வெளியில் வந்தவள் வேலை செய்ய மனம் கேட்காமல் தன் இருக்கையில் சாய்ந்தபடி தொலைபேசியில் கேம் விளையாட தொடங்கினாள். மனதிலுள்ள சோகத்தை நீக்க அவள் கையாளும் யுக்தி இது.
மீட்டிங் தொடங்கியதும் தான் ஆத்ரேயனின் மிரட்டலான முடிவுகளை கேட்டு அனைவருக்கும் உதறல் எடுத்தது… அப்போது தான் புரிந்தது அவன் முகத்தில் இருக்கும் மென்மை அவன் அகத்தில் கொஞ்சம் கூட இல்லை என்று.
“குட் மார்னிங் எவெரி ஒன். ஹோப் யூ ஆல் ஆர் பைன் பட் நோட் எனிமோர்” என்று அவன் தொடங்கியதே அனைவருக்கும் கிலியை உருவாக்கியது. “சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்குள் முடிக்காவிட்டால் சம்பளத்தில் குறிப்பிட்ட வீதம் தண்டமாக அறவிடப்படும். அனைவரினதும் தனி தனி வேலைகள் அதற்குரிய முடிவு தேதி, முடிக்கப்பட்ட வீதம் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு மாத இறுதியில் மோசமான புள்ளியை பெற்றவர்களுக்கு விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்களின் பதில்கள் திருப்தி அளிக்காவிட்டால் உடனடியாக அவர்கள் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். லஞ்ச் டைம் தவிர்த்த மற்றைய நேரங்களில் வெளியில் செல்ல அனுமதியில்லை.” என்றவன் மேலும்,
“சோம்பேறிகளும் திறமை இல்லாதவர்களும் என் கம்பெனியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.” என்று கம்பீரமாக உரைத்துவிட்டு அனைவரையும் நோட்டமிட்டான். குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் நிலையில் அங்கு நிசப்தம் நிலவியது. எல்லாரும் ஒருவரை ஒருவர் சோகமாக பார்த்துக்கொண்டனர். அனாமிகா அனைத்தையும் கவனித்தாளோ இல்லையோ ஆத்ரேயனை கண்களால் பருகிக் கொண்டிருந்தாள். அதையும் கடைக்கண்களால் நோட்டமிட்டவன், “எல்லாம் பருவக்கோளாறு” என்று முணுமுணுத்தபடி மீட்டிங்கை தொடர்ந்தான்.
கடைசியாக யாருக்கு என்ன வேலை என்று தான் தயாரித்த பட்டியலை மேசையில் தூக்கி போட்டவன். “டூ இட் அஸ் இன்ஸ்டருக்டட்” என்றவாறே மேலும் சில அறிவுரைகளை வழங்கியபின், தொழில் ஒப்பந்தத்தில் எல்லோரிடமும் கையெழுத்து வாங்குமாறு தனது பி.எ டேவிட்டை பணித்து விட்டு தனது மற்றைய நிறுவனத்துக்கு செல்வதற்காக புயலென வெளியேறினான்.
கார் சாவியை எடுக்க ஆபீஸ் அறைக்குள் நுழைந்தவனின் கண்களில் குனிந்தவாறு தனது தொலைபேசியில் கண்களை பதித்திருந்த வைஷ்ணவி தட்டுப்பட்டாள். ஆபீஸில் ஆத்ரேயனுக்கும் அனாமிகாக்கும் மாத்திரம் மூடிய தனி அறையும் மற்ற அனைவருக்கும் கண்ணாடியினாலான பிரிப்புகளுடனான அறைகளும் வழங்கப்பட்டிருந்தன. கண்ணாடி என்பதால் எல்லாருடைய அசைவையும் இலகுவாக கண்காணிக்க கூடியதாக இருந்தது.
வைஷ்ணவியை அவதானித்தவன் அவள் அறைக்குள் வந்து கைகளை கட்டியவாறு அவள் விளையாடுவதை அனல் பறக்க பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்ப்பதை அறியாதவள் சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறு விளையாடிக் கொண்டிருந்தாள்.
விளையாட்டில் வென்றதும் “யெஸ்” என்று சிரித்தபடி கைகளை தூக்கியவளின் முகம் அப்படியே பேய் அறைந்தது போலானது.
‘ஐயோ இந்த நெட்டையன் பார்த்து விட்டானே. வைஷு இன்னைக்கு நீ செத்த போ…’ என்று மனதுக்குள் நினைத்தவாறே முகம் வெளுக்க அவனை நோக்கியபடி எழுந்து நின்றாள்.
“இது உன் அப்பன் வீட்டு கம்பெனி என்று நினைச்சியா?” என்று சீறியவன்,
“போன்” என்றான் வலக்கையை அவள் முன் நீட்டியபடி. “சார்…” என்று இழுத்தவளை பார்த்து, “உனக்கு எதுவும் ஒரு தரம் சொன்னால் புரியாதா?” என்று கர்ஜித்தவன் வெடுக்கென்று அவளின் தொலைபேசியை பிடுங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விறு விறுவென தனது அறையை நோக்கிச் சென்றான்.
சிறிது வினாடிகள் கழித்து அதிர்ச்சியிலிருந்து வெளிவந்தவள் போனுக்கு லாக் ஆக்ட்டிவ் பண்ணாததை நினைத்து தன்னை தானே கடிந்துக் கொண்டாள் . தொலைபேசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாமல் ஓடிச் சென்று அவன் அறை முன் பாந்தமாக நின்றபடி உள்ளே போவோமா? வேணாமா? என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள். கோட்டை போட்டு சாவியையும் எடுத்துக் கொண்டு வெளியேறியவன், வாசலில் நின்றவளை பார்த்து தன் ஒற்றை புருவத்தை தூக்கி “என்ன?” என்று வினவினான்.
“என்ன மன்னிச்சுருங்க சார், இனி நான் ஆபீஸ்ல விளையாட மாட்டேன், என் போனை கொடுத்துருங்க ப்ளீஸ்” என்று மிகவும் தாழ்வான குரலில் கெஞ்சினாள் தனது தொலைபேசிக்காக.
“வெட்கமில்லாமல் இப்படி கெஞ்சிக் கொண்டு நிக்காதே! பார்க்க சகிக்கவில்லை” என்று முகத்தை சுளித்தபடி விறுவிறுவென வெளியேறினான்.
அவமானம் தாங்காமல் முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு இருக்கையில் அமர்ந்து தன் விதியை நினைத்து நொந்துக் கொண்டாள். பசி வேறு வயிற்றை கிள்ளியது. “இந்த கார்த்திக்கும் கீர்த்தனாவும் எப்போ வந்து சேரப்போறாங்களோ தெரியலையேப்பா” என்ற படி நாடியில் கை வைத்து அமர்ந்திருந்தாள், எதையும் தாங்கும் இதயம் கொண்ட வைஷ்ணவி .
அனைத்து வேலைகளையும் முடித்தவர்கள் சாவகாசமாக வந்து சேர்ந்தனர். வருவதை கவனித்தவள் கீர்த்தனாவின் அறைக்குச் சென்று, “ஏன் டி இவ்வளவு நேரம்..? அந்த நெட்டையன் என்ன சொன்னான்?” என்று கோவமாக வினவினாள். “மெதுவா பேசுடி யாரு காதுலயும் விழுந்து தொலைக்க போகுது” என்றபடி நடந்ததை விவரித்தாள். வைஷ்ணவியும் தன் சோக கதையை சொல்லி முடித்தாள் . “நீ ஏன் டி ஆபீஸ் நேரத்துல விளையாடின?” என்று தோழியை கடிந்தாள் கீர்த்தனா.
கீர்த்தனாவை முறைத்தவள்,
“ஒரு நாள் பார்த்த உன் ஆளுக்காக உன் உயிர் தோழியை திட்டுற” என என்றாள் உதட்டை சுளித்துக் கொண்டு. அதற்கு அவளோ, “என் ஆளா ? லூசா நீ? அம்மா சொல்ற பையன தான் நான் கல்யாணம் பண்ணுவேன் எனக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாதுப்பா” என்றாள் சலித்தபடி.
அப்போது வைஷ்ணவியை அழைத்த டேவிட் அவளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தையும் வாங்கி அவளுக்கான வேலைக்குரிய கோப்பையும் கொடுத்தான். “கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாங்க” என்று முணுமுணுத்தபடி எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டவள் நண்பர்களுடன் சாப்பிட புறப்பட்டாள்.
வேலை நேரம் முடிந்து செல்லும் போது அவளை அழைத்த கார்த்திக் அவள் தொலைபேசியை அவளிடம் கொடுத்தான். “இது எப்படி உன்னிடம் வந்தது?” என்று ஆச்சரியமாக கேட்டவளை நோக்கி, “வேலை முடிந்து செல்லும் போது உன்னிடம் கொடுக்க சொல்லி சார் தந்துட்டு போனார்” என்றான்.
“யூ டூ ப்ருட்டஸ்” என்றவளுக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.
எதிர் நோக்கிய நாட்களை, வேலைப்பளு காரணமாக சற்று கடினமாகவே எல்லோரும் உணர்ந்தனர். ஆத்ரேயன் வருகை தரும் நாட்கள் வைஷ்ணவிக்கு நெருப்பின் மேல் நிற்பது போன்று இருந்தது. மாத கடைசியில் எல்லாரும் கொடுத்த வேலைகளை கச்சிதமாக முடித்து ஆத்ரேயனின் கையெழுத்துக்காக சமர்ப்பித்திருந்தனர். இப்புள்ளி முறையானது வேலையில் எல்லாருக்கும் ஒரு வித ஆர்வத்தை உருவாக்கி இருந்தது. வைஷ்ணவியின் டிசைனை பார்த்தவன் அவளின் திறமையை மனதுக்குள் மெச்சினான். எனினும் அவளை பாராட்டி அவள் தலைக்கனத்தை ஏற்ற விரும்பாதவன், அவளை காயப்படுத்துவதிலேயே குறியாக இருந்தான்.
அன்று வைஷ்ணவியின் இன்டர்காம்முக்கு ஆத்ரேயன் அழைத்து, “இடியட் கம் டு மை ரூம் குயிக்லி” என்றான். ‘ரைட்டு சனியன் சைக்கிள்ல வருது’ என்று மனதில் நினைத்தவாறே ஆத்ரேயனின் அறைக்குச் சென்றாள். அங்கு ஆத்ரேயன் மேசையில் கடைசியாக வைஷ்ணவி வரைந்த படம் விரிக்கப்பட்டிருந்தது. வைஷ்ணவியை கூர்ந்து நோக்கியவாறே, “எக்ஸ்பிளைன்” என்றான்.
‘இந்த நெட்டையனுக்கு இது விளங்கலையா? சரியான டியூப் லைட்’ என்று மனதில் நினைத்தவாறே விளக்கம் கொடுக்க தொடங்கினாள்.
அனாமிகாக்கு எதுவும் விளங்கிய போல் தெரியவில்லை. இடையிடையில் பல கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துவிட்டாள். வைஷ்ணவி பேசுவதை கேட்காமல் ஆத்ரேயன் கோப்புக்களை எடுத்து படிக்க தொடங்கிவிட்டான். வைஷ்ணவிக்கு அது பெரும் அவமானமாக இருந்தது. எல்லாம் முடிந்ததும், “மிஸ் ஆர் மிஸ்சஸ்” என்று கேட்டான் ஒற்றை புருவத்தை தூக்கியபடி. வைஷ்ணவியும் தட்டு தடுமாறி, “மிஸ்.வைஷ்ணவி மலர்வேந்தன்” என்றாள்.
“ஓகே, மிஸ். வைஷ்ணவி நீங்க உண்மையாவே இன்ஜினியரிங் படிச்சீங்களா?” என்றான் ஒரு நக்கலான தொனியில். அவனது நக்கல் விளங்கியதால் அதுக்கு அவள் பதிலளிக்க முற்படவில்லை. தலையை குனிந்தவாறே நின்றிருந்தாள். அனாமிகாவுக்கு முன்னால் அவள் தன்மானம் பெரிதும் அடிவாங்கியது. “நீயெல்லாம் இந்த கம்பெனியை கூட்டுவதற்கு கூட தகுதி இல்லாதவள். உன்னை எல்லாம் யார் தான் வேலைக்கு எடுத்தார்களோ?” என்றபடி அவளின் டிசைனை கிழித்து குப்பை கூடைக்குள் எறிந்தான். அதனை அவள் கையாலாகா தனத்துடன் கண்ணீர் மல்க பார்த்திருந்தாள். அவள் முகத்தில் கண்ட வலியில் ஆத்ரேயனுக்கு ஒரு திருப்தி உண்டானது. கேலி புன்னகை ஒன்றை முகத்தில் தவழ விட்டவாறே, “உன்னோட கேபினுக்கு போகலாம் வா” என்றான். புரியாத பார்வை ஒன்றை அவனை நோக்கி செலுத்தியவள், ‘இவன் எதுக்கு நம்ம கேபினுக்கு வர போறான்? எல்லாருக்கும் முன்னுக்கும் அவமானப்படுத்தப்போறான் போல… உண்மையாவே கூட்டுவதற்கு விட்டிருவானோ’ என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தியபடி மனம் நிறைய பாரத்துடன் அவன் பின்னால் நடந்தாள்.
அவள் கணினியை நோக்கி கையை காட்டியவன், “எடு நீ வரைந்த பைலை” என்றவுடன் அவள் அந்த போல்டர் ஐ காட்டினாள். அவளை நோக்கி வசீகர புன்னகையை சிந்திவிட்டு அவளை பார்த்தபடியே அந்த போல்டர் ஐ நிரந்தரமாக அழித்துவிட்டான். “சார்” என்ற படி வைஷ்ணவி அதிர்ந்தாள். அவள் கண்ணை நேராக பார்த்தபடி, “ரீடூ… ஐ நீட் இட் டுடே நைட் 9 o கிளாக்” என்றான். இதை கேட்டதும் வைஷ்ணவிக்கு யாரோ பெரிய கல்லை தூக்கி தலையில் போட்டது போல் இருந்தது. 10 நாட்கள் செலவழித்து செய்த டிசைனை வெறும் 9 மணி நேரத்தில் வரைவது முடியாத காரியம் தானே. அவனோ அவள் பதிலை எதிர் பார்க்காமல் தனது அறை நோக்கி நடந்தான்.
அவளும் தன்னுணர்வு அடைந்து “சார்” என்று அழைத்தவாறே பின்னால் ஓடினாள். ஸ்டைல் ஆக திரும்பி, “வாட்?” என்றான் புருவத்தை தூக்கியபடி.
“என்ன பிழை என்று சொன்னால் கரெக்ட் பண்ணி கொள்வேன் சார் ” என்றாள்.
ஒரு இகழ்ச்சி புன்னகையை அவளை நோக்கி சிந்தியபடி,
“இடியட் நீயே கண்டுபிடி” என்றவாறே ரூமுக்குள் நுழைந்துவிட்டான்.
‘இஞ்சி தின்ற குரங்கு .. F***** B*******’ என்று மனதுக்குள் கெட்ட வார்த்தையில் திட்டியவளுக்கு ஓ… என்று அழவேண்டும் போல இருந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கார்த்திக்குக்கும் கீர்த்தனாவுக்கும் அவளை நினைத்து பெரும் கவலை மூண்டது. உதவி செய்ய முடியாத நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருந்தனர்.லஞ்சுக்கு கூட செல்லாமல் வைஷ்ணவி வேலையில் மூழ்கி போனாள். அவளை ஆத்ரேயன் ஒரு விஷம புன்னகையுடன் கடந்துச் சென்றான். அவளின் வலி இவனுக்கு ஒரு இனம் புரியாத திருப்தியை கொடுத்தது. அதற்கு காரணம் யாருக்கும் தெரியவில்லை.
மாலை 6 மணிக்கு எல்லாரும் வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானர். கார்த்திக்கும் கீர்த்தனாவும் வைஷ்ணவிக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தனர். வெளியில் வந்த ஆத்ரேயனுக்கு அவர்கள் நட்பை பார்த்து பொறாமை எழாமல் இல்லை. ஒரு கோவமான பார்வையை கார்த்திக் மீதும் வசீகர புன்னகையை கீர்த்தனாவை நோக்கியும் உதிர்த்தவன், இருவரையும் வீட்டுக்கு போக உத்தரவு இட்டான். அவர்களால் அதனை தட்ட முடியாமல், வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானார்கள் வைஷ்ணவியை பாவமாக பார்த்தபடி. டிரைவர் சீட்டில் கார்த்திக் அமர பக்கத்து சீட்டில் கீர்த்தனா அமர்ந்தாள். மயில் நிற புடவையில் இருந்தவளை பார்க்க கார்த்திக்கினால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது சிவந்த உதடுகள் தன்னை சுவைக்க சொல்லி அழைப்பு விடுத்தது. இதனை விட்டால் தன் காதலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையாது என்று நினைத்த கார்த்திக் ஸ்டேரிங் வீலினை பார்த்தபடி அமர்ந்திருந்தான். கீர்த்தனா மீது ஆத்ரேயனின் கனிவு அவனுக்கு பயத்தை அளித்தது. அவளை எப்படியாச்சும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி அவனிடம் உருவானது. வைஷ்ணவியிடம் கீர்த்தனா தன் திருமணத்தை பற்றி சொன்னதை கேட்டிருந்தால் இந்த சந்தேகம் வந்திருக்காதோ என்னமோ ஏறி இவ்வளவு நேரமாகியும் கார் புறப்படாததை உணர்ந்த கீர்த்தனா, “கார்த்திக் என்ன ஆச்சு?” என்றபடி அவன் கையை பிடித்து உலுக்கினாள். இதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்தவன் அவளை இழுத்து வெற்றிடையில் கை பதித்து அவள் மெல்லிய உதடுகளை தன் வலிய உதடுகளால் அழுந்த மூடினான். இதனை எதிர்பாராத கீர்த்தனா அவனை தள்ளுவதற்காக திமிறினாள். அவளை தன் கைகளால் அடக்கியவன் அவள் அதரங்களில் தேன் பருகுவதை நிறுத்தவில்லை.
கீர்த்தனாவின் கண்ணீரின் சுவையை அறிந்ததும் தான் திடுக்கிட்டு அவளை விடுவித்தான்.
அவளோ ருத்ரமூர்த்தியாக மாறி இருந்தாள். அவள் கைகள் அவன் கன்னங்களை நன்றாக பதம் பார்த்தது. அவனை உறுத்து விழித்துவிட்டு முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழ தொடங்கினாள். அதன் பிறகு தான் தனது விபரீத செயலின் தாக்கம் அவனுக்கு புரிந்தது.
அவளை சமாதானப் படுத்தும் வழி தெரியாது காரை கிளப்பிக்கொண்டு பிளாட் ஐ அடைந்தான். லிப்ட் இல் கூட பெருத்த மௌனமே நிலவியது. வீட்டை அடைந்ததும் கீர்த்தனா வெடித்து அழுதாள். அவளை சமாதானப் படுத்த கூட யாரும் அருகில் இருக்கவில்லை. கார்த்திக் குற்ற உணர்வுடன் சாப்பிடாமல் படுக்கச் சென்றான்.