மதுரியா விதுரன் கூட நேரம் செலவழிச்சு இன்னியோட 4 நாள் ஆகுது. நேர்லயும் வரலே. போன் பண்ணுவா. அப்படியே பேசும் போது பக்கத்திலே ப்ரதீப் குரல் கேட்கும். அவன் கூட அங்கேப் போகிறேன்.. இங்கே போகிறேன்-னு சொல்லுவா. “அப்படி தினமும் போகவும் சுத்தவும் என்ன இருக்குமோ?”-னு கோபமா நினைப்பான். ஒரு நாள் தாள முடியாம, “நீயும் இந்த கம்பெனிக்கு ஒரு பார்ட்னர்.. அதுக்காகவாவது இந்த பக்கம் வரலாமே?”-னு ஒரு முறை சொன்னான். அதுக்கும், “ஐ டிரஸ்ட் யூ விது”-னு மதுரியா பதில் சொல்லவும், சந்தோஷம் வரலே. கடுப்புத் தான் வந்துச்சு. “பொல்லாத டிரஸ்ட்… சே”-னு ஆத்திரம் தான் அதிகமாச்சு. ஆனா உண்மையிலேயே ப்ரதீப் மதுரியாவை கூட்டிட்டு சுத்தினது கற்பகவல்லிக்கு சர்ஜரி பண்ண வாய்ப்பிருக்கு-னு ப்ரதீப்போட சீனியர் டாக்டர் சொன்ன வேற ஒரு டாக்டர் கிட்டே தான். ஆனா இதுத் தெரியாத விதுரன் கூண்டுப் புலி மாதிரி அலைஞ்சான். ஏன் எதுக்கு-னு காரணத்தை யோசிக்க முடியாத அளவுக்கு கோபம். தன்னோடதை யாரோ வலுக்கட்டாயமா பிரிக்கற கோபம். ப்ரதீப் மேலே கொலை வெறியே வந்துச்சு.
ஐந்தாவது நாள் மதியம் பொறுக்க முடியலே விதுரனுக்கு. போன்லே, “ப்ரதீப், உங்களை நான் இப்போவே பார்க்கணும். ஐ கேண்ட் ஹாண்டில் திஸ் எனிமோர்”-னு சொன்னான். “கண்டிப்பா… எங்கே வரணும்? எப்போ வரணும்? ஓகே.. ஓகே… ‘ஈசிஆர் கபாப் கார்னர்’.. ஓகே. நான் அரை மணியிலே அங்கே இருப்பேன்”-னு கிளம்பினான். அப்போ பிரபு வந்து, “தம்பி, இன்னிக்கு அந்த புது ப்ராஜெக்ட் மீட்டிங்..”-னு இழுக்கவும், “ஏபிசி-க்கு அப்புறம் எடுக்க வேண்டியது தானே அங்கிள்? அதை போஸ்ட்போன் பண்ணுங்க. இப்போ அதை…ப்ச்ச்.. எதையுமே டிஸ்கஸ் பண்ற மூட்லே நான் இல்லே.. ப்ளீஸ்”-னு புயல் மாதிரி வெளியே போனான்.
அதை ஒரு நமட்டு சிரிப்போட பார்த்தார் பிரபு. அது எதையும் உணர்ற நிலையிலே இருக்கலே விதுரன். நேரா சொன்ன இடத்துக்கு போனான் விதுரன். அங்கே ப்ரதீப்பை பார்த்ததும் கோபாவேசமா அவன் கிட்டப் போனான். “உன் மனசுலே என்ன நினைச்சிருக்கே?”-னு ஏக வசனத்திலே ஆரம்பிச்சப்போ தான் அவன் பக்கத்திலே பரத் இருந்ததை கவனிச்சான். “பரத்… நீங்க… ப்ரதீப்பை உங்களுக்குத் தெரியுமா?”னு கோர்வை இல்லாம பேச தடுமாறினான். “ம்ம்ம்… முதல்ல உட்காருங்க விதுரன்”-னு அலட்டிக்காம சொன்னான் பரத்.
“உங்க ஃபேமிலிக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும்-னு எதிர்பார்க்கலே”-னு சொன்னான் விதுரன். “எதிர்பார்த்திருக்கணும்… ஏன் எதிர்பார்க்கலே? ஏன்னா எப்போவும் உங்களைப் பத்தியே யோசிச்சு பழக்கம்.. அதனால தான்”-னு அயர்ச்சியா சொன்னான் பரத். ‘சரக்’-னு நிமிர்ந்தான் விதுரன். “எதை வைச்சு நான் செல்ஃபிஷ்-னு சொல்றீங்க?”னு கொஞ்சம் கடுமையாவே கேட்டான் விதுரன். “ம்ம்ம்.. மூணு மாசமா நீங்களே கதி-னு இருக்காளே ரியா.. அவ வாழ்க்கையை பத்தி, அவளைப் பத்தி யோசிச்சீங்களா?”-னு பரத் கேட்டவும், “எதை வைச்சு யோசிக்கவே இல்லை-னு சொல்றீங்க?”னு பதில் கேள்வி கேட்டான் விதுரன். “யோசிச்சிருந்தா அவளைப் பத்தி ஊரே தப்பா பேசறது உங்களுக்கு கேட்டிருக்குமே? உங்க செக்யூரிடியிலே இருந்து உங்க ஆபீஸ் ஸ்டாஃப் வரைக்கும் தாறு மாறா பேசறாங்க… இவங்களே இப்படீன்னா வெளியே எப்படியோ? சொல்லுங்க விதுரன். இதெல்லாம் தெரியுமா தெரியாதா?”-னு கோபமாவே கேட்டான் பரத்.
விதுரன் என்ன சொல்லுவான் பாவம்? அப்படியே வாயடைச்சுப் போனான். “இப்படி இருக்கறப்போ அவளைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்க தானே அவளை கல்யாணம் செஞ்சுக்க முடியும்? வேறே வழியிருக்கா? அது விஷயமா ப்ரதீப் கிட்ட பேச வந்தப்போ தான் நீங்க வர்றதா சொல்லவும், உங்ககிட்டேயும் பேச நினைச்சேன்”-னு பரத் சொல்லவும் மேலும் அதிர்ச்சி விதுரனுக்கு. “மதுவுக்கு கல்யாணமா?”-னு வாய்விட்டே கேட்டான். பரத் திரும்ப எகிறினான். “ஆமா… ஏன்? செய்யக்கூடாத ஒண்ணா என்ன? நீங்க எப்படியும் சுவாதியை கட்டிப்பீங்க… அவ மட்டும் நீங்க ப்ரேக்-அப் பண்ணதுக்காக காலம் பூராவும் தனியா இருக்கணுமா? நல்ல நியாயம் சாமி இது!”-னு கத்தவும், “சே… சே… நான் அப்படி நினைக்கலே பரத். எனக்கும் அவ நல்லா வாழணும்… சந்தோஷமா இருக்கணும்-னு தான் எண்ணம்”-னு உணர்ந்து சொன்னான். “அது உண்மைன்னா நீங்களே அதை சரி செய்யுங்க. மாப்பிள்ளை ரெடி தான். ஆனா ரியா தான் முடிஞ்சு போனதையே நினைச்சிட்டிருக்கா. அவளை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வைங்க. அது போதும்”-னு இரக்கமே இல்லாம சொல்லவும், “நா…. நான் அவகிட்டே பேசறேன்”-னு தழுதழுத்த குரல்லே சொல்லிட்டு எந்திரிச்சுப் போனான். அவன் தள்ளாட்டமான நடை மத்த ரெண்டுப் பேருக்கும் பரிதாபமா இருந்துச்சு. ஆனா இந்த ‘ஷாக் டிரீட்மெண்ட்’ இவனுக்கு அவசியம்-னு முடிவு பண்ணி அமைதியா இருந்தாங்க ரெண்டு பேரும்!
விதுரன் நேரா வீட்டுக்குத்தான் போனான். அவன் உள்ளே நுழையும் போதே செக்யூரிடி ஆபீஸ்லே மதுரியாவைப் பத்தியும், அவளை கூட்டிட்டு வர்ற ப்ரதீப்பை பத்தியும் நாக்குலே நரம்பில்லாம பேசினதை கேட்க நேர்ந்தது. ஆண் பிள்ளையான விதுரனையே துடிக்க வைச்சுது அந்தப் பேச்சு. உண்மையிலேயே முதல் நாள் மதுரியா கோபமா கத்தின செக்யூரிடி அவ மேலே இருந்த கோபத்துலே பண்ண வேலை அது. இப்போ அதுக்கு கண்ணு, காது, மூக்கெல்லாம் வைச்சு முழு உருவமாயிடுச்சு. அதிர்ந்து போனவன் வீட்டுக்குள்ளே போனதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தான். “என் மதுவுக்கு வேறே ஒருவர் கூட கல்யாணம். அதுக்கு நானே அவளை கன்வின்ஸ் பண்ணணுமா?அவ என் மது… என் மது… என் உயிர்… என் ஃப்யூச்சர்.. என்னோட எல்லாம்… ஆனா இப்போ அதை சொல்லக் கூட முடியாது.. தூக்கி எறிஞ்சு தப்பு பண்ணிட்டேனே… கல்யாணம் நிச்சயமான சமயம் கூட உரிமையெடுக்க விடாதவ என் மது. இவளைப் போயி…. இப்படி பேசறாங்களே… சே”-னு மனசு தவியா தவிச்சுது விதுரனுக்கு. அன்னிக்கு ராத்திரி ஒரு நொடியும் கண்ணை மூடாம அடுத்த நாள் வழக்கத்தை விட சீக்கிரமா ஆபீஸ் போனான்.
அப்போ ஏறிப் போகும் போது தான் அவனோட ரெண்டு டிசைனர்ஸும், ஒரு ஸ்டாஃபும் மதுரியாவைப் பத்தி பேசினதை கேட்டான். பேச்சோட சாராம்சம் ஒண்ணு தான். அவனுக்கும் மதுரியாவுக்கும் அஃபேர் இருக்குன்னும், அதனால தான் பார்ட்னரா இருக்கான்னும் பேசினாங்க. இல்லேன்னா ஒரு டாக்டர் பொண்ணுக்கு கன்ஸ்டிரக்ஷன் பத்தி என்ன தெரிஞ்சுட முடியும்-னு சால்ஜாப்பு வேற சொல்லிக்கிட்டாங்க. ஒரு கட்டத்துக்கு மேலே பொறுமை இழந்த விதுரன், “வாட் தி ஹெல் ஈஸ் ஹாப்பனிங் ஹியர்? இதுக்குத் தான் வேலைக்கு வர்றீங்களா? மது இந்த கம்பெனியோட பார்ட்னர் இல்லே. ஓனர். எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு! டேம் இட்.. அங்கிள்!!!”-னு அவங்களை கத்திட்டு பிரபுவை கூப்பிட்டான். “ஃபயர் ஆல் ஆஃப் தெம். இவங்க யாரும் என் முன்னாடி நிக்க கூடாது. அது மட்டுமில்லே… இவங்க மூணுபேரும் வேறே எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது. தேர் கேரியர் ஷுட் பி ஓவர். குரூப் எம் டி மிஸ்டர்.வேதமூர்த்திக்கு ஃபுல் விஷயம் சொல்லி ஏக்ஷன் எடுக்க சொல்லுங்க… ஆல் த்ரீ ஆஃப் யூ, கெட் அவுட் ஆஃப் மை சைட்”-னு கத்திட்டு உள்ளே போயிட்டான்.
விதுரனுக்கு மதுரியாவைப் பத்தி தப்பா பேசினவங்க எல்லார் மேலேயும் இருந்த கோபத்தை இந்த மூணு பேர் மேலே காட்டிட்டான். ஆனா அவன் கோபத்தை தாங்கிக்கற சக்தி அவங்க மூணு பேருக்கும் இல்லை. இருந்திருந்தா ஏன் இவன் கிட்ட வேலைக்கு வரப் போறாங்க? மிரண்டு தான் போனாங்க. பிரபு கிட்ட “சார்..”-னு இழுக்கவும், “பெரிய இடத்தை வம்பு பேசினா அப்படித்தான்.. விதுரன், வேதம் குரூப் சேர்மேனோட பையன். மதுரியா நித்தியம் குரூப் சேர்மனோட பொண்ணு. ரெண்டுப் பேரும் மூணு ஜெனரேஷனா நண்பர்கள். உங்க கேரியர் இன்னியோட அவ்வளோதான்”-னு தலையிலே அடிச்சுக்கிட்டார் பிரபு. “சார், எங்க ஃபேமிலி கஷ்டப்படும் சார்..”-னு ஒருத்தன் இழுக்கவும், “அது ஒரு அப்பாவி பொண்ணைப் பத்தி அவதூறு பேசறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். நம்ம பாஸ் பிசினஸே இல்லாதப்போ கூட உங்களுக்கு சேலரி குடுத்தார். அந்த நன்றி கூடவா இல்லை?”-னு துச்சமா பார்த்தார்.
இந்த வம்பு பேச்சோட ஆரம்பம், அவங்க மூணு பேர்லே தருண் – அட்மின் மேனேஜர். அதுக்கு காரணம் ஒரு மொட்டை கடுதாசி அந்த ஆபீஸ் அட்ரஸுக்கு வந்துச்சு. அதுலே விதுரன் மதுரியாவை பத்தி தப்பா இருந்துச்சு. அதை ஒண்ணா கிழிச்சு போட்டிருக்கணும்… இல்லே விதுரன் கிட்ட அனுப்பி இருக்கணும். ரெண்டும் இல்லாம ஆபீஸ்லே புரளி பேச பயன்படுத்திக்கிட்டாங்க மூணு ஆண்களும். “சாரி சார். தெரியாம பேசிட்டோம்… இனி இப்படி நடக்காது சார்.. ப்ளீஸ் எங்களுக்காக பாஸ் கிட்ட பேசுங்க”-னு மூணு பேரும் கெஞ்சவும், “சரி வாங்க… முயற்சி பண்ணலாம். அப்புறம் கடவுள் விட்ட வழி”-னு கூட்டிட்டு போனார் பிரபு. லேசுலே ஒத்துக்கலே விதுரன். பிரபு தான் தலையால தண்ணிகுடிச்சு லாஸ்ட் வார்னிங் வாங்கிக் குடுத்தார். ஆனாலும் விதுரன் அவங்க கிட்ட கடுவன் பூனை மாதிரி நடக்க ஆரம்பிச்சான். முதல்லே இருந்த அந்த இழையோடின நட்பு இப்போக் காணாம போச்சு. அது அந்த மூணு பேருக்கும் வருத்தம் தான். ஆனா தலை தப்பினது தம்புரான் புண்ணியம்-னு அவங்க சீட்டுக்குப் போயிட்டாங்க. தருணும் அந்த லெட்டரை கிழிச்சு குப்பையிலே போட்டுட்டான். ஆனா விதுரன் மனசுலே பல யோசனை ஓடிட்டிருந்துச்சு. இப்படி எல்லார் கிட்டேயும் போய் மிரட்டி உருட்டி புரிய வைக்க முடியாது.. வலிச்சாலும் சரி.. நம்ம உயிரே போனாலும் சரி… மதுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்-னு முடிவு பண்ணிட்டு ரெண்டு போன் கால் பண்ணிட்டு வேலையை பார்த்தான்.
அன்னிக்கு எப்போவும் போல மதியம் ஆபீசுக்கு வந்த மதுரியா லேப்டாப்பை நோண்டிட்டிருந்தா. பிரபுவும் உள்ளே வரவும், “அங்கிள் மார்ஷாவோட மீட்டிங் மினிட்ஸ் எங்கே? ப்ரெசண்டேஷன் அப்டேட் பண்ணணும்”-னு கேட்டுட்டே லேப்டாப்பை பார்த்தா. “மீட்டிங்கே நடக்கலேன்னா எப்படிம்மா மினிட்ஸ் இருக்கும்?”-னு கேட்டார் பிரபு. “ஏன் மீட்டிங் நடக்கலே?”-னு கேட்கவும், கண்ணால விதுரனை காட்டினார் பிரபு. “ஆமா… மீட்டிங் போகலே.. ஐ வாஸ் பிஸி”-னு அலட்சியமா மானிட்டர்லே இருந்து பார்வையை எடுக்காம சொன்னான் விதுரன். “என்ன பிஸியா?”-னு முறைச்சா மதுரியா. அவன் சிஸ்டத்தை ஷட் டவுன் பண்ணிட்டு, “அங்கிள், இன்னிக்கு வர்க் எல்லாம் முடிச்சுட்டேன். டீம் அனுப்பின இனிஷியல் டிசைன்ஸ் அனுப்பி இருக்கேன். பார்த்துடுங்க… நான் அவசரமா வெளியிலே போறேன்”-னு எந்திரிச்சான். அவனை, “உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?”ங்கற மாதிரி பார்த்தா மதுரியா. “வா.. மது… போகலாம்”-னு கையை பிடிச்சு இழுத்தான். “வி.. விது.. எங்கே? என் பேக்.. இருங்க”-னு அவன் இழுத்துட்டு போனதை தடுத்திட்டே பேக்கை எடுத்தா. “வர்றேன் அங்கிள்”-னு அவன் இழுத்த இழுப்புக்கு போனா மதுரியா.
கார்லே, “என்னாச்சு உங்களுக்கு? இன்னிக்கி வித்தியாசமா நடக்கிறீங்க”-னு நச்ச ஆரம்பிக்கவும், “கொஞ்ச நேரத்துலே தெரியும்”-னு சொல்லிட்டு நேரா அவன் வீட்டுக்கு போனான். வீட்டு வாசல்லே ப்ரதீப்பும் பரத்தும் இருந்தாங்க. “ஆ..”-னு வாயை பிளந்து பார்த்தா. பரத் அழகா புருவம் தூக்கி “என்ன?”-னு கேட்டான். ப்ரதீப் உதட்டை சுழிச்சு கிண்டலா சிரிச்சான். மதுரியா கண்ணுலே கனல் பறந்துச்சு. “செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு சிரிக்கிறீங்களா?”-னு பார்த்தா. அதுக்குள்ளே விதுரன் டோர் ஓபன் பண்ணவும், “என்ன? அங்கேயே நின்னுட்டீங்க?உள்ளே வாங்க..”ன்னு கூப்பிட்டான். மத்த ரெண்டு பேரோட சேர்ந்து படபடப்பும் கோபமுமா உள்ளே போனா மதுரியா. காஃபி போட்டு கொண்டு வந்து குடுத்தான் விதுரன்.
“இப்படி ஒரு முத்தரப்பு சந்திப்பை எதிர்பார்க்கலே தானே? ஆனா தேவைப்பட்டுது”-னு நிறுத்தி, “பரத்… நீங்க சொல்றதை ஒத்துக்கறேன். சாரி… ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்… இருக்கேன்… எனக்கு அவ நட்பு மட்டுமாவது வேணும். அதுக்கேத்தாப் போல பார்க்கலாம். ஒரு ஆளா கன்வின்ஸ் பண்ண முடியாது. மூணு பேரும் சேர்ந்து கன்வின்ஸ் பண்ணலாம். எங்களைத் தவிர எங்க விஷயம் முழுக்க தெரிஞ்ச ப்ரதீப்பை தவிர வேறே பெட்டர் சாய்ஸ் இருக்குன்னு எனக்குத் தோணலை”ன்னு சொல்லவும் ரெண்டு ஆம்பிள்ளைங்களுக்கும் குடிச்ச காஃபி புரை ஏறிடுச்சு. ஆடியேப் போயிட்டாங்க அவனோட மனமாற்றம் பார்த்து. அவனுக்கு மதுரியா மேலே இருந்த அன்பைப் பார்த்து வாயடைச்சு போயிட்டாங்க.
“நீங்க… நீங்க… என்ன பேசறீங்க-னு எனக்கு புரியலே.. என்ன சுயநலம். என்ன விஷயம்?.. எதுக்கு தீப் நல்ல சாய்ஸ்?”-னு குழப்பமா கேட்டா மதுரியா. “உன் கல்யாணத்தைப் பத்தி தான்.. ஏன் முடியாது-னு மறுத்து எல்லாரையும் ஹர்ட் பண்றே? என்னால தானே?”-னு நேரடியா கேட்டான் விதுரன். “கல்யாணமா? நானா? என்ன உளர்றீங்க?”-னு கோபமா கேட்டா. “ஏன்? தப்பா என்ன சொன்னேன்?”. பண்ணிக்க மாட்டியா? அப்படி தானே உங்க வீட்டுலே சொல்லி இருக்கே?”-னு விதுரன் கேட்கவும், நேர் பார்வையா பரத்தை பார்த்து, “உங்க வேலையா?”-னு கேட்டா. “அவர் மேலே பாயாதே மது. அவங்க ஆசையிலே என்ன தப்பு? ஒரு வாட்டி கல்யாணம் நின்னா பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கணும்-னு பெரியவங்க நினைக்கறதுலே என்ன தப்பு.? எந்த தப்பும் இல்லே… எனக்கும் கில்டியா இருக்கு.. நீ ஏன் ப்ரதீப்பையே கல்யாணம் பண்ணிக்க கூடாது. நம்ம விஷயம் தெரிஞ்சும் உன் மேலேயோ, என் மேலேயோ சந்தேகப்படாம இருக்கார். ஹீ ஈஸ் அ ஜெம் ஆஃப் எ பர்சன்.. உன் ஃபீல்டே வேறே..”-னு அவளை கன்வின்ஸ் பண்ற வேகத்துலே பேசினான். ஆனா மதுரியா சூறாவளி மாதிரி மாறினா. அவ அவளுக்குன்னே போட்ட வட்டம், வேலி எல்லாம் காத்துலே பறந்து போயிட்டு இருந்துச்சு.
கோபத்துலே கண்ணும் முகமும் சிவக்க நேரா விறு விறுன்னு ப்ரதீப் கிட்டே போய், “இவர் பேசறதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்குதா?”-னு கர்ஜனையா கேட்டா. ப்ரதீப் பதில் சொல்றதுக்கு முன்னாடி, “இல்லே ரியா.. இதுக்கும் ப்ரதீப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது”-னு பரத் சொல்லவும், “மது, நானே தான் கேட்கிறேன். உன் வாழ்க்கையிலே எனக்கு அக்கறை இருக்க கூடாதா?”-னு கேட்டான் விதுரன். நேரா போய் அவன் காலரை பிடிச்சு, “என்ன அக்கறை உனக்கு? ம்ம்ம்? என்னை இன்னோருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பியா?அறிவில்லே? எப்படி பண்ணுவே? உனக்கு எப்போ தான் என்னை புரியும்.. சொல்லு டா!! முடிவா சொல்றேன். இனிமேல் கல்யாணம் மாப்பிள்ளை அப்படி இப்படி-னு வாயை திறந்தீங்க.. எங்கேயாவது தொலைஞ்சு போயிடுவேன். நான் இருக்கேனா செத்தேனா-னு கூட உங்கனால கண்டுபிடிக்க முடியாது”-னு சொல்லிட்டு பிடிச்சிருந்த காலரை உதறிட்டு வேகமா வெளியே போயிட்டா.
விதுரன் பேரதிர்ச்சியிலே சிலையா நின்னுட்டான். அவ பேசின ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடிச்ச மாதிரி இருந்துச்சு. “விதுரன்.. விதுரன்”-னு அவனை உலுக்கினான் பரத். “பரத்.. அவ.. அவளுக்கு என்னாச்சு? ஏன் இப்படிப் பேசறா?”ன்னு தடுமாறவும், “ஆமா.. விதுரன்.. அவ மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. உங்களை மறக்கவும் முடியாம நினைக்கவும் முடியாம, விலகவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம இந்த ஒரு வருஷமா அவ தவிக்கற தவிப்பு கொஞ்ச நஞ்சமில்லே. நரகம் அது. உங்க கிட்ட திரும்பி வந்தப்புறம் அவ இருக்கறதுக்கும் அதுக்கு முன்னாடி இருந்ததுக்கும் மலையளவு வித்தியாசம்”-னு பரத் அவனுக்கு தெரிஞ்சதை எல்லாம் சொன்னான். அப்புறம், “விதுரன்… நீங்க நினைக்கற மாதிரி ரியாவுக்கும் எனக்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது.. அவ என் தங்கை”-னு அவளை பார்த்தது பேசினது எல்லாம் சொல்லி மாதுரியோட போட்டோவும் காட்டினான். “மது இன்னும் என்னை விரும்பறாளா? நிஜமாவா? அவளை நான் இன்னும் இழக்கலையா?”-னு சொல்ல முடியாம முகத்தை மூடி அழுதான்.
யார் சொன்னாங்க ஆண்கள் அழமாட்டாங்க-னு? “ஆமா விதுரன்.. மது.. இன்னும் உங்க மதுதான். ஆனா இதை உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடி உங்க மனமாற்றத்தையும் சோதிக்க வேண்டி இருந்துச்சு. அதான் ரெஸ்டாரெண்ட்லே அப்படி பேசினோம்”-னு சொன்னான் பரத். “என்னை ஏன் டெஸ்ட் பண்ணணும்?”-னு கேட்டான் விதுரன். “ஏன்னா ரியாவுக்கு உங்க மேலே இருக்கற அன்புக்கு இணையா கோபமும் வெறுப்பும் இருக்கு…. அவளை சமாதானம் பண்ண உங்களுக்கு பொறுமை இருக்கா-னு பார்த்தோம். அதோட இந்த வாட்டியும் தப்பாகிட கூடாது-னு தான்”னு சொன்னான் பரத். “என் மேலே கோபம்னா? சுவாதியா?”னு நேரடியா கேட்டான் விதுரன்.
“ம்ம்ம்.. ஆமா.. அது தப்பில்லேனு மறுக்க முடியாதே?”ன்னு பரத் கேட்கவும், “எனக்கு மதுவை கல்யாணம் பண்ற தகுதி இருக்கு-னு தோணலே”-னு சொன்னான் விதுரன். “இல்லை விதுரன்.. எப்போ அவளோட நல்வாழ்க்கைக்காக அவளை வேறொருத்தருக்கு கல்யாணம் பண்ண சம்மதிச்சீங்களோ, அப்போவே யூ ஆல்ஸோ டிசர்வ் ஹர்… என்ன?அவளை மலையிறங்க வைக்க நீங்க கொஞ்சம் போராடணும்… அவசரம் இல்லே… டேக் யுவர் டைம்.. சரியானதும் கல்யாணத்தை வைச்சுக்கலாம்”-னு பரத் இணக்கமா பேசவும், “நீங்க தான் வில்லனா இருப்பீங்க-னு நினைச்சேன்”-னு சொல்லி ஸ்மைல் பண்ணான் விதுரன்.
“மொத்த வாழ்க்கைக்கான நரகத்தை இந்த ஒரு வருஷம் அனுபவிச்சுட்டா”-னு உணர்வு பூர்வமா பரத் சொல்லவும், அவன் கையை பிடிச்சு “உங்க மனசுலே எந்த நெருடலும் வேண்டாம். நான் சுவாதியை விரும்பவே இல்லே.. எப்பவும் என் மனசுலே மது தான்”-னு சொல்லி அவன் சைட் விளக்கத்தையும் சொல்லி பரத் மனசுலே இருந்த கலக்கத்தை போக்கினான். “எல்லாம் நன்மைக்கே! சீக்கிரம் கரெக்ட் பண்ணுங்க விதுரன் மாம்ஸ்.. படிப்பு முடிக்கும் போது லைசன்ஸ் மாட்டிடலாம்”-னு ப்ரதீப் சொல்லவும், எல்லாரும் சிரிச்சாங்க.
விக்கி யூஎஸ்லே படிக்கப் போனவனை ரிதேஷ்னால தொடர்புக் கொள்ளவே முடியலே. ரிதேஷ்க்கு, விக்கிக்கு விதுரன் மேலே இருக்கற வன்மம் கோபம் நல்லா தெரியும். காரணம் தெரியாது. அவனோட கோபம் பழி உணர்ச்சி கொஞ்சம் பயம் குடுத்தாலும் அவனுக்கு உதவி பண்றதை நிறுத்த முடியலே. முதல்லே அவன் மேலே, அவன் பணத்து மேலே உள்ள பிரமை. அதுக்கப்புறம் அவன் கிட்ட வேலைக்கு சேர்ந்ததும், எங்கே வேலையை விட்டு அனுப்பி விடுவானோன்னும் கேரியரே கெடுத்துடுவானோன்னும் பயம். தானும் அவனை மாதிரி பி.ஆர்க் தானே படிச்சோம், இவன் என்ன பண்ணிடுவான்-னு தன்னம்விக்கை இல்லை. அப்படித்தான் ரிதெஷை வைச்சு இருந்தான் விக்கி. நல்லா படிக்கற பசங்களுக்கான நம்பிக்கை விக்ரமுக்கும் விதுரனுக்கும் இயல்பா வந்துச்சு. அதே தான் ரிதேஷ்க்கும் வந்திருக்கணும். ஆனா படிப்புக்கு முக்கியத்துவம் குடுக்காத விக்கினால அவனுக்கு அது வரவே இல்லை. அவனுக்கு விக்கியை கீழ் படியறது தான் முழு நேர வேலை. இப்போவும் அவன், விதுரன் கம்பெனி ஆரம்பிச்சதுலே இருந்து விக்கியை எப்படியாவது தொடர்புக் கொள்ள முயற்சிப் பண்றான். ஆனா விதுரனுக்கு ஆர்டர் கிடைக்கும் போது, அதுவும் பெரிய ஆர்டர் கிடைச்சப்போ தான் விக்கியை கூப்பிட முடிஞ்சுது. முழுசா எல்லாம் கேட்ட விக்கிக்கு தலையே சுத்திடுச்சு.
ஓரளவுக்கு அவனுக்கு மதுரியா தான் திரும்பி வந்து எல்லாம் பண்றா-னு புரிஞ்சுது. ஆனா ஏன்-னு புரியலே. “நீ அவங்க ரெண்டு பேரை லிங்க் பண்ணி ரூமர், லெட்டர் எதை வேணும்-னா க்ரியேட் பண்ணு. எப்படியாவது அவ அவனை விட்டு ஓடணும்”-னு போனை வைச்சான். ஆனா அவனுக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி, மதுரியா எப்படி வந்தா. அவ தான் ப்ரதீப் கூட சுத்தறாளே. வாரா வாரம் பேசும் போதும் அசோக் புலம்பறானே.. ரெண்டும் ஜோடிப் புறா மாதிரி டெய்லி மீட் பண்ணி ஊரை சுத்துதுனு. அப்புறம் எப்படி? அதுவும் புது கம்பெனி… ஏறக்குறைய பழைய மாதிரினு அசை போட்டவன், திரும்ப ரிதேஷ்க்கு போன் பண்ணி, “நம்ம ஆள்.. ஒரு பொண்ணு அவன் கம்பெனியிலே வேலைக்கு போகணும். அங்கே நடக்கறது எல்லாம் நமக்கு தெரியணும்”னு சொல்லவும், “அது அல்ரெடி டிரை பண்ணிட்டேன் விக்கி. அந்த பொண்ணு ரிஜெக்ட் ஆயிடுச்சு.. அதுக்கப்புறம் நானும் கொஞ்சம் செண்டிமெண்டா பேசி அட்ஜஸ்ட் பண்ணலாம்-னு பார்த்தா விதுரனை போன்லே பிடிக்கவே முடியலே. விக்ரம் கிட்ட அட்ரஸ் வாங்கி நேர்லே போகலாம்னா அதுவும் முடியலே”-னு சொல்லவும், விக்கியோட மண்டைக்குள்ளே முழுக்க முழுக்க விதுரன் போனான். அவன் படிப்பு காத்துலே போக ஆரம்பிச்சுது. தீது நினைப்பின் தீதே நடக்கும்-னு சொல்ற வாசகத்துக்கு சரியா இருந்தான் விக்கி.
“என்னடா? இவ்வளோ நடந்திருக்கு? இப்போ வந்து சொல்றே? உன்னை..”-னு கோபத்துலே இறைஞ்சான். “நான் உன்னை ரீச் பண்ண டிரை பண்ணேன் விக்கி… மூணு மாசமா டிரை பண்றேன்… அதோட என்னால ஆனதையும் பண்ணேன்”-னு பதிலுக்கு கத்தினான் ரிதேஷ். “பண்ணி கிழிச்சே… இங்கே பார்.. எப்படியாவது விதுரன் மதுரியாவோட முகத்தை பார்க்க முடியாம பண்ணு. முன்னே வந்ததை விட பெரிய பிரச்சினையா வரணும்.. விதுரனை போய் பாரு. அட் எனி காஸ்ட். மதுரியா-ப்ரதீப் ரிலேஷன்ஷிப்பை பத்தி சொல்லு. ரெண்டு பேர் வீட்டுக்கும் விதுரன்-மதுரியா சேர்ந்து சுத்தற போட்டோவை அனுப்பு. அவங்களை பத்தின ரூமர்ஸை அவங்க அப்பாக்கள் சர்க்கிள்லே பரப்பு.. இதெல்லாம் உடனே நடக்கணும். அவங்க பிரியட்டும் நான் என் வேலையை காட்டறேன்”-னு ஆக்ரோஷமா சொன்னான் விக்கி. “சரி விக்கி, நான் எல்லாம் பண்றேன்”-னு அடங்கி போனான் ரிதேஷ். “ம்ம்ம்… எல்லாம் பண்ணு, நான் எவ்வளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளோ சீக்கிரம் லீவு எடுத்துட்டு வர்றேன். கை மீறி போகாம பார்த்துக்கோ. மிஸ்ஃபயர் ஆச்சு, நான் பொல்லாதவனா மாறிடுவேன்”-னு மிரட்டி போனை வைச்சான்.