வெதுவெதுப்பான நீர் அந்தக் குளிக்கும் தொட்டியில் நிரம்பி இருக்க… இரு ஜீவன்களும் அதில் அமர்ந்திருந்தனர்..
நறுமுகை கண்கள் மூடி சுகமாய் தன்னவனது மார்பில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள்…
விக்ரமோ பின்னிருந்து அவளை அணைத்து படி கிடந்தான் …
“எதை பத்தியும் நினைக்க கூடாது… நம்மளை பத்தி மட்டும் நினை நறு…” என அவளது காதோரம் இதழ்கள் உரச கூறியவாறு அவளது அடி வயிற்றை மெல்ல வருடினான்..
நறுமுகைக்கும் இந்த வார்த்தையை அவன் கூறிட மாட்டானா என்கிற சிறு ஏக்கம் உள்ளே புதைந்திருந்தது போல..
இவ்வளவு நேரம் மனம் ஏதோ ஒரு கூண்டில் அடைப்பட்டது போல அல்லாடி கொண்டிருக்க.. அவனது இந்த ஒற்றை வார்த்தையில் சுதந்திர பறவையாய் உணர்ந்தவள் ஆழ்ந்த மூச்சையை இழுத்து விட அதுவே அவளது மனநிலை எடுத்துரைத்தது…
கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான் …
“உனக்கு ஞாபகம் இருக்கா நறு…? நமக்கு கல்யாணம் முடிஞ்சதும் அவசர அவசரமா லவ் மேக் பண்ணோமே..??” என கேட்டதும் பட்டென விழிகளை திறந்த நறுமுகையின் இதழ்கள் அந்நாளின் நினைவில் தாராளமாய் விரிந்து இருந்தது…
“ நினைச்சா இப்ப கூட சிரிப்பு தான் வருது… அந்த நிமிஷம் எப்படி இருந்துச்சுல…?”
“ஆமா.. எனக்கு இன்னும் வேணும்னு தோணுச்சு தெரியுமா..??.. எங்க அம்மா வந்துருவாங்களோ முக்கியமான நேரத்துல கதவை திறந்துவிடுவாங்களோனு நான் ரொம்ப பயந்தான் …
அவசர அவசரமா பண்ணி ….ம்ம்ம்…இப்ப நினைச்சா அதெல்லாம் செமையா இருக்குல ..” என அந்நாளின் நினைவில் கிறக்கமாய் கூறியதும் ஆம் என்று தலையசைத்த நறுமுகை,
“நம்ம இன்னும் கொஞ்சம் வருஷம் லவ் பண்ணி இருந்திருக்கலாம் விக்ரம்.. ப்ராஜெக்ட் பண்ணும் போது எவ்வளவு நல்லா இருந்துச்சு..
டெய்லி உங்களை மீட் பண்றதுக்காகவே அவசர அவசரமாக வருவேன்.. மொட்டை மாடியில் கிஸ் பண்ணிக்கிட்டது ..உங்க கூட கார்ல பீச்சுக்கு போனது.. இதெல்லாம் எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா..??
அதெல்லாம் என்னால மறக்கவே முடியாது..” என்றவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன்,
“ எனக்கும்…”
“ ஆமா கௌசல்யா பிஎச்டி பண்றளாமே முடிச்சிட்டாளா..??”
” அவ பிஎச்டி பண்றாளோ இல்லையோ அந்த கிறிஸ்டோபர் கூட நல்லா ஜெல் ஆயிட்டா..!” என்றதும் அதிர்ந்து போய் அவனை பார்த்தவள்,
“ நிஜமாவா..??”
“ ஆமா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க …பட் இன்னும் வெளிப்படையா காட்டிக்கலை…”
” உங்களுக்கு தெரியுமா?? இல்ல யாராவது காசிப் சொல்லி இருக்காங்களா..??” என நக்கலாக கேட்டதும்,
“ப்ச்… அதெல்லாம் இல்லடி.. நானே பார்த்து இருக்கேன்.. லைப்ரரில ஒரு புக் எடுக்கலாம்னு போனேன்.. பார்த்தா அந்த பொண்ணு கன்னத்துல கிஸ் பண்ணிட்டு இருக்கான்..
அப்பவே தெரிஞ்சிருச்சு இவங்களுக்குள்ள ஏதோ ஒன்னு ஓடுதுன்னு..
வீட்டுக்கு வரும் போது எல்லாம் அடிக்கடி இரண்டு பேரும் ஒண்ணா பார்ப்பேன்.. ஒன்னா தான் போறாங்க ஒன்னா தான் வறாங்க…
கையை கோர்த்துக்கிறாங்க… யாரும் பாக்கறாங்களான்னு பார்த்துட்டு முத்தம் கொடுத்து இருக்காங்க.. என்னவோ பண்ணுதுங்க ..” என்றதும் நறுமுகை சிரித்துக் கொண்டவள்,
” நம்பவே முடியல …அந்த கிறிஸ்டோபர் எங்களை எல்லாம் தங்கச்சி மாதிரி தான் சொல்லிட்டு இருப்பான்.. இப்ப கௌசல்யாவை லவ் பண்றானா பெரிய விஷயம் தான்..
ஆனால் சரியான இம்சை அவன்… ஒருத்தவங்கள புடிச்சதுன்னா அவங்களை யார் கூடவும் அண்ட விட மாட்டான்.. பைத்தியக்காரன் ..அவளை கல்யாணம் பண்ணி இவள் என்ன பண்ண போறாளோ..??
அவன் கிறிஸ்டியன்.. இவ இந்து ..இவளுக்கு ஏற்கனவே அண்ணா இருக்காங்க தங்கச்சி இருக்காங்க ..வீட்ல ஒத்துப்பாங்களான்னு தெரியல.. பார்ப்போம் ..”
“சரி அவங்கள பத்தி நமக்கு எதுக்கு..?? அவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்க ..ஹனிமூன் போறாங்க என்னவோ பண்ணட்டும்..
நம்ம நம்ம வேலையை பார்ப்போம் டி ..” என்றவனது கரம் பெண்ணவளை ஆரத்தழுவியது…
நீண்ட நாட்களுக்கு பின்னரான அவர்களே அவர்களுக்கான இந்த தனிமை இருவருக்குமே இனித்தது …
தண்ணீர் அதிர்ந்து வெளியே தெறிக்க.. பெண் அவளுள் மொத்தமாய் புகுந்தவன் அவள் உள்ளே ஆழமாய் தன் அச்சாரத்தை நிலை நாட்டினான்..
இருவது மேனியிலும் சொட்ட சொட்ட நீர் சொட்டியது….வியர்வையில் குளித்திருந்தார்களா அல்லது நீரில் குளித்தார்களா
என்பது சந்தேகம் வரும் அளவு அப்படி நனைந்து போய் இருந்தனர்…
அதன் பின் நறுமுகையை தூக்கிக் கொண்டு மெத்தைக்கு வந்திட.. இப்போது நின்று நிதானமாய் அவளுள் தன் தேடலை துவங்கினான்..
இன்னும் இரு நாட்கள் அங்கே தான் கடத்தி இருந்தனர்… கணவன் மனைவி இருவரும் அனைத்தையும் மறந்து ஒருவரை ஒருவர் காதலுடன் இணைந்தே இருந்தனர் .…
நீண்ட நாட்களுக்கு பின்னர் மனநிறைவுடன் முகம் எல்லாம் மலர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்…
வந்தவர்களின் முகத்தைக் கண்ட பெரியவர்கள் இருவருக்கும் திருப்தியாக இருந்தது …
நாட்கள் சென்றன… முற்றும் முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது…
மருத்துவமனைக்கு எப்போது செல்லலாம் என்பதை பற்றி நறுமுகையிடம் பேசுவதற்கு காத்திருந்தான் விக்ரம் ..
ஆனால் அவளது தெளிவான முகத்தை காணும் போதெல்லாம் ஏதோ ஒரு தயக்கம் அவனைப் பேச விடாது தடுத்து இருந்தது..
இந்நிலையில் தான் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த வேளையில் வளவனுக்கு சிறு விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது..
பதறிக் கொண்டு தந்தையை பார்க்க சென்று இருந்தாள் நறுமுகை…
தேசிங்கன் சுகன்யா கூட வந்திருந்தனர் ..தந்தையின் காலில் முறிவும் தலையில் அடியும் ஏற்பட்டு கட்டு போட்டு இருப்பதை கண்டவள் அழுது தீர்த்து விட்டாள்…
ஒரு நாளும் சிறு ஜுரம் என்று கூட தந்தை படுத்தது கிடையாது.. வண்டியை கூட அத்தனை கவனமாகத்தான் ஓட்டிச் சென்று வருபவர்… அப்படிப்பட்டவருக்கு கால் முறியும் அளவு விபத்து ஏற்பட்டதை யாராலும் நம்ப முடியவே இல்லை …
சுரதை வேறு கணவருக்கு இப்படி ஆகிவிட்டதே என அழுது கொண்டே இருந்தார்..வித்யா தான் ஆறுதல் கூறி கொண்டிருந்தார்…
சுகன்யாவும் தேசிங்கனும் கூட வளவனிடம் நலம் விசாரித்துவிட்டு சுரதைக்கு தைரியம் அளித்துவிட்டு கிளம்பி விட்டனர்..
விக்ரமிற்க்கு கூட தன் மாமனாரை இவ்வாறு காண சற்று வேதனையாக தான் இருந்தது ..
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் வளவன்.. நறுமுகையால் தந்தையை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை ..
தான் ஒரு பிள்ளை தானே..! தான் தானே பெற்றவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என பொறுப்புடன் இருந்தாள்..
நறுமுகையை விக்ரமும் அவ்வப்போது பார்த்து விட்டு செல்வான்..
நறுமுகை தந்தையை பார்த்துக் கொண்டு தாய்க்கு ஆறுதல் சொல்லி என ஒரு மாதம் அவளது அன்னை வீட்டிலேயே இருந்து விட்டாள்…
தலையில் காயம் சற்று ஆறி இருந்தாலும் காலில் ஏற்பட்ட முறிவு இன்னும் சரியாகாததால் நடப்பதற்கே சிரமப்பட்டார் வளவன் …
சுகன்யா தான் எப்போதும் மகனிடம் கேட்பார் ..ஆனால் இம்முறை தேசிங்கன் அவராகவே கேட்டிருந்தார்
“டாக்டர் ரெண்டு மாசம் கழிச்சு வர சொன்னாங்கன்னு சொன்னியே… எப்ப போய் பார்க்க போறீங்க..??” என கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த விக்ரமிற்க்கு உணவு தொண்டைக் குழியில் சிக்கித் தவித்தது…
பரிமாறிக் கொண்டிருந்த சுகன்யாவும்,
” இரண்டு மாசம் கழிச்சு வர சொன்னாங்க.. ஆனா மூணு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு.. எப்ப போக போறீங்க விக்ரம்..?? இன்னும் நாள் தள்ளி போட்டுக்கிட்டே போனா என்ன அர்த்தம்??”
என பொறுமையாக எடுத்து கூறினார்…
விக்ரமிற்க்கும் அதே யோசனை தான் ..
சுகன்யா அத்தோடு விட்டிருக்கலாம் அவரோ,
“உங்க அப்பாவோட பெரியப்பா பேரனுக்கு ரெண்டாவது குழந்தையும் பிறந்து அதுக்கு இரண்டாவது பிறந்தநாள் வரப்போகுதுடா… டாக்டர் சொல்ற மாதிரி போய் பாருங்க.. இன்னும் தள்ளி போட்டுக்கிட்டே போனா என்ன அர்த்தம்..??” என சற்று கடுமையுடன் கூறி விட்டார்…
விக்ரமிற்கு அதற்கு மேல் உண்ண முடியவில்லை.. ஏனோ தானோவென உண்டு முடித்துவிட்டு காரினை எடுத்தவனுக்கு மனதெல்லாம் ஏதோ ஒரு பாரம் அழுத்தியது போல உணர்ந்தான்…
மெல்ல காரை ஓரம் நிற்ப்பாட்டி விட்டு ஸ்டீயரிங் மீது தலை சாய்த்துக் கொண்ட விக்ரம் மிகவும் சோர்ந்து போனான் எனலாம் …
ஊட்டிக்கு சென்று விட்டு வந்ததும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணி இருந்தான்..
ஆனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் அவள் இயல்பாக நடமாடுவதை காண்கையில் சற்று பொறுமையாக அவளிடம் பேசலாம் என எண்ணியிருந்தவனுக்கு வளவனுக்கு விபத்து நடந்தது பெரும் அதிர்ச்சியே..!
இருந்தும் ஒற்றை மகளாக அவள் தான் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என மூளை எடுத்துரைத்தாலும் மனமோ இன்னும் நாட்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது என்கிற பெரும் பயம் அவனை ஆட்டுவித்தது…
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் இன்று எப்படியும் நறுமுகையிடம் இது பற்றி பேசியே தீர வேண்டும் என தீர்மானித்த பின்னரே அவன் சற்று ஆசுவாசமடைந்தான்… அதன் பின்னர் அவன் கல்லூரிக்கு சென்று விட்டான்..
மாலை போல நறுமுகையை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான் விக்ரம்..
தன்னவனைப் பார்த்ததும் மெல்ல புன்னகைத்தவாறு அவனுக்கு காபியை போட்டு தந்தாள்..
வளவனுடன் பேசியவாறு குடித்து முடித்த விக்ரம் நறுமுகையே தான் பார்த்தவாறு இருந்தான்…
அவனது பார்வை உணர்ந்த பெண்ணவளும் என்ன என்று இரு புருவங்களையும் உயர்த்தி கேட்டாள்… அவளது அறைக்கு விக்ரம் வந்ததும் பின்னாடியே வந்த முகை,
” என்ன விக்ரம் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..??? ரொம்ப வேலையா??” என கனிவாய் கேட்டவளை ஆழ்ந்து பார்த்து விக்ரம் அவரது கரத்தை பிடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான் …
“இந்த மாதிரி நேரத்துல இத பத்தி பேசலாமானு எனக்கு தெரியல… ஆனா பேசி தான் ஆகணும்…” என்றதும் உள்ளுக்குள் படபடத்தாலும் அவனையே அமைதியாக வெறித்தாள் நறுமுகை…
நிதானமாக அவளைப் பார்த்து,
” டாக்டர் ரெண்டு மாசம் கழிச்சு வர சொன்னாங்க நறு… பட் இது ரெண்டு மாசம் மேலயே ஆயிடுச்சு ..
இப்ப உங்க அப்பாவும் பரவால்ல தானே…டாக்டரை பார்த்துட்டு வரலாமே..?” என கண்களை சுருக்கி கிட்டத்தட்ட இறைஞ்சுதலாகவே கேட்டான் விக்ரம்…
அவன் கேட்டதும் அடி வயிற்றில் புளியை கரைத்தது நறுமுகைக்கு..
எச்சிலை விழுங்கிக் கொண்டு அவனைப் பார்த்த நறுமுகை,
” இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே விக்ரம்..” என உள்ளே போன குரலில் கூறியவளை இப்போது துணுக்குற்று பார்த்த விக்ரம்,
” என்ன பேசுற..??? இதுவே லேட்…முதல்ல நாம டாக்டர்கிட்ட பேசலாம்..” என்றதும் அவன் கரங்களுக்குள் இருந்த தன் கரத்தை மெல்ல விடுவித்துக் கொண்ட நறுமுகை,
” ப்ளீஸ் விக்ரம்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே..” என்றதும் முனுக்கென்று கோபம் வந்தது விக்ரமிற்கு…
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு முயன்று தன் கோபத்தை இழுத்து பிடித்தவன்,
” இன்னும் கொஞ்ச நாள்னா எப்போ..??” என இறுகிய குரலில் கேட்டவனது தலையில் குண்டினை தூக்கிப் போட்டாள்,
” இன்னும்… ஒரு… வருஷம் போகட்டுமே…!” என்றவளை அமைதியாக வெறித்தான் விக்ரம்…