அத்தியாயம் -43

ரீனா கண்ணுலே தண்ணி நின்னுடுச்சு. “போலாம் ரியா.. அவருக்கு கஷ்டம் வேண்டாம்”-னு கரக்கரத்தக் குரல்லே சொல்லவும், “கொஞ்சம் பொறுமையா இரு ரீனா… நீ நினைக்கறாப் போல எதுவும் நடக்காது”-னு நம்பிக்கையாச் சொன்னா மதுரியா. “உங்க முடிவை சொல்லி அவங்களை அனுப்புங்க ப்ரதீப்”-னு கேட்டா நந்தினி. “ச்சீ…வாயை மூடு… இனி ஒரு வார்த்தை பேசினே ஆத்திரம் தாங்காம உன்னை கொன்னுடப் போறேன். உன்னை ஒரு காலத்துலே உருகி விரும்பினேன்-னு நினைச்சா என் மேலேயே எனக்கு ஆத்திரம் வருது. எவ்வளோ நாள் உன் நினைப்புலே, இவளோட உண்மையான அன்பை புரிஞ்சுக்காம என் பின்னாடி சுத்த வைச்சிருக்கேன்-னு உனக்கு தெரியுமா? குற்றவுணர்ச்சியிலே வேகறேன் அப்போயிருந்து.. நீ எல்லாம் மனுஷி தானா? கல்யாணம் ஆகி மாமியார், மாமனார், புருஷன் எல்லாரும் இருக்கும் போதே இப்படிப் பேசறே? முடிவா சொல்றேன். இங்கே இருக்கறவங்க யாரும் இனிமேல் என் கண்ணுலே படக்கூடாது. ப்ரேம் அங்கிள்! உங்க பையனும் மருமகளும் செஞ்ச வேலைக்கு நம்ம குடும்ப நட்பு இனிமேல் தொடர்றது சாத்தியமே இல்லை. விதுர்! உன் சரி பாதியை கூட்டிட்டு காருக்கு வர்றதுக்கு உனக்கு மொத்தம் பத்து நிமிஷம் டைம்… அம்மாடீ! தியாகச் செம்மல்.. போலாமா?”-னு ரீனா கையை பிடிச்சு முரட்டுத்தனமா இழுத்துட்டுப் புறப்பட்டான்.

“மிஸஸ் நந்தினி, எல்லாரையும் உங்களைப் போலவே நல்லவங்களா நினைக்கக் கூடாது. எங்களை மாதிரி எல்லாம் கெட்டவங்களும் இருக்கோம்.. இனிமேல் யாராவது ஒருத்தருக்காவது ரெண்டுப் பேரும் உண்மையா இருக்கப் பாருங்க! அப்புறம் மேடம் வசுந்தரா தேவி! உங்க பையன் விதுவை கெடுக்கணும்-னு ஏவி விட்ட சுவாதி வேறே யாருமில்லே.. உங்க பையனோட கேர்ள் ஃப்ரெண்ட்… ரெண்டுக்கும் கட்டி வையுங்க. ஜாடிக்கேத்த மூடியாத் திரியட்டும்.. அப்புறம் உங்க பையனுக்கு பார்த்திருக்கீங்களே பொண்ணு? அகல்யா… என்னோட டியரெஸ்ட் ஃப்ரெண்ட் அவ. இப்படி ஒரு ஆள் கூட அவளுக்கு கல்யாணம் நடக்க நான் விட மாட்டேன்”-னு சொல்லிட்டு நேரா விக்கிகிட்ட போனா. அவன் முன்னாடி சொடக்கு போட்டு, “என்ன சொன்னே? இவளை மாதிரி ஒரு பொண்ணை கட்டிட்டு விது நாசமாத் தான் போவார்-னு தானே சொன்னே? கர்மா-னு ஒண்ணு இருக்கறது உண்மையானா, நீ சொன்னது உனக்கே நடக்கட்டும்”-னு சொல்லிட்டு போனா. “தயவு செஞ்சு இனிமேல் ப்ரதீப்-ரீனா லைஃப்லே வராதே”-னு நந்தினியை பார்த்து சொல்லிட்டுப் போனா மதுரியா.

விதுரன் அந்த மாதிரி சுவாதியும் மிரட்டப் போறானு ஒரு சிரிப்போட பார்க்கும் போதே, சுவாதியை திரும்பிக் கூட பார்க்காம போனா. விதுரனுக்கு பெருத்த ஏமாற்றம். கொஞ்சம் கடுப்பும் கூட. “என்னடா? நீ வர்றியா இல்லையா?”-னு சள்-னு விக்ரம் மேலே விழவும், “ம்ம்ம்..”-னு அவன் கூட கிளம்பினான் விக்ரம். விறு விறு-னு போன மதுரியா கார்லே ஏறாம கட்டிட வாசல்லேயே நின்னா. “என்ன??”-னு விதுரன் கேட்கவும், காரை காட்டினா. காருக்குள்ளே ப்ரதீப்பும் ரீனாவும் சண்டையும் சமாதானமுமா இருந்தாங்க. “அது சரி.. இந்த எழவை எல்லாம் உங்க அண்ணன் வீட்டுக்கு போய் வைச்சுக்க மாட்டானா? சரி வாங்க… ரோட் முனையிலே வெயிட் பண்ணலாம்.. நான் அவனுக்கு டெக்ஸ்ட் பண்றேன்”-னு சலிப்பா சொல்லி முன்னே நடக்கவும் விக்ரமும் மதுரியாவும் பின்னே நடந்தாங்க. 

“ரொம்ப தேங்க்ஸ் ரியா. யூ வேர் அமேஸிங். எவ்வளோ கண்டுப்பிடிச்சிருக்கே அதுவும் ஆதாரத்தோட. சான்ஸே இல்லே”-னு பாராட்டினான் விக்ரம். முனையிலே நிக்கவும், “பண்ணித் தானே ஆகணுமண்ணா… வேறே எப்படி இவரையும் தீப்பையும் நம்ப வைக்க முடியும்?”-னு சொன்னா மதுரியா. அவளை டக்-னு திரும்பி பார்த்தான் விதுரன். “பேரடைஸ் வாசல்லே ஒரு தர்ணா இருந்தீங்களே மேடம்? அது விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறமா?”-னு கோமணத்துலே இடி விழுந்தா மாதிரி தலையும் இல்லாம வாலும் இல்லாம கேட்டான் விதுரன். மதுரியாவுக்கு ஒண்ணும் புரியலே. “ஆமா.. ஏன்?”-னு சொல்லவும், “ஓ.. விஷயம் தெரிஞ்சு தானே வந்தே? அன்னிக்கு நடேசன் பார்க்குலே பார்த்தியே? உனக்கு அன்னிக்கு விஷயம் தெரியாதில்லே?”-னு கேட்டான் விதுரன். “தெரியாது விது… என்னாச்சு??”-னு கேட்டா மதுரியா. “ஒண்ணுமில்லே விடு..”-னு பல்லை கடிச்சான். “டேய்… ரிதேஷ், விக்கி மேல இருக்கறக் கோபத்தை ரியாவிடம் காட்டாதே”-னு சொன்னான் விக்ரம். 

அதுக்குள்ளே காரும் வரவும், பின் சீட்டுலே விதுரன், விக்ரம், மதுரியா உட்கார்ந்தாங்க. ரீனாவோடது கலங்கின கண்ணா இருந்தாலும், ரெண்டுப் பேரு முகமும் தெளிவாகவும் சந்தோஷமாகவும் இருந்துச்சு. ஆனா விதுரன் முகம் கோபமாவும் மதுரியா முகம் குழப்பமாவும் இருந்துச்சு. மணி ஆறு ஆனதால விக்ரமை அவன் வீட்டுலே இறக்கி விட்டாங்க. அப்புறமா வண்டியை பீச்சு ஓரமா நிறுத்திட்டு, “விதுர்… நானும் ரீனாவும் கொஞ்சம் காலார நடந்துட்டு வர்றோம்”-னு சொன்னான் ப்ரதீப்.

மதுரியா லேசா சிரிக்கவும், “அதெல்லாம் ஒரு வெங்காயமும் வேண்டாம். வண்டி எடு போகலாம்”-னு சள்-னு விழுந்தான் விதுரன். “உன் கோபமெல்லாம் கரெக்ட்… ஆனா பேசி சார்ட் அவுட் பண்ணுங்க”-னு ப்ரதீப் விளக்கவும், “அடடா… கோபமா? நான் யாருப்பா அவங்க மேலே கோவிச்சுக்க? என்னை நம்பி விரும்பியா வந்தாங்க? ஏதோ பரிதாபப் பட்டு வந்திருக்காங்க… நீ உன்னை மாதிரி-னு நினைச்சுட்டே போல”-னு எகத்தாளமா சொல்லவும், கொதிச்சுப் போனா மதுரியா.  அவன் கன்னத்தை பிடிச்சு தன்பக்கம் திருப்பி, “எல்லாம் முடிஞ்சுதுன்னு நினைக்கும் போது நீ முதல்லேயிருந்து எதை ஆரம்பிக்கறே? நேரடியா சொல்லு..”-னு பல்லை கடிச்சா. “ஆமாடீ… நீ என்னை நம்பலே தானே? அதனால தானே விக்கிப் பத்தி என்கிட்டே இருந்து மறைச்சே? அப்புறம் நான் நடுரோடுலே நின்னதைப் பார்த்தப்போ வராத அன்பு, விக்கியை பத்தித் தெரிஞ்சதும் வந்துச்சுன்னா.. அது அன்பில்லே… பரிதாபம்! அது எனக்கு வேண்டாம். அதெல்லாம் கூட ஓகே.. அந்த நந்தினியை போயி உங்க நொண்ணன் லைஃப்லே வராதே-னு சொல்லுவே, ஆனா சுவாதியை ஒண்ணும் சொல்ல மாட்டே? ஏன்னா என் மேலே நம்பிக்கையில்லை. அவளை சொல்லி என்ன இவனே போயிடுவான்னு நினைச்சிருக்கே? கரெக்ட்டா?”-னு படபடனு விதுரன் பொரிஞ்சு முடிக்கவும், பளார்-னு சூடு பறக்க ஒரு அறை விட்டா மதுரியா. “நீ எல்லாம் திருந்தவே மாட்டே.. உன் கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்”-னு கொந்தளிக்கறது ரியாவோட முறை!

“ஆமா… சொல்லலே… உன் இத்தனை வருஷ ஆழமான நட்பை குறை சொல்லணும்னா, ஆதாரம் இல்லாம சொன்னா நம்புவியா? நீ இல்லே… யாரும் நம்ப மாட்டாங்க. உன் ஃப்ரெண்டுக்கு பார்த்த பொண்ணு அகல்யா… அவ கிட்ட இன்னும் விக்கியை பத்தி ஒண்ணுமே சொல்லலே. ஸோ… நான் அவளையும் நம்பலே… அப்படித் தானே? ஒருத்தரோட நேச்சர், ஏட்டிட்யூட், தப்பா சொல்லும் போது ஆதாரம் இல்லாம சொல்லக் கூடாதுங்கறது என்னோட ப்ரின்சிபிள். பட்! அப்படியே நான் விக்கி விஷயத்துலே உன்னை நம்பலே-னு சொன்னா, நீ என்ன குற்றம் சொல்ல முடியுமா? அந்த பொறுக்கி உன்னை ப்ரெயின் வாஷ் பண்ணித் தானே நீ என்னை விட்டுட்டுப் போனே?அப்புறம் என்ன சொன்னே? பரிதாபத்துலே வந்தேனா? உன் மூஞ்சியும் முகரக் கட்டையும்.. கர்மம்! அதைப் பார்த்த அன்னியிலே இருந்து வந்த நேசம்.. ஒரு நாளும் மறக்க முடியலே… மறப்பானேன்.. ஒவ்வொரு நாளும் கூடிப் போச்சே தவிர குறையவே இல்லை. உன்னை நடேசன் பார்க் வாசல்லே பார்த்த அன்னிக்கு என் உயிர்லே பாதி என்னை விட்டு போயிடுச்சுடா… மீதி உயிர் உன் க்ளோஸ் ஃப்ரெண்ட்டே உனக்கு துரோகம் பண்றான்-னு தெரிஞ்ச அன்னிக்கு போயிடுச்சு. ஒவ்வொரு நாளும் இது உனக்கு தெரிஞ்சா நீ எப்படி ஃபீல் பண்ணுவியோ-னு நினைச்சு நினைச்சு மறுகினேன் தெரியுமா? சே தெரிஞ்ச அன்னியிலே இருந்து நரகவேதனைடா. உன் மேலே அந்த கர்மம் பிடிச்ச லவ் இல்லேன்னா எதுக்குடா உன்னை அவன் எதுவும் செஞ்சிடாம பார்த்துக்க ஓடி வரணும்? தர்ணா இருக்கணும்? தாத்தாவுக்கு எவ்வளோ கோபம் தெரியுமா? பரிதாபமாம்.. பரிதாபத்துலே கூட இருக்கத் தான் முடியும்… கூட வாழ முடியாது”-னு மூச்சு வாங்க நிறுத்தினா.

“மதும்மா… நீ.. நீ நிஜமா சொன்னியா?”-னு சந்தோஷத்துலே தடுமாறவும், “மூடுடா வாயை.. பேசினா நாக்கைப் புடுங்கி வெளியே எறிஞ்சுடுவேன்”-னு சீறினா. “இந்த எழவெடுத்த காதல் மட்டும் இல்லேன்னா நீ எப்படி போனா எனக்கென்ன-னு போயிருப்பேன். அப்படித் தான் போய் இருக்கணும் போல.. கடைசியா என்ன கேட்டே? அதுக்கு பதில் தான் நான் விட்ட அறை… எப்படி? எப்படி? நீயே சுவாதி கிட்ட போயிடுவியா? போய்த்தான் பாரேன்.. போறதுக்கு கால், பார்க்கறதுக்கு கண் ரெண்டும் இருக்காது ராஸ்கல்! உனக்கும் அவளுக்கும் என்ன லவ்வா?… லவ் பண்றியா?. அவளை கல்யாணம் பண்ற ப்ளான் வைச்சிருந்தியா?. இல்லே பண்ணி இருக்கியா?”-னு எகிறவும், “அடியேய்.. அப்படியே வைச்சு சாத்திடுவேன் பார்த்துக்கோ.. ராமன்டி நானு”-னு பதிலுக்கு எகிறினான் விதுரன். “இல்லை தானே? இதெல்லாம் பண்ணி தொலைச்சிருக்கான் ப்ரதீப்.. அதனால தான் நந்தினியை மிரட்டினேன். மரமண்டைக்கு விளங்குச்சா?. ராமனாம் ராமன். எந்த ராமன் சூர்ப்பனகையோட கைக் கோர்த்துட்டு சுத்தறதை நீ பார்த்திருக்கியோ தெரியலே… சே… போதும் சாமி… போதும்.. இப்படித் தொட்டதுக்கு எல்லாம் என்னால எப்போ பாரு விளக்கம் குடுக்க முடியாது.. என்னை விட்டுடு”-னு கத்திட்டு இறங்க கதவை திறந்தா கதவு திறக்கலே. திரும்பி கோபமா ப்ரதீப்பைப் பார்த்தா. அவன் பே-னு இவளை பார்த்தான்.

“என் மூஞ்சியிலே என்ன ஐட்டம் டேன்ஸா தெரியுது? கதவை திறந்துத் தொலையேன்”-னு சள்-னு விழுந்தா. “படக்”-னு கதவை பதட்டத்துலே திறக்கவும் இப்போ விதுரன் முறைச்சான். கதவைத் திறந்து இறங்கப் போனவளை, கையை பிடிச்சு, “மது.. நில்லுடீ.. எங்கே போறே?”-னு கேட்டான். “இப்போ கையை விடலே.. இன்னொரு கன்னமும் பழுத்துடும்”-னு உறுமவும், கையை விட்டான். மதுரியா சிட்டா பறந்துட்டா. கார்லே ஒரே அமைதி. ப்ரதீப்பும் சரி ரீனாவும் சரி மதுரியா கிட்டேயிருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கலே. “விதுர்! அடி பலமோ?”-னு கேட்டான் ப்ரதீப். “நீ கார்லே வாங்கினதை விட கம்மி தான். வாயை மூடு”-னு பதில் சொன்னான் விதுரன். 

“விதுரன்! அவ மனசு புரியாம அவசரப்பட்டுட்டீங்களே? உங்களை அவ ரொம்ப விரும்பறா.. அவ சுவாதி கிட்டே சண்டை போடலியே தவிர, அவளை எப்போவோ உங்க லைஃப்லே இருந்து விலக்கிட்டா”-னு சொன்னா ரீனா. “ஏது? இது எப்போ நடந்துச்சு?”-னு அதிர்ச்சியானான் விதுரன்.  “உங்கக் கிட்ட எல்லாம் அவளே சொல்லி இருப்பா.. ஆனா அதுக்குள்ள சண்டை ஆகிடுச்சு… நானே அத்தியாயம் 21லே இருந்து நடந்ததை எல்லாம் சுருக்கமா சொல்றேன்”-னு ஆரம்பிச்சு ப்ரேமோட விழாவில விக்கியும் அசோக்கும் பேசினதை கேட்டதுலே இருந்து எல்லாம் சொன்னா.

ப்ரதீப்புக்கும் விதுரனுக்கும் அவ்வளோ அதிர்ச்சி. “அப்போ அன்னிக்கு பீனா பில்டர்ஸ்லே அடிப்பட்டது, சுவாதியை ஃபாலோ பண்ணிப் போய் தானா? கடவுளே! என்னாலேயா மதுவுக்கு அந்த சர்ஜரி? உங்க ரெண்டுப் பேருக்குமே அப்போ கூட ஏன் சொல்லணும்-னு தோணலே?”-னு தவிச்சுப் போனான் விதுரன். “எவ்வளோ திமிர்? அத்தனையும் கராத்தே கத்துக் கிட்ட திமிர்”-னு திட்டினான் ப்ரதீப். “கராத்தே இல்லே… டாக்கிவாண்டோ.. அது வேற டைப் தற்காப்புக் கலை”-னு அவனை திருத்தினா ரீனா. “வீட்டுக்கு வா.. கராத்தே ப்ரௌன் பெல்ட் எப்படி இருக்கும்-னு காட்டறேன்”-னு சொன்னான் ப்ரதீப். விதுரன் பக்-னு சிரிச்சுட்டான். 

“சரி வாங்க… போய் ஆத்தாளை மலையிறக்கி கூட்டிட்டு வருவோம்”-னு கூப்பிட்டான் விதுரன். “அடி வாங்க ஆள் சேர்க்கறீங்களா மாம்ஸ்?”-னு ப்ரதீப் கிண்டலா கேட்கவும், “நீ ப்ரௌன் பெல்ட்னா நான் ப்ளேக் பெல்ட்டு டா அடங்கு”-னு சொன்னான் விதுரன். “அதான் பார்த்தோமே.. என்ன அறை.. ப்பா.. விழுந்த வேகத்துல என் காதுல ‘கொயிந்ங்’ சத்தம் வருது”-னு சிரிச்சான் ப்ரதீப். “சும்மா இருங்க தீபு.. நீங்க வாங்கப் போகலாம். இவர் காருக்கு காவலா இங்கேயே இருக்கட்டும்”-னு ரீனா இறங்கவும் தலையிலே அடிச்சுக்கிட்டான் ப்ரதீப். அவனுக்கு விதுரனுக்கும் மதுரியாவுக்கும் தனிமை குடுக்கணும்-னு எண்ணம். ஆனா அவனோட சகதர்மிணிக்கு அதுப் புரியலே.

விதுரனும் ரீனாவும் கொஞ்சம் சுத்தி தேடினப்புறம் அலையோரமா பாதி மங்கின வெளிச்சத்துலே அவளை பார்த்தாங்க. முகத்துலே அப்போயிருந்த ரௌத்திரம் இல்லே. ஆனா வேதனையும் வருத்தமும் நிறைய இருந்துச்சு. கண்ணுலே தண்ணி வந்துச்சு. “வர வர உங்க விஷயத்துலே ரொம்ப அழுமூஞ்சி ஆகிட்டா”-னு சிரிச்சா ரீனா. “நான் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்றேன்”-னு போனான். ரீனா ஒரு சிரிப்போட காருக்குப் போயிட்டா.

****************************************************************************************

மதுரியாவுக்கு கோபமும் வருத்தமுமா இருந்துச்சு. விதுரன் எப்போ தான் என்னை புரிஞ்சுப்பானோ-னு சலிப்போட ஒரு கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துச்சு. அவ பக்கத்திலே உட்கார்ந்தவன், “சாரி..”-னு சொல்லவும், அதே நேரம் அவளும் அதையே சொன்னா. அவ தோள்லே கையை போட்டு, “எதுக்காம்?”-னு கேட்டு சிரிச்சான். “மரியாதை இல்லாம பேசினதுக்கு..”-னு சொன்னா. “அடேங்கப்பா… எவ்வளோ சீக்கிரம் தோணிடுச்சு.. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சுது.. எனக்கு தெரிஞ்சு எந்த வைஃபும் தன்னோட லவ்வை இப்படி சொல்லியிருக்க மாட்டா. ஸோ.. ஸ்வீட் கண்ணம்மா”-னு கன்னத்துலே முத்தம் குடுத்தான். “என்னடி இது? ஆசையா கிஸ் பண்ண வந்தா இப்படி உப்பு கரிக்குது”னு கிண்டல் பண்ணவும், “நீங்க எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்… நீங்க எப்படி கூப்பிட்டாலும் நான் வர்றதா இல்லே”-னு கோபத்தை விட்ட இடத்துலே இருந்து தொடர்ந்தா. “போச்சுடா… இப்போ தானே மது சாரி சொன்னே?”-னு கேட்கவும், “அது மரியாதை இல்லாம பேசினதுக்குத் தான். முதல்லே நகர்ந்து உட்காருங்க”-னு சள்-னு விழுந்தா.

“ம்ம்ம்… போதுமா?”-னு அவ பக்கமா நகர்ந்துட்டு, “பப்ளிக் ப்ளேஸ். இதுக்கு மேலே கிட்டே வர முடியாது.. அதான் வீட்டுக்குப் போயிட்டா இன்னும் வசதி”-னு சொன்னான் விதுரன். அவன் நெருக்கமும் அருகாமையும் ரசாயன மாற்றங்களை உண்டுப் பண்ணாலும், “கர்மம்.. கர்மம்.. என்னை விட்டு விலகித் தள்ளி உட்காருங்க.. அதை விட கிளம்பிப் போனீங்கன்னா இன்னும் சந்தோஷம். இவரை நாங்க நம்பணுமாம்!! பெரிய கடப்பாரையெடுத்து நெம்பத் தான் தோணுது”-னு தலையிலே அடிச்சுக்கிட்டா அவனோட சரி பாதி, “மது.. கொஞ்சம் கேளேன்”-னு விதுரன் ஆரம்பிக்கவும் கைப்பேசி அடிச்சுது. “ஹாங் மா… ஆமா.. அவ மொபைல்லே சார்ஜ் இல்லே. இதோ அவளை பிக் அப் பண்ண தான் நான் வந்தேன். சரி.. சரி”-னு காலை கட் பண்ணான். “மது டைம் ஆகுது. வீட்டுக்குப் போகணும். போகலாம்”-னு நெத்தியை தேச்சுக்கிட்டே சொன்னான். “நான் எங்கேயும் வரலே? நீங்க போகலாம்”-னு வேறே பக்கம் பார்த்தா. “சொல்லிட்டே இருக்கேன்… கேட்கவே மாட்டேங்கிறே?”-னு குண்டுக்கட்டா தூக்கி தோள்லே போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான்.

“ஹேய்… என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க”-னு திமிறினா. எழுபது கிலோ கிட்ட அம்பது கிலோ திமிறி என்ன பயன்? “எல்லாரும் பார்க்கறாங்க விது… ப்ளீஸ் விடுங்க.. நானே நடந்து வர்றேன்.. ப்ளீஸ் விடுங்க”-னு கெஞ்சினா. “எவன் பார்த்தா எனக்கென்ன? பேசாம வா… இவ்வளோ தூரம் தூக்கிட்டு வந்தவனுக்கு மீதி தூரமும் தூக்கத் தெரியும்”-னு இறக்காம சொன்னான். “தலை சுத்துது. விது… ப்ளீஸ்”-னு சொல்லவும், “என்ன டீ?”-னு கேட்டான் விதுரன். “ஆமா நீங்க என்னை பூ போலவா தூக்குறீங்க? வண்ணான் துணி மூட்டையை தூக்கற மாதிரி இல்லே தூக்கிட்டுப் போறீங்க?”-னு சலிக்கவும் உதட்டை மடிச்சு சிரிப்பை அடக்கினான் விதுரன். “நல்லா சுத்துதா? அப்படியே முதுகு உன் டாப்ஸ் டிசைன் எல்லாம் தெரியுதா பாரு..”-னு சொல்லிட்டு நிக்காம போனான். அப்படியே காருக்கு தூக்கிட்டு போய் புளி மூட்டையை உள்ளே அடைக்கற மாதிரி மதுரியாவை உள்ளே தள்ளி தானும் உட்கார்ந்தான். “மச்சான் அவர்களே, எங்க மூஞ்சியைப் பார்க்கறத விட்டுட்டு வண்டியை எடுங்க”-னு சொன்னான் விதுரன்.

“நேரம் தான்.. இன்னிக்கு புருஷனும் பொண்டாட்டியும் என்னை கலாய்கிறதை வேலையா பண்ணுங்க”-னு வண்டியை எடுத்தான் ப்ரதீப். “விதுர்.. வீட்டுலே எதுவும் சொல்லணுமா? வேண்டாம் தானே?”-னு கேட்டான் ப்ரதீப். “அதெல்லாம் வேண்டாம்”-னு விதுரன் சொல்லவும், “ஆமா.. வேண்டாம். மண்டையிலே ரெண்டுப் பேருக்கும் மூளையிருக்கா? விக்கியும் ரிதேஷும் ஏன் வீட்டுக்கு வரலே-னு கேட்டா என்ன சொல்லுவீங்க? விக்கியோட அப்பா வெளியே பார்த்து பேசலேன்னா மூர்த்திபா ஏன்-னு கேட்க மாட்டாரா? தீப்! சந்திரன் அங்கிள் திடீர்-னு சீனியர் பேசலேன்னா கூப்பிட்டுக் கேட்க மாட்டாரா? எவ்வளோ அறிவு?”-னு பொரிஞ்சா மதுரியா. “அதுக்குன்னு இதெல்லாம் சொன்னா பயந்துடுவாங்கடீ”-னு சொன்னா ரீனா. “நல்லா சொல்லு… நான் சொன்னா உடனே எதிர்த்து பேசணும்”-னு சலிச்சுக்கிட்டான் விதுரன். “என்ன நடந்தாலும் எல்லாம் சொல்லித் தான் ஆகணும். நம்ம குடும்பத்துக்கு நம்ம சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நம்ம சொல்லித் தான் தெரியணும். மூணாவது மனுஷன் சொல்றதுக்கும் நம்ம சொல்லி தெரியறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு”-னு சொல்லவும், விதுரனுக்கு அவளோட சேர்த்து அவ எண்ணங்களும் பிடிக்க ஆரம்பிச்சுது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top