அத்தியாயம் -39

“என்ன விதுரன்.. ஏன் டல்லாயிருக்கே?”-னு கேட்டான் ப்ரதீப். “நான் அவளுக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாதவன் ப்ரதீப். அவ மனசுலே இவ்வளோ அன்பு, அக்கறையிருந்தப்போ நான் எவ்வளோ ஹர்ட் பண்ணி இருக்கேன். சே… என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு”-னு நொந்துக் கிட்டான். “சரி.. விடு… இப்போ புரிஞ்சுக்கிட்டே இல்லே? அவ எதிர்பார்த்த அன்பை இப்போ குடு.. வேறே எப்போவும் விட இப்போதான் அவளுக்கு அது தேவை… அவளை பழைய ஸ்டேஜுக்கு கூட்டிட்டு வரணும். இதுவும் ஒரு மேஜர் சர்ஜரி. ரெகவரிக்கு நிறைய அன்பும் சப்போர்ட்டும் தேவை”-னு சொல்லவும் விதுரனும் ஆமோதிச்சான்.

அப்போலே இருந்து விதுரன் 24 மணிநேரமும் மதுரியா கூடவே இருந்தான். கண்ணுலே வைச்சுப் பார்த்துக்கிட்டான். மதுரியாவுக்கும் அவ்வளோ நாள் மனசுலே அழுத்தினது வெளியே போனது போல இருக்கவும், எந்த வித உறுத்தலும் இல்லாம அவன் அன்பை, உதவியை ஏத்துக்க முடிஞ்சுது. அடுத்த நாள் காலையிலே வலியோட கண்ணு முழிச்சா மதுரியா. “மது… எவ்வளோ வலிச்சாலும் கொஞ்சம் கூட அசையக் கூடாது-னு சொல்லி இருக்காங்கடா.. ப்ளீஸ்.. இதோ.. இன்னும் கொஞ்ச நேரம் தான்… டாக்டர் வந்துடுவார். ஓகே?”-னு அவ தலையை தடவினான் விதுரன். “முடியலே விது.. ரொம்ப வலிக்குது. ம்மா..”-னு வலியிலே கதறினா. விதுரனுக்கு அதை கண் கொண்டுப் பார்க்கவே முடியலே. ‘என்னடா பண்றது?’-னு யோசிக்கும் போதே டாக்டர் வந்தார். “மதுரியா எப்படி இருக்கீங்க? கொஞ்சம் செக் பண்ணலாமா?”-னு கேட்டு பரிசோதிச்சார். “விதுரன் காயம் ஆர ஆரம்பிச்சிருக்கு… நாளைக்குத் தான் மூவ்மெண்ட் செக் பண்ண முடியும். இன்னும் அனீஸ்தீஷியா எஃபெக்ட் ஃபுல்லா போகலே. ஸோ.. கொஞ்சம் கூட வெயிட் பண்ணுங்க.. வலிக்கு பெயின் கில்லர் போட சொல்றேன்” சொல்லிட்டுப் போயிட்டார்.

மதுரியா கண்ணுலே கலக்கம் தெரிஞ்சுது. “விது… நான் திரும்பவும் எந்திரிச்சு நடப்பேனா?”-னு பயத்தோட கேட்டா. “மது… பாசிடிவா திங்க் பண்ணு.. நீ நடப்பே-னு நீ முதல்லே நம்பணும்.. டவுட்டே வேண்டாம். கண்டிப்பா நடப்பே.. ஒரே மாசத்துலே யூ வில் பி பேக் ஆன் யுவர் ஃபீட்… சரியா?”-னு கேட்டான் விதுரன். அவன் வார்த்தைகள் யானையளவு பலம் குடுத்துச்சு மதுரியாவுக்கு. ஆனாலும் பரிசோதனை பண்ணப் போறது நினைச்சு அன்னிக்கு ராத்திரி ரெண்டுப் பேருமே தூங்கலே. 

அடுத்த நாள் காலையிலே டாக்டர் பரிசோதிக்க வந்தவர், “ரியா.. ஃபர்ஸ்ட் அஃப் ஆல் ரிலேக்ஸ்.. யூ ஆர் ஆல்ரைட்.. மூச்சை இழுத்து விட்டு அமைதியா நான் சொல்றத செய்யுங்க.. சிலது முதல் முறையிலே செய்ய முடியாம போகலாம். பட் டிரை அகெய்ன்.. உங்க ஹெட்டை கொஞ்சம் ரெய்ஸ் பண்ணி வைச்சுக்கிறேன். ஆரம்பிக்கலாமா?”-னு கேட்டார். “விது… என் கிட்ட உட்காருங்க ப்ளீஸ்”-னு கூப்பிடவும், போய் பக்கத்துலே உட்கார்ந்தான். அவன் வயித்துலே சின்ன குழந்தை மாதிரி முகம் புதைச்சவ, “நான் பார்க்கலே… நான் எல்லாம் செய்யறேன்.. நீங்களே பாருங்க”-னு சொல்லிட்டா. “நோ ப்ராப்ளம் விதுரன். நீங்களே பாருங்க.. ரியா.. மூவ் யுவர் ரைட் லெக்.. கொஞ்சமா உங்க இடது முட்டியை மடக்கி நீட்டுங்க. உங்க வலது பாதத்தை அசைங்க. அப்புறம் இடதுக்கால் விரலை அசைங்க… லாஸ்டா, ஒரு சைட்லே திரும்பி படுக்க டிரை பண்ணுங்க”-னு சொல்லவும் விதுரன் பக்கம் திரும்பினா. “இனஃப்… ரிலேக்ஸ்”-னு சொன்னார் டாக்டர்.

கொஞ்ச நேரத்துலே அவ நிமிரவே இல்லைன்னதும், “நிமிர்ந்து பார் மது. முடிஞ்சுதுப் பார் எல்லாம்”-னு ஒரு சிரிப்போட சொன்னான் விதுரன். “என்னாச்சு? எல்லாம் செஞ்சேனா? அசையுதா?”-னு கரகரத்த குரல்லே கேட்டா. “ம்ம்ம்… சூப்பரா பண்ணே.. நீயே தான் அசைச்சு பாரேன்”-னு மேலும் சிரிக்கவும், தன் காலை தானே அசைச்சு பார்த்தவ முகத்துலே அவ்வளோ பிரசன்னம். “ப்ரில்லியண்ட் ரியா… யூ ஆர் 100% ஓகே. அடுத்த 15 நாள் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட். ரெண்டு நாள்லே கொஞ்சம் கொஞ்சமா எக்சர்சைஸ், வாக்கிங் எல்லாம் ஸ்டார்ட் பண்ணலாம். இன்னொரு 24 மணிநேரம் அப்சர்வேஷன்க்கு அப்புறம் 2 நாள்-ல வீட்டுக்கு போகலாம்… டேக் கேர்”-னு சொல்லிட்டு போகவும், வேதம்-நித்தியம் ரெண்டு குடும்பங்களுக்கும் அவ்வளோ சந்தோஷம். 

விவானும் நிகேஷும், “மது… மது”-னு தினமும் வந்து பார்க்கவும் அவளுக்கு உற்சாகமா இருந்துச்சு. மருத்துவமனையில இருந்து கிளம்பற அன்னிக்கு சுபத்ரா எவ்வளோ சொல்லியும், விதுரன் அவன் கூட்டிட்டு போய் அவனே பார்த்துக்கிறேன்-னு சொல்லிட்டான். அதுலே ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் எல்லாருக்குமே கொஞ்சம் யோசனைதான். விதுரனுக்கு ஒரு பொண்ணு அதுவும் பேஷண்டை பார்த்துக்க தெரியுமான்னும், அதே சமயம் அவனோட முன்கோபத்தினால அவளை திட்டிடுவானோன்னும் ஒரு பயம்.

ஆனா எல்லாரோட ஆச்சர்யத்துக்கு, அவளை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டான். மதுரியாவை ‘பெட்-ரெஸ்ட்’லே வைச்சு பார்த்துக்கறதும் அவ்வளோ சுலபமா இருக்கலே. அவ குளியல், உடை, சாப்பாடு, இயற்கையழைப்பு-னு சர்வமும் அவன் தான் பண்ணான். மதுரியா நிறைய முரண்டுப் பண்ணா. அவளுக்கு அவன்கிட்ட செய்ய வைச்சுக்கறதுலே கூச்சம், சங்கடம் எல்லாம் இருந்துச்சு. ஆனாலும் விடாப்பிடியா செஞ்சான். அவன் முகத்துலே கொஞ்சம் கூட அருவறுப்போ அசூயையோ இல்லாதது அவளுக்கு குற்ற உணர்வா இருந்துச்சு. அவனை முழுசா புரிஞ்சுக்கற நாளும் வந்துச்சு. 

வீட்டுக்கு வந்த மூணாம் நாள் ஓடிப் போன நிலையிலே, அன்னிக்கு ராத்திரி படுக்கையிலே படுத்து சத்தமில்லாம முனுமுனு-னு அழுதா மதுரியா. அந்த சத்தத்திலே எந்திரிச்சான் விதுரன். “மது… என்னம்மா? ஏன் அழறே? தூங்கலியா?”-னு கேட்கவும், மூக்கை உறிஞ்சுகிட்டே, “சங்கரி அம்மாவையோ இல்லே கிருத்திகா அக்காவையோ கூப்பிடறீங்களா ப்ளீஸ்?”-னு கேட்டா. உடனே லைட்டை போடவும், “மணி ரெண்டுடா.. இந்நேரம் எப்படி? என்னாச்சு மது?”-னு கேட்டான். “இல்லை… இது.. யூ வில் நாட் அண்டர்ஸ்டாண்ட்”-னு அவன் முகத்தை பார்க்காம பேசினா. “என்னாச்சு மது? உடம்புக்கு என்ன பண்ணுது?”-னு பதறவும், “இல்லே… பயப்பட ஒண்ணுமில்லே… ஆனா அவங்களை கூப்பிடுங்க ப்ளீஸ்”-னு ரெஸ்ட்லெஸ் ஆனா.

விதுரன் சலிப்படைஞ்சு வாயை குவிச்சு ஊதி பொறுமையை இழுத்துப் பிடிச்சுக்கிட்டான். அப்புறம் அவ பக்கத்திலே போய் அவ கையை பிடிச்சுட்டு, “என்னடா பிரச்சினை? திடீர்-னு விலகிப் போறே. திடீர்-னு சரியாகறே. இப்போ என்ன வேணும்?”-னு ஆழமான பார்வையை மதுரியா மேலே வைச்சு கேட்டான். “அது… வந்து.. எனக்கு பீரியட்ஸ்.. கொஞ்சம் ஹெல்ப் வேணும். அல்ரெடி நிறைய பண்ணிட்டீங்க”-னு இழுத்தா. “காட்.. இவ்வளோதானா? என்னவோ ஏதோ-னு பயந்துட்டேன். மது.. நமக்குள்ளே என்னடி நிறைய கம்மின்னு? ஒரு வேளை எனக்கு இப்படி ஆனா நீ செய்ய மாட்டியா? உன் மனசுலே கையை வைச்சு சொல்லு நமக்குள்ளே நட்பை தாண்டி எதுவும் இல்லே-னு. என்னைத் தவிர வேறே யார் செஞ்சாலும் உன்னால ஏத்துக்க முடியாது! உனக்கு நல்லா தெரியும்.. நான் உன்னை எவ்வளோ விரும்பறேன்-னு. அப்புறம் என்ன?”-னு கேட்டான் விதுரன். “தெரியலே விது.. புத்திக்குப் புரிஞ்சாலும் மனசுலே ஒரு வகையான படபடப்பு, இன்செக்யூரிடி… என்னை இன்னொரு வாட்டி விட்டுட்டுப் போனா வலி கம்மியா இருக்கற மாதிரி பார்த்துக்கணும்-னு தோணுது”-னு சொல்லவும் விதுரனுக்கு ஆயாசமா இருந்துச்சு.

“மது.. என் மேலே நம்பிக்கையில்லேன்னு சண்டை போட்டே தானே? அப்புறம் ஏன் நான் அன்னிக்கு சுவாதிக் கிட்டே பேசினதைப் பத்தி ஒரு விவரமும் கேட்கலே? ஏன் திரும்ப அவ பின்னாடி போயிடுவேனோ அப்படீ-னு டவுட் வரலே? அப்புறம் நான் வர்க் விஷயமா பொண்ணுங்க கூட பேசும் போது நீ அவங்கள்லாம் யார் என்ன-னு நோண்டலியே. ஏன்? ஏன்னா உன் மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. ஆனா நீ அதை உணரலே. ஆமா சர்ஜரி முடிஞ்சு சுபாம்மா கூட்டிட்டு போறேன்-னு சொன்னப்போ நான் மறுத்தேன். உனக்கு இங்கே இருக்கறதை விட அங்கே கம்ஃபர்டபிள்-னு தோணியிருந்தா நீயே மறுத்திருப்பியே.. ஏன் மறுக்கலே? ஏன் மது? உன் மாற்றத்தை நீயே ரெஸிஸ்ட் பண்றே? நான் உன்னை விட்டுட்டுப் போனப்போ உன் வேல்யூ எனக்கு தெரியலே.. இப்போ அப்படி இல்லே மது. ப்ளீஸ்.. என்னை நம்பு-னு சொல்லலே.. எல்லாத்தையும் வர வாக்குல ஏத்துக்கோன்னு சொல்றேன்.. நீ என்கிட்ட உரிமை எடுத்துக்கறதுனால உன் விருப்பம் இல்லாம உன்கிட்ட புருஷன்கிற உரிமையை நான் எடுத்துக்க மாட்டேன். அப்புறம் ஒரு வேளை நான் வேண்டா வெறுப்பா எல்லாம் செய்யறேனோ-னு நினைச்சேன்னா, ரொம்ப விரும்பித் தான் செய்யறேன். நீ எனக்கு குடுத்த புது லைஃபுக்கு முன்னாடி நான் செய்யறது ஒண்ணுமே இல்லை.. இதுக்கும் மேலே எப்படி சொல்றது-னு தெரியலே”-னு கையை விரிச்சான்.

சில நொடிகள் அமைதிக்கு அப்புறம், “என் வார்ட்ரோப்-லே மூணாவது ஷெல்ஃப்லே ரைட் கார்னர்லே வயலட் கலர் பேக் இருக்கு… அதைக் கொண்டு வாங்க… அப்புறம் டாய்லெட்டுக்கு போகணும்”-னு மதுரியா சொல்லவும், மென்சிரிப்போட அவ சொன்னதை செஞ்சான். பூ மாதிரி கையாண்டான் அவளை அந்த நொடி. ஒரு ஆணுக்கு தெரியக் கூடாத ரகசியங்கள்லே இதுவும் ஒண்ணு-னு உலகம் நம்புது. ஆனா தேவை-னு வரும் போது கத்துக்கறதிலேயோ இல்லே உதவறதிலேயோ தப்பேக் கிடையாது. அந்த நாளுக்கு அப்புறம் அவங்க உறவுலே நிறைய மாற்றம். நிறையா பேசினாங்க.. நிறைய பகிர்ந்துக்கிட்டாங்க. விருப்பு வெறுப்பு, பிடிச்சுது பிடிக்காதது பத்தியெல்லாம் பேசியிருந்தாலும், திரும்பவும் அதையெல்லாம் பகிர்ந்திக்கிறது அழகோட இருந்துச்சு. கேட்ட கேள்விக்கு பதில்னு போய் சகஜமா பேசினாங்க. இப்படியே நாளும் வேகமா போச்சு.

ரெண்டு வாரம் போன நிலையிலே, மதுரியா நடக்க ஆரம்பிச்சா. வீட்டுக்குள்ளே அதுவும் மாடியிலே மட்டும். இன்னும் படியிறங்க ஆரம்பிக்கலே. ஆனா படிப்பைத் தள்ளி வைக்க வேண்டாம்-னு டாக்டர் ப்ரேம்நாத் சொன்னதனாலயும், ஓரளவு தேறி வர்றதாலேயும், வீட்டுலே இருந்தேப் படிக்க ஆரம்பிச்சா. விதுரனும் வீட்டுலே இருந்தே வர்க் பண்ண ஆரம்பிச்சான். “மதுக்குட்டி.. சாப்பிடலாமா?”-னு கேட்டுட்டே ரூமுக்குள்ளே சாப்பாட்டுத் தட்டோட உள்ளே வரும் போது யோசனையிலே இருந்தா மதுரியா. “மது.. மது..”-னு உலுக்கவும், “சொல்லுங்க விது.. என்னாச்சு?”-னு கேட்டா. “என்னாச்சா? சாப்பிடலாமா?”-னு கேட்டேன். “ஆனா அப்படி என்னடா யோசனை?”-னு அவளோட முன்னுச்சி முடியை காதுக்கு பின்னாடி ஒதுக்கினான். 

“இது ஒரு கேஸ் ஸ்டடி. லண்டன்லே நடந்தது.. இது அப்படியே பாட்டியோட ஹிஸ்டரியோட ஒத்துப் போகுது.. சர்ஜரி பண்ணி சக்சஸ்ஃபுல்லா ப்ளாக் ரிமூவ் பண்ணி இருக்காங்க… அதான் யோசனை”-னு சொன்னா. “வாவ்… செம்ம மது… அப்போ வல்லி பாட்டிக்கும் டிரை பண்ணலாம் தானே?”-னு அவனும் சந்தோஷமா கேட்கவும், “ம்ம்ம்… ஒரே வித்தியாசம், அந்த லேடிக்கு பாட்டியை விட வயசு கம்மி.. ஸ்டில் கேஸை பரத்தப்பாவுக்கு அனுப்பி டாக்டர் ஆகாஷ் கிட்டப் பேச சொல்றேன்.. அப்புறம் கடவுள் விட்ட வழி”-னு மதுரியா சொல்லும் போதே ரூம் டோர் தட்டினாங்க.

வந்தவங்களை பார்த்து சந்தோஷமானா மதுரியா. “ஹேய்.. அகல்.. ரீனா வாங்க….” அப்படீ-னு கூப்பிட்டா. அப்புறம் அவங்கக் கிட்டே ஜாலியா பேசும் போதே மதுரியாவும் சாப்பிட்டா. அவங்க ரெண்டுப் பேருக்கும் காஃபி வந்துச்சு. கொஞ்ச நேரம் பேசிட்டு, “எனக்கொரு கால் இருக்கு”-னு போனான் விதுரன். “ரியா, எனக்கு ஒரு அலயன்ஸ் பார்த்து ஃபைனலைஸ் ஆகப்போகுது”-னு அகல்யா சொல்லவும், “ஹேய்.. அகல்.. கங்கிராட்ஸ்… மாப்பிள்ளை என்ன பண்றார்?”-னு சந்தோஷமா கேட்டா. “ம்ம்ம்.. ஒரு கன்சல்டன்ஸி கம்பெனி வைச்சிருக்கார்.. தூரத்து சொந்தமாம்… அவங்களா வரவும் அப்பாவுக்கு பிடிச்சிருந்தது.. ம்ம்ம்… எனக்கும் பார்க்க பிடிச்சிருக்கு. அழகா இருக்கார்”-னு அகல்யா சொல்லவும், “பாம்பு கூடத்தான் பார்க்க அழகா இருக்கும்.. பேசிப் பார் முதல்லே.. அதுக்கு முன்னாடி ஆள் யார்னு சொல்லு”-னு அழுத்தமா கேட்டா ரீனா. “அதான்… உனக்கு ரொம்ப தெரிஞ்ச ஃபேமிலியாம். ரீனா சொன்னா. பேர் விக்னேஷ். விக்கி-னு கூப்பிடுவாங்க”-னு அகல்யா சொல்லவும், “எந்த விக்கி, விதுரன் ஃப்ரெண்ட் – விக்கி அசோஸியேட்ஸ் ஓனரா?”-னு கேட்கும் போது குரலே எழும்பலே மதுரியாவுக்கு. “நூத்துக்கு நூறு அவரே தான் டீ”-னு குதூகலிச்சா அகல்யா. 

“அகல், சரின்னு சொல்லிட்டியா? உனக்கு பிடிச்சிருக்கா?”-னு கேட்டா மதுரியா. “இன்னும் இல்லே ரியா.. மீட் பண்ணி பேசவே ரெண்டு வாரம் ஃப்ரீயா இல்லையாம். ஹீ சவுண்ட்ஸ் வெரி ஸ்டிரிக்ட். அதனால பேசிப் பார்க்காம எந்த டெசிஷனும் சொல்லமாட்டேன்-னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்”-னு அகல்யா சொன்ன போது தான் அப்பாடா-னு இருந்துச்சு மதுரியாவுக்கு. “தெளிவா பேசிட்டு, யோசிச்சு முடிவு பண்ணு. அவசரப்படாதே”-னு சொன்னா மதுரியா. “சரி டீ, நாங்க கிளம்பறோம். நீயும் ரெஸ்ட் எடு”-னு அகல்யா கிளம்பவும், “அகல் நீ போயிட்டே இரு.. இவ டாய்லெட் ஏதாவது போகணும்னா ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன்”-னு அனுப்பினா ரீனா. “ரீனா.. 4-வீக்ஸ்லே டிரெயினிங் திரும்ப ஜாயின் பண்ணணும்.. அதுக்குள்ளே இந்த சுவாதியை திரும்ப மீட் பண்ணணும்.. அவளை பிதுக்கற பிதுக்குலே, அவ உண்மை எல்லாம் கக்கணும்.. நமக்கு அதிகம் டைம் இல்லே.. எப்படியாவது அவ அட்ரஸ்சை கண்டுப்பிடி”-னு சொல்லவும் சரின்னு சொல்லிட்டுக் கிளம்பினா.

அதுக்கப்புறம் திரும்ப எந்நேரமும் யோசனையிலேயே இருந்தா மதுரியா. சிகிச்சையப்போ சொன்ன பயிற்சியெல்லாம் ஒரு வேகத்தோட செஞ்சு கிட்டத்தட்ட இயல்புநிலைக்கு வந்தா. ஒரு வழியா சுவாதியோட விலாசமும் தெரிஞ்சுது. இதோ ரீனாவும் அவளும் நாளைக்கு அங்கேப் போறாங்க. புத்தகத்தைத் திறந்து வைச்சு பலத்த யோசனையிலே இருந்தா மதுரியா. “மதும்மா புக்கை தலைகீழா வைச்சு படிக்கிறே”-னு விதுரன் சொல்லி சிரிக்கவும், படக்-னு நல்லாயிருந்த புத்தகத்தைத் தலைகீழா வைச்சா. “சே.. என்ன விது? எதுக்கு எடுத்தாலும் விளையாட்டு”-னு சலிச்சுக்கிட்டா. “என்னம்மா? அப்படியென்ன யோசனை?”னு அவ பக்கத்துலே உட்கார்ந்து, “உன் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டு போனதிலேயிருந்து ஒரே யோசனை தான். என்னாச்சு?”-னு கேட்டான். “ஏக்சுவலி நிறைய யோசனை… முதல்லே நாலு வார ரெஸ்ட்னால கோர்ஸ் டிலே ஆகுமா-னு யோசனை. நெக்ஸ்ட் மன்த் வைவா இருக்கு விது. அதுக்குப் போக முடியுமா-னு யோசனை.. நான் இன்னும் ப்ரேம் சார் கிட்டப் பேசலே. பேசணும். அப்புறம் பரத்தப்பாக் கிட்ட அந்த கேஸ் ஃபைல் குடுத்து டாக்டர் ஆகாஷ் கிட்ட பேச சொல்லி இருந்தேன். இன்னும் எந்த ரெஸ்பான்சும் இல்லை. எல்லாத்துக்கும் மேலே எனக்கு குழந்தையே பிறக்காதா விது?”-னு சோகமே உருவாக் கேட்டா.

மதுரியாவை தன் கைகளுக்குள்ளே கொண்டு வந்து, “அப்பப்பா, இந்த சின்ன மண்டைக்குள்ளே எவ்வளோ யோசனை? ஆனா இதுலே சொல்லாம விட்டதும் ஏதோ இருக்கும் போல”-னு சிரிச்சுட்டே கேட்கவும் அதிர்ந்து போனா மதுரியா. ஏன்னா அவ பொய் சொல்லலே. அதே சமயம் முழு உண்மையையும் சொல்லலே. “சரி, கண்ணை விரிக்காதே.. நாலு வாரத்துல கோர்ஸ் டிலே ஆகாது. பட் அப்படியே ஆனாலும் ஆறு மாசம் எக்ஸ்டென்ஷன்லே என்ன ஆயிட போகுது? யார்  கூட உன் போட்டி? இட்ஸ் ஓகே. அப்புறம் வைவா.. இன்னும் சாலிடா அஞ்சு வாரம் இருக்கு. அதுக்குள்ளே படிச்சிடலாம். டோண்ட் வொர்ரி. நான் குச்சி வைச்சுட்டு உன் பின்னாடி நிக்கறேன். நீ ஓபி அடிக்காம பார்த்துக்கறேன். சரியா? உன்னோட கடைசி கவலை.. குழந்தை வருதுன்னா விரும்பி ஏத்துக்க தயாரா மது?’-னு கேட்டான் விதுரன். “இது என்ன விது கேள்வி?”-னு ஆரம்பிக்கும் போதே, “பதில் வேண்டாம்… யோசி.. அப்புறம் சொல்லு. குழந்தைக்கான ஸ்டெப்ஸ் எடுத்தா அதை ஏத்துக்க தயாரா?”-னு கேட்டுட்டு நமுட்டு சிரிப்போட எந்திரிச்சு போனான். அர்த்தம் புரிஞ்சு விதிர்த்துப் போனா மதுரியா.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top