யுகம்-16

இரவானதும் பயத்தினால் அவனுக்காக காத்திருக்காமல் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி விட்டாள். அவளின் அருகாமையில் தன்னை இழக்கும் அவனுக்கும் அது நிம்மதியாக இருந்தது.  காலையில் அவனுக்கு முதல் எழுந்தவள் கீழே போய் மாலதியுடன் நேரம் செலவழிக்க தொடங்கினாள்.

மொத்தத்தில் அவர்கள் சந்திப்பதை முற்றாக தவிர்த்துக் கொண்டனர். இப்படியே நாட்கள் கடந்து விடுமுறை நாளில் வந்து நின்றது. வைஷ்ணவிக்கோ எப்பொழுது லீவு முடியும் என்ற எண்ணமே இருந்தது.

ஞாயிற்றுகிழமை என்றும் பாராமல் அவளை தவிர்ப்பதற்காகவே அவன் அலுவலகத்திற்கு செல்ல தொடங்கினான். அன்று அதி காலை வைஷ்ணவிக்கு ஒரே அலுப்பாக இருந்தது. வர்ஷினிக்கு கால் பண்ணி பேச தொடங்கினாள். “ஹாய் அக்கா?எப்படியிருக்க?” என்று கேட்க, “நல்லா இருக்கிறேன் டி … கொஞ்சம் உடம்பு முடியாம இருக்கு…” என்றாள் வர்ஷினி.

“என்னாச்சு?” என்று உண்மையான கவலையுடன் விசாரிக்க… வர்ஷினியோ வெட்கப்பட்டவாறு, “ஐ திங்க் ஐ அம் ப்ரெக்னன்ட் … ஆதிக்கு முக்கியமான வேலை என்று விரைவாகவே  ஆபீஸ் போய்ட்டார். வந்ததும் தான் செக் பண்ணி உறுதிப்படுத்தணும். உன் கிட்ட தான் முதலில சொல்லி இருக்கிறேன். ஆதி கிட்ட கூட சொல்லல… உறுதிப் படுத்திட்டு எல்லார் கிட்டயும் சொல்லலாம்னு இருக்கிறேன்” என்றதை கேட்டதும் தான் தாமதம்.

கட்டிலில் ஏறி நின்று குதித்தவாறே, “உண்மையாவா சொல்லுற? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்போவே எல்லார்ட்டையும் சொல்றேன்.என்னால உன்ன போல எல்லாம் மறைச்சு வைக்க முடியாது… பை.” என்று குதூகலித்தவாறு தொலைபேசியை அணைத்து கட்டிலில் போட்டவளுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. 

குழந்தை போல் அங்கும் இங்கும் தாவி திரிந்தவள், “இதை அத்தை கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லணும்…” என்று குழந்தை போல தாவி தாவி கீழே இறங்கினாள். அவள் தாவி வருவதை பார்த்த ஆத்ரேயன், ‘இவ எதுக்கு குரங்கு போல நடந்துக்கிறா?’ என்று சிந்தித்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“அத்தை நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி பாப்பா வரப்போகுது” என்று கத்தியபடி  மாலதியிடம் ஓடி வந்தாள். இதை கேட்டதும் ஆத்ரேயனுக்கு புரை ஏறியது. முன்னால் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்த்திகேயனோ ஆத்ரேயனை பார்த்து புன்னகைத்து, “காங்கிராட்ஸ் மை சன்” என்றார். வலுக்கட்டாயமாக சிரித்தவனுக்கு யோசனை தோன்றியது. அந்நிலையில் யாருக்கும் வர்ஷினி நினைவு வரவில்லை.

மாலதியும் சந்தோஷமாக வைஷுவை அணைத்துக் கொண்டார். “நல்ல விஷயம் சொல்லி இருக்கேம்மா. ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் தலையை வருடியபடி. அவளும் வாகாக அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள். “இரு பாயசம் செய்து வர்றேன்.நீ நல்லா சாப்பிடணும்” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தார். ஆத்ரேயன் நெற்றியில் புருவ முடிச்சுடன் வைஷ்ணவியை நோக்கினான். அவள் முகத்தில் சந்தோசத்தை தவிர எதுவும் தெரியவில்லை.

எங்கே வைஷ்ணவியின் வாழ்கை கெட்டுவிட்டது என்று மறுகியவர்களுக்கு இது பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. அவர்களுக்கு தெரியவில்லை கர்ப்பமாக இருப்பது வர்ஷினி என்று. சாப்பிட்டு விட்டு கை கழுவ வந்த ஆத்ரேயனிடம்,

“என்னடா உன் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா உன் முகத்திலே சிரிப்பையே காணோம்” என்றார். அவனும் வலுக்கட்டாயமாக சிரித்து விட்டு வைஷ்ணவியை நோக்கிச் சென்றான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி அருகிலிருந்த கதிரையில் அவளை நெருங்கி இருந்தவன் வைஷ்ணவியிடம் காதருகில், “ஹொவ் இஸ் திஸ் பாஸிபிள்?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். அவள் ஒரு புரியாத பார்வையை அவனிடம் வீசினாள். “சொல்லுடி நீ எப்படி கன்சீவ் ஆன?” என்று சீறினான். கார்த்திகேயனுக்கு கேட்காதவாறே…

அப்போதுதான் அவளுக்கு விளங்கியது ஆத்ரேயனின்  கோபத்துக்கான காரணம். ‘ஒரு வேளை இவன் லூசா இருப்பானோ?’ என்று மனதில் நினைத்தவாறே வந்த சிரிப்பை  அடக்கிக் கொண்டு, “நீங்க மறந்துட்டீங்களா? நான் இங்க வந்த அன்று போதையில் வந்தீங்க தானே… அன்னைக்கு உங்கள அறியாமலே எல்லாம் நடந்து போச்சு” என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

இதை கேட்ட ஆத்ரேயன் தலையில் இடி சத்தமில்லாமல் இறங்கியது. அவன் குடித்திருந்தாலும் ஒரு நாளும் நிதானம் தவறியவனில்லை. தலையில் கை வைத்தபடி அமர்ந்தவனுக்கு எவ்வளவு யோசித்தும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. அன்று வைஷ்ணவியை தள்ளிவிட்டு தூங்கியது மட்டுமே நினைவிருந்தது. இதை பார்த்த வைஷ்ணவிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தாலும் கார்த்திகேயன் அருகிலிருந்ததால் அடக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது மாலதி பாயசத்துடன் வந்து வைஷ்ணவிக்கு வாய்க்குள் பாயசத்தை ஊட்டிவிட்டு, “இந்த மாதிரி நேரத்தில் இப்படி மாடியிலருந்து தாவி இறங்க கூடாதும்மா….  எப்படிம்மா கல்லூரியில் தனியாக சமாளிக்க போகிறாய்? ஆத்ரேயனும் பக்கத்தில் இருக்க மாட்டானே” என்று கவலைப்பட்டபடி  பாயசத்தை கார்த்திகேயனுக்கும் ஆத்ரேயனுக்கும் கொடுத்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வைஷ்ணவி, ‘இந்த நெட்டையன் தான் லூசு என்று பார்த்தா  குடும்பமே லூசா இருக்கும் போலயே’ என்று நினைத்துக்கொண்டு இனி மறைத்தால் விபரீதமாகிவிடும் என்று தோன்ற, “ஐயோ அத்தை நான் கர்ப்பம் இல்ல வர்ஷினி தான் கர்ப்பம்” என்று கூறியவாறு சத்தமாக சிரித்தாள்.

சந்தேகமாக பார்த்த மாலதியிடம், “இப்போ தான் வர்ஷினி கால் பண்ணினா… ஆதி அத்தான் வீட்டில் இல்லையாம்…  ஈவினிங் டாக்டர் கிட்ட கன்போர் ம் பண்ணிட்டு எல்லார் கிட்டயும் சொல்றேன்னு சொன்னா… எனக்கு தான் ஓட்ட வாயே அத்தை…  அதான் உளறிட்டேன்” என்று வெகுளியாக சொன்னபடி பாயசத்தை சாப்பிட்டாள். அவள் முதுகில் இரு அடிகளை போட்ட மாலதி, “எதையும் விளக்கமா சொல்ல மாட்டியா?” என்று சிரித்தவாறே கேட்டார். “வர்ஷினியும் பாவம் தனியா அங்கே இருந்து என்ன பண்ண போறாளோ… அந்த ஆதி எப்போவும் அவளை விட்டிட்டே இருக்க மாட்டான்” என்று கவலைப்பட்டார்.

இதனை கேட்ட பிறகு தான் ஆத்ரேயனுக்கு மூச்சு விடக்கூடிய போல இருந்தது. அவளை உறுத்து விழித்து விட்டு பாயசத்தை சாப்பிட தொடங்கினான். வைஷ்ணவியோ அவனை நோக்கி நாக்கை துருத்தி காட்டி விட்டு தொடர்ந்து சாப்பிட்டாள். சாப்பிட்டு நிறைய நேரமாகியும் அலுவலகத்துக்கு செல்லாமல் அவ்விடத்திலேயே இருந்த மகனை பார்த்து, “நீ இன்று வரலையா?” என்று கேட்டார். “நீங்க போங்க நான் வர லேட் ஆகும்” என்றவன் தொலைபேசியை நோண்ட தொடங்கி விட்டான்.

‘இவன் இன்னைக்கு போக மாட்டானா?’ என்று யோசித்தவள் சாப்பிட்டு விட்டு மாடியேறி விட்டாள். அதுக்காகவே காத்திருந்த போல அவனும் பின்னாடியே போனான். இருவரையும் பார்த்த மாலதி மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.

அவள் அறைக்குள் சென்றதும் பின்னால் சென்றவன் அறைக்கதவில் சாய்ந்திருந்தபடி சொடக்கிட்டான். ‘ஐயோ இந்த வானரம் இன்னும் போகலையா?’ என்று யோசித்தவள் திரும்பி பார்த்தாள்.

பெரு மூச்சொன்றை விட்டவன் அவளை நோக்கி, “நீ என்ன தான் மனசில நினைச்சுட்டு இருக்க? நமக்கு விவாகரத்து ஆக போகுது. ஆனா நீ பேசுற பேச்சு உனக்கு என் கூட வாழ ஆசை என்று சொல்லுது. உனக்கு பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க தெரியாதா? எப்போ பார்த்தாலும் என் பின்னாடி சுத்திக்கிட்டு… டூ யூ வாண்ட் மீ டு மேக் லவ்? அதுக்காக தான் என்ன உசுப்பேத்தி விடுறியா ? என்ன மயக்கி உன் கூட நிரந்தரமாக வாழ வைக்க பிளான் பண்றியா? ஆண்களை மயக்கி திரியும் உன்னை போன்ற பெண்களுக்கு  பெயர் என்ன தெரியுமா?” என்று பச்சையாக கேட்டான்.

அவனுக்கு அவள் மேல் வந்த ஈர்ப்புக்கும் காதலுக்கும் அவளே காரணம் என்று பழி போட்டான்.

அவன் கேள்வியில் ஆடி போனாள்.

மனதால் கூட அவன் 

கூறியது போல் அவள் நினைத்தது கிடையாது… இது வரைக்கும் விளையாட்டுக்காகவே அவன்  கூட பேசி இருக்கிறாள் பழகி இருக்கிறாள். அதற்காக என்ன வார்த்தை சொல்லி விட்டான்…  இது இரண்டாம் தடவை. இவன் நாக்கில் கத்தியை வைத்து விட்டா சுற்றுகிறான் என்று   மறுகியவளுக்கு கண்ணீர் புகு புகுவென வெளியேறியது.

கோவம் கொப்பளிக்க கண்ணீருடன் அவனை நோக்கியவள் அவனை திருப்பி காயப்படுத்தும் பொருட்டு,

“அப்படி நான் மயக்கணும்னா அதுக்கு நீ ஆம்பளையா இருக்கணும்.” என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர் பார்க்காமல் வாசலில் நின்ற அவனை தள்ளிவிட்டு விறு விறு என்று கீழே வந்துவிட்டாள்.

அவள் கூறியதை கேட்ட ஆத்ரேயனின் முகம் கோபத்தில் சிவந்து அவன் மீசை கூட துடித்தது.

அவள் சற்று நேரம் அங்கு நின்றிருந்தால் அவள் உயிருடன் இருப்பாளா என்றே சந்தேகம். கோபத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் குளியலறைக்குச் சென்றவன் உடையுடனேயே தலையில் நீர் பட நிறைய நேரம் ஷவர்க்கு கீழே நின்றான்.

கோபத்தை குறைக்க பயிற்சி பெற்றவனால் அவனின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான். சாந்த சொரூபியானவர்களுக்கே இவ்வாறான வார்த்தைகள் இல்லாத கோபத்தை உருவாக்கி விடும்… ஆத்ரேயனோ கோபத்துக்கு பெயர் போனவன். நீரினால் கூட அவனின் கோபத்தை தணிக்க முடியவில்லை. வெளியே வந்தவன் உடை மாற்றிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.  அவன் செல்வதை சமையலறையில் ஒளிந்து நின்று பார்த்தவளுக்கு அவனின் வேக நடையே கோபத்தின் அளவை பறை சாற்றியது.

விளைவை யோசிக்காமல் பேசி விட்டு வந்தவளுக்கு மனம் பாரமாக இருந்தது. அவனை நினைத்து பயமாகவும் இருந்தது. மாலதி கார்த்திகேயனை மீறி எதுவும் நடக்காது என்ற தைரியத்தில் அவ்வீட்டில் வலம் வந்தாள். மன பாரம் குறையாமல் இருக்க கதை புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்க தொடங்கினாள்.

வீட்டை விட்டு வந்தவனுக்கு அவள் பேசிய வார்த்தைகள் மட்டுமே தலையில் ஓடிக் கொண்டிருந்தது. மனதை சாந்தப்படுத்த பூங்கா, கடற்கரை என்று எல்லா இடமும் காரில் சுற்றியவன் அதுவரை பன்னிரண்டு சிகரெட்களை ஊதி தள்ளி இருந்தான். அப்போவும் மனம் கேட்காமல் காரை பப்புக்குள் விட்டான்.

கவலையை மறக்க குடிப்பதாய் நினைத்து கவலையையும் கோபத்தையும் அதிகரித்துக் கொள்கின்றனர் நம்மூர் ஆண்கள். அதுக்கு அவன் மட்டும் விதிவிலக்கா என்ன? போதை ஏற ஏற கோபம் இறங்குவதிற்கு பதில் அவளை பழி வாங்க வேண்டுமென்ற வன்மமே அவன் மனதில் உருவானது. கண்கள் சிவக்க போதையுடன் வீட்டை அடைந்தவன் யாரையும் பார்க்காமல் மாடியேறி விறு விறுவென மேலே போனான்.

தான் பேசிய பேச்சின் வீரியத்தை நினைத்து ஏற்கனவே பயந்தபடி இருந்தவள் கதவு தட்டும்

சத்தம் கேட்டு எழும்பி கதவை திறந்தாள். சிவந்த கண்களுடனும் கலைக்கப்பட்ட தலையுடனும் மதுவும் சிகெரெட் உம் கலந்த நெடியிடனும் வந்தவனை பார்க்க வைஷ்ணவிக்கு கிலி ஏற்பட்டது.

அத்தை மாமா இருக்கும் போது ஒன்றும் செய்யமாட்டான் என்ற தைரியத்தில் கதவை திறந்து விட்டு அவனை பார்க்காமல்  விறு விறுவென கட்டிலை நோக்கி நடந்தாள். சேர்த்து வைத்திருந்த கோபம் மேலிட தாவிச் சென்று அவளுடைய சட்டையை பிடித்து இழுத்ததில் இரவு உடையின் ஒரு துண்டு கிழிந்து அவன் கையுடன் வந்தது. திடுக்கிட்டு திரும்பியவள், “என்ன பண்றீங்க??” என்று கேட்டது தான் தாமதம் அவளை கட்டிலில் தள்ளி அவள் மேல் விழுந்தவன் அவளது இதழ்களை சிறை செய்திருந்தான்.

சிகரெட் நெடி மது நெடி இரண்டும் சேர்ந்ததால் அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. மென்மையாக இதழை கவ்வியவன் அவளின் வார்த்தைகள் நினைவு வர அவளை மிக மிக வன்மையாக கையாண்டான். அவனின் வன்மையான தாக்குதலில்  திக்கி திணறியவள் முடிந்தளவு தன்னை அவனிடமிருந்து காப்பாற்ற போராடினாள். திடகாத்திரமான ஆண்மகனிடமிருந்து விடுபட அவள் செய்த போராட்டம் தோல்வியிலேயே முடிந்தது.

“ப்ளீஸ் என்ன விடுங்க… நான் பேசினது தப்பு தான் என்ன மன்னிச்சிருங்க… ஒரு பெண்ணோட விருப்பமில்லாம பலாத்காரம் பண்றது தப்பு…” என்று மனம் வெம்ப அவனிடம் காலில் விழாத குறையாக கை கூப்பி மன்றாடினாள்.

அவளின் கதறலால் கோபமடைந்தவன் கன்னத்தில் இறுக்கி ஒரு அறையை விட்டபடி, “நீ தானேடி கேட்ட நான் ஆம்பளையா என்று அதை நான் நிரூபிக்க வேணாமா???” என்று  வன்மையாக உரைத்தவன் அதே வன்மையுடன் அவளில் தன்  தேடலை தொடங்கினான்.

வலி பொறுக்க முடியாமல் கதறியவளின் இதழ்களை தன் இதழ்களால் அடக்கி சத்தம் வெளி வராமல் செய்தவனுக்கு,  தெம்பில்லாமல் இருந்த அவளை அடக்கி ஆள்வது பெரிய விடயமாக தெரியவில்லை. அவள் கனவு ஆசை எல்லாம் ஒரு நொடியில் சிதைந்து போனது.

அப்போது கூட தன்னை பற்றி மட்டும் யோசிக்காமல் ‘என்னாலேயே இந்த வலியை  தாங்க முடியவில்லையே அந்த பிஞ்சு குழந்தைகளை காமுகர்கள் துவம்சம் செய்யும் போது அந்த குழந்தைகள் என்ன பாடு பட்டிருக்கும்’ என்று  நினைத்து அவர்களுக்காகவும் சேர்த்து கண்ணீர் விட்டாள்.

எப்படி தொடங்க வேண்டிய தாம்பத்யம் அவளின் எதிர்பார்ப்பு அனைத்தையும் தவிடு பொடியாகிவிட்டு சேற்றில் மலர்ந்தது. அவள் உடல் முழுதும் காயப்படுத்தி விட்டு எழுந்தவனுக்கு அதுவும் திருப்தியில்லாமல் போக மேசையிலிருந்த தனது பர்ஸ் இலிருந்து காசை எடுத்தவன் அவள் முகத்தில் வீசி எறிந்துவிட்டு,  “என்னை பொறுத்த வரைக்கும் நீ விபச்சாரி தான்” என்ற நா கூசாமல் வன்மமாக உரைத்தவன் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அவளுக்கு யாரோ தன்னை உயிருடன் ஈட்டியால் குத்துவது போன்ற வலி ஏற்பட்டது. உடல் வலி மன வலி இரண்டும் சேர்ந்து எழ முடியாமல் மனதுக்குள்ளேயே  மரணித்து போனாள். குளித்து விட்டு வெளியே வந்தவன் அதே இடத்தில் அவள் எழாமல் அப்படியே இருப்பதை கண்டு, “நீ இருக்கும் தோரணையை பார்த்தால் இன்னொரு  முறை என்னை கூப்பிடுற போலவே இருக்கு” என்று சொன்னவன் அறையை விட்டு வெளியேறினான்.

காலையிலிருந்து அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பு இப்போது தான் அணைந்தது. அவள் வலியில் சந்தோசம் காணும் கொடூரனாய் மாறி போனான். 

அவன் கொன்று புதைத்தது அவனின் காதலுடன் சேர்த்து அவளின் காதலையும் தான்.

எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல் செந்தணலை அவள் மீது வாயால் வாரி இறைத்து விட்டு போயிருந்தான். பதறி எழுந்தவள் நடக்கவே முடியாமல் குளியலறைக்குச் சென்று தன்னை கண்ணாடியில் பார்த்தாள். அவன் அறைந்ததால் கன்னம் வீங்கியும் உதட்டில் இருந்து ரத்தம் கசிய உடல் முழுதும் கன்றியும் வீங்கியும் இருந்தது. வெறி நாய் கடித்தது போல் அவளை குதறி இருந்தான்.

மனசாட்சி கிலோ என விலை என்று கேட்கும் ரகமாகி போனான் அவன். குளிக்க ஷவர் ஐ  திறந்தவளின் காயங்களில் தண்ணீர் பட அவ்வலியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டாள்.  ஒரு பறவையின் இறக்கையை உடைத்ததை அறியாதவன் தனது வேலைகளில் மூழ்கி போனான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top