அத்தியாயம் -25

அந்த வீட்டுலே இருந்த மூணு பேருக்கும் உலகம் நின்னு சுத்த ஆரம்பிச்சுது. “மதூ..”-னு கோபமா அலறினான் விதுரன். “என்ன? இல்ல என்னங்கிறென்? உன் உயிரை எடுக்க யார் குடுத்த உரிமை? வாழ்க்கையை வாழத் தான் உரிமை இருக்கே தவிர அதை அழிக்கறதுக்கு இல்லே”-னு அவனுக்கு மேலே கத்தினா. “ஏன்? எங்கம்மா அப்பாவுக்கு தான் அந்த உரிமை. அவங்க குடுத்தது தான்னு தத்துவம் பேச போறியா?”-னு எகத்தாளமா கேட்டான். “இல்லே… விது.. இல்லே. உங்க வாழ்க்கை.. உங்க உயிர் எங்கப் பாட்டி குடுத்தது விது.. சும்மா இல்லே.. அவங்க ஒரு காலை பலிக் குடுத்து உனக்கு மீட்டு குடுத்தது விது”-னு சோஃபாலே மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பிச்சா மதுரியா. “என்ன மது சொல்றே? வல்லிப்பாட்டியா?”-னு பேயறைஞ்ச மாதிரி ஆனான் விதுரன். “ஓ.. இதுதான் அந்த வெறித்தனமான அன்புக்கு பின்னால இருக்கற ரகசியமா”-னு மனசுலே நினைச்சான் ப்ரதீப்

பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடி..

வேதாசலமும் நித்தியானந்தமும் ஊரை விட்டு வந்து ரொம்ப வருஷமாயிடுச்சு-னு நினைச்சு குலதெய்வம் கோயிலுக்கு போகணும்-னு நினைச்சுப் போக யோசிச்சாங்க. அதை செயல் படுத்தறதுக்குள்ளே அவங்க ரெண்டுப் பேரோட பிள்ளைங்களோட குடும்பங்களும் முழுமை அடைஞ்சு இருந்துச்சு. பெரிய குடும்பமா ஒரு வேன்லே காழியூர் கிராமத்துக்கு பயணம் செஞ்சாங்க. சென்னையிலே இருந்து புறப்பட்ட அந்த வேன்லே கலகல-னு பேச்சு, சிரிப்பு-னு ஒரே ரம்யமா இருந்துச்சு. இப்போ இருக்கற வசதியோ வாய்ப்போ அப்போ இல்லே. கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கற நிலைப்பாடு தான். ஆனாலும் சந்தோஷத்துக்கும் நிம்மதிக்கும் குறைவே இல்லை. அப்போ ரிஷிநந்தனுக்கு 12 வயசு. விதுரனுக்கு 9, ஆனந்தியாவுக்கு 6, மதுரியாவுக்கு 3. விதுரனும் ஆனந்தியாவும் ரெண்டும் கெட்டானா இருந்ததால கொஞ்சம் துறு துறு-னு ஓடிட்டிருந்தாங்க. அந்த வயசுலே பிள்ளைங்களுக்குள்ள நட்பு, விளையாட்டு எல்லாமே இருந்துச்சு. ரிஷிநந்தன் பெரியவன்கிற தோரணையிலே சின்னவங்களை மேய்ச்சுக்கிட்டு, அமைதியாவே சுத்திட்டு இருந்தான். மதுரியா பாதி நேரம் அவங்களோட விளையாடிட்டும் மீதி நேரம் யாரோட தோள்லேயாச்சும் தொங்கிக்கிட்டு இருந்தா. கடைக்குட்டி-னு வேதமூர்த்தி, நித்தியவாசன், தாத்தாக்கள், பாட்டிக்கள்-னு செல்லம் தான். சங்கரிக்கு பெண் பிள்ளைகள்-னு ஆனந்தியா, மதுரியா ரெண்டுப் பேரும் செல்லம் தான்.

விதுரன் அவன் வயசுக்கு ரொம்பவே சேட்டைக்காரனா இருந்தான். ஓடறது, பிடிக்கறது, இழுக்கறது, தொங்கறது-னு இருந்தான். செய்யாதே-னு சொன்னா உடனே அதையே செய்யற குறும்புக்காரன். எப்போவும் ரிஷி சொன்னா கேட்கிறவன் தான், ஆனா புது இடத்துலே… அதுவும் நடக்காம ஒரே ஆட்டம் அதிகம் தான். காழியூர் சிவன் கோயில் பக்கத்துலேயே ஒரு சின்ன ஆறு மாதிரி ஓடும். அதுவும் மழை பெய்யற சமயம் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடும். ஆனாலும் அங்கே குளிச்சுட்டு போய் சாமி பார்த்தா ரொம்ப விசேஷம்-னு ஜனங்க நம்பிக்கைக்கு மரியாதை குடுத்து குளிக்கற இடத்துலே கம்பி போட்டிருந்தாங்க. முதல்லே பிள்ளைங்களை குளிக்க வைச்சு தயார் பண்ணாங்க அம்மாக்கள். விதுரன் ஆனந்தியாவை வம்பிழுத்துட்டு ரெண்டு பேரும் துரத்தி ஓடிட்டிருந்தாங்க. மதுரியா பச்சை பாவாடையிலே கரையோரமா இருந்த பாறையிலே மூஞ்சியை தூக்கி வைச்சிட்டிருந்தா. “என்னடா? யார் மேலே கோபம்? நீ விளையாட போகலியா?”-னு அவளை கேட்டாங்க வேதாசலமும் வேதமூர்த்தியும். “கழுதைக்கு என் மேலே தான் கோபம்-பா! இப்படி வெள்ளமா போகிற ஆத்துல நான் தனியா குளிக்க விடலேன்னு கோவபட்டு உட்காந்திருக்கு. விடுங்க அப்படியே தூக்கி வைச்சுட்டு உட்காரட்டும். ரொம்ப செல்லமாகிப் போச்சு”-னு திட்டினாங்க சுபத்ரா. சுபத்ராவும் சங்கரியும் அதே கரையோரமா துணி துவைச்சும், நீலவேணியும் கற்பகவல்லியும் அலசி போட்டுட்டு இருந்தாங்க.

“இந்தா.. உனக்கு பொறுமை இல்லே-னு சொல்லு. சும்மா குழந்தைய திட்டாதே”-னு வந்தார் நித்தியவாசன். “ஆமாமா பொறுமை இருக்கறவர், நாளையிலே இருந்து நீங்களே குளிப்பாட்டுங்க”-னு நொடிக்கவும், “வாசு உனக்கு தேவையா?”-னு வேதமூர்த்தியும் கேட்கவும் ஒரே சிரிப்பு. அதே நேரம் அந்தப் பக்கம் வேகமா ஓடி வந்த ஆனந்தியாவையும் விதுரனையும் பிடிச்சு நிறுத்தி, “இந்தப் பக்கம் ஓடாதீங்கடா, காலு வழுக்கினா, தண்ணியிலே விழுந்துடுவீங்க. சரியா?”-னு கேட்டார் நித்தியவாசன். மண்டையை உருட்டிட்டு ரிஷி இருக்கற பக்கமா போய் உட்கார்ந்தா ஆனந்தியா. விதுரன் மண்டையை உருட்டிட்டு போனாலும் அந்த பக்கம் ஓடினா என்னவாகும்கிற ஆர்வம் அவன் மண்டையை குடைஞ்சுது. அதே நேரம், “சங்கரி! நானும் வாசுவும் காலை டிபனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றோம். உங்களுக்கு துணையா அப்பாவும் மாமாவும் இருக்காங்க.. பிள்ளைங்களை கூட்டிட்டு போறோம்”-னு சொல்லிட்டுக் கிளம்பினாங்க. மதுரியாவை கூப்பிட்டதுக்கு வரமாட்டேன்-னு சொல்லிட்டா. “அவளுக்கு திட்டினவங்களே வந்து கொஞ்சணும். அம்மாவாச்சு பொண்ணாச்சு. நீ வா”-னு நித்தியவாசன் சிரிச்சுட்டே சொல்லவும், வேதமூர்த்தியும் ஆனந்தியாவையும் ரிஷியையும் கூட்டிட்டு போனார். விதுரனும் அவங்க கூட போனதா மத்தவங்க நினைச்சாங்க.

சுபத்ரா துவைக்கறதைப் பாதியிலே விட்டுட்டு மனசு கேட்காம சின்ன பொண்ணு கிட்ட வந்தாங்க. வேதாசலமும் நித்தியானந்தமும் கரையிலே நடக்கறதை பார்த்துட்டே குளிச்சிட்டிருந்தாங்க. சுபத்ரா சின்ன மகளை கெஞ்சி கொஞ்சறதை மத்த மூணு பெண்களும் பார்த்து சிரிச்சுட்டு இருந்தப்போ தான் அந்த பயங்கரம் நடந்துச்சு. எங்கே இருந்தோ ஓடி வந்த விதுரன் நேரா தண்ணியிலே தடுப்புக் கம்பியை தாண்டிக் குதிச்சான். பெரியவங்க எல்லாரும் மிரண்டு போய் பார்க்கும் போதே குழந்தையை வேகமா ஆறு இழுத்துட்டுப் போக ஆரம்பிச்சுது. முதல்லே சுதாரிச்சது கற்பகவல்லி தான். “ஐயோ சின்ன தம்பி..”-னு எல்லாரும் அலறவும், கற்பகவல்லி அவங்க கட்டியிருந்த புடவையை கழட்டி அதோட ஒரு ஓரத்தை நீலவேணி கையிலே கட்டிட்டு இன்னோர் ஓரத்தை பிடிச்சுக்கிட்டு ஆத்துலே குதிச்சிட்டாங்க. “வல்லீ.. என்ன பண்ணிட்டே?”-னு அலறினாங்க நீலவேணி. தண்ணியோட வேகத்தோட தானும் நீச்சல் அடிச்சு, வெள்ளத்தோட போன விதுரனோட தலைமுடியை கொத்தா பிடிச்சு தன்னோட சேர்த்து பிடிச்சாங்க. நிலைமையை உணர்ந்த கரையிலே இருந்தவங்க ரெண்டுப் பேரையும் இழுக்க முயற்சி பண்ணாங்க. அந்நேரம் தண்ணியோட வேகமும் அதிகரிக்கவே நூல் புடவை அந்த வேகத்துக்கு ஈடுகுடுக்க முடியாம கிழிய ஆரம்பிச்சுது. அதை கவனிச்ச கற்பகவல்லி, அப்போதான் அந்த விபரீத முடிவை எடுத்தாங்க. தன் கையிலே இருந்த புடவை ஓரத்தை விதுரன் இடுப்புலே கட்டிட்டு தன் கையை அதுலே இருந்து எடுத்துட்டாங்க. “வேண்டாம் வல்லி..”-னு கரையிலே இருந்து வேதாசலமும் நீலவேணியும் கதறினாங்க. நித்தியானந்தம் அப்படியே திகைச்சு நின்னுட்டார்.

சுபத்ரா ஓடிப் போய் ஆள்காரங்களை கூட்டிட்டு வர, மூணு வயசு குழந்தையான மதுரியா கண்ணுலேயும் மனசுலேயும் என்னன்னு புரியறதுக்கு முன்னாடி எல்லாமே அழுத்தமா பதிஞ்சுப் போச்சு. கற்பகவல்லி கையை எடுக்கவும், சரசர-னு விதுரனை மேலே தூக்கிட்டாங்க. சங்கரிக்கு அவனை தெளிவா பார்க்கவும் தான் பாதி உயிர் வந்துச்சு. பாக்கி மூணு பேரும் கற்பகவல்லி அடிச்சுட்டு போற வழியிலே ஓடினாங்க. அங்கே சுழற்சி இல்லாததுனால கற்பகவல்லி வழியிலே இருந்த ஒரு மரக்கிளையை பிடிக்க முயற்சி பண்ணாங்க. ஆறு திரும்பற வேகத்துக்கு அவங்களை ஒரு பாறை இடுக்குலே தூக்கி அடிச்சிடுச்சு. அவங்க கை கால்லே சிராய்ப்பு… அதோட அவங்க வலது கால் பாறை இடுக்குலே சிக்கிடுச்சு. அதுக்குள்ளே ஆள் காரங்களும் உதவிக்கு வந்துட்டாங்க. எல்லாம் சேர்ந்து முக்கால் மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நினைவில்லாத கற்பகவல்லியை ஹாஸ்பிடல்லே சேர்த்தாங்க. அதுக்குள்ளே அங்கே வந்த நித்தியவாசனுக்கும் வேதமூர்த்திக்கும் பேரதிர்ச்சி. 

மதுரியாவைத் தவிர பாக்கி மூணு பிள்ளைங்களையும் சங்கரி கூட ரூமுக்கு அனுப்பிட்டாங்க. சின்னக் குழந்தை பயத்துல அம்மா கழுத்தை கட்டிட்டு அங்கேயே இருந்துச்சு. கொஞ்ச நேரத்துலே டாக்டர் வந்து எல்லாரோட தலையிலேயும் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். “சார், உங்க அம்மாவோட வலது கால் பாறை இடுக்குலே மாட்டி சிதைஞ்சு போச்சு. அதிக நேரம் ஆயிட்டதால எங்கனால எதுவும் பண்ண முடியலே. அதோட அவங்களுக்கு சர்க்கரை நோயும் இருக்கிறதால, இப்போ காலை எடுக்கறதை தவிர வேறே வழி இல்லே. ஐ அம் சாரி”-னு சொல்லவும் எல்லாரும் இடிஞ்சு போனாங்க. கடைசியிலே அந்த கொடுமையும் நடந்துச்சு. அன்னிக்குத் தான் கற்பகவல்லி அவங்க வலதுக் காலை முட்டி வரைக்கும் இழந்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு ரூமுக்கு வரவும், “விதுரன் மேலே யாரும் கோபப்படக் கூடாது”-னு ரொம்ப கண்டிப்பா சொல்லிட்டாங்க கற்பகவல்லி. மூணு வயசு மதுரியா பாட்டியை கட்டிப் பிடிச்சுட்டு, “விதுரனால தானே பாட்டி உனக்கு இப்படியாச்சு? நான் இனிமேல் அவன் கிட்ட பேச மாட்டேன்”-னு மழலையிலே சொல்லவும், அவளை வாரி அணைச்ச பாட்டி கற்பகவல்லி, “தப்புடாம்மா… அப்படி பண்ணக் கூடாது. அவன் வேணும்-னு செய்யலே. சரியா? அவனும் உன்னை மாதிரி பாப்பா தான். சரியா? நீ தான் அவனை எப்போவும் பார்த்துக்கணும். இவங்க யார் கோபமா இருந்தாலும் நீ கோவிச்சுக்காம அவனை எப்போவும் அன்பாக் கவனிச்சுக்கணும். எப்போவும் அவன் கூடப் பேசி அவனை நல்லா பார்த்துக்கணும். பார்த்துப்பியா?”-னு கேட்டு தலையை தடவி குடுத்தாங்க. கற்பகவல்லி சொன்னது ஒரு அர்த்தத்திலே… ஆனா பிஞ்சு மனசுலே அது சத்தியவாக்காவே பதிஞ்சுப் போச்சு. ஆழப் பதிஞ்ச இந்த வார்த்தைகள் தான் இன்னிக்கும் அவன் மேலே கோவிச்சுக்க முடியாம திணற வைக்குது மதுரியாவை.

அதுக்கபுறம் கற்பகவல்லியோட வாழ்க்கை தினசரி போராட்டம் தான். ஒரு ரெண்டு வருஷம் வரை ரெண்டுப் பக்கம் ‘க்ரட்ச்’ வைச்சு நடந்தாங்க. அதுக்கப்புறம் செயற்கைக் கால் வைச்சப்புறம் போராடி போராடி பழைய வாழ்க்கைக்கு வந்தாங்க. அவங்க கஷ்டம் பார்த்து ஹாஸ்பிடல்லேயே ஒரு நாள் வேதமூர்த்தி விதுரனை அடிக்கப் போயிட்டார். பாட்டி சொன்ன வார்த்தை மனசுல பதிஞ்ச மதுரியா, “அடிக்கக் கூடாது.. விது.. பாவம்”-னு குறுக்க போயி நின்னா. கொஞ்ச நாள் கோபம் இருந்துச்சு. அப்புறம் இயல்பு ஆனாங்க எல்லாரும். அப்போ தான் எக்காரணம் கொண்டும் இதைப் பத்தி யாரும் விதுரன் கிட்ட எப்போவும் சொல்லவோ பேசவோ கூடாது-னு கற்பகவல்லி சத்தியம் வாங்காத குறையா சொல்லிட்டாங்க. அதோட எல்லார் மனசுலேயும் இந்த விஷயம் வலுக்கட்டாயமா பின்னுக்குத் தள்ளப்பட்டது.

விதுரன் அப்படியே மதுரியாவோட கைக்குள்ளே முகம் புதைச்சு கதறிட்டான். “ஐயோ… என் உயிர் கூட எனக்கு சொந்தமில்லையே மது. அப்படி இருக்கறப்போ எப்படி ஆடிட்டேன் நான்”-னு புலம்பினான். “விது! இப்போவும் உங்களை கஷ்டப்படுத்தணும்-னு இதை சொல்லலே. நீங்க பேசறது பாட்டிக்கு தெரிஞ்சா, நோய் போக மீதி இருக்கற உயிர் அந்த கணமே பிரிஞ்சுடுமே-னு தான் சொல்றேன்”-னு கண்கலங்க சொன்னா மதுரியா. கண்ணுலே தண்ணி வழிய படக்-னு நிமிர்ந்தான் விதுரன். “பாட்டிக்கு என்ன மது? பாட்டி நல்லாத்தானே இருக்காங்க?”-னு பயத்தோட கேட்டான். பாட்டியோட உடல்நிலையை பத்தி சொல்ல முற்பட்ட நேரம், மதுரியா கண்ணுலே இருந்து மள மளன்னு தண்ணி கொட்டுச்சு. “பயமா இருக்கு மது… சொல்லு டீ.. வல்லிப்பாட்டிக்கு என்ன?”-னு உலுக்கவும், நிலைமையை புரிஞ்சுட்டு, “விதுரன் பாட்டிக்கு ஹார்ட்லே ப்ளாக்… மூணு இடத்துலே. சி ஹெச் டி-னு சொல்லுவாங்க…. அவங்க வயசுக்கு சர்ஜரி பண்ண முடியாது-னு கையை விரிச்சுட்டாங்க… இன்க்ளூடிங் எங்க அப்பா.. எங்க அப்பா டாக்டர் சந்திரன் ஒரு கார்டியாலஜிஸ்ட். எப்போ மீட் பண்ணாலும் பாட்டியோட ப்ராப்ளத்துக்கு என்ன வழின்னு தான் ரியா அவர்கிட்ட பேசுவா”-னு சொன்னான் ப்ரதீப்.

விதுரனுக்கு ஏதோ தோணவும், “இதெல்லாம் தெரிஞ்சு ஒரு ஒன்பது மாசம் இருக்குமா?”னு கேட்கவும், ஆமா-னு தலையாட்டினா மதுரியா. விதுரனுக்கு அன்னிக்கி தான் தன்னை மீறி மதுரியா அவனுக்குக் கூப்பிட்டு அப்புறம் ‘ராங் கால்’-னு வைச்சது நினைப்பு வர்றவும், முகத்துலே தன்னையே நொந்துக்கற மாதிரி ஒரு வருத்தமான சிரிப்பு. அந்த சிரிப்புக்கான அர்த்தம் ப்ரதீப்புக்கு புரியலே. அவன் மதுரியா முகத்தை பார்த்தா அவ எதையுமே கவனிக்கலே. கொஞ்ச நேரம் அமைதி. அந்த அமைதியை கலைச்சது வாட்ச் – ஏழுமுறை அடிச்சுது. அதை உணர்ந்த மதுரியா, “விதுரன், நான் கிளம்பணும். நான் திரும்ப நாளைக்கு வர்றேன். அதுக்குள்ளே உங்க லைஃபை பத்தி நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க”-னு எந்திரிச்சா. “நான் முடிவு பண்ண என்ன இருக்கு மது? எனக்கு-னு என்ன இருக்கு? என் அறிவீனத்துனால என் தொழில் நட்பு, குடும்பம்-னு எல்லாத்தையும் இழந்தாச்சு. இனி யோசிக்கறதுக்கு செய்யறதுக்கு என்ன இருக்கு?”-னு பெருமூச்சு விட்டான் விதுரன். அவன் முன்னாடி கோபமா நின்னா மதுரியா.

“முடிச்சுட்டீங்களா? இப்போ நான் பேசலாமா? இப்போ இருக்கற இந்த வீடு யாருது?”-னு கேட்டா. அவனுக்கு புரியாத குழப்பத்துலே “என்னொடது தான், ஏன்?”-னு கேட்டான். “ம்ம்ம்… எப்போ வாங்குனீங்க?”-னு கேட்டா. “நான் வாங்கலே மது. ஆர்லேண்டோ இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நம்ம கூட பண்ண ப்ராஜெக்ட். சீக்கிரம் முடிச்சு குடுத்ததுக்கு சன்மானமா குடுத்தது”-னு சொன்னான் விதுரன். “ம்ம்ம்… ‘ஆர்லேண்டோ’-வோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் டெவலப்பர் பார்ட்னர் வேதம் மட்டும் தானா? அவங்க வேறே யாருக்கும் இப்படி ரிவார்ட் குடுத்ததா தெரியலியே? அட்லீஸ்ட் அப்பா, தாத்தா பேச்சுலே இருந்து நான் தெரிஞ்சிக்கிட்ட வரைக்கும்”-னு தோளை குலுக்கினா. பரட்டை தலையிலே விழுந்த முன் நெத்திமுடிக்கு நடுவுலே பளபளத்த கண்ணு, குறும்போட தாடிக்கு நடுவுலே வளைஞ்ச உதடு-னு அவளை பார்த்தான் விதுரன். இவன் இவ்வளோ அழகனா-னு ப்ரதீப் நினைக்கற அளவுக்கு இருந்தான். 

“ஸோ… ஏதுமில்லேன்னு சொல்ல முடியாது? அறிவிருக்கு.. சரியா? இந்த வீடுப் போக இன்னும் சாப்பிடறீங்களே? ஸோ… பேங்க்லே கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு. அது மட்டுமில்லே. ஆறு மாசமா இப்படித் தானே?ஸோ, ஆறு மாசமா வசதியா உட்கார்ந்து சாப்பிடற அளவு சம்பாதிக்கற அளவு பிசினஸ் திறமையும் இருக்கு… சுற்றமில்லே-னு சொல்ல முடியாது. ஏன்னா குத்துக்கல்லு மாதிரி நான் இருக்கேன்… நான் கூப்பிட்டேன்-னு உங்க பாவப்பட்ட டீயை குடிச்சுட்டு ப்ரதீப்பும் இங்கே இருக்காரு”-னு சொல்லவும், “அடீ…ங்க… பாவப்பட்ட டீ-யாமே! மயக்கத்துலே இருக்கறப்போ மடக் மடக்-னு குடிச்சுட்டு, இப்போ பேச்சைப் பாரு?”-னு சிரிச்சுட்டே மிரட்டினான்.

“முதல்லே கீப் ஸ்மைலிங் விது. அட் டைம்ஸ் லைஃப்லே தப்பான டிசிஷன்ஸ் எல்லாரும் எடுக்கறது தான். அதுக்கு ஒன் கேன்னாட் பி ஹார்ஷ் ஆன் ஒன் செல்ஃப். ஒரு தப்பு ஒரு வாட்டி பண்ண எல்லாருக்கும் அனுமதி இருக்கு. ரெண்டாவது வாட்டியும் பண்ணா தான் ப்ராப்ளம்… உங்க குடும்பம் உங்களை வெறுக்கலே.. நீங்க மீண்டு வர உங்களுக்கு ஸ்பேஸ் குடுத்திருக்காங்க. இதை நான் சொல்லலேன்னாலும் உங்களுக்கே புரிஞ்சிருக்கும். அப்புறம் இந்த நட்பு, காதல் எட்செட்டரா எல்லாம் யார் நல்லவங்க, யார் கெட்டவங்க-னு தெரிஞ்சுக்க புத்தி கொள்முதலா எடுத்துக்கோங்க.. வெயிட்.. உங்க ஃப்ரெண்ட்ஸை நான் விமர்சனம் பண்ணலே. உங்களுக்காக அவங்களால டைம் குடுக்க முடியலேன்னா இடைஞ்சலா உங்க லைஃப்லே அவங்க ஏன் இருக்கணும்? போத் ஆஃப் யூ கேன் லுக் அட் யுவர் லைஃவ்ஸ்”-னு சொன்னா மதுரியா. 

“எனக்கு நடந்தது தெரிஞ்சா இப்படி ஈஸியா நீ சொல்லமாட்டே”-னு பாதி தெளிஞ்ச மனசோட சொன்னான் விதுரன். “நீங்க மாறதுக்கும் போராடறதுக்கும் தயாரா இல்லே-னு சொன்னா வலிக்க வைக்கற விஷயங்களை எதுக்கு பேசணும்? ப்ரயோஜனம் இல்லே-னு தெரிஞ்சப்புறம் எதுக்கு ஆபரேஷன். பட் ஒன் திங்க். முதல்லே ஒண்ணு அபத்தமா சொன்னீங்களே? அது நான் இருக்கிற வரை நடக்காது. நியாபகம் வைச்சுக்கோங்க.. நான் வர்றேன்”-னு சொல்லிட்டு நகர போனவளை, “மது… நீ… நீ… இப்போ என்ன ஸ்பெஷலைசேஷன் பண்றே? எங்கே?”னு தயக்கத்தோடு கேட்டான். ‘பரவாயில்லையே!’ங்கற மாதிரி பார்த்து சிரிச்சு, “நான் எம் எஸ் கார்டியாலஜி. இப்போ முதல் வருஷம் முடியப் போகுது. செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்லே. வரட்டுமா?”-னு கிளம்பிப் போனா.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top