஏதென்று சுதாரிக்கும் முன்னமே சட்டென அவளை இழுத்து கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டான் அதிரூபன்..

 

 அவன் செயலில் அதிர்ச்சி அடைந்த அவந்திகா சிலையாகி விட… அந்நேரம் அதியமான் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவர் அங்கு நெருக்கமாக இருந்தவர்களை கண்டதையும் விழி விரிய பார்த்தவர் சட்டென தலை திருப்பி கொண்டு,

 

“சாரி… சாரி..” என அவசரமாய் உரைத்து விட்டு  கதவை வேகமாக மூடி விட்டிருந்தார் …

 

தன் தந்தை சென்றதும் வேகமாக அவந்திகாவை விட்டு  அவன் விலகலாம் என நினைத்த கணம் அவன் மார்பில் கரம் வைத்து பலமாக தள்ளிய அவந்திகா அவனை அடிக்க கையை தூக்கி விட்டு இருந்தாள்…

 

நொடியில் சுதாரித்துக் கொண்ட அதிரூபன் அவள் கரத்தை பிடித்து  நிறுத்தி விட்டு,

 

” அப்பா வந்திருக்காங்க அதான்…” என தடுமாற்றத்துடன் கூறியவனை வெறுப்பாக பார்த்தவள்,

 

” அப்பா வந்தாங்க போனாங்கனு  இனிமே என்கிட்ட இது மாதிரி நடந்துகிட்டீங்க அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது ..” என விழிகள் சிவக்க அவள் கூறியதும் அதிரூபனோ விழிகள் சுருக்கி தலை சாய்த்து அவளைப் பார்த்தவன் ,

 

“ஏன் நான் உன்னை தொட கூடாதா என்ன..??  நேத்து என்கேஜ்மென்ட் பண்றப்போ உன் கையை பிடிச்சு நான் ரிங் போட்டேனே அப்ப கூட நான் உன்னை தொட தானே செஞ்சேன்..

 

 என்னமோ உன்னை ரேப் பண்ற மாதிரி பேசுற ..??” என அசால்ட்டாக கூறியதும்,

 

“ம்ஹூம் … நீங்க தொட்டா இல்ல உங்களை பார்த்தாலே அருவருப்பா இருக்கு… ரோட்ல நடக்கும்போது நாயோ மனுஷனோ ஓரமா போட்டு வச்சதை பார்க்கும் போது நம்மளையும் மீறி ஒரு அருவருப்பு ஃபீல் வருமே அது மாதிரி தான் உங்களை பார்த்தாலே இருக்கு ..” என்றதும் தன்னை எதனோடு அவள் ஒப்பிடுகிறாள்‌ என்பதை நினைத்த நொடி அவளை அறைய கையை ஓங்கி விட்டிருந்தான் அதிரூபன்…

 

 அவன் கையை திடமாக பிடித்துக் கொண்ட அவந்திகா,

 

” இப்படி சொல்லும் போதே உங்களுக்கு எப்படி இருக்கு..???  இதே மாதிரி தான் நீங்க தொடும் போதும் ..என் பக்கத்துல வரும்போதும் எனக்கு இருக்கு …” என வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அழுத்தமாய் உரைத்ததும்  முகம் செத்துவிட்டது அதிரூபனுக்கு…

 

 “ஷிட்…”  என தன் கரத்தால் சுவற்றில் வேகமாக  அடித்து கொண்டவன் அவளை அழுத்தமாய் பார்த்துவிட்டு வெளியேறி விட்டிருந்தான்… 

நாட்கள் சென்றது …அதிரூபனும் சரி அவந்திகாவும் சரி முகத்தைக் கூட பார்க்காது தவிர்த்து வந்தனர்…

 

 அதியமான் அவ்வப்போது வந்து இருவரையும் பார்த்து பேசி விட்டு செல்வார்… அப்போது மட்டும் இருவரும் ஏதோ எப்போதும் நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்கள்…

 

 ஆனால் அதற்கே தீ மேல்  நிற்பது போல இருக்கும் அவந்திகாவிற்கு …

 

அதிரூபனுக்கும் தன்னுடைய அருகாமையை அவள் ஏதனோடு ஒப்பிட்டு பேசி இருந்தாள் என்பது தான் நினைவுக்கு வந்து போகும் …

 

இடையில் ரேவந்த் மட்டும்தான் அவந்திகாவை ஏதேனும் சொல்லி சொல்லி வார்த்தைகளால் குத்தி கிழித்து விட்டுக் கொண்டிருந்தான் …

 

திருமண நாளும் நெருங்கியது… அவந்திகாவிற்காக பிரபலமான ஆடை வடிவமைப்பாளரையே வரவழைத்து இருந்தார் அதியமான் …

 

அவந்திகாவிற்கு இதில் எல்லாம் பெரிதாய் இஷ்டமே இல்லை ..ஆனால் அதையும் மீறி மனதின் ஓரம் ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் அவளால் தவிர்க்க முடியவில்லை…

 

 யாராக இருந்தாலும் தனக்கு திருமணம் என்றால் மகிழத்தானே செய்வார்கள்… அவளும் தனக்கும்  திருமணம் தனக்கு பிடித்தவனுடன் நடக்கும்  என்கிற ஆசை அவளுக்கு எப்பேதும் உண்டு…

 என்னவெல்லாம் திருமணத்திற்கு வாங்குவோம் என ஒரு கற்பனையை செய்து வைத்து வந்து இருந்தாள்…

 

ஆனால் அது எதுவும் நிஜத்தில் நடக்காது கானல் நீராய் மாறியதை பாவம் அவளால் ஏற்றுக்கொள்ள சிரமமாகி போனது..

 

 அவளும் பெண் தானே.. ஆசைகளும் விருப்பங்களும் அவளுக்கும் இருக்கும் தானே..! 

 

அதிரூபன் தான் அவளை அழைத்து வந்திருந்தான்…வீட்டிற்கு செல்லாது அவர்களது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றிற்க்கு வரவழைத்திருந்தார் அதியமான் ..

 

அவள் வந்துவிட்டாள் என்றதும் வாசல் வரை சென்று அவளை வரவேற்ற அதியமான்,

 

” வீட்டுக்கு கூப்பிடலாம்னு தான் நினைச்சேன் ..ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தான் நீ நம்ம வீட்டுக்கு வரணும்.. அதான் இங்க வர சொல்லி இருந்தேன்..”  என சிரித்த முகத்துடன் பேசியவரை காண மனம் வாடியது அவளுக்கு …

 

“வா வந்து உட்கார்… சேரி அப்புறம் ரிசப்ஷனுக்கு என்ன மாதிரி ட்ரெஸ் வேணும்னு  இதெல்லாம் இவங்க சாம்பிள்ஸ் காட்டுவாங்க.. உனக்கு எது புடிச்சிருக்கோ அதை பாரு அதிம்மா… இல்லனா நம்ம கஸ்டமைஸ் பண்ணிடலாம் ..” என்றதும் அவந்திகாவோ,

 

” அது உங்களுக்கு எது புடிச்சிருக்கோ அதூ

ஔயே நீங்க செலக்ட் பண்ணிடுங்க பாஸ்…”  என்றதும் அதில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது அதியமானின் முகத்தில்…

 

 அதை கண்டு கொண்ட அதிரூபன் வேகமாக அவந்திகாவின் அருகில் வந்து,

 

” என்ன அதிம்மா அப்பாவ

 ஆசையா சொல்றாரு நீ என்னடான்னா அவரையே செலக்ட் பண்ண சொல்லி இருக்க..”என கூறியவன் தந்தையின் புறம் திரும்பி,

 

” நான் தான் சொன்னேன்லப்பா உங்களுக்கு அவ மேல எப்படி பாசமோ அதே மாதிரி தான் அவளுக்கும் உங்க மேல ரொம்ப பாசம் ..அதான் அவளோட புடவையை கூட வயசுல பெரியவரா இருக்க உங்களையே செலக்ட் பண்ண சொல்றா..”  என‌ சிரித்தவாறு சமாளிக்கவும் அதில் முகம் தெளிந்த அதியமான்,

 

” ரொம்பவே சந்தோஷம் அதிம்மா… என் விருப்பம் இருக்கட்டும் இது உங்களோட கல்யாணம்.. புடவை கட்டிக்க போறது நீ தான்.. நீ தான் உனக்கு புடிச்ச மாதிரி செலக்ட் பண்ணனும். வா ..” என அழைத்துச் சென்றதும் கடுப்பாக இருந்தது அவந்திகாவிற்கு …

ஏனோ கண்கள் சட்டென கலங்கி விட்டது அவளுக்கு…

 

உதட்டை கடித்து தன் உணர்வுகளை அடக்கியவளை பேண்ட் பாக்கெட்டில் கரம் நுழைத்தவாறு பார்த்த அதிரூபன்,

 

 “ரொம்ப பிகு பண்ணாத …ஏதோ ஒன்னை காட்டி பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வந்துடு..”  என்றதும் அவனை விழிகள் உயர்த்தி  முறைத்துப் பார்த்து அவந்திக்காவை,

 

” அதிம்மா இங்க வா..”  என்ற அதியமானின் அழைப்பில் அவரை நோக்கி சென்றாள்…

 

 அங்கிருந்த பிரபல ஆடை வடிவமைப்பாளனோ தனது லேப்டாப்பில் ஒவ்வொன்றையும் காட்டிட… தேமேவென அமர்ந்திருந்தாள் அவந்திகா…

 

ஆனால் அவளுக்கு அருகே அமர்ந்திருந்த அதிரூபனோ ஒவ்வொரு ஆடையையும் பார்த்தவன் அவளுக்கு எது பொருத்தமாக இருக்கும் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்து சில பல மாற்றங்களை செய்ய சொல்லி இருந்தான்…

 

 அனைத்தையும் அவர்கள் அந்த நொடியிலேயே டிசைன் செய்திட அவன் கூறிய மாற்றங்கள் ஆடை வடிவமாய் உருப்பெற்று அவனிடம் காட்டியதும் 

 அத்தனை அழகாய் இருந்தது …

 

அதியமானோ மகனை பெருமை பொங்க பார்த்து வைத்தவர் அருகே அமர்ந்திருந்த அவந்திகாவிடம்,

 

“.. உனக்காக அவன் எவ்வளவு பார்த்து பார்த்து பண்றான் பாரு நான் கூட என் பையனை என்னமோ நெனச்சேன் …ஆனா உன் மேல இவ்வளவு உயிரா இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல..”  என்றதும் பெயருக்கென்று  சிரித்து வைத்தவளுக்கு உள்ளுக்குள் அதிரூபனை  எண்ணி புகைந்தது …

 

ஆடை வடிவமைப்பாளரும் அவந்தாகாவின் மற்ற ஆடைகளுக்காக அதிரூபன்  கூறிய அனைத்து மாற்றங்களையும் குறித்துக்கொண்டு,

 

” ரொம்பவே நல்லா இருக்கு சார் உங்க டேஸ்ட்… மேடம்க்கு இந்த டிசைன் ரொம்ப நல்லா இருக்கும்..”  என அவர் பங்கிற்கு புகழ்ந்திடவும் அதையும் அமைதியாக தலையசைத்தே ஏற்றுக் கொண்டான் அதிரூபன்…

 

 அதன் பின்னர் அவர் சென்றிட… அதியமானிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விடலாம் என எண்ணிய அவந்திகாவை வலுக்கட்டாயமாக மதிய உணவை அங்கேயே உண்ண வேண்டும் என அன்பு கட்டளை விடுத்தார் அதியமான் …

 

வேலையாள் யாரையும் பரிமாறிட விடவில்லை ..மூவரும் ஒன்றாக அமர்ந்து கொள்ள ஆண்கள் இருவரும் அவந்திகாவிற்கு பார்த்து பார்த்து பரிமாறினர்..

 அவளுக்கும் தட்டில் இருப்பதை கண்டதும் மயக்குமே வந்துவிட்டது,

 

” போதும் பாஸ்.. இவ்வளவுலாம் நான் சாப்பிட மாட்டேன்..”  என்றதும் அதியமானோ,

 

” சும்மா நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன் பாஸ் பாஸ்னு சொல்ற..??  வாய் நிறைய மாமானு கூப்பிடு.. புரிஞ்சுதா..”  என்றதும் சரியென  மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்…

 

கொஞ்சமாக உண்டதும் மீண்டும் அள்ளி அள்ளி வைத்தான் அதிரூபன்..

 

” இதெல்லாம் டேஸ்ட் பண்ணி பாரு அதி ரொம்ப நல்லா இருக்கும் ..” என அவன் பங்கிற்கு வேறு அவளை அதி என அழைக்கவும் அவளுக்கு அதிகமாக கோபம் வந்தது‌தான் மிச்சம் …

 

அவனை முறைக்கவும் முடியாது உணவை விழுங்கவும் முடியாது கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பரிமாறிய உணவுகளை சாப்பிட்டு கொண்டு இருந்தவளை இதை வளைத்துப் பார்த்த அதிரூபன் மெல்ல அவள் புறம் குனிந்து,

 

” அன்னைக்கு என்ன சொன்ன..??  நாயேம் மனுஷனும் ரோட்ல போட்டு போறத பார்த்தா எப்படி ஃபீல் ஆகுமோ  அதே மாதிரி என்னை பார்த்தாலோ  நான் தொட்டாலோ இருக்குனு  சொன்னேன்ல..” என்றதும்  உணவை வாயில் அதக்கியபடி அவனை விழிகள் சுருக்கி தலை திருப்பி பார்த்த அவந்திகாவை விழிகள் மின்ன‌ பார்த்த அதிரூபன்,

 

”   இப்ப நான் என் கையால பரிமாறின சாப்பாட்டை தான் நீ சாப்பிட்டு இருக்க…அப்போ…அது….???..

ம்க்கும்… இது எப்படி இருக்கு சொல்லு பாப்போம் ..” என காது வரை சிரித்து கொண்டு கேட்டதும் அவ்வளவு தான் அவந்திகாவின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல் ஆகிவிட்டது…

 

 அதை திருப்தியாக பார்த்த அதிரூபன் தன் தட்டில் இருக்கும் உணவை முழுவதுமாய் உண்டு முடித்துவிட்டு இருந்தான்…

 

 பாவம் அவந்திகாவிற்கு தான் அதற்கு மேல் உணவு இறங்கவே இல்லை..

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top