அத்தியாயம் -42

மதுரியாவுக்கும் ரீனாவுக்கும் அவங்கப் பேச்சைக் கேட்டு பொறுமை பறந்துடுச்சு. ஆத்திரத்துலே ரெண்டு பேர் மேலேயும் பாய்ஞ்சிட்டாங்க. விக்கிக்கும் அசோக்குக்கும் என்ன நடந்தது-னு புரியறதுக்குள்ளே விக்கியோட வலதுக் கை முறுக்கப்பட்டு ரீனாவோட முட்டி அவன் கழுத்துலே அமுக்கி அவனை அசைய விடாம பிடிச்சிருந்துச்சு. அவன் கன்னத்துலே அவ கைவிரல் அச்சு தெரிஞ்சு, உதடு கிழிஞ்சு ரத்தம் வந்துட்டு இருந்துச்சு. இவனோட நிலைமையே பரவாயில்லே-னு இருந்துச்சு. அசோக்கோட நிலைமை. 

அசோக் மண்டிப் போட்டு, அவன் கையை பின்னோக்கி முறுக்கி அவன் நடு முதுகுலே மதுரியாவோட வலது பாதம் வைச்சு அமுக்கி அவன் கையை பின்னோக்கி இழுத்ததுலே வலி தாங்காம அலறினான். மதுரியாவும் ரீனாவும் மாடர்ன் டிரெஸ் போட்ட வன பத்ரகாளி மாதிரி இருந்தாங்க. “ஏய்… விடு என்னை.. விடுடி..”-னு விக்கி திமிறவும் ரீனா கழுத்துலே இருந்த முட்டியோட அழுத்தத்தைக் கூட்டவும், பயங்கரமா இருமினான் விக்கி. “இன்னும் ஒரு வார்த்தை பேசினா.. கொன்னுடுவேன்”-னு சீறினா ரீனா.

“எப்படி? எங்க மானத்தை மொத்தமா முடிப்பியா? எங்களை என்ன நந்தினி, சுவாதி மாதிரி கழிசடை-னு நினைச்சியா? இன்னும் ஒரு இன்ச் உன் கையை பின்னாடி இழுத்தா.. உன் கை முட்டி, அதோட சிப்பிலயிருந்துக் கழண்டுத் தனியா வந்துடும். பார்க்கறியா? டாக்டர் தானே நீ? ஷோல்டர் டிஸ்லொகேஷன் எப்படி இருக்கும்-னு காட்டவா உனக்கு? பொறுக்கி.. டாக்கிவாண்டோ ப்ரவுன் பெல்ட் டா நாங்க”-னு பின்னாடி இழுக்கவும் ஏறக்குறையக் கதறினான் அசோக். “பண்ணுவீங்க.. பண்ணுவீங்க! விடுங்கம்மா அவங்களை”-னு பெரிய உருவத்துலே பட்டுப் புடவை, வைர நகை சகிதம் ஒரு அம்மா வந்து கத்தவும், இவங்க ரெண்டு பேரும் கண்டுக்கவே இல்லை. ஆனா அசோக், விக்கிக்கு அவங்களையும் அவங்க பின்னாடி வந்தவங்களையும் பார்த்து கண்ணு வெளியே வந்துடுச்சு. கைய்யும் களவுமா பிடிப்படறதுன்னா என்ன-னு ரெண்டு பசங்களும் உணர்ந்தாங்க. ஏன்னா அங்கே நின்னுட்டு இருந்தது விக்கியோட அம்மா, அப்பா, ப்ரதீப், விதுரன், ரிதேஷ், விக்ரம், அசோக்கோட அப்பா, அம்மா, நந்தினி. இவ்வளோ பேரையும் மதுரியாவும் எதிர்பார்க்கலே. “யார் நீங்க?”-னு சீறினா மதுரியா. “மது.. அவங்க விக்கி.. விக்னேஷோட அம்மா”-னு விதுரன் இழுக்கவும் அவனை ஒரு பார்வை பார்த்தா. அவன் மேலே எதுவும் பேசலே.

“நான் வசுந்தரா தேவி… விக்கியோட அம்மா”-னு திமிரா சொல்லவும், “தற்சமயம் இந்த அறிமுகத்துக்கு நீங்க கயித்திலே தான் தொங்கணும். பெருமைப்படற அளவு ஒண்ணுமில்லே”-னு அவங்க முகத்தை கூட பார்க்காம சொல்லவும், “பளார்..”-னு விக்கியோட அப்பா வசுந்தரா கன்னத்துலே ஒரு அறை விட்டார். “வாயை மூடு… ஒரு வார்த்தை பேசினே? உன்னையும் உன் பையனையும் இங்கேயே கொன்னுப் புதைச்சுடுவேன் புரியுதா?”-னு உறுமினார். “ரியா… உங்கக் கோபத்துலே எந்த தப்பும் கிடையாது.. ஆனா ஒரு அப்பாவா என் மகன் வலியிலே கத்தறதை பார்க்க முடியலே… ப்ளீஸ் மா.. எங்களுக்காக விட்டுடும்மா”-னு கெஞ்சினார் டாக்டர்.ப்ரேம்நாத். ரீனா விக்கியை விட்டுட்டா. மதுரியா அசோக்கை விட்ட வேகத்துலே அவன் போய் விக்கி மேலே விழுந்தான். கொஞ்சம் வலி குறைஞ்சு சுதாரிக்கவும், எல்லாரையும் பேயைப் பார்த்த மாதிரி பார்த்தாங்க!

****************************************************************************************

விக்கி போனை கட் பண்ணவும், மதுரியா வேக வேகமா போன் பண்ணா. ரீனா உடனே “வேண்டாம்டீ. அவசரப்படாதே. பிள்ளைங்களை ஏதாவது பண்ணிட போறாங்க”-னு பதறினா. “கிருத்திகா அக்கா, வீ ஸ்கூல் வாசல்லே ஏதோ கலாட்டாவாம்… ஹாஸ்பிடல்லே பேசிக்கறாங்க. இன்னிக்கு மணி அங்கிள் கூட அனுப்ப வேண்டாம்… உங்க கூடவே வைச்சிட்டு கூட்டிட்டு வந்துடுங்க”-னு மதுரியா சொல்லவும், “அப்படியா? இங்கே எதுவும் இல்லையே ரியா.. சரி.. நான் என் கூடவே கூட்டிட்டு வர்றேன்.. நீ ரிலேக்ஸ்டா வேலையை பாரு”-னு சொல்லி கட் பண்ணாங்க. அடுத்து வேகமா பரத்துக்கு போன் பண்ணா. “பரத்தப்பா நிகு எங்கே?”-னு கேட்கவும், “வீட்டுலே ரியா. நேத்து அவனுக்கு ஃபீவர்-னு அத்தை இன்னிக்கு அவனை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்-னு சொல்லிட்டாங்க.. என்ன ஆச்சு?”-னு கேட்டான் பரத். “ஒ.. ஒண்ணுமில்லே.. ஒரு வேலையா அந்த பக்கம் போறேன்.. நீங்க பிக்அப் பண்ணலேன்னா நான் போய் பார்க்கலாம்னு..”-னு உளறினா. “அது சரி மேடம்.. வீட்டுக்கு வந்தா எல்லாரையும் பார்க்கலாம்”-னு சிரிக்கவும், “இந்த வீக் எண்ட் வர்றேன் பரத்தப்பா”-னு சொல்லி போனை வைச்சா.

“அடப்பாவிங்களா! இவனுங்க வில்லனுங்களா? இல்லை கோமாளிகளா?”-னு கேட்டா ரீனா. “ரீனா இவனுங்க கழுதை மாதிரி! முன்னாடி போனா கடிக்கும் பின்னாடி போனா உதைக்கும்.. அலட்சியமா பார்க்க முடியாது. அதே சமயம் இந்த சான்ஸை விடக் கூடாது”-னு சொன்னா மதுரியா. “சரிதான் ரியா… ஆனா ஒரு டெசர்டெட் ப்ளேசுக்கு வரச் சொல்றானுங்களே, அங்கேப் போய் கூட்டமா இருந்தா நம்ம வித்தையெல்லாம் எம்மாத்திரம்?”-னு கேட்டா ரீனா. “அவங்களை பேச வைச்சு, இந்த பட்டன் கேமரா, இந்த டிக்டஃபோன்லே ரெகார்ட் பண்ணா போதும்”-னு மதுரியா சொல்லவும், “பத்தாது ரியா… எல்லாரையும் வரச் சொல்லணும்… அவங்க தோலை உரிக்கறது எல்லார் முன்னாடியும் நடக்கணும்”-னு ரீனா சொல்லும் போதே, மதுரியா போனுக்கு அந்த பில்டிங்கோட எக்சாக்ட் லொகேஷன் விவரம் விக்கிக் கிட்டே இருந்து மெசேஜா வந்துச்சு. “எப்படி ரீனா? உஷாராகிட்டாங்கன்னா?”-னு கேட்டா மதுரியா.

கொஞ்சம் யோசிச்ச ரீனா, “ரியா, நீ அந்த கேமரா டிக்டஃபோன் எல்லாம் ரெடிப் பண்ணு. அதுக்குள்ளே நான் ஒரு போன் பண்றேன்”-னு சொன்னா. அவ எல்லாம் பண்ணவும் ரீனா போன் பண்ணவும், “தீபு, ஒரு எமர்ஜென்சி… நீங்க எதுவும் சொல்லாம நான் சொல்றதை மட்டும் கேளுங்க…. நீங்க உடனடியா விதுரன், அவர் ஃப்ரெண்ட்ஸ், விக்கியோட அப்பா, அம்மா, ரியாவோட சீனியர் எல்லாரையும் கூட்டிட்டு நான் ஷேர் பண்ற லொகேஷனுக்கு வாங்க.. நீங்க அத்தனை பேரும் வந்திருக்கறது எனக்கோ ரியாவுக்கோ கூட தெரியக் கூடாது.. தெரிஞ்சா எங்க உயிருக்கே ஆபத்து… எங்களை மீட் பண்ற ஆளுங்க மூணாவது மாடியிலே இல்ல நாலாவது மாடியிலே இருப்பாங்க.. பார்த்து வாங்க பேச நேரமில்லே. நான் போனை கட் பண்றேன்”-னு சொல்லி வைச்சுட்டா. ரெண்டுப் பேரும் போனை ஆஃபும் பண்ணிட்டாங்க. “ரீனா இந்த பட்டன் கேமராவை உன் டாப்ஸ்லே ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அதோட டிரான்ஸ்மிட்டர் என் பேக்லேயே இருக்கட்டும். டிக்டஃபோனும் என் பேக்லேயே இருக்கட்டும். போகலாமா?”-னு கேட்டா மதுரியா.

******************************************************************************************

“நாங்க அவங்கக் கார் வந்த சத்தம் கேட்ட பின்னால தான் மெதுவா ஏறி வந்தோம்”-னு சொல்லி முடிச்சா ரீனா. “நீங்க பேசினது எல்லாம் ரெகார்டெட்”-னு எடுத்து எல்லாத்தையும் ஆன் பண்ணி காட்டினா. “உங்களுக்கு உங்க அப்பா மேலே கோபம்னா அவங்களைப் பழி வாங்கணும்.. அவங்க தானே கம்பேர் பண்ணது? அதை விட்டுட்டு இவங்களை போய்…. சே… அவங்க ரெண்டுப் பேரும் இது வரைக்கும் நீங்க ஒண்ணு கேட்டு இல்லே-னு சொல்லி இருப்பாங்களா. உயிரை குடு-னு நீங்க கேட்டிருந்தா கூட குடுத்துட்டுத் தான் ஏன்-னு கேட்டிருப்பாங்க. விது வாழ்க்கையிலே என்னை விட முக்கியமான இடம் உங்களுக்கு இருந்துச்சு. அதனால தான் உங்களால எங்களைப் பிரிக்க முடிஞ்சுது. அது கூட உங்களுக்கு புரியலியே? நீங்க ரெண்டு பேரும் என்னத்தை இழந்தீங்க-னு புரியவே உங்களுக்கு இந்த ஜென்மம் போதாது. உண்மையான அன்பும் நட்பும் இழந்தப்புறம் தான் புரியும்.. நீங்க இந்த நிமிஷத்துலே இருந்து அவங்களை இழந்துட்டீங்க.. இனி என்ன பண்ணாலும் கிடைக்காது”-னு சொன்னா மதுரியா.

“நாங்க பண்ணதுத் தப்புன்னா இவங்கப் பண்ணது?”-னு அசோக் ஆரம்பிக்கவும், “சீ… பேசாதே! விக்கியை கூட ஒரு வகையிலே சேர்த்துக்கலாம்.. நீ எல்லாம் என்ன ஜென்மமோ சொல்லவே முடியலே. உன்னை பார்த்தாலே அருவறுப்பாய் இருக்கு. உன்னை மாதிரி ஆளுங்களை பார்த்தா நண்பன்-னு சொல்லிட்டு யாராவது வந்தாக் கிட்டயே விடமாட்டாங்க. ஆண்மை அப்படீன்னா உன் முகரக் கட்டைக்கு எல்லாம் கட்டில்ல உருளறது மட்டும் தான் தோணுமா? உன்னை வளர்த்த பெத்தவங்களுக்கு நல்ல பேர் வாங்கிக் குடுத்துட்டே”-னு பொரிஞ்சு தள்ளினா ரீனா. “கால்ம் டவுன் ரீனா! சீனியர்! இவங்க ரெண்டுப் பேரும் அவங்களை பழி வாங்கறதோட நிறுத்தலே.. சட்டத்துக்கு புறம்பான வேலையிலேயும் ஈடுபடத் தயாராயிட்டாங்க. உங்க இமெயிலுக்கு எல்லாம் அனுப்பி இருக்கேன் பாருங்க. ரோஹித்-னு ஒரு பெரிய ரவுடி கூட கூட்டு! அந்த ஆளு பொண்ணுங்களை வைச்சு ஏதோ பிசினஸ் போல.. எனக்கு தெரியலே.. அதுக்கு இவங்க ரெண்டுப் பேரும் பார்ட்னர். ஹாஸ்பிடல்லே ஒரு சைட் மொத்தமா ஆக்யுபை பண்ணது சேரிட்டிக்கு இல்லே. அந்த ரோஹித் அனுப்பற பொண்ணுங்களுக்கு ‘ஹைமனோ-ப்ளாஸ்டி’(hymenoplasty – கன்னித்தன்மை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை)-ங்கிற சர்ஜரி பண்றதுக்கு. அதை எப்படியாவது தடுத்து நிறுத்துங்க சார்.. ப்ளீஸ்… இல்லைன்னா உங்க ஃபேமிலி, ஹாஸ்பிடல், உங்க சர்வீஸ் ரெகார்ட் எல்லாமே அழிஞ்சிடும்”-னு சொன்னா மதுரியா.

“ஐயோ… எதுக்குடா? ஏன் டா? உனக்கென்னடா குறை-னு இப்படி சம்பாதிக்கிறே?”னு பளார் பளார்-னு அசோக்கை கன்னத்திலே அறைஞ்சாங்க அசோக்கோட அம்மா. யாரும் அவங்களை தடுக்கவே இல்லை. “நீங்களெல்லாம் படிச்சவங்க தானே? ரோஹித் இந்த சொசைட்டியிலே பெரிய பணக்காரர்… அவர் நினைச்சா பெரிய ஃப்ரீ ஹாஸ்பிடலே கட்ட முடியும். அதை எவ்வளோ வேணும்னாலும் அட்வர்டைஸ் பண்ணலாம்… அப்படி இருக்கும்போது அவன் செலவுலே உங்களை முன்னிறுத்தி எல்லாத்தையும் செய்யறான்னு கூட யோசனை வரலியே? சரி.. அது தான் வரலே… டாக்டர் அசோக், ஹைம்னோப்ளாஸ்டி இன்னிக்கு உலகத்துலே பல இடத்துலே லீகலா ஒத்துக்கப்பட்ட விஷயம்… இந்தியாவுலேயுமே லீகல் தான். அப்படிப் பட்ட விஷயத்தை ஒருத்தன் ரகசியமா பண்ண சொன்னாலே ஏதோ தப்பு பண்றான்-னு புரியலே?. இதுல பெருமை பீத்திக்கிறீங்க.. ஐ அம் ஜீரோ எமோஷனல்-னு.. ஆனா நான் சொல்றேன், வெறும் பொறாமையும் கோபமும் மட்டுமே ஆட்சி செலுத்தற உங்க புத்தினால யூ கய்ஸ் ஆர் எமோஷனல் ப்ரிக்ஸ்…” அப்படீ-னு கத்தினா மதுரியா. “ஆமா… பண்ணோம்.. ஏன் பண்ணோம்? நாங்க கை நிறைய சம்பாதிச்சாலாவது இவனுங்களுக்குக் குடுக்கற மரியாதையை எங்களுக்கும் குடுப்பாங்களா-னு பார்க்கத் தான். சொந்த வீட்டுலே ரெகக்னிஷனுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு.. எங்களுக்கும் உண்மையான நட்பு இருந்துச்சு”-னு விக்கி கத்தவும் “நிறுத்துடா..”-னு அலறினான் விதுரன்.

“உண்மையான நட்புன்னு பேசி நட்பையே அசிங்கப் படுத்தாதே. மதுவும் ரீனாவும் பேசலாம்.. இதோ ப்ரேம் சாரும், சந்திரன் அங்கிளும் பேசலாம்… நம்ம பேசக் கூடாது. ரிதேஷ்! இவன் செஞ்சதெல்லாம் உனக்கு தெரியும் தானே?”-னு அழுத்தமா கேட்டான் விதுரன். “அது… அது…. ம்ம்.. தெரியும்”-னு ரிதேஷ் இழுக்கவும், “நல்லா தெரியும்… தெரியாமலா அவரோட சொந்தக்கார பொண்ணை நம்ம கம்பெனிக்கு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண அனுப்பினாரு? சாருக்கு தெரியும்… கூட சேர்ந்து ஹெல்ப்பும் பண்ணினார்”-னு நக்கலா சொன்னா மதுரியா. ரிதேஷை விதுரன் தீப்பார்வை பார்க்கவும், “மச்சான்… சாரிடா… நான்… நான்… விக்கிக்கு பயந்து, என் கேரியருக்கு பயந்து தான் அவனுக்கு ஹெல்ப் பண்ணேன்”-னு வருத்தமா சொன்னான் ரிதேஷ். “அப்போ, உங்களுக்கு நடுவிலேயும் நட்பு செத்துப் போச்சா?”-னு தோளை குலுக்கினா மதுரியா. “நட்பு-னு ஒண்ணு இருந்தா தானே மது சாகும்? அப்படி ஒண்ணு இல்லவே இல்லையே… நான் தான் அப்படி ஒண்ணு இருந்ததா என்னையே ஏமாத்திக்கிட்டு இருந்து இருக்கேன்”-னு காலை உதைச்சு சொன்னான் விதுரன். “நட்பு இருக்கு விது… ஒரு ஆள்… நீங்க எப்போவும் நம்பலாம். என்னிக்கித் திரும்பிப் பார்த்தாலும் இருப்பாங்க”-ன்னு மதுரியா சொல்லவும், யார்னு புரியாம விதுரன் பார்க்கவும், “விக்ரமண்ணா. ஆமா! எப்போவும் உங்களுக்கு லாயலாத்தான் இருந்தார்.. இனியும் இருப்பார்.. எனக்கு ரீனா மாதிரி”-னு முடிக்கவும் விக்ரமும் விதுரனும் அர்த்தப் பார்வை பார்த்துக் கிட்டாங்க.

“தீபு… ஏன்.. அமைதியா இருக்கீங்க?”-னு கேட்டா ரீனா. “நிஜமாவே என்ன பேசறதுன்னு தெரியலே ரீனா.. ப்ளாங்கா இருக்கு”-னு சொல்லவும் ரீனாவுக்கும் மதுரியாவுக்கும் ரொம்ப வருத்தமா போச்சு. “என்னடா ப்ளேங்கா இருக்கு? இவன் போனா என்ன? நானில்லையா உனக்கு ஃப்ரெண்டா? விடுடா”-னு விதுரன் ப்ரதீப் தோள்லே கை போட்டு சமாதானப் படுத்தினான். “எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்கீங்க எங்களை-னு பார்த்தீங்களா? ஏன்டா… உங்க ஃப்ரெண்டை போல இரு.. நல்லதை கத்துக்கோ-னு சொன்னா இப்படித்தான் பண்ண தோணுமா? இப்படியாடா பழி வாங்கறேன்-னு புறப்படுவீங்க. கொஞ்சம் விட்டிருந்தா மொத்த குடும்பத்தையும் குழி தோண்டி புதைச்சிருப்பீங்களேடா… சே.. எல்லாம் என்னை சொல்லணும். வீட்டுக்கு ஒரே பையன்-னு கேட்கிறதெல்லாம் வாங்கி குடுத்தேன் பாரு”-னு கத்தினார் விக்கியோட அப்பா. “சே.. ஏன் டா உன் புத்தி இப்படி போச்சு? நாலு பேருக்கு தெரிஞ்சா நம்ம கௌரவம் என்ன ஆகறது-னு கூடவா யோசிக்கலே? போயும் போயும் பொறாமைப் பட விதுரன் தானா? ஸ்டேடஸ் மேட்ச்லே கிடைக்கலியா?”-னு பிள்ளைக்கு தப்பாம பேசினாங்க வசுந்தரா. “இப்படி ஒரு அம்மா வளர்த்தா பிள்ளை வேறே எப்படி வருவான்?”-னு கிண்டலா சொன்னா ரீனா.

“ரீனா…”-னு கூப்பிட்டு ‘வேண்டாம்’-னு தலையாட்டினா மதுரியா. “மது.. நம்ம கிளம்பலாமா?”-னு கேட்டான் விதுரன். “ஒரு நிமிஷம்பா.. ப்ரதீப், விதுரன்… எங்க பசங்க பண்ண தப்புக்கு அவங்களுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்”-னு சொன்னார் ப்ரேம்நாத். “ஆமாப்பா ரொம்ப சாரி.. ஏதோ உங்க கிட்டேயிருந்து நாலு நல்ல விஷயம் கத்துப்பாங்க-னு நாங்க நினைச்சுது இப்படியாகும்-னு நினைக்கலே”-னு விக்கியோட அப்பாவும் சொன்னார். ப்ரதீப்பும் விதுரனும் இறுகிப் போய் நின்னாங்க. கண்ணு கோபத்தால சிவக்க வாயை இறுக்கமா மூடி நின்னாங்க. “சீனியர், மன்னிப்புக் கேட்கிற உங்க பெருந்தன்மையை நாங்க மதிக்கத்தான் முடியும். ஆனா மன்னிப்பை ஏத்துக்க முடியாது. உங்க பசங்களும் மன்னிக்கும் படியான தப்பை பண்ணலே. அது உங்களுக்கும் தெரியும். ஸோ… கொஞ்ச நாளைக்கு ஆறப் போடலாம். கோபம் குறையட்டும். அப்புறம் பேசிக்கலாம்”-னு பொறுமையா சொன்னா மதுரியா. “அதுப் போகுது… ரெகார்ட் பண்ணதை எல்லாம் குடுத்துட்டுப் போங்க.. அது எதுக்கு உங்களுக்கு?”-னு கர்ண கடூரமா ஒலிச்சுது வசுந்தராவோட குரல்.

“நானும் ஆரம்பத்திலே இருந்து உங்களை கடுக்-னு பேசக் கூடாது பாவம்-னு விட்டா, ஓவரா போறீங்க? அதை உங்கக் கிட்ட தர்றதுக்கு ரெடி பண்ணலே. உங்க பசங்களை எங்கே கண்ட்ரோல்லே வைக்கணும், எங்க லைஃப்லே இனி தலையிடாம இருக்க அவங்க குடுமியை எங்க கையிலே வைச்சுக்கணும்-னு தான் செஞ்சுது”-னு அழுத்தமா சொன்னா மதுரியா. “நீ தரலேன்னா எப்படி வாங்கணும்-னு எனக்கு தெரியும்”-னு வசுந்தரா மிரட்டவும், “என்ன பண்ணிடுவீங்க ஆண்டி? என் வைஃபை என் கண் முன்னாடியே மிரட்டறீங்க? என்ன செய்ய முடியும் உங்களால? உங்க ரெண்டுப் பேருக்கும் என்னை உங்க பையனோட நண்பனாதான் தெரியும். பக்கா ரூத்லெஸ் பிசினஸ்மேனா தெரியாது. நான் வேறே மாதிரி”-னு விதுரன் சீறினான்.  “உங்க பிள்ளை எட்டப்பனை கண்ணை மூடிட்டு நம்பினேன். அவன் வலையிலே விழுந்தேன்னா, அது நட்புனால மட்டும் தான். தெரிஞ்சிக்கோங்க… இனி உங்க மகன் விழுவான். என் வேதனை, கோபம், ஏமாற்றம் எல்லாத்துக்கும் வடிகால் வேண்டாமா? அவனால நான் மனசளவுலே பட்டக் கஷ்டம், காயம் எல்லாம் கொஞ்ச நஞ்சமில்லே. வீணா உங்க பேச்சுனால அதை அதிகப் படுத்திக்காதீங்க”-னு உறுமவும், “இல்லேப்பா.. அவ புத்தி கெட்டுப் போயி பேசறா.. அதை நீ பெரிசா, சீரியஸா நினைக்காதே”-னு இறங்கி வந்தார் விக்கியோட அப்பா. “ஜாக்கிரதை அங்கிள்.. சொல்லி வைங்க ரெண்டுப் பேர் கிட்டவும்”-னு சொன்னான் விதுரன். அவருக்கு விதுரனோட மனவலிமையும் தெரியும். நித்தியம், வேதம் ரெண்டோட சக்தியும் தெரியும்.

ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு நாலு பேரும் கிளம்பும் போது, “ப்ரதீப்.. சாரி ப்ரதீப்.. என்னை மன்னிச்சுடுங்க.. எனக்கெதுவும் தெரியாது… நான் அப்பாவி ப்ரதீப்.. முழுக்க முழுக்க என் மனசை கலைச்சு என்னை ஏமாத்திட்டாங்க ப்ரதீப். ப்ளீஸ் ப்ரதீப்.. என்னை மன்னிச்சு என்னை ஏத்துக்கங்க ப்ரதீப்”-னு ப்ரதீப்போட கையை பிடிச்சு அழுதா நந்தினி. ரீனா பேயறைஞ்ச மாதிரி ஆனா. மதுரியாவுக்கு சுறு சுறு-னு கோபம் வந்துச்சு. ஆனா ப்ரதீப் எதுவும் பேசாம நின்னான். கையை உருவிக்க முயற்சி கூட பண்ணலே. “ப்ரதீப் ஏதாவது பேசுங்க.. ஏன் தயங்கறீங்க? உங்க செகண்ட் வைஃபை நினைச்சா? நான் பேசறேன் அவங்கக்கிட்ட”-னு அவ பாட்டுக்கு அளக்கவும், “சே… அசிங்கம்” ன்னு கையை உருவினான் ப்ரதீப். அங்கே இருக்கறவங்க யாரு முகத்தையும் பார்க்காம ரெண்டு கையால மூடிட்டான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top