அத்தியாயம் -26

விதுரன் மனசு ரொம்ப நாள் கழிச்சு அமைதியா இருந்துச்சு. மதுரியாவோட பேச்சு அவனுக்கு அமைதியை குடுத்துச்சு. கூட்டுக் குடும்பத்துலே வளர்ந்தவன் ஒரு கோபத்துலேயும் விரக்தியிலேயும் வேகத்துலேயும் புறப்பட்டுத் தனியா வந்துட்டான். ஆனா ஒவ்வொரு நாளும் தனிமை அவனை வாட்டுச்சு. ஆனா அதைத் தனக்குத் தானே ஒத்துக்க கூட அவன் கௌரவம் இடம் குடுக்கலே. ஆனா ஒரே நாள்லே நான் யாரும் இல்லாதவன் ஆயிட்டேனே-ங்கற நினைப்பு, மறுகல் இதெல்லாம் அவனை பாதி ராத்திரி வரை தூங்க விடாது. அவன் குடும்பம், நண்பர்கள் போல அவன் தினமும் நினைச்ச இன்னொரு ஆள் மதுரியா. ஆனா அவ வருவா-னு அவன் கனவுல கூட நினைக்கவே இல்லை. அவளுக்கு அவன் செஞ்ச தப்பை முழுமையா உணர்ந்து இருந்தான். அவன் முன்னாடி எதை எல்லாம் அவளோட திமிர், அழுத்தம்-னு நினைச்சானோ அதை எல்லாம் இன்னிக்கு அவளோட கபடமில்லாத குணமாவும், அக்கறையாவும் தெரிய இன்னும் குறுகிப் போனான். மனசார வருத்தப்பட்டான். அதனாலேயோ என்னவோ அவன் மனசுலே மதுரியா பல மடங்கு உயர்ந்துப் போனா. அவ மேலே அன்பும் அபிமானமும் விறுவிறு-னு வளர்ந்துச்சு. அவனை நேசிக்கறவங்களுக்கு மத்தியிலே அவனே நேசிக்கற பெண்ணா நம்ம ஹீரோயின் வளர்ந்து நின்னா. அது அவளுக்கு தெரியாது!

அன்னிக்கு நடந்ததெல்லாம் யோசிக்கும் போது தான் விதுரனுக்குப் புரிஞ்சுது, அவன் என்னிக்குமே மதுரியா மேலே கோபமோ வெறுப்போ படலே-னு. தானே ஆங்காரத்துக்கு முக்கியத்துவம் குடுத்து எல்லாமே கெடுத்துக்கிட்டோம்-னு புரிஞ்சுக்கிட்டான். அவன் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தப்புறம் விக்கியும், ரிதேஷும் ஒரு வாட்டி வந்து பார்த்தாங்க. விக்ரம் நிறைய வாட்டி வந்தான். ஆனா அப்பா கிட்ட வேலை செய்யறதுனால அவன் அடிக்கடி வர்ரது சரியா இருக்காது-னு சொல்லிட்டான். இப்போவும் போன்லே பேசுவான். மத்த ரெண்டு பேரும் டச்சே இல்லை. ‘எனக்கு தேவையும் இல்லே’-னு மனசை தேத்திக்கவும் முடிஞ்சது. சுவாதியைப் பத்தி இந்த ஆறு மாசத்துலே அவன் நினைக்கவே இல்லே. ஆனா அவனையும் அறியாம மதுரியாவை நிறைய நினைச்சான். அந்த நிமிஷம் பளிங்கு மாதிரி அவனுக்கு புரிஞ்ச விஷயம், அவனுக்கு சுவாதி மேலே நட்புங்கற உணர்வு கூட கிடையாது. தானாத் தான் கற்பனை பண்ணிட்டோம். ஏதேதோ நினைச்சு நிறையா குழப்பம் பண்ணிட்டோம்-னு புரிஞ்சுக்கிட்டான்.

மதுரியாவோட பேச்சு, சிரிப்பு, கோபம், வருத்தம் எல்லாம் நினைச்சுட்டேத் தூங்கிப் போனான். மனுஷங்க அருமை புரிய ஆரம்பிச்சுது விதுரனுக்கு. ரொம்ப நாள் கழிச்சு கவலையில்லாத, கலக்கமில்லாத நிலையிலே ஆழ்ந்த உறக்கத்தோட நித்ரா தேவி அவனை தழுவினா. அதே நேரம் மதுரியா வீட்டுலே பெரிசா அவளை நோண்டி யாரும் எந்த கேள்வியும் கேட்கலே. படிப்பு, வேலை-னு நித்தியவாசன் சொல்லிட்டதால அவ உடல்நிலை பத்தித் தான் கவலைப்பட்டாங்க. ஆனா நித்தியவாசனும், பரத்தும் மட்டும் ஒரு ஆராய்ச்சிப் பார்வை அவளை பார்த்துட்டு விட்டுட்டாங்க. மதுரியா கலகல-னு பேசிட்டு சந்தோஷமா வளைய வந்தா. அவளோட அந்த மாற்றம் எல்லாரும் கவனிக்கக் கூடியதா இருந்துச்சு. அதே சமயம் சந்தோஷமாவும் இருந்துச்சு. அதனாலேயோ என்னவோ அவ வெளியே போறது வர்றது கூட அவங்க யாரும் பெரிசா தடுக்கலே. பாதுக்காப்பை மட்டும் பார்த்துட்டு விட்டுட்டாங்க. அதோட அவ ப்ரதீப் கூடப் போயிட்டு வர்றா, கூட ரீனாவும் சில சமயம் இருக்காங்கறதால வீட்டுலே கவலை-னு பெரிசா ஒண்ணும் இல்லை. ஆனா இவ விதுரனை பார்க்க போறதோ, அவன் கூட பழகறதோ தெரிஞ்சா இந்த இலகுத் தன்மை இருக்குமா?

அடுத்த நாள் காலையிலே அஞ்சு மணிக்கு முழிச்சுட்டான் விதுரன். நல்ல தூக்கமும், தெளிவான மனநிலையும் எந்திரிக்கும் போதே சுறுசுறுப்பும் உற்சாகமும் குடுத்துச்சு. கீழே வந்து எப்போவும் போல உடற்பயிற்சி முடிச்சு,காஃபி வைச்சுட்டு உட்காரும் போது தான் ஆறு மாசமா இல்லாம வீட்டோட நிலைமை கண்ணுலே பட்டுச்சு. “சே.. குப்பைமேடு மாதிரி இருக்கு. மதுவும் ப்ரதீப்பும் என்ன நினைச்சு இருப்பாங்க?”-னு தன்னைத் தானே திட்டிக்கிட்டான். அப்புறம் வேகமா காபியை குடிச்சுட்டு, சுத்தப் படுத்தற வேலையில இறங்கினான். ஆறு மாசமா சுத்தம் பண்ணாத வீட்டை சரி பண்ணுவது அவ்வளவு சுலபமா இருக்கலே. வீடு மொத்தமும் சரி பண்ணி, வெளியே புதரை எல்லாம் வெட்டி, வீட்டை பளபளன்னு மாத்த மூணு மணி நேரம் ஆச்சு. அப்போதான் வீட்டு வாசல்லே  நின்னுட்டிருந்த காரையும் பார்த்தான். அது வீட்டை விட பரிதாபமாக இருக்கவும் அதுக்கும் ஒரு மணி நேரம் குடுத்து க்ளீன் பண்ணி உபயோகப்படுத்தறா போல கொண்டு வந்தான். எல்லாம் முடிக்கும் போது மதுரியா வர்ற டைம் ஆகுது-னு உணர்ந்தவன் குளிச்சுட்டு, வாசல்லே நாளிதழ் சகிதம் உட்கார்ந்தான்.

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் வந்த ப்ரதீப்பும் மதுரியாவும் எல்லாத்தையும் பார்த்து அசந்து போனாங்க. “அட…”-னு சிலாகிச்சான் ப்ரதீப். “தீப் அட்ரஸ் மாறி வந்துட்டோமா?”-னு கேட்டுட்டே வந்தா மதுரியா. “எல்லாம் கரெக்டான அட்ரஸ் தான். உள்ளே வாங்க”-னு சிரிச்சுட்டே கூப்பிட்டான் விதுரன். “விதுரன் சார், சிரிக்கறீங்க?”-னு மேலே கலாட்டா பண்ணான் ப்ரதீப். “அப்புறம் வேறே எப்படி என் அழகான பல்வரிசையை உங்களுக்கு காட்டறதாம்?”-னு பதில் குடுத்தான் விதுரன். உள்ளே உட்கார்ந்ததும், உள்ளே போன விதுரன், “இந்தாங்க… என் பாவப்பட்ட டீ. எடுத்துக்கோங்க”-னு நீட்டவும், திரும்ப சிரிப்பு. அப்புறம் ஜெனரலா பேசிட்டிருந்தாங்க. விதுரனோட மாற்றம் மதுரியாவுக்கு உண்மையிலேயே சந்தோஷம். அவளுக்கு நேத்திக்கு எல்லாம் யோசனைதான். கற்பகவல்லிக்கு கால் போனதை சொல்லி அவனுக்கு மேலும் டிப்ரெஷன் அதிகமா போயிடுமோ-னு கவலை. ஆனா இப்படி ஒரு மாற்றம் அவ எதிர்பார்க்கவே இல்லை. டீயை உறிஞ்சிகிட்டே, “வீடு ரொம்ப நல்லா இருக்கு விதுரன் சார். எவ்வளோ பெட் ரூம்?”-னு கேட்டான் ப்ரதீப். ஓரளவு நட்பு வரத் தொடங்குச்சு ப்ரதீப்புக்கும் விதுரனுக்கும். மதுரியாவுக்கும், ப்ரதீப்புக்கும் என்ன உறவு-னு முதல் நாள் நெருடல் வந்ததோட சரி. அதுக்கு அப்புறம் அதைப் பத்தி விதுரன் நினைக்கவே இல்லை. “இந்த சார் மோரெல்லாம் வேண்டாம் ப்ரதீப். கால் மீ விதுரன்”-னு சொல்லிட்டு, “வீடு மொத்தம் 2220 ஸ்கொயர் ஃபீட் பார்க்கிங்கும் சேர்த்து. மேலே மூணு ரூம், கீழே ஒண்ணு. அப்புறம் ஹால், டைனிங், கிச்சன். அதைத் தவிர கிச்சன்லே இருந்து சிட் அவுட் மாதிரி ஒண்ணு இருக்கும் – ஸ்டாண்டர்ட் டிசைன்.. பரத் அண்ணா தான் ப்ளான் போட்டு குடுத்தார்”-னு சொன்னான். அப்புறம் இன்னும் ஏதேதோ பேசிட்டு டீயை குடிச்சு முடிச்சாங்க.

“என்ன முடிவு பண்ணீங்க விதுரன்?”-னு நேரடியா கேட்டா மதுரியா. “மது! நான் ஒரு ஃபெயிலியர்! ‘லேஸ்’சிப்ஸ் பேக்கட் மாதிரி… உள்ளே கண்டெண்ட் கம்மிதான். அது மட்டுமில்லே? நான் ஒரு நிலைக்கு வர்றது இயலாத காரியம். இந்த கருத்தை நான் மாத்திக்கலே. ஏன்னா? அது ஒரு டிரைட் அண்ட் டெஸ்டெட்… பட் உனக்காக நான், நீ சொல்ற மாதிரி டிரை பண்ணி பார்க்கிறேன். அதனால நான் புதுசா இழக்க ஒண்ணுமில்லே”-னு தோளைக் குலுக்கினான். “விதுரன் முதல்லே நம்ம மேலே நமக்கு நம்பிக்கை வேணும். இப்படி எதுவுமே இல்லாதது போல பேசினா என்ன அர்த்தம்?”-னு கேட்டா மதுரியா. “ஏன்னா நான் பண்ண தப்பு அப்படி”-னு வருத்தமா சிரிச்சான் விதுரன். ப்ரதீப் தொண்டையை கனைச்சு, “சரி, நீங்க பேசுங்க… ஒரு வேலையிருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடறேன்”-னு இங்கிதமா ஒதுங்கவும், “ஏன் ப்ரதீப் இவன் கதையெல்லாம் ஏன் கேட்கணும்-னு தோணுதா? இல்லே எனக்கு சங்கடம்-னு நினைக்கிறீங்களா?”-னு கேட்டான் விதுரன். “ரெண்டும் இல்லே பாஸ்! இவங்க ஃப்ரெண்ட் ரீனா ஊர்லே இருந்து வர்றாங்க.. பிக் அப் பண்ற வேலை. அவங்க வீட்டுலே டிராப் பண்ணிட்டு வரேன். அதோட உங்க கதையை நானே கேட்பேன், இவ இல்லாத நேரத்துலே! இவளோட கேட்டா நை நை-னு பேசியே கொன்னுடுவா”-னு மதுரியா தலையிலே ப்ரதீப் உரிமையா தட்டவும், ஏனோ சுருக்னு ஆச்சு விதுரனுக்கு.

அப்புறம் அவன் கிளம்பிப் போனதும் விதுரனும் பேச ஆரம்பிச்சான். ஆறு மாசத்துக்கு முன்னாடி அவன் வாழ்கை தலைகீழா மாறினது எப்படி-னு..

நிகேஷ் பிறந்தநாள் முடிஞ்சப்புறம், விதுரனால மதுரியாவோட வார்த்தைகளை மறக்கவே முடியலே. எப்பவும் அவ பேச்சுலே ஒர் முதிர்ச்சியில்லாதக் கோபம், அடம், ஏட்டிட்யூட் பார்த்திருக்கான். ஆனா இனி எப்போவுமே பார்க்க மாட்டே-னு சொன்னதுலே இருந்த அழுத்தம், ஒரு வித அசௌகரியத்தையும், பயத்தையும் அவனுக்கு குடுத்துச்சு. அவனோட மனசுலே சதா சர்வ காலமும் அவ நினைப்பு தான். வேலையும் மென்னி முறிஞ்சுது. அதனால இன்னும் அழுத்தத்துக்குள்ளானான். இதுக்கு நடுவுலே அன்னிக்கு பளிச்-னு சொன்னப்புறமாவும் சுவாதி அவனை நெருங்க முயற்சி பண்ணிட்டே தான் இருந்தா. ஆனா எந்நேரமும் சிந்தனையிலே மதுரியாவே இருந்ததால அவன் சுவாதியை மொத்தமாவே தவிர்த்தான். அதுலே சுவாதிக்கு ரொம்ப வருத்தம், ஏமாற்றம் எல்லாம். அதை அதிகம் பண்றா போல, தொழில் ரீதியான நட்பை மட்டுமே வைச்சுக்கிட்டான் சுவாதிக் கூட. இப்படியே நாட்கள் ஓட, அவ சொன்ன மாதிரியே மதுரியா அவன் கண்ணுலேயே படலே. சில நாள் நித்தியம் குடும்பத்தோட ஆளுங்களை அங்கே இங்கே சந்திச்சான். ஆனா அவளை பார்க்க முடியலே. புழுவா அரிச்ச நினைப்பு, விஸ்வரூபம் எடுத்துப் பார்த்தே ஆகணும்-னு அவனை பைத்தியமாக்கிச்சு.

“எப்படிடா பார்க்கிறது?”-னு பேயா அலையும் போது, தானா வழி வந்துச்சு. அதை கெட்டியா பிடிச்சுக்கிட்டான். வேதாசலம் இறந்து ஒரு வருஷம் ஆன நிலையிலே அவர் நினைவா ‘வேதநித்தியம்’-னு ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கற விழாவை குடும்ப ஆளுங்களை வைச்சு கொண்டாட முடிவு பண்ணாங்க. ரெண்டு வீட்டு ஆண்களும் பார்த்து பார்த்து தயார் பண்ணி, ஒரு நாள் காலையிலே விழா நடந்துச்சு. ரெண்டு குடும்பத்திலே இருந்தும் அத்தனை பேரும் வந்தாங்க மதுரியாவைத் தவிர! அது வேதமூர்த்திக்கு ரொம்ப வருத்தம். விதுரன் உள்ளேயே வராம வாசல்லேயே நின்னு மதுரியாவுக்காக காத்திட்டிருந்தான். எல்லாரும் கவனமா வேலை செஞ்சிட்டிருந்தப்போ ஆபீஸ் அறையிலே, “ரியாவுக்கு எங்க பேர்லேயெல்லாம் ரொம்ப கோபம் போல, அதான் ஃபங்க்‌ஷனுக்கு வரலே… நாங்க வாங்கி வந்த வரம்”-னு நொந்துகிட்டார் வேதமூர்த்தி. “என்ன மூர்த்தி? அவ தான் அன்னிக்கே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே-னு சொன்னாளே?”-னு சொன்னார் நித்தியானந்தம். வேதமூர்த்தி முகத்துலே அதிருப்தி தெரியவும், ஏதோ சொல்ல வந்தார் நித்தியவாசன். அதுக்குள்ளே அவருக்கு மதுரியாவே போன் பண்ணவும், “இந்தா நீயே பேசு. உன் சந்தேகத்தை கேளு”-னு வேதமூர்த்தி கிட்ட போனை குடுத்தார்.

“ரியாம்மா… நல்லாருக்கியா?”னு பேசவும், “அட மூர்த்திப்பா… வாழ்த்துக்கள். ஃபங்க்‌ஷனுக்கு விஷ் பண்ணத் தான் கூப்பிட்டேன். என்னால தான் வர முடியலே”-னு சொன்னா மதுரியா. “நீ ஏன்மா வரலே? எங்க மேலே வருத்தமா?”-னு வருத்தப்பட்டுக் கேட்டார் வேதமூர்த்தி. “சே… சே… நான் ஊர்லே இருந்தா தானே வர்றதுக்கு? நான் செங்கல்பட்டு மெடிகல் காலேஜ்லே பிஜி சேர்ந்துட்டேன் மூர்த்திப்பா. இந்த வீக் எண்ட் செம்ம டைட். அதான் வரலே”-னு சொல்லவும் பாரம் இறங்கின மாதிரி உணர்ந்தார். அப்புறம் இன்னும் பேசிட்டு வைச்சார். ஆனா அவளைப் பத்தின விவரத்தை சின்ன மகன் மேலே இருந்த கோபத்துலே வெளியே சொல்லலே. இது எதுவும் தெரியாத விதுரனோ மதுரியாவை எதிர்பார்த்து வாசலுக்கு உள்ளுக்கும் அலைஞ்சுட்டு இருந்தான். மத்தவங்க எல்லாரும் அவன் சுவாதியை எதிர்பார்க்கிறான்-னு நினைச்சு கடுப்புலே இருந்தாங்க – எப்போவும் அவனுக்கு பரிஞ்சு பேசற சங்கரி உட்பட. கடைசியிலே வேதமூர்த்தி ஆரம்பிக்கலாம்-னு சொல்லவும், தொங்கிப் போன முகத்தோட வந்து நின்னான். விதுரனுக்கு மனசு ஒரு நிலையிலே இல்லை.

அப்புறம் ஃபங்க்‌ஷன் பூஜை எல்லாம் முடிஞ்சு நித்தியவாசன் குடும்பம் கிளம்புச்சு. எல்லாரும் நின்னு பேசும் போது மனசை அடக்க முடியாம கேட்டுட்டான் விதுரன். “மது… ஐ மீன்.. மதுரியா வரலியா?”-னு கேட்டப்போ எல்லாரும் திகைச்சு அவனை பார்த்தாங்க; பரத் மட்டும் கடுப்பானான். “ஏன்? சீண்டறதுக்கு ஆள் குறையுதா?”-னு வெடுக்-னு கேட்டான் பரத். அப்புறம், “ஐ மீன் சீண்டி ஜாலியா பேசறதை சொன்னேன்”-னு சொன்னான். எல்லாரும் சிரிச்சு சமாளிக்கவும், விதுரனுக்கு முகம் சுருங்கிப் போச்சு. “கிளம்பலாம்பா. அசதியா இருக்கு”-னு சொன்னாங்க கற்பகவல்லி. அதோட கிளம்பவும் வேதமூர்த்தி குடும்பமும் கிளம்பி வீட்டுக்கு போனாங்க. சாயந்தரம் இவன் ஒய்வு எடுத்துட்டு ரூம்லே இருந்து இறங்கி வரவும், ஹால்லே எல்லாரும் விழா, நித்தியவாசன் குடும்பம் இவற்றைப் பத்தி பேசிட்டிருந்தாங்க. 

விதுரன் பாட்டுக்கு கண்டுக்காம லேப்டாப் பார்த்தான். ஆனா காது பூரா இவங்கப் பேச்சுலே தான் இருந்துச்சு. “ஏன்பா ரியா வரலே?”-னு கேட்டான் ரிஷி. “அவ பயங்கர பிஸி ரிஷி. பி.ஜி சேர்ந்துட்டா”-னு சொன்னா ரிஷியோட தர்ம பத்தினி. “ஓ… பாரேன் குட்டியுண்டு இருப்பா.. எங்க எல்லாரையும் விட சின்னவ.. இப்போ பிஜி மெடிசின்ஸ் படிக்கறா”-னு சிலாகிச்சான் ரிஷி. “ஆமாடா.. அவளுக்கு என்ன புத்திசாலி. அது சரி, சனி – ஞாயிறு கூடவா காலேஜ்?”-னு கேட்டாங்க சங்கரி. “அவ இங்கே படிக்கலே சங்கரி. வேறே ஊர்லே தூரமா படிக்கறா. நினைச்சா உடனே வர முடியாது”-னு ஓரக் கண்ணுலே இளைய மகன் முகத்தை பார்த்துட்டே சொன்னார் வேதமூர்த்தி.

விதுரனோட முகத்துலே ஏற்பட்ட அதிர்வை முகத்துலே காட்டாம நல்லாவே சமாளிச்சான். “ஆமா மூர்த்தி, வல்லிதான் வருத்தப்பட்டா. அந்த பொண்ணு திரும்பியே வரப் போறதில்லே. அங்கேயே வேலைனு பார்த்து இருந்துட போறாளாம்”-னு நீலவேணி அடுத்த குண்டை போடவும், இந்த வாட்டி வெளிப்படையாவே அதிர்ந்தான் விதுரன். இவங்க எல்லாம் சொல்லறதைக் கேட்டு பரத்தோட தம்பியோட ஃபாரினே போயிட்டா-னு முடிவு பண்ணிட்டான். அவ சொன்னதை செய்வா-னு நினைக்கலே விதுரன். அதனால அதிர்ச்சியும் வலியும் ஜாஸ்தியாச்சு. கண்ணுக்கு முன்னாடி இருந்த லேப்டாப், அதுலே இருந்த ஃபைல் எதையும் பார்க்க முடியலே. எதுலேயும் கவனம் செலுத்த முடியலே. நெஞ்சை அடைச்சுது. தொண்டை அடைச்சுது. அவன் என்ன உணர்றான்-னு அவனுக்கே சொல்ல தெரியலே. “அ.. அம்மா… நான் மொட்டை மாடிக்கு போய் நடந்துட்டு வர்றேன்”-னு சொல்லிட்டு விறுவிறு-னு போறவனை வித்தியாசமா பார்த்தாங்க அம்மா அப்பாவும்.

நாட்கள் அப்படியே போச்சு. நெஞ்சறுக்கற வலி விதுரனுக்கு நாளுக்கு நாள் கூடிக்கிட்டேப் போச்சு. ஒரு வேளை நமக்கும் மதுரியாவை பிடிச்சிருக்கோ-னு ஞானோதயம் கொஞ்சம், கடுகளவு வந்துச்சு. வேலையிலே நிறைய கவனம் சிதறுச்சு.  கழுதை குட்டிச் சுவரை தேடிப் போன மாதிரி, தன்னோட மனநிலையை மாத்த அவன் தேடிப் போனது நண்பர்களைத் தேடி. விக்கிக்கு விதுரனும் மதுரியாவும் பிரிஞ்சது சந்தோஷம்னாலும் விதுரனோட தற்போதைய நிலைமை, எண்ணி நாலே நாள்லே பொண்ணை பெத்தவன் கால்லே விழுந்து அவ கூட சேர்த்துடுவான்-னு புரிஞ்சதால, அவனும் விதுரன் கூடவே நேரத்தை கழிச்சான். துன்பம் தனித்து வருவதில்லைங்கறது ரொம்ப கரெக்டா இருந்துச்சு விதுரனுக்கு. விக்கிக்கு அவனோட வேலையும் பண்ணிக்கிட்டு, நண்பனையும் செக்லே வைக்கறது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. “இது என்னடா தலை வேதனை? பேசாம எப்படியோ போன்னு விட்டுடலாம். வேலை சரியா முடியாம அங்கிள் கிட்ட வேறே திட்டு வாங்கறோம். விதுரன் அவன் வேலையை எல்லாம் முடிச்சுட்டுத் தான் வர்றான்”னு புலம்பினான் ரிதேஷ். அதுலே விக்கியோட கோபம் அதிகம் தான் ஆச்சு. “எல்லாம் எங்களுக்கு தெரியும். நீ போயி உன் வேலையை பார். இல்லேன்னா அதுக்கும் சேர்த்து எங்கப்பன் திட்டுவான்”னு சள்-னு விழுந்தான்.

விக்கிக்கும் ரிதேஷ் சொன்னதுலே இருந்த அர்த்தம் புரிஞ்சுது. என்னவோ பண்ணு-னு தோளைக் குலுக்கிட்டு போயிட்டான் ரிதேஷ். விக்கி தலையை பிடிச்சுட்டு குனிஞ்சப்போ தான் பிசினஸ் நியூஸ் பேப்பர்லே அந்த விளம்பரத்தைப் பார்த்தான். அது பெரிய இன்வெஸ்டரோட மல்டிப்ளெக்ஸ் கட்டறதுக்கான டெண்டர் விளம்பரம். ரொம்ப பெரிய ப்ராஜெக்டுக்கான டெண்டர். யாருக்கு கிடைக்குதோ அந்த கம்பெனியோட ஓனருக்கு மீதி வாழ்கை ராஜ வாழ்கை-னு சொல்ற அளவுக்கு பெரிசு. அதையே உத்து பார்த்தவன், கண்ணு பளிச்சிட நிமிர்ந்தான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top