அத்தியாயம் -40

சுவாதியோட வீடு திருவேற்காடு பக்கத்துலே இருந்துச்சு. ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. மூணாவது மாடியிலே. சுவாதிக்கு எந்த வேலையும் கிடைக்காம, விக்கியையும் சந்திக்க முடியாம ஒரே கஷ்டம். அந்த சாதிக்-கும் காரியத்துலே குறியா இருக்கானே ஒழிய வேலையைப் பத்தி பேசமாட்டேங்கறான். அவ விதுரனும் இப்படி மாறிப் போயிடுவான்-னு நினைக்கலே. வேறே இடத்துலே வேலைக்கு அப்ளை பண்ணாலும் கிடைக்கலை. சம்பாதிச்ச காசை வைச்சு எத்தனை நாள் சாப்பிட முடியும்? ஊருக்கும் பணம் அனுப்பணும். என்ன பண்றது-னு யோசிக்கும் போதே வீட்டு அழைப்பு மணி அடிச்சுது. யார்-னு கதவை திறந்து பார்த்தவ அப்படியே அதிர்ச்சியிலே உறைஞ்சு நின்னா. “நீயா?”-னு முணுமுணுத்தா மதுரியாவையும் ரீனாவையும் பார்த்து. “என்ன விஷயம்?”-னு கடுக்னு கேட்டா சுவாதி. “ஏம்மா? வேலை குடுக்கறவங்க கிட்ட இப்படியா பேசுவாங்க?”-னு கேட்டா ரீனா. “வேலையா?”-னு சுவாதி இழுக்கவும், “ஆமா வேலை தான்?”-னு அவளைத் தள்ளிக்கிட்டு உள்ளே வந்து கதவை அடைச்சாங்க ரெண்டுப் பேரும்.

“எ.. என்ன.. ரவுடித்தனம் பண்றீங்களா? போ… போலீஸ் கூப்பிடுவேன்”-னு பயத்துலே உளறினா சுவாதி. “தாராளமா.. போலீஸ கூப்பிட்டா நீ தான் உள்ளே போவே. பரவாயில்லேன்னா தாராளமா கூப்பிடு”-னு மதுரியா தோளைக் குலுக்கினா. “நான் வந்தது பிசினஸ் டீல் பேச… எனக்கு நீ ஒரு வேலை செய்யணும். செஞ்சா கேட்கிற பணத்தை குடுக்கிறேன்”-னு சொன்னா மதுரியா. “இதோடா… நான் ஏன் உனக்கு வேலை செய்யணும்? உன் புருஷனை விட்டு போயிடு-னு கெஞ்ச வந்திருக்கியா? கால்லே வேணும்னா விழு”-னு சொல்லி முடிக்கறதுக்குள்ளே பளார்-னு ஒரு பேய் அறைவிட்டா மதுரியா. அடிச்ச வேகத்துலே சுருண்டு தரையிலே விழுந்தவளை, முடியை கொத்தாப் பிடிச்சுத் தூக்கினா ரீனா. 

“ஒழுங்கா பிசினஸ் டீல் பேசலாமா?”-னு மதுரியா இழுக்கவும், அடிக்கு பயந்து, “பே… பேசலாம்..”-னு திணறி தடுமாறி சொன்னா சுவாதி. “நீ எங்களுக்கு என்ன செய்யணும்-னு சொல்றதுக்கு முன்னாடி ஒரு முன்கதை சுருக்கம். எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரியும். இன்க்ளூடிங் உனக்கும் அந்த விக்கிக்கும் என்ன சம்பந்தம்கிற வரைக்கும். அதோட உனக்கு தெரியாததும் சிலது இருக்கு. விக்கிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு.. பொண்ணு வேறே யாருமில்லே… என் ஃப்ரெண்ட் தான்”-னு நிறுத்தினா.

சுவாதி ‘பே’-ன்னு நின்னா. “பொய்… நான் நம்பமாட்டேன்”னு அவ கத்தவும், “அட இரும்மா… இதுக்கே அலறினா எப்படி? முழுசா கேளு”-னு அதட்டலா சொன்னா ரீனா. “நாங்க சொல்றது உண்மை-னு நிரூபிக்க வரலே. அப்புறம் நீ என்ன முயற்சிப் பண்ணாலும் உனக்கு யாரும் வேலை தரப்போறதில்லை. ஏன்னா உன்னை செல்லாக் காசாக்க உன் லவர் உன்னை இந்த ஃபீல்ட்லே ப்ளேக்லிஸ்ட் பண்ணிட்டான். அது கூடத் தெரியாம நீ அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கே… தட்ஸ் பிட்டி”-னு மதுரியா சொல்லவும், சுவாதிக்கு தலை கிறுகிறு-னு சுத்திடுச்சு. அவங்க சொல்றதை நம்பவும் முடியலே. நம்பாமலும் இருக்க முடியலே. திரும்பவும், “நீங்க சொல்றதை நான் எப்படி நம்பறது?”-னு கேட்டா. “ரெஸ்யூம்லே அட்ரஸை பார்த்துட்டுத் தான் வந்தோம். வீடேறி பொய் சொல்லவா வருவோம்? நாங்க டீல் தான் பேச வந்தோம். நாங்க கேட்கிறதை நீ செஞ்சா, நீ கேட்கிற பணத்தை நாங்கக் குடுக்கிறோம்.. எங்களுக்கு விதுரனும் ப்ரதீப்பும் முக்கியம்”-னு ரீனாவுக்கு கண்ணை காமிச்சா மதுரியா.

“எவ்வளோ அமௌண்ட்? என்ன செய்யணும் நான்?”-னு நேரடியா விஷயத்துக்கு வந்தா சுவாதி. “நீ கேட்கிற பணம் கிடைக்கும். அதோட எந்த பிரச்சினையிலேயும் நீ இன்வால்வ் ஆக மாட்டே.. உனக்கு விக்கியை பத்தி என்னவெல்லாம் தெரியுமோ அதெல்லாம் சொல்லணும்”-னு கேட்டா மதுரியா. காசு வருது-னு தெரிஞ்ச உடனே யோசிக்காம விக்கியை காட்டிக் குடுத்தா சுவாதி. “விக்கி எந்த நாள்லேயும் உங்க ஹஸ்பெண்டை நண்பனா நினைச்சதும் இல்லே. பழகினதும் இல்லே. எப்போவும் பொறாமை தான். ஏன்-னு தெரியாது.. ரெண்டு வருஷம் முன்னாடி விக்கி அசோஸியேட்ஸ்லே வேலைக்கு சேர்ந்தேன். அப்போ தான் எனக்கும் விக்கிக்கும் பழக்கமாச்சு. ஒரு நாள் திடீர்னு விதுரனை இம்ப்ரெஸ் பண்ணி கைக்குள்ளே போட்டுக்கணும். நான் சொல்றது எல்லாம் செய்ய வைக்கணும். உங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வைக்கணும்னு சொன்னார். சரின்னு ஒத்துக்கிட்டுப் போனேன். எவ்வளவோ ஃப்ரெண்ட்லியா பேசியும் தொழில் ரீதியா ஒண்ணும் பண்ண முடியலே. விக்கிக்கு தோல்வியை ஒத்துக்க முடியலே. எப்படியாவது உங்களை பிரிக்க சொன்னார். நானும்… நீ.. நீங்க வந்த அன்னிக்கு கட்டிப்பிடிச்சு சீன் க்ரியேட் பண்ணேன். மேலே மேலே ஒட்டி சண்டை உண்டு பண்ணி, உங்க எங்கேஜ்மெண்ட் ப்ரேக் ஆச்சு”-னு நிறுத்தி அவ முகத்தை பார்த்தா.

மதுரியா முகம் கல்லு மாதிரி இருந்துச்சு. அவ ஒண்ணும் சொல்லலே-னு தெரிஞ்சதும், சுவாதியே தொடர்ந்தா. “அதுக்கப்புறம் கௌதம் குரூப் அறிவிப்பு வரவும், ஒரு போலி அறிவிப்பு க்ரியேட் பண்ணி விதுரனை அகலக்கால் வைக்க வைச்சாங்க. விதுரன் எவ்வளோ அமௌண்ட் போடறான், அந்த ப்ராஜெக்ட்லே என்னவெல்லாம் வேலை செய்யறான்-னு பார்த்து சொல்றதுதான் என் வேலை. உங்கக் கூட ப்ரேக்-அப் பண்ணப்புறம் என்ன டிரை பண்ணியும் அவர் என்னை லவ் பண்ணலே. அந்த கோபத்துலே நானுமெல்லாம் சொன்னேன். கடைசியிலே ப்ளான் படி பெரிய பள்ளத்துலே விதுரனை விழ வைச்சுட்டு நானும் வேலையை ரிசைன் பண்ணிட்டேன். ஆனா நாங்க யாருமே ஆறு மாசத்துலே நீங்க பழைய படி விதுரனை மாத்திடுவீங்கன்னு நினைக்கலே. அதை கேள்விப்பட்டுத் தான் மறுபடியும் என்னை அனுப்பினாங்க”-னு நிறுத்தினா சுவாதி. “ஆனா இதெல்லாம் ஏன்? விக்கிக்கு விதுரன் மேலே என்ன கோபம்?”னு மதுரியா கேட்கவும், “தெரியாது.. விக்கி சொன்னதில்லே. எனக்கும் அதை கேட்க தைரியம் வந்தது இல்லே. ஏன்னா விதுரன் பத்தி பேசினாலே விக்கிக்கு அவ்வளோ கோபம் வரும். கோபம் இல்லே… வெறின்னே சொல்லலாம். காரணம் தெரியாது. கூடவே சுத்தற அந்த ரிதேஷ்க்கு… அப்புறம் உங்க சீனியரோட பையன் அசோக்குக்கு தெரிஞ்சிருக்கலாம்”-னு சொன்னா சுவாதி.

சே… இவ்வளோ போராடியும் முக்கியக் காரணம் தெரியலியே-னு நினைச்சாங்க மதுரியாவும் ரீனாவும். “சரி.. அசோக் – விக்கி ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? அசோக் பத்தி என்ன தெரியும்?”-னு கேட்டா மதுரியா. “அசோக்கும் விக்கியும் கசின்ஸ். அது மட்டும் இல்லே, விக்கிக்கு விதுரன் மேலே இருக்கற அதே கோபம் அசோக்குக்கு ப்ரதீப் மேலே இருக்கு. ஆனா அவனால விக்கி அளவுக்கு எதையும் ப்ளான் பண்ணி எக்சிக்யூட் பண்ண முடிஞ்சது இல்லே. அவன் ஒரு வுமனைசர். லேடீஸ் அவனுக்கு ஒரு வீக்னெஸ். அதனாலேயே அவன் அதுலே கில்லாடியும் கூட”-னு சுவாதி சொன்னா. “ஆமா… இந்த இழவுக்கு நீ வேறே சர்டிஃபிகேட் குடுக்கறியா?”-னு மதுரியா அவள் மேல் சீறினாள். “இல்லை ரியா… ப்ரதீப்புக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்-னு எனக்கு தெரியாது. அவருக்கு அல்ரெடி மேரேஜ் ஆகி ப்ரேக் ஆனது உங்களுக்கு தெரியுமா?”-னு சுவாதி கேட்கவும், “ம்ம்ம்… தெரியும்”-னு சொன்ன மதுரியா கிட்ட ‘புதுசா என்ன சொல்லப் போறா?’-னு அலட்சியம் இருந்துச்சு. “அது ப்ரேக் ஆக காரணமே அசோக் தான். யூஎஸ்லே படிக்கறவ மனசை கலைச்சவன் அவன் தான்”-னு சுவாதி சொல்லவும் “என்ன சொல்றே?”ன்னு அதிர்ந்தா மதுரியா.

“ஆமா… அவ மனசை கலைச்சு தன்னை லவ் பண்ண வைச்சு அப்புறம் அந்த பொண்ணையே ஏமாத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டான்”-னு சொல்லவும் மதுரியாவும் ரீனாவும் பேயறைஞ்சது போல ஆயிட்டாங்க. “அசோக் வைஃப் யூஎஸ்லே இருக்கற நந்தினியா?”-னு கேட்டா ரீனா. “ஓ…நோ… சுவாதி.. எங்களுக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி கிடைக்குமா?”-னு கேட்டா மதுரியா. அப்புறம் தண்ணி குடிச்சப்புறம், “நீங்க கையும் களவுமா அவங்களை பிடிக்கலாம்… அடுத்த வாரம் அவ இந்தியா வர்றா”-னு சொன்னா சுவாதி. “இவ்வளோ விஷயம் உனக்கு எப்படி தெரியும்?”-னு கூர்மையா கேட்டா ரீனா. “அது… வந்து… விக்கிக்கு எங்க ரிலேஷன்ஷிப் வெளியே தெரியறதுலே எப்போவுமே இண்டரெஸ்ட் இல்லை சிஸ்டர்..”-னு சுவாதி சொல்லவும், “யாருக்கு யாரு டீ சிஸ்டர்? இன்னொரு வாட்டி அப்படி கூப்பிட்டேத் தாடையை பேத்துடுவேன். மூஞ்சியும் முகரையும் பார்..”-னு சிடுசிடுத்தா ரீனா. 

“வார்த்தையை அளந்து பேசுங்க.. என் ஹெல்ப்தான் உங்களுக்கு தேவை”-னு திமிராப் பேசினா சுவாதி. “அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நீ இன்னும் ஜெயிலுக்கு போகாம வெளியே இருக்கே.. எப்படி தெரியும் இவ்வளவு விஷயமும்?”-னு அழுத்தமா கேட்டா மதுரியா. “என் சேஃப்டிக்கும், விக்கி கிட்ட என் இடத்தை ஸ்டிராங் பண்ணிக்கவும் அந்த ரிதேஷ்க்கு குல்லா போட்டு தெரிஞ்சுக்கிட்டேன்”-னு சொன்னா சுவாதி.

“சரி… நாங்க கிளம்பறோம்”-னு கிளம்பினாங்க ரீனாவும் மதுரியாவும். “நான் இவ்வளவும் சொன்னதுக்கு என் பேமெண்ட் 25,000 ரூபாய்.. ரெண்டு நாள்லே டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க.. இல்லேன்னா உங்களுக்கு எல்லாம் தெரியும்-னு விக்கிக் கிட்ட போட்டு குடுத்துடுவேன்”-னு மிரட்டலா சொல்லவும் ரீனா ‘பக்’-னு சிரிச்சுட்டா. “நீ எந்த பக்கிக் கிட்ட சொன்னா எங்களுக்கு என்ன? உனக்கு 25 பைசா கூட கிடையாது.. போய் சொல்லு அவன் கிட்ட. காட்டிக் குடுத்தது நீ-னு தெரிஞ்சா உன்னை கொன்னுடுவான் முதல்ல”-னு சொன்னா மதுரியா. “அப்போ கேட்கிற பணத்தை குடுக்கறேன்-னு சொன்னீங்க?”-னு பயந்துப் போயிக் கேட்டா சுவாதி. 

“பொய் தான். எங்களை பார்த்தா உனக்கு அரிச்சந்திரினி மாதிரியா தெரியுது?”-னு கிண்டலா ரீனா கேட்கவும், “இங்கே பார்.. எங்களை எதிர்த்து நீ ஏதாவது செஞ்சே, இப்போதைக்கு இந்த இண்டஸ்டிரியிலே இருந்து தான் ப்ளேக்லிஸ்ட் செஞ்சேன்.. நீ எங்கப்பா, தாத்தா, மாமனாரை எல்லாம் என்ன-னு நினைச்சே? கொஞ்சம் இன்ஃப்ளூயன்ஷியல் தான் அவங்க. நஞ்சை நஞ்சால அடிக்கற விஷயம் தெரிஞ்சவங்க. நீ நினைக்கற அளவு விதுரனும் அவ்வளோ ஈஸி கிடையாது. உன்னை வார்ன் பண்றேன். இனி என் கண்ணுலே எங்கேயாவது பட்டே, ஜெயில்லே இருப்பே”-னு மதுரியா மிரட்டவும் உண்மையிலேயே சுவாதி மிரண்டு தான் போனா.

மதுரியாவை பொறுத்த வரைக்கும் அதோட சுவாதி கதை முடிஞ்சுது. அவ மனசு முழுக்க விதுரனும் ப்ரதீப்பும் தான் இருந்தாங்க. “ரியா, விதுரன் மேலே தப்பே இல்லே-னு தெரிஞ்சு போச்சு இல்லே? இப்போவாச்சும் உன் வரட்டுப் பிடிவாதத்தை விடக் கூடாதா?”-னு கேட்டா ரீனா. “என்ன தப்பில்லை? இப்படி எவனோ சொன்னான்னு எவ வேணா உள்ளே புகுந்து பிரிக்கற அளவுக்குத் தான் அவர் மனசுல எனக்கான இடமா? அப்படி இருந்தா தப்பில்லையா?”-னு மதுரியா கேட்டா. “ரியா.. அது முன்னாடி. இப்போ ரொம்பவே மாறியிருக்காரு. அது மட்டுமில்லே.. இனி அப்படி நடக்கவே நடக்காது. அது உனக்கும் தெரியும். சும்மா வீம்பு பிடிக்காதே”-னு கோபமா சொன்னா ரீனா. 

“அதை அப்புறம் பார்ப்போம். ஏன் ரீனா? அசோக் எவ்வளோ பெரிய துரோகம் பண்ணியிருக்கான். இது ப்ரதீப்புக்கு தெரிஞ்சா என்னவாகும்-னு டென்ஷன் இல்லையா?”-னு கேட்டா மதுரியா. “இல்லையே.. அதான் நானிருக்கேனே”-னு ரீனா சொல்லவும், “நீ இருந்தா? ஸோ?”-னு கேட்டா மதுரியா. “அது… அது… அப்படித்தான்.. போய் விதுரனை கேளு சொல்லுவார்”-னு அழகா கன்னம் சிவந்தா. மதுரியாவுக்கு புரிஞ்சும் புரியாமலும் இருந்துச்சு. மதுரியாவுக்கு ஒரே குழப்பம். அவளுக்கும் விதுரன் கூட இயல்பான வாழ்கை வாழணும்-னு தோணத்தான் செஞ்சுது. ஆனா எப்படி அடுத்தவளை உள்ளே விடலாம்ன்னு பிடிவாதமும் இருந்துச்சு. ஆனா இப்போ மன்னிக்கத் தயாரானதும் உண்மை. அதனால தான் போய் எப்படி சொல்றது-னு தயக்கம். அதே சமயம் தான் ரொம்ப சுயநலமா யோசிக்கிறோமோ? தன்னோட அகத்துக்கு விழுந்த அடியை சரி பண்ணப்புறம் இப்படி தோணறது தப்பா சரியா-னு நிறைய யோசிச்சா.

மதுரியா நிலைமை இப்படின்னா விதுரன் அன்னிக்கு குழந்தையை பத்தி பேசினதுலேயிருந்து அவன் மனசு அவன் கட்டுப்பாட்டுலியே இல்லை. எந்நேரமும் அவ நினைப்புத் தான். அதுலேயும் அந்த பேச்சுக்கு அப்புறம் செக்-அப்புக்கு போனப்போ, டாக்டர், “ஷீ ஈஸ் பர்ஃபெக்ட்லி நார்மல் விதுரன். காயம் கூட நல்லா ஆறிடுச்சு.. கட் பண்ணது ரொம்ப சின்னதுதான். ஆனா ஸ்பைன் மேலே பண்ணதால தான் ரெண்டு மூணு வாரம் டைம் கேட்டது… குட் லக்! வேறே ஏதாவது ப்ராப்ளம் வந்தா கூட்டிட்டு வாங்க”-னு சொல்லி அனுப்பவும் காதல் கனவுகள் தான். “ஏன்டீ இப்படி மனுஷனை போட்டுப் படுத்தறே? நான் சிவனே-னு தானே இருக்கேன்? சும்மா இல்லாம குழந்தை, கோட்டான்-னு பேசி அப்புறம் மறந்துட வேண்டியது”-னு தினப்படிக்கு அவளுக்கு அர்ச்சனை நடந்துச்சு. அப்படி இருக்கறப்போ தான் சுவாதி கிட்ட பேசிட்டு குழப்பத்தோட வீட்டுக்குள்ளே வந்தா மதுரியா. ரொம்பக் குழம்பியிருந்தா. அவளோட ‘டி அமோ’ ஓவியத்தை அப்பப்போ நின்னு பார்த்தா. அன்னிக்கு அலுவலகத்தில இருந்து வந்தவனுக்கு ரெண்டு கப் காஃபி, ரெண்டு டம்ளர் தண்ணி வந்துச்சு. குளிக்கற டவலுக்கு பதில் ஷார்ட்ஸ் வந்துச்சு. முதல்லே இவளுக்கு என்னாச்சு-னு நினைச்சவனுக்கு ஏதோ புரியவும், அவ மேலே பார்வை சுவாரசியமா தொடர்ந்துச்சு.

ராத்திரி சாப்பிடறப்போ எதுவும் ஊத்தாம வெள்ளை சாதம் சாப்பிடறவளை எல்லாரும் வித்தியாசமா பார்த்தாங்க. “ரியாம்மா.. என்னடா? எதுவும் ஊத்தாம சாப்பிடறே? எதுவும் பிடிக்கலியா?”-னு சங்கரி கேட்கவும் முழிச்சா மதுரியா. “அது.. அது.. வந்து… சங்கரிம்மா.. பசியில்லே.. அதான்”-னு சொல்லவும், “அது சரி போ.. ஆபரேஷன் முடிஞ்சு ஏறக் குறைய ஒரு மாசம் கழிச்சு இப்போ தான் பார்க்கிறா போல இருக்கே.. சாப்பிடணும் ரியா”-னு அழுத்தமா சொன்னாங்க நீலவேணி. விதுரன் தான் வந்த சிரிப்பை அடக்கறதுக்குள்ளே பாடுப்பட்டு போனான். அப்புறம் சாப்பிட்டதா பேர் பண்ணிட்டு ரூமுக்கு போய், கட்டில் சாய்மானத்துல கண்ணை மூடி சாய்ஞ்சா. “முடியாது… விவரம் தெரிஞ்சதும் வந்த இந்த அன்பு என் சுயநலம்.. இதை சொல்லி… நோ… தப்பு”-னு தப்பு தப்பா முடிவு பண்ணிட்டு உள்ளே இறுகிப் போனா. அதே நேரம் ரூமுக்குள்ளே வந்த விதுரன், அவளைப் பார்த்து “சரியான அழுத்தக்காரி..”-னு சொல்லிட்டே அவ காலைத் தூக்கி மடியிலே வைச்சு பிடிச்சுவிட ஆரம்பிச்சான். இன்னிக்கு அவ அலைச்சலுக்கு அது ரொம்ப இதமா இருக்கவும், கண்ணு தன்னை போல சொருகிடுச்சு. அதை உணர்ந்தவன் மெல்ல பேச்சு குடுத்தான். அவனுக்கு நல்லா தெரியுமே காலை பிடிச்சு விடற நேரம் தான் அவ பலவீனம்-னு.

“என்ன குழப்பம்?”-னு கேட்கவும் ஒண்ணுமில்லே-னு தலையை மட்டும் ஆட்டினா. “ம்ம்ஹூம்.. சரி.. இன்னிக்கு ஆபீசுலே எனக்கு நாள் நல்லாப் போச்சு..”-னு தொடங்கி அவன் கதையெல்லாம் சொன்னான். அவளும் உம் கொட்டினா. அப்புறம் டாக்டர் எல்லாம் நார்மல்-னு சொன்னதைப் பத்தி அளந்தான். கண்ணை மூடி கேட்டிருந்தவ “என்ன நார்மல் ஆகி என்ன யூஸ்? அதான் குழந்தை இல்லையே”-னு சொன்னா. “நான் கூட அன்னிக்கு ஒரு விளக்கம் கேட்டேன்… நீ இது வரைக்கும் ஒண்ணும் சொல்லலே?”-னு சொன்னான் விதுரன். “ம்ம்ம்… எனக்கும்.. நானும் தயார் தான்.. ஆனா ஒண்ணு.. எனக்கு குழந்தை பிறக்காது…  ரெண்டாவது சுவாதி விஷயத்துலே முழு தப்பும் உங்களோடது இல்லே-னு புரிஞ்சப்புறம், சரினு சொல்றது ரொம்ப தப்பா, சுயநலமா இருக்கு.. சே”-னு கண்ணை மூடிட்டு மனசிலே இருந்ததை எல்லாம் உளறினா. பேசி முடிச்சதும் தான், தான் என்ன பேசினோம்-னு உணர்ந்து கண்ணை படக்னு திறந்தவ இன்னும் அதிர்ந்தா.

விதுரனோட முகம் அவ்வளோ பக்கத்துல இருந்துச்சு. ரெண்டு பேரோட மூச்சுக் காத்தும் ரெண்டுப் பேர் மேலேயும் படற தூரம் தான். “நீ சொன்னது உண்மையா மதும்மா? நிஜமாவா? நீ என்னை மன்னிச்சுட்டியாம்மா?”-னு அவ கன்னத்தை கையிலே தாங்கி கேட்டான். “அ.. அது.. மன்னிப்பு-னு தெரியலே… ஆனா கடந்து போக முடியும்-னு தோணுது”-னு அவன் பார்வையை தவிர்த்து சொன்னவளை, நிமிர்த்தி, “யோசிச்சு சொல்லு.. சில வார்த்தைகளை திருப்பி எடுக்க முடியாது”-னு ஒத்த புருவம் தூக்கி சொல்லவும், அவன் பார்வை வீச்சு தாங்க முடியாம அவன் நெஞ்சுலேயே முகத்தை மறைச்சுக்கிட்டா. காதல் பிரவாகம் எடுத்து ஓட ஆரம்பிச்சுது. ஆனா விதுரன் கண்ணுலே இருந்த வேகம் கைகள்லே இருக்கலே. அவளை அவ்வளோ மென்மையா பூ போல கையாண்டான். ஒரு காதல் தாம்பத்யமா மாறுச்சு அந்தக் கணம்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top