விழி 3

தங்களின் கண் முன்னால் நடந்த அருவா வெட்டும், அதோடு தங்களின் மேல் தெறித்த உதிரத்தையும் கண்டவர்களுக்கு உடல் அதிர்ந்து தூக்கி வாரி போட்டது..

 இருவரையும் பார்த்து  இகழ்ச்சியாக இதழ் வளைத்து சிரித்தவன், வெட்டியவனை தன் தோளில் போட்டு சென்று விட்டான்..

 அவன் சென்று சிறிது நேரம் கழித்து தான் நிதானத்திற்கு இருவருமே வந்தனர்..

 அதில் மீனாட்சி “என்ன இவன்? இப்படி நடுரோட்டில் ஒருத்தன போட்டு வெட்டுகிறான்,  யாரும் எதுவும் கண்டுக்கல. இப்படிப்பட்டவனை எல்லாம் போலீஸ்ல தான் புடிச்சு கொடுக்கணும். ஆனா, யாருக்கும் தைரியம் வர மாட்டேங்குதே!.. அதனாலதான் இப்படிப்பட்டவன் எல்லாம் தைரியமா ரோட்ல ஒருத்தன கொலை பண்ண முயற்சி பண்ணிட்டு போயிட்டு இருக்கான்..” என்று வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருந்தாள்..

 ஆனால், சுவாதிக்கு தான் என்ன செய்வதென்றே தெரியாமல் பதற்றத்தில் வாய் வழியாக சுவாசித்துக் கொண்டிருந்தாள்..

இதயமோ, ரேஸ் பந்தயத்தில் ஓடும் குதிரையை விட அதிவேகமாக துடித்துக் கொண்டிருந்தது..  

அவளால் நிதானமாக சுவாசிக்க முடியவில்லை..

 நிற்க முடியவில்லை..

 கை கால்கள் எல்லாம் நடுங்கியது..

 அப்போதுதான் வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி முடித்தவள் தன் பக்கவாட்டில் நின்றிருக்கும் சுவாதியை கண்டாள்..

 அவளின் பதற்றத்தை கண்ட மீனா “அச்சோ! என்னடி ஆச்சு?ஏன் இப்படி எல்லாம் உடம்பு நடுங்குது? பயப்படாத ஒன்னு இல்ல. அவன் போயிட்டான்..” என்று பதறியபடி தன் தோழியே அணைத்துக் கொண்டாள்..

அணைத்திருந்தவளுக்கு நன்கு தெரிந்தது சுவாதியின்  உடலின் அதிர்வு..

 “ஒன்னும் பிரச்சனை இல்ல சுவாதி நீ பயப்படாத..” என்று முதுகை வருடி கொடுத்தாள்..

அப்படியும் சுவாதியின் பதற்றம் குறையவில்லை..

 மீனா நினைத்தது என்னவோ! தன் முன்னால் வெட்டுப்பட்டவனையும், அவனின் உதிரத்தையும் கண்டு தான் சுவாதிக்கு  இந்த பதற்றம் என்று..

 ஆனால், விஷயமோ வேறு..

“ ஸ்வாதி ரிலாக்ஸ் ஆகு. ஒன்னும் பிரச்சனை இல்ல..” என்று அங்குள்ள இருக்கையில் அமர வைத்தவள் பையில் இருந்து தண்ணீர் போத்தலை எடுத்துக் கொடுத்து தண்ணீர் அருந்த  வைத்தாள்..

 சற்று நேரத்தில் ஆசுவாசமானவள் நிம்மதியான மூச்சை இழுத்து விட,

“ என்ன ஆச்சு சுவாதி? இதற்கெல்லாமா போய் பயப்படுவ!  நீ நார்மல் ஆகு. ஒன்னும் பிரச்சினை இல்ல..” என்று அவளின் முதுகை வருடி கொடுக்க 

அவளுக்கு கண்கள் பனித்து கண்ணீர் அருவியாய் கன்னம் தாண்டி வழிந்தது..

சுவாதி எதற்கு அழுகிறாள் என்று மீனாவுக்கு ஒன்றுமே புரியவில்லை..

 ‘வெட்டுப்பட்டவனுக்காகவா இந்த கண்ணீர். அவ்வளவு தைரியமானவள் அற்றவளல்லவே!.. 

இருவரும் சேர்ந்து காலேஜ் படிக்கும் போது இதுபோல எத்தனையோ வெட்டுக்காயங்களை பார்த்திருக்கிறாள்..

 உதிரத்தை கண்டிருக்கிறாள்..

 தான் பதற்றப்பட்டாலும், இவள் பதறாமல் முதலுதவி செய்தவள் ஆயிற்றே!..

காலேஜில் ஸ்ட்ரைக் நடந்த போதிலும் இவள் தானே அடிபட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தாள்..

 தைரியமானவள்! இப்போது பதறுவதற்கு காரணம் என்னவாக இருக்கும்?’ என்று குழம்பிப் போனாள்..

சுவாதியின் கன்னம் ஏந்தி தன்னை பார்க்கச் செய்தாள்..

“எனக்கு தெரியும் நீ இவ்ளோ பதற்றப்படுபவள் கிடையாது! எதையும் சுமுகமாக எடுத்துட்டு போறவ. நீயே பதறுறன்னா என்னன்னு என்கிட்ட சொல்லு?” என்று அவளின் கண்ணை கூர்ந்து பார்த்து கேட்க 

 “போச்சு டி!.. எல்லாம் போச்சு டி!..” என்று அழுக மீனாவுக்கு எதுவுமே புரியவில்லை 

“என்ன போச்சு? எனக்கு ஒன்னும் புரியல! நீ முதல்ல ஏன் இப்படி பயப்படுற?”

“ நான் வெட்டியதை  பார்த்ததனால் பதறல டி..”

“ அப்புறம்!”

“ ஐயோ எனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளையே அவன் தான்டி..” என்றதும் 

“வாட்?” என்று அதிர்ந்து இருக்கையில் இருந்து எழுந்தாள்..

“ஆமா, எங்க அப்பா பார்த்திருக்க மாப்பிள்ளையே இவர்தான். இவர் பெயர் தான் ஈஸ்வர்..”

“நீ என்னடி பாவம் பண்ண உங்க அப்பாவுக்கு. உனக்கு போய் ஒரு ரௌடிய, கொலை பண்றவன மாப்பிள்ளையா பார்த்து இருக்காரு. இப்படிப்பட்டவன நீ கல்யாணம் பண்ணி என்னடி பண்ண போற? வாழ்க்கை ஃபுல்லா நரகம் டி. படிச்ச பொண்ணு தானே நீ! எப்படியும் இவரை விசாரித்து இருப்பீங்களே? அப்பவே வேணாம்னு சொல்லி தொலைக்க வேண்டியது தானே!” என்று தன் தோழிக்கு இப்படி ஒரு வாழ்க்கையா அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் மீனா கத்திக் கொண்டிருக்க..

“அச்சோ! அவங்க ரெண்டு பேரும் பிசினஸ் பார்ட்னர்ஸ் டி..”

“ என்னது பிசினஸ் பார்ட்னர்ஸா? அப்போ, அதுல மட்டும் பார்ட்னரா இருக்க வேண்டியதுதானே! உன் வாழ்க்கையையும் சேர்த்து கோர்த்துவிட்டு, பார்ட்னர் ஆகலாம்னு பார்க்குறாரா உங்க அப்பா..” என்று கோபமாக கத்த 

“அய்யோ இல்லடி. இவரு செங்கல் சூளை வைத்திருக்கிறார். இந்தியா முழுவதும் இவருக்கு கிளைகள் இருக்கு. பிரபலமான ஆளு தான். அதுமட்டுமல்ல, சென்னையில் கவர்ன்மெண்ட் மீனவர்களுக்காக கட்ட போற குடியிருப்பு ப்ராஜெக்ட் இவருக்கு தான்டி கிடைச்சிருக்கு..”

“ நீ என்ன சொல்ற எனக்கு புரியல?” என்றாள் மீனா..

 உண்மையில் அவளுக்கு இங்க என்ன நடக்கிறது என்று புரியவில்லை..

“ ப்ச்! எங்க அப்பாவுக்கு தான் அந்த ப்ராஜெக்ட் கிடைக்கனும். ஆனால்,  ஒரு ரூபா குறைவா கொட்டேஷன் போட்டதனால அந்த ப்ராஜெக்ட் இவருக்கு போயிடுச்சு. தன்னையே எதிர்க்க வந்துட்டானே! என்ற ஆதங்கத்தில் தான் அவரோட பிசினஸ் பார்ட்னராவும் கூட சேர்ந்து என் வாழ்க்கையும் முடிச்சு போட்டாரு..”

“ நல்லா முடிச்சு போட்டாரு போ! அவிழ்க்க  முடியாத முடிச்சு..” என்றாள்  சலிப்பாக 

“எனக்கு பயமா இருக்குடி. நான் மாப்பிள்ளை படிக்கலனாலும் செங்கல் சூளை  வைத்து, இந்தியா முழுக்க பிரபலமா இருக்காரு அப்படிங்கறனாலதான் சரின்னு ஒத்துக்கிட்டேன். ஆனா, அவரு கொலைகாரனால்ல இருக்காரு! பயமா இருக்குடி! இனமே என்னால இவரை  கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது..” என்ற சுவாதியிடம் 

“இதை என்கிட்ட ஏன்  சொல்ற? போ! போய் உங்க அப்பா கிட்ட சொல்லு..” என்று மீனா கூற

“ அச்சோ அதுதான் முடியாதே!” என்றாள் இரண்டு கைகளையும் உதறியபடி 

“என்னடி உங்க அப்பா கிட்ட சொல்ல உனக்கு என்ன பயம்?”

“ இல்லடி எங்க அப்பா கிட்ட சொல்ல முடியாது. அதுவும் பத்திரிக்கை அடிச்சாச்சு. இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம். இப்போ போயி எனக்கு கல்யாணம் வேண்டாம், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொன்னால் அவ்வளவுதான். எங்க அப்பாவே என்னை கொண்ணு பொதச்சிடுவாரு..”

“ பரவாயில்ல சாவு. இவனோட வாழ்க்கை முழுக்க தினம் தினம் சாவதற்கு, ஒரே நாள்ல செத்துப் போயிரலாம். மரியாதை போய் உங்க அப்பா கிட்ட இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லு. தயவு செஞ்சு சொல்லுடி. உன் வாழ்க்கை உன் கையில தான் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னோ! அவனை திருத்திரலாம் என்றோ! இந்த  மயிரு   மண்ணாங்கட்டி எல்லாம் யோசிக்காத. புரியுதா! ஒழுங்கா இன்னைக்கே போய் சொல்லு..” என்று அவளை ஆறுதல் படுத்தி, ஊக்கம் கொடுத்து அனுப்பி வைத்தாள் மீனா..

இந்த ஊக்கம் அவளுக்கு துணை நிற்குமா பார்ப்போம்!..

அன்று சுவாதி கிளம்பியதுதான் நான்கு நாட்கள் முடிந்து இருந்தது..

 அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை..

 மீனா கால் செய்தாலும் அது  ஏற்கப்படவில்லை..

 பதற்றம் தொற்றிக் கொண்டது மீனாவுக்கு..

 “என்னாச்சோ? ஏதாச்சோ?..” என்று 

அன்று பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தாள் மீனா..

 அப்பொழுது ஜீப் ஒன்று இவளை இடிப்பதைப் போல கடந்து சென்றது..

“ யார்ரா அவன்? இடிச்சுட்டு போகிற மாதிரி போறான். வண்டி ஓட்ட தெரியலன்னா எதுக்குடா வண்டி ஓட்டுறீங்க! இவர்களுக்கும் லைசன்ஸ்  குடுத்துடுறாங்க. அப்புறம் இஷ்டத்துக்கு ஆக்சிடென்ட் பண்றாங்க..” என்று கருவிக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றாள்..

 ஓரிடத்தில் அவளின் கூர்பார்வை குத்தி நின்றது..

 சிந்தனையில் வந்து சென்றான் அன்று அருவாவை தூக்கி வெட்டியவன்..

 மீனா கண்களை அகல விரித்துப் பார்க்க, அவனோ ஒரு பெண்ணின் தோள்  மீது கை போட்டு மிக நெருக்கத்தில் நின்று இருந்தான்..

“ யார் இவள்? ஸ்வாதி இல்லையே! எந்த பொண்ணு கூட நிக்கிறான். இன்னும் மூணு நாள்ல கல்யாணம், ஆனால், இவன் வேற யாரு கூடவோ நின்னுட்டு இருக்கான்..”  என்றவள் பின்தொடர்ந்தாள் அவனை..

 அவனோ! அப்பெண்ணிற்கு  தேவையான சில பொருள்களை வாங்கியவன், அவனுக்கும் சில பொருள்களை வாங்கினான்..

 அதை கண்டவளுக்கு முகம் அஷ்ட கோணலாய் சுருங்கியது..

 “இவன் கொலை பண்றவன் மட்டும் இல்லை, பொண்ணுங்க விஷயத்துலையும் டேஞ்சர் போலிருக்கே. அச்சோ! ஸ்வாதி இவனோட க்ரைம் ரேட் ஏறிக்கொண்டே போகுது. நீ என்னதான் விசாரிச்சியோ?” என்று புலம்பினாள்

 அப்பெண்ணெய் கூட்டிக்கொண்டு ஆடவன் சென்றுவிட, மீனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

 ‘இந்த விஷயத்தை உடனே சொல்லி ஆகணும்..’ என்றவள் சுவாதி வீட்டிற்கு பயணித்தாள்..

‘ என்ன ஆனாலும் சரி! அவங்க அப்பா நம்மள எவ்வளவு திட்டினாலும் சரி, நம்ம இன்னைக்கு சுவாதியை பார்த்து விஷயத்தை சொல்லியே ஆகணும்..’ என்ற முடிவுடன் அவள் வீட்டு வாசலில் நின்று இருந்தாள்..

 ஆம் சுவாதியின் அப்பா  வசதி படைத்தவர். அதனால் தங்களுக்கு இணையாக இல்லாதவர்களை எள்ளளவும் மதிக்க மாட்டார்..

 மீனாவின் குடும்பம் நடுத்தர குடும்பம் தான். இவள் சம்பாத்தியத்தில் தானே குடும்பமே நடந்து கொண்டிருக்கிறது..

 அதனால் சுவாதி இவளிடம் பேசினால் கூட ‘பேசக்கூடாது’ என்று கண்டிப்பு இருக்கத்தான் செய்தது இதுவரைக்கும்..

 அதையும் மீறி தான் மீனாவிற்கு அவள் பத்திரிக்கை வைக்க வந்தது..

 மீனாவுக்கும் இவ்விஷயம் நன்கு தெரியும். அதனால் தானே, சுவாதியை விட்டு பிரிந்து இருந்தாள்..

‘ உயிர்த்தோழி அல்லவா! தன் துயரில் பங்கு கொண்டவள். தன் மகிழ்சியை இரட்டிப்பாக்கியவள். தன்னால் அவளுக்கு எதுவும் நிகழக் கூடாது..’ என்று எண்ணி அவளை விட்டு பிரிந்து இருந்தாள்..

 ஆனால், அத்தனை மனக்கட்டுப்பாடையும் தகர்த்தெறிந்து இன்று தோழியின் வாழ்க்கைக்காக, அவளை சந்திக்க, அவளின் வீட்டின் முன்னே நின்றிருந்தாள்..

 காலிங் பெல் அழுத்தப்பட வீட்டில் வேலை செய்யும் வேலையால் “யாருமா நீ?” என்று கேட்டார் 

தன் தாய் வயதை ஒத்துடையவராக இருக்க, “அம்மா நான் சுவாதியோட ஃபிரண்டு. ஸ்வாதியை பார்க்க வந்திருக்கிறேன். சுவாதி இருக்காளா?” என்று கேட்டாள்..

 “சுவாதி அம்மாவா இருக்காங்க. உள்ள தான் இருக்காங்க. நீங்க வாங்க..” என்று அழைத்துக் கொண்டு ஹாலில் போடப்பட்டிருக்கும் சோபாவில் அமர வைத்தவர், அவளுக்காக ஜூசை எடுக்க சென்றார்..

 போன் பேசியபடியே படிகளில் சுவாதியின் தந்தை கஜேந்திரன் இறங்கி வந்து கொண்டிருந்தார்..

 சுவாதிக்கு தாய் இல்லை. அவள் பள்ளி படிப்பை முடிந்து காலேஜ் அடி எடுத்து வைக்கும் போது தான் அவளின் தாய் மாரடைப்பால் இயற்கை எய்தினார்..

 அந்த துயரிலிருந்து மீட்டுக் கொண்டவள் மீனா தான்..

 அதனால்தான் இருவருமே உயிர் தோழிகளாக இருந்தனர்..

 மீனாவை கண்டதுமே கஜேந்திரனின் முகம் இருகியது..

“ யார் அங்கே?” என்று சத்தமிட்டு அழைத்து இருந்தார் வேலை ஆளை..

“ ஐயா..” என்று நால்வர் ஓடி வந்தனர் அவர் முன்பாக

“ கண்டவங்களை எல்லாம் வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்ததும் இல்லாம, என் வீட்டு சோஃபாவிலேயே உட்கார வைத்திருக்கிறீர்களா?” என்றார் கர்ஜனையாக

 மீனாவிற்கு புரிந்தது. தன்னைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று..

 சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்..

 “இவங்க சுவாதி அம்மாவ பார்க்க வந்தாங்க ஐயா! அம்மா பேரை சொன்னதுனால உள்ள விட்டோம்..”  என்று கூற

“ பெயரை யார் வேணாலும்  சொல்லலாம். அதுக்காக எல்லாரையும் உள்ள கொண்டு வந்து உட்கார வைத்து விடுவீங்களா. தகுதி தராதரம் பார்க்க வேண்டாம்..” என்று கூற

மீனாவிற்கு சுருக்கு என்று வலித்தது..

‘ தான் மட்டும் என்ன விரும்பியா இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளேன். என் நிலை! நான் என்ன செய்ய?’ என்று நினைத்தவளுக்கு கண்கள் கலங்கினாலும் அதை வெளிக்காட்டாது நின்று இருந்தாள்..

“ சரி போங்க நான் பார்த்துக்குறேன்..” என்று மிரட்டியவர் மீனா அருகில் வந்தார்..

“ என்ன விஷயம்? எதுக்கு நீ என் பொண்ண பார்க்கணும்?” என்று கேட்க 

“இல்ல அப்பா..” என்று சொல்ல வந்தவள், வார்த்தையை தொண்டைக் குழியில் அடக்கிக் கொண்டு “இல்ல சார், அவளுக்கு கல்யாணம் என்று கேள்விப்பட்டேன். அதான் பார்க்கலாம் என்று வந்தேன்..” என்று கூற 

“ஆமாம் அவளுக்கு கல்யாணம் தான். ஆனா, அதுக்கு நீ எல்லாம் வந்துடாத. அங்கெல்லாம் பெரிய பெரிய ஆள் வருவாங்க. உன்ன மாதிரி ஒன்னும் இல்லாதவள் எல்லாம் வந்து என் பொண்ணோட மதிப்பு குறைக்கிறது எனக்கு பிடிக்காது..”

மெலிதாக சிரித்தவள் “சரிங்க சார். நான் கல்யாணத்துக்கு எல்லாம் வரல. வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போறேன்..” என்று கூற 

 அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ, “சரி”என்று தலை அசைத்தார்..

“மேல மாடில மூணாவது ரூம். போ!” என்று கூற 

இவளும் மாடிப்படியில் வேகமாக ஏறி சென்று, சுவாதியின் அறைக் கதவை திறந்து கொண்டு, தாழ்ப்பாள் போட்டு நின்றாள்..

 அரவம் கேட்டு தன் தந்தை தான் வந்து விட்டார் என்று நினைத்தவள், “டாடி ப்ளீஸ்! போங்க. நான் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று ஒத்துக்கிட்டேனே. அப்புறம் ஏன்  வந்து டார்ச்சர் பண்றீங்க? கொஞ்சமாவது என்னை நிம்மதியா இருக்க விடுங்க..” என்று சுவாதி கத்தினாள்

 அதிலேயே புரிந்து விட்டது மீனாவிற்கு..

இவள் அந்த ரௌடியை பற்றி கூறிவிட்டாள், ‘திருமணத்தில் இஷ்டமில்லை, நிறுத்துங்கள்!’என்றும்.. அதோடு கஜேந்திரன் பிடிவாதமாக திருமணத்தை நடத்த போகிறார் என்றும் புரிந்து கொண்டவளுக்கு மனம் கனத்தது..

‘ தன் தோழிக்கு இப்படி ஒரு நிலையா!..’ என்று நினைத்து அவள் அருகில் சென்றவள் தலையை ஆதுரியமாக வருட

 வித்தியாசமான தீண்டலில் தலை நிமிர்த்தி பார்த்தாள்..

 மீனா என்றதும் இடையோடு கட்டிக் கொண்டவள், அழுது தீர்த்தாள்..

மீனாவின் ஆழி வயிற்றை சுவாதியின் உவர்நீர் நிரப்பியது..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top