இங்கு விழி மட்டும் விவிதா இருவரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். விவிதா அவள் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து இருந்தாள்,
விழி, அவழுக்கென தனி அறை ஒன்றை குடுக்க அதில் அவள் உடைகளை அடுக்கி வைத்து விட்டு அமர்ந்து இருக்க அவளை தேடி வந்த விழி, சாப்பிட அழைக்க அவளும் சாப்பிட அமர்ந்தாள்…
“எனக்கு சமைக்க தெரியாது” சாப்பாடு ஆர்டர் தான் போட்ருக்கே சாப்டு ”என்று சொல்ல” , “அது எல்லா ஒன்னு இல்ல மேம் எனக்கு ஓகே தான்” என்றாள்.
விவிதா,” நாளைல இருந்து நான் சமைக்குறே நீங்க கவலைப்படாதிங்க” என்று அவள் சொல்ல விழி, சரி என்று புன்னகைத்து” , மேம் வேண்ட விழினே சொல்லு” என்றாள் ….
சாப்பிட்டு முடித்து இருவரும் தூங்க சென்றனர். ஆர்யன், தன்னவழுக்கு அழைத்து பேச ஆரம்பித்தான் அதை கடுப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் வர்மன்…
தாராவோ, சாப்பிட்டு விட்டு தூங்க ஆரம்பிக்க தூக்கத்தில் இருந்த அவளை யாரோ அமுக்குவது போல் இருக்க அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் …..
சுற்றி எங்கும் இருட்டாக இருக்க பயந்து மெதுவாக எழுந்தவள் லைட் ஆன் செய்து பார்க்க யாரும் இல்லை அவள் கை, கால் எல்லாம் நடுங்க பயத்துடன் இரவு முழுவதும் தூங்காமல் அமர்ந்து இருந்தாள்……
காலை பொழுது விடிய ஆரம்பிக்க இரு உருவங்கள் ஒன்றை ஒன்று இறுக்கமாக அணைத்த படி உறங்கி கொண்டு இருக்க மொபைல் அலைப்பு எழுப்ப அந்த சத்ததில் மெதுவாக வர்மன் கண்ணை திறந்து மொபைல் எடுக்க கையை தூக்க அவனால் முடியவில்லை…..
அவன் குனிந்து பார்க்க அவனை இறுக்கி அணைத்து அவன் மேல் காலை தூக்கி போட்டு தூங்கி கொண்டு இருந்தான் ஆர்யன்……
வர்மன், அவனை எழுப்ப “விழி, மாமாக்கு நைட் புல்லா வேலபாத்து டையர்டா இருக்குடி,” “ இன்னும் கொஞ்ச நேரம் மாமா தூங்குறேன்” . …
என்று மீண்டும் தூங்க ஆரம்பிக்க அவனை பிடித்து கீழே தள்ளினான் வர்மன், கீழே விழுந்தது கூட தெரியாமல் “விழி” “ விழி” என்று கனவில் அவளுடன் குடும்பம் நடத்த வர்மன் சலிப்பாக தலை அசைத்து மொபைலை எடுத்து பார்க்க ராம், அழைத்து இருந்தான்….
அப்போது தான் மணியை பார்க்க அது ஒன்பது ஆகி இருக்க வேகமாக குளியலறை சென்று குளித்து முடித்து வெளியே வந்து கோட் சூட் அணிந்து தலை முடியை கண்ணாடியில் பார்த்து சரி செய்தவன் திரும்பி ஆர்யனை, பார்க்க அவனோ, இன்னும் கீழே விழுந்தவன் எழுதுறிக்கமல் உறங்கி கொண்டு இருந்தான்…
அவனை அலேக்காக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன், சூரிய ஒளி அறைக்குள் படாதவாறு திரை சீலைகளை இழுத்து விட்டவன் ஏசியை அதிக படுத்தி வைத்தவன் அறை கதவை அடைத்து விட்டு அலுவலகம் புறப்பட்டான் …..
கீழே வந்தவன் ஆர்யனுக்கு சமையல் செய்யுமாறு சமையலுக்கு புதிதாக வந்த பெண்ணிடம் சொல்லி விட்டு அலுவலகம் நோக்கி பயணிக்க தொடங்கினான் ……
அவன் அலுவலகம் வந்து சேர மணி பத்தை தாண்டி இருந்தது, உள்ளே அவன் நுழைந்ததும்” அனைவரும் wish செய்ய” ஏதுவும் கண்டு கொள்ளாமல் நேராக தன் அறைக்குள் நுழைந்தான்…….
அவனுக்கு முன்பே வந்து விழி, அவனது அறைக்குள் கத்துக்கொண்டு இறுக்க அவளிடம் “சாரி விழி மா” என்றவன் ஒனக்கு என்ன வேலை புடிக்குதோ சொல்லு அதயே நீ பாரு எனக்கு PA வா இருக்கியா என்று வர்மன் கேட்க விழி, திரும்பி அங்கு வேலை செய்து கொண்டு இருந்த விவிதாவை பார்த்தவள் அவர்கள் இருவரும் பேசும் உரையாடலை கேட்காததுப் போல் வேலை செய்ய ஆரம்பித்தாள் ….
திரும்பி வர்மனிடம் “வேண்டாம்” என்றவள் அவனிடம் வெளியில் மற்றவர்களுடன் சேர்ந்து ப்ராஜக்ட் வொர்க் செய்வதாக சொல்ல அவனோ விழியை, முறைக்க அவளோ, “பிளீஸ் அண்ணா” என்று சொல்ல, அவனும் சரி என்றவன் விவிதா, விழியை ப்ராஜெக்ட் டீம்ல சேர்த்து விட்டு வாங்க என்று சொல்ல சரி sir என்றவள் விழியை பார்க்க அவளும் எழுந்து சென்றாள்….
வெளியில் இருந்த டீமிடம் அழைத்து சென்றவள் அவளை அறிமுகம் படுத்தி வைத்து விட்டு வேலை கற்றுக் குடுக்குமாறு ராம் இடம் சொல்லியவள் விழியிடம், கண் அசைத்து விட்டு தன் வேலையை பாரக்க உள்ளே சென்று விட்டாள் … …
விழி, அங்கு இருந்தவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து ராம் சொல்லி குடுக்கும் வேலைகள் எல்லாம் கவனிக்க ஆரம்பித்தாள்…..
உள்ளே சென்ற விவிதா அவள் இருக்கை நோக்கி நகர அங்கு வர்மன் கண்கள் சிவக்க அவளை பார்த்து சொடுக்கிட்டு அழைக்க அவன் அருகில் சென்று நின்று கொண்டாள் அவளை கீழ் இருந்து மேலாக பார்த்தவன்……
இன்று சேலை அணிந்து இருந்தாள், அவள் பயந்து கொண்டு நிற்க அவள் கையை பிடித்து இழுத்து அவளை தன் மடியில் விழ வைத்தவன் அவள் இடையை இறுகி பிடித்து அவள் இதழில் ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான்…..
மீண்டும் வருவான்……