2. விழி

இங்கு இரு மாணவர்கள் செய்த கலவரத்தில் பள்ளியில் ஐந்தாம் வகுப்புக்கு கீழ் படிக்கும் அனைத்து மாணவர்களின் பையையும் ஆராயப்பட்டது..

 ‘யாரெல்லாம் தேவையற்ற பொருட்களை கொண்டு வருகி்ன்றனர் என்று ஒவ்வொரு வகுப்பாசிரியரும் பார்க்க வேண்டும்..’ என்று பிரின்சிபல் அறிவுறுத்த 

அவ்வாறு ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட 200 பேனாக்கள் கண்டறியப்பட்டது..

 எதற்காக கொண்டு வந்தார்கள் என்று அம் மாணவர்களை கேட்டால்  ”பேனாவில் எழுத ஆசையாக உள்ளது அதனால் எடுத்து வந்தோம்..’ என்று காரணம் கூறினர்..

அதனை வாங்கிக் கொண்டு பிரின்ஸ்பல் இடம் கொடுத்து விட்டனர்..

நான்காம் வகுப்பில் மாட்டியே இரு மாணவர்கள் “போச்சு போச்சு..! நம்மளால தான் இன்னைக்கு இந்த செக்கிங் நடந்திருக்கு. இனிமே நாம பேனா கொண்டு வந்தா கண்டிப்பா வாங்கிடு வாங்கலாம். வார்ன் பண்ணி அனுப்பி இருக்காங்க அத்தனை பேரையும். இனிமே நம்ம பேனா கொண்டு வர முடியாது டா, என்னடா பண்ணலாம்..” என்று இரு மாணவர்களும் பேசிக் கொண்டிருக்க

 வகுப்பு ஆசிரியரோ “டேய் நல்லா கேட்டுக்கோங்க உங்களுக்கு தேவை பென்சில் , எரேசர்,  ஷார்ப்னர்,  ஸ்கேல். இதைத் தவிர வேறு ஏதாவது உங்க பாக்ஸ்ல நான் பார்த்தேன், அப்புறம் நடக்கிறதே வேற ஜாக்கிரதை. வேணும்னா வீட்டிலேயே வச்சு உபயோகப்படுத்திக்கோங்க. ஸ்கூலுக்கு கொண்டுவராதீங்க. புரியுதா..!” என்று தீர்க்கமாக கூற மாணவர்களும் சரி என்று தலையசைத்தனர்..

மாலை அனைவரும் பள்ளியை விட்டு சென்றுவிட, மீனா 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்..

அப்போது அவளுக்கு கால் வர மாணவர்களை படிக்கும்படி கூறிவிட்டு சற்று தள்ளி வந்தவள் போனின் தொடுதிறையில் பார்க்க அவளது தோழிதான் அழைத்திருந்தாள்..

“ஹாய்..! சுவாதி எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு போன் பண்ணி. என்ன விஷயம்? வீட்டில் எல்லாரும் நல்லா இருக்கீங்களா..” என்று அடுக்கடுக்கான கேள்விகளை மீனா கேட்க 

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் டி. நீ எப்படி இருக்க? வீட்ல அம்மா அப்பா எப்படி இருக்காங்க? தம்பி தங்கச்சி எப்படி இருக்காங்க?”

“ எல்லாரும் நல்லா இருக்கோம். ஆமா, என்ன பண்ணிட்டு இருக்க..” என்று மீனா கேட்க

“ படிச்சு முடிச்சுட்டு வீட்ல தான் டி இருக்கேன். வேலைக்கு எல்லாம் போகல..”

“ ஏன் டி? படிச்ச படிப்பு வேஸ்ட் ஆகிட்டு இருக்க. வேலைக்கு போக வேண்டியது தானே. உனக்கு ஒரு தைரியம் வந்த மாதிரி இருக்கும்ல. ஒரு பொண்ணுக்கு சுய சம்பாத்தியம் தான் தைரியத்தையே கொடுக்கும்..” என்று மீனா கூற

“ சரி அதை விடு வேலைக்கு போகாமல் உக்காந்தாச்சு, இப்போ கல்யாணமும் நடக்க போகுது..” என்று சலிப்பாக கூற

“ ஹேய் நெஜமாவடி..!  சூப்பர்..” என்று மீனா தன் தோழியின் திருமணத்தின் செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தாள்..

ஆனால் சுவாதியின் சலிப்பை கவனிக்க மறந்தாள்.. 

“ ஆமா டி. அத பத்தி பேச தான் உனக்கு கால் பண்ணேன். ஃப்ரீயா இருக்கியா. நேர்ல மீட் பண்ணலாமா..” என்றவாறு சுவாதி கேட்க 

“அச்சோ, இப்ப கிளாஸ் போயிட்டு இருக்குடி. கண்டிப்பா ஏழு மணி ஆகும் முடிவதற்கு.  நாளைக்கு சனிக்கிழமை. ஸ்பெஷல் கிளாஸ் மட்டும் தான்.  ஒரு மணி போல மீட் பண்ணலாமா..” என்று கேட்க 

“சரிடி எங்க மீட் பண்ணலாம்னு மெசேஜ் பண்ணு. நம்ம ரெண்டு பேரும் அங்கேயே  மீட் பண்ணலாம்..” என்றவாறு போனை வைத்து விட்டனர் இருவரும்

பள்ளி முடிந்து களைப்பாக வீட்டிற்கு செல்ல , அங்கு மீனாவின் அம்மா அப்பா தம்பி தங்கை நால்வரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்..

 நால்வருமே மீனாவை கண்டு கொள்ளவில்லை. அவர்கள் வேலையில் பிஸியாக மூழ்கி இருந்தனர்..

 “ம்ஹூம் வேலை போயிட்டு ஒருத்தி களைப்பா வராலே,  “’வாமா சாப்பிடுறியா? டீ போட்டு தரவா ?’  இப்படி ஏதாவது கேக்குறாங்களா. அவங்க பாட்டு அவங்க வேலையில் இருக்காங்க. நான் எதுக்கு இந்த வீட்டுக்கு வரேன், போறேன் ஒன்னும் புரியல..” என்றவாறு தன்னறைக்கு சென்று விட்டாள்

குளித்து முடித்து வேறு ஆடையை மாற்றியவள் , அடுத்த நாள் வகுப்பிற்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்..

 இரவு 9 மணி மீனாவின் அம்மா ராஜலட்சுமி மீனாவின் அறைக்குள் வந்தார்..

“ என்னடி? சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்க மணி 9 ஆச்சு..” என்று கடுகடுக்க

‘இப்படி கேக்குறதுக்கு இவர் கேட்காமலே இருக்கலாம்..’ என்று மனதில் நினைத்தவள் “கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டி இருக்கு மா. முடிச்சதும் நானே போட்டு சாப்பிடுகிறேன். நீங்க போய் படுத்து தூங்குங்க..” என்று கூற 

 “அதுக்கில்ல, சாப்பாடு காலையில வச்சது. கொஞ்ச நேரத்துல கெட்டுப் போயிடும். சீக்கிரமா போய் சாப்பிடு. வேற எதுவும் என்னால உனக்கு சமைச்சு தர முடியாது..” என்றவாறு அறையை விட்டு செல்ல 

போகும் அவரையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மீனா..

ராஜலட்சுமி நல்லவர் தான். பாசமாகத்தான் மூன்று குழந்தைகளையும் பெற்று வளர்த்தார். ஆனால், ஒரு கட்டத்தில் மீனாவின் அப்பா சுந்தரம் பிசினஸில் படும் நஷ்டம் அடைந்து விட ,அவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட, கையில் வைத்திருந்த மொத்த இருப்பு பணத்தையும் வைத்து அவரின் உடல் நிலையை சரி செய்தனர்..

 அப்போது மீனா 12ஆவது தான் படித்துக் கொண்டிருந்தாள். அதன்பின் யாரையும் படிக்க வைக்கும் சூழல் அமையவில்லை..

 என்ன செய்வது என்று தெரியாது தவித்துக் கொண்டிருந்தனர்..

 அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழி என்ன என்று யோசிக்கும்போது, மீனா “நானே பார்ட் டைம் வேலைக்கு போய்,  படித்துக் கொள்கிறேன்..

 தம்பி தங்கையையும் நானே படிக்க வைக்கிறேன். வீட்டு செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன்..” என்று கூறினாள்.

 ராஜலட்சுமிக்கு தன் நிலையை எண்ணி வருத்தம் அடைந்தவர், நாளாக நாளாக அதுவே கோபமாக மாறியது..

 மீனா பார்ட் டைம் ஆக மெடிக்கல் கடையலும் , டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலும் வேலை பார்த்து தானும்  படித்து, தம்பி தங்கையையும் படிக்க வைத்தாள்..

 அதோடு வீட்டு செலவிற்கும் கொஞ்சம் பணம் கொடுத்தாள். அதை வைத்து தான் ராஜலட்சுமி குடும்பத்தை நடத்தினார்.. 

மீனாட்சிக்கு டாக்டர் படிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அவள் 12-வதில் எடுத்த மதிப்பெண்ணிற்கு காலேஜிலும் ஸ்காலர்ஷிப்பில் சீட்டும் கிடைத்தது..

 ஆனால், ‘தன் படிப்பிற்கு மொத்தமும் செலவு செய்தால் அதன் பின் தம்பி தங்கை இருக்கின்றனரே..’என்று நினைத்தவள் பிஎஸ்சி மேக்ஸ் எடுத்து படித்தாள்..

 அதனைத் தொடர்ந்து எம்எஸ்சி மேக்ஸ் முடித்து, பிஎட் முடித்து, இதோ பள்ளியில் பத்தாம் வகுப்பிற்கும் 12 ஆம் வகுப்பிற்கும் கணித பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறாள்.

அதுவரையிலுமே மெடிக்கல் கடையிலும், டிபார்ட்மெண்ட் கடையிலும் வேலை செய்துதான் அவள் தம்பி தங்கைகளை படிக்க வைத்தாள்..

 அதோடு மட்டும் நிறுத்தாமல் டியூஷன் சென்டரிலும் சென்று டியூஷன் எடுப்பாள்..  இப்படி சிறுக சிறுக பணம் சேர்த்து தான் தம்பி சரவணனை இன்ஜினியரிங்க்கு படிக்க வைத்தாள்..

 அவள் வேலை சேர்ந்தவுடன் தங்கை அபிநயாவும் பன்னிரண்டாவது முடித்து விட, அவளும் இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று அடம் பிடிக்க அவளையும் இன்ஜினியரிங் சேர்த்து விட்டாள்..

 பள்ளியில் முதல் வருடம் பெரிதாக சம்பளம் இல்லை. 27 ஆயிரம் தான் அவளுக்காக கொடுக்கப்பட்டது..

 குழந்தைகள் அனைவரும் கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதை பார்த்த பிரின்ஸிபல் அவளுக்கு சம்பளம் உயர்த்தினார்.. இப்போது அவள் 42 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாள்.. 

ஆனால் என்ன பயன் வீட்டில் எதிர்பார்க்கும் அன்பு அவளுக்கு கிடைக்கவில்லை..

முன்பு தாயும் தந்தையும் அன்பு மழையை பொழிந்தனர்..

 இப்போது வேலையில் மூழ்கி விட்டாள். சிறிது நேரம் அமர்ந்து, தாய் தந்தையரிடம் பேச நேரம் கிடைப்பதில்லை..

 ஓடிக்கொண்டிருக்கிறாள் ஓடிக்கொண்டிருக்கிறாள் தன் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு..

‘ தம்பி படித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும். அதன் பின்பு அவன் சமாளித்து விடுவான். அது வரை நான் தானே பார்த்துக் கொள்ள வேண்டும்..’ என்று மீனாவின் நினைப்பு..

மீனாவின் நினைப்பை காப்பாற்றுவானா அவனின் தம்பி சரவணன்..

தாய் சென்ற பிறகு பெருமூச்சு ஒன்றை விட்டவள் வெளியேறி, தனக்கான சாப்பாடு தட்டில் போட்டுக்கொண்டு கீழே அமர்ந்து சாப்பிட்டாள்..

சாப்பிட்டு முடித்தவள் சிங்கிள் கடந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வைத்து விட்டு, மீதமுள்ள பொருளை எல்லாம் சூடு பண்ணி ஒரு பாத்திரத்தில் மாற்றியவள், அந்த  பெரிய பாத்திரத்தையும் கழுவி வைத்துவிட்டு தன்னறைக்குள் வர பத்தரை ஆகி இருந்தது..

 அதன் பின்பு சிறிது நேரம் நோட்ஸ் எடுத்தவள் கண் அயர உறங்கிப் போனாள்..

 அடுத்த நாள் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் முடித்து தன் தோழிக்காக அருகில் உள்ள பார்க்கில் காத்துக் கொண்டிருந்தாள்..

அவள் சென்ற சிறிது நேரத்தில் மீனாவின் தோழி சுவாதியும் வந்து விட்டாள்..

இருவரும் கட்டிப் பிடித்து தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர் அதன் பின் பேசிக் கொண்டிருந்தார்கள்..

ஒரு நிமிஷம் என்று  சுவாதி கூறி தன் பேக்கிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து மீனாவிடம் நீட்டினாள்..

“நான் வீட்டுக்கு வந்து தரலாம் ஆனா, கண்டிப்பா உங்க வீட்ல உன்ன விட மாட்டாங்கன்னு எனக்கே தெரியும். அதனால, தான் உன்ன இங்க தனியா சந்தித்து  பத்திரிகை கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். வாங்கிக்கோ. என் கல்யாணத்துக்கு நீ கண்டிப்பா வரணும்..” என்று கூற

“ ஏன்டி இதுக்காகவா என்னை சந்திக்க நினைச்ச.  போன்லையே நீ சொல்லலாமே. நான் கண்டிப்பா வந்து இருப்பேனே..” என்று மீனா கூற 

“ எனக்கு உன்னை பார்த்து நிறைய பேசணும்னு ஆசையடி. அதான் நேர்ல பார்த்து பத்திரிக்கை கொடுக்கிறே சாக்குல உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிவிட்டு போலாம்னு வந்தேன்..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே 

திடீரென்று அலறல் சத்தம். பார்க்கில் ஆங்காங்கு மக்கள் பயந்து கொண்டு, நடுங்கி கொண்டு இருக்க, இருவரும் திரும்பி பார்க்க, அங்கு ஒருவன் அருவாளோடு ஒருவனை துரத்திக் கொண்டிருந்தான்..

 இருவருக்கும் அதிர்ச்சி ஒருவரின்  கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றிருந்தனர்..

 அவ்விருவருக்கு சற்று தொலைவில் தான், தனக்கு முன் ஓடியவனை பிடித்து அவன் வெட்டினான்..

 அதில் இருவரின் மீதும் ரத்தம் தெரித்தது.

 பதற்றத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று கொண்டு இருந்தார்கள் இரு பெண்மணிகளும்..

இரு பெண்களையும் தன் அனல் கக்கும் விழிகளோடு பார்த்தவன், ஒரு ஏளன புன்னகை சிந்தி விட்டு, வெட்டியவனை தன் தோள்பட்டையில் தூக்கிக்கொண்டு வெளியேறினான்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top