எட்டு மாதங்களுக்குப் பிறகு…
யாருக்கும் காத்திருக்காம நாள் வேகமெடுத்து ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. அந்த ஒரு மாசம் ஓடிப் போய், மதுரியா காலேஜ்கும் போய் சேர்ந்துட்டா. அவ விதுரனுக்கு குடுத்த வாக்குப் படி அவனை பார்க்கவே இல்லை. மனசை இறுக்கி இரும்பு மாதிரி ஆக்கிட்டா. படிப்பே உயிரா மாத்திக்கிட்டா.
ஒரு வெள்ளை போலேரோ அந்த மதுராந்தகம் ரோடுலே சீறி பாய்ஞ்சுது. அதை ஓட்டறது அதோட ஓனர் ப்ரதீப்.. டாக்டர் ப்ரதீப் சந்திரன்.. ஆள் நல்ல நிறமா, நெடு நெடு-னு உயரமா, கொஞ்சம் ஒல்லியா, கண்ணுக்கு ஃப்ரேம்லெஸ் கண்ணாடி, மீசையில்லாத குழந்தை முகம்-னு அழகா இருந்தான். அவனை மேலும் அழகாக்கற மாதிரி இருந்துச்சு அவனோட அழகான சிரிப்பு. இப்போவும் அதை காட்டி சிரித்தப் போது அவன் தோள்லே ஒரு கை பட்-னு அடிச்சுது. அந்த கைக்கு சொந்தக்காரி மதுரியா. அந்த காரோட பின் சீட்லே இருந்து பயங்கர சிரிப்பு சத்தம் கேட்டுச்சு. அதுதான் ரீனா. “என்ன? ரெண்டு பேரும் சேர்ந்து கிண்டல் பண்றீங்களா?”-னு முறைச்சா மதுரியா. “சாரி… சாரி… சும்மாம்மா… கோபப்படாதே”-னு தலையை தடவினான் ப்ரதீப். “ஏன் ப்ரதீப்? உண்மை தானே? ஃபர்ஸ்ட் செமஸ்டர் படிப்பைத் தவிர என்ன பார்த்தா? இவளுக்கு மரம், செடி, கொடி கூட மறந்திருக்கும் தானே?”-னு விடாம பேசி கேலி பண்ணாலும் ஃப்ரெண்ட் முகம் கிட்டத்தட்ட பழைய மாதிரி ஆனதிலே ரொம்ப சந்தோஷம். அதுக்கு முழுக்க முழுக்க காரணம் ப்ரதீப் தான்-னு அவனை பெருமிதமாகவும் அதே சமயம் ஏக்கமாகவும் பார்த்தா ரீனா.
யாரிந்த ப்ரதீப்? ப்ரதீப் – மதுரியா, ரீனாவுக்கு சூப்பர் சீனியர். மதுரியா படிக்கற அதே காலேஜ்லே மூணாவது வருஷம் சைக்கியாடிரி படிக்கிறான். இன்னும் ஆறு மாசத்திலே சென்னையிலே இருக்கிற பெரிய சைக்கியாடிரிஸ்ட் டாக்டர்.ஈஸ்வரன் கிட்ட ஜூனியரா சேர்ந்து தொழில் தொடங்கப் போறான். அவங்க மூணு பேரு நட்புக்கு வயசு ஆறு மாசம். இன்னிக்கு மதுரியா இயல்பா பேசி சிரிக்கறதுக்கு முக்கிய காரணம் அவன் தான். அது மட்டுமில்லாம எட்டு மாசம் கழிச்சு நாலு நாள் லீவுலே அவளை ஊருக்கு இழுத்துட்டு வந்த பெருமையும் அவனையே சாரும். “ஊருக்கு கூட போகாம அப்படி என்ன படிப்போ?”-னு கேட்டா ரீனா. “அப்படியா ரீனா மேடம்? அப்போ நாலு மாசம் ‘டே-ஸ்காலரா’ இருந்த ரீனா மேடம் ஏன் ஹாஸ்டல்லே சேர்ந்தாங்க?”-னு ஒத்த புருவத்தை தூக்கி கிண்டலா கேட்டா மதுரியா. ரீனாவுக்கு லேசா கன்னம் சிவந்துச்சு. ஏன்னா அவ ஹாஸ்டல்லே சேர்ந்த முக்கிய காரணம் ப்ரதீப். ரீனா அவனை விரும்பறா. ஆனா அவன் அவளை விரும்பலே. சரி… கூடவே அதிக நேரம் இருந்தா பிடிக்க ஆரம்பிக்கும்-னு நம்பி ஹாஸ்டல் வந்தா.
ஆனா ஒரு சைக்கியாடிரிஸ்டுக்கு உடல் மொழி புரியாதா? புரிஞ்சதாலேயே லேசா விலகினான். மதுரியாக் கிட்ட நட்பு பாராட்டற அளவுக்கு ரீனா கூட பாராட்டிக்க மாட்டான். அதனால ரீனாவுக்கு அவன் மதுரியாவை விரும்பறானோ-னு கொஞ்ச நாளா சந்தேகம். ஏன்னா ரீனாவுக்கு அவங்க நட்பு ஆரம்பிச்சு கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் ப்ரதீப் பழக்கமானான். ஒரு லேசான பொறாமை வந்தாலும் ப்ரதீப் மேலேயோ மதுரியா மேலேயோ கோபம் வரலே ரீனாவுக்கு.
ப்ரதீப்புக்கு விஷயம் தெரிஞ்சதனால பேச்சை மாத்தினான். “ரியா, அவளை கிண்டல் பண்றது எல்லாம் இருக்கட்டும்… அவ கேட்டதுக்கு பதில் சொல்லு”-னு கேட்டான். பேச்சு மாறினாலும் ரீனாவோட கன்ன சிவப்பை மனசுலே குறிச்சுக்கிட்டா மதுரியா. “தீப், நான் வேணும்-னு பண்ணலே. இன் ஃபாக்ட் ஃபர்ஸ்ட் ஒண்ணரை மாசம் ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு போயிட்டுத்தான் இருந்தேன். அப்புறம் உண்மையிலேயே முடியலே. கார்டியாலஜி ஈஸ் ஹார்டர் தேன் ஐ தாட்… அதனால என்ன? வீட்டுலே இருந்துதான் எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்களே, தாத்தா பாட்டி உள்பட”-னு சொன்னா மதுரியா. ரியாவோட தீப்-ங்கிற அழைப்பு ரீனாவுக்குள்ளே சுருக்-னு வலியை ஏற்படுத்துச்சு. ஒரு நாள் அவ அப்படி கூப்பிட்டப்போ அவன் ப்ரதீப்-னு கூப்பிடுங்கனு திருத்தினான்.
“ஆமாமா… பார்த்தாலே தெரியுது.. ரொம்ப செல்லம் தான். வீட்டுக்கு வா-னு காதைப் பிடிச்சு இழுத்துட்டு போகாம கண்ணே, மணியே-னு கொஞ்சிட்டிருக்காங்க.. அதுவும் அங்கிள்… அநியாயம்”-னு சொன்னான் ப்ரதீப். ப்ரதீப்புக்கு மதுரியா வீட்லே எல்லாரையும் தெரியும். அவளே அறிமுகப் படுத்தினா. அவளுக்கு தெளிவு வர அவன் தான் காரணம்-னு ப்ரதீப் மேலே அவங்க எல்லாருக்கும் தனி பாசம் தான். அதிலேயும் குறிப்பா பரத்துக்கு. அவன் மதுரியாவை போலவே பரத்துக்கும் ஒரு நல்ல நண்பன். “மாமா”-ன்னு கூப்பிட்டு தான் பேசுவான்.
“அதெல்லாம் இப்போதான்… அதுவும் விதுக்கு அப்புறம்..”-னு முடிக்காம நிறுத்தி வெளியே பார்த்தா. கலங்கின கண்ணு காயத்தோட அளவு என்ன-னு சொல்லிடுச்சு. “போதும்! உன் சோலோ வயலினை நிறுத்து! நாலு நாள் உன் ப்ளான் என்ன-னு சொல்லு. ரீனா உங்க ப்ளான் என்ன?”-னு கேட்டான் ப்ரதீப். “ப்ளான் என்ன… சண்டே ரியாவை கூட்டிட்டு தி நகர்லே ஷாப்பிங் போறேன். ஏக்சுவல்லி ஷாப்பிங் போறது சாப்பிடத் தான்”-னு சொன்னா ரீனா. “சூப்பர்… ரியா மேடம் சொல்லுங்க”-னு கேட்டான். “ப்ளான்-னு எதுவும் இல்லே தீப். நாளைக்கு நம்ம உங்க ஃப்ரெண்ட் ஹாஸ்பிடலுக்கு என் டிரெயினிங் விஷயமா போகணும். அப்புறம் சண்டே ரீனா கூட ஷாப்பிங்… அப்புறம் ரெண்டு நாள் ரெஸ்ட். அவ்வளோ தான்!” அப்படீ-னு சொன்னா மதுரியா. “ரியா, டிரெயினிங் எவ்வளோ நாள்? எப்போ போகணும்?”-னு கேட்டா ரீனா. “இன்னும் ரெண்டு மாசத்துலே ரீனா.. எவ்வளோ நாள்னா.. மீதி கோர்ஸ் மொத்தமா அங்கே தான்.. எக்சாம்-கு மட்டும் தான் காலேஜ் வரணும். நான் நம்ம ஹாஸ்பிடல்-னு தான் நினைச்சேன். பரத்தப்பாவும், தீப்பும் சேர்ந்து முடிவு பண்ணிட்டாங்க”-னு சொன்னா மதுரியா. “ம்ம்ம்… எனக்குத்தான் நீங்க ரெண்டுப் பேரும் இல்லாம போர் அடிக்கும்”னு ரீனா பெருமூச்சு விடவும், “அதுக்குத்தான் நம்ம ரியாவோட ஐடியா டிரை பண்ணுங்க. லைப்ரரி”-னு கண்ணை உருட்டி ப்ரதீப் சொல்லவும் சிரிப்புலே காரே அதிர்ந்துச்சு.
இப்படியே பேச்சும் சிரிப்புமா சென்னை வந்து சேர்ந்தாங்க. “தீப், நானும் ரீனா கூட வேளச்சேரியிலே இறங்கிக்கிறேன்.. ஒரு வேலை இருக்கு”-னு சொன்னா மதுரியா. “ஓகே… நாளைக்கு ஒன்பது மணிக்கு ரெடியா இரு… ஆண்டியோட டிபனை சாப்பிட்டுட்டுக் கிளம்புவோம். அப்புறம் மண்டே மார்னிங் அப்பா உன்னை வரச் சொன்னாங்க. ஓகே.. பை… பை ரீனா”-னு இறக்கிவிட்டுட்டு போயிட்டான். “ரீனா! ஆனந்தாஸ்லே ஒரு காஃபி சாப்பிடுவோம் வா”-னு கூப்பிட்டா மதுரியா. “ஏன் டீ? அதுதான் வீட்டுக்கு வர்றேன்-னு சொன்னியே?”-னு கேட்டா ரீனா. “இல்லே… உன்கிட்ட ப்ரைவேட்டா பேசணும். அதான் தீப் கிட்ட அப்படி சொன்னேன்… வா”-னு பேக்கை தூக்கிட்டு முன்னாடி நடந்தவளை கிலி பரவ பார்த்தா ரீனா. “நான் ப்ரதீப்பை லவ் பண்றேன் ஹெல்ப் வேணும்”-னு கேட்டுடுவாளோன்னு பயம் ரீனாவுக்கு. மதுரியா அந்த மாதிரி கேட்ட அடுத்த கணமே தன் காதலுக்கு மூடுவிழா நடந்திடுமேன்னு தவிப்பு.
ரெண்டுப் பேரும் உள்ள போயி காபி சொன்னங்க. காஃபி வந்ததும் நேரடியா விஷயத்துக்கு வந்தா மதுரியா. “ரீனா… நீ ப்ரதீப்பை லவ் பண்றியா?”-னு கேட்கவும் குடிச்சிட்டு இருந்த காஃபி புரையேறுச்சு. “என்ன… என்னடி சொல்றே?”-னு தடுமாறினா ரீனா. “கேட்ட கேள்விக்கு பதில் வேணும்”-னு அழுத்தமா கேட்டா மதுரியா. நாலு ஃப்ரெண்ட்ஸ்லே ரீனாவும் மதுரியாவும் இப்படித்தான் சுத்தி வளைச்சு பேசாம நேரடியா பொட்டுலே அறைஞ்ச மாதிரி பேசுவாங்க. மத்த ரெண்டுப் பேருக்கும் இது கொஞ்சம் பயம் தான். எங்கே ரெண்டு பேரும் சண்டை வந்து பிரிஞ்சுடுவாங்களோ-னு. ஆனா அவங்களோட அந்த குணம் தான் அவங்க பிடிப்பையும் உறவையும் பலப்படுத்துச்சு. விவாதம் வந்திருக்கே தவிர சண்டையே வந்தது கிடையாது. ஒருத்தருக்கு ஒருத்தர் அழகா தோள் குடுத்து தாங்கி பிடிச்சுப்பாங்க. “நான் என்ன சொன்னா நீ சந்தோஷப் படுவே ரியா?”-னு கேட்டா ரீனா. “லவ் பண்ணலே… நீ நினைக்கற மாதிரி இல்லே-னு சொன்னா சந்தோஷம்”-னு ரியேக்ஷனே இல்லாம சொன்னா மதுரியா. “எதிர்பார்த்தேன் ரியா.. உங்க மனசுலே என்ன இருக்கு-னு தெரிஞ்சுக்காம விட்டுட்டேன். ஆனா நான் உனக்கு போட்டியா வருவேன்-னு எப்படி ரியா நினைச்சே?”-னு வருத்தமா ரீனா கேட்கவும், மதுரியாவுக்கு அவ பேச்சு தலையும் புரியலே வாலும் புரியலே.
“நீ… என்ன சொல்றே ரீனா? தெளிவா சொல்லு”-னு கேட்டா மதுரியா. கண்ணிலே நின்ன தண்ணியை உள்ளிழுத்துட்டு, “ஸ்டிரெய்ட்டா சொல்றேன். நீ சந்தோஷப்படற மாதிரியான பதிலை என்னால சொல்ல முடியாது ரியா. ஆனா நான் உன் சந்தோஷத்துக்கு குறுக்க வரமாட்டேன்… ரெண்டு பேரும் விரும்பினா தான் வாழ்க்கை.. அந்த வகையிலே நீ பாக்கியசாலி.. நான் துரதிருஷ்டசாலி… அது மட்டுமில்லே… நிறைய விஷயங்கள்லே நான்.. அவருக்கு பொருத்தம் இல்லே… ஸோ.. உன் பொசஸிவ்னெஸ்க்கும் கோபத்துக்கும் தேவையே இல்லே”-னு வர வைக்கப்பட்ட சிரிப்போட சொன்னா ரீனா. மதுரியா அப்படியே அதிர்ச்சியோட மொத்த உருவமா ரீனாவை பார்த்தா. “ரீனா… காதல் வந்தா புத்தி மழுங்கிப் போகும்-னு நான் என்னை வைச்சு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ உன்னை வைச்சு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன். என்னை நீ இவ்வளோ தான் புரிஞ்சு வைச்சு இருக்கியா லூசு”-னு மதுரியா கோபமா பேசும் போதே அவ மொபைல் அடிச்சுது. யார்-னு பார்த்தப்போ ரீனாவோட முகத்துலே ஒரு சிரிப்போட புருவம் உயர்ந்துச்சு.
“சொல்லுங்க தீப்”-னு போனை அட்டெண்ட் பண்ணா. “ரீனாவோட வீட்டை எப்போ ஆனந்தாஸ்க்கு மாத்தினாங்க?”-னு கேட்டான். “நான் ரீனா கூட பேசணும்-னு வந்தேன்”னு அவ முடிக்கறதுக்குள்ளே, “ரியா.. ப்ளீஸ்.. ரீனா கூட அப்புறம் பேசலாம்.. இப்போ வீட்டுக்குப் போகணும்… ரெண்டுப் பேரும் காஃபியை குடிச்சுட்டு வெளியே வாங்க… நான் வெயிட் பண்றேன்”-னு போனை கட் பண்ணிட்டான். “ம்ம்… தீப்-னு உனக்கு மட்டுமான அழைப்பு, உன்கிட்ட மட்டும் இருக்கற உரிமை, ரெண்டுப் பேருக்கும் ரெண்டு பேரோட வீட்டாளுங்களையும் நல்லா தெரியும்.. இதோ உன்னை கரெக்டா டிராக் பண்ணி சேஃபா பார்த்துக்கணும்-னு நினைக்கறது… இதுக்கு எல்லாம் என்ன பேரு ரியா? ஏன் உன்னை நீயே ஏமாத்திக்கிறே? கொஞ்ச நாளா விதுரனை கூட நினைச்சியா?”-னு படபடனு பொறிஞ்சா ரீனா.
மதுரியா ரீனாவை அழுத்தமா பார்த்துட்டு காஃபியை குடிச்சா. “விதுரனை நினைக்கிறதா? மறந்தா தானே நினைக்கணும்? நான் தான் மறக்கவே இல்லையே. என் மனச விட்டு விதுரன் போனா தான் ரீனா அந்த இடத்துக்கு இன்னொரு ஆள் வர முடியும். அதான் போகவே இல்லையே.. ரீனா! விதுரன் எப்படி-னு எனக்கு தெரியாது. ஆன என் அன்பு உண்மை.. அதான் எடுத்தெறிய முடியலே”-னு கண்ணுலே தண்ணி வர சொன்னா. “என்ன ரியா உளர்றே?அப்போ உனக்கும் ப்ரதீப்புக்கும் என்ன உறவு? ரெண்டு பேருக்கும் ரெண்டுப் பேர் மேலேயும் அன்பு, அக்கறை எல்லாம் இருக்கு. இல்லே-னு சொல்லாதே. எங்களுக்கு.. அதாவது எனக்கும், அவரோட நண்பர்களுக்கும் அவர்கிட்ட இருக்கற உரிமையை விட உனக்கு அதிகமா இருக்கு”-னு வாதம் பண்ணா ரீனா. “கண்டிப்பா நீ சொல்றதெல்லாம் உண்மை. பட்.. நீ அதை புரிஞ்சுக்கிட்ட விதம் வேறே… நாங்க பார்க்கற விதம் வேறே”-னு முடிச்சு காஃபி கப்பையும் டேபிள் மேலே வைச்சுட்டே சொல்லி அதிர வைச்சா மதுரியா.
ரீனாவுக்கு ஃப்ரெண்டை நல்லா தெரியும். ஒரு கொள்கை-னு வைச்சு அதுப் படி மட்டும் வாழறவ. அந்த கொள்கையா காதலான்னு வந்தப்போ தன் கொள்கைதான் முக்கியம்-னு சொன்னவ. அப்படிப்பட்டவ இன்னிக்கு பேசற விதமும் பேசற அர்த்தமும் திகிலா இருந்துச்சு ரீனாவுக்கு. “என்னடி சொல்றே?”-னு அதிர்ச்சியா கேட்டா ரீனா. “ஆமா ரீனா… நான் உன்கிட்ட நீ லவ் பண்ணலேன்னா சந்தோஷப்படுவேன்-னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டே. உனக்கு எல்லாத்தையும் சொன்னாத்தான் புரியும்”-னு மதுரியா ஸ்டார்ட் பண்ணும் போதே அவளோட மொபைலுக்கு ப்ரதீப் மறுபடியும் கூப்பிட்டான். “இப்போ முடியாது… நாளைக்கு வீட்டுக்கு வா… எல்லாத்தையும் சொல்றேன். சரியா?”-னு கேட்டா மதுரியா. “ரியா, நீ ஏதோ தப்பு தப்பா யோசிச்சு தப்பு தப்பா பண்றே”-னு பயந்து சொன்னா ரீனா. “கடவுளே… நீ கிளம்பு ரீனா… தீப் நமக்குத் தான் வெயிட் பண்றார் பாவம். ஒண்ணே ஒண்ணு சொல்றேன். நீ நிம்மதியா நைட் தூங்குவே… நானும் தீப்பும் ஒருத்தரை ஒருத்தர் லவ் எல்லாம் பண்ணலே. நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான். இப்போவும்… எப்போவும்”-னு சொல்லிட்டே கார்கிட்ட வந்தாங்க.
ரீனா அப்போவும் சமாதானமாகாம “அப்போ ப்ளேடோனிக் ரிலேஷன்ஷிப்பா?”-னு பயந்து கேட்டா. (ப்ளேடோனிக் ரிலேஷன்ஷிப் அப்படீன்னா காமம் இல்லாத, உணர்வு ரீதியா இருக்கற நட்பை தாண்டின நினைவோட இருக்கற உறவு) தன்னோட ஃப்ரெண்ட் லவ் ஃபெயிலியரால கொள்கைகளை எல்லாம் தூக்கிப் போட்டு தப்பும் தவறுமா முடிவெடுக்கறாளோ-னு கவலை ரீனாவுக்கு. விதுரன், சுவாதி கூட ஜோடியா சுத்தி இவளை வெறுப்பேத்தற மாதிரி, தானும் சின்னப் புள்ளை மாதிரி அவனை வெறுப்பேத்த நின்னைக்கறாளோன்னு பயம். மதுரியா அவள் கேட்ட கேள்விலேயும் விதத்துலேயும் தன்னை மீறி சிரிச்சுட்டா. “அது… நாளைக்கு வீட்டுக்கு வருவேல்லே… அப்போ சொல்றேன்.. இப்போ கார்லே ஏறு”-னு அவளை ஏத்திவிட்டா. மதுரியா மழுப்பலா பதில் சொல்லவும், அதுதான் விஷயம்-னு முடிவே பண்ணிட்டு கவலையானா ரீனா. “ரெண்டுப் பேரும் வீட்டுக்கு போகாம இங்கே என்ன பண்றீங்க?”-னு கேட்டான் ப்ரதீப். ஆனா ரெண்டுப் பேரும் பதில் சொல்லலே. காருக்குள்ளே ஒரே அமைதி. கொஞ்ச நேரத்துலே எல்லாம் ரீனா வீடு வரவும் அவ இறங்கிட்டா.
“ரியா.. உன்னைத்தான் கேட்கிறேன். ஆறு மாசம் கழிச்சு வீட்டுக்கு போறே. அதை விட அப்படி என்ன முக்கியமான பேச்சு? ஏன் இப்படி இருக்கே?”-னு சலிப்பா கேட்டான் ப்ரதீப். “அதையும் தாண்டி போனேன்னா ஏதோ முக்கியமான விஷயம்-னு தானே அர்த்தம்?”-னு கேட்டா மதுரியா. “உன்னையெல்லாம் திருத்தவே முடியாது ரியா. நீ பிடிச்ச முயலுக்கு எப்போவுமே மூணு காலுதான்”-னு தலையிலே அடிக்கவும், “சும்மா சொல்லாதீங்க தீப். என் டிரெயினிங் எல்லாம் உங்களுக்காக நிறைய விட்டு குடுத்திருக்கேன்”-னு பேசும் போதே வீடு வந்துடுச்சு.
“ரியாமா வா… வா”ன்னு ஏக வரவேற்பு தான். “பாட்டி, எப்படி இருக்கீங்க?”னு கற்பகவல்லியை போயி கட்டிப்பிடிச்சு கேட்டா. கற்பகவல்லி டயட், மருந்துலே கொஞ்சம் நடமாட்டம் குறைஞ்சு தான் இருந்தாங்க. ஆனாலும் அவங்க சுறுசுறுப்பும் கண்ணுலே இருந்த உயிர்ப்பும் மாறவே இல்லே. அதுக்கப்புறம் கூட வந்த ப்ரதீப்பையும், “வாங்க ப்ரதீப்”-னு கூப்பிட்டாங்க சுபத்ரா. “பரவாயில்லையே, ரியாவை தாண்டி நானும் கண்ணுக்கு தெரியறேனே”-னு ப்ரதீப் கிண்டல் பண்ணவும், எல்லாரும் சிரிச்சாங்க. “உன்னை எப்படிப்பா மறப்போம்? உட்கார்… சுபா, தம்பிக்கு என்ன வேணும்-னு கேளும்மா”-னு சொன்னாங்க கற்பகவல்லி. “ஆண்டி, எனக்கு சூப்பர் காஃபி ஒண்ணு.. ரியாவுக்கு கிடையாது. ரியாவும் ரீனாவும் என்னை விட்டுட்டு குடிச்சுட்டாங்க”-னு கம்ப்ளெயிண்ட் சொல்லி மேலே சிரிக்க வைச்சான். இன்னும் ஏதோ ஜாலியா பேசி சிரிச்சுட்டு கிளம்பினான். “சாப்பிட்டு போகலாமே”-னு கேட்டார் நித்தியவாசன். “இல்லே அங்கிள்… எப்படியும் நாளைக்கு ரியாவோட டிரெயினிங் விஷயமா போகணும்… அப்போ மார்னிங் டிபன் சாப்பிடறேன்”-னு சொல்லவும், “உங்க நர்சிங் ஹோம்-னா இந்த அலைச்சலே இல்லை”-னு உதட்டை சுழிச்சா மதுரியா. “ஓய். திரும்ப ஆரமிக்காதே ரியா… மேலே பேசணும்னா நாளைக்கு மீட் பண்றப்போ அப்பாகிட்ட பேசிக்கோ. நான் கிளம்பறேன்”-னு போனான் ப்ரதீப்.