அத்தியாயம் 30
“என்ன சொல்றிங்க புரியல”
அவள் புரியாமல் அவனிடம் கேட்டாள்.
“உனக்கு எது புரிஞ்சிருக்கு இது புரியுறதுக்கு”
அவன் கூறி விட்டு திரும்ப,
“நீங்க புரியுற மாதிரி சொன்னா தானே புரிஞ்சிக்க முடியும்”
அவளும் விடுவதாக இல்லை.
திரும்பி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து அவளை மேல் இருந்து கீழ் வரைப் பார்த்தவன்.
“ஏது உனக்கு எல்லாம் புரிஞ்சிடும் சரி தான்.”
புருவம் உயர்த்தி அவன் நக்கலாகக் கேட்டான்.
“அதான் சொன்னனே புரியுற போல சொல்லுங்க புரிஞ்சிக்குறேன்.. இப்போ கிஃப்ட் கேட்டிங்க ஆனா என்கிட்ட எதுவும் இல்ல கொடுக்குறதுக்கு ஆனா நான் தான் கிஃப்ட்ன்னு சொல்றிங்க எனக்கு புரியல்லயே”.
அவள் யோசனையாக சொன்னாள்.
“ அதான் சொன்னனே நீ டக்குன்னு புரிஞ்சிக்குற ஆளு எது சொன்னாலும் புரிஞ்சிப்ப சரியா”
அவன் கூறி விட்டுத் திரும்ப.
“சரி.. புரிஞ்சிக்க முயற்சி பன்றேன்.. ஆனா இப்போ எதுக்கு இப்பிடி சொன்னிங்க ”
எனக் கேட்டாள்.
“நா கேக்குறது எதுன்னு நா சொல்லாமலே புரிஞ்சிப்ப அப்போ நீயா வந்து சொல்லுவ இப்போ விடு”
அவன் கூறினான்.
“சரி.. ஆனா தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
அவனுக்கு வாழ்த்தவும் கடிகார முள் நள்ளிரவு பன்னிரெண்டு மணி என்று உணர்த்தும் வகையில் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அவன் திரும்பி அவளைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றான்.
“என்ன சொல்றாரு இவரு.. தெளிவா கொளப்புறாரு அது தான் உண்ம”
நேத்ரா தனக்குள் நினைத்தாள்.
“இன்னைக்கு பொறந்த நாள்ங்குறதால தான் கோயிலுக்கு போக சொல்லி அத்த ஃபோன் பன்னியிருக்காங்க போல.. ஆனா அத்த கூட சொல்லல்லயே..”
நினைத்துக் கொண்டவள் இப்பொழுது அத்தைக்கு அழைக்க முடியாது என எண்ணி நாளை அழைத்து கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
அக்ஷரன் குளியலறைக்குள் இருப்பதற்கான அறிகுறி நீர் கொட்டப்படும் சத்தத்தில் இருந்து விளங்க, அவசரமாக அவளது ஆடைகளை எடுத்துக் கொண்டுச் சென்று மற்றைய அறையில் மாற்றிக் கொண்டு வந்தாள்.
இவள் அறைக்குள் நுழைய அவன் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்து ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க இவள் போர்வையை கீழே போட்டு படுத்தாள்.
“ஶ்ரீஜா எதாச்சும் நெனச்சிருப்பாங்களோ தெரியல”
அவள் கூற ஃபோன் பார்த்துக் கொண்டிருந்வன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
எதுவும் பேசவில்லை.
“இல்ல நா உங்ககூட வந்தத பத்தி ஏதாச்சும் நெனச்சிருப்பாங்களா??”
அவள் கேள்வியாக அவனைப் பார்க்க,
“நீ எப்போல இருந்து அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்க ஆரம்பிச்ச.. நீயா யோசிச்சு நீயா முடிவு பன்னிட்டு தானே மத்தவங்ககிட்ட கேட்ப இப்போ என்ன புது பழக்கம்”
அவன் நக்கலாகக் கூற.
“இப்போ என்ன சொல்லவர்ரிங்க”
எழுந்து அமர்ந்துக் கொண்டு அவனிடம் கேட்டாள்.
இவளும் என்ன தான் பன்னுவாள்..!!.
புரியாமலே பேசிக் கொண்டிருக்கிறானே..
“நீங்க பேசுற எதுவும் எனக்கு புரியல புரியுற போல பேசுங்க”
அவள்க் கூற அவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“உனக்கு தெளிவா விளக்கி சொன்னாலும் புரியப் போறது இல்ல”
“எதப் புரிஞ்சிக்கனும்ன்னு சொல்றிங்க.. நீங்க சொல்லாமலே ஶ்ரீஜாவ தான் நீங்க காதலிக்குறிங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. அதோட என்ன கல்யாணம் பன்னதும் என் பேருல இருக்குற சொத்துக்காகத் தான்னு புரிஞ்சிக்கிட்டேன்.. வேற என்ன புரிஞ்சிக்கனும்”
அவள் சண்டைக் கோழியாக சிலிர்த்து எழுந்துக் கேட்டாள்.
அவளை இடப்புருவம் உயர்த்தி மெச்சுதலாகப் பார்த்தவன்,
“ஆஹாஆஆன்…. நீங்க ரொம்ப அறிவாளி தான் ஒத்துக்குறேன்.. இப்போ படுங்க எனக்கு தூக்கம் வருது”
அவன் கூறி விட்டுச் சென்று கட்டிலில் படுக்க இவள் தான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்துப் பார்த்தாள்.
“இவருக்கு என்னாச்சு புரியாத மாதிரியே பேசிக்கிட்டிருக்காரு.. தெளிவாத் தான் பேசினா என்னவாம்”
மனதுக்குள் சலித்துக் கொண்டவள் அமைதியாக படுத்தாள்.
இறுதி வரை ஶ்ரீஜா என்ன நினைத்திருப்பாள் என அறிந்துக் கொள்ளவேயில்லை..!!
****
காலையில் என்றும் போல் அவனே ஷூட்டிங் ஸ்போட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றான்.
அன்று ஒரு ரொமேன்ஸ் பாடல் காட்சி படம் பிடிக்க இருந்தது.
அதுவும் மழையில் நனைவது போல் இருந்தது அக்காட்சி.
நேத்ரா அங்கு தர்ஷனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளது எண்ணமோ காலையில் தேவகியுடன் அழைப்பேசியில் பேசியதே ஓடிக் கொண்டிருந்தது.
“அத்த எதுக்கு என்கிட்ட சொல்லாம விட்டிங்க”
அழைப்பு மறுபக்கத்தில் ஏற்கப்பட்டதும் இவள் கேட்க.
“எத கண்ணு சொல்லாம விட்டேன்”
அவர் அப்பாவியாக விழித்தார்.
“வேற எத அவரோட பொறந்த நாளத் தான்”
“உனக்கு முன்னாடியே தெரியும்ன்னுல நா நெனச்சேன்”
அவர் கூற இவள் தலை மேல் கை வைத்தாள்.
“அது.. அத்த”
இவள் தயக்கமாக இழுத்தாள்.
“அப்போ அவனோட பொறந்த நாளு எதுன்னு கூட உனக்குத் தெரியாதா கண்ணு”
அவரது குரலில் கவலை.
“இல்ல அத்த அது நா”
என இவள் தயக்கமாக ஏதோ கூற வர கையில் இருந்து அழைப்பேசி பறிக்கப்பட்டது.
முன்னே அக்ஷரன் தான் அழைப்பேசியை பறித்திருந்தான்.
இவள் அவனைக் கேள்வியாகப் பார்க்க அவளை சாட்டை செய்தவன்.
“ம்ம்மா அவ ஒன்னும் மறக்கல்ல.. நேத்து நைட் பெரிய கிஃப்ட் ஒன்னு கொடுத்தா.. நீ தான் அங்க இருந்து விஷ் மட்டும் பன்னின எப்போ கிஃப்ட் கொடுப்ப”
இவன் தாயிடம் சாமர்த்தியமாக அவளைக் காப்பாற்றி விட்டு தாயையே குற்றம் சாட்டினான்.
இவள் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்பொழுது அத்தைக் கேட்ட கேள்விக்கு ஆம் என்று கூறுவதா அல்லது இல்லை என்று கூறுவதா எனத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் நேரம் அவளவன் காப்பாற்றி விட்டானே..!!
இது சிறு விடயம் தான் ஆனால் ஏனோ மனதைப் பிசைந்தது.
சிறு விடயம் என்றாலும் தன் தாயிடம் கூட அவளை விட்டுக் கொடுக்கவில்லையே..!!
ஆயிரம் அன்பு வார்த்தை பேசா விட்டாலும்.. ஒன்றிரண்டு செயலால் உணர்த்தப்படுகின்றதல்லவா இவனது அன்பின் அளவு..!!
உணர்ந்துக் கொள்வாளா என்பது தான் கேள்வியே..?!
அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவள் தர்ஷன் பேசுவது கேட்கவில்லை அவளுக்கு அருகில் வந்தவன்,
“ஹேய் என்ன யோசிச்சிட்டிருக்க”
அவன் அருகில் வந்து பேசியதும் தான் தன்னிலை அடைந்தவள் அவனைப் பார்த்தாள்.
“என்ன கனவா”
அவன் நக்கலாகக் கேட்க இவள் அசடுவழிய சிரித்தாள்.
“ஓகே ஓகே புருஷன் நினைப்பாவே சுத்து.. இந்த ஸ்க்ரிப்ட்ல இருக்குறத அப்பிடியே ஹீரோயின்கிட்ட சொல்லிக் கொடு இந்த தடவையாச்சும் சொதப்பாம பன்ன சொல்லு”
அவளிடம் நீட்ட தலையசைத்துக் கொண்டு பெற்றுக் கொண்டவள்.
அப்படத்தின் நாயகியிடம் சென்றாள்.
அவளோ என்றும் போல் தெனாவட்டாக அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
இவள் அருகில் போய் நிற்க இவளைத் திமிராகப் பார்த்தாள் என்றும் போல்.
“என்ன”
திமிராகத் தான் பேச்சும் இருந்தது.
அதை எல்லாம் பார்த்தால் தொழில் செய்ய முடியாது பொறுமையாக இரு என தர்ஷன் முன்னாடியே கூறி விட்டான்.
இல்லை என்றாலும் நேத்ரா பொறுமையுடன் போட்டி போடுமளவு பொறுமையுடயவள் ஆயிற்றே.
“இல்ல மேம் இந்த சீன் தான் இன்னைக்கு”
எனக் கூறி அவள் நடிக்க வேண்டிய முறையை எடுத்துக் கூற அலட்சியமாகத் தலையைசைத்துக் கேட்டுக் கொண்டாள் அப்பட நாயகி.
சிறிது நேரத்தில் அப்பாடல் காட்சி படம் பிடிக்க ஆரம்பித்தது.
நேத்ரா அங்கு நின்றுக் கொண்டிருக்க..
அந்த காட்சியில் மழை பொழிய வைப்பதற்காக வேண்டி தண்ணீரை மேல் இருந்து கீழே தெளித்துக் கொண்டிருந்தனர்.
நேத்ரா அருகில் இருப்பதால் தவறுதலாக அவளது மேல் நீர் தெளிக்கப்பட்டது.
“ஐயோ கடவுளே துணி நனைஞ்சிருச்சே”.
தனக்குள் நினைத்துக் கொண்டவள் எதுவும் செய்ய முடியாத நிலையில் தர்ஷனிடம் சென்றாள்.
“ என்ன இது கோலம்”
நீரில் நனைந்திருப்பவளைப் பார்த்துக் கேட்டான்.
“இல்ல தண்ணி தான்.. ”
அணிந்திருந்த ஆடையை உதறினாள்.
“ஓகே அங்க ரூம்ல டவல் இருக்கும் போய் துடச்சிக்கிட்டு வா”
அவன் கூற தலையசைத்தவள் அந்த அறைக்குச் சென்றாள்.
அவள் அறைக்குள் சென்று டவலால் துடைத்துக் கொண்டிருக்க கதவுத் தட்டப்பட்டது.
“நேத்ரா நா தான்.. நீ ஸ்க்ரிப்ட் பேப்பர கொண்டு வந்து இருக்கல்ல அத கொஞ்சம் கொடு”
தர்ஷன் வெளியில் இருந்து கூற கதவைத் திறந்தவள்.
“இருங்க இங்க தான் வெச்சேன்”
எனக் கூறி அங்கிருந்த மேசையைப் பார்க்க அது அங்கு இருக்கவில்லை.
“இங்க தான் வெச்சேன்”
அவள் கூறிக் கொண்டு தேட அது இருக்கவில்லை.
“நல்லா பாரு இருக்கும்”
தர்ஷன் கூற அவள் தேடினாள்.
தர்ஷனும் தாமதமாகுவதை எண்ணி உள்ளே வந்து தேடினான்.
அது கட்டிலுக்குக் கீழ் விழுந்திருந்தது.
நேத்ரா அதை எடுத்து தர்ஷனிடம் குடுக்க அதைப் பெற்றுக் கொண்டு அவன் திரும்பவும் கதவு மூடப்பட்டது.
“என்ன டோர் அட்டோமெடிக்கா மூடிப்படுது”
எனக் கூறியவன்.
“ஹெலோ உள்ள நாங்க இருக்கோம் கதவத் திறங்க”
அவன் கதவைத் தட்டினான்.
வெளியில் இருந்து யாரோ கதவை லாக் பன்னி விட்டுச் சென்றிருந்தனர்.
“என்னாச்சு”
நேத்ரா பதட்டமாகக் கேட்டாள்.
“பயப்டாதே.. உள்ள யாரும் இல்லன்னு நெனச்சிட்டு யாரோ கதவ லாக் பன்னிட்டு போய் இருக்காங்க”
தர்ஷன் கூறி விட்டு அழைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்துக் கூற அடுத்த நொடி கதவு திறக்கப்பட்டது.
வெளியே வந்து பார்க்க ஒட்டுமொத்த படக்குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர்.
இவர்கள் இருவரும் அவர்களைப் புரியாமல்ப் பார்த்தனர்.
“தர்ஷன் ஸ்க்ரிப்ட்ட கேட்டு எவ்ளோ நேரமாச்சு”
அவனது தந்தையும் படத்தின் இயக்குனருமான தயாளனர் உச்சதானியில் கத்திக் கேட்டார்.
“என்கிட்ட தான் இருக்கு”
தர்ஷன் நீட்டினான்.
“ரெண்டு பேரும் உள்ள போய் என்ன பன்னிட்டிருந்திங்க”
அந்த படத்தின் நாயகி இவர்களை சந்தேகமாகப் பார்த்துக் கொண்டுக் கேட்டாள்.
“அதானே.. ரெண்டு பேரும் மட்டும் உள்ள போய் என்ன பன்னிட்டிருந்திங்க”
யாரென்றுத் தெரியவில்லை குரல் ஒன்று வர நேத்ரா திகைத்தாள்.
இவ்வளவு நேரமும் அதைப் பற்றி யோசிக்கவில்லையே.
தப்பு இருந்தால் தானே யோசிக்க வேண்டும்..!!
“யாரு கண்டா என்ன பன்னிட்டிருந்தாங்களோ..”
கேலியாக இன்னொரு குரல் வந்தது.
“கண்ணால பார்த்தது போல இப்பிடி பேசாதிங்க சொல்லிட்டேன்”
தர்ஷன் கொதித்துப் போய் கத்தினான் அங்கிருந்தவர்களிடம்.
நேத்ராக்கு கண்கள் கலங்கியது.
கூட்டத்தைக் கண்ணில் நீர் மல்கப் பார்த்தவளது விழியோ ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது.
அங்கு மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல அவளது கணவன் அக்ஷரன் தான்.
அவனைக் கண்ட அடுத்த நொடி ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.
அவன் அவளை அணைக்கவில்லை ஆனால் விலக்கினான்.
கலங்கியக் கண்களால் அவனை ஏறிட்டுப் பார்த்தவள் அவனது ருத்ரமூர்த்தி அவதாரத்தில் தானாக இரண்டடி பின்னால் நகர்ந்து கலக்கமாக அவனைப் பார்த்தாள்..
*****
தொடரும்…❤
💜அஷு💜